அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, February 6, 2009

கஸ்ஸா - உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்கள்! - பாகம் 2


* தடையை மீறிக் கொண்டு சைப்ரஸிலிருந்து புறப்பட்ட இரண்டாம் பயணக்குழுவில் நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை?
அதில் கலந்து கொள்ள நான் நினைத்திருந்தேன். ஆனால், ஆப்கானிஸ்தானில் தனிப்பட்ட மறைவிடங்களில் அமெரிக்கா அடைத்து வைத்துள்ள அரபு-முஸ்லிம் பெண்களைக் குறித்து ஒரு தொலைகாட்சிக்காக டாக்குமெண்டரி தயார் செய்வதற்காக இங்கு(லாஹூர்) வர வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. இச்சிறைவாசிகளைக் குறித்து உலகில் எவருக்கும் எந்தவொரு தகவலும் தெரியாது. ரகசிய சிறைகளில் பெண்களும் அடைக்கப்பட்டுள்ள தகவலை அமெரிக்கா முதலில் மறுத்திருந்தது.

* நீங்கள் எவ்வாறு அவர்களைக் குறித்த விவரங்களைத் தெரிந்துக் கொண்டீர்கள்?

பாக்ராம் சிறைசாலையில் 650ஆம் எண் சிறைவாசி ஒரு பெண்ணாகும். அவள் பெயர் ஷாஃபீலா, பாகிஸ்தான் குடிமகள். மற்ற அரபு-முஸ்லிம் பெண்களும் அமெரிக்க முஸ்லிம் பெண்கள்கூட அங்கு சிறைகளில் அடைக்கப் பட்டிருக்கலாம். அவர்களது எண்ணிக்கையையும் யதார்த்த நிலையையும் அறிந்து கொள்ளவே நான் அங்குச் சென்றேன்.

முக்கியமாக, நான் அமெரிக்க இராணுவ அமைச்சகத்தை(பெண்டகன்) மூன்றுமுறை தொடர்பு கொண்டு, "ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கச் சிறைகளில் பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனரா?" என விசாரித்தேன்.. மூன்று முறையும் "இல்லை" என்ற மறுப்பே பதிலாகக் கிடைத்தது. இறுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் தந்த பதிலில், 650ஆம் எண்ணுள்ள ஒரு பெண் கைதி அங்கு உண்டு என அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

"நீங்கள் ஏன் மறுக்கின்றீர்கள்?. பெண் கைதிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதைக் குறித்த சரியான விவரத்தை நீங்கள் ஏன் தர மறுக்கின்றீர்கள்?" என நான் கேட்டேன்.

அவர்கள் இப்பெண் கைதிகளிடம் மிக மோசமாக நடந்து கொள்கின்றனர். அது வெளியே தெரிவதை அவர்கள் விரும்பவில்லை. பாக்ராமிலும் மற்றச் சிறைகளிலும் அநேகப் பெண்கள் அடைக்கப் பட்டுள்ளனர் என்பது உறுதி. அவற்றின் உண்மையான விவரங்களையும் அங்குள்ள நிலைமையையும் அறிந்து கொள்ளவே நான் அங்குப் போகிறேன்.

* ஆப்கனிஸ்தானிலுள்ள அமெரிக்க இராணுவம் உங்களை அனுமதிக்குமா?

நிச்சயமாக அனுமதிக்காது என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் எனது இலட்சியத்தை அடைய நான் துவங்குவேன். ஒரு பெண் கைதி அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதை நான் கண்டறிந்துள்ளேன். முதலில், அவரை அடைத்துள்ள இடத்தைக் கண்டறிந்தால் மற்றவர்களைக் குறித்தும் விசாரிக்க இயலும்.

* இந்த இலட்சியத்தில் உள்ள அபாயத்தை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?

எனக்கு பயமில்லை; இவர்களை நாம் பயந்தால், அவர்கள் நம்மை மேலும் விரட்டுவார்கள்; நாம் அவர்களுக்கு முகம் கொடுத்து எதிர்த்து நின்றால், அவர்கள் பயப்படுவர்.

* ஆனால், நீங்கள் இன்று ஒரு பர்தா அணிந்த முஸ்லிம் பெண். தீவிரவாதிகள் என்ற பெயரில் அமெரிக்கா அடைத்து வைத்துள்ளப் பெண்களைத் தேடிச் சென்றால், உங்களையும் சிறை வைக்கவோ சதி செய்து கொல்லவோ செய்வர் என்ற பயம் உங்களுக்கு இல்லையா?
அத்தகைய எவ்வித பயமும் எனக்கில்லை. ஒரு முஸ்லிம் பெண் என்ற நிலையில் நான் என் கடமையை நிறைவேற்றுகிறேன். நிரபராதிகளான இப்பெண்களைக் காப்பாற்றும் திறனுள்ள ஆண்கள் முஸ்லிம் உலகில் உருவாகும்வரை நான் என் இலட்சியத்தைத் தொடர்வேன்.

இறைத்தூதரின் காலத்தில் யூதர்களில் ஒருவன் ஒரு முஸ்லிம் பெண்ணின் உடையைப் பிடித்து இழுத்து, அவமானப்படுத்தத் துணிந்தமைக்காக கடுமையான விளைவை யூதர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதேபோல் அப்பாஸியாக்களின் காலத்தில் எதிரிகளில் ஒருவன் அதேமாதிரி செய்த குற்றத்திற்கு அவனுக்குக் கிடைக்கவேண்டிய பதிலடி கிடைத்தது.

ஆனால், இன்று இராக்கில் அபூகுரைப் சிறைக் கொட்டடியிலும் ஆப்கானிலுள்ள ரகசிய சிறைக்கூடங்களிலும் கொடுமைப்படுத்தப்படும் முஸ்லிம் பெண்களில் ஷாஃபீலா என்ற 650ஆம் எண்ணுள்ள கைதி ஒரு சிறு உதாரணம் மட்டுமே. இவர்களுக்காக இன்று ஒருவர் கூட எதுவும் செய்ய முன்வரவில்லை.


* இதுவரை ஒரே ஒரு பெண் கைதியைக் குறித்து மட்டுமே விவரம் கிடைத்துள்ள நிலையில், ஆப்கனில் மேலும் பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என நீங்கள் எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்?

சிறையிலிருந்துத் தப்பியோடிய நான்கு கைதிகளைக் குறித்த அறிக்கை ஒன்றை "அல்-அரேபியா" தொலைகாட்சி ஒளிபரப்பியிருந்தது. அதில் ஒருவரது புகைப்படம் காட்டப் பட்டது; ஆனால் அவரது பெயரை வெளிப் படுத்தவில்லை. அவர் தற்பொழுது எங்கே இருக்கிறார் என்பதும் தெரியவில்லை.

ஆப்கானில் அமெரிக்க இராணுவத்தினர் மானபங்கப்படுத்திய பெண் கைதியைக் குறித்து அவர் அப்பொழுது கூறியிருந்தார். ஆண்களுக்கு இடையில் சிறை வைக்கப்பட்டிருந்த அப்பெண், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதுகூட மற்ற ஆண் கைதிகளின் முன்னிலையில் எவ்விதத் திரையும் இன்றி செய்ய வலுக்கட்டாயத்துக்கு உள்ளாக்கப் பட்டிருந்தார். அப்பெண் இக்காரணங்களால் அங்கு வைத்து உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்ததாகவும் அவர் கூறியிருந்தார். இதன் அடிப்படையிலேயே அங்கு ஒன்றுக்கு மேற்பட்டப் பலப் பெண்கள் சிறைவைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்படுவதாக நான் கருதுகிறேன்.

* ஆப்கனிஸ்தான் அரசு உங்களுக்கு ஆப்கனில் நுழைய அனுமதி வழங்குமா?

ஆம், எனக்கு ஆப்கானிஸ்தான் செல்வதற்கு விஸா கிடைத்துள்ளது. அமெரிக்கர்களைத் தொடர்பு கொண்டு, நான் பாக்ராமிற்கு வருவதாகத் தெரிவித்தபொழுது எனக்கு அனுமதி தரமுடியாது என்ற பதில் கிடைத்தது. ஆனால், நான் அங்கு வந்து வெளியே நின்று புகைப்படம் எடுத்து, "எனக்கு உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளிப்படுத்துவேன்" என நானும் பதில் அளித்துள்ளேன்.

* எந்நேரம் வேண்டுமெனிலும் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ள இதுபோன்ற காரியங்களில் நீங்கள் ஏன் அதிக ஆர்வம் செலுத்துகின்றீர்கள்?

நான் கூறினேன் அல்லவா?, உண்மைகளைத் தேடிக் கண்டறிதல் என்பது என் முந்தைய முழுநேர வேலையாக இருந்தது (சகோதரி இவான் ரிட்லி முன்னாள் பத்திரிக்கையாளராவார்). இந்த ஜிஹாதை நான் தொடர்வேன். ஒரு முஸ்லிம் பெண்ணினாலும் பல காரியங்கள் செய்ய இயலும் என்பதை நீங்கள் எல்லரும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொருவரும் அவரவரால் செய்ய இயலுமானதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதற்கான வழிகளைக் கண்டறிந்து கொண்டால், அவ்வழியில் பயணத்தைத் துவங்கி விட வேண்டும். திறமையுள்ள புகைப்படக்காரர் உண்டு; நிபுணர்களான மருத்துவர்கள் உண்டு; நான் ஒரு பத்திரிக்கையாளர் ஆவேன். இத்துறையில் புதிய படைப்புகளை உருவாக்க நான் முயல்கிறேன். என்னால் இயலக்கூடிய தீன் பணியினை, என் தொழிலின் மூலமாக நான் நிறைவேற்றுகின்றேன்.

* எனில், ஜிஹாதைக் குறித்த உங்களது நிலைப்பாடு என்ன?
- தொடரும், இன்ஷா அல்லாஹ்

No comments: