அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
Showing posts with label அறிவியல் கண்காட்சி. Show all posts
Showing posts with label அறிவியல் கண்காட்சி. Show all posts

Friday, January 16, 2009

ஈரோடு அல்-அமீன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ஈரோடு அல்-அமீன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ஈரோடு, ஜன.13: ஈரோடு காவேரி சாலையில் உள்ள அல்-அமீன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைவர் ஏகேஎஸ்.பஜல் கண்காட்சியைத் திறந்து வைத்தார். செயலர் எஸ்.எம்.சித்திக் தலைமை வகித்தார்.

பொருளாளர் கேஎஸ்எம்.முகமதுஜலீல், துணைச் செயலர்கள் எம்.எச்.அப்துல்சதார், ஏ.எஸ்.அமீது முன்னிலை வகித்தனர். முதல்வர் ஐ.ஆல்டிரின் ராஜேஷ்குமார் வரவேற்றார். உறுப்பினர் எம்.ஐ.முகமதுபாரூக் நன்றி கூறினார்.

இதில் 400-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவியர் அறிவியல், சமூகவியல், உடற்கல்வியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், சுற்றுச்சூழல், அராபிக், கணிதம், ஹிந்தி, வணிகவியல், உயிரியல் துறைகள் சார்பில் மாதிரிகள் மற்றும் செயல்விளக்க வடிவங்களை வைத்திருந்தனர்.