அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, December 17, 2008

america news

அமெரிக்கா: நவம்பரில் 5.3 லட்சம் பேர் வேலையிழப்பு
வாஷிங்டன்: அமெரி்க்காவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 6.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 5.3 லட்சம் அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார மந்தத்தால் பல்வேறு நிறுவனங்களும் ஆட் குறைப்பு, வேலை நேரக் குறைப்பு மற்றும் நிறுவனங்களை மூடுவது, ஒன்றுடன் ஒன்று இணைவது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

இந்தக் காரணங்களால் ஒரே மாதத்தில் 5.3 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதனால் அந்த நாட்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 6.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகமான எண்ணிக்கையாகும்.

இந்த ஒரு வாரத்தில் மட்டும் நிறுவனங்களைச் சேர்ந்த 20,000 பணியாளர்களின் வேலைகள் பறிக்கப்பட்டுள்ளன.
ஏடி அண்ட் டி, டுபாண்ட் எண்ட் வியாகாம், சுவிஸ் வங்கியின் கிரெடிட் ஸ்விஸ் க்ரூப் போன்ற பிரபல நிறுவனங்கள் இந்த வேலைக் குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

டல்லாஸில் இயங்கும் ஏடி அண்ட் டி நிறுவனம் 12,000 பணியாளர்களையும், டுபாண்ட் நிறுவனம் 2,500 பேரையும் நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளன. நியூயார்க்கின் வியாகாம் 850 ஊழியர்களை நீக்கியுள்ளது.

சுவிஸ் வங்கி நீக்கியுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை 5,300.
thatstamil.com

No comments: