அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, February 7, 2009

இந்த உலகம் வீணென்பது நிராகரிப்போரின் கூற்று

வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) காஃபிர்களின் எண்ணமாகும். (அல்குர்ஆன் 38:27)

MMK மாநாடு: நேரடி ஒளிபரப்பிற்கான இணைப்புகள்.

இறையருளால் இந்திய அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தப் போகும் மனிதநேய மக்கள் கட்சியின் துவக்க விழா மாநாட்டு நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பு இன்ஷா அல்லாஹ் கீழ்கண்ட இணைப்புகளிலிருந்து காணலாம்.


mms://66.36.252.46/vconnect


http://www.dawahtelevision.com

ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயத்தின் நீண்ட நாள் கனவு நினைவாகப் போகும் நாள்..... இறையருளால் வெற்றியடைய வல்ல ரஹ்மானை பிரார்த்திக்கி‍‍‍றேன்.

பெற்றோரே! உங்களத்தான்!

சகோதரர் ஜாஹிர் கருத்தில் உடன்பாடு கொண்டு இந்த கவிதை படைத்தேன்)
---------------------------------------------------------------------
ஐந்தில் வளையாதது ஐம்மதில் வளையாது என்ற ஐயம் காரணமா?
இல்லை அதிகம் சுமந்தால் தான் வருங்காலத்தின்
சுமைதாங்கியாய் குடும்பம் தாங்குவான்(ள்) என்ற தப்புக்கணக்கின்,
பயிற்சியின் முயற்சியா?
காலம் பாடம் சொல்லிக்கொடுக்கும் பெற்றோரே!
முதலில் நீங்கள் அவர்களை புரிய பழகுங்கள்.
பூவின் வாசம் நுகரத்தெரியாத நீங்கள் மலர் தோட்டம் வாங்கி -
அதை சுற்றி வசித்து என்ன பயன்?
பயிரை காக்கவேண்டிய நீங்களே-
வேரினில் வென்னீர் ஊற்றுவதா?
பாவம் அந்த இளம் தளிர்கள்!
போதிக்க வேண்டியது அவர்களுக்கள்ள உங்களுக்குத்தான்.
கரிசனத்தையும்,கவனிப்பையும் சரியா செய்தாலே போதும்,
காலம் அவர்களை சரியாய் செழுத்திவிடும்.
கண்டிப்பு அவசியம் தான் ஆனால் கல்லுறம் கொண்டல்ல,
கணிவுடன்,பக்குவத்துடன் செய்துபாருங்கள்
பின்பு பாருங்கள்..
அந்த பிஞ்சுகள் பக்குவமாய் கணிந்து நிற்பதை.
(சகோ.முஹம்மது தஸ்தகீர்)
--தபால் காரன்.

Friday, February 6, 2009

பெரியார் பார்வையில் இஸ்லாம் (அ) ஏகத்துவம்

இஸ்லாம்’ பற்றி பகுத்தறிவு கொள்கை கொண்ட பதிவர்கள் சிலரின் மதிப்பீடுகளை-பின்னூட்டங்களை தமிழ்மணத்தில் படித்துவிட்டு - பகுத்தறிவு தந்தையின் மதிப்பீடு என்னவென்று தேடியபோது கிடைத்ததை மீள்பதிவு செய்திருக்கிறேன்).

சகோதரர்களே! 69 ஆதிதிராவிடர்கள் முகமதியர்களாகி விட்டதால், அவர்களுடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டதென்றோ, அவர்களுக்கு "மோட்ச லோகம்' கூப்பிடும் தூரத்திற்கு வந்துவிட்டதென்றோ, "கடவுளோடு கலந்து விட்டார்கள்' என்றோ கருதி நான் மகிழ்ச்சி அடையவில்லை. இவைகளை நான் ஏற்றுக் கொள்ளுவதும் இல்லை. மற்றவர்களை நம்பும்படிச் சொல்வதும் இல்லை. அன்றியும், ஒரு மனிதன் மதம் மாறுவதால் அவனுடைய செய்கைக்கும், எண்ணத்திற்கும் தகுந்த பலன் அடைவதில் வித்தியாசமுண்டு என்பதை நான் ஒப்புக் கொள்வதில்லை.
இந்துவாயிருந்து பசுவைக் கொன்றால் பாவம் என்றும், முமகமதியனாயிருந்து பசுவைக் கொன்று தின்றால் பாவமில்லை என்றும், மதத்தின் காரணமாக கருதுவது மூடநம்பிக்கையே ஒழிய, இரண்டுவித அபிப்பிராயத்திலும் அர்த்தமே இல்லை. உலகத்தில் உள்ள சகல மதங்களும் மூட நம்பிக்கையின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன. ஆகையால், பாவபுண்ணியத்தையும், மோட்ச நரகத்தையும் ஆதாரமாய் வைத்தும் நான் மகிழ்ச்சியடையவில்லை.

மற்றென்னவென்று கேட்பீர்களேயானால், இந்து மதம் என்பதிலிருந்து மதம் மாறினதாகச் சொல்லப்படும் 69 ஆதிதிராவிடர்களும், பிறவியின் காரணமாக அவர்களுக்குள்ள இழிவிலிருந்து விடுதலை அடைந்ததோடு, பாமரத் தன்மையும் காட்டுமிராண்டித்தனமுமான மிருகப்பிராயத்திலிருந்தும், அறியாமையிலிருந்தும் சிறிது விடுதலை அடைந்தவர்களானார்கள் என்பதற்காகவே மகிழ்ச்சியடைகின்றேன்.

அதாவது, மேற்கண்ட 69 பேர்களுக்கும் தீண்டாமை என்பது போய்விட்டது. இனி ஒருவன் அவர்களைப் பறையன், சக்கிலி, சண்டாளன் என்று இழிவாய்க் கூற முடியாது. அவர்களும் மற்றவர்களை "சாமி, சாமி, புத்தி' என்று கூப்பிட்டுக் கொண்டு தூர எட்டி நிற்க வேண்டியதில்லை. மற்ற மனிதர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டியதில்லை. ஊரை விட்டு வெளியில் குடி இருக்க வேண்டியதில்லை. குளிக்கத் தண்ணீரில்லாமல், குடிக்கத் தண்ணீரில்லாமல் திண்டாட வேண்டியதில்லை.

வண்ணான், நாவிதன் இல்லாமல் அழுக்குத் துணியுடனும், கரடிபோல் மயிர் வளர்த்துக் கொண்டும், பார்ப்பவர்களுக்கு அசிங்கமாகத் தோன்றும்படி வாழவேண்டியதில்லை. இனி எந்த பொதுத் தெருவிலும் நடக்கலாம்; எந்த வேலைக்கும் போகலாம்; யாருடனும் போட்டி போடலாம்; அரசியலில் சமபங்கு பெறலாம்; மத சம்பந்தமாகவும் இனி அவர்கள் தங்கள் கோயிலுக்குள் போக தாராள உரிமை உண்டு; வேதம் படிக்க உரிமையுண்டு.

எனவே, இவர்கள் பொருளாதாரக் கஷ்டத்திலும், அறிவு வளர்ச்சித் தடையிலும், சமூக இழிவிலும், சுயமரியாதைக் குறைவிலும், அரசியல் பங்குக் குறைவிலுமிருந்து ஒருவாறு விடுதலை அடைந்து விட்டார்கள் என்பது போன்றவைகளை நினைக்கும்போது மகிழ்ச்சியடையாமலிருக்க முடியவில்லை. ஏனெனில், தீண்டாமை, நெருங்காமை, பார்க்காமை, பேசாமை முதலாகிய சகிக்க முடியாத கொடுமைகள் முதலாவதாக மதத்தின் பேரால், வேத சாஸ்திரங்களின் பேரால், கடவுள்களின் பேரால் உள்ளவைகள் எல்லாம் அடியோடு நீங்க வேண்டும் என்கின்ற தீவிர ஆசையே இம்மாதிரி நினைக்கச் செய்கின்றது.

ஆகையால், தீண்டாமை முதலிய கொடுமை ஒழிய வேண்டும் என்கின்ற கருத்துள்ளவர்களுக்கும், ஒற்றுமையை எதிர்பார்க்கும் கருத்துள்ளவர்களுக்கும், மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்னும் கருத்துள்ளவர்களுக்கும் நமது நாட்டில் இப்போது உள்ள முக்கியவேலை, முதலில் தீண்டப்படாதவர்கள் முகமதியராவதை ஆட்சேபியாதிருப்பதேயாகும் என்பது, எனது தாழ்மையானதும், கண்ணியமானதுமான அபிப்பிராயம்.

நிற்க. சிலர் முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குகின்றது என்று எனக்கு எழுதி இருக்கிறார்கள். அது வாஸ்தவமானால், தீண்டப்படாதவர்களுக்கு அவர்களது தீண்டாமை ஒழிய முகமதிய மதத்தைச் சிபாரிசு செய்வதற்கு அதுவே ஒரு நல்ல காரணம் என்றே கருதுகிறேன். முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குவது உண்மையானால், அதில் சேர்ந்த இவர்கள் இனிமேலாவது இவ்வளவு தாழ்மையாக நடந்து கொள்ள மாட்டார்கள் அல்லவா? மற்றவர்களும் அவர்களது முரட்டு சுபாவத்தைக் கண்டு பயந்து மரியாதையாய் நடந்து கொள்ள இடமேற்படும் அல்லவா?

ஆகையால், இந்து சமூகத்தில் உண்மையான சமத்துவமும் ஒற்றுமையும் ஏற்படும்வரை தீண்டப்படாதவர்கள் கும்பல் கும்பலாய் முகமதியர் ஆவதைத் தவிர வேறு மார்க்கமில்லையாதலால், நாம் அதை ஆட்சேபிக்க முடியாதவர்களாய் இருக்கின்றோம். தவிரவும், மதத்தினிடத்திலோ இந்து சமூகத்தினிடத்திலோ கவலையுள்ளவர்களுக்கு இதனால் ஏதாவது சங்கடம் இருப்பதாயிருந்தால், அவர்கள் தாராளமாய் வெளிக்கிளம்பி வந்து தீண்டப்படாத மக்களுக்கு இருக்கும் கொடுமையையும் இழிவையும் நீக்க முன்வரட்டும். அவர்களோடும் எப்போதும் ஒத்துழைக்கத் தயாராயிருக்கிறேன்.

ஐந்து மணிக்குத் தீண்டத்தகாதவன் 5.30 மணிக்குத் தீண்டத்தகுந்தவன்!

நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. ஆனால், நான் பேசுவது என்பது, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை மக்களிடையே இருந்து வரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமான காரியங்களையும், அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்துவரும் பலன்களையும் பற்றித்தான் பேசுகிறேன்.

அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அதனால் சமூகம் என்ன பயனடைந்திருக்கிறது? என்பன போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமானால், அனேக விஷயங்களில் இந்து மதத்தைவிட இஸ்லாம் மதமே மேன்மையுடையது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால் லட்சியத்திற்கு உயிரைவிடத் துணிவது என்பதுதான். இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக்கூடாதவன், குளத்தில் இறங்கக்கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும் கடவுள் முன்னிலை என்பதிலும், மனிதன் மிருகத்தைவிடக் கேவலமாய் நடத்தப்படுகின்றான். இதை நேரில் காண்கின்றோம். இதைத்தான் அன்பு மதம், சமத்துவ மதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.

மதத் தத்துவ நூலை, வேதம் என்பதை இஸ்லாம் மதத்தில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியும், மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும்; பார்த்தாக வேண்டும்; கேட்டாக வேண்டும். இந்துமத வேதம் என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம் தவிர பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் அவன் பிரபுவானாலும், ஏழையானாலும், யோக்கியனானாலும், அயோக்கியனானாலும் சரி, ஒருவனுமே படிக்கவும் பார்க்கவும் கேட்கவும் கூடாது.

இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய்ச் சேர்ந்திருக்கிறார்கள். இன்று யாவரையும், எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ளக் கையை நீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கையோ எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவனையும் உள்ளே விட மறுத்து, வாசற்படியில் காவல் காக்கின்றது; தன்னவனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.

ஆதித் திராவிடர்களை நான், ‘இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம். ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை; அல்லது "ஆத்மார்த்தத்திற்கோ' "கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.

சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம். சத்தியாக்கிரகம் செய்வதும் கஷ்டம்; செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம். இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால், ஆதித் திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது, அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆத்திகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனால் என்ன? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது, இஸ்லாம் மதமும் ஒழியும்.

ஏன் கிறிஸ்து மதத்தைக் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா? கிறிஸ்தவ சகோதரர்கள் கோபிக்கக் கூடாது; வேண்டுமானால், வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷந்தான்.

நீதி மறுக்கப்பட்ட தமிழக முஸ்லிம்கள்




மிழகச் சிறைகளில் வாடுகிற தண்டனைக் கைதிகளில் எட்டாண்டுகாலம் சிறையில், முழுமையாய் தண்டனை கழித்தவர்களைப் 'பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு தொடக்கவிழா'வை ஒட்டி (செப். 15,2008) விடுதலை செய்ய இருப்பதையறிந்து மகிழ்ச்சியில் திளைத்தவர்கள் கோவையை சார்ந்த முஸ்லிம் தாய்மார்கள்.

கடந்த 10 ஆண்டு காலமாக, தலைவனை இழந்து தவித்த குடும்பம், மகனை இழந்த பெற்றோர், தந்தையின் முகம் மறந்த குழந்தைகள், என அனைத்து விதமான இன்னல்களுக்கும் அவலங்களுக்கும் உள்ளான இஸ்லாமியக் குடும்பங்கள் அல்லவா? அதனால் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் இனிப்பான செய்தியாக நம்பிக்கை கொள்ள வைத்தது.

1998இல் கருனாநிதி ஆட்சியின்போது கோயம்புத்தூரில், காவித்துறையின் எடுபிடியாக செயல்பட்ட காவல்துறை, அதன் கட்டுக்கடங்கா அத்துமீறல் மூலம் முஸ்லிம்களின் மனித உரிமைகளை நசுக்கியது. மதவெறி அமைப்புகளின் துணையோடு கோவை முஸ்லிம் சமுதாயத்தின் பொருளாதரமே அழிக்கப்பட்டது. மனிதர்கள் உயிரோடு தீ வைத்துக் கொளுழுத்தப்பட்டனர். பல சகோதரிகள் மாணப் பங்கப்படுத்தப்பட்டனர். அவர்களின் வனிக நிறுவனங்களும் குடியிருப்புகளும் சூறையாடப்பட்டன. முஸ்லிம்களுக்கெதிரான அட்டூழியங்கள் எல்லை மீறி நடந்தபோது அரசின் சட்டம் கைக்கட்டி- கைக் கொட்டி நின்றது; காவல்துறை காவிகளோடு கைகோர்த்துக் கொண்டு கோவை முஸ்லிம்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது.

பாதிக்கப்ப்ட்டவர்கள் நியாயம் கேட்ட போது - காதுகளை பொத்திக்கொண்டது அரசு நிர்வாகம். வன்முறையாட்டம் ஆடிய, சட்டத்தின் மூலம் தண்டனை பெற வேண்டிய கொலைகாரக் காவிகள் வெகு சுதந்திரமாக வெற்றிக் களிப்போடு நடமாடினர். ஒரே நம்பிக்கையான நீதித்துறையாலும் புறக்கணிக்கப்படுகிறோமே என்று உணர்ச்சிவசப்பட்ட இளைஞர்கள் சிலர் நீதி கேட்டு 'வெடித்த' குண்டுகள் - 'பயங்கரவாத'மாக திரிக்கப்பட்டது.. பட்டாசு வெடித்தால்கூட முஸ்லிம்கள் மீது பொய்வழக்குப் போடக் காத்திருக்கும் காவல் துறை - வெடி குண்டு என்றால் விடுமா?. குற்றவாளிகளைத் தேடுகிறோம் என்று நள்ளிரவு நேரங்களில் கோவை முஸ்லிம்களின் வீட்டுக்கதவுகளை உடைத்துக்கொண்டு தேடியது, படுக்கை அறையிலிருந்து கக்கூஸ் வரை மூக்கை நுழைத்துப் பார்த்தது. இஸ்லாமிய வழிபாட்டிடங்கள், கல்விக்கூடங்கள் என்று அனைத்து இடங்களிலும் பூதக்கண்ணாடி வைத்துக்கொண்டு தேடி முஸ்லிம்களை 'ஒசாமா பின் லேடனாக ' முத்திரை குத்தியது.

தீவிரவாதிகளைத் தேடுவதாக 'கோஷா' அணிந்த பெண்களையும் முதியவர்களையும் மிரட்டியது, முஸ்லிம்கள் வீட்டில் காய்-கறி நறுக்க வைத்திருக்கும் கத்திகள், ஷேவிங் செய்ய வைத்திருக்கும் பிளேடுகள் போன்றவைகளைக்கூட கைப்பற்றிப் 'பேரழிவு ஆயுதங்களாகப் ' பட்டியலிட்டு சமூகங்களிடையே பதட்டத்தை விளைவித்தது.

கோவையில் முஸ்லிம்களுக்கெதிரான கொடுமைகளை எதிர்த்த நடுநிலைவாதிகளின் குரல்கள் சங்பரிவாரால் நசுக்கப்பட்டன. நியாயம் கேட்ட இந்துச் சகோதரர்களைப் 'போலி சமயசார்பின்மைவாதிகள்' என்றும் 'இந்து மத விரோதி' என்றும் முத்திரை குத்தினர். அதனால் அப்பொழுது முஸ்லிம்களுக்கு ஆதரவாகக் குரலெழுப்ப முஸ்லிம்கள பயந்தது போல - இந்து நடுநிலைமைவாதிகளும் பயந்தனர்.

விசாரனை என்ற பெயரில் வீட்டில் படுத்துறங்கிக் கொண்டிருந்தவர்களை, கடைக்கு சாமான் வாங்கச் சென்றவர்களை, தெருவோரம் தூங்கிக்கொண்டிருந்த்வர்களை - பதின்ம வயதினர் - இளையர்-முதியர் என்ற பேதம் பார்க்காது அழைத்து சென்றது காவல்துறை.

பத்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. குற்றஞ்சாட்டப்பட்டட் பதின்மவயதினர் - இளைஞர்களாகி, இளைஞர்கள் முதியோராகி, முதியோர் 'மவுத்தா'க்கள் ஆகி விட்டார்கள்.

தமிழகச் சிறைகளில், கோவை வெடிகுண்டு வழக்குத் தீர்ப்பை ஒட்டி விடுதலைபெற்றுச் சென்றவர்களை தவிர, சுமார் 170 முஸ்லிம்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையோர் பத்தாண்டுகளாகியும் பிணையில் விடுதலை செய்யப்பட்டதில்லை. தண்டிக்கப்பட்டவர்களுக்கு "பரோல்", "எஸ்கார்ட்" இல்லாத பரோல் போன்ற சட்டம் அனுமதித்த சலுகைகளும் முஸ்லிம்களுக்கு மட்டும் வஞ்சகமாக மறுக்கப்பட்டன. இவற்றை நினைத்து இன்றும் முஸ்லிம்களின் நெஞ்சில் கசிகின்ற இரத்தம் நிற்கவில்லை.

தாமதமாக வழங்கப்படும் நீதியை, மறுக்கப்பட்ட நீதியோடு ஒப்பிடுவார்கள்.(Justice Delayed is Justice Denied) அதனால் சிறுபான்மையினரின் காவலராகக் கூறிக்கொள்ளும் முதல்வர் கருணாநிதியிடமிருந்து காலந்தாழ்ந்தாலும் நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்று நிர்க்கதியாய் நின்ற குடும்பங்களின் நம்பிக்கையைத் தூள் தூளாக்கி விட்டது தமிழக அரசு.

ஆயுள் தண்டனை பெற்ற முஸ்லிம் கைதிகள் மட்டும் எத்தனை ஆண்டுகாலம் சிறையில் கழிக்க வேண்டும் என்று சரியான விளக்கம் ஏதுமில்லை. முஸ்லிம் கைதிகள் மட்டும் 'ஆயுள் முழுவதும்' சிறையில் வாடவேண்டும்; அவர்களின் குடும்பத்தினர் எல்லோரும் காலம் முழுவதும் கவலையோடு வாட வேண்டும் என்று உணர்த்தும் விதமாக அமைந்திருக்கிறது அரசின் முடிவு. அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி கோவை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 296 ஆயுள்தணடனைக் கைதிகளில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை.

ஏன் இந்த பாகுபாடு?

கலைஞர் ஆட்சியில் சிறைச்சாலைகளில் முஸ்லிம்கள் எவரும் வாடவில்லை என்று பொய்த் தோற்றம் காட்டுவதற்கு அரங்கேற்றப்பட்ட நாடகமா இது? அல்லது வருகிற தேர்தலில் தி.மு.க தனிப்பெரும்பான்மையோடு வென்றால் எஞ்சியுள்ள 'முஸ்லிம் சிறைக்கைதிகளை' விடுதலை செய்வோம் என்று பிரச்சாரம் செய்வதற்காகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள பலி ஆடுகளா முஸ்லிம் கைதிகள்?

கோவை தொடர் குண்டு வெடிப்பிற்குக் காரணம் என்று, "அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கொடும் மதக் கலவரங்களில் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுதான்" என்று அரசே சொன்னது. ஆனால் குண்டு வெடிப்பிற்கு அடிப்படைக் காரணமான மதக்கலவரக் குற்றத்தில் ஈடுபட்ட காவிகளில் காவல்துறைக் கறுப்பாடுகளில் பலர் கைதாகவே இல்லை. கைதான மிகச் சிலக் காவிகளில் ஒருவர்கூட இன்று சிறையில் இல்லை. எல்லோரும் அப்போதே பிணையில் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.

முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன் இந்த அநீதி?

கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளில்,சுமார் 600 கைதிகள் விடுதலை செய்யப்பட்டபோதும் ஒருவர் கூட கோவை தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்ட முஸ்லிம்கள் இல்லை. இது குறித்து, பொது மன்னிப்பில் விடுதலையாக தகுதிகளை/வரையறைகளைக் கொண்டும் விடுதலை செய்யப் படாத ஜாஹிர் என்கிற கைதி தகவலறியும் சட்டத்தின் மூலம் காரணம் வினவியபோது, "அவர் புரிந்த குற்றத்தின் தன்மை கருதி 15-09-2007 அன்று வழங்கப்பட்ட பொது மன்னிப்பின்போது விடுதலை செய்யப்பட வில்லை" எனக் கூடுதல் சிறைத் துறை இயக்குனர் பதிலளித்தார். (மு.மு.எண்.51493/பி.எஸ்.1/2007-3 தேதி 26-12-2007). கலைஞர் அரசு செய்த அநீதிக்கு இந்த ஆண்டில் பரிகாரம் தேடிக்கொள்ள இருந்த வாய்ப்பையும் அரசு இழந்து, முஸ்லிகளுக்கு 'அல்வா' கொடுத்து அநீதி இழைத்து விட்டது.

தொப்பியோ முக்காடோ போட்டுக்கொண்டு 'நோன்பு கஞ்சி' குடிப்பதையும், யாருடைய பேச்சையும்-எழுத்தையும் வைத்தோ சிறுபான்மையினரின் நண்பராகக் காட்டி வேஷம் போட்டதை முஸ்லிம்கள் நம்பிய காலம் மலையேறிவிட்டது.

அது மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கான இயக்கம் என்ற பெயரில் 'இயங்காமல்'முடங்கிக் கிடக்கும் மற்றும் சகோதர இயக்கங்களை மட்டும் எதிர்த்து இயங்கிக்கொண்டிருக்கும் அமைப்புகளுக்கு எச்சரிக்கை செய்யும் நேரம் வந்து விட்டது.

இட ஒதுக்கீட்டையும், டிசம்பர் ஆறையும் தவிர தமிழக இஸ்லாமியர்களுக்கு வேறு பிரச்சினைகளே இல்லை என்று 'படம்' காட்டுவதை நிறுத்தச் சொல்லி, இஸ்லாமியர்களின் அடிப்படை வாழ்வுரிமை பற்றிய பிரச்சினைகளை முன்னெடுத்து அவற்றை எப்படித் தீர்ப்பது?, அதில் அரசின் பங்கென்ன?, சமுதாயத்தின் பங்கென்ன? என்ற செயல் திட்டத்தை வரையக் கட்டாயப் படுத்தும் காலம் வந்துவிட்டது.

நீண்டகாலமாக விசாரணை முடிக்கப்படாத முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை உடனடியாக முடிக்கவும் விசாரணைக் கைதிகளுக்கு ஜாமீன் உரிமை கோரியும் மறுபரிசீலனைக்குழு நியமிக்கப்படவேண்டிய வழக்குகளில் உடனடியாக அதைச் செய்யவும் வலியுறுத்தி, பல ஆண்டுகளாக - வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடும் குடும்பங்களை இஸ்லாமிய அமைப்புகள் காப்பாற்ற வேண்டும்.

அதற்கு முன்பாக அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்யப்படும் கைதிகளின் பட்டியல் தேர்வுக் குழுவில் இடம் பெற்றவர்கள் யாவர்? எந்த வரையறையைக் கொண்டு கைதிகள் விடுதலையாகும் தகுதி நிர்ணயிக்கப் பட்டது? எட்டு ஆண்டுகள் எனக் கணக் கிட்டால் சுமார் 70 முஸ்லிம் கைதிகள் பொது மன்னிப்பிற்குத் தகுதியாக இருக்கும்போது, ஏன் ஒரு முஸ்லிம்கூட விடுதலை செய்யப்படவில்லை? என்ற நியாயமான வினாக்களை எழுப்ப வேண்டிய உரிமை சமுதாய அமைப்புகளுக்கும் - விடையளிக்க வேண்டிய கடமை ஆளும் அதிகார வர்க்கத்துக்கும் உள்ளது.

வினாக்கள் எழும்புமா? விடைகள் வெளிவருமா?

மதவெறி அழிப்போம்..மனிதநேயம் காப்போம்.



பழிக்கு பழி வாங்குவதாக சொல்லி டெல்லியில் கடந்த சனியன்று (13 செப் 2008) 30 அப்பாவிகளை மதச்சாயம் பூசிய சில மிருகங்கள் வெடிகுண்டு மூலம் படுகொலை செய்தது - அடிப்படை மனித நேயத்திற்கு முரனானது. வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது.

கொலைகாரர்களும்-கயவர்களும் ஹிந்து-முஸ்லிம் சாயம் பூசிக்கொண்டு கோழைத்தனமாக அப்பாவி பொதுமக்களை கொல்வதை உடனடியாக தடுக்கவேண்டும். அரசு மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்து விட்டனர் பொதுமக்கள்.

சுதந்திரமடைந்ததிலிருந்து மும்பை, மீரட், மாலியானா, கோயம்புத்தூர், குஜராத், ஒரிஸ்ஸா என்று ஒவ்வொரு இடத்திலும் நடந்த படுகொலைகளிலிருந்து கலவரம் உருவாக அடிப்படையான காரணங்கள் என்னவென்று தெரிந்தும் - அதை களைய மறுத்த புறக்கணித்ததுதான் தேசமெங்கும் குண்டுகளாய் வெடித்து பரவுகிறது.

அப்பாவிகளைக் கொல்லும் மனித நேயமற்ற குரூரமான குண்டு வெடிப்புகள்-திட்டமிட்ட கலவரங்கள் இவற்றின் அடிவேரை ஆராய்ந்து குற்றவாளிகளைக் கண்டு பிடித்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட அத்தனை கமிஷன்களும் பொது மக்களின் வரிப்பணத்தில், அமல் செய்யப்படாத வெற்று அறிக்கைகளைத்தான் தயாரித்து போட்டன.

தீவிரவாதத்தை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் அனைத்தும் திட்டமிட்டு ஒரு சாரருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது - தீவிரவாதத்தையே அதிகரிக்க செய்தது.

அரசு மத தீவிரவாதத்தை ஒழிக்கும் என்று இனிமேலும் நாம் நம்பிக் கொண்டிருக்கலாமா?

’எல்லை தாண்டிய தீவிரவாதம்’ என்ற கூப்பாடினாலோ அல்லது ’இஸ்லாமிய பயங்கரவாதம் ’ என்ற குற்றச்சாட்டினாலோ அழியாது மதவெறி..

‘பதிலடி’ என்ற சப்பைக்கட்டுடன் அரங்கேற்றப்படும் மனிதப்படுகொலைகளை கண்டு ’ஐயோ பாவம்’ என்று ’உச்சு’கொட்டிவிட்டால் பறிக்கப்பட்ட மனித உயிர்கள் திரும்ப வராது..

குற்றவாளிகள் இரும்புகரம் கொண்டு தண்டிக்கப்படவேண்டும்- அதற்கேற்ற சட்டம் வேண்டும் என்ற அரசியல் கலந்த அலங்கார முழக்கங்களோ சடங்குக்காக நடத்தப்படும் கண்டனப் பேரணிகளோ எதையும் சாதிக்காது..

அப்படியென்றால், மதத்தின் பெயரால் நடக்கும் படுகொலைகளுக்கு-அட்டூழியங்களுக்கு முடிவே இல்லையா?

மத்திய-மாநில அரசுகள் இத்தனை ஆண்டுகளாக செய்யத் தவறியதை இப்பொழுதிலிருந்து கடைப்பிடிக்க ஆரம்பித்தால் - மதவெறி ஒடுக்கப்படலாம், மனித உயிர்கள் காக்கப்படலாம்.

காவ்ல துறையும் நீதித்துறையும் - சாதி-மத சார்பின்றி, அரசியல் வாதிகளின் இடையூறின்றி இனியாவது செயல்படவேண்டும்.

உளவுத்துறை- காவல் துறை இவைகளின் தொழில் நுட்பம் மற்றும் ஆயுத நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். எந்த இடத்திலாவது தவறு நடந்தால் அவர்களைத்தான் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும்.

காவல் துறை - பொது மக்களுக்கு நன்மை செய்து - நம்பிக்கை தரும் நன்பனாக மாறவேண்டும், பாரபடசமில்லாத அவர்களின் செயற்பாடுகளால் பொதுமக்களை குறிப்பாக ‘குற்றப்பரம்பரையாக’ சுட்டப்பட்ட ச்முதாய மக்களின் நம்பிக்கையை பெறவேண்டும்.

தேசம், தேசியம் என்ற போலி வார்த்தைகள், வதந்திகள், மற்றும் வரலாறு திருத்தங்கள், மூலம் மக்களை கூறுபோடும் மதவெறி அமைப்புகள் தயவு தாட்சன்யமின்றி நசுக்கப்படவேண்டும்.

மத்திய-மாநில அரசுகளின் நீதி மற்றும் காவல் துறையினர் தங்களின் கடமைகளை பாரபடசமின்றி செய்தால் தீவிரவாதிகள் அந்தந்த சமுதாயத்தை சார்ந்தவர்களாலேயே புறக்கணிகப்பட்டு, மனித நேயத்திற்கு புறம்பான செயல்களை கைவிட்டு இத்தகைய குரூரமான செய்லகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க் வாய்ப்புண்டு.

மத்திய-மாநில அரசுகள் இத்தனை ஆண்டுகளாக செய்யத் தவறியதை இப்பொழுதிலிருந்து கடைப்பிடித்தேயாக வேண்டும், இல்லையென்றால், தீவிரவாத செயல்களும், உயிரிழப்புகளும், கதைக்கு உதவாத வெற்று ’கமிஷன்களும்’ ‘கண்டன பேரணிகளும்’ முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கும் - மனித உயிர்களற்ற பாலைவனமாய் இந்தியா மாறும் வரை...

முஸ்லிம்கள் Vs வினாயகர் ஊர்வலங்கள்



வினை தீர்ப்பான் என்று இந்து நண்பர்களால் நம்பப் படுகின்ற வினாயகரின் பெயரால் - கடந்த சில வருடங்களாக முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் நடைபெற்று வருகின்றன.

எளிமைக்குப் பெயர் பெற்ற கடவுளாகச் சொல்லப் படும் இவர், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தபட்டவ்ர்களின் தரிசனத்துக்கு எட்டாத 'வந்தேறி'தெய்வங்களை போன்றவர் அல்ல. 'சாமான்யனின் தெய்வமாக' ஆலமர, வேப்பமர நிழலிலும் மற்றும் ஆத்தங்கரைகளிலும் வீற்றிருக்கும் 'புள்ளையாரை' முன்வைத்து முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகின்றன.

முன்பெல்லாம் வினாயகர் சதுர்த்தியன்று வீடுகளில் மாட்டுச் சாணம் அல்லது களிமண்ணால் சிறிய வினாயகர் வடிவங்களைப் பிடித்து அவற்றைக் கிணறுகளிலோ குளங்களிலோ வீசி எறிவர். வினாயகர் சதுர்த்தி என்றாலே சிறுவர்களுக்குக் கொண்டாட்டம் கொழுக்கட்டை கிடைக்கும் என்பதுதான்.

இன்றோ, தமிழகத்தில் 1985ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்துத்துவ வெறிக்கும்பல் நடத்தும் வினாயகர் சதுர்த்தி என்றாலே கலவரமும் வன்முறையும்தான் நினைவுக்கு வந்து திண்டாட்டத்தை ஏற்படுத்துகிறது.

சுதந்திர போராட்டத்தின் போது, பாலகங்காதர திலகர், விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தி ஹிந்து-முஸ்லிம்களை ஒன்றிணைத்து, அவர்களிடையே நாட்டுப் பற்றை கொண்டுவர முயன்ற போது. அதில் முஸ்லிம் மக்களும் கலந்து கொண்டார்கள் என்று கூறப்படுவதுண்டு. ஆனால், இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு - தங்களின் இருப்பையும் இந்திய முஸ்லிம்களின் மீது வெறுப்பையும் காட்டுவதையே பிழைப்பாகக் கொண்ட மதவெறியர்களின் கையில் அப்பாவி வினாயகரும் 'துருப்பு சீட்டாக' சிக்கிக் கொண்டார்.

முஸ்லிம்களுக்கு எதிரான பகையை வளர்ப்பதற்கா எந்த வாய்ப்பையும் தவற விடாத ஹிந்துத்வ சக்திகள், கோட்ஸே என்ற சித்பவன பிராமனனால் மஹாத்மா காந்தி, படுகொலை செய்யப்பட்டபோது அதைத் திரித்து, "ஒரு முஸ்லிம்தான் காந்தியை படுகொலை செய்தான்" என்று வதந்தி பரப்பினார்கள். அந்தப் பழக்கம் இன்றும் தொடர்ந்து தென்காசியில், தங்களது சொந்த இந்து முன்னணி அலுவலகத்தில் 'வெடிகுண்டு' வைத்துவிட்டுப் பழியை அப்பாவி முஸ்லிம்கள் தலையில் போட்டுக் கலவரம் செய்ய முயன்று - இறுதியில் போலீசில் 'வகையாக சிக்கி' மூக்கை உடைத்துக் கொண்டது.

வினாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்வைத்து இந்த ஆண்டு சங்பரிவார் தனது கலவரத் திட்டத்தை - முத்துப்பேட்டை, திருவிதாங்கோட்டை, தக்கலை, மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் போன்ற இடங்களில் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

'இஸ்லாமியர்கள் தங்களின் தெருவழியாக இந்துக் கடவுளர்களை தூக்கிச் செல்ல அனுமதிப்பதில்லை என்றும் "முஸ்லிம்களின் வசிப்பிடங்களின் வழியாக பன்றி போகலாம், கழுதை போகலாம், நாய் போகலாம் ஆனால் 'புள்ளையர் சிலை' போகக்கூடாதா?" என்று பொது மக்களை உசுப்பேத்தி விட்டு, வழக்கமாகச் செல்லும் வழியை விட்டுவிட்டு முஸ்லிம்கள் வசிப்பிடம் வழியாகத்தான் புள்ளையாரைத் தூக்கிச் செல்லவேண்டும் என்று மக்களைத் தூண்டி வருகிறார்கள். அந்தப் பொய்களை கேட்கிற எவருக்கும் இஸ்லாமியர்கள் வினாயகரை எதிர்க்கிறார்களே என்றே எண்ணத் தோன்றும்.

முஸ்லிம்களின் வசிப்பிடங்கள் வழியே பன்றிகள் போகும்போது, "பாபரின் வாரிசுகளே! பாகிஸ்தனுக்கு திரும்பி போங்கள்" என்று உறுமுவது கிடையாது. நாய்கள் போகும்போது, "துலுக்கனை வெட்டு; துலுக்கச்சியக் கட்டு" என்று குரைப்பது கிடையாது. கழுதைகள் போகும்போது, "பத்து பைசா முறுக்கு; பள்ளிவாசலை நொறுக்கு" என்று கனைப்பது கிடையாது. ஆனால் 'பக்த கோடிகளாக' வேஷமிட்டு, 'சோம பானம்' 'சுரா பானம்' அருந்தி, சுய நினைவில்லாமல் கூலிக்கு மாரடிக்கிற 'கேடிகள்' போடுகிற இஸ்லாமிய எதிர்ப்பு கோஷங்கள்தாம் முஸ்லிம்களைத் தங்களது வசிப்பிடங்களின் வழியாக 'வினாயகர் ஊர்வலம்' செல்வதை எதிர்க்கத் தூண்டுகிறது.

இஸ்லாமியர்களின் எதிர்ப்பு வினாயகருக்கோ ஹிந்து சகோதரர்களுக்கோ எதிரானது அல்ல. 'வினாயகர் ஊர்வலம்' என்ற போர்வையில் கலவரம் விளைவித்து, ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையைச் சீர்குலைத்து, முஸ்லிம்களின் சொத்துகளை சூறையாடத் திட்டம் போடும் ஹிந்துத்வ மதவெறி கும்பலுக்கு மட்டும் எதிரானது என்பதை மாற்றுமதச் சகோதரர்கள் நினைவில் கொள்ளவேண்டும். ஆனால், இதையும் வழக்கம்போல் திசை திருப்பி பொதுமக்களிடம் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வை வளர்கிறார்கள்

வினாயகர் சிலைகளைக் கரைக்க ஊர்வலமாகச் செல்பவர்கள் எவரும் மந்திரங்கள் சொல்லுவதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று தூக்கி செல்கிறவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மந்திரமே தெரியாது; அதற்குக் காரணம் உயர்சாதிக்கு மட்டும் சொல்வதற்குச் சொந்தமான மந்திரத்தைப் பிறர் காதால் கேட்க கூடாது; நாவால் உச்சரிக்க கூடாது, மீறினால் ‘ஈயம் காய்ச்சி ஊற்றப்படும்’ என்ற 'மனுதர்மத்தின்' அன்பான மிரட்டல்தான்.

ஹிந்து தர்மப்படி 'சூத்திரன்' 'மிலேச்சன்' என்ற முத்திரைகளோடு கோவிலுக்குள் நுழைய அருகதையற்றவர்களின் கைகளிள் முஸ்லிம்களை எதிர்ப்பதற்காக 'சிலையை'த் திணிக்கிறது ஹிந்துத்வா.

வேதங்களால், தீண்டத்தகாதவர்களாக வரையறை செய்யப்படவர்களுக்குத் தற்காலிகமாக 'ஹிந்து' என்று முத்திரை குத்தி, முஸ்லிம்களுக்கெதிராகக் களமிறக்குகிறது ஹிந்துத்வா.

சாதி வேறுபாடு பாராட்டும் இந்துத்வாவின் இரட்டை வேடம் மக்கள் அறியாதது அன்று. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தபோது பின்னங்கால் பிடரியில் இடிபட, மூச்சு முட்ட 'ஹை கோர்ட்' 'சுப்ரீம் கோர்ட்' என்று அலைந்து -திரிந்து தடை வாங்கியது - ஹிந்துத்வ கும்பல்தான்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இந்து ஆதிக்கவாத சக்திகள் அத்துமீறும் போதெல்லாம் வாயையும் 'மற்றதையும்' பொத்திக்கொண்டு - காஷ்மீர் உயர் சாதி பண்டிட்களுக்காக 'குய்யோ' முறையோ' என்று ஒப்பாரி வைப்பதும் ஹிந்துத்வ கும்பல்தான்.

ஒவ்வொரு வருடமும் வினாயகர் ஊர்வலத்தின் போது பதட்டம்-கலவரம் ஏற்பட இத்தகைய கோஷங்கள்தான் காரணம் என்று - 'ஸ்காட்லாந்து' போலிசுக்கு இணையாகக் கருதப்படும் தமிழகக் காவல் துறைக்குத் தெரியாதா?

வினாயகர் சிலை கரைக்கப்படுவதால் நீர் நிலைகளில் தேக்கங்களில், ஆறு குளங்களில் ஏற்படும் மாசுகளைப் பற்றி கவலைப்படும் மத்திய-மாநில அரசுகள் - ஊர்வலம் மூலம் ஏற்படும் மதக்கலவரம் பற்றி கவலைப்படாது ஏன்?

நீர் வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக - கரைக்கப்படும் சிலைகள் செய்யப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களைப் பற்றிய விதிமுறைகளில் காட்டப்படும் அக்கறையில் சிறிதுகூட ஊர்வலத்தால் பாதிக்கப்படும் சிறுபான்மையினர் நலனில் காட்டப்படாதது ஏன்?

சட்டமும் காவல் துறையும் என்ன செய்துகொண்டிருக்கின்றன? இழவுத் துறையாகிப் போன உளவுத்துறை போல் செயலிழந்து விட்டதா? அமைதியாக நடக்க வெண்டிய ஊர்வலத்தை - பதட்டம் நிறைந்ததாக மாற்றும் கயவர்கள் யார் என்று காவல் துறைக்குத் தெரியாதா? டிசம்பர் ஆறை முன்னிட்டு முன்னெச்சரிகை நடவடிக்கை என்ற பெயரில் முஸ்லிம்களைக் கைது செய்வதில் காட்டும் அக்கறையில் சிறிது கூட 'ஹிந்துத்வ' வினாயகர் ஊர்வல ஏற்பாட்டாளர்கள் மீது காட்டாதது ஏன்?

பிரச்சினைக்குத் தற்காலிக தீர்வுகள் வேண்டி 'பதட்டம்' நிறைந்த ஊர்களில் அனைத்து மதக்கூட்டம் போட்டும் ஹிந்துத்வ வன்முறையாளர்களின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதனால் ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்களை நெறிபடுத்த சில வரைமுறைகளை அரசும்-காவல் துறையும் எதிர்காலத்தில் செய்யவேண்டும்:

  • ஊர்வலத்தில் கலந்து கொள்கிறவர்கள் மது அருந்தியிருக்கிறார்களா என்று பரிசோதனை செய்யப்படவேண்டும்.
  • ஊர்வலத்தில் கலந்து கொள்கிறவர்கள் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் போன்றவற்றைப் பதுக்கி வைத்திருக்கிறார்களா என்று பரிசோதனை செய்யப்படவேண்டும்.
  • முஸ்லிம்களின் வசிப்பிடங்கள வழியாக செல்லும் ஊர்வலங்களை 'வீடியோ' மூலம் படம்பிடிக்க வேண்டும்.
  • வெளியூர்காரர்கள் ஊர்வலத்தில் கலந்து கொள்வதை அனுமதிக்கக் கூடாது.
  • ஊர்வலத்தின் போது முழங்குவதற்கான கோஷங்களைக் காவல் துறையிடம் தெரிவிக்க வேண்டும். அனுமதிக்கப்படாத கோஷங்களை எழுப்புவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவற்றைச் செய்யத் தவறினால் ஊர்வலத்தின்போது ஏற்படும் வன்முறை, பொருள் நஷடம், உயிர் இழப்பு ஆகியவற்றிக்குக் காவல் துறையே பொறுப்பேற்க வேண்டும். கடமையைச் செய்ய காவல் துறை தவறினால், மத நல்லிணகத்திற்குக் கேடு விளைவிக்க விரும்பும் சக்திகளைக் கட்டுப்படுத்த மேற்கண்ட நெறிமுறைகளை வலியுறுத்தி, சமூக அக்கறையுள்ள அமைப்புகள் பொதுநல வழக்கு தொடர்ந்து அரசின் கவனத்தை திருப்ப வேண்டும்.

வெட்கித் தலைகுனியும் மதவெறி

உலகெங்கும் மதத்தின் பெயரால் மதவெறி வளர்த்து வன்முறை, தூண்டி, கம்பு, கத்தி, கோடாறி, சூலம் மற்றும் வெடிகுண்டு மூலம் அப்பாவி மனிதர்களின் இரத்தத்தை உறிஞ்சும் காட்டுமிரண்டிகளின் வெறியாட்டம் நடந்து வருகிறது. அதேவேளையில் மனித நேயம் இன்னும் இருப்பதை பறைசாற்றும் நிகழ்வுகள் நடக்கத்தான் செய்கின்றன.


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சாமுண்டதேவி கோவிலில் நவராத்திரி கொண்டாட்டத்தை முன்னிட்டு நடந்த பூஜயில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 150 பக்தர்கள் மரணித்தனர். அந்த ’தள்ளுமுள்ளுக்கு’ - இஸ்லாமிய தீவிரவாதிகளின் வெடிகுண்டு புரளிதான் காரணம் என்று ஊடகம் மற்றும் இணைய தளங்களின் மூலம் வதந்தி மூலம் பரப்பட்டடு முஸ்லிம்களுக்கெதிரான துவேஷம் குறையாமல் மிககவனமாக பார்த்துக் கொள்ளப்பட்டது.

விபத்தில் சிக்கியவர்களை இடிபாடுகளிலிருந்து மீட்பதிலும், மீட்கப்பட்டவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிப்பதிலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதிலும், இரத்த தானம் வழங்குவதிலும் ஜோத்பூர் முஸ்லிம்கள் காட்டிய மனிதநேயம் வழக்கம்போல ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டது.

அது மட்டுமல்ல, உற்றார் உறவினரை இழந்து இந்து சகோதரர்கள் துக்கத்தில் தவிக்கும்போது, விமரிசையான நோன்பு பெருநாள் கொண்டாட்டம் முஸ்லிம்களுக்கு தேவையில்லை’ என்று ஜோத்பூர் நகர தலைமை காஜியும், பிற இஸ்லாமிய அமைப்புக்களும் அறிவித்தனர். அதனால் இந்த வருடம் நோன்பு பெருநாள் பண்டிகை - ’சடங்குக்காக’ மட்டும் கொண்டாடப்பட்டது.

நான் சொல்ல வந்ததை விட்டுவிட்டு எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறேன். பின்னூட்டங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்காக, மதவெறி தூண்டி மக்களை கூறு போடும் வதந்திகளுக்கும் - திரிக்கப்பட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு - ’மதம் தாண்டி’ உறவாடும் இத்தகைய மனித நேய நிகழ்வுகள் திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டு வருகிறதே என்று வருந்துவதால்தான் இந்தப்பதிவு.

பரமக்குடியில் பிறந்த நாள் அன்று பெற்றோர் கண் எதிரில் குழந்தை லாரி சக்கரத்தில் சிக்கி பலி

பரமக்குடி,பிப்.5-

பரமக்குடியில் பிறந்தநாள் கொண்டாடிய குழந்தை பெற்றோர் கண் முன்னே லாரியில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந் தது.

4 வயது குழந்தை

மதுரை மாவட்டம் திருமங் கலத்தை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 40). இவரது மனைவி தில்சாத்பானு(39). இவர்களது மகள் ரோசன் சபிகா(9). இவர்கள் தற்போது காட்டு பரமக்குடி சேதுபதி நகரில் வசித்து வருகின்றனர். முகமது ரபீக் டிரைவராகவும், தில்சாத் பானு பரமக்குடி அருகே உள்ள தீயனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர். குழந்தை ரோசன் சபிகா பர மக்குடியில் உள்ள பள்ளி ஒன் றில் 4-ம் வகுப்பு படித்து வந் தார்.

நேற்று பிறந்த நாள் என்ப தால் அனைவருக்கும் இனிப்பு வழங்கிவிட்டு திருமங்கலத் தில் உள்ள தாத்தா, பாட்டியி டம் ஆசிர்வாதம் வாங்க தனது பெற்றோர்களுடன் குழந்தை ரோசன் சபிகா மோட்டார் சைக்கிளில் பரமக்குடி பஸ் நிலையத்திற்கு வந்தாள்.

குழந்தை பலி

அப்போது பின்னால் வந்த சரக்கு லாரி மோட்டார் சைக் கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். குழந்தை ரோசன் ரபிகா லாரி யின் சக்கரத்தில் சிக்கினார். குழந்தையின் இடுப்பில் சக் கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. முகமது ரபீக், தில்சாத் பானு படுகாயம் அடைந் தனர்.

உடனே அவர்கள் பரமக் குடி ஆஸ்பத்தியில் அனுமதிக் கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இறந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கைது

இதுகுறித்து பரமக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு, சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீ சார் வழக்கு பதிந்து விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா மானூர் பகு தியை சேர்ந்த நாகராஜனை கைது செய்தனர். பிறந்தநாள் கொண்டாடிய குழந்தை இறந்த சம்பவம் அப் பகுதியில் சோகத்தில் அழத் தியுள்ளது.

திருப்புல்லாணி அருகே வாகன ஓட்டிகளை காவு கேட்கும் மங்கமா சாலை

பனைக்குளம்,பிப்.5-

திருப்புல்லாணி அருகே சேதமடைந்துள்ள மங் கமா சாலை அந்த வழி யாக வரும் வாகன ஓட்டி களை காவு கேட்கும் வித மாக உள்ளது.

மங்கமா சாலை

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மங் கமா சாலை திருப்புல்லாணி,பெரியபட்டினம்,ரெகுநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான புயல் காரணமாக பெய்த மழையில் தேங்கிய மழைநீரை அகற்ற துண்டித்து விட்டனர். ஆனால் அதன்பிறகு சீர மைக்க யாரும் முன்வர வில்லை.

இதனால் இரவு நேரங்க ளில் இந்த வழியாக செல் லும் வாகனங்கள் விபத்துக்குள் ளாகி வருகிறது. இதுகுறித்து எச்சரிக்கை பலகையும் இல் லாததால் 20க்கும் மேற்பட் டவர்கள் இதுவரை படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்புல்லாணி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற் றும் தலைமை காவலர் 2 பேரும் ரோந்து சென்றபோது சாலை துண்டிக்கப்பட்டது தெரியாமல் குழியில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.

விபத்துக்கள்

இதுகுறித்து அந்தபகுதியி னர் கூறியதாவது:- சில மாதங் களுக்கு முன்பு மழை வெள்ளம் விவசாய நிலங்களில் தேங்கி நின்றது. இந்த தண்ணீரை கடத்துவதற்காக சாலை துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால் இந்த சாலை வழியாக வரும் புதிய நபர்கள் குழிக்குள் விழுந்து படுகாயம் அடைந்து வருகின் றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஆம்னி வேன் ஒன்று இந்த குழியில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் வந்தவர்கள் அதிர்ஷ்டவச மாக உயிர் தப்பினர். எனவே தொடர்ந்து காவு வாங்கிக் கொண்டிருக்கும் இந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

பாபர் மசூதி இடிப்புக்கு மன்னிப்பு கேட்கிறேன் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அறிவிப்பு

லக்னோ, பிப்.5-

உத்தரபிரதேசத்தில் கடந்த 1992-ம் ஆண்டு பாரதீய ஜனதா ஆட்சி நடந்தபோது பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அப்போது முதல்-மந்திரியாக இருந்தவர் கல்யாண் சிங். எனவே, அவர் மீது முஸ்லிம்களுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. மேலும், பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் அங்கு பா.ஜனதா ஆட்சியை மத்திய அரசு `டிஸ்மிஸ்' செய்தது.

தற்போது பா.ஜனதாவில் இருந்து விலகி முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சிக்கு கல்யாண் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் நேற்று அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், `நான் ஆட்சியில் இருந்தபோது, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதற்கு நான் தார்மீக பொறுப்பு ஏற்று மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலமாக எனது நிலையை தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டேன்' என்று கல்யாண்சிங் தெரிவித்துள்ளார்.

மூட்டை சுமக்கும் பிஞ்சுக்கைகள்

எங்கே போகிறார்கள் இன்றைய பெற்றோர்கள் என்று பட்டிமன்றம் வைக்கும் அளவுக்கு போய்விட்டது இன்றைய கல்வியும், குழந்தைகள் தூக்கி சுமக்கும் புத்தக மூட்டையும். இது ஏன் திடீர் என்று இவ்வளவு மாற்றம்? [ 20 வருடத்துக்கு முன் இப்படி இல்லையே?..]


தொடர்ந்து வந்த வாழ்க்கைமுறையில் ஒரு மாதிரி குடும்ப பட்ஜெட் எகிரியது ஒரு காரணமாக இருக்களாம், இதனால் வரும் காலத்தில் பிள்ளைகள் எங்கே வாழ்க்கையை எதிர்கொள்ள தகுதியில்லாமல் போய் விடுவார்களோ என்று ஒரு விதமான மாயை உருவாகி விட்டது,

கவனிக்க: இன்றைய தேதியில் வாழ்க்கையின் பட்ஜெட்க்கு தன்னை பிழிந்து பணமாக அனுப்பும் யாரும் இது போன்ற கான்வென்ட்டில் படித்தவர்கள் அல்ல.

இல்லை அந்த கஷ்டம் வேண்டாம் என்றுதான் ஒவ்வொரு கான்வென்ட் வாசலிலும் நிற்கிறோம் எங்கிறீர்களா?...

ஆங்கில அறிவு மட்டும் பிள்ளைக்கு பொறுப்புணர்வை தராது. அதற்க்கு கொஞ்சம் அனுசரனை, அன்பு, நான் பக்கத்தில் இருக்கிறேன் என்ற security conciousness எல்லாம் தேவை.
இப்படியாக விழுந்து விழுந்து படித்த எத்தனையோ விசயஙகளை வெள்ளைக்காரன் இப்போது அவனது வெப்தளத்தில் குறைந்த விலைக்கு கூவி கூவி விற்கிறான். [ உதாரணம்: currency converter, investment calculator, scientific calculator].கொஞ்சம் காலம் ஒடிவிட்டால் அதே இலவசமாக தருகிறேன் என்று ஒரு கூட்டம் விளம்பரத்தில் மின்னும் [Flash advertisement].

நீதி: இன்றைக்கு அதிசயமாக தெரியும் ஒரு கல்வி / கல்வி முறையை வருங்காலத்தில் சேதுரோட்டில் ஒரு ராஜஸ்தான்காரனிடம் கூறு இன்னவிலை என்று நீங்கள் நிர்ணயம் செய்யலாம்.

குழந்தைகளை அது எடுக்கும் மார்க்கை வைத்து அன்பு செலுத்தாதீர்கள். படிப்பதில் அல்லது மார்க் எடுக்கும் விசயத்தில் கண்டிப்பு இருக்களாம் அதுவே உஙகள் அன்புக்கான பண்டமாற்றுமுறையல்ல.

இறக்கும் தருவாயிலும் இஸ்லாம் உன்னுடன் இருக்கவேண்டும் என்று புகட்டுங்கள்.

குழந்தைகள் பெரியவர்களானவுடன் நீங்கள் ஈசி சேரில் அமர்ந்து அவர்களிடம் மனம் விட்டு பேச நிறைய விசயங்களையும் , நிகழ்வுகளையும் சேமியுங்கள்..இப்போது உள்ள "Home works" அதை அழித்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் 9ம் தேதி திறப்பு

சென்னை, பிப்.6: ‘‘மருத்துவம், கால்நடை, பொறியியல் மற்றும் விவசாய கல்லூரிகள் 9ம் தேதி மீண்டும் திறக்கப்படும்’’ என்று அரசு அறிவித்துள்ளது.
இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, தமிழகத்தில் சில கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதில் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர். இதனால் தமிழக கல்லூரிகளில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து ‘தமிழகத்தில் உள்ள எல்லா அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் மூடப்படுவதாக அரசு அறிவித்தது. விடுதிகளை காலி செய்யவும் கடந்த 31ம் தேதி உத்தரவிட்டது.
தொழிற்படிப்புக்கான கல்லூரிகள் 9ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று அரசு நேற்று அறிவித்தது.
இதுகுறித்து தலைமை செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘இப்போது விடுமுறையில் உள்ள மருத்துவம், கால்நடை மருத்துவம், பொறியியல், விவசாய கல்லூரிகள், 9ம் தேதி முதல் செயல்படும். மற்ற கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கும் நாள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

கீழக்கரையில் தரமற்ற சாலைகள்

கீழக்கரை,பிப்.6: கீழக்கரை யில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
கீழக்கரை பகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக படுமோசமாக காணப்படுகின்றன. புதி தாக சாலை அமைத்து இரண்டு ஆண்டுகளி லேயே பள்ளங்களாக மாறியுள்ளன. சாலை அமைவதற்கு முன்பு சாலையின் தன்மை, அளவு, ஒதுக்கீட்டு தொகை குறித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் அறிவிப்பு பலகை ஏதும் வைக்கப்படுவதில்லை. இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் குமரன் கூறும்போது, Ôபோட்ட இடத்திலேயே மீண்டும் மீண்டும் சாலை கள் போடப்படுகின்றன. பெயரளவில் தான் தார் சாலைகள் அமைக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பயனடையாமல் போவதுடன் அரசு பணமும் விரயமாகிறதுÕ என்றார்.

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பல்லாண்டுகளுக்குப் பிறகு உண்டியல்

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் இதுவரை உண்டியல் கிடையாது. பொதுமக்கள் அளிக்கும் காணிக்கை மற்றும் அறக்கட்டளை மூலம் வரும் வருமானம் ஆகியவை பொது தீட்சிதர்களால் மேலாண்மை செய்யப்பட்டு வந்தது.

தற்போது அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவின் பேரில் சித்சபை எதிரே உண்டியல் பொருத்தப்பட்டது.

ஆட்சேபனை

அறநிலையத்துறை இணை ஆணையர் ந.திருமகள், துணை ஆணையர் ஜகந்நாதன், நிர்வாகி அதிகாரி கே.கிருஷ்ணகுமார் ஆகியோரிடம் ஆலய பொதுதீட்சிதர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஏ.சம்பந்தம், சிவக்குமார் ஆகியோர் உண்டியல் வைக்க ஆட்சேபம் தெரிவித்தனர்.

காலம், காலமாக நடராஜர் ஆலயத்தில் உண்டியல் இல்லாமல் பொதுமக்கள் காணிக்கை மற்றும் அறக்கட்டளை மூலமாக நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கத்தை மாற்றக்கூடாது எனவும், தீட்சிதர்களின் ஆலோசனை பெறாமல் அவரச, அவசரமாக ஏன் உண்டியல் வைக்க வேண்டும் என ஆலய வழக்கறிஞர்கள் எழுத்து மூலம் ஆட்சேபம் தெரிவித்து அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

மேலும் பொதுமக்கள் அளிக்கும் காணிக்கையை நம்பியே 400 தீட்சிதர் குடும்பங்கள் வாழ்க்கை நடத்தி வருவதாகவும் தற்போது ஜீவாதார வாழ்வுரிமை பறிக்கப்பட்டதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

வேறொரு பெண்ணுடன் சென்ற வாலிபர் கைது

ராமேசுவரம்,பிப்.6-

ராமேசுவரத்தில் மனை வியை விட்டு விட்டு வேறொரு பெண்ணுடன் சென்ற வாலிபரை போலீ சார் கைது செய்தனர்.

வாலிபர்

ராமேசுவரம் சந்தன மாரி யம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகுமத் நிஷா(வயது 31). இவரது கணவர் இடி அமீன்(33). இவர்களுக்கு கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் இடி அமீன் என்பவருக்கும் ராமேசுவ ரத்தை சேர்ந்த இளம் பெண் ணுக்கும் தொடர்பு ஏற்பட் டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்த மனைவி ரகுமத் நிஷாவை இடிஅமீன் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படு கிறது. மேலும் கடந்த 28-ந் தேதி இளம்பெண்ணுடன் இடிஅமீன் சென்னை சென்று விட்டாராம்.

கைது

இதுகுறித்துரகுமத்நிஷா ராமேசுவரம் அனைத்து மக ளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேசுவரி வழக்கு பதிவு செய்து சென் னையில் இருந்த இடி அமீனை கைது செய்தார். மேலும் அவர் ராமேசுவரம் அழைத்து வரப் பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட பின்னர் சிறை யில் அடைக்கப்பட்டார்.

உலகப் பொருளாதார நெருக்கடி அன்றும்-இன்றும்

1929ல் ஏற்பட்ட பங்குச் சந்தை சரிவால் ஏற்பட்ட நெருக்கடிக்கும், 2008ல் உருவாகி வரும் பொருளாதார சரிவிற்கும் ஒப்பிட முடியாத வேறுபாடுகள் உண்டு. 1929-2008 நெருக்கடிகள் இரண்டும் பிறந்த இடம் அமெரிக்கா என்பதைத் தவிர வேறு ஒற்றுமை கிடையாது.

1929ல் ஏற்பட்ட நெருக்கடி என்பது வானத்திலிருந்து விழுந்த இடி எனலாம், 2008ல் ஏற்பட்ட சரிவு என்பது பூமி குலுங்கி கடல் சுருண்டு திரண்டு கரைகளை அடித்த சுனாமி போன்றது. அன்று சர்வதேச வர்த்தகத்திற்கு தங்கம் மட்டுமே செல்லுபடியாகும் பொது நாணயமாக இருந்தது. இன்று நிலைமை வேறு. வர்த்தக நெருக்கடிக்கு காரணமான தங்க செலாவணி முறையை ஓரம்கட்டிவிட்டு, 1945ல் ஏற்பட்ட பிரெட்டன் வுட் ஒப்பந்தத்தின் மூலம் டாலர் தாள் முதலில் புகுந்தது. இன்று ஏகாதிபத்திய நாடுகளின் தாள் நாணயங்கள் (டாலர், பவுண்டு, ஈரோ, யென்) சர்வதேச செலாவணிகளாக உள்ளன. பங்குச் சந்தை மூலம் மூலதன திரட்டல், நிதி நிறுவனங்கள், ஹெட்ஜ் பன்டுகள் என்பன இன்று போல் அன்று உலக அளவில் படரவில்லை. அதைவிட இன்று போல் நிதி மூலதனம் பல தலைகளை கொண்டதாக ஆகவில்லை.
கடன் பத்திரம், சரக்கு பத்திரம், சர்வதேச அந்தஸ்து பெற்ற நாணயங்களை விற்கும் நாணயச் சந்தையென 10 தலை ராவணனாகவில்லை. இன்று போல் அன்று எல்லா நாடுகளின் பொருள் உற்பத்திகளும் சர்வதேச வர்த்தகத்தோடு இணைக்கப்படவில்லை. இன்று போல் அன்று தொழில்நுட்பங்களும், திறன்மிக்க உழைப்பாளர்களும் லட்சக்கணக்கில் நாடுவிட்டு நாடு தாண்டி உழைக்கப் போகவில்லை. இன்று சர்வதேச வர்த்தகத்தை நம்பிக்கையோடு நடத்த பல சவால்களை வர்த்தகர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஆயிரக்கணக்கான கப்பல்கள் சரக்குகளை ஏற்றி கடல்களை தாண்டி பாதுகாப்பாக இலக்கை அடைவதற்கு இடையில் ஏற்படும் சிக்கல்கள் தவிர, விற்பவரும் வாங்குபவரும் நேர்மையாக நடந்து கொள்ள உத்தரவாதம் தேவைப்படுகிறது. இதன் விளைவாக வர்த்தக முதலீடு,முன்பணம் என்ற வகைகளில் நிதி மூலதனமும், அதனை காக்க இன்சூரன்சும் நவீன பொருள் உற்பத்தியில் முதன்மை இடத்தை பிடித்து விட்டது. (முதலாளித்துவ உற்பத்தி முறையில் இதுவே நிதி மூலதன ஆதிக்கமாகி சுரண்டலின் குவிமையமாகிவிட்டது).
இன்றைய நிலை
நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு இல்லாமல் உலக வர்த்தகம் சுழலாது. உலக வர்த்தகம் சுழலாமல் பொருள் உற்பத்தி சக்கரம் சுழலாது. எல்லா நாடுகளும் பயனடைகிற முறையில் சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தில் சமத்துவமும் சரியான பணக் கருவியும் இல்லாத நிலையே நெருக்கடியை இன்று கொண்டு வந்துள்ளது. இந்தப் பிரச்சனை பற்றி பொருளாதார நிபுணர்கள் கூறுவதென்ன?
2008 மார்ச் மாதத்தில் கியூபாவில் கூடிய 10 வது உலகப்பொருளாதார நிபுணர்கள் மாநாட்டில் 55 நாடுகளிலிருந்து 1300க்கும் மேற்பட்ட பொருளாதார நிபுணர்கள் பங்கேற்றனர். அங்கு வெளிவந்த மாறுபட்ட கருத்துக்கள் நம்மை சிந்திக்க வைக்கின்றன. இதில் பங்கு கொண்ட பிரபலமான நிபுணர் ளில் ஒருவர் கனடா நாட்டு ராபர்ட் முன்டல் 1999ம் ஆண்டு பொருளாதாரதுறைக்காக நோபிள் பரிசு பெற்றவர், செல்வாக்கு மிக்கவர், ரீகனுடன் இணைந்து செயல்பட்டவர், ஈரோ நாணய அமைப்பை உருவாக்கிட ஐரோப்பிய நாடுகளுக்கு திட்டம் வகுத்துக் கொடுத்தவர், இவர் விவாதத்தை தொடங்கிவைத்து பேசும் பொழுது “1945ல் டாலரை சர்வதேச செலாவணியில் மேலாண்மை பெற உருவான பிரெட் டன்வுட் ஒப்பந்தமே இன்றைய நெருக்கடிக்கு காரணமாகும்இன்று அமெரிக்காவை அலைக்கழிக்கும் நெருக்கடியை பெரிதுப்படுத்தி கூறுவதை நான் ஏற்கவில்லைடாலரின் மதிப்பு வீழ்ச்சியை அமெரிக்க பொருளாதாரம் ஜீரணித்து வெகு சீக்கிரம் வேகப்படும் என்று நம்புகிறேன்ஆனால் உலக நாடுகளின் பொருளாதாரம் வெகுவாக சிரமப்படும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்பணக்கார நாடுகளிடையே ஏற்பட்டிருக்கும் செலாவணி முரண்பாட்டை தவிர்க்க டாலர், பவுன்ட், ஈரோ, யென் ஆகிய நான்கையும் இணைத்துஇன்ட்டர் என்ற பொதுவான சர்வதேச செலாவணியை கொண்டு வரலாம் என்றார். சீனப் பொருளாதார வளர்ச்சியை அவர் பாராட்டியதோடு அவர்கள் பொதுத் துறையை அடிப்படையாக வைத்து சந்தையைக் கட்டினர். மற்ற நாடுகள் பொதுத்துறையை அழித்து சந்தையைக் கட்டின எனவே வேறுபட்ட விளைவுகள் என்றார். வாஷிங்டனில் இயங்கிவரும்பொருளாதார கோட்பாட்டு ஆய்வுமைய-இயக்குனர் மார்க் வெயிஸ் பிராட் பேசுகிற பொழுது. அமெரிக்க பொருளாதாரம் சரிந்து வருகிறது என்பதை உறுதி செய்தார். அதன் விளைவாக வேலைவாய்ப்புகள் சுருங்கி வேலையற்றோர் எண்ணிக்கை கூடி வறுமைக்கோட்டிற்கு கீழ் வாடுவோர் எண்ணிக்கை கூடுவதை சுட்டிக் காட்டினார். இந்த அமெரிக்க நெருக்கடியினால் அமெரிக்காவைவிட அதிகம் பாதிப்பது அருகிலிருக்கும் கனடாவும் மெக்ஸிகோவும்தான். இந்த இரு நாடுகளும் அமெரிக்காவை வெகுவாக நம்பியிருக்கும் நாடுகள். அவர் பேசுகிறபொழுதுகடந்த 10 ஆண்டுகளாக தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் மக்கள் மாற்றுக் கொள்கையுடைய அரசுகளை தேர்வு செய்வதை காண்கிறோம்.
பொருளாதார வளர்ச்சி என்பது பூஜ்யத்தை தொட்டதால் இந்த மாற்றம் வந்தது. கடந்த 150 வருடங்களாக இல்லாத மாற்றங்களை அங்கு காண்கிறோம். வெனிசுலா என்ற நாடு பெட்ரோலிய நிறுவனங்களை தேச உடமையாக்கி அதன் வருவாயை கல்விக்கும் சுகாதாரத்திற்கும் திருப்பிவிட்டதோடு ஏழைகளுக்கு கடன் வசதியும் செய்தது. அங்கு வறுமை நீங்கிய தோடு பணவீக்கமும் குறைந்தது. வருங்காலங்களில் நவீன தாராளமயத்திலிருந்து நாடுகள் விலகும் போக்கு அதிகப்படும்.
அமெரிக்காவை நம்புவதால் பலன் எதுவுமில்லை என்ற முடிவிற்கு வரும் நாடுகளின் எண்ணிக்கை அதிகப்படும் என்றார். சிலி நாட்டு நிபுணர் ஆர்லாண்டோ காபுட்டோ, முதலாளித்துவ உற்பத்தி முறையின் அமைப்புக் கோளாறை ஆதாரத்தோடு சுட்டிக் காட்டினார். கடந்த 30 ஆண்டுகளில் நெருக்கடிகள் ஆறு முறை சுழன்றடித்ததை சுட்டிக் காட்டினார்இந்த நெருக்கடியையும் அவர்கள் சமாளிக்கலாம். ஆனால் பிரச்சனை மீண்டும் தலை தூக்கும்.
எனவே தீர்வு என்பது புரட்சிகரமானதாகஅமைவது அவசியம் என்றார். 2007ல் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் எரிக்.எஸ். மாக்சின் இந்த உலகமயம் ஏற்றத் தாழ்வை அதிகப்படுத்தியிருப்பதை புள்ளி விபரத்தோடு நிரூபித்தார். அமெரிக்கநாட்டு உழைப்பிற்கு அதிக ஊதியமும், அதே திறன் உள்ள ஏழை நாட்டு உழைப்பிற்கு குறைந்த ஊதியமும் வழங்கப்படுகிறது. உருவாக்கப்படும் பொருள்களை, முடிவில் இருவருமே இறக்குமதி செய்கின்றனர். இது ஏற்றத்தாழ்விற்கு இட்டுச் செல்கிறது என்றார். மெக்சிகோ பேராசிரியர் ஆஸ்க்கார் யுகார்ட்சிக்கோ சிலி நாட்டு பேராசிரியர் ஆர்லாண்டோ காபுட்டோ, பெல்ஜிய நாட்டு பேராசிரியர் எரிக் டோசி யான்ட் (உலக வங்கியின் நிரந்தர படையெடுப்பு என்ற நூலின் ஆசிரியர், மூன்றாம் உலக கடன்களை ரத்துச் செய்ய இயக்கம் நடத்தும் குழுவின் தலைவர்) மூவரும் இன்றைய உலகமய வர்த்தக அமைப்பை மாற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.
உலக வர்த்தக உறவில் நெருக்கடிகளை கொணரும் அசமத்துவத்தை நீடிக்கச் செய்வதையே அமெரிக்க ஐரோப்பிய அரசுகள் தீர்வாக கருதுகின்றன என்பது நிபுணர்களின் கருத்து மோதல்கள் உணர்த்துகின்றன.
பிற நாடுகள் பல வழிகளில் உலக வர்த்தகத்தில் சமத்துவ உறவை நிலை நாட்டிட போராடுகின்றன என்பதும் தெரிகிறது. இவர்களுக்குள் சவாலை சந்திக்க பொது கருத்து உருவாகவில்லை என்பதையும் பார்க்க முடிகிறது. எனவே பொதுக்கருத்தை உருவாக்கும் பணி அவசியமாகிறது. சில தென் அமெரிக்க நாடுகளின் மக்கள், அத்தகைய அரசியல் தலைவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்து சவாலை சந்திக்க இறங்கியுள்ளனர். நாமும் கற்போம்; சவாலை?