அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, December 22, 2008

tammamil haj





ஹஜ் பணிவிடையாளர்களுக்கு தம்மாமில் சிறப்பான வரவேற்பு

 

உலகமெங்கும் இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக வரும் ஹாஜிகளுக்கு பணிவிடை செய்வதற்கு வேண்டி இந்தியா ஃபிரடெர்னிடி பாரம் சார்பாக பணிவிடையாளர்கள் செல்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய செயலை செய்கின்றனர். அதுபோலவே இந்த ஆண்டும் சுமார் 900 பேர் ஹாஜிகளுக்கு உதவுவதற்காக வேண்டி மக்காவின் அனைத்து பகுதிகளிலும் அதிலும் குறிப்பாக மினா பகுதியிலும் பணியில் ஈடுபட்டனர்.

 

மொழிநிறம்கலாச்சாரம் முதலிய எல்லா விதத்திலும் வேறுபட்டு காணப்படும் ஹாஜிகள் அனைவரும் ஒரே நிற உடையணிந்து இறைவனுக்காக ஹஜ்ஜை நிறைவேற்ற வருகின்றனர்.

 

புதிய இடம்லட்சக்கணக்கான மக்கள்தள்ளாமை போன்ற பலவித காரணங்களினால் பல நேரங்களில் அவர்கள் தங்களது உடன் வந்தவர்களை விட்டு பிரிந்து என்ன செய்வதென்றே தெரியாமல் தத்தளிக்கும் சூழலை ஹஜ் சென்றவர்கள் அனுபவித்திருப்பார்கள்.

 

இத்தகைய சூழலில் அவர்களுக்கு உதவுவதற்காக வேண்டியே தன்னார்வத்துடன் ஆண்டு தோறும் இந்தியா ஃபிரடெர்னிடி ஃபாரம் சார்பாக அதன் தொண்டர்கள் தங்களது வேலைஓய்வுபொருளாதாரம் அனைத்தையும் மறந்து முழுமையாக இறைவனின் விருந்தாளிகளுக்கு உதவி செய்ய செல்கின்றனர். அந்த அடிப்படையில் இந்த வருடம் சவுதி அரேபியா முழுவதிலிருந்தும் சுமார் 900 பேர் கலந்து கொண்டனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள இதன் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இந்த பணியை செய்கின்றனர்.

 

(பணிகளை குறித்து வகுப்பு நடத்தப்படுகிறது)

 

 

 

 

 

(சில புகைப்படங்கள்)

 

(வாலண்டியர்கள் தொழுகை நடத்துகின்றனர்)

 

அதில் 54 பேர் கிழக்கு மாகாணம் தம்மாம் மற்றும் ஜூபைல் பகுதியில் இருந்து சென்றனர். இவர்கள் திரும்பி வரும்போது இந்தியா ஃபிரடெர்னிடி பாரம் - தம்மாம் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹைதராபாத் அப்துல் வஹீத் தலைமையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஹம்மது பைசல்கேரளாவின் அப்துல் ஸலாம்பீகார் ஸஹதாப்கர்நாடகா ஷரீஃப் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

 

(வரவேற்பு நிகழ்ச்சியில்)

 

ஹஜ் வாலண்டியர்கள் தங்களது அனுபவங்களை பற்றி குறிப்பிடும் போது ஹாஜிகள் பலர் தங்களது உறவினர்களை பிரிந்து அழுத போது தாங்கள் அவர்களுக்கு உதவியதையும்உடல்நிலை சரியில்லாதவர்களை மருத்துவமனைக்கு எடுத்து சென்றது போன்ற பல அனுபவங்களை கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டார்கள். வயதானவர்கள் கொண்டு வந்திருந்த மூட்டை முடிச்சுகளை தூக்கிக் கொண்டு அவர்களின் கைகளை பிடித்து தங்கியிருக்கும் டெண்ட்-ஐ தேடி கொண்டு போய் விட்டபோதும்,உறவுகளை பிரிந்தவர்களை மீண்டும் அவர்களிடம் கொண்டு போய் சேர்த்த போது அவர்கள் ஆனந்த கண்ணீர் வடித்ததையும்,இருகரம் ஏந்தி இவர்களுக்காக பிரார்த்தித்ததையும் மகிழ்ச்சியுடன் விவரித்தார்கள்.

 

(தம்மாம் வாலண்டியர்களில் சிலர்)

 

சவுதி அரசின் அலுவலர்களும்மருத்துவர்களும் இவர்களது தன்னார்வ பணியை கண்டு ஆச்சரியம் தாளமுடியாமல் ஒவ்வொருவரையும் அழைத்து பாராட்டியதோடு நில்லாமல் ஜூஸ்பழம்கேக் போன்றவற்றை கொடுத்து மகிழ்ந்தார்கள். தங்களது இருப்பிடங்களை சென்றடைய வழி தெரியாமல் சவுதி அரேபியாவின் காவல்துறையிடம் சென்றவர்களை காவல்காரர்களே கையை பிடித்து கொண்டு வந்து நமது சகோதரர்களிடம் ஒப்படைத்து உதவுமாறு கேட்டுக்கொண்டார்கள்.

 

இவற்றையெல்லாம் கேட்ட மற்றவர்களுக்கு தாங்கள் இந்த பணியில் பங்கெடுத்து கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்பட்டதையும் காணமுடிந்தது.

 

வரும் வருடங்களில் கண்டிப்பாக மீண்டும் செல்வதற்கு உறுதி பூண்டிருப்பதாகவும்அதற்காக இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் கூறினார்கள். சரியான நேரத்திற்கு உணவுபோதிய உறக்கம் இவையெல்லாம் கிடைக்காவிட்டாலும் ஹாஜிகளுக்கு உதவுவதற்கு கிடைத்த வாய்ப்பே இறைவனின் மிகப்பெரிய அருட்கொடையாகும் என ஆனந்தத்துடன் குறிப்பிட்டார்கள்.

 

அல்லாஹ் இவர்களது பணியை ஏற்று நிரம்ப நன்மைகளை தருவதற்கு பிரார்த்திப்போமாக!

 

 

 

 

 

 


No comments: