அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, December 7, 2010

பாப்ரி மஸ்ஜித்:துயர நினைவலைகளின் பதினெட்டாவது ஆண்டு..

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி மத சகிப்புத் தன்மையின் மார்பை பிளந்து இந்தியாவின் வரலாற்றுச் சின்னமும் இறையில்லமுமான பாப்ரி மஸ்ஜிதின் குவிமாடங்களை ஹிந்துத்துவா பயங்கரவாத சக்திகள் இடித்துத் தள்ளிய இருளான நினைவலைகளுக்கு இன்று பதினெட்டாவது ஆண்டு.

பாப்ரி மஸ்ஜித் இடித்துத் தள்ளப்பட்ட துயர சம்பவம் நிகழ்ந்து பதினேழு ஆண்டுகள் நிறைவுற்ற பிறகும் மஸ்ஜிதை அது நிலைப்பெற்றிருந்த இடத்திலேயே கட்டுவோம் என்ற மத்திய அரசின் வாக்குறுதி இன்னமும் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.

பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதற்கு சங்க்பரிவார தலைவர்கள்தான் காரணம் என லிபர்ஹான் கமிஷன் கண்டறிந்த பிறகு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

பாப்ரி மஸ்ஜித் நில உரிமை விவகாரத்தில் நீண்டகாலமாக காத்திருப்பிற்கு பின் வெளிவந்த அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்போ வரலாற்று உண்மைகளை நிராகரித்துவிட்டு ஆதாரங்களுக்கு பதிலாக புராணங்களுக்கும், புரட்டுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்த சந்தேகங்களை தேசத்திற்கு அளித்தது.

வரலாற்றின் மீது சங்க்பரிவார பாசிஸ்டுகள் நடத்தும் அத்துமீறல்களுடன் ஆட்சியாளர்கள் மற்றும் நீதிபீடத்தில் வீற்றிருப்போரின் குற்றகரமான பாரபட்ச முடிவுகளும் பாப்ரி மஸ்ஜித் குறித்த நினைவுகளை வேதனைக்குரியதாக மாற்றுகிறது.


நீண்ட 60 ஆண்டுகால காத்திருப்பின் இறுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் வெளியிட்ட 'பாகப் பிரிவினை தீர்ப்பு' இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் உள்ளிட்ட பெரும்பாலான மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியதாக தகவல்கள் உறுதிச்செய்கின்றன.

தீர்ப்பிற்கெதிராக உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கான நடவடிக்கைகள் ஆல் இந்தியா முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் தலைமையில் நடந்துவருகிறது.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த அதே இடத்தில் மீண்டும் கட்டப்பட வேண்டும் எனக்கோரி போராட்டங்களை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன முஸ்லிம் அமைப்புகள்.

செய்தி:தேஜ

பாப்ரி வீழ்த்தப்பட்ட நீதி!

450 ஆண்டுகள் பூமி சுமந்த - பிள்ளை
பாபரி வீழ்த்தப்பட்டது கண்டு
பூமி சுமந்த பாரத்தை விட
எங்கள் மனபாரம் அதிகரித்ததே!

வரலாற்றின் சின்னமாய்
வீறுகொண்டு பயணித்த - பள்ளி
பாசிச கல் தாக்கியதால் - வீழ்ந்த நொடி
ஜனநாயக தூண்களுக்கு விழுந்த அடியல்லவா?

விரைப்பான வெண் அங்கிக்குள்
சிறைக்கொண்ட தொகுதி சொந்தங்கள்
வீழ்த்தப்பட்ட நீதிகண்டு
விறைப்பால பேசலியோ!...
விலைபோயிட்டு பேசலியோ!

கல்லடிப்பட்ட குளம்கூட
அலை எழுப்பும் எதிர்ப்பாய்!
கலையாக நின்ற பள்ளி கல்லானபோது
பாடம் கல்லாது போன நமது நிலைதான் சோகம்!

நாட்டரசி பிரசவம் அரண்மணையில்லை
காட்டில் பெற்றதே முரண்பாடு!

பிரசவம் பெயரைச் சொல்லி - பாசிசத்தால்
நாடு பட்ட பாடு... இந்திய வரலாற்று வெட்கக்கேடு!

வில் நாணிலிருந்து பிறந்த அம்பாய்
வீழ்ந்த இடமதிலே வீறுகொண்ட புது பாபரி
ஆட்சி மன்றத்தின் "வாக்கு" மெதுவாய் புரிந்தது
துரோகிகளின் வாக்கு வங்கிக்கான வாக்கு!

சிலை வைத்த பொழுது... பூட்டு உடைக்கப்பட்ட பொழுது...
பூஜைகளுக்கு திறக்கப்பட்ட பொழுது...பள்ளி இடிக்கப்பட்ட பொழுது...
அப்பொழுதினிலே... அனைவரும் கூறுவர் 'அய்யகோ!'

நீதிமன்றமோ...நீதிமன்றாட - நிலைதொடரும் "ஸ்டேட்டஸ் கோ"
ஒரு வாரிசு உள்ள பெற்றோரின் சொத்துக்கு
மூன்று பங்கு எப்படி சாத்தியம்?

விசாரித்திருந்தும் விருட்டென கிழித்தனரே!
விழித்திரையை சாத்தியம் என்று!
நீதிப்புத்தகத்தை பூணூல் சுற்றிவிட்டது!
நீதிதேவதை பாசிச கள் குடித்துவிட்டாள்!

தீர்ப்பு: நீதி தேவதை கைத்தராசின்
ஒரு தட்டு இறங்கிவிட்டது!

நீதி தட்டு சமநிலைக்கு வருவது எப்பொழுது?
நீதிதேவதை மதிமயக்கம் தெளிவது எப்பொழுது?

சுற்றிய பூணூல் அறுபடும் அப்பொழுது!
"முஸ்லிம்கள் நாம்" எனும் சொல் பொருள்படும்
"அக்கணப் பொழுது"
ஆக்கம்:நு.அபூதாஹிர், திருவிதாங்கோடு.

பாப்ரி வீழ்த்தப்பட்ட நீதி!

450 ஆண்டுகள் பூமி சுமந்த - பிள்ளை
பாபரி வீழ்த்தப்பட்டது கண்டு
பூமி சுமந்த பாரத்தை விட
எங்கள் மனபாரம் அதிகரித்ததே!

வரலாற்றின் சின்னமாய்
வீறுகொண்டு பயணித்த - பள்ளி
பாசிச கல் தாக்கியதால் - வீழ்ந்த நொடி
ஜனநாயக தூண்களுக்கு விழுந்த அடியல்லவா?

விரைப்பான வெண் அங்கிக்குள்
சிறைக்கொண்ட தொகுதி சொந்தங்கள்
வீழ்த்தப்பட்ட நீதிகண்டு
விறைப்பால பேசலியோ!...
விலைபோயிட்டு பேசலியோ!

கல்லடிப்பட்ட குளம்கூட
அலை எழுப்பும் எதிர்ப்பாய்!
கலையாக நின்ற பள்ளி கல்லானபோது
பாடம் கல்லாது போன நமது நிலைதான் சோகம்!

நாட்டரசி பிரசவம் அரண்மணையில்லை
காட்டில் பெற்றதே முரண்பாடு!

பிரசவம் பெயரைச் சொல்லி - பாசிசத்தால்
நாடு பட்ட பாடு... இந்திய வரலாற்று வெட்கக்கேடு!

வில் நாணிலிருந்து பிறந்த அம்பாய்
வீழ்ந்த இடமதிலே வீறுகொண்ட புது பாபரி
ஆட்சி மன்றத்தின் "வாக்கு" மெதுவாய் புரிந்தது
துரோகிகளின் வாக்கு வங்கிக்கான வாக்கு!

சிலை வைத்த பொழுது... பூட்டு உடைக்கப்பட்ட பொழுது...
பூஜைகளுக்கு திறக்கப்பட்ட பொழுது...பள்ளி இடிக்கப்பட்ட பொழுது...
அப்பொழுதினிலே... அனைவரும் கூறுவர் 'அய்யகோ!'

நீதிமன்றமோ...நீதிமன்றாட - நிலைதொடரும் "ஸ்டேட்டஸ் கோ"
ஒரு வாரிசு உள்ள பெற்றோரின் சொத்துக்கு
மூன்று பங்கு எப்படி சாத்தியம்?

விசாரித்திருந்தும் விருட்டென கிழித்தனரே!
விழித்திரையை சாத்தியம் என்று!
நீதிப்புத்தகத்தை பூணூல் சுற்றிவிட்டது!
நீதிதேவதை பாசிச கள் குடித்துவிட்டாள்!

தீர்ப்பு: நீதி தேவதை கைத்தராசின்
ஒரு தட்டு இறங்கிவிட்டது!

நீதி தட்டு சமநிலைக்கு வருவது எப்பொழுது?
நீதிதேவதை மதிமயக்கம் தெளிவது எப்பொழுது?

சுற்றிய பூணூல் அறுபடும் அப்பொழுது!
"முஸ்லிம்கள் நாம்" எனும் சொல் பொருள்படும்
"அக்கணப் பொழுது"
ஆக்கம்:நு.அபூதாஹிர், திருவிதாங்கோடு.

பாப்ரி மஸ்ஜித்:பாராளுமன்றத்தின் முன்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய தர்ணா போராட்டம்..

புதுடெல்லி,டிச.6:பாப்ரி மஸ்ஜித் இடித்த இடத்தில் மீண்டும் கட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது.'பாப்ரி மஸ்ஜித் நீதியைத் தேடுகிறது' என்ற முழக்கத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் இரண்டு மாதம் நீண்ட பிரச்சார நிகழ்ச்சியின் துவக்கமாக இது அமைந்தது.

பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் இப்போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

தர்ணாவில் கலந்துக் கொண்டு உரைநிகழ்த்திய தலைவர்கள், பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதும், இவ்வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் தேசத்தின் மதசார்பற்ற தன்மைக்கு ஏற்பட்ட களங்கம் எனக் குறிப்பிட்டனர்.

பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதுத் தொடர்பாக விசாரணைச் செய்த லிபர்ஹான் கமிஷனின் அறிக்கையை நடைமுறைப்படுத்தாத மத்திய அரசின் போக்கையும் தலைவர்கள் கண்டித்தனர்.

உண்மைகளை புறக்கணித்துக் கொண்டு வெளியான தீர்ப்பு திருத்தப்படுவதற்காக தேசம் காத்திருக்கிறது என தர்ணாவை துவக்கிவைத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச் செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் தெரிவித்தார்.

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் பிரதிநிதி ஹாஃபிஸ் அன்ஸார், எஸ்.டி.பி.ஐ தேசிய செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர், மாநில கண்வீனர் ராஷித் அக்வான், தேசிய துணைத் தலைவர் ஸாஜித் சித்தீகி, முஹம்மது ஷஹாப், ஆல் இந்தியா முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரா பிரதிநிதி டாக்டர்.அன்வாருல் இஸ்லாம், முஸ்லிம் பொலிடிகல் கவுன்சில் தலைவர் தஸ்லீம் ரஹ்மானி, முஸ்லிம் இஸ்லாஹி தஹ்ரீக் தலைவர் அப்துல் வஹ்ஹாப் கில்ஜி ஆகியோர் உரை நிகழ்த்தினர்

கூடங்குளத்தில் உலைகள் தாமதத்துக்கு அணு விபத்து நட்டஈட்டு சட்டமே காரணம்: ரஷ்யா

மாஸ்கோ, டிச. 6-

அணு விபத்து நட்டஈட்டு சட்டத்தில் காணப்படும் குறிப்பிட்ட சில அம்சங்களால்தான், கூடங்குளத்தில் மேலும் 2 அணு மின் உலைகள் அமைப்பதில் தாமதம் ஏற்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் 2 அணு மின் உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இந்த அணு உலைகளில் முதல் பிரிவு 2011-ம் ஆண்டு தொடக்கத்தில் உற்பத்தியைத் தொடங்கும். அதற்கு அடுத்த ஆண்டுக்குள் இரண்டாவது பிரிவும் உற்பத்தியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகளை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இன்னும் இறுதிவடிவத்தைப் பெறவில்லை. அணு விபத்து ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ரூ.1,500 கோடி நட்டஈடு அளிக்க வேண்டும் என அணு விபத்து நட்டஈட்டு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற அம்சங்களில் உரிய முடிவு எட்டப்படாததே கூடங்குளத்தில் மேலும் அணுமின் உலைகள் அமைப்பதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணம் என அணு உலையை நிறுவும் ரஷ்ய நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே கருத்தை அமெரிக்க, பிரான்ஸ் நிறுவனங்களும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

குஜராத் கலவரம் - சிறப்பு புலனாய்வு குழு மீது முன்னாள் காவல்துறை தலைவர் குற்றசாட்டு!

குஜராத் அரசின் முன்னாள் காவல்துறை தலைவர் ஆர்.பி.ஸ்ரீகுமார் ''குஜராத் கலவரத்தில் மோடி பங்கு குறித்த ஆதாரங்களை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு தான் வழங்கியதாகவும் சிறப்பு புலனாய்வுக் குழு அந்த ஆதாரங்களை பரிசீலிக்காமல் புறக்கணித்துள்ளதாகவும் '' தெரிவித்துள்ளார்.

குஜராத் கலவரத்தில் பின்னணியில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியும் அவருக்கு நெருக்கமானவர்களும் செயல்பட்டுள்ளனர் என்ற குற்றசாட்டை அடுத்து இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க சிறப்பு புலனாய்வு குழு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப் பட்டது.இந்த குழு மோடி உள்ளிட்ட பலரையும் விசாரணை செய்தது. அதன் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழு அறிக்கையை சமர்ப்பித்து விட்டது என்றும் அந்த அறிக்கையில் மோடி குற்றமற்றவர் என்று கூறப்பட்டு இருப்பதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.

இது குறித்து பிரஸ் கிளப் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் காவல்துறை தலைவர் ஆர்.பி.ஸ்ரீகுமார் ''தான் அளித்த ஆதாரங்கள் முன்னாள் சி.பி.ஐ இயக்குனர் ஆர்.கே. ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவால் பரிசீலிக்கப் பட வில்லை என்றும் இந்த விவகாரம் குறித்து தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் '' தெரிவித்துள்ளார்.

தான் சிறப்பு புலனாய்வு குழு முன்பு ஆறு பிரமாணப் பத்திரங்களை அளித்ததாகவும், மோடி குற்றமற்றவர் என அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாக வரும் செய்திகள் நம்பத் தகுந்த செய்தியே என்றும் தெரிவித்தார். மேலும் சிறப்பு புலனாய்வு குழு, குஜராத் அரசின் பி பிரிவு போலீசார் போல செயல்பட்டதாகவும் ஸ்ரீகுமார் குற்றசாட்டியுள்ளார்

நரேந்திர மோடியை கொல்ல திட்டமிட்ட லஸ்கர் இ தொய்பா..

LeT planned to kill Narendra Modi: Wikileaks - World News Headlines in Tamil



வாசிங்டன், டிச. 6-

தென்இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபடுவதற்காக, லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் தமிழ்நாடு மற்றும் கேரளாவை தளமாக பயன்படுத்த முயன்ற தகவலை, விக்கி லீக்ஸ் இணைய தளம் வெளியிட்டுள்ளது. மேலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்ல திட்டமிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

விக்கி லீக்ஸ் என்ற இணைய தளம், அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள தூதரகங்கள் பரிமாறிக்கொண்ட ரகசிய தகவல்களை அம்பலப்படுத்தி உள்ளது. அதில் இந்தியா தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ந்தேதி அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட ரகசிய தகவல் ஒன்றில் பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்பட்டுவரும் லஸ்கர்-இ-தொய்பா இயக்கம், தமிழகம் மற்றும் கேரளாவில் தளம் அமைக்க முயன்ற தகவலும் அதில் இடம் பெற்றுள்ளது. இலங்கையில் அந்த இயக்கத்தின் மையம் ஒன்று செயல்பட தொடங்கிவிட்டதாகவும், தென் இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக தமிழ்நாடு மற்றும் கேரளாவை தளமாக பயன்படுத்திக்கொள்ள அந்த இயக்கம் முயன்று வருவதாகவும் அந்த தகவலில் இடம் பெற்றுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலும் தனது பயங்கரவாத செயல்பாட்டை விரிவுபடுத்த முயன்ற தகவலையும் விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தி உள்ளது. விக்கி லீக்கின் இந்த தகவல்களை அமெரிக்க அரசு உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாள நாடுகளில் உள்ள இயக்க உறுப்பினர்களின் ஆதரவுடன் தென்இந்தியாவில் ஷாபிக் கபா ஜி என்ற தளபதி மூலம் 2 குழுக்களை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தகவல்கள் உடனடியாக இந்தியாவுக்கு அதுபற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் தென் இந்தியாவில் தாக்குதலுக்காக அவர்கள் தேர்வு செய்த இடங்கள் பற்றிய விவரங்கள் அதில் இல்லை. தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்துவதற்கான தகவல்களை திரட்டவும் தளபதி காபா முயற்சிகளை மேற்கொண்டார்.

குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடியை படுகொலை செய்யும் திட்டத்தை அரங்கேற்றவும் அவர் திட்டமிட்டு இருந்தார். லஸ்கர் இயக்கத்தின் இந்தியாவை சேர்ந்த உறுப்பினர் ஹுசேன், சமீர் என்ற கூட்டாளியுடன் இணைந்து இதுபோன்ற சதித்திட்டங்களை தீட்டி உள்ளனர். இவ்வாறு விக்கி லீக்ஸ் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது

பாராளுமன்ற முடக்கத்தால் ரூ.78 கோடி இழப்பு: அமைச்சர் நாராயணசாமி


புதுச்சேரி, டிச. 6-

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், பாராளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருவதால் அரசுக்கு ரூ.78 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக, மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி நாராயணசாமி குற்றம் சாட்டினார்.

புதுச்சேரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய மந்திரி நாராயணசாமி கூறியதாவது:-

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கேட்டு எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை நடக்கவிடாமல் முடக்கி வைத்துள்ளன. இதனால் அரசுக்கு ரூ.78 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய மந்திரியான ராசாவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை விசாரணையும் நடக்கிறது. இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி தலைமையில் இயங்கும் பாராளுமன்ற பொது கணக்கு குழு விசாரணை நடத்தும் என்று அறிவித்தும் எதிர்க்கட்சியினர் கூட்டுக்குழு விசாரணை கேட்டு பாராளுமன்றத்தை முடக்கி வைத்துள்ளனர். போபர்ஸ், பங்கு சந்தை ஊழல் என்பன போன்றவற்றில் கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட்டு முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை. போபர்ஸ் விசாரணையில் இருந்த எம்.பி.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதை தேர்தலுக்காக பயன்படுத்தினார்கள். அதேபோல் இப்போதும் தவறை கண்டுபிடிப்பது முக்கியமல்ல. அரசு மீது களங்கம் கற்பிக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி நாடகமாடுகிறார்கள். இந்த விசயத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயார் என்று பிரதமரும், சோனியாகாந்தியும் உறுதியாக உள்ளனர். அரசியல் நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் செயல்படுவது அவர்களது பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.

பாரதிய ஜனதாவுக்கு ஊழலைப்பற்றி பேச தகுதியில்லை. அவர்கள் காலத்தில்தான் தெகல்கா ஊழல், சவப்பெட்டி ஊழல் நடந்தது. இதுகுறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்படவில்லை. பாராளுமன்றம் என்பது விவாத மேடை. அங்கு விவாதத்துக்கு தயாராக இருக்கவேண்டும். பாராளுமன்றம் முடக்கப்பட்டதால் மகளிர் இடஒதுக்கீடு சட்ட மசோதா, தொழிலாளர் பாதுகாப்பு சட்ட மசோதா, ஜிப்மர் சட்ட மசோதா போன்றவை நிறைவேற்றப்படாமல் உள்ளன. இவ்வாறு மத்திய மந்திரி நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி ரங்கசாமி தனிக்கட்சி தொடங்குவது பற்றி வெளியான தகவல் பற்றி கேட்டதற்கு, "அவர் காங்கிரசில் தான் இருக்கிறார். சமீபத்தில் சோனியாகாந்தி கலந்து கொண்ட கூட்டத்தில் அவர் பங்கேற்றதும், அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டு இருப்பதும் அதற்கு சிறந்த உதாரணமாகும்" என்று நாராயணசாமி பதில் அளித்தார்..

எடியூரப்பாவுடன் கர்நாடக கவர்னர் மீண்டும் மோதல்...

Police only competent authority to investigate offences: Karnataka Governor - India News Headlines in Tamil



பெங்களூர், டிச. 6-

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா-கர்நாடக கவர்னர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா தனது குடும்ப உறுப்பினர்களுக்கு நிலம் ஒதுக்கி கொடுத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது தொடர்பாக லோக்அயுக்தாவிடம் புகாரும் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் லோக்அயுக்தா விசாரணை நடத்த தொடங்கியது. இதற்கிடையே தேவேகவுடா ஆட்சி காலத்தில் இருந்து நிலஒதுக்கீடு தொடர்பாக நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பத்மராஜ் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டது. நில முறைகேடு வழக்கை லோக்அயுக்தா விசாரிக்க வேண்டுமா? அல்லது நீதி விசாரணை கமிசன் நடத்த வேண்டுமா? என்பது தொடர்பான பொதுநலன் மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கவர்னர் பரத்வாஜ் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நில முறைகேடு வழக்கை லோக்அயுக்தா விசாரித்து வரும் நேரத்தில், அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. மாநில மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவே அரசு இவ்வாறு நடந்து உள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளில் உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவை பிறப்பித்து உள்ளது. அதன்படி லோக்அயுக்தா அமைப்பு விசாரித்தால் தான் உண்மை வெளிச்சத்துக்கு வரும். லோக்அயுக்தா மற்றும் அரசிடமும் போலீஸ் உள்ளது. போலீஸ் அமைப்புகள் விசாரணை நடத்துவதே மிகச்சரியாக இருக்கும். இதுபோன்ற குற்றங்களை விசாரிக்க போலீசாருக்கு தான் அதிகாரம் உள்ளது. லோக்அயுக்தா மற்றும் போலீஸ் அமைப்புகளை அரசே அமைத்தது. இந்த அமைப்புகள் மீது அரசுக்கே நம்பிக்கை இல்லை என்றால், பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும். இதன் மூலம் லோக்அயுக்தா அமைப்பை சீர்குலைக்க அரசே முயற்சிக்கிறது.

மந்திரி கட்டா சுப்பிரமணிய நாயுடு ராஜினாமா குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை. மந்திரிகள் எனது அறிவுறையை கேட்பதில்லை. சட்டவிரோத சுரங்க பிரச்சினை குறித்து நான் குரல் கொடுத்த போது என்னை பதவியில் இருந்து நீக்க முயற்சி நடந்தது. நான் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்கள். இந்த பிரச்சினையை நான் மக்களின் தீர்ப்புக்கே விட்டு விடுகிறேன். நான் எந்த ஒரு வேளையிலும் அரசுக்கு எதிராக செயல்பட்டதில்லை. அதேநேரத்தில் அரசியலமைப்பு விதிமுறைகளை மீறி அரசு செயல்படும் போது நான் மவுனமாக இருந்தது கிடையாது. எனது கடமையை சரியாகவே செய்தேன். தவிர்க்க முடியாத நேரத்தில் அரசின் நிர்வாகத்தில் தலையிட நான் தயக்கம் காட்டியது கிடையாது. கர்நாடகத்தில் நடந்து வரும் அனைத்து விவகாரங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு ஜனாதிபதிக்கு அறிக்கை தாக்கல் செய்து வருகிறேன். இவ்வாறு கவர்னர் பரத்வாஜ் கூறினார்

போலீசார் கைது நடவடிக்கையை முதலிலேயே செய்யக் கூடாது: உச்ச நீதிமன்றம்


புதுடெல்லி, டிச. 7-

ஒரு வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் ஒருவரை முதலிலேயே கைது செய்யக் கூடாது என்றும் போலீசாரின் கைது நடவடிக்கை என்பது கடைசி கட்ட வாய்ப்பாகவே இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் பா.ஜனதா தொண்டர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சீதாராம் சத்லிங்கப்பா என்ற தலைவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு சீதாராம் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே, உச்ச நீதிமன்றத்தில் சீதாராம் அப்பீல் செய்தார். அந்த மனுவை நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. முடிவில், சீதாராம் சத்லிங்கப்பாவுக்கு உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. அப்போது, ஒரு வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் ஒருவரை போலீசார் கைது என்பது கடைசிகட்ட நடவடிக்கையாகவே இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இது குறித்து உச்ச நீதிமன்ற அமர்வு கூறியதாவது;-

தனி நபர் சுதந்திரம் என்பது மிகவும் மதிப்பு வாய்ந்த அடிப்படை உரிமையாக உள்ளது. மிகவும் தவிர்க்க முடியாத வழக்குகள் மற்றும் சூழ்நிலைகளின் விளைவுகளை கருத்தில் கொண்டே அதை மீறுவது குறித்து பரிசீலிக்க முடியும். அது போன்ற வழக்குகளை தவிர மற்றவற்றில் கைது நடவடிக்கை என்பதை கடைசி கட்ட வாய்ப்பாகவே போலீசார் மேற்கொள்ள வேண்டும். முதலிலேயே, கைது நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது. கைது நடவடிக்கை என்பது பெரிய அவமதிப்பு, துன்புறுத்தல், மரியாதைக் குறைவு போன்றவற்றுடன் இணைந்தது. இதனால், குறிப்பிட்ட நபருக்கு மட்டுமல்லாமல் அவருடைய ஒட்டு மொத்த குடும்பம் மற்றும் அவரைச் சார்ந்த சமுதாயத்திலும் தொடர் விளைவுகளை ஏற்படுத்தும். தண்டனைக்கு முந்தைய கைது அல்லது தண்டனைக்கு பிந்தைய கைது பற்றிய விசயங்களை பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்வதில்லை.

வழக்கில் விசாரணை முடியும் வரையில், சம்பந்தப்பட்ட நபருக்கு தொடர்ந்து முன்ஜாமீன் வழங்கப்பட வேண்டும். முன்ஜாமீன் என்பது குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இருக்க வேண்டும். அதன் பிறகு, வழக்கு விசாரணை முடியும் வரை சாதாரண வழக்கமான ஜாமீனை தொடர்ந்து அளிக்கலாம். வழக்கமான ஜாமீன் பெறுவதற்காக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் சரணடைய வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் தேவையற்றது. முன்ஜாமீன் வழங்கப்படாத நிலையில் அரசு வக்கீலுக்கு தகவல் அளித்து விட்டு இடைக்கால ஜாமீன் அளிக்கலாம். ஜாமீன் வழங்கும்போது நிபந்தனைகள் விதிக்க நீதிமன்றத்துக்கு முழு அதிகாரம் உண்டு. அதே நேரத்தில், நீதிமன்றம் அளித்த ஜாமீனை சம்பந்தப்பட்ட குற்றவாளி தவறாக பயன்படுத்தினால், நிபந்தனைகளை மாற்றியமைக்குமாறு அரசு வக்கீலோ அல்லது மனுதாரரோ (பாதிக்கப்பட்டவர்) நீதிமன்றத்தை அணுகலாம். இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்

ரூ.9 கோடியில் வீடு, BMW கார் பரிசாக வழங்கிய பாஜக தலைவர்!

பாரதீய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கட்காரி பெரும் பணக்காரரான இவர் பல்வேறு தொழிற்சாலைகளை நடத்தி வருகிறார் கடந்த வெள்ளிக்கிழமை. இவரது மகன் நிகிலுக்கு திருமணம் ஆடம்பரமான முறையில் நடந்தது.

நேற்று மாலை திருமண வரவேற்பு விழா மிக பிரமாண்டமான முறையில் நடத்தப்பட்டது. வரவேற்பு விழா அங்குள்ள ரசம்பார்க் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்கள் உள்பட 1 லட்சம் பேர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் விருந்து வழங்க விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

சிறப்பு விருந்தினர்களுக்கு தனியாக விருந்து வழங்கப்பட்டது. அதில் தென் இந்தியா, இத்தாலி, சீனா, பஞ்சாபி வகை உணவுகள் வழங்கப்பட்டன. இதில் மகனுக்கு திருமண பரிசாக ரூ.9 கோடி செலவில் கட்டப்பட்ட பங்களா மற்றும் “பி.எம்.டபிள்யூ சேடன்” வகை காரை நிதின் கட்காரி பரிசாக வழங்கினார். பங்களாவுக்கு மேலும் ரூ.4 கோடி செலவு செய்யப்பட்டு அழகுப்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதைகுழியை தோண்டுகிறது இராணுவம்..


இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்
விடுதலைபுலிகளினால் பிடித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இலங்கை இராணுவத்தினர் 26 பேரது சடலங்களை புதைத்த இடம் ஒன்றை தோண்டிப் பார்க்குமாறு இலங்கை நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

புதுக்குடியிருப்பில் வல்லிபுரம் பகுதியில் இந்த புதைகுழியைத் தோண்டும் பணிகள் இன்று ஆரம்பித்ததாக இலங்கை இராணுவ பேச்சாளர் உபய மெதவெல பிபிசிக்கு தெரிவித்தார்.

இராணுவம் மற்றும் கடற்படையைச் சேர்ந்த 26 சிப்பாய்கள், ரகசியமான விக்டர் 1, என்னும் இடத்தில் பிடித்து வைக்கப்பட்டிருந்து, அவர்கள் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டு அந்த குறித்த இடத்தில் புதைக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாலர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையில் சிறப்பு புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நான்குபேர் தந்த தகவல்களின் அடிப்படையில், சட்டமா அதிபரினால் இது குறித்த மனு ஒன்று வாழைச்சேனை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போதே இந்த புதைகுழியை தோண்டுவதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்ததாகவும் அவர் கூறினார்.

பிரதி சொலிசிட்டர் ஜெனரல், சட்ட வைத்திய அதிகாரி, அரச பகுப்பாய்வாளர், புதைபொருள் ஆராய்ச்சித்ததிணைக்களத்தின் அதிகாரிகள், நில அளவைத் திணைக்களம் மற்றும் ரஜரட்ட மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களை சேர்ந்த இரு பேராசிரியர்கள் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு ஒன்று இதற்காக புதுக்குடியிருப்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்...

மூளை நோய்க்கு வழி..


மல்டிபுல் ஸ்கெலெரோஸிஸ் என்று சொல்லப்படுகின்ற மூளைக் கோளாறினால் மூளையின் நரம்புகளில் ஏற்படுகின்ற சேதங்களை கட்டுப்படுத்தி சரிசெய்யக்கூடிய வழியொன்றைத் தாங்கள் கண்டறிந்துள்ளதாக பிரிட்டனிலுள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.



மல்டிபுல் ஸ்கெலெரோஸிஸை
சரி செய்ய வழி

எம். எஸ். என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்ற இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்ட நரம்பு நார்களுக்கான மூளை குறுத்தணுக்களை தூண்டிவிடுவதன் மூலம் புத்துயிர் தர முடியும் என்று இவர்கள் நம்புகின்றனர்.

மல்டிபுல் ஸ்கெலெரோஸிஸ் பற்றி பல விஷயங்களை நாம் அறிந்தாலும் அந்த நோய் எதனால் வருகிறது என்பது இன்னும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது.

எம்.எஸ். வந்தால் உடலில் ஏற்படும் முக்கிய பாதிப்பு என்பது நரம்பு நார்களைப் சுற்றிப் படிந்துள்ள மைலீன் என்ற பாதுகாப்புப் படிமம் சேதமடைவதுதான்.

இந்த மைலீன் படிவம்தான் நரம்புகள் மூலமாக உடலெங்கும் தகவல் பரிமாறுவதில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நோய் வந்தவர்களுடைய நோய் எதிர்ப்பு கட்டமைப்பு மைலீன் படிமத்தை வேற்றுப் பொருளாக நினைத்து தாக்கி சேதப்படுத்த, நரம்பு நார்களின் தகவல் பரிமாறும் ஆற்றல் குறைந்துபோக, நோயாளியின் உடற் செயற்பாடுகள் பாதிப்புக்குள்ளாகிவிடுகின்றன.

மைலீன் படிமத்துக்கு ஏற்படும் பாதிப்பை சரி செய்வதற்கான புதிய சிகிச்சைகளைக் உருவாக்குவதற்கான முக்கிய வழி ஒன்றைத் தாங்கள் கண்டறிந்துள்ளதாக எடின்பரோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மனித மூளையில் ஏற்கனவேயுள்ள குறுத்தெலும்புகளை சரியாகத் தூண்டிவிடுவதன் மூலம் மைலீன் படிமங்களுக்கு புத்துயிர் அளிக்க முடிகிறது என்பதை இந்த விஞ்ஞானிகள் எலிகளில் நடத்திய ஆராய்ச்சி காட்டுகிறது.

இந்த வழியைப் பின்பற்றி வெற்றியளிக்கக் கூடிய சிகிச்சை முறையை உருவாக்கிவிட்டால், ஏராளமான எம்.எஸ். நோயாளிகளின் வாழ்க்கை மேம்படும்

'விக்கிலீக்ஸ் ஆவணங்களால் இஸ்ரேலுக்கே லாபம்'- துருக்கிய அமைச்சர்..

விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் வெளியான ரகசிய ஆவணங்களால் பெரிதும் நன்மையடையப் போவது இஸ்ரேல்தான் என்று துருக்கி கருத்துரைத்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை (02.12.2010) 'மத்திய கிழக்கு நாடுகளைப் பொறுத்தவரையில், மேற்படி இணையதளம் வெளியிட்டுள்ள ரகசிய ஆவணங்களினால் இஸ்ரேலே அதிகளவு நன்மையடையப் போகின்றது' என துருக்கியின் உள்ளகத்துறை அமைச்சர் பஷீர் அதாலே குறிப்பிட்டுள்ளதாக ஏ.எஃப். பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விக்கிலீக்ஸ் இணையதளமானது ஐக்கிய அமெரிக்காவின் ராஜதந்திர உரையாடல்கள் அடங்கிய ஆயிரக்கணக்கான ஆவணங்களை வெளியிட்டுள்ளது. துருக்கியின் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகான் உட்பட பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்களை அவமானப்படுத்தும் வகையிலான ஆவணங்களும் இதில் அடங்கும்.

'இந்த நடவடிக்கையின் விளைவாக நன்மையடையப் போவது யார், பாதிக்கப்படப் போவது யார் என்ற அடிப்படையிலேயே இப்பிரச்சினை நோக்கப்படல் வேண்டும்' என உள்ளகத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் சிலவற்றில் துருக்கியப் பிரதமர் 'குறைந்தளவு வாசிப்பை உடையவர்' 'போதியளவு ஆய்வுத்திறனோ முன்னோக்குந்திறனோ அற்றவர்' முதலான விமர்சனங்கள் உள்ளடங்கியுள்ளன.

துருக்கியின் பிரதமர் இது குறித்துக் கருத்துரைக்கையில், மேற்படி இணையதளத்தின் நம்பத்தன்மை குறித்துக் கேள்வியெழுப்பியுள்ளார்.

துருக்கியின் ஆங்கிலத் தினசரி 'டுடேய்ஸ் ஸமான்' தனது செய்தியில், 'அமெரிக்க- ஐரோப்பிய செய்தி மூலங்கள் என்றவகையில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் வெளிநாட்டுத் தலைவர்கள் குறித்த பிழையானதும் கீழ்த்தரமானதுமான மனப்பதிவுகளை வெளிக்காட்டுவதாகவே அமைந்துள்ளன' என்று விமர்சித்துள்ளது

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் வெறியாட்டம் - பலஸ்தீன் இளம்பெண் வாக்குமூலம்..

நவம்பர் மாத ஆரம்பத்தில் தன்னை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறையில் இருந்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவ வழக்குமன்ற விசாரணைகளுக்காக நஹ்ஸனில் உள்ள சிறைப்பிரிவுக்கு மாற்றிய போது மிக மோசமான சித்திரவதைகளை எதிர்கொண்டதாக பலஸ்தீன் இளம் பெண் கைதியான ஸமூத் கர்ராஜேஹ் (வயது 22) வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

நவம்பர் மாதம் 8 ஆம் திகதி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவ வழக்குமன்ற விசாரணைக்காகத் தாமன் சிறையில் இருந்து ரமேல் சிறைக்கு மாற்றியபோது 'சோதனை' என்ற பெயரில் ஆடைகளைக் கலையுமாறு கேட்டு ஆண்-பெண் இராணுவச் சிப்பாய்கள் குழுவொன்று தன்னை மிகக் கடுமையாகத் துன்புறுத்தியதாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்றிடம் கர்ராஜேஹ் சாட்சியமளித்துள்ளார்.

ஆடைகளைக் கலைய முடியாதெனத் தான் உறுதியாக மறுத்தபோது, இஸ்ரேலிய இராணுவச் சிப்பாய்களும் பெண் ஜெயிலர்களும் மயக்கமுறும் வரை தன்னைக் காட்டுமிராண்டித்தனமாக அடித்து இம்சித்ததில் தன் உடலெங்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி பலஸ்தீன் இளம் பெண் தன்னுடைய வாக்குமூலத்தில், 'ஸஹர்' என்ற பெயருடைய இஸ்ரேலிய இராணுவச் சிப்பாய் தன்னுடைய தலையை மறைத்திருந்த ஹிஜாப் ஆடையை பலவந்தமாக இழுத்துக் கழற்றி, கழுத்தைச் சுற்றி கைகளால் இறுக்கிப் பிடித்து கடுமையாக அடித்து இம்சித்ததோடு, தரையில் தள்ளிவிட்டு காறி உமிழ்ந்ததாகவும், பின்னர் கைவிலங்கினைப் பற்றித் தரதரவென்று இழுத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய சித்திரவதைகளின் பின்னர் தன்னை கரப்பான் பூச்சிகள் நிறைந்த ஒடுங்கியதோர் அழுக்குக் கொட்டடியில் தள்ளி இரவு முழுதும் அடைத்து வைத்ததாகவும், உறங்குவதற்கு ஒரு மெத்தையோ போர்த்துவதற்கு ஒரு போர்வையோ இன்றி துர்நாற்றம் நிறைந்த வெறுந்தரையில் வலியுடனும் திகிலுடனும் கிடக்கவேண்டி இருந்தது என்றும் அந்தப் பெண் சாட்சியமளித்துள்ளார்.

சிறைக்கைதிகள் நலன்பேணும் தேசிய உயர் குழு, கர்ராஜேஹ் எனும் இளம் பெண்ணுக்கு எதிராக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினால் மேற்கொள்ளப்பட்ட இக்காட்டுமிராண்டித்தனத்தை மிக வன்மையாகக் கண்டித்துள்ளது.


மேற்படி இளம் பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டுள்ள சித்திரவதைகள், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகம் பலஸ்தீன் கைதிகளிடம் எவ்வளவு கொடூரமாகவும் குரூரத்துடனும் நடந்துகொள்கின்றது என்பதையே காட்டுகின்றது என்று மேற்படி அமைப்பு கருத்துரைத்துள்ளது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை பலஸ்தீன் பெண் கைதிகளை மிகக் குரூரமாகவும் இழிவாகவுமே நடத்தி வருகிறது என்றும், இதுபோன்ற காட்டுமிராண்டித்தனங்கள் கர்ராஜேஹ்க்கு மட்டும் முதன்முதலாக நிகழவில்லை, மாறாக, ரமேல் சிறையில் அபீர் உதேஹ் எனும் பலஸ்தீன் பெண் கைதிக்கு நிகழந்தது போன்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஏராளமான பலஸ்தீன் பெண் கைதிகள் மிகக் கடுமையாக அடித்து இம்சிக்கப்பட்டும் மோசமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டும் வருகின்றனர் என்றும் மேற்படி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் பலஸ்தீன் பெண் கைதிகளுக்கு நடக்கின்ற இத்தகைய கொடூரமான சித்திரவதைகள் அனைத்துமே வெளியில் வருவதில்லை என்றும், ஓரிரு சம்பவங்கள் மட்டுமே ஊடகங்களின் வழியே வெளித்தெரிய வருகின்றன என்றும் சிறைக்கைதிகள் நலன்பேணும் தேசிய உயர் குழு விசனம் தெரிவித்துள்ளது

எந்திரன் போல இருந்தாலே 1.76 கோடி ஊழல் செய்ய முடியும்: கருணாநிதி..

ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை படித்தவர்கள் நிறைந்த, அறிவு பரவியிருக்கின்ற, சட்டம் தெரிந்த இந்த காலத்திலே நம்புவதா? என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

முதல்வர் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் `இளைஞன்.' திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று இரவு நடந்தது. பாடல்களை முதல்வர் கருணாநிதி வெளியிட, நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது:-

தமிழ்நாட்டில் ஏறத்தாழ பேசா படம் ஓடிய காலத்திலிருந்து கலைத்துறையில் நான் இருக்கிறேன். எங்கள் திருவாரூரில் ஒரு தியேட்டருக்குப் பெயரே கூட ``கருணாநிதி'' தியேட்டர்தான். என் பெயரை வைக்கவில்லை-கருணாநிதி என்பது திருவாரூரிலே ஒரு சாமியின் பெயர். அங்கு தரையில் அமர்ந்து படம் பார்த்திருக்கிறேன். ஏனென்றால், பெஞ்சு டிக்கெட்டு வாங்க எனக்கு வசதியில்லை, வாய்ப்பில்லை என்றல்ல-தரையிலே உட்கார்ந்தால்தான் ஐந்தாறு பேராக நண்பர்களாக உட்கார்ந்து படம் பார்க்க முடியும் என்பதற்காக!

உடனடியாக யாராவது சினிமாவுக்கு டிக்கெட் வாங்கக்கூட வசதியில்லாத கருணாநிதி என்று சொல்லக்கூடும். அவைகளையெல்லாம் நான் பெருமையாகத்தான் கருதுகிறேன்.

செல்வச் சீமான் வீட்டிலே பிறந்தேன், தங்கத்தாம்பாளத்தோடு தங்கத் தட்டிலே ஒரு வட்டோடு-தங்கக்கரண்டியோடு பிறந்தேன் நான் என்று சொல்லிக்கொள்ளவில்லை. ஏழையாகத்தான் பிறந்தேன், ஏழையாகத்தான் வாழ்ந்தேன், ஏழைகளோடுதான் நட்பு கொண்டேன், ஏழைகளுடைய வாழ்வுக்காத்தான் இன்றைக்கும் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதுதான் எனக்குள்ள பெருமை.

நான் ஏழையாக பிறக்காமல், பணக்காரனாக பிறந்திருந்தால், செல்வச்சீமான் வீட்டுப்பிள்ளையாக பிறந்திருந்தால், இப்படியெல்லாம் ஏழைகளைப்பற்றி கவலைப்பட தோன்றியிருக்குமா? அரிசி விலை இந்த அளவிற்குத்தான் இருக்க வேண்டும் என்று கூறியிருக்க முடியுமா? என்றெல்லாம் நான் எண்ணிப் பார்க்கின்றேன்.

தரையில் அமர்ந்து படம் பார்த்தால் முதல் காட்சிக்குத்தான் போக வேண்டும். இரண்டாவது காட்சிக்குப் போக முடியாது. ஏனென்றால், இரண்டாவது காட்சிக்கு போகும்போது, முதல் காட்சிக்கு வந்தவர்கள் துப்பிய வெற்றிலைப்பாக்கு எச்சில் அங்கே உருண்டை, உருண்டையாக கிடக்கும். நாம் தப்பித்தவறி கையை வைத்து தடவிப்பார்த்தால், நம்முடைய கையெல்லாம் யாரோ வாயிலே வெற்றிலை போட, நம்முடைய கையெல்லாம் சிவந்திருக்கும். எனவே, இரண்டாவது காட்சிக்கு போகிறவர்கள் ஜாக்கிரதையாக போக வேண்டும். அப்படிப்பட்ட தியேட்டர்களில் பேசா படம் பார்த்திருக்கிறேன்.

பேசா படத்தில், திரைக்கு முன்னே படம் தெரிந்தால் கூட, நாம் அமர்ந்திருக்கின்ற இடத்திற்கு பின்னால் ஒருவன் கையிலே மெகாபோனை வைத்துக் கொண்டு, திரையில் என்ன நடக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருப்பான்.

``அதோ பார், பீமசேனன் வருகிறான், அதோ பார், பகாசூரன் வருகிறான், பீமசேனன் கீசகனை வதைக்கிறான்'' என்பதை வர்ணித்துக் கொண்டே ஒருவன் இருப்பான். ``பீமசேனனைப் பார், பகாசூரனைப் பார், பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம்''-என்று வர்ணிப்பான். படம் பார்க்கின்ற யாருக்கும் ``பல்லுக்குப் பல் இருகாதம்'' என்கின்றானே, எப்படி அது? காதம் என்றால் பத்து மைல் அல்லவா? இருகாதம் என்கிறபோது இருபது மைல் அல்லவா? பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம் என்றால் முப்பதும் இருபதும் ஐம்பது மைல் அல்லவா? ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் இடையே ஐம்பது மைல் அகலம் என்றால், வாய் எவ்வளவு அகலம் இருந்திருக்கும்? இப்படி ஒருவர் இருந்திருக்க முடியுமா-பகாசூரன் என்று? அன்றைக்கு யாரும் கேட்டதில்லை. இன்றைக்கு கேட்கிறார்களா என்ன?

ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் என்று சொல்லும்போது, அது எவ்வளவு பெரிய தொகை, அந்த தொகையை ஒருவர் ஊழல் செய்திருக்க முடியுமா? யாராவது ஒருவர் அதை அபகரித்திருந்தால் இவ்வளவு பெரிய கணக்கை-ஒரு தாளிலே எழுதிக்காட்டினால், அதை எப்படி இன்றைக்கு நம்புகிறோமோ, படித்தவர்கள் நிறைந்த, அறிவு பரவியிருக்கிற, சட்டம் தெரிந்த, நாணயத்தின் மதிப்பை உணர்ந்த இந்தக் காலத்திலே கூட ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் என்றால் அதை நம்புகின்ற நாம்-அன்றைக்கு ``பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம்'' என்று அவனுடைய வாயே முப்பதாயிரம் மைல் என்று பகாசூரனை வதைத்தபோது, அதை ஆனந்தமாக கேட்டுக்கொண்டுதான் படத்தை பார்த்தோம். அப்படி படம் பார்த்த ஏமாளிகளிலே ஒருவனாக நான் அன்றைக்கு இருந்தேன்.

படம் பார்த்தவர்களுடைய ஏமாளித்தனம் அப்படி இருந்தது. எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு ஒரு மனிதன் அந்த காரியத்தை செய்கிறான் என்றால், அவன் விஞ்ஞான ரீதியாகத்தான் செய்ய முடியும்.

எப்படி "எந்திரன்'' படத்திலே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு இரும்பு மனிதனாக -ரோபோவாக வந்து இந்த காரியங்களை செய்கிறாரோ, அதை போல, செய்ய முடியுமே தவிர தனியாக ஒரு மனிதன் அப்படி செய்ய முடியாது என்பதை அறிவுப்பூர்வமாக இன்றைக்கு உணருகிறோம் அதை காட்டுகிறோம். அதை உணருகின்ற நிலை இன்றைக்கு நாட்டிலே வந்திருக்கின்றது.

இந்த படத்தில் நடித்திருக்கின்ற அனைவரும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இந்த படத்தில் வாய்ப்பு அளித்ததற்கு முதல்வருக்கு நன்றி என்று குஷ்பு சுந்தர் பேசும்போது சொன்னார். முதல்வர் இந்த படத்திலே வாய்ப்பு அளித்ததற்காக நன்றி என்று குறிப்பிட்டார். இந்தப் பாத்திரத்தை ஏற்று, குஷ்பு நடிக்க முன்வந்ததற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ``பெரியார்'' படத்திலே மணியம்மையார் வேடத்திலே பார்த்து, இந்த படத்துக்கு தகுந்தவர் குஷ்புதான் என்று சொன்னேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டு, இந்தப்படத்திலே அவரை நடிக்க வைத்திருக்கிறார்கள். அவர்கள் சொன்னதைப்போல, ரஷ்ய நாட்டின் நாவலை முழுமையாகத் தழுவி அல்ல-பின்பற்றி அல்ல-அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்தக் கதையில் வருகின்ற முக்கியமான கட்டங்களையெல்லாம் கொஞ்சமும் விடாமல் இந்தப் படத்திலே இணைத்து வசனம் எழுதியிருக்கின்றேன்.

நான் பல கூட்டங்களில் பேசியிருக்கிறேன். பெரியாரை, அண்ணாவை, என்னுடைய இளமைக் காலத்திலே சந்திக்காமல் இருந்திருந்தால், நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆக இருந்திருப்பேன் என்று சொல்லியிருக்கின்றேன். அதற்கு ஏற்ப, இந்தப்படத்தில் நான் என்ன கருதுகின்றேனோ, அவைகளெல்லாம் உரையாடல்களாக வந்திருக்கின்றது. ஆனால், அரசியல் வாடை வீசக்கூடிய உரையாடல்களாக அல்ல -தொழிலாளர்களுடைய உணர்வுகளை - பாட்டாளி மக்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற -அவர்களுடைய கஷ்டங்களை வெளிப்படுத்துகின்ற, உணர்த்துகின்ற கட்டங்களாக இந்தப் படத்திலே அவைகளையெல்லாம் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

அப்படிப்பட்ட படத்தை இங்கே உங்களுக்கு இந்த நிறுவனத்தின் சார்பாக நான் வழங்குகிற நேரத்தில், இதை வசூலுக்காக-பணம் சம்பாதிப்பதற்காக ஒருவேளை மார்ட்டினும் பெஞ்சமினும் அப்படிக் கருதியிருந்தாலும்கூட-என்னைப்பொறுத்தவரையில், சம்பாதிப்பதற்காக அல்ல. ஏனென்றால், அவர்கள் கொடுத்த பணத்தை உடனடியாக கட்ட வேண்டிய வருமான வரியைக் கட்டிவிட்டு, மீதியை முழுவதும் நான் நன்கொடையாகவே தந்துவிட்டேன் என்பதையும் நீங்களெல்லாம் நன்றாக அறிவீர்கள். அதை நான் இங்கே சொல்ல வேண்டிய அவசியமில்லை. என்ன செய்வது? காலத்தின் கட்டாயம். இதையெல்லாம் சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது. ஆகவே, சொல்லியிருக்கிறேன்.

ரஜினிகாந்த் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், யாரும் அவரை, அவருக்கு கொடுத்த பணத்தை யாருக்குக் கொடுத்தார் என்று யாரும் கேட்க மாட்டார்கள். அவர் கொடுப்பார். இரண்டு கைகளுக்கும் இடையே, ஒரு கையால் கொடுத்ததை இன்னொரு கை அறியாமல் அவர் கொடுப்பது எனக்குத் தெரியும். என்னை பொறுத்த வரையில், ஒரு அரசியல் வாதியாக, ஒரு கட்சித் தலைவனாக இருக்கின்ற காரணத்தால், எனக்கு வருகிற பணம், படத்திலே வருகின்ற பணம் இவைகளெல்லாம் என்னுடைய குடும்பத்திற்கு நேரடியாக தரப்படுகிறது என்ற பொருள் அல்ல.

என்னுடைய குடும்பத்தினர் வாழ்வதற்கு இன்று நேற்றல்ல, நான் சேலம் ``மாடர்ன் தியேட்டரில்'' நம்முடைய வாலி சொன்னதைப்போல, படத்துக்குக் கதை எழுதினேனே, அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரையில் 75 படங்கள் எழுதி, ஒவ்வொரு படத்திற்கும் குறைந்தபட்சம் அந்தக் காலத்திலேயே - பராசக்தி வந்த காலத்திலேயே பத்தாயிரம் ரூபாய் எனக்கு ஊதியம் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு எனக்கும் சிவாஜிக்கும் சேர்ந்தாற்போல ``திரும்பிப்பார்'' படத்திற்காக அவருக்கு இருபதாயிரம் ரூபாய், எனக்கு இருபதாயிரம் ரூபாய் - என்ன வேடிக்கை பாருங்கள். நடிகர் திலகம் சிவாஜிக்கு இருபதாயிரம் ரூபாய் - எனக்கு இருபதாயிரம் ரூபாய் அந்தக் காலத்திலே கொடுத்தார்கள். அந்த இருபதாயிரம் ரூபாயைக் கொண்டுபோய் சூரக்கோட்டையிலே அவர் நிலம் வாங்கினார் - நான் காட்டூரிலே நிலம் வாங்கினேன். அந்த நிலங்கள் அப்படியே இருக்கின்றன. அதைப்பார்க்கின்ற பொழுது இப்போதும் எனக்கு சிவாஜியின் ஞாபகம் வரும்.

எப்படி என்னுடைய ``பராசக்தி'' படத்தில் -சிவாஜிக்கு அது முதல் படமாக இருந்து, அவர் பெயரும் புகழும் பெற்றாரோ-எப்படி எம்.ஜி.ஆர். என்னுடைய ``ராஜகுமாரி'' படத்திலே நடித்துப் பெயரும் புகழும் பெற்றாரோ-அதைப்போல, தம்பி விஜய்யைப் பொருத்த வரையில் இது அவருக்குப் பெயரும் புகழும், நடிகர் திலகம் சிவாஜியைப்போல, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரைப் போல பெயரும் புகழும் அவருக்குத் தரும்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்

வாங்க எல்லோருமே சேர்ந்து ஒன்றாகவே வாழ்விலே காணலாம் மக்கா மதீனாவை நாம்..

ஐம்பெரும் இஸ்லாமியக் கடமைகளுள் ஒன்றான ஹஜ்ஜைப் பற்றிப் பாடப்பட்ட இஸ்லாமியப் பாடகரின் பாட்டைத்தான் தலைப்பாகத் தந்துள்ளேன். ஐயாயிரம் ஆண்டுகள் முன்னே நடந்த தியாகச் செம்மல் நபி இபுராஹீம் (அலை) அவர்களின் ஏகத்துவத் துணிவினைச் சோதித்த நிகழ்வு அது. அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க தம் அருமை மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்துப் பலியிட அவர் நினைத்தபோது தடுத்தி நிறுத்தி, அன்னை ஹாஜிரா மனம் குளிர மகனுக்குப் பதிலாகக் கொழுத்த ஓர் ஆட்டினைப் பலியிட்டு, குர்பானி என்ற சடங்கினை நிறைவு செய்ய அண்ணல் இபுராஹீம் (அலை) அவர்களுக்குக் கட்டளையிட்டான். அந்தப் புனிதரின் அடியொற்றி நாமும் குர்பானி கொடுத்து உற்றார் உறவினர், எழை எளியோர் பகிர்ந்து உண்டு மகிழும் தியாகப் பெருநாள்தான் ஹஜ் பெருநாளாகும்.

அன்னை ஹாஜரா, தம் அருமை மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாகத்தினைத் தீர்க்க ஓடி அலைந்து களைத்திருந்த நேரத்தில் மகனின் காலுக்கடியில் உலக ஹாஜிகளின் தாகம் தீர்க்கும் ஒரு வெள்ளப் பிரளயம் பீறிட்டு வெளியானது. அதுதான் ஸம்ஸம் நீருற்று. அய்யாமுல் ஜாஹிலிய்யா என்ற இருண்ட காலத்தில் கஃபா என்ற இறைஆலயத்தில் ஏக இறைக்கு மாறு செய்யும் முன்னூற்றறுபது சிலைகள் வைத்து ஜோடித்து, அவற்றைக் கடவுளராக வணங்கியபோது, அவை அத்தனையும் வெறும் கற்சிலைகள் என்றும் அண்ட அகிலம் படைத்து அனைத்திற்கும் வாழ்வளிக்கும் இறைவன் அல்லாஹ் ஒருவனே என்றும் ஏகத்துவ முழக்கம் மீண்டும் கேட்டது. கஃபாவின் வரலாறு மீண்டும் ஒரு திருப்புமுனையைக் கண்டது.

மது, மாது என்று மயங்கிக் கிடந்து, ஞானம் இழந்து, அஞ்ஞானத்தின் ஆணிவேராக திகழ்ந்த அரபியரை நல்வழிப்படுத்த, அறியாமை இருளைக் கிழித்து அருமை நபி முஹம்மது (ஸல்) அவர்கள் உதித்தார்கள். "அல்அமீன் - நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்" என அழைக்கப்பட்ட நபியவர்கள் தம் கண்முன்னே நடக்கும் அனாச்சாரங்களை கண்டு மனம் வெதும்பி, ஒரு காலகட்டத்தில் ஹிராக் குகையில் தனித்திருந்து தவமிருந்தபோது, வானவர் கோமான் ஜிப்ரீல (அலை) அவர்கள் பெருமானாருக்கு இறைவன் அருளிய இறைமறை வசனங்களை எடுத்துரைத்து, இறைத்தூதராக அறிவித்து, இன்று உலகம் முழுதும் 150 கோடி முஸ்லிம்கள் பின்பற்றி வாழும் மார்க்கமாக வளர்ந்தோங்க வித்திட்டு, சரித்திரப் புகழ் வாய்ந்த மகிமை மிக்க மக்கா-மதீனா நகர் நோக்கி லட்சோப லட்ச மக்கள் ஆண்டுதோறும் ஹஜ் என்ற புனித யாத்திரையான அமைதிப் படையெடுப்புக்கு அடித்தளமிட்டது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

அல்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் வருகிற மக்கா-மதீனா நகரங்களின் சிறப்புகளைப் படித்த, பள்ளிகளில் இமாம்கள் வாயிலாக கேள்விப்பட்ட, புனித ஹஜ் செய்த புண்ணிய ஹாஜிகள் கூறும் அதிய ஹஜ் அனுபவங்களைக் கேட்ட முஸ்லிம் மக்கள், "ஏழை-பணக்காரன் என்ற வித்தியாசமில்லாது வாழ்வில் ஒருநாளாவது அந்த உலக மக்கள் ஒன்றுகூடி முழங்கும் "லப்பைக்" எனும் ஒற்றுமை கீதத்தில் பங்கெடுக்க வேண்டும்; அந்த உன்னத நகரங்களைப் பார்த்து விட்டு மடிய வேண்டும்" என்று நிய்யத்துச் செய்கின்றனர். அவர்களின் வசதிக்காக அரேபிய அரசு தாராளமான 30 லட்சம் விசாக்களை வழங்கி யாத்திரீயர்கள் அதிகச் சிரமமின்றி வழிபட சிறப்பான ஏற்பாடுகளை ஒவ்வொரு வருடமும் ஏற்பாடு செய்து தருவதினைக் கண்கூடாகப் பார்க்கின்றோம். ஒவ்வொரு இஸ்லாமிய நாடும் மத சார்பற்ற நாடுகளும் ஹஜ் பயனத்திற்காகப் பல்வேறு சலுகைகளையும் வழங்குகின்றன.

இந்தியாவினைப் பொருத்த மட்டில் இதற்காக மத்திய ஹஜ் கமிட்டியும் மாநில ஹஜ் கமிட்டிகளும் உள்ளன. அரசுவழி ஹஜ் கமிட்டிகள் ஹாஜிகளுக்குத் தங்கும் இடங்களைத் தேர்வு செய்து,கொஞ்சம்போல் மானியமும் வழங்குகிறது. அதேபோன்று செல்வந்தர்கள், வயதான வசதி படைத்தவர்கள் அரசு நிர்ணயிக்கும் செலவினைவிட இருமடங்கு செலவு செய்து ஹஜ் செய்யச் சிறப்பு ஏற்பாடுடன் கூடிய தனியார் ஹஜ், உம்ரா சர்வீஸ் நிறுவனங்களும் உள்ளன என்பதினை அனைவரும் அறிவர். இதுபோன்று சர்வீஸ்களை நடத்தும் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட அளவு அரசால் ஹாஜிகள் பயணச்சீட்டு ஒதுக்கப்படுகிறது என்பதும் அனைவரும் அறிந்ததே!

சமீப காலங்களில் ஹஜ் சர்வீஸில் ஈடுபட்ட தனியார் நிறுவனங்களில் ஏற்பட்ட சில குழப்பங்கள் கவலை தருவதாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் 1999-2000 ஆம் ஆண்டு என நினைக்கிறேன் சாகுல் ஹமீது என்பவர் ஹஜ் சர்வீஸ் நடத்தி பலரின் பணத்தினைப் பெற்றுக் கொண்டு ஹஜ்ஜூக்கு அனுப்ப முடியாமல் போனதும், அது சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டியில் ஒரு வழக்கு நிலுவையிலிருந்ததும் அதன் பின்பு அவர் பெங்களூர் லாட்ஜில் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டுத் தற்கொலை செய்ததும் மிகவும் அதிர்ச்சி தந்த செய்தியாகும். அந்தக் கடிதத்தில், தான் ஹஜ்ஜூக்காக வசூல் செய்த பணத்தினை மண்ணடியில் தொழில் செய்த ஒரு ஏமாற்றுப் பேர்வழியிடம் பறிகொடுத்து ஏமாறிப் போனதாகவும் எழுதியிருந்தது பரபரப்பான செய்தியாக இருந்தது சிலருக்கு ஞாபகம் இருக்கும். காலப்போக்கில் ஆறின கஞ்சி பழைய கஞ்சி கதையாகப் பலருக்கு அந்த அதிர்ச்சி நிகழ்வு, நினைவுகளின் தடத்திலிருந்து தேய்ந்து போயிருக்கலாம். தோனலாம். ஆனால் ஈமானுள்ள எவருக்கும் ஏமாற்றப்பட்டுத் தற்கொலை செய்து கொண்ட ஒரு முஸ்லிமின் அந்தப் பரிதாபமான நிகழ்சி பசு மரத்தில் அடித்த ஆணிபோன்று என்றும் பசுமையாக இருக்கும்.

அதுபோன்ற தவறு இந்த வருடமும் ஏற்பட்டு இருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, அதற்கான விளக்கங்களை அந்த ஹஜ் பயண ஏற்பாடு செய்தவர்கள் பத்திரிகையாளர் மன்றத்தில் விளக்கம் அளித்ததும், அதனையடுத்து 23.11.2010 அன்று தனியார் ஹஜ் சர்வீஸ் நிறுவனங்களைத் தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையினை முன்வைத்து ஒரு சமூக அமைப்பு சென்னை மெமோரியல் ஹாலில் ஆர்ப்பாட்டம் செய்ததும் பொது சிந்தனையாளர்களை அதிர வைத்தது. தனியார் ஹஜ் சர்வீஸ்களுக்கு இடம் ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் குற்றம் சாட்டி, கேரள உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கினை விசாரிக்க அனுமதித்ததாகவும் ஒரு செய்தி 7.4.2010 அன்று அனைத்துப் பத்திரி்கையிலும் வெளியானது.

மத்திய-மாநில ஹஜ் கமிட்டிகள்

Haj Committe of India

(Under Ministry of External Affairs)

Head Office, Mumbai

Haj House,

7-A, M.R.A. Marg (Palton Road),

Mumbai – 400 001, Maharashtra, India.

Tele: 022-22612989 / 22610340 / 22613110 / 22611784 / 22610344 / 22610345

Fax: 022-22620920 / 22630461

E-mail: hajcommittee@hajcommittee.com /hajcommittee@mtnl.net.in

Web: http://www.hajcommittee.com/

Liaison Office, Delhi

Haj Committee of India,

E-20 Hazrat Nizamuddin (West),

New Delhi - 110 013, India.

Tel: 011- 24359384 / 011- 24359386

Fax: 011- 24359385

Tamilnadu State Hajj Committee

Third Floor, Rosy Tower.

New No.13 Old No. 7

Mahathma Gandhi (Numgampakkam) High Road,

Chennai - 600 034, Tamilnadu, India.

Tel: 091-44-28227617 / 28252519

Fax: 091-44-28276980

Email: tnhajj786@vsnl.com / tnhajj786@bsnl.in

Web: http://www.hajjtn.org/

இந்திய நாட்டிலிருந்து ஏறத்தாழ 1,20,000 ஹாஜிகள் ஹஜ் பயணம் செய்ததாகச் செய்தி கூறுகிறது. ஒரு பத்திரிகையில் ஆற்காடு நவாப், "வசதியுள்ளவர்கள் மட்டும் ஹஜ் செய்யவேண்டும்; வசதியில்லாதவர்கள் அரசு மானியத்துடன் ஹஜ் செய்வது கூடாது" என்றுஅறிக்கை விட்டார். அரசுப் பணம் என்பது அரசில்அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் பணமோ அரசை நடத்திச் செல்லும் அலுவலர்களின் பணமோ அல்ல. மாறாக அது அனைத்து மக்களின் வரிப்பணம்.

அரசுகள் மக்களுக்குப் பல்வேறு மத வழிப்பாட்டிற்குச் சலுகைகள் செய்து கொடுக்கின்றன. உதாரணமாக, திபேத் பக்கத்தில் மலையடிவாரத்தில் உள்ள மானஸரோவர் யாத்திரைக்குப் பயணச்சலுகை வழங்கியுள்ளது. ஏன் சீனாவரைக்கும் போக வேண்டும்? நம் காஷ்மீர் பக்கத்திலுள்ள பத்திரிநாத் கோயில் பயணத்திற்குப் பல சலுகை செய்து கொடுக்கிறது அரசு. அதற்காக ஓராண்டுக்கு 400கோடி ரூபாய் செலவழிக்கிறது. அப்படியிருக்கும்போது அரசு சலுகையினை வசதியில்லாத முஸ்லிம்கள் பெறக்கூடாது என்று வசதியுள்ள கோமான்கள் சொல்வது எந்தளவிற்கு நியாயமாகும்?

அரசு மானியம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட முஸ்லிம்களுக்குத்தான் ஹஜ் கமிட்டி மூலம் கொடுக்க முடியும். வசதியுள்ள முஸ்லிம்கள் அரசு மானியமில்லாது ஹஜ் பயணம் செய்து கொள்வதற்குத் தனியார் நிறுவனங்களையும் அரசு அனுமதித்திருக்கிறது. அதுபோன்ற தனியார் ஹஜ் சர்வீஸ்களைத் தடை செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்வது, எலித் தொல்லையாக இருக்கிறது என்ற கவலையில் வீட்டையே கொளுத்திய கதைதான் என்றால் மிகையாகுமா? தனியார் ஹஜ் சர்வீஸ்களில் நடைபெறும் தவறுகளைக் களைய என்ன வழிகள் என்று ஆராய வேண்டுமே தவிர முஸ்லிம்கள் அதிகமாக ஹஜ் யாத்திரை செய்ய தடைக்கல்லாக எந்த சமூக அமைப்பும் இருக்கக் கூடாது என்ற ஆதங்கத்தில்தான் இதனை நான் எழுதுகிறேன்.

சில தனியார் ஹஜ் சர்வீஸ்கள் முறைகேடுகளுடன் நடக்கிறது என்பது ஒரு குற்றச்சாட்டு. அடுத்தக் குற்றச்சாட்டு, ஒருசில தனியார் ஹஜ் சர்வீஸ்களுக்கு இடையில் காட்டப்படும் பாரபட்சம் என்று கேரள உயர் நீதி மன்றத்தில் தாக்கப்பட்ட வழக்கு போன்றது ஆகும். அதுவும் ஒருசில இமாம்கள் ஹஜ் சர்வீஸ்கள் நடத்துவதாக வாக்களித்து, ஹாஜிகளை நட்டாற்றில் விட்டு விடுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

25 ஆண்டுகளுக்கு முன்பு துபை போன்ற வளைகுடா நாட்டிற்குச் செல்ல வேண்டுமென்றால் நம் மக்கள் கள்ளத்தோணியில் மும்பை வழியாகவும் இலங்கை வழியாகவும் செல்வர். அவர்களை அழைத்துச் சென்றவர்கள் வளைகுடா நாடுகளின் கழுத்தளவு தண்ணீரில் இறக்கி விட்டு, "மகனே உன் சமத்து" என்று நடுகடலில் விட்டு விட்டுச் சென்று விடுவர். அவ்வாறுதான் சிலர் ஹஜ் சர்வீஸ் நடத்துகிறோம் என்று சொல்லி ஆசை வார்த்தை கூறி பணம் வசூல் செய்து விட்டு, பின்பு, "போதிய விசா வரவில்லை" என்று சப்பைக்கட்டுக் கட்டுவது முறையில்லாத செயலாகும்.

அதுவும் பள்ளிவாசலில் இமாம் சேவை செய்ய வேண்டியவர்கள் தங்களது தலையாய பணியினை விட்டு விட்டு ஹஜ் சர்வீஸில் ஈடுபடுகின்றனர். அந்த இமாம் வெள்ளிக்கிழமை தோறும் குத்பா பிரசங்கம் நடத்துவதனை ஒரு தமிழ் டி.வி ரிக்கார்டிங் செய்து, கேசட்டாகவும் விற்கப்படுகிறது. அதனை வீடியோ எடுப்பவர் பள்ளிவாசல் நடுவில் தொழுகை நடத்துபவர்களுக்கிடையே ஸ்டூலில் ஏறி நின்று ரிக்கார்டிங் செய்கிறார். அவர் வேற்று மதத்தினவர் என்று அவரிடம் விசாரித்து தெரிந்து கொண்டேன். இளையாங்குடி வெப்சைட்டில் ஹஜ் பெருநாள் தொழுகையினை பள்ளிவாசலுக்குள் இருந்து கொண்டு செல்போனில் படம் பிடித்து வெளியிட்டவர்களுக்குக் கண்டனக் கணைகள் எழுப்பப்பட்டன. இளையாங்குடி பள்ளிவாசல் வளாகத்தில் நடக்கும் திருமண வைபவங்களை யாரும் வீடியோ எடுக்கக்கூடாது என்று கட்டுப்பாடே இருக்கிறது. அப்படி இருக்கும்போது சென்னை மாநகர் மத்தியில் இருக்கும் பள்ளியின் நடுவே முஸ்லிமல்லாதவர் ஸ்டூல் மீது ஏறி நின்று வீடியோ எடுப்பது எந்த அளவு சரியானது என்று தெரியவில்லை.

சென்னை சீஃப் ஹாஜி சலாவுதீன் அவர்கள், திருமண நிகழ்ச்சிகளுக்கு நிக்காஹ் துவா ஓத வரும்போது யாரும் வீடியோ எடுத்தால் அதனை அவர் அனுமதிப்பதில்லை. புளியந்தோப்பில் உள்ள ஹஜ் கமிட்டியில் நடக்கும் அனைத்து திருமணங்களுக்கும் இதுபோன்ற முறை கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட பள்ளியின் இமாம் மட்டும் தம் குத்பா பிரசங்கத்தைப் பள்ளிக்கு நடுவே ஒருவர் வீடியோ சாதனங்கள் ஆக்கிரமிக்க ஏன் அதனை அனுமதிக்கிறார் என்பது எனக்கு ஆச்சரியமாகயிருக்கிறது. அந்த இமாமைப் பற்றி நிர்வாகத்தினருக்கு 275 பேர் கையெழுத்திட்ட புகார்கள் கொடுக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு, இமாமுக்குச் சாதகமாக 800 பேர் ஆதரவு இருந்ததால் தன் பதவியினை தக்க வைத்துள்ளார் என்று நிர்வாகத்தால் நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டு வெளியானது. நான் அந்த பள்ளிக்குச் செல்லும்போது என்னிடமும் ஒரு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதேபோன்று, மண்ணடியில் உள்ள ஒரு பள்ளியில் தலைமை இமாம் ஒருவர் இரும்பு மற்றும் வீடு புரோக்கர் வியாபாரத்தில் ஈடுபட்டதால் அந்த இமாமைத் தலைமைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்கள். இமாம்களுக்கு அரசு ஓய்வூதியம்கூட இருக்கும்போது இது போன்ற சர்ச்சைகளுக்கு இமாம்கள் இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

வழக்கம்போல் ஆலோசனைகள் சில:

  1. அரசு ஹஜ் கமிட்டிகள், தனியார் ஹஜ் கமிட்டிகளைவிட இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். மத்திய-மாநில ஹஜ் கமிட்டிகளில் பிரயாணம் செய்பவர்கள் தங்களுக்கான உணவினைத் தாங்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஆனால் தனியார் நடத்தும் ஹஜ் கமிட்டிகள் அதற்கான ஏற்பாடினை அவர்களே செய்கின்றனர். இப்போது மத்திய ஹஜ் கமிட்டிகள் ஒவ்வொரு ஹாஜிகளுக்கும் அவர்கள் மக்கா போய்ச் சேர்ந்ததும் கொடுக்கும் 2200 ரியால் பணத்தில் உணவுக்கென 700 ரியால் பிடித்தம் செய்து அந்த ஹாஜிகளுக்கு அவர்கள் தங்கும் இடத்தில் தரமும் சுவையும் உள்ள பொட்டலச் சாப்பாடு மூன்று வேளைகளுக்கும் அவர்கள் தங்கி இருக்கும் இடங்களில் வழங்கலாம். பர்மா, பங்களாதேஷ், கேரளா, தமிழ்நாட்டினைச் சார்ந்த மெஸ் நடத்துபவர்கள் அங்கு ஏராளமாக இருக்கும்போது இதுபோன்ற வசதிகளைச் செய்து கொடுப்பது எளிதாகச் சாத்தியமானதே. அல்லது ஹாஜிகளுடன் அழைத்துச் செல்லும் வழிகாட்டிகளோடு சமையல்காரர்களையும் அழைத்துச் சென்று ஹாஜிகளின் உணவிற்கு ஏற்பாடு செய்யலாம்.

  2. அரசு ஹஜ் கமிட்டியின் மூலம் செல்லும் ஹாஜிகளுக்கு மினாவில் தங்கியிருக்கும் 5 நாட்களில் வெறும் பிஸ்கட், ரொட்டி, டீ தான் வழங்கப்படுகிறது. பிஸ்கட், ரொட்டிக்குப் பதிலாக மக்காவின் மினி லஞ்ச் ஆன 'கப்சா' உணவுப் பொட்டலங்களை ஹாஜிகளுக்கு வழங்கி அவர்கள் வயிறார உண்ண வழிசெய்யலாம்.

  3. ஹஜ் நாட்கள் முடிந்ததும் ஹாஜிகள் தங்கள் நாடுகளுக்குத் திரும்புவதற்கு விமானத்துக்காகக் காத்துக் கிடக்கும் நாட்களில் அவர்களை ஜெத்தா நகர்ப்புறங்களுக்கு கைடுகள் துணையுடன் வாகனத்தில் அழைத்துச் சென்று மக்கா திரும்பலாம். அல்லது ‘முஅல்லிம்’ அனுமதி பெற்று ஜெத்தா சென்றுவர மிசன் உதவியாளர்கள் மூலம் அனுமதிச் சீட்டு வழங்கலாம்.

  4. ஹாஜிகள் திரும்பும்போது அவர்களுடன் அவர்கள் பயணம் செய்யும் விமானத்திலேயே ஒரு குறிப்பிட்ட அளவு ஸம்ஸம் தண்ணீர் எடுத்துவர அனுமதிக்கலாம். இவ்வாறின்றி ஹாஜிகளின் ஸம்ஸம் தண்ணீர் வேறு விமானத்தில் சில நாட்கள் கழித்து அனுப்புவது நடைமுறையில் இருப்பதால் ஹாஜிகளைப் பார்க்கச் செல்பவர்களுக்கு தண்ணீர் வழங்க முடியாமல் போய் விடுகிறது.

  5. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வசதியாக ஹஜ் செய்வதற்குத் தள்ளு வண்டிகளை அவர்கள் பயன்பாட்டிற்காக மத்திய ஹஜ் கமிட்டிகள் ஏற்பாடு செய்யலாம். இதனை ஒவ்வொரு மாநில அரசின், மத்திய அரசின் சமூக நலத்துறையே மாற்றுத்திறனாளிகளுக்கான மானியத்தொகை மூலம் அந்த வண்டிகளை வாங்க ஏற்பாடு செய்யலாம்.

  6. மத்திய ஹஜ் கமிட்டிகள் தனியாருக்கு ஹஜ் சர்வீஸ் நடத்த அனுமதி வழங்கும்போது அந்தத் தனியார் கம்பொனிகளுடன் ‘கான்ட்ராக்ட் ரூல்ஸ் & ரெகுலேஷன்'படி ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு தனியார் ஹஜ் சர்வீஸும் ஒரு குறிப்பிட்ட தொகையினைப் பிணைத்தொகையாகச் செலுத்த உத்திரவிடலாம். எந்தத் தனியார் ஹஜ் சர்வீஸ் முறைகேடுகளில் ஈடுபடுகிறதோ அவர்களது டெப்பாஸிட்டைப் பறிமுதல் செய்து அவர்கள் இனிமேல் ஹஜ் சர்வீஸ் நடத்த அனுமதி பெறமுடியாமல் பார்த்துக் கொள்ளலாம். எப்படி டெல்லி மெட்ரோ ரயில் புராஜக்ட்டில் கட்டப்பட்ட தூண் இடிந்து விழுந்து அதனைக் கட்டிய கேமன் கட்டிட கம்பனி பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டதோ அதே போன்ற நடவடிக்கை எடுக்கலாம்.

  7. தனியார் ஹஜ் சர்வீஸில் ஹாஜிகளுக்கு வாக்குறுதி கொடுத்த சேவைகளைச் சரியாகச் செய்யவில்லையென்றால் அவர்களை நுகர்வோர் நீதிமன்றம் மூலம் நஷ்டஈடு் வழங்க இலவச சட்ட உதவி மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.

  8. ஒவ்வொரு மாநிலத்திலும் அங்கீகரிக்கப் பட்ட ஹஜ் சர்வீஸ்களையும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களையும் இணைய தளத்திலும், பிரபலமான மாநிலப் பத்திரிகையிலும் ஹஜ் கமிட்டி, பட்டியல் வெளியிட வேண்டும். எந்தத் தனியாரும் ஒதுக்கப்பட்ட இடங்களுக்குக் கூடுதலாக ஆள் சேர்க்காமலும் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேலாகப் பணம் வசூல் செய்யாது பார்த்துக் கொள்ள வேண்டும்.

  9. எப்படி மாநில வக்ப் வாரியத்தில் உள்ள உறுப்பினர்கள் முஸ்லிம் அமைப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப் படுகிறார்களோ அதேபோன்று, நியமன முறை இல்லாமல் மாநில ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள் அதன் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் படவேண்டும். வசதி படைத்த, அரசியல் செல்வாக்குள்ள சிலரே அந்தப் பதவிகளில் நியமனம் செய்யப்படுகின்றனர். தேர்நதெடுக்கப்பட்ட உறுப்பினர்களால்தான் முஸ்லிம்கள் தஙகள் கருத்துக்களை எடுத்துச் சொல்லி ஹஜ் கமிட்டிகள் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.

மக்கா நகரின் இறையில்லத்தில் அழைக்கப்படும் "அஷ்ஹது அன்லாயிலாக இல்லல்லாஹ்; அஷ்ஹது அன்ன முஹம்மதர்ரஸூலுல்லாஹ்" என்ற பாங்குச் சப்தத்தினைக் கேட்டதும் உலகின் 30 லட்சம் ஹாஜிகளும் ஒன்று கூடி, "அல்லாஹு அக்பர்" என்று தக்பீர் கட்டி, ஒரு குண்டூசி விழுந்தால்கூட சப்தம் கேட்கிறதோ அதேபோன்று எந்தக் குறையும் மனசஞ்சலமும் இல்லாத ஹஜ்ஜினை இனிவரும் காலங்களில் நிறைவேற்றலாம் வாருங்களேன் என் சொந்தங்களே! எனக் கூறி நிறைவு செய்கிறே

பண போதையில் வயதை தொலைக்கும் இளைய சமுதாயம்...

சாதனை செய்யும் ஆசையில், இளைய சமுதாயம், மனரீதியிலும், உடல்ரீதியிலும் பாதிக்கப்படுவதாக, மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். நம் நாட்டில் பன்னாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால், வேலைவாய்ப்பும் பெருகி விட்டது. ஒரு டிகிரிப் படிப்பு முடித்தாலே, கைநிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்கிறது !. சாதிக்க துடிக்கும் ஆவலுடன், இளைஞர்கள், கால நேரம் பாராது உழைக்கின்றனர். இதனால், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். முதுமைக்குரிய உடல் பாதிப்புகள், அவர்களுக்கு நடுத்தர வயதிலேயே ஏற்படுகிறது.
பிரபல பன்னாட்டு நிறுவனத்தில் சீனியர் அதிகாரியாக வேலைபார்க்கும் ஒருவர் கூறியதாவது:
நான் கடந்த ஏழு ஆண்டுகளாக, இந்த நிறுவனத்தில் பணிபுரிகிறேன். என் திறமையால் பல பணி உயர்வுகளையும், எதிர்பார்ப்புகளுக்கு மிஞ்சிய சம்பளத்தையும் பெற்றேன்.பணி நிமித்தமாக, பல்வேறு நாடுகளுக்கும் சென்று வருகிறேன். எனக்கு தற்போது 32 வயதாகிறது. ஆனால் நான், அந்திம காலத்தை நெருங்கிவிட்டது போல உணர்கிறேன். பணிச்சுமையால் மன ரீதியிலும்,உடல் ரீதியிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். வாழ்க்கையில் மாற்றத்தை விரும்புகிறேன். எனவே வேலையை விட்டுவிட முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
இதே போன்று, பெரும்பாலான இளைஞர்கள், பணிச்சுமையால் மன அழுத்த நோய்க்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து மனோதத்துவ நிபுணர் கூறியதாவது:
கைநிறைய காசு சம்பாதிக்கும் ஆசையில், இளைஞர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்கு சேர்கின்றனர். தொடர்ந்து திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம், வேலைப்பளு, நிச்சயமற்ற பணிச் சூழல் ஆகியவற்றால், குறுகிய காலத்தில் அவர்கள் மன அழுத்த நோய்க்கு ஆட்படுகின்றனர்.தற்போதைய வாழ்க்கை சூழலில் இளைஞர்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது. வசதியான வாழ்க்கை அமைய, 32 வயதுக்குள், அள வுக்கு அதிகமாக உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தைவிட, அலுவலகத்தில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் அவர்கள், மன அழுத்த நோய்க்கு ஆட்படுவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது.தற்போதைய வாழ்க்கை முறையில், எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளது. அதை அடைவதற்கு இளைய சமுதாயத்தினர், அதிக "ரிஸ்க்'குகளை எடுக்கின்றனர். இதனால் அவர்கள் இளம் வயதிலேயே முதுமையை உணர்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
"மன அழுத்த நோயை தவிர்க்க, தனிப்பட்ட வாழ்க்கைக்கும், அலுவலகத்திற்கும் இடையில் சமநிலையை கடைபிடிக்க வேண்டியது அவசியம்; வாழ்க்கையில் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தரும் பழக்கத்தை விட்டொழித்து சுமூகமாக அணுக பழகி கொண்டால், மன அழுத்த நோய் நம்மை அண்டாது' என, நிபுணர்கள் தீர்வு கூறுகின்றனன..

ஹிஜ்ரீ பிறந்த வரலாறு....


ஹிஜ்ரீ ஆண்டு தெரியுமா? முஸ்லிம்களின் திருமண அழைப்பிதழ்களில் பார்த்திருக்கலாம். நோன்பு காலங்களில் ஸஹர் நேரம், நோன்பு துறக்கும் நேரம் அடங்கிய அட்டவணைகள் பள்ளிவாசல்களில் வினியோகிப்பார்களே அதில் இருக்கும். மாபெரும் இஸ்லாமியப் பேரணி, முஸ்லிம் மணமக்களைப் பல்லாண்டு வாழ்த்தி, ஹஜ்ஜிலிருந்து திரும்பியவர்களுக்கு என்று வாழ்த்து அச்சிட்டு ஊர்ப்பக்கம் போஸ்டர்கள் ஒட்டியிருப்பார்கள் அதிலும் “ஹி“ புள்ளி ஆண்டு எண் என்று இருக்கும். பெரிய எழுத்திலான ஆங்கில ஆண்டு விபரங்களுடன் அதைவிடச் சிறிய அளவில் ஹிஜ்ரீ விபரங்களும் குறிப்பிட்டிருப்பார்கள்.

நம்மில் மிகப் பெரும்பாலானவர்கள் அதைப் படித்துவிட்டு, ஹிஜ்ரீ விபரங்களை மட்டும் காஃபி ஃபில்டரில் கவனமாய் வடிகட்டிவிட்டு நிகழவிருக்கும் விசேஷத்தின் ஆங்கில ஆண்டு, மாதம், நாள் ஆகியனவற்றை மனதில், டைரியில், காலண்டரில், சுவற்றில், செல்ஃபோனில் இப்படி எங்காவது குறித்து வைத்துக் கொள்வோம்.

நோன்பு, அதைத் தொடரும் பெருநாள், ஹஜ் இதெல்லாம் ஹிஜ்ரீ ஆண்டுடன் சம்பந்தப்பட்டவை என்பது மட்டும் ஏறக்குறைய நம் அனைவருக்கும் தெரியுமே தவிர மற்றபடி அதற்குப் பெரிய முக்கியத்துவம் எதுவும் நம் வாழ்க்கையில் கிடையாது.

ஆங்கில ஏகாதிபத்தியம் பரவி, உலக நாடுகள் அனைத்தும் மேற்கத்திய நாடுகளை ”நல்லதுக்கும் கெட்டதுக்கும்” ஆதர்ச நாயகனாய் ஏற்றுக் கொண்டபின் அவர்களது காலண்டரும் உலகிலுள்ள பெரும்பாலான சமூகத்திற்கு அடிப்படையான நாள்காட்டியாகி விட்டது. முஸ்லிம் சமூகங்களும் “ஊரோடு ஒத்துவாழ்” என்று அப்படியே ஏற்றுக் கொண்டன. “ஹேப்பி நியூ இயர்” என்றால் அது சனவரி 1!

என்றாலும், சம்பிரதாயமோ, அவசியமோ, முஸ்லிம்களே அக்கறை செலுத்தாவிட்டாலும் அவர்களுடைய வாழ்வில் ஹிஜ்ரீ ஓர் அங்கம். அதனால்தான் விட்டகுறை தொட்ட குறையாக போஸ்டர்கள், காலண்டர்கள், அழைப்பிதழ்கள் என்று ஹி.!

ஹிஜ்ரீ துவங்கி 1432 ஆண்டுகள் ஆகிவிட்டன. அது ஏன், எப்படி என்பதை அறிந்து கொள்ள ஹிஜ்ரா பரிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஹிஜ்ரா?

அனைவருக்கும் புலம்பெயர்தல் தெரிந்திருக்கும். அதுதான் அரபு மொழியில் ஹிஜ்ரா. பிறமொழிகளில் migration, புலம்பெயர்தல் என்று யதார்த்தமாய்க் கையாளப்படுவதைப் போலன்றி ஹிஜ்ரா என்றதுமே அந்த வார்த்தைக்கு இஸ்லாமிய வழக்கில் பெரும் முக்கியத்துவம், புனிதம் வந்து ஒட்டிக் கொள்கிறது. காரணம் இருக்கிறது.

கையை இறுகப் பற்றிக்கொண்டால் 1432 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று மக்காவை எட்டிப்பார்த்துவிட்டு வந்துவிடலாம்.

அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மதுக்கு அப்பொழுது 40 வயதிருக்கும். அனாச்சாரத்தில் மூழ்கிக் கிடந்தது அரேபியா. அவற்றையெல்லாம் பார்த்து வெறுத்து ஓதுங்கி, மனைவியும் மக்களுமாய்த் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார் அவர். திடீரன்று ஒருநாள் வானத்திலிருந்து வந்திறங்கினார் வானவர் தலைவர் ஒருவர் - ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்). "எல்லாரையும் எல்லாவற்றையும் படைத்தவன் யார்?" என்ற ஒற்றைக் கேள்விக்கான விடை தேடிக் குகையில் அமர்ந்திருந்த முஹம்மதுவைத் தட்டியெழுப்பி, கட்டிப்பிடித்து இறுக்கித் தழுவி, ”இன்றிலிருந்து தாங்கள் இறைத்தூதர்” என்ற செய்தியையும் குர்ஆன் வசனங்கள் ஐந்தையும் அறிவித்துவிட்டுச் சென்றுவிட்டார்.

முஹம்மது, நபித்துவம் வழங்கப்பெற்ற தூதரானார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஆரம்பித்தது மனித குலத்தில் ஒரு திருப்பம்.

சிலை வணக்கம், அது சார்ந்த சாஸ்திரம், சம்பிரதாயம் இது எதுவும் கிடையாது, ஒரே ஒருவன்தான் இருக்கிறான். அவன்தான் அனைத்தையும் படைத்தான், பரிபாலிக்கிறான், முடித்து வைப்பான், தீர்ப்பு வழங்குவான், மறுமை துவங்கும் என்றெல்லாம் பேச ஆரம்பித்ததும், பலர் சிரித்தார்கள், மிகச் சிலர் “அப்படியா? ஏக இறைவன் ஒருவன்தானா? நீங்கள்தான் அவனது நபியா? எனக்கு நியாயமாய்ப் படுகிறது, ஏற்றுக்கொண்டேன்,” என்றார்கள்.

சிரித்தவர்களுக்கு தூக்கிவாரிப் போட்டது. நாளாக நாளாகக் கோபம் பெருக்கெடுத்தது. “இதென்ன இந்த மனிதர் புதிதாய்க் குழப்பம் விளைவிக்கிறார்? இவரை ஏற்றுக் கொண்டவர்களைக் கொடுமைப் படுத்தினால் வழிக்கு வருவார்கள்,” என்று துவங்கியது கொடுமை. அது எழுத்தில் எழுதி மாளாத கொடுமை!

“ஒரே இறைவன், முஹம்மதே இறுதி நபி,” என்று சொன்ன காரணத்திற்காக ஒருவரை, அதுவும் ஒரு பெண்ணை, அவருடைய பிறப்புறுப்பிலேயே ஈட்டி செருகிக் கொல்லுமளவுப் பெருங்கொடுமை தலைவிரித்தாடியது மக்காவில்.

இஸ்லாத்தை ஏற்ற சின்னஞ்சிறுக் கூட்டம், மக்கா நகரில் வாழ்ந்து கொண்டிருந்த பென்னம்பெரிய கூட்டத்தினரிடம் மிதி, உதை பட்டது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார்கள். பொறுமையின் எல்லைக்கு விரட்டப்பட்ட அவர்களில் சிலர், நபியவர்கள் அனுமதியின் பேரில் சொத்து, சுகம், நிலம் ஆகியனவற்றை மக்காவில் விட்டுவிட்டு, எடுத்துச் செல்ல முயன்ற சுமையோடு அபீஸீனியா நாட்டிற்கு புலம்பெயர்ந்தார்கள். இஸ்லாமிய வரலாற்றில் அன்றுதான் ஆரம்பித்தது ஹிஜ்ரா. முதல் ஹிஜ்ரா.

நாமறிந்த புலம் பெயர்தலெல்லாம் இன்றும் சர்வ சாதரணமாய் நடப்பதுதான். தொழிலுக்காக, வேலைக்காக, சொகுசுக்காக, திருமணத்திற்காக இப்படியான ஏதோ ஒரு காரணத்திற்காக நாள்தோறும் ஊர்தோறும் புலம்பெயர்தல் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதிலெல்லாம் ஏதும் விசேஷமில்லை.

ஆனால் இஸ்லாத்தில் ஹிஜ்ரா என்பது மட்டும் சிறப்பு! தனிச் சிறப்பு!

இறைவன் ஒருவனே என்று ஏற்றுக்கொண்டு அவனைத் தொழ, வழிபட என்று ஆரம்பிக்கும்போது தனிமனித சுதந்தரம் என்பதெல்லாம் கெட்ட சொல்லாய் மாறி, அட்டூழியம் நிகழ்கிறதே, வழிபாட்டு உரிமையெல்லாம் தடுக்கப்படுகிறதே, அதற்கு இணங்கிவிடாமல், இறைவனுக்காகத் தனது அனைத்தையும் துறந்து அந்தத் தனிமனிதன், தனது உறவுகள், உடமைகள், சொத்துகள் என அனைத்தையும் துறந்து, தான் பிறந்த மண்ணிலிருந்து வெளியேறுவதுதான் ஹிஜ்ராவிற்கு தனிச் சிறப்பைப் பெற்றுத் தருகிறது. அவனுக்காக, அந்த ஒரே இறைவனுக்காக, சட்டென்று அனைத்தையும் உதறிவிட்டுக் கிளம்பிவிடுவதுதான், உலக மகாச் சிறப்பைப் பெற்றுத் தருகிறது.

எந்த அளவிற்கு?

குழந்தையாய், பிறந்த பச்சிளங் குழந்தையாய் புதிதாய் ஆகிவிடுகிறான் அம்மனிதன். அப்படியானால் அதுவரை அவன் செய்திருக்கக்கூடிய பாவம், தீங்கு? அதெல்லாம் துடைத்து எறியப்பட்டு, புதிசாய், புத்தம் புதிசாய் அவனுக்கு மறுபிறப்புத் தொடங்குகிறது. அதனால்தான் ஹிஜ்ரா புனிதம். ஏக இறைவன் நிர்ணயித்த புனிதம்.

முதலில் ஒரு குழு அபீஸீனியாவிற்கு ஹிஜ்ரா மேற்கொண்டது என்று பார்த்தோமா? அதற்கடுத்து முஸ்லிம்கள் மற்றொரு குழுவாய்க் கிளம்பி மதீனாவுக்குச் சென்றார்கள். அந்த முஸ்லிம்களுக்கெல்லாம் அது மிகப்பெரும் சிறப்பையும் தரத்தையும் அளித்தது. பட்டமாய் ஒட்டிக்கொண்டது. ஹிஜ்ரா அவர்களின் தரச் சான்றிதழாய் மின்னியது. ஆஸ்கர், நோபல், இத்தியாதி என்று எதுவும் அதற்கு நிகரில்லை.

மக்காவிலோ நாளொரு வேதனையும், பொழுதொரு சோதனையுமாகத்தான் முஸ்லிம்களுக்கு வாழ்க்கை கழிந்து கொண்டிருந்தது. 13 ஆண்டுகள் ஆகியும் அது முடிவிற்கு வரவில்லை. மாறாய், குரைஷிகளின் அட்டகாசம் பெருகிக் கொண்டு இருந்தது.

இந்நிலையில் மதீனாவில் உள்ள மக்கள் நபியவர்களுடன் அகபா உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு அங்கு இணக்கமான சூழ்நிலை உருவானதும் சிறுகச் சிறுக முஸ்லிம்கள் அந்நகருக்கு ஹிஜ்ரத் மேற்கொள்ள ஆரம்பித்தனர். நபியவர்கள் மட்டும் காத்திருந்தார்கள். ஆனால் நிலைமை நாளுக்குநாள் மோசமாகி, அவர்களைக் கொல்வதற்கே குரைஷிகள் தயாராகிவிட, நபியவர்களுக்கு இறைவனிடமிருந்து அனுமதி வந்தது. “புலம்பெயருங்கள்!”

தோழர்கள் வரலாற்றில் வாசகர்கள் படித்திருக்கலாம். இங்கு அதைச் சற்று விளக்கமாகப் பார்த்துவிடுவோம்.

oOo

அபூபக்ருவின் இல்லத்திற்குக் காலையிலோ மாலையிலோ நபியவர்கள் வருகை என்பது தவறாத வழக்கம். அந்தளவு தோழமை. மிகவும் அலாதியான தோழமை. இருவருக்கும் இடையே இருந்த அணுக்கம் ஓர் அழகிய உன்னதம். ஆனால் அன்று நண்பகல் நேரம். மக்காவில் மக்கள் வீட்டினுள் அடங்கிக் கிடந்தனர். உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் அந்நேரத்தில் அபூபக்ருவின் வீட்டிற்கு வந்தார்கள் நபியவர்கள். அந்நேரம் அங்கு அவரின் இரு மகள்கள் அஸ்மா, ஆயிஷா - ரலியல்லாஹு அன்ஹுமா - மட்டுமே இருந்தனர்.

"விஷயம் வெகுமுக்கியம் போலிருக்கிறது. இல்லையெனில் இந்நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் வரமாட்டார்களே" என்று ஆச்சரியத்துடன் அவரை வரவேற்றார் அபூபக்ரு.

அவரது கட்டிலில் அமைதியாக அமர்ந்து "உங்களுடன் உள்ள இவர்களை ஒதுங்கிக் கொள்ளச் சொல்லுங்கள்" என்றார்கள் நபியவர்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இவர்கள் என்னுடைய மகள்கள்தாம். என்ன விஷயம்?"

"நான் புலம்பெயர எனக்கு அனுமதி கிடைத்துவிட்டது"

"அல்லாஹ்வின் தூதரே, தோழமை?" நானும் உங்களுடன் வர அனுமதியுண்டா என்பதை அப்படிக் கேட்டார் அபூபக்ரு.

"ஆம்! தோழமை"

அழுதார் அபூபக்ரு; ஆனந்தத்தால் அழுதார்! மகிழ்ச்சியிலும் இப்படி அழமுடியுமா என்பதை ஆச்சரியத்துடன் பார்த்தார் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா.

"அல்லாஹ்வின் தூதரே! இதோ என்னுடைய இரு ஒட்டகங்கள். இத்தருணத்திற்காகவே நான் தயார்ப்படுத்தி வைத்திருந்தேன்"

"அவற்றிக்கான விலைக்கே நான் பெற்றுக் கொள்வேன்" என்றார்கள் முஹம்மது நபி.

இதென்ன பேச்சு? அப்படியெல்லாம் இல்லை, "இது நான் தங்களுக்கு அளிக்கும் நன்கொடை" என்றார் அபூபக்ரு.

"ஓ அபூபக்ரு! இந்தப் பயணம் அல்லாஹ்விற்காக மேற்கொள்ளப்படும் பயணம். அதற்கு உண்டாகும் செலவை நான் எனது பணத்திலிருந்த அளிக்கவே விரும்புகிறேன். ஏனெனில் எனது செலவிற்கு உண்டான வெகுமதியை நான் இறைவனிடம் ஈட்ட விரும்புகிறேன்"

இறைவனின் தூதர், இறைவனுக்காகத் தான் அடைந்த துன்பம், மேற்கொள்ளப் போகும் அசாத்தியச் சோதனைகள் என்பதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. இறைவனின் அளவற்ற வெகுமதி – அதை எவ்வகையிலெல்லாம் ஈட்ட முடியுமோ அவ்வகையிலெல்லாம் ஈட்டுவதற்கு முன்நின்றார் அந்த மாமனிதர் - ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்!

பயணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைக் கிடுகிடுவென செய்தார்கள் அஸ்மாவும் ஆயிஷாவும். உணவை எடுத்து வைத்து உண்பதற்கான விரிப்பு அடங்கிய பயண மூட்டை தயாரானது. அந்த மூட்டையின் பையை எதைக் கொண்டு கட்டுவது என்று யோசித்த அஸ்மா தமது இடுப்பு வார்த்துணியை இரண்டாகக் கிழித்து அதில் ஒன்றைக்கொண்டு கட்டினார். அன்றிலிருந்து அவருக்கு, "தாத்துந் நிதாக்கைன் - வாரிரண்டு வனிதை" என்று பட்டமே ஏற்பட்டுவிட்டது.

மக்காவில் தன்னைக் காணவில்லை என்றதும் குரைஷிகளுக்கு நிச்சயமாய் மதீனா நினைவிற்கு வரும்; மதீனாவுக்குச் செல்வோர் அனைவரும் பயணிக்கும் பாதையைத் தவிர்ப்பதே உசிதம்; அதற்கு மாற்றுவழி தெரியவேண்டும். அதற்கென அப்துல்லாஹ் இப்னு உரைகத் என்பவரை நியமனம் செய்து கொண்டார்கள் நபியவர்கள். அப்துல்லாஹ் ஒரு மிகத் தேர்ந்த வழிகாட்டி. முஸ்லிம் அல்லன் என்றபோதிலும் நம்பிக்கைக்கு உரியவன். அவனிடம் இரு ஒட்டகங்களையும் ஒப்படைத்து, "இதைப் பாதுகாப்பாக பராமரிக்கவும் குறிப்பிட்ட நாளன்று குறிப்பிட்ட இடத்திற்கு இவற்றை ஓட்டிக் கொண்டு வரவும்" என்றும் தகவல் அறிவிக்கப்பட்டது.

நபியவர்கள் புலம்பெயர்ந்து மதீனாவுக்குச் செல்ல உருவான திட்டம் அலீ, அபூபக்ரு மற்றும் அவர் குடும்பத்தினர் - ரலியல்லாஹு அன்ஹும் - தவிர வேறு யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.

இரவு கவிழ்ந்தது. முஹம்மது நபியை அவரது வீட்டில் புகுந்து கொலை புரிய குரைஷிகளின் கூட்டணிக் கூட்டம் பதுங்கிவர, அலீயைத் தமது கட்டிலில் உறங்க வைத்து, குரைஷிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுத் தமது வீட்டிலிருந்து வெளியேறினார்கள் நபியவர்கள். அபூபக்ருவின் வீட்டிற்கு வர, அவர் தயாராய்க் காத்திருந்தார். அவரது வீட்டின் பின்புறமிருந்த ஒரு சிறு வாயிலின் வழியே இருவரும் வெளியேறினார்கள். அங்கிருந்து உடனே மதீனா கிளம்பாமல் மக்காவிலிருந்து மதீனா நகருக்குச் செல்லும் பாதையின் நேரெதிர்த் திசையில் - யமனுக்குச் செல்லும் வழியில் - இருவரும் பயணித்து தவ்ருக் குகையை அடைந்து, பதுங்கிக் கொண்டார்கள்.

குகை என்றவுடன் நம் கற்பனையில் மலை, மலையில் ஒரு பொந்துதான் தோன்றும். தவ்ருக் குகை அப்படியில்லை. ஒரு குழிபோல் ஆழமாயிருக்கும். அங்குதான் மறைந்திருந்தார்கள் முஹம்மது நபியும் அபூபக்ரும்.

நபியவர்கள் தப்பித்துவிட்டார்கள் என்பதை அறிந்த குரைஷிகள் கூட்டம் மக்காவெங்கும் தேடிப்பார்த்து அவர்களைக் காணவில்லை என்றதும் வழித்தட வித்தகர்களையெல்லாம் திரட்டிக் கொண்டு முஹம்மது எந்தப் பாதையில் தப்பித்திருப்பார் என்று தேடத் துவங்கியது. தேடித்தேடி பின்பற்றி, சரியாகத் தவ்ருக் குகை அமைந்துள்ள மலையின் அடிவாரம்வரை வந்துவிட்டது அக்குழு.

அபூபக்ரு நிமிர்ந்து பார்த்தால் அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்கும் அவர்களுடைய கால்கள் தெரிந்தன. திகிலில் வருந்தி கண்ணீர் விட்டார் அபூபக்ரு.

"ஏன் அழுகை?" என்பதுபோல் அவரை இதமாய்ப் பார்த்தார்கள் நபியவர்கள். அபூபக்ரு கிசுகிசுப்பான குரலில் கூறினார்.

"அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மேல் ஆணையாகக் கூறுகிறேன். நான் எனக்காக அழவில்லை. தங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பது மட்டுமே என் அச்சம்"

திடமான ஆறுதல் வார்த்தைகள் வெளிப்பட்டன நபியவர்களிடமிருந்து "வருந்தாதீர்கள். அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்" அல்லாஹ் அபூபக்ரின் உள்ளத்திற்கு சாந்தியை அருளினான்.

மேலே நின்று கொண்டிருந்தவர்களின் கால்களைப் பார்த்தபடி மெல்லிய குரலில் கூறினார், "அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் யாராவது அவர்களது கால்களைக் குனிந்து பார்த்தாலே போதும், நம்மைக் கண்டு விடுவார்கள்"

"இருவருடன் துணைக்கு மூன்றாவதாக அல்லாஹ் இருக்க என்ன கவலை அபூபக்ரு?" எத்தகைய உறுதி அது? எத்தகைய ஆழ்மன நம்பிக்கை அது?

இதற்குள் மேலே நின்று கொண்டிருந்த ஒருவன் கூறினான், "நாம் இந்தக் குகைக்குள் இறங்கி அங்கு என்ன இருக்கிறது என்று பார்த்துவிடுவோம்."

அதைக் கேட்ட உமைய்யா இப்னு ஃகலஃப் ஏளனமாய்ச் சிரித்து, "இங்கே பார், குகையின் வாசலை ஒரு சிலந்தி வலை அலங்கரித்துக் கொண்டிருப்பதை. அந்த வலைக்கு முஹம்மதைவிட வயது அதிகம் இருக்கும்" படு இலேசான படைப்பினத்தைக் கொண்டு, ஆளரவமற்ற பாழடைந்த குகை என்ற எண்ணத்தை பராக்கிரம எதிரிகளின் மனதில் ஏற்படுத்தி, வெகு சுலபமாய் அற்புதம் நிகழ்த்தினான இறைவன். யார் அறிவார் அவன் வீரர்களை?

ஆனால் அபூஜஹ்லுக்கு மட்டும் குறுகுறுப்பு இருந்து கொண்டேயிருந்தது. "அல்-லாத் மற்றும் அல்-உஸ்ஸாவின் மீது சத்தியமாகச் சொல்கிறேன், முஹம்மது இங்குதான் எங்கேயோ இருக்கிறார். நம்மைப் பார்த்துக் கொண்டும் நாம் பேசுவதைக் கேட்டுக் கொண்டும் இருக்கிறார். அவருடைய மந்திர வித்தைதான் நாம் அவரைக் காணமுடியாமல் நம் கண்களைக் கட்டிப் போட்டுவிட்டது"

அபூபக்ருக்கு அப்துல்லாஹ் என்றொரு மகன் இருந்தார். சிறப்பான புத்திக் கூர்மையுள்ளவர். இந்த நிகழ்வின்போது அவர் பதின்ம வயதுச் சிறுவர். பிரமாதமான உளவுவேலை புரிந்தார் அப்துல்லாஹ். பகலெல்லாம் குரைஷியர்களுடனேயே வலம் வந்து அடுத்து அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள், அவர்களுடைய திட்டம் என்ன, எவ்வளவு குடைச்சலில் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் அறிந்து கொள்வது அவர் வேலை. இரவு படர்ந்ததும் குரைஷியர் கண்களில் படாமல் தவ்ருக் குகைக்கு வந்துவிடுவார். மக்காவின் நிகழ்வுகளையெல்லாம் அவர்களுக்கு அறிவித்துவிட்டு இரவு முழுவதும் அவர்களுடனேயே குகையில் தங்கிக் கொள்வார். பிறகு பொழுது புலரும் முன்னரே கிளம்பி தனது வீட்டிற்கு வந்துவிடுவார். இவருக்கு இந்தப் பணி என்றால், ஆமிர் இப்னு ஃபுஹைரா என்பவருக்கு வேறொரு பணி இருந்தது.

அபூபக்ரிடம் பணியாளாக இருந்தார் ஆமிர் இப்னு ஃபுஹைரா. அவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்த தோழர். இரவானதும் ஆட்டு மந்தையொன்றை மேய்ச்சலுக்கு ஓட்டுவதுபோல் ஓட்டிக் கொண்டு தவ்ருக் குகைக்கு வந்துவிடுவார். ஆட்டுப்பால் நபியவர்களுக்கும் அபூபக்ருக்கும் உணவாகிவிடும். பிறகு விடிந்ததும் அப்துல்லாஹ் கிளம்பிச் சென்றவுடன் தமது மந்தையை ஓட்டிக்கொண்டு ஆமிர் மக்கா வந்துவிடுவார். அதிலொரு தந்திரமும் இருந்தது. வழித்தட வித்தகர்கள் இருந்தார்கள் என்று பார்த்தோமல்லவா? குரைஷிகளுக்கு ஏதேனும் சிறு சந்தேகம் ஏற்பட்டு அப்துல்லாஹ்வின் வழித்தடத்தைப் பின்பற்றிவிட்டால்? எனவே அப்துல்லாஹ் குகைக்கு வந்து திரும்பிய வழித்தடத்தையெல்லாம் வீடுதிரும்பும் ஆடுகள் கலைத்துக் கொண்டே வந்துவிடும். இத்தகைய எளிய உத்திகள் ஆத்திரத்தில் புத்திமட்டுப் போன எதிரிகளை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.

இவ்விதமாய் மூன்று இரவுகள் கழிந்தன. அதற்கு அடுத்தநாள் காலை முன்னரே பேசி வைத்துக் கொண்டபடி வழிகாட்டி அப்துல்லாஹ் இப்னு உரைகத் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு தவ்ருக் குகைக்கு வந்துவிட்டான். அவர்களுடன் ஆமிர் இப்னு ஃபுஹைராவும் சேர்ந்து கொள்ள, இஸ்லாமிய வரலாற்றுப் பயணம் துவங்கியது - ஹிஜ்ரீ பிறந்தது.

ஆனால், ஹிஜ்ரீ ஆண்டு புழங்கவில்லை.

oOo

ஸஃபர் மாதம் 27இல் துவங்கியது பயணம். ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப்பின் ரபீஉல் அவ்வல் 23ஆம் நாள் யத்ரிப் வந்தடைய அந்நகரம் மதீனத்துந் நபவீ - நபி புகுந்த பட்டணம் – என்ற புதுப்பெயருடன் புதுவரலாற்றிற்குத் தயாரானது. நவீன போக்குவரத்து இல்லாத காலகட்டமில்லையா? தவிரவும் பின்தொடரும் மக்கத்துக் குரைஷிகளிடமிருந்து தப்பிக்க சுற்றுவழியில் பயணித்து அவர்கள் ஒட்டகத்தில் மதீனா வந்தடைய ஒருமாத காலம் ஆகிப்போனது.

ஹஜ்ஜுக்குச் செல்ல நேரிடும்போது, மக்கா-மதீனா நாலரை மணி நேர பஸ் பிரயாணத்தின்போது எட்டரை மணி நேரம் அதிகப்படியாகக் காத்திருக்க நேர்ந்தால், நபியவர்களின் அந்தப் பயணத்தை அசைபோட்டுக் கண்ணை மூடிக்கொண்டால் தூங்கிவிடலாம். கனவில் ஓரிரு சொட்டு நீரும் சுரக்கலாம்.

அதன்பிறகு, மக்காவிலிருந்து ஏனைய முஸ்லிம்கள் சிறுகச் சிறுக மதீனா வந்து சேர்ந்தார்கள். பிற்பாடு, அபீஸீனியாவிலிருந்த மற்ற முஸ்லிம்களும் மதீனாவிற்குக் கிளம்பி வந்துவிட்டார்கள்.

அப்பொழுதும் ஹிஜ்ரீ ஆண்டு புழங்கவில்லை.

நபியவர்களின் மறைவிற்குப் பிறகு அபூபக்கரு ரலியல்லாஹு அன்ஹு ஏறத்தாழ இரண்டரை ஆண்டு ஆட்சி செலுத்திவிட்டு மறைய, அப்பொழுதும் ஹிஜ்ரீ ஆண்டு புழங்கவில்லை.

பிறகு கலீஃபாவாய்த் தலைமை ஏற்றுக்கொண்டார் உமர் ரலியல்லாஹு அன்ஹு. இந்த முதல் இரண்டு கலீஃபாக்களின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாமும் அதன் ஆளுமையும் அரேபியா நாட்டு எல்லையைக் கடந்து பரவ ஆரம்பித்தன. இஸ்லாமிய வரலாறும் வளர ஆரம்பித்தது! வரலாறு வளர்ந்தால் குறிக்கப்படவேண்டுமில்லையா? அப்பொழுது அவர்களிடம் தேதி உண்டு, மாதம் உண்டு. ஆண்டு?

அப்பொழுதும் ஹிஜ்ரீ ஆண்டு புழங்கவில்லை.

உமர் பின் கத்தாப் ஆட்சி செலுத்த ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டிருக்கும். ஒருநாள் அவருக்குக் கடிதம் ஒன்று வந்தது. எழுதியவர் எத்துணைப் பெரிய ஒரு விஷயத்திற்குத் தனது கடிதம் வித்திடப்போகிறது என்பதை அப்பொழுது அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது, அது வெறும் குசலம் விசாரிக்கும் கடிதமா, நிர்வாகம் சம்பந்தப்பட்டதா என்பதெல்லாம் இங்கு முக்கியமில்லை. ஷஃ'பான் மாதம் இத்தனாம் தேதி என்று குறிப்பிட்டு கடிதம் எழுதப்பட்டிருந்தது.

கடிதத்தைப் படித்த உமர், “ஷஃ'பான் மாதம் என்றால்? கடந்த ஷஃ'பானா? அடுத்த ஆண்டின் ஷஃ'பானா? இந்த ஆண்டின் ஷஃ'பானா?,” என்றார்.

எந்த ஆண்டு என்று தெரிய வேண்டாமா? எப்படி நிர்ணயிப்பது? மக்காவிலிருந்து மதீனா புலம்பெயர்ந்த முஹாஜிரீன் தோழர்களையும், மதீனாவின் அன்ஸாரீத் தோழர்களையும் ஆலோசனைக்கு அழைத்தார் உமர்.

“நம் மக்களுக்காக ஆண்டு நிர்ணயம் செய்ய வேண்டும். எங்கிருந்து நம் வரலாற்றை ஆரம்பிப்பது? உதவுங்கள்.”

ஒருவர் ”ரோமர்களின் ஆண்டை உபயோகித்துக் கொள்ளலாமே” என்று தெரிவித்தார்.

”அட, அவர்கள் துல்கர்ணைன் காலத்திலிருந்து அல்லவா கணக்கு வைத்துள்ளார்கள். நமக்கு அது சரிபட்டு வராது,” என்று அந்த ஆலோசனை நிராகரிக்கப்பட்டது.

மற்றொருவர் பாரசீகர்களின் ஆண்டை உபயோகிக்கலாமே என்றதும், ”அது சரி, அவர்களுக்கு ஒவ்வொரு முறை ஒரு மன்னன் தேர்ந்தெடுக்கப்படும் போது, கர்ம சிரத்தையாய் முந்தைய மன்னனின் ஆண்டுக் கணக்கை கழித்துக் கட்டுவதுதான் வேலை. அதெல்லாம் சரிப்படாது,” என்று சொல்லிவிட்டார்கள். நமது அரசியல் கட்சிகளை மெச்சிக்கொள்ளலாம் போலிருக்கிறது. முந்தைய அரசின் திட்டங்களைத்தான் சொதப்புகிறார்கள். நல்லவேளையாக காலண்டரில் கைவைப்பதில்லை!

”எதற்கு அங்கேயும் இங்கேயும் தேடிக்கொண்டு? நமக்கு வாழ்வும், வழிகாட்டலும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்த வந்தது. இதையும் அவர்களிடமிருந்து பெற வேண்டியதுதான்,” என்று ஆலோசிக்க ஆரம்பித்தார்கள்.

”ஆம், அதுதான் சரி,” என்ற கருத்து வலுப்பெற்றதும் நபியவர்களின் வரலாற்றிலிருந்து நான்கு முக்கிய நிகழ்வுகளைத் தோழர்கள் குறிப்பிட்டனர்.

ஒன்று, நபியவர்கள் பிறந்த ஆண்டு, அடுத்தது அவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்தைத் துவங்கிய ஆண்டு, அடுத்தது அவர்களது ஹிஜ்ரா, கடைசியாக அவர்கள் இறந்த ஆண்டு. இதில் எந்த நிகழ்வை அடிப்படையாக அமைத்துக் கொள்வது என்று அடுத்தபடியாகத் தொடர்ந்தது விவாதம்.

நபியவர்கள் எந்த ஆண்டு பிறந்தார்கள் என்பதில் தோழர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அதைப் போலவே அவர்கள் எந்த ஆண்டு தனது பிரச்சாரத்தைத் துவக்கினார்கள் என்பதிலும் அவர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தது.

அவர்கள் இறந்த ஆண்டு என்றாலோ அதை அவர்களால் நினைத்தே பார்க்க முடியவில்லை. அது அவர்களுக்கு ஆற்றமாட்டா துயர். அவர்களின் இழப்பு அவர்களுக்கு சோகத்தை மீட்டெடுக்கும் ஒரு நிகழ்வு. அன்றைய நாள் அவர்களுக்கு உலகமே இருண்டு போனதைப் போலான ஒன்று. எனவே அந்த எண்ணம் கைவிடப்பட்டது.

“மக்காவிலிருந்து மதீனாவிற்கு நபியவர்கள் புலம் பெயர்ந்ததே நமக்கெல்லாம் மிக முக்கிய நிகழ்வு. நமது வரலாறு அங்கிருந்துதான் பெரிய திருப்புமுனையை அடைந்தது. அங்கிருந்து ஆரம்பிப்போம்,” என்று இறுதியில் ஒரு முடிவிற்கு வந்தார்கள்.

அலீ ரலியல்லாஹு அன்ஹுவிடம் கலந்தாலோசித்தார் உமர். “ஷிர்க்கில் மூழ்கியிருந்த நகரைவிட்டு நபியவர்கள் வெளியேறிய நாளிலிருந்தே முஸ்லிம்களின் ஆண்டிற்கான ஆரம்பம் அமையவேண்டும், அதுவே சரியானதாக இருக்கும்” என்பது அலீயின் ஆலோசனை.

அப்படியே முடிவானது!

ஆனால், நபியவர்களின் ஹிஜ்ரா பயணம் துவங்கியதோ ஸஃபர் மாதம். அது இஸ்லாமிய ஆண்டின் இரண்டாம் மாதம். அவர்கள் மதீனாவில் நுழைந்ததோ ரபீஉல் அவ்வல். அது மூன்றாம் மாதம். பிறகு முஹர்ரம் எப்படி முதல் மாதமாக தேர்ந்தெடுக்கப்பட்டது?

இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அதற்கான காரணத்தை விவரித்துள்ளார்கள். ”ஸஃபர் மாதம் பிரயாணம் துவங்கியிருந்தாலும், புலம்பெயர்வதற்கான உறுதியான தீர்மானம் முஹர்ரம் மாதமே உருவாகியது. ஹிஜ்ரா மேற்கொள்ள முன்னோடியாய் அமைந்த இரண்டாம் அகபா உடன்படிக்கை துல்ஹஜ் மாதம் நிகழ்வுற்றது. அதற்கடுத்த மாதமான முஹர்ரமில்தான் ஹிஜ்ரா எண்ணம் உறுதியானது. எனவே அதுவே இஸ்லாமிய ஆண்டிற்குப் மிகப் பொருத்தமான முதல் மாதமாக இருக்கும் என்று நிர்ணயிக்கப்பட்டது.”

ஹிஜ்ரீ ஆண்டு புழக்கத்திற்கு வந்தது.

உமர் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக ஆட்சி செலுத்திய காலகட்டம் இஸ்லாமிய வரலாற்றின் பொற்காலம். அதில் ஹிஜ்ரீ ஆண்டின் நிர்ணயம் மிக முக்கியத் தீர்மானம். எல்லை தாண்டி விரிவடைந்து கொண்டிருந்த இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்திலுள்ள முஸ்லிம்களை ஒருங்கிணைக்க அது பேருதவி புரிந்தது.

இன்று ஹிஜ்ரீ 1432ஆம் ஆண்டு என்றால் அது வெறும் எண் அல்ல. அதன் துவக்கத்தில் இஸ்லாமிய வரலாற்றின் வேர் படர்ந்திருக்கிறது; தியாகங்களின் வரலாறு ஒளிந்திருக்கிறது!

-ஆக்கம் : நூருத்தீ