அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, April 18, 2009

உள்ளத்தில் ஒளி வேண்டுமா?

உள்ளம் அது ஒரு பெரு வெள்ளம்!
ஒன்றிரண்டல்ல ஓராயிரம் எண்ணங்களை
ஓடவிடும் கணினி -உண்மையாக இருந்தாலும்
உடன்படாத பொய்யாக இருந்தாலும் அதை
உணரச் செய்யும் உன்னத ஊடகம்,!

ஒற்றுமையாக வாழவும் ஓராயிரம் நன்மைகள் செய்ய
உதய கீதம் பாடவும் உதவும் உந்துதல் உணர்ச்சி!
நல்லதைச் செய்ய நாடவைக்கும் உள்ளத்தில்
நனிசிறந்த எண்ணங்களை உருவாக்கும் ஊற்றுக்கண்!

பாசத்தைப் பொழியவும் பகைமையை மறக்கவும்
பசித்தவர்க்கு உதவவும் பரந்த நோக்குடன் அரவணைக்கும்
பாமரர்களின் அன்னை! பள்ளம் எது மேடு எதுவென்று
பகுத்தறிந்து வாழ்க்கைப் பாதையை நேர்வழிக்கோட்டில்
கொண்டு செல்லும் குறிக்கோள்களின் இலக்கு!

பொறாமைத்தீ எரியும்போது புகை வெளி வராமல்
தடுத்து, புத்தியுள்ளவனாக வளர வைக்கும் புனல்!
குறுக்கு வழி செறுக்கு வழியென்றும் நேர்வழிதான்
நித்திரையை கொடுக்கும் நிலையான வழியென்றும்
நினைவுபடுத்தும் நாட்காட்டி! கொள்ளையடிப்பதை
தடுத்து கொள்கைப்பிடிப்பை உருவாக்கும் கருவூலம்!

கண்ட காட்சியே உண்மையென்று உரைக்காமல்
கடுகளவும் தவறு வராமல் தடுக்கும் நவீன கருவி!
கண்கள் போன போக்கில் கருத்தைப் புகவிடாமல்
தடுத்தும் காதில் கேட்பதில் நல்லவைகளை மட்டும்
எடுத்து பிரித்தளிக்கும் அன்னப்பறவை !

கஷ்டம் வரும்போதும் கலகலப்பான சூழ்நிலை
வரும்போதும் கதகதப்பாகவே இருக்கும் வெப்பமானி!
காத தூரம் சென்றாலும் கடுகளவும் பழையதை
மறக்காமல் நிரப்பி வைக்கும் நினைவாற்றல்!

காலத்தை உணர்த்தி கடமையைச் செய்ய வைக்கும்
கருத்துப் பெட்டகம்! கயவர்களின் உறவை
கருவறுக்கச் செய்து கல்லறைக்கு அனுப்பும் தூதுவன்!
உயர்ந்த வெற்றியை உன்னத நோக்கத்துடன்
அடைய வைக்கும் ஒன்றுபட்ட உலகம்!

ஓராயிரம் வாழ்க்கைக் கனவுகளை உள்ளடக்கி
தேவைப்படும் ஒவ்வொரு நேரத்திலும் ஒளிரும்
திரைச்சீலை! இறையச்சத்தை உள்ளடக்கி
இயன்றவரை இறைப்புகழ் பாடும் இன்பக்கருவூலம்!

வாள் கொண்டு போரிட்டும் கிட்டாத வெற்றியை
வாய்மொழியால் கிட்ட வைக்கும் பேரரசன்!
நல்லதிலும் கெட்டதிலும் நல்லதை மட்டும்
நாடச்செய்து நற்பெயர் ஈட்டித்தரும் தந்தை!

நாம் ஏன் பிறந்தோம் என்பதை சிந்தித்து
படைப்பின் இரகசியத்தை பயத்துடன் புரிந்து கொண்டு
நல்லதோர் வாழ்க்கை வாழ நலம்பயக்கும்
நடமாடும் பல்கலைக்கழகம்!

இப்படி
நல்லதையே செய்து இறைவனின் அருள்பெற
நாடும் உள்ளம், ஒருசில நேரங்களில்
நரக வாழ்விற்குச் செல்ல பாலம் அமைக்கும்
நாட முடியாத தீயாக எரிகிறதே! ஏன்?

ஒருவேளை இந்த உள்ளம்
ஓர் இறைக்கொள்கையை ஏற்று உன்னத
வேதத்தின் உள்ளார்ந்த போதனையை துறந்து

உத்தம நபியவர்கள் சொன்னதில் ஒன்றைக்கூட
புரிந்து கொள்ளாமல் உலக வாழ்க்கை இன்பத்தை
மட்டும் உயர்ந்ததொரு வாழ்க்கையாகக் கருதி
உறுதியான மரணத்திற்குப்பின் வரும் உயரிய
வாழ்க்கை சுவர்க்கக் கனியை சுவைக்க வைக்கும்
என்ற அல்லாஹ்வின் அருட்கொடையை உணராமல்

இஸ்லாத்தின் ஐங்கடமைகள் எங்குள்ளது
என்று கூடத் தேடாமல் கண்ணிருந்தும் குருடர்களாய்
காதிருந்தும் செவிடர்களாய் கருத்திருந்தும்
மூடர்களாய் கால்கள் நடக்கும்
பாதையே சரியான பாதையென்று கருவறைமுதல்
கல்லறை வரை நிராகரிப்பாளர்களாய் வாழ்ந்துவிட்டு
கண்மூடும் மாந்தர்களே விழித்துக்கொள்ளுங்கள்!

இப்போதாவது.....

எஞ்சிய வாழ்நாளிலாவது வெள்ளமென ஓடும்
உள்ளத்தின் ஒரு சிறு பகுதியாவது இறைவன் பால்
நாடச் செய்யுங்கள்_ இஸ்லாத்தில் இணைந்திருக்கும்
கருத்துக்கள் இணையற்ற கோடிகள் என்பதை உணருங்கள்!

இயற்கையோடு இணைந்து இறைவன்பால் பிணைந்து
இனிய வாழ்க்கை வாழ இன்றாவது
ஏற்றுக்கொள்ளுங்கள் ஓர் உறுதிமொழியை!

உள்ளத்தில் ஒளி வேண்டுமா? ஓடுங்கள் இறைவனிடம்!
முயன்றால் முடியாதது ஒன்று உலகத்தில் உள்ளதா?

இல்லையே! எதையும் சாதிக்கும் எண்ணத்தில்
நிய்யத் ஒன்றை நிதானமாக ஏற்படுத்திக்
கொள்ளுங்கள! நின்று நிதானித்து யோசியுங்கள்!
நிறைவேற்றும் வல்லமையை நீதிமிகு இறைவன்
வழங்க நம்மை நெருங்கி வருகின்றான்!

நெஞ்சை நிமிர்த்துங்கள்! நேர்வழி வாழ நிறைவுடைய
வாழ்வளிக்கும் இறைக் கட்டளைகளை நிறைவேற்ற
நில்லாமல் ஓடுங்கள்! அப்படி நிறைவேற்றிவிட்டால்
உங்களின் இந்தப் புனித ஓட்டம் ஒருநாள்
நின்றபின் புரிந்துகொள்வீர்கள் சொர்க்கத்தில்!!


- எம்.அப்துல் ரஹீம்,எம்.ஏ.,பி.காம்.,பி.ஜி.எல்.,ப்பி.ஜி.டி.பி.ஏ.

கோவை

வாழ்வியல் நெறிகள

உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?

தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும், அது மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

யார் ஒரு நாளில் நூறு தடவை سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி' என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

உங்களுக்கும் நரகத்துக்கும் மத்தியில் நாற்பது ஆண்டுகள் துலை தூரம் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நோன்பு நோற்கின்றாரோ, அல்லாஹ் அவரை நாற்பது ஆண்டுகள் தொலை தூரம் நரகத்திலிருந்து தூரமாக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அல்லாஹ் உங்கள் மீது, அருள்புரிய வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?

யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்); என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

யார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்தை உயர்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அல்லாஹ்விற்கு சமீபத்தில் இருக்க விரும்புகின்றீர்களா?

ஒரு அடியான் தன் இரட்சகனிடம் மிக சமீபமாக உள்ள நேரம், அவன் சுஜுது செய்யும் நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில்) அதிகம் பிரார்த்தியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஹஜ் செய்த நன்மையைபெற விரும்புகின்றீர்களா?

ரமளான் மாத்தில் உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு சமமாகும் அல்லது என்னுடன் ஹஜ் செய்ததற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

சுவர்க்கத்தில் வீடு கிடைக்க வேண்டும் என விரும்புகின்றீர்களா?

அல்லாஹ்விற்காக யார் ஒரு பள்ளியை கட்டுகின்றாரோ, அல்லாஹ் அவருக்காக அதுபோன்ற (வீட்டை) சுவர்க்கத்தில் கட்டுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அல்லாஹ்வின் திருப்தியை அடைய விரும்புகின்றீர்களா?

ஒரு கவள உணவை உண்டுவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும், ஒரு வாய் தண்ணீர் அருந்திவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும் நிச்சயமாக அல்லஹ் பொருந்திக் கொள்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.. (முஸ்லிம்)

உங்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் பிரார்த்தனை தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

ஒரு வருடம் முழுமையாக நோன்பு நோற்ற நன்மை கிடைக்க வேன்டுமென விரும்புகின்றீர்களா?

ஓவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்பது, வருடமெல்லாம் நோன்பு நோற்பதற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

மலையளவு நன்மை கிடைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

ஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தப்படும் வரை அந்த ஜனாஸாவில் யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு ஒரு கிராத்து நன்மையும், அந்த ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரை யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரு கிராத்து நன்மையும் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரு கிராத்து என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. இரு பெரும் மலை அளவு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

சுவர்க்கத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருக்க விரும்புகின்றீர்களா?

நானும் அனாதையை பொறுப்பெடுப்பவரும் இவ்வாறு சுவர்க்கத்தில் இருப்போம் என, நபி(ஸல்) அவர்கள் தனது நடு விரலையும் ஆள்க்காட்டி விரலையும் சுட்டிக்காட்டினார்கள். (புகாரி)

அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் போராளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது விடாமல் தொடர்ந்து நோன்பு நோற்கும் நோன்பாளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது இரவெல்லாம் நின்று வணங்கும் வணக்கதாரியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா?

விதவைக்கும் மிஸ்கீனுக்கும் உதவி செய்பவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவரைப் போன்றவராவார், இப்படியும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எண்ணுகின்றேன், அதாவது இரவெல்லாம் நின்று வணங்குபவரைப் போன்றும் விடாமல் நோன்பு நோற்பவரைப் போன்றும் என்று.(அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகம்) (புகாரி, முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்களே உங்களுக்கு சுவர்க்கத்தை பெற்றுத்தர விரும்புகின்றீர்களா?

யார் தன்னுடைய இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதையும் (ஹராத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக) எனக்கு உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவர்க்கத்தை வாங்கிக் கொடுப்பதற்கு நான் உத்தரவாதம் அளிப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

மரணத்துக்குப் பின்னும், உங்களின் நன்மைத்தட்டில், நன்மை எழுதப்பட வேண்டுமா?

ஒரு மனிதன் மரணித்தால் மூன்றைத்தவிர மற்ற எல்லா அமல்களும் துண்டித்து விடும், நிரந்தர தர்மம், பிரயோஜனம் உள்ள அறிவு, தனக்காக பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான பிள்ளை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷம் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என விரும்புகின்றீர்களா?

لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله

லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்று கூறுவது சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

முழு இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?

யார் இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு பாதி இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்கும், யார் சுப்ஹுத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு முழு இரவும் நின்று வணங்கிய நன்மை கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஒரு நிமிடத்தில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீகளா?

சூரத்துல் இக்லாஸை ஒரு தடவை ஓதுவது குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

உங்களின் நன்மைத் தராசு, அதிகம் இடையுள்ளதாக ஆக வேண்டும் என விரும்புகின்றிர்களா?

இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது, தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை)

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

today Dubai ....

பாய்ஸ் படத்தில் பசங்களை டாய்லெட்டில் வெச்சு நொங்குவானுங்க, அப்பொழுது அங்கு வரும் ஹீரோயின் & பிரண்ட்ஸ்பார்த்ததும் அடிவாங்கிக்கிட்டு இருந்த சித்தார்த் வலிக்கலியே..! வலிக்கலியே...! என்று கத்துவார், அதுபோல் தான் இப்பொழுதுஇங்கு துபாய் வாழ்கையும் போய்க்கிட்டு இருக்கு. அடிமேல் அடியாக விழுந்துக்கொண்டு இருக்கிறது இங்கு பணி புரியும் அனைவருக்கும்.ஆனால் தெரிந்தவர்களிடமோ அல்லது உறவினர்களிடம் பேசும் பொழுதோ அதே வலிக்கவில்லைகதைதான்.

ஷாப்பிங் ஃபெஸ்டிவல் என்பது துபாயில் ஜனவரி மாதம் 15ல் ஆரம்பித்து பிப்ரவரி 15வரை நடக்கும் ,வெளிநாட்டில் இருந்து பலர் இதற்காக வருவார்கள் அந்த சமயங்களில் ஷாப்பிங் மால்களில் கூட்டம் நிரம்பி வழியும் அதோடு துபாய் ஷாப்பிங் பெஸ்டிவலின் பொழுது துபாய் முழுவது அலங்கார வளைவுகள், வாணவேடிக்கைகள், வெளிநாட்டு கலாச்சார கலைநிகழ்சிகள், என்று அமளிதுமளி படும் ஆனால் இந்த முறை நடந்து முடிந்தது பலருக்கும் தெரியாது, பாலஸ்தீன் பிரச்சினைக்காக ஷாப்பிங் பெஸ்டிவலின் பொழுது கேளிக்கைகள் கிடையாது வாணவேடிக்கை கிடையாது என்று சொல்லப்பட்டாலும் அது மட்டுமே நிஜம் அன்று பொருளாதாரப் பின்னடைவு காரணமாக ஏற்ப்பட்ட தேக்கம்தான் காரணம்.

என்னது துபாயிலேயே பணப் புழக்கம் இல்லையா என்று அதிர்ச்சி அடைகிறீர்களா? ஆம் அதுதான் உண்மை நிலை, பல திட்டங்கள் பாதியோடு நிற்கின்றன பணம் இல்லாமல்,துபாயின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களான, டமாக்,எம்மார், அராப்டெக்,போன்றவை அடியோடு சரிந்து கிடக்கின்றன.கொத்து கொத்தாக ஆட்களை வீட்டுக்கு அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள் அதுக்கு முக்கிய காரணம், வீடுகளை வாங்க ஆள் இல்லை கட்டிக்கொண்டு இருக்கும் வீடுகளை முடிக்க பணம் கொடுக்க பேங்க் தயாராக இல்லை அல்லது பணம் இல்லை.வெளிநாட்டு முதலீட்டார்களை மட்டுமே நம்பி ஆரம்பிக்கப்பட்ட துபாய் பால்ம், தேரா பால்ம் என்ற கடல் உள்ளே கட்டப்பட்ட வீடுகள் பாதியோடு நிற்கின்றன.சொகுசு கட்டிடங்கள் என்றால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத படி சொகுசு கட்டிடங்கள் அனைத்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைநம்பி ஆரம்பிக்கப்படவை, அவை அனைத்தும் பாதியோடு நிற்க்கின்றன, கட்டிடங்கள் மட்டும் அல்ல சம்பளத்தை நம்பி வாங்கிய லோன்களும் பாதியோடு நிற்கின்றன.

இந்த பிரச்சினை ஆறுமாதங்களுக்கு முன்பே ஆரம்பித்தது கட்டிமுடிக்கப்பட்ட பல கட்டிடங்களில் குடியேற ஆள் இல்லாததால் வில்லா என்று அழைக்கப்படும் பெரும் பங்களாவில் ஷேரிங்கில் தங்கக் கூடாது என்று பிறப்பிக்கபட்ட உத்தரவு பல குடும்பங்கள் ஊருக்கு அனுப்பிவைக்க காரணமாக இருந்தது அதோடு பல குழந்தைகள் படிப்பும் பாதியோடு நின்றது, அப்படி இருந்தும் யாரும் அந்த கட்டிடங்களில் குடியேறவில்லை,வந்து கொண்டு இருந்த வில்லா வருமாணமும் அரபிக்களுக்கு குறைந்தது, பொறுத்து பொறுத்து பார்த்த நகராட்சி இப்பொழுது சொல்கிறது வில்லாவில் ஷேரிங் செஞ்சுக்கலாம்,ஆனால் ரொம்ப கூட்டமாகதான் இருக்கக்கூடாது என்று சொன்னோம் ஆனால் அது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுவிட்டது என்று நம் அரசியல் வாதிகளுக்கு மேல் அந்தர் பல்டி அடித்து இருக்கிறார்கள்.

தினம் Gulf news பேப்பரில் வரும் வேலை வாய்ப்பு செய்திகள் பற்றிய இணைப்பு பேப்பர்கள் கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதையாக பதினாறு பக்கங்கள் வந்த பேப்பர் இன்று இரண்டு பக்கம் வந்து நிற்கிறது, அதிலும் ஒண்ணே முக்கால் பக்கத்துக்கு மைக்கிரேட் டூ ஆஸ்திரேலியா, கனடா விளம்பரங்கள். வேலை வாய்ப்பு பற்றி ஒண்ணும் இல்லை.கொஞ்ச நாட்களாக FM ரேடியோவில் வரும் விளம்பரம் உங்களுக்கு வேலை போய்விட்டதா? அல்லதுவேலை போய்விடும் என்ற பயமா, கவலையை விடுங்க 15 நாட்களில் மேனேஜ்மெண்ட் கோர்ஸில் சேருங்கள்என்று டிரைனிங் செண்டருக்கு விளம்பரம் வருகிறது.

வாங்கிய லோன் கட்டமுடியாமலும், கிரெடிட் கார்ட் இண்ட்ரெஸ்ட் கட்ட முடியாமலும் பலர் தவிக்கிறார்கள். இதுவரை எத்தனை மணிக்கு வேண்டும் என்றாலும் எவ்வளோ பணத்தோடும் தனியாக ஒரு பெண்ணோ ஆணோ வெளியில் போய் வரலாம் என்று இருந்த நிலைகொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது ஒரு வாரத்துக்கு முன்பு ATM மெசினில் பணம் வைக்க வந்த வண்டியில் இருந்த செக்யூரிட்டியையும் சுட்டுவிட்டு பல கோடி ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது, இரு தினங்களுக்கு முன்பு ஜுமைரா பீச்சில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை அடிக்கப்பட்டதுஎன்று அங்கு இங்குமாக கொள்ளைகள் அடிப்பது செய்திகள் ஆகின்றன.

இன்னும் கொஞ்ச நாட்களில் பல பணக்காரர்களை உருவாக்கிய துபாய்தான் பல கடன்காரர்களையும் உருவாக்கப்போகிறது. இதுதான் இன்றய துபாயின் நிலை.

டிஸ்கி: ஒரே ஒரு அட்வைஸ் இந்த காலகட்டத்தில் துபாயில் வேலை வாங்கி தருகிறேன் என்று யாரும் சொல்லி அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் விசிட் விசாவிலும் பிளைட் ஏறி வேலை கிடைத்துவிடும் என்று வந்துவிடாதீர்கள்!!!

நம்ம ஊருல இரு பழமொழி சொல்லுவாங்க "குதிரை *** காஞ்சா வைக்கோலையும் தின்னும்" அப்படினு அதே மாதிரி இருக்கு.

இந்த நிலைமை இப்போது வந்தது அல்ல குசும்பன். கிட்டத்தட்ட நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்து விட்டார்கள். விசா சார்ஜை ஏற்றினார்கள். அது தான் முதலில் ஆரம்பித்தது. பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக வெளி நாடுகளில் இருந்து அங்கு வேலைக்குச் சென்றவர்களுக்கு துன்பம் தர ஆரம்பித்தது துபாய் அரசு. பூகம்பம் வந்த அன்றே முதலீட்டாளர்கள் அரண்டு போய் கிடந்தார்கள். கட்டப்பட்ட கட்டிடங்களை வாங்க நாதியில்லை. இரும்புக்கர ஆட்சியால் செய்திகள் வெளி உலகுக்கு தெரியவில்லை. இன்றைய நாட்களில் வேறு வழியின்றி செய்திகள் கசிய ஆரம்பிக்கின்றன. என் நண்பர் ஒருவரிடம் அவரின் நன்பர் சொன்னது : துபாய் ஏர்போர்ட்டில் எண்ணிலடங்கா கார்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றனவாம். காரின் ஓனர்கள் அங்கிருந்து கிளம்பி ஓடி விட்டார்களாம்....

இதையும் சேத்துங்க
விடுமுறையில் ஊருக்கு போனவங்கள
திருப்பி கம்பெனி கூப்பிடுற வரையும்
வரவேணாம் சொல்றாங்க,
விசா ரெனிவல் கிடையாது,
வலுகட்டாயாம விடுமுறைக்கு அனுப்புறதும் நடக்குது. இருக்கறவங்களுக்கு சம்பளம் எப்ப கிடைக்கும்னு தெரியாது சரி கிரெடிட் கார்டு வச்சி அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு பாத்தா அதுக்கும் ஆப்பு வைச்சிட்டாங்க பர்சேஸ் பண்ணதோட கூட அதிகபட்சம் 500 வைச்சு கிரெடிட் லிமிட் குறைச்சிருக்காங்க


-- Cheers,
Guru
+ 971 50 22 05 126

New 10 Rupee coin

Hi,

Have Look!!

Visit Us @ www.MumbaiHangOut.Org

Its released and now you can have it on your pocket!
RBI is ready to issue a new bimetallic 10 Rupee coin for circulation.

The look: The obverse side has the lion capitol with numeral 10 and year of manufacture. On reverse side, a double line cross with a dot in each pellet of cross and denomination written in Hindi and English around. This design has been prepared by National Institute of Design, Ahmedabad with the theme of Unity in Diversity. The outer side metal is Nickel-Bronze and the inner side metal is Ferrous Steel. The weight of the coin would be 8 grams and the diameter would be 28 mm.
The coins are being minted at mainly Noida and Mumbai mint. The coins worth Rs.70 million was already stored in its stock till August 2008.