புதுடெல்லி:மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டம் சரியே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அரசு உதவி பெறாத சிறுபான்மை பள்ளி நிறுவனங்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்.
கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.
இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் அவர் ஹேமந்த் கர்க்கரே 26/11 அன்று கொல்லப்பட்ட சம்பவத்தை பற்றிய சில குறிப்புகளை வெளியிட்டார். ஹேமந்த கர்கரே கொல்லப்படுவதற்கு முன் பாகிஸ்தான் தீவிரவாதிகளிடமிருந்தோ அல்லது இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினரிடமிருந்தோ எந்த மிரட்டலுக்கு ஆளாக்கப்படவில்லை மாறாக ஆர்.எஸ்.எஸ்ஸால் நடத்தப்படும் ஹிந்துத்துவ தீவிரவாதிகளிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளார்.
இஸ்லாமாபாத்:ஜமாஅத்து தஃவா அமைப்பின் தலைவர் பேராசிரியர் ஹாஃபிஸ் ஸயீதின் தலைக்கு ஒரு கோடி டாலர்(ரூ.50 கோடி) பரிசு அறிவித்துள்ள அமெரிக்காவின் அடாவடியை கண்டித்து பாகிஸ்தான் நகரங்களில் நடந்த பேரணியில் மக்கள் வெள்ளம் கரை புரண்டோடியது.
டெஹரான்: ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தால், இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருந்தது என்று சொல்ல முடியாத அளவுக்கு அந்த நாட்டை பூண்டோடு அழித்து விடுவோம் என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.