அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, December 7, 2010

குஜராத் கலவரம் - சிறப்பு புலனாய்வு குழு மீது முன்னாள் காவல்துறை தலைவர் குற்றசாட்டு!

குஜராத் அரசின் முன்னாள் காவல்துறை தலைவர் ஆர்.பி.ஸ்ரீகுமார் ''குஜராத் கலவரத்தில் மோடி பங்கு குறித்த ஆதாரங்களை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு தான் வழங்கியதாகவும் சிறப்பு புலனாய்வுக் குழு அந்த ஆதாரங்களை பரிசீலிக்காமல் புறக்கணித்துள்ளதாகவும் '' தெரிவித்துள்ளார்.

குஜராத் கலவரத்தில் பின்னணியில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியும் அவருக்கு நெருக்கமானவர்களும் செயல்பட்டுள்ளனர் என்ற குற்றசாட்டை அடுத்து இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க சிறப்பு புலனாய்வு குழு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப் பட்டது.இந்த குழு மோடி உள்ளிட்ட பலரையும் விசாரணை செய்தது. அதன் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழு அறிக்கையை சமர்ப்பித்து விட்டது என்றும் அந்த அறிக்கையில் மோடி குற்றமற்றவர் என்று கூறப்பட்டு இருப்பதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.

இது குறித்து பிரஸ் கிளப் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் காவல்துறை தலைவர் ஆர்.பி.ஸ்ரீகுமார் ''தான் அளித்த ஆதாரங்கள் முன்னாள் சி.பி.ஐ இயக்குனர் ஆர்.கே. ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவால் பரிசீலிக்கப் பட வில்லை என்றும் இந்த விவகாரம் குறித்து தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் '' தெரிவித்துள்ளார்.

தான் சிறப்பு புலனாய்வு குழு முன்பு ஆறு பிரமாணப் பத்திரங்களை அளித்ததாகவும், மோடி குற்றமற்றவர் என அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாக வரும் செய்திகள் நம்பத் தகுந்த செய்தியே என்றும் தெரிவித்தார். மேலும் சிறப்பு புலனாய்வு குழு, குஜராத் அரசின் பி பிரிவு போலீசார் போல செயல்பட்டதாகவும் ஸ்ரீகுமார் குற்றசாட்டியுள்ளார்

No comments: