Wednesday, December 24, 2008
mumbai
vatti
அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்;. இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (alquran2:276)
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.(alquran2:278)
பெருமந்தச் சூழலில் தவிக்கும் தனது பொருளாதாரத்தை எப்படியாவது சீராக்கிவிடும் முயற்சியில் இறங்கியுள்ளது அமெரிக்கா.
அதன் ஒரு கட்டமாக, வங்கி வட்டி விகிதங்களை அடியோடு குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுவரை 1 சதவிகிதமாக இருந்த வட்டி விகிதத்தை 0 முதல் 0.25ஆகக் குறைத்துவிட்டது. பல வகைக் கடன்களுக்கு இனி வட்டியே கிடையாது. அடுத்த ஆண்டு இறுதி வரை இதே நிலைதான் நீடிக்கும் என்றும் நிதித்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
அதேபோல, நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்பு முழுமையாக அரசின் வசம் இருந்தாக வேண்டிய அவசியத்தை உணர்ந்திருப்பதாகவும் நிதித்துறை அறிவித்துள்ளது.
இனி அனைத்து பணவியல் காரணிகளையும் ஒருங்கிணைத்து, பொருளாதாரத்தை மேம்படுத்துவதுதான், அமெரிக்காவின் இன்றைய நெருக்கடியைத் தீர்க்கும் என்றும் நிதித்துறை கூறியுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்க பங்குச் சந்தையில் மிகவும் சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது. டோவ் ஜோன்ஸில் இன்று மட்டும் 4.2 சதவிகிதம் உயர்வு ஏற்பட்டுள்ளது.
புதிய சிக்கல்:
ஆனால், என்னதான் வட்டி விகிதக் குறைப்பை அமல்படுத்தினாலும் கூட அடுத்த ஆண்டு இறுதி வரை பொருளாதார மந்த்த்திலிருந்து மீளும் வாய்ப்பே இல்லை என்றும், இன்னும் நிலைமை மோசமாவதைத் தடுக்க முடியாது என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, பொராதாரத்தில் அரசின் பிடிமானம் மேலும் அதிகரிக்க வழிசெய்யும் முயற்சியில் புதிய அதிபர் ஒபாமா இறங்க வேண்டும் என்றும் அவர்கள் யோசனைத் தெரிவித்துள்ளனர்.
இதற்கான முயற்சிகளில் ஒபாமா ஏற்கெனவே தீவிராமாக இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பொருளாதாரம் முழுக்க முழுக்க தனியார் மயமானது. முதலாளித்துவத் தத்துவத்தின் அடிப்படையில் இயங்குவது என்பதால், அரசின் தலையீடு இதுவரை மிக்க் குறைவாகவே இருந்துவந்தது. மேலும் இத்தகைய பொருளாதாரச் சுழறஅசி நிலை அமெரிக்காவுக்கு புதிதும் அல்ல.
ஆனால் 1940-களில் நடந்த உலகப் பெருமந்தத்துக்கு இணையான நெருக்கடி இப்போது ஏற்பட்டுள்ளதால், தங்கள் பொருளாதாரத்தின் அடிப்படைச் சித்தாந்தத்தையே ஓரளவு மாற்றிக் கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளது அமெரிக்கா. தொழில்துறை மற்றும் நிதித்துறையை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகள் அரசின் சார்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ரவுடிகளுக்கு வெடிகுண்டு சப்ளை செய்த சாமியார் கைது
திருச்சி உறையூர் தொழில் அதிபர் பாலகிருஷ்ணன், புத்தூர் ஒட்டல் ஊழியர் கருணாகரன், உறையூர் ஜவுளி தொழில் அதிபர் ஆதிமூலம் ஆகியோரை கடந்த சில திங்களுக்கு முன்பு பிரபல ரவுடிகள் கண்ணாடி ஆனந்த், எடமலைப்பட்டி புதூர் பிரதாப், சறுக்குப்பாறை ஆனந்த், ஒத்தக்கை வினோத் ஆகியோர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியது.
தகவல் அறிந்த போலீசார் துரித கதியில் செயல்பட்டு அந்த ரவுடிகளை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், வெடி பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
போலீசார் கண்களில் இருந்து தப்பிச் சென்ற மணச்சநல்லூர் குணாவை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் ரவுடி கும்பல்களுக்கு வெடி குண்டு தயாரித்துக் கொடுத்த மணச்சநல்லூர் அண்ணாநகர் கீழ காமாட்சித் தெரு சாமியர் அழுக்கு சித்தன் என்கின்ற சரவணனை திருச்சி கோட்டை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் ரவுடிகளுடன் ஏற்பட்ட தொடர்பு, வெடி குண்டு தயாரிப்பு பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
"இஸ்லாமிய கேள்வி பதில
"இஸ்லாமிய கேள்வி பதில்" - 1 new article
"ஸல்" "அலைஹி" உங்களுக்கும் தான்.
முஹம்மத் என்ற பெயரையோ அல்லது நபி என்பதையோ எழுதும் போது பக்கத்தில் ஸல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். ஸல் என்பது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதன் சுருக்கம். அல்லாஹ் அவருக்கு அருளும் ஈடேற்றமும் அளிப்பானாக என்பது இதன் பொருள்.
பிற நபிமார்களின் பெயர்களை எழுதும் போது அலை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அலை என்பது அலைஹிஸ் ஸலாம் அல்லது அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் என்பதன் சுருக்கம் இவருக்கு அருளும் சாந்தியும் ஏற்படட்டுமாக என்பது இதன் பொருள்.
நபித்தோழர்களைப் பற்றி எழுதும் போது ரலி என்று வரும். ரலி என்பது ரலியல்லாஹு அன்ஹு (ஆண்பால்) அல்லது ரலியல்லாஹு அன்ஹா (பெண்பால்) என்பதன் சுருக்கம். இவரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக என்பது இதன் பொருள்.
ரஹ் என்பது ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்பதன் சுருக்கம். அல்லாஹ்வின் அருள் இவருக்கு ஏற்படட்டுமாக என்பது இதன் பொருள்.
சுருக்கமாக இப்படி எழுதுவது சரியல்ல என்றாலும் எழுதுபவர்கள் அதே பழக்கத்திற்கு ஆட்பட்டு விட்டார்கள். ஆனாலும் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும்
எழுதும் போது சுருக்கத்திற்காக இப்படி எழுதினாலும் வாசிக்கும் போது முழுமையாக வாசிக்க வேண்டும்.
குறிப்பிட்ட இந்த நான்கு வகையான சொற்களையும் குறிப்பிட்ட சிலருக்குதான் பயன்படுத்த வேண்டும் என்ற எந்த சட்டமும் இல்லை. பொதுவாக அனைத்து முஸ்லிம்களுக்கும் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.
இறைத்தூதர் முஹம்மத் அவர்களுக்கு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது மாதிரியே இதர நபிமார்களுக்கும் இதர முஸ்லிம்களுக்கும் கூட இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம். வார்த்தைகளின் அர்த்தத்தைப் பார்த்தாலே இது புரியும் என்றாலும் பிறர் தப்புப்பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதால் கூடுதலாக விளக்குவோம்.
ஸலவாத் எனும் அருளை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்காக கேட்க வேண்டும் என்று 33:56 வசனம் கூறுகின்றது.
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள் (அல்குர்ஆன் 33:56)
இந்த வசனம் பற்றி பஷீர் இப்னு ஸஃது (ரலி) இறைத்தூதரிடம் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! இறைவன் உங்களுக்காக ஸலவாத் சொல்லுமாறு கூறுகின்றானே நாங்கள் எவ்வாறு ஸலவாத் கூறுவது என்று கேட்டார்கள் அதற்கு அல்லாஹ்வின் தூதர் 'அல்லாஹும்ம ஸல்லி..... என்ற ஸலவாத்தைக் கற்றுக் கொடுத்த விட்டு உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது போன்று ஸலாம் கூறுங்கள் என்றார்கள். (அபூ மஸ்வூத் (ரலி) முஸ்லிம்)
நபிக்காக ஸலவாத் கூற வேண்டும் என்று இறைவன் கூறினாலும் நபி(ஸல்) கற்றுக் கொடுத்த ஸலவாத் தொழகையின் இருப்பிற்குரிய ஸலவாத் என்றே நபித்தோழர்கள் எடுத்துக் கொண்டார்கள். ஏனெனில் நபி(ஸல்) தொழுகை இருப்பில் ஓதுமாறு இதைக் கற்றுக் கொடுத்ததாகவும் அறிவிப்புகள் உள்ளன.
உங்களில் ஒருவர் தொழுதால் இறைவனை மகிமைப்படுத்தி போற்றி புகழ்ந்து பின்னர் நபிக்காக ஸலவாத் கூறி பின்னர் தன் தேவைகளைக் கேட்கட்டும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (ஃபளாலா இப்னு உபைத்(ரலி) நஸயி திர்மிதி)
என்னைப் பற்றி நினைவுக் கூறும்போது ஸலவாத் கூறுங்கள். ஸலவாத் கூறாதவன் கஞ்சன் என்றெல்லாம் அறிவிப்புகள் வருகின்றன (இப்னுமாஜா)
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நபித்தோழர்கள் நபியவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதை சேர்த்தே பயன்படுத்தி வந்தார்கள்.
எனவே நபியைப் பற்றிக் குறிப்பிடும் போது இறையருளைப் பெற்றுக் கொடுக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தலாம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்ற வார்த்தையும் பொருத்தமானதுதான் என்றாலும் காலாகாலமாக ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற வார்த்தை நிலைப் பெற்று விட்டது.
நபிக்காக ஸலவாத் கூறுவது இறைவன் இட்ட கட்டளை என்பதால் முஸ்லிம்கள் மீது அது கடமையாகும். ஆனாலும் இந்த விஷயத்தில் முஸ்லிம்கள் அலட்சியமாக இருந்து விடுகிறார்கள். இறைவன் நபிக்காக அருள் புரிகிறான். வானவர்கள் அருளை வேண்டுகிறார்கள். இறைநம்பிக்கையார்களே நீங்களும் இந்த தூதருக்கு ஸலாம் சொல்லி அவருக்காக ஸலவாத் கூறுங்கள் என்ற வசனம் ஜும்ஆ மேடைகளில் தவறாமல் நினைவுக் கூறப்படும். அந்த வசனத்தின் அர்த்தம் புரியாதவர்களும் அர்த்தம் புரிந்தவர்களும் கூட அதை பெரிதாக எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. இறைவனே நேரடியாக இந்தக் கட்டளையை இடுவதால் நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது.
இதர நபிமார்கள் அனைவரையும் குறிப்பிடும் போது அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்று கூறும் மரபு நீண்ட நெடுங்காலமாக நீடித்து வருகின்றது. முஹம்மத் (ஸல்) அவர்களைத் தவிர்த்து பிற நபிமார்களுக்கு எந்த அடைமொழியும் (வாழ்த்தும்) சேர்ந்து வர வேண்டும் என்ற எந்தக் கட்டளையும் குர்ஆனில் இல்லை.
இறை நம்பிக்கையாளர்களே இந்த நபிக்காக பிரார்த்தித்து ஸலாமும் கூறுங்கள் என்ற இறைக் கட்டளையை நாம் அறிந்தோம். இதர நபிமார்களுக்கு இத்தகைய கட்டளையை இறைவன் இடவில்லை. இதர நபிமார்களைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது அந்தந்த நபிமார்களின் பெயர்களை மட்டும் தான் குறிப்பிட்டுள்ளார்களேத் தவிர அவர்களின் பெயர்களோடு அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்ற அடைமொழியை குறிப்பிட்டதில்லை.
நல்லப் பண்பின் அடையாளமாக இத்தகைய அடைமொழிகள் இந்த உம்மத்தில் நீடித்து நிற்கின்றது.
ஆனாலும் இந்த அடைமொழிகளை நபிமார்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்ற விதியும் இல்லை. இறை நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் இத்தகைய அடைமொழியை பயன்படுத்தினாலும் அதை தவறென்று சொல்லி தடுக்கும் எந்த ஆதாரமும் இல்லை.
அனுமதிக்கும் ஆதாரத்தைப் பார்ப்போம்.
هُوَ الَّذِي يُصَلِّي عَلَيْكُمْ وَمَلَائِكَتُهُ لِيُخْرِجَكُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَكَانَ بِالْمُؤْمِنِينَ رَحِيمًا
(இறை நம்பிக்கையாளர்களே) இறைவன் உங்களுக்காக (ஸலவாத்) அருள்புரிகிறான். அவனுடைய வானவர்களும் (உங்களுக்காக) பிரார்த்திக்கிறார்கள் (அல்குர்ஆன் 33:43)
நபி(ஸல்) அவர்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள அதே வார்த்தைகள் இங்கும் பிற முஃமின்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இறை நம்பிக்கையாளர்களுக்கு இறைவன் அருள் புரிகிறான் வானவர்களும் அருளை வேண்டுகிறார்கள் என்று.
ஸல்லல்லாஹு அலைஹி என்றால் அல்லாஹ் அவருக்கு ஸலவாத் அருள் புரிகிறான் என்பது பொருள். அனைவருக்குமே அல்லாஹ்வின் ஸலவாத் உண்டு என்பதால் ஸல்லல்லாஹு அலைஹி என்பதை அனைவருக்குமே பயன்படுத்தலாம். வஸல்லம் (அல்லாஹ் அவருக்கு (சாந்தி) வழங்கட்டும்) என்பதையும் அனைவருக்கும் பயன்படுத்தலாம். அல்லாஹ்வின் ஸலாம் அனைவருக்கும் இருப்பதாலேயே ஒருவருக்கொருவர் ஸலாம் கூறுகிறோம். கூறவேண்டுமெனறு முஹம்மத் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அல்லாஹ் அவருக்கு ஸலவாத்தும், ஸலாமும் வழங்கட்டும்'' என்பது ஸல்... என்பதன் பொருள். இவருக்கு ஸலவாத்தும் ஸலாமும் ஏற்படட்டும் என்பது அலை என்பதன் பொருள். அல்லாஹ் என்பது இங்கே கூறப்படவில்லை என்பதைத் தவிர இரண்டும் ஒரே கருத்தைக் கூறும் இரண்டு வார்த்தைகள் தாம்.
இதிலிருந்து பிரார்த்திக்கும் எண்ணத்தில் பிற நம்பிக்கையாளர்களுக்கு இத்தகைய அடைமொழியை இட்டால் அதை தடுக்க முடியாது.
ஆனாலும் ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்
நபிமார்களுக்கென்று அடைமொழியாகி விட்ட ஒரு வார்த்தையை பிறருக்கு பயன்படுத்தும் போது போலி நபி போன்ற குழப்ப நிலையும் வீண்மனக் கஷ்டங்களும் தோன்றும். சர்ச்சைகளும் அவதூறுகளும் கிளம்பும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
(ரலி)
وَالسَّابِقُونَ الأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللّهُ عَنْهُمْ وَرَضُواْ عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا
அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதி மொழி எடுத்த போது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். (அல் குர்ஆன் 48:18)
முதல் வசனத்தில் ரளியல்லாஹு அன்ஹும் (அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்) ரளு அன்ஹு (அவனை அவர்கள் பொருந்திக் கொண்டார்கள்)
இரண்டாவது வசனத்தில் ரளியல்லாஹு அனில் முஃமினீன் (முஃமின்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான்) என்று கூறப்பட்டுள்ளது. முஃமின்கள் என்று இங்கு (இந்த இடத்தில்) கூறப்பட்டுள்ளது நபித்தோழர்களைத் தான் ஏனெனில் அவர்கள் தான் நபியுடன் மரத்தடியில் இருந்தவர்கள்.
لَا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءهُمْ أَوْ أَبْنَاءهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ أُوْلَئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُم بِرُوحٍ مِّنْهُ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ أُوْلَئِكَ حِزْبُ اللَّهِ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ
قُلْ أَؤُنَبِّئُكُم بِخَيْرٍ مِّن ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِندَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَأَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَرِضْوَانٌ مِّنَ اللّهِ وَاللّهُ بَصِيرٌ بِالْعِبَادِ
جَزَاؤُهُمْ عِندَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُ
அவர்களுடைய நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி, திருப்தி அடைவான், அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்; தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும். (அல்குர்ஆன் 98:8)
மற்ற நல்லடியார்கள் அனைவருக்கும் ரலி என்பதையும் அதிலிருந்து பிறந்த ரில்வான் என்பதையும் இவ்வசனங்களில் இறைவன் பயன்படுத்தியுள்ளான். இதை நபிமார்களுக்கும் நபித்தோழர்களுக்கும், மற்ற முஸ்லிம்களுக்கும் பயன்படுத்தலாம். மார்க்க அடிப்படையில் இதைத் தடுக்க முடியாது. ஆனாலும் நாம் மேற் கூறிய அதே அடிப்படையில் பிறருக்கு ரளி என்பதை பயன்படுத்தும் போது அப்படி ஒரு நபித்தோழர் இருந்தாரோ... என்ற சந்தேகம் வரலாம். இத்தகைய சந்தேகங்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது.
ரஹ்மதுல்லாஹி அலைஹி
அல்லாஹ் அவருக்கு ரஹ்மத் செய்யட்டும் என்பது இதன் பொருள். அல்லாஹ்வின் ரஹ்மத்தை யாருக்காகவும் கேட்கலாம். கேட்க வேண்டும். காலம் சென்ற மகான்கள் என்று நம்பப்படுபவர்களுக்குத் தான் இதைப் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. அல்லாஹ்வின் ரஹ்மத் அனைவருக்கும் பொதுவானதாக என்பதற்கு நூற்றுக்கணக்கான வசனங்கள் சான்றுகளாக உள்ளன. அது ஒரு பிரார்த்தனை என்பதாலும், இதை பயன்படுத்துவதில் எத்தகைய குழப்பமும் ஏற்படவாய்ப்பில்லை என்பதாலும் இதை பயன்படுத்தலாம்
மேற்கொண்டு விளக்கம் தேவைப்படுவோர் எழுதவும்.--
பம்பாய் கலவரத்திற்கு மூல காரணகர்த்தா இந்திய பயங்கரவாதி மோடி.
To:
Monday, December 22, 2008
advani matter
அத்வானியை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க வேண்டும் பாகிஸ்தான் கோரிக்கை தாவூதுக்கு அத்வானியை கேட்கும் லஷ்கர்!! சனிக்கிழமை, டிசம்பர் 6, 2008, இஸ்லாமாபாத்: தாவூத் இப்ராகிமை ஒப்படைக்கக் கோரும் இந்தியா முதலில் அத்வானி உள்ளிட்டோரை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க வேண்டும் என லஷ்கர் இ தொய்பா அமைப்பும், சில பாகிஸ்தான் அரசியல்வாதிகளும் குதர்க்க கோரிக்கை விடுத்துள்ளனர். பிரதமர் யூசுப் ரஸா கிலானி தலைமையில் இஸ்லாமாபாத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்தான் இந்தக் கோரிக்கையை அரசியல்வாதிகள் சிலர் வைத்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட சில அரசியல் கட்சித் தலைவர்கள், தாவூத் இப்ராகிம், லஷ்கர் இ தொய்பா தலைவர், ஜெய்ஷ் இ முகம்மது ஆகிய அமைப்புகளின் தலைவர்களை ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கோருவது போல, எல்.கே.அத்வானி போன்றோரை நாமும் கேட்க வேண்டும். இவர்கள் பாகிஸ்தானின் மோஸ்ட் வான்ட்டட் பட்டியலில் உள்ளவர்கள். இவர்களை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க இந்தியா முன்வர வேண்டும் என்று கோரினார்களாம்.
|
sivakasi matter
சிவகாசியில் விஸ்வ இந்து பரிஷத் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை |
டிசம்பர் 06,2008,00:00 IST |
|
mumbai attack
|
tammamil haj
ஹஜ் பணிவிடையாளர்களுக்கு தம்மாமில் சிறப்பான வரவேற்பு
உலகமெங்கும் இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக வரும் ஹாஜிகளுக்கு பணிவிடை செய்வதற்கு வேண்டி இந்தியா ஃபிரடெர்னிடி பாரம் சார்பாக பணிவிடையாளர்கள் செல்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய செயலை செய்கின்றனர். அதுபோலவே இந்த ஆண்டும் சுமார் 900 பேர் ஹாஜிகளுக்கு உதவுவதற்காக வேண்டி மக்காவின் அனைத்து பகுதிகளிலும் அதிலும் குறிப்பாக மினா பகுதியிலும் பணியில் ஈடுபட்டனர்.
மொழி, நிறம், கலாச்சாரம் முதலிய எல்லா விதத்திலும் வேறுபட்டு காணப்படும் ஹாஜிகள் அனைவரும் ஒரே நிற உடையணிந்து இறைவனுக்காக ஹஜ்ஜை நிறைவேற்ற வருகின்றனர்.
புதிய இடம், லட்சக்கணக்கான மக்கள், தள்ளாமை போன்ற பலவித காரணங்களினால் பல நேரங்களில் அவர்கள் தங்களது உடன் வந்தவர்களை விட்டு பிரிந்து என்ன செய்வதென்றே தெரியாமல் தத்தளிக்கும் சூழலை ஹஜ் சென்றவர்கள் அனுபவித்திருப்பார்கள்.
இத்தகைய சூழலில் அவர்களுக்கு உதவுவதற்காக வேண்டியே தன்னார்வத்துடன் ஆண்டு தோறும் இந்தியா ஃபிரடெர்னிடி ஃபாரம் சார்பாக அதன் தொண்டர்கள் தங்களது வேலை, ஓய்வு, பொருளாதாரம் அனைத்தையும் மறந்து முழுமையாக இறைவனின் விருந்தாளிகளுக்கு உதவி செய்ய செல்கின்றனர். அந்த அடிப்படையில் இந்த வருடம் சவுதி அரேபியா முழுவதிலிருந்தும் சுமார் 900 பேர் கலந்து கொண்டனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள இதன் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இந்த பணியை செய்கின்றனர்.
(பணிகளை குறித்து வகுப்பு நடத்தப்படுகிறது)
(சில புகைப்படங்கள்)
(வாலண்டியர்கள் தொழுகை நடத்துகின்றனர்)
அதில் 54 பேர் கிழக்கு மாகாணம் தம்மாம் மற்றும் ஜூபைல் பகுதியில் இருந்து சென்றனர். இவர்கள் திரும்பி வரும்போது இந்தியா ஃபிரடெர்னிடி பாரம் - தம்மாம் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹைதராபாத் அப்துல் வஹீத் தலைமையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஹம்மது பைசல், கேரளாவின் அப்துல் ஸலாம், பீகார் ஸஹதாப், கர்நாடகா ஷரீஃப் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
(வரவேற்பு நிகழ்ச்சியில்)
ஹஜ் வாலண்டியர்கள் தங்களது அனுபவங்களை பற்றி குறிப்பிடும் போது ஹாஜிகள் பலர் தங்களது உறவினர்களை பிரிந்து அழுத போது தாங்கள் அவர்களுக்கு உதவியதையும், உடல்நிலை சரியில்லாதவர்களை மருத்துவமனைக்கு எடுத்து சென்றது போன்ற பல அனுபவங்களை கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டார்கள். வயதானவர்கள் கொண்டு வந்திருந்த மூட்டை முடிச்சுகளை தூக்கிக் கொண்டு அவர்களின் கைகளை பிடித்து தங்கியிருக்கும் டெண்ட்-ஐ தேடி கொண்டு போய் விட்டபோதும்,உறவுகளை பிரிந்தவர்களை மீண்டும் அவர்களிடம் கொண்டு போய் சேர்த்த போது அவர்கள் ஆனந்த கண்ணீர் வடித்ததையும்,இருகரம் ஏந்தி இவர்களுக்காக பிரார்த்தித்ததையும் மகிழ்ச்சியுடன் விவரித்தார்கள்.
(தம்மாம் வாலண்டியர்களில் சிலர்)
சவுதி அரசின் அலுவலர்களும், மருத்துவர்களும் இவர்களது தன்னார்வ பணியை கண்டு ஆச்சரியம் தாளமுடியாமல் ஒவ்வொருவரையும் அழைத்து பாராட்டியதோடு நில்லாமல் ஜூஸ், பழம், கேக் போன்றவற்றை கொடுத்து மகிழ்ந்தார்கள். தங்களது இருப்பிடங்களை சென்றடைய வழி தெரியாமல் சவுதி அரேபியாவின் காவல்துறையிடம் சென்றவர்களை காவல்காரர்களே கையை பிடித்து கொண்டு வந்து நமது சகோதரர்களிடம் ஒப்படைத்து உதவுமாறு கேட்டுக்கொண்டார்கள்.
இவற்றையெல்லாம் கேட்ட மற்றவர்களுக்கு தாங்கள் இந்த பணியில் பங்கெடுத்து கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்பட்டதையும் காணமுடிந்தது.
வரும் வருடங்களில் கண்டிப்பாக மீண்டும் செல்வதற்கு உறுதி பூண்டிருப்பதாகவும், அதற்காக இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் கூறினார்கள். சரியான நேரத்திற்கு உணவு, போதிய உறக்கம் இவையெல்லாம் கிடைக்காவிட்டாலும் ஹாஜிகளுக்கு உதவுவதற்கு கிடைத்த வாய்ப்பே இறைவனின் மிகப்பெரிய அருட்கொடையாகும் என ஆனந்தத்துடன் குறிப்பிட்டார்கள்.
அல்லாஹ் இவர்களது பணியை ஏற்று நிரம்ப நன்மைகளை தருவதற்கு பிரார்த்திப்போமாக!