அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, November 19, 2009

இன்றையச் சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும்


இன்றைய உலகம் சந்திக்கும் முதன்மையான சிக்கல்கள் யாவை?

இக்கேள்வியை இன்று யரிடம் கேட்டாலும் - அவர் சமூக ஆர்வலராக இருந்தாலும் சரி, பாமரனாக இருந்தாலும் சரி, அறிவில் சிறந்த சான்றோர்களாய் இருந்தாலும் சரி - பதில் ஒன்று தான்.

வன்முறை, வறுமை, ஒழுக்கச் சீர்கேடுகள், போதை - இது தான் அந்தப் பதில்.

இன்று எவ்வகைச் சிக்கல்களானாலும் அவை மூன்று பரிமாணங்களைக் கொண்டுள்ளன:

1. உளவியல் சார்ந்தது.
2. சமூகம் சார்ந்தது.
3. உலகளாவியது.
அதாவது, தனிமனிதனின் உள்ளம் சார்ந்த பலப் பண்புகள்தாம் இறுதியில் உலகளாவியச் சிக்கல்களாய் வெடிக்கின்றன.

அதனால்தான் திருக்குர்ஆன் 'உள்ளம்' தொடங்கி 'உலகம்' வரை நடைமுறைப்படுத்தும் வகையில் தீர்வுகளைத் தருகின்றது.

எடுத்துக்காட்டாக, மனிதனின் உள்ளத்தில் தோன்றும் பழிவாங்கும் பண்பே இறுதியில் வன்முறையாக - தீவிரவாதமாக உலகைப் பாதிக்கிறது. இது போன்றுதான் இதரச் சிக்கல்களும்!

1. தீவிரவாதம்: தீர்வு என்ன?

திருக்குர்ஆன் இந்தச் சிக்கலுக்கான உளவியல் காரணங்களை முதலில் தடுக்கின்றது. அநீதி இழைத்தலும் பழிவாங்குதலும்தான் தீவிரவாதம் தோன்ற அடிப்படைக் காரணங்கள். ஆகவே, திருக்குர்ஆன் நீதியை நிலைநாட்டும்படியும் அநீதி இழைக்காமல் வாழும்படியும் ஆணையிடுகிறது.

"இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்காக வாய்மையில் நிலைத்திருப்போராயும் நீதிக்குச் சான்று வழங்குவோராயும் திகழுங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்து விடக் கூடாது. நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானது" (குர்ஆன் 5:8).

"நீங்கள் எதைப் பேசும்போதும் நீதியுடன் பேசுங்கள்; உங்களின் நெருங்கிய உறவினர் பற்றிய விவகாரமாயினும் சரியே!" (குர்ஆன் 6:15).

"திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்தும் படியும் நன்மை செய்யும்படியும் உறவினர்களுக்கு ஈந்துதவும்படியும் கட்டளையிடுகிறான். மேலும், மானக்கேடான, வெறுக்கத்தக்க, அக்கிரமமான செயல்களை விலக்குகிறான்.." (குர்ஆன் 16:90).

நீதி செலுத்துவதைக் கடமையாகக் கூறும் குர்ஆன், அநீதி இழைக்கப் பட்டவனுடைய நியாயமான உணர்வுகளுக்கும் மருந்திடுகிறது.

பொதுவாக அநீதி இழைக்கப் பட்டவனுக்கு நீதி கிடைக்காதபோது அவனுள் பழிவாங்கும் உணர்வு எழுவது இயற்கை. ஆனால் தண்டனை அளிக்கும் அதிகாரத்தை இஸ்லாம் அரசுக்குத்தான் அளித்துள்ளது. தனிமனிதன் பழிவாங்குவதை -அதாவது சட்டத்தைக் கையில் எடுப்பதை- இஸ்லாம் அனுமதிக்கவில்லை. தனிமனிதன் பழிவாங்குவதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. மாறாக, மன்னிக்கும் பண்பை ஏவுகிறது.

"..அவர்கள் கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான்" (குர்ஆன் 3:134).

"நன்மையும் தீமையும் சமமாக மாட்டா. நீர் நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்ளும். அவ்வாறாயின் உம்முடைய கொடிய பகைவனும் உற்ற நண்பனாய் மாறி விடுவான்" (குர்ஆன் 41:34).

இன்று பயங்கரவாதம் உருவாவதற்கு முதன்மைக் காரணம் குற்றங்களுக்குத் தண்டனை கிடைக்காததே ஆகும். இஸ்லாமிய அரசு தண்டனைச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கண்டிப்பாக இருக்கும்.

"...இறைநம்பிக்கையாளர்களே, கொலைக்குப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது" (குர்ஆன் 2:178). இது அரசுக்கு குர்ஆன் இடும் கட்டளை.

"எவர்கள் தம்மீது கொடுமை இழைக்கப் பட்டபின் பழி வாங்குகிறார்களோ அவர்கள் மீது ஆட்சேபணை கூற இயலாது" (குர்ஆன் 42:41).

எனவே அநீதி இழைக்கப்பட்டவன் அரசை அணுகித் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஏற்ற அளவு பழி தீர்த்துக் கொள்ள அனுமதி அளிக்கிறது குர்ஆன். இதனால் அவன் உள்ளத்தில் பழிவாங்கும் எண்ணம் அழிந்து விடுகிறது. அதே சமயம் தீங்கிழைத்தவனை மன்னிக்கும் அதிகாரத்தையும அவனுக்குத் திருக்குர்ஆன் வழங்குகிறது.

"கொலை செய்தவனுக்கு அவனுடைய சகோதரனால் (அதாவது கொல்லப்பட்ட உறவினரால்) சலுகை அளிக்கப்பட்டால் பிறகு நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும் உயிரீட்டுத் தொகையை நேர்மையான முறையில் அவன் வழங்கிட வேண்டும். இது உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையுமாகும்" (குர்ஆன் 2:178).

"ஆயினும் யார் பொறுமையை மேற்கொண்டு மன்னித்து விடுகிறார்களோ அவர்களின் இந்தச் செயல் திண்ணமாக உறுதி மிக்க (வீரச்) செயலைச் சேர்ந்ததாகும்" (குர்ஆன் 42:43).

மன்னிப்பது தான் வீரமிக்கது என்று குர்ஆன் கூறுகிறது.

இவ்வாறு அநீதிக்கு நீதமான முறையில் தீர்வு கண்டு விட்டால் வன்முறை எனும் எண்ணமே அடியோடு நீங்கி விடும் அல்லவா?

2. வறுமை: தீர்வு என்ன?

நவநாகரீக உலகில் வறுமையா? தொலைக்காட்சிப் பெட்டியின்முன் வெட்டியாய்ப் பொழுதைக் கழிக்கும் நமக்கு வறுமை பற்றிய சிந்தனையா? ஆயினும் உலகில் பெரும்பகுதி இன்று வறுமையில் வாடுகிறது என்பது உண்மை. ஏன், வளர்ந்த நாடு என்று அழைக்கப்படும் அமெரிக்காவில்கூட வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வறுமைக்கான காரணங்களாகத் திருக்குர்ஆன் இரண்டு முக்கிய விஷயங்களைக் கூறுகிறது:

அ) தவறான பொருள் பங்கீடு
ஆ) வட்டியும் பதுக்கலும்.
அ) செல்வம் உங்களிலுள்ள செல்வர்களிடையே மட்டும் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது (59:7).

ஆனால் இன்று வளர்ந்த நாடுகள் செல்வர்களை மேலும் செல்வர்களாக்கிக் கொண்டிருக்கின்றன. ஏழைகளை மேலும் ஏழைகள் ஆக்கிக் கொண்டிருக்கின்றன. அண்மைக்காலப் புள்ளி விவரங்கள் இதனை மெய்ப்பிக்கின்றன. உலகின் 0.13 விழுக்காடு மக்கள் 25 விழுக்காடு உலக வளங்களை அனுபவிக்கின்றனர் (பார்க்க: குளோபல் இஷ்யு -2004).

ஆ. வட்டி: இன்று உலக நாடுகளின் கடன் சுமையை ஆண்டுதோறும் அதிகரிக்கச் செய்வதில் வட்டியின் பங்கு முதன்மையானதாகும். வட்டிக் கொடுமையைப் பற்றி நாம் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. அனைவரும் அறிந்ததே.

"இறைவன் வணிகத்தை ஆகுமானதாக்கி வட்டியைத் தடுத்து (ஹராமாக்கி) விட்டான்" (குர்ஆன் 2:215).

"மக்களுடைய பொருள்களுடன் கலந்து பெருக வேண்டும் என்பதற்காக நீங்கள் வட்டிக்கு விடும் பணம் அல்லாஹ்விடத்தில் பெருகுவதில்லை" (குர்ஆன் 30:39).

"உங்களில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்" (குர்ஆன் 2:188).

மேற்கூறிய வசனங்களைப் பொருளாதார விதிகளாக மனிதர்களுக்குக் குர்ஆன் வழங்குகிறது. மேலும் செல்வம் என்பது இறைவன் வழங்கிய அமானிதம் எனும் அடிப்படையை இஸ்லாம் வலியுறுத்துகிறது. எனவே இறைவன் கூறியவாறு செல்வத்தைச் செலவு செய்யப் பணிக்கிறது.

* "உங்கள் செல்வத்திலிருந்து வறியவர்களுக்கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் பங்கு உண்டு" (குர்ஆன் 9:60).

* ஒவ்வோர் ஆண்டும் செல்வர்கள் தங்களின் செல்வத்திலிருந்து 2.5 விழுக்காடு தொகையை ஜகாத்தாக (கட்டாய அறமாக) ஏழை எளியோருக்கு வழங்க வேண்டும் என்று குர்ஆன் விதித்துள்ளது. இஸ்லாமிய நெறியின் ஐந்து அடிப்படைக் கடமைகளில் இதுவும் ஒன்று.

* கடன் கொடுக்கல் - வாங்கல் முறைகளையும் அவற்றின் ஒழுங்குகளையும் குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது.

இவ்வாறு குர்ஆன் படிப்படியாக சமுதாயத்திலிருந்து இல்லாமையைப் போக்கி விடுகிறது. இத்தகைய சமுதாயத்தில் வாழும் ஒரு மனிதனிடம் பிறர் பொருளை அபகரித்தல் எனும் எண்ணம் ஏற்பட வாய்ப்பே இல்லை. அதையும் மீறி ஒருவன் அடுத்தவனின் பொருளைத் திருடுவானேயானால் அதற்கான தண்டனையையும் குர்ஆன் கூறுகிறது:

"திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, அவர்களுடைய கைகளைத் துண்டித்து விடுங்கள். இது அவர்களுடைய சம்பாதனைக்கான கூலியாகும். மேலும் அல்லாஹ் வழங்கும் படிப்பினை மிக்க தண்டனையாகும்" (குர்ஆன் 5:38).

நல்லுரை, இறையச்சம், தண்டனை ஆகிய இம்மூன்றும் சமூகத்தில் பொருளியல் சிக்கல்களைத் தீர்த்து விடும் என்பது திண்ணம்.

3. ஒழுக்கக்கேடுகளும் புதிய நோய்களும்

இன்று புதிது புதிதாக உருவாகும் நோய்களுக்கு ஒழுக்கச் சீர்கேடுகளும் விபச்சாரமும்தான் முதன்மைக் காரணங்கள். "விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்" என்று குர்ஆன் கட்டளையிடுவதுடன் "அது மானக்கேடான செயலாகவும் தீய வழியாகவும் இருக்கிறது" (17:32) என்றும் எச்சரிக்கிறது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பைக் காத்துக் கொள்ளுமாறு கூறுகிறது.

"(நபியே) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம் அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும்" (குர்ஆன் 24:30).

"மேலும் (நபியே) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பாதுகாக்கட்டும்" (குர்ஆன் 24:31).

இறுதியாக, கற்பைப் பாதுகாத்துக் கொள்ள மிகச் சிறந்த வழியாகத் திருமணத்தை முன்னிறுத்துகிறது.

"உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவர்களுக்குத் திருமணம் செய்து வையுங்கள்" (குர்ஆன் 24:32).

இன்று மேலை நாடுகளில், "தவறே இல்லை; இயற்கையானது" என்று விவாதிக்கப்படும் ஓரினத் திருமணங்களையும் ஓரினச் சேர்க்கையையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது (குர்ஆன் 26:165).

4. சுற்றுச் சூழல் பாதிப்பு

இந்தச் சிக்கல் இன்று உலகைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிறது. நிலநடுக்கங்கள், ஆழிப்பேரலை (சுனாமி), புயல், வெள்ளம், வறட்சி என அனைத்திற்கும் மனிதனின் செயல்கள்தாம் காரணம். அறிவியல் முன்னேற்றங்களும் தொழில் மயமாக்கலும் கால நிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

திருக்குர்ஆன் இது குறித்தும் கவலை தெரிவிக்கிறது. பூமியிலும் கடலிலும் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம். இதனால் முன் சென்ற சமூகங்கள் அழிந்தன என எச்சரிக்கிறது.

"மக்கள் தங்கள் கைகளால் எதைச் சம்பாதித்தார்களோ அதன் காரணமாகத் தரையிலும் கடலிலும் அராஜகமும் குழப்பமும் தோன்றி விட்டிருக்கின்றன. அவர்கள் செய்த சில செயல்களின் விளைவை அவர்கள் சுவைப்பதற்காக" (குர்ஆன் 30:41).

18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாவீரன் நெப்போலியன் கூறுகிறார்:

"நான் உலகிலுள்ள அறிவாளிகளை அழைத்து குர்ஆனின் அடிப்படையிலான சமநீதிமிக்க அரசை அமைக்க எண்ணுகிறேன். அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை. ஏனெனில் குர்ஆன் மட்டுமே உண்மை. குர்ஆனால் மட்டுமே மனிதர்களுக்கு மகிழ்ச்சியைத் தர முடியும்.(பார்க்க: Bonaparte et I'Islam Paris, France PP 105-125)

சென்ற நூற்றாண்டின் தலை சிறந்த அறிவாளி எனக் கருதப்படும் ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறுகிறார்:

"முஹம்மத் அவர்களின் மார்க்கம் எதிர்காலத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும். ஏனெனில் ஐரோப்பியர் அதனை இப்பொழுதே ஏற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டார்கள்.....முஹம்மத் அவர்களைப் போன்ற ஒரு மனிதர் இப்பூமியின் அதிகாரியாகப் பொறுப்பேற்பாரானால் புதிய உலகின் சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து அமைதியும் மகிழ்ச்சியும் மலரும்."(A collection of writings of some of the eminent scholars - 1935 ed P. 77)

சந்தூக் பயணம்



இதை பெரிதாக்க படத்தின் மீது கிளிக் செய்யவும்

தமிழகத்தை கலவரக் காடாக்கத் துடிக்கும் குமுதம் ரிப்போர்ட்டர்


ஒருவனுக்கு சொல் புத்தி இருக்க வேண்டும். அல்லது சுயபுத்தி இருக்க வேண்டும். இரண்டும் இல்லாதவன் அறிவிலும், ஆற்றலிலும் நியாயத்தை எடைபோடும் விஷயத்திலும் இரண்டும் கெட்டானாகவேகருதப்படுவான். அதற்கு உடனடி உதாரணம் குமுதம் ரிப்போர்ட்டரில் 'செல்வா' என்பவரின் பெயரில் எழுதப்பட்டிருக்கும் இளம் பெண்களைக் குறிவைக்கும் 'லவ் ஜிகாத்' மிரண்டு கிடக்கும் பெற்றோர் என்ற தலைப்பில் வெளியான செய்தியைக் கூறலாம்.

வடமாநிலங்களிலும், கர்நாடகாவிலும் பரப்பிய மதவெறித் தீயைப் போல கேரள மாநிலத்தில் வழிபாட்டுத்தலம் தொடர்பான சர்ச்சைகளை வைத்து அரசியல் செய்ய முடியாது என்பதை சங்பரிவார் அனுபவப்பூர்வமாக உணர்ந்து பலமுறை படுதோல்விகளை பரிசாகப் பெற்றதால் கச்சிதமாக திட்டமிட்டு கேரள மாநிலத்தில் கரையேறலாம் என்பதற்காக சங்பரிவார் நச்சு சிந்தனைகளின் தலைமைப்பீடம் கண்டுபிடித்த 'அவதூறு கற்பிதம்'தான் லவ் ஜிஹாத் என்ற திரிபுவாதமாகும்.

இந்த விவகாரத்தின் வீரியம் அறியாது தனது பெயரையும், இதழியல் அறத்தையும் தொலைத்துவிட்டு தரம் தாழ்ந்தது குமுதம் ரிப்போர்ட்டர்.

'லவ் ஜிஹாத்' என்ற குதர்க்கமான பிரச்சார வாசகத்தை வைத்து நாட்டையே கலவரக்காடாக்க சங்பரிவார் திட்டமிட்டிருப்பதும் அதற்கு நாட்டின் அதிமுக்கிய துறைகளில் உள்ள பொறுப்பு வாய்ந்த பெரிய மனிதர்களும், சில நச்சு சிந்தனை கொண்ட ஊடகங்களும் துணை போகும் கொடுமையை விலாவாரியாக விவரிக்கத் தொடங்கினால் நெஞ்சம் கொதித்துப் போகும்.

சமீபத்தில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள், இரண்டு முஸ்லிம் இளைஞர்களைக் காதலித்து பின்னர் இஸ்லாமிய நெறியை ஏற்றுக்கொண்டு திருமணமும் முடித்துக் கொண்டனர். இரண்டு பெண்களில் ஒருவர் கேரள மாநில பாரதீய ஜனதா தலைவர் ஒருவரின் மகள். மற்றொருவர் கேரள மாநில போலீஸ் உயர் அதிகாரியின் மகள். (இந்த விவரங்களை குமுதம் ரிப்போர்ட்டர் சாமர்த்தியமாக மறைத்துவிட்டது).

இந்த இரண்டு இளம்பெண்களும் இஸ்லாத்தைப் பற்றி அறிந்துகொள்ள மதரஸா என்னும் மார்க்க கல்விக்கூடத்தில் சேர்ந்து இஸ்லாமியக் கல்வி கற்றனர்.

இந்த நிலையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட இரண்டு பெண்களின் அப்பாக்களும் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் என்று அழைக்கப்படும் ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து இளம்பெண்கள் இருவரும் ஹிஜாபுடன் நீதிமன்றத் தில் ஆஜர் ஆனார்கள். ஹிஜாபுடன் வந்த ஹிந்து பெண்கள் என ஒரு பதட்டப்பிரச்சாரத்தை மீடியாக்கள் பரப்பின. இரண்டு இளம் பெண்களின் தகப்பன்மார்களும் தங்கள் பெண்களை வற்புறுத்தி மிரட்டி மதம் மாறச் செய்தனர் என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.

ஆனால், அது அவதூறு நிறைந்த பொய்ப் புகார் என்பதை நீதிமன்றத்திற்கு வந்த இரண்டு இளம் பெண்களும் நிரூபித்தனர். கட்டாயப்படுத்தி மதம் மாற்றியிருந்தால் அவர்கள் ஏன் ஹிஜா புடன் நீதிமன்றத்திற்கு வரவேண்டும் என்ற கேள்வி அனைவரின் உள்ளங்களிலும் எழுந்தது. ஆனால் இரண்டு இளம் பெண்களும்.... ஹிஜாபுடன் நீதிமன்றம் வந்த தகவலை வெளியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் கட்டாயப் படுத்தி மதம் மாற்றப்பட்டனர் என்று வெளியிட்டது. தன்னையறியாமல் உண்மையைக் கூறியதோடு உளறியும் கொட்டியது.

இரண்டு முஸ் லிம் இளைஞர்களுக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டதால் இரண்டு இளைஞர்களும் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் நீதிபதி முஸ்லிம் இளைஞர்களின் கோரிக்கையை தள்ளுபடி செய்ததோடு, லவ் ஜிஹாத் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என உள்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

லவ் ஜிஹாத் என்ற சொல் ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. உள்ளிட்ட தீவிர மதவெறி அமைப்புகள் திட்டமிட்டு பரப்பிய பொய் வாதமாகும். லவ் ஜிஹாத் குறித்து மதவெறி அமைப்புகள் பொதுக்கூட்டங்கள், துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு கேரளாவை பதட்டத்தின் பிடியில் ஆழ்த்தின. மதவெறி பிற்போக்கு சக்திகள் பயன் படுத்திய அதே வார்த்தையை மாண்புமிகு நீதிபதி பயன்படுத்தி, தான் எங்கிருந்து தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தியிருப்பதாகவேபடுகிறது.

காத லிப்பதும், காதலுக்காக மதம் மாறுவதும், தொன்று தொட்டு நடை பெற்று வரும் ஒன்று தான். முஸ்லிம் இளைஞர்களை பிற சமூகப் பெண்கள் காத லிப்பதும் மதம் மாறுவதும் பரவலாக இருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம் ஆனால் இதனை உள்நோக்கத்தோடு பாசிஷ சக்திகள் பரப்புவது அவர்களது பிறவிக் குணம். ஆனால் நீதித்துறையில் உள்ள சிலரும், குமுதம் ரிப் போட்டர் போன்ற ஊடகங்களிலும் விஷவைரஸ்கள் புகுந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது. நாட்டில் வீண் பதட்டத்தையும், வன்முறையையும் விதைத்து அதை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கிறோம்.

வளர்ந்து வரும் இஸ்ரேலிய-ஹிந்துத்துவ பயங்கரவாதம்!



சென்ற 17.10.09 ஆம் தேதி தீபாவளிக்கு முந்தைய நாள் ஒரே பரபரப்பு!

என்னவென்று நினைக்கிறீர்கள்?

"தீபாவளி கொண்டாட்டத்தினைச் சீர் குலைக்க முஸ்லிம் தீவிரவாதிகள் முயற்சி" என்று பத்திரிக்கைகளிலும்-மின் ஊடகங்களிலும் வெளியான செய்தியைத் தொடர்ந்து எழுந்த பரபரப்புதான் அது.

அத்தோடு அமெரிக்க உளவு நிறுவனமும் தன் பங்கிற்கு வழக்கம் போல் எச்சரிக்கை செய்தது. ஆனால் நடந்தது என்ன?


கோவா மாநிலம் பண்டா நகரில் தீபாவளி இரவு அன்று ஸ்கூட்டரில் சென்ற இருவர், அவர்களின் வண்டியில் வைத்திருந்த குண்டு வெடித்து மரணம் அடைந்தனர். கோவா மாநில காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து இறந்தவர்கள் இந்துக்களான பட்டேல் மற்றும் நாயக் என்று அடையாளம் கண்டனர். விஷயம் அத்தோடு முற்றுப் பெறவில்லை. வழக்கத்திற்கு மாறாக இம்முறை அந்தக் குண்டுவெடிப்பைக் குறித்து நமது நடுவு(!)நிலை ஊடகங்களின், "முஸ்லிம் தீவிரவாதிகள்" என்ற கூக்குரல் வெளிவரும் முன்னரே, வேகமாகச் செயல்பட்ட காவல்துறையினர், ஸ்கூட்டரில் இறந்த இருவரும் எடுத்துச் சென்ற குண்டு, எதிர்பாராத விதமாக முன்னரே வெடித்துச் சிதறியதையும் குண்டு கொண்டு சென்றவர்கள் யாவர்? என்ற விசாரணையில், அவர்கள் இந்துத் தீவிரவாத அமைப்பான சனாதன் சான்ஸ்தாவினைச் சார்ந்தவர்கள் என்பதையும் கோவா காவல்துறையினர் கண்டு பிடித்து விட்டனர்.

இந்த சனாதன் சான்ஸ்தா அமைப்பு எது? என்பது வாசகர்களுக்கு மறந்திருக்காது!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு மாலேகான் நகரில் பைக் குண்டு வெடித்து பலர் மாண்ட சம்பவத்தில் கைது செய்யப் பட்ட பெண் சாமியார் பிரக்யா சிங் மற்றும் அந்தக் குண்டு வெடிப்பின் மாஸ்டர் மைண்ட் ஆகச் செயல்பட்ட இராணுவ அதிகாரி கர்னல் புரோகித் ஆகியோர் கைது செய்யப் பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கும். அவ்விருவரும் தீவிரமாகச் செயல்பட்ட "அபினவ் பாரத்" இயக்கத்துடன் தொடர்புடைய இயக்கம்தான் சனாதன் சான்ஸ்தா என்ற தீவிரவாத அமைப்பு. அபினவ் பாரதின் முக்கிய பணி, ஆங்காங்கே நாச வேலைகளைச் செய்து விட்டு, அதனை முஸ்லிம்கள் செய்ததாகத் திசை திருப்பி விடுவதாகும் அந்த இயக்கதோடு தொடர்புடைய மற்றொரு மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இயக்கத்தின் தொண்டர்கள் இருவர் எடுத்துச் சென்ற குண்டு வெடித்ததிலிருந்து, இவர்களே பயங்கர வாத-நாசவேலைகளைச் செய்து விட்டு காவல் துறையினரை ஏவி, முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து கைது செய்யத் தூண்டும் நடவடிக்கையாகவும் அதன் மூலம் இரு சமூகத்தினரிடையே கலவரம் ஏற்பட வழிவகை செய்யும் அடித்தள முயற்சியாகவும் இது இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.

இதே நாளில் மற்றொரு சம்பவமும் நடந்ததை இவ்விடத்தில் ஒப்பு நோக்குவது பொருத்தமாக இருக்கும். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தேசிய மட்டைப் பந்துப் போட்டி ஒன்று 17.10.09ஆம் தேதி அன்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில் கலந்து கொள்ள காஷ்மீர் மாநில கிரிக்கெட் குழுவினர் வருகை தந்தனர். அவர்கள் தங்கியிருந்த அறையில் கர்நாடக காவல் துறையினர் எவ்விதக் காரணமும் இன்றி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் விளையாட்டு வீரர் ரசூல் என்பவருடைய பையில் சோதனையிட்டபோது, காவலரின் கையிலிருந்த கருவியிலிருந்து ஒலி எழுந்துள்ளது. ரசூலின் பையைத் துருவி-துருவிச் சோதனையிட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை. இருந்த போதும் ரசூலையும் அவருடன் தங்கியிருந்த மற்றொரு வீரரையும் கர்நாடக காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

கர்நாடகக் காவல்துறையின் இத்தகைய செயலுக்குக் காஷ்மீர் கிரிக்கெட் வாரியத்தலைவர் ஃபாரூக் அப்துல்லா கண்டனம் தெரிவித்ததுடன் போட்டியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மேலும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த பின்பு பெங்களூரு போலிஸ் கமிஷனர் சங்கர் பிடாரி, "சில தரப்பினரிடம் வந்த தகவலினை வைத்துத் தவறாக நடவடிக்கை எடுத்து விட்டதாக" அறிவிக்கிறார். அவரின் இந்த அறிவிப்பு வரும் வரை, "காஷ்மீரிலிருந்து வந்த முஸ்லிம் விளையாட்டு வீரர் கைது, தீவிரவாதியா? வெடிகுண்டா?" என்பது போன்றெல்லாம் பக்கங்களை நிறைத்த சில பத்திரிகைகள், "அந்த விளையாட்டு வீரர் அப்பாவி, தவறு நடந்து விட்டது" எனக் காவல்துறை கமிஷனர் அறிவித்த செய்தியினைக் கண்டு கொள்ளவே இல்லை. இவ்விடத்தில், கர்நாடக மாநிலத்தில் பெண் தீவிரவாதி பிரக்யாசிங்கிற்காகக் குரல் கொடுத்த பாஜக ஆட்சி செய்கின்றது என்பதையும் இதே மாநிலத்தில் தான் ராம் சேனா என்ற தீவிர இந்துக்கள் அமைப்பும் மிகச் சுதந்திரமாக செயல்படுகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அநியாயப் பழி சுமத்தி ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட டாக்டர் ஹனீஃபிடம், நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டதோடு மட்டுமல்லாது அவருக்கு உண்டான நஷ்டஈட்டுடன் அவர் திரும்பி ஆஸ்திரேலியா வந்து தொழில் செய்யலாம் என்றும் ஆஸ்திரேலியா அரசு அறிவித்தது. ஆனால் கர்நாடகக் காவல் துறையோ காஷ்மீர் வீரர் ரசூலின் பைச் சோதனையில் ஒன்றுமில்லை என்று அறிவித்து விட்டு, "அந்த வீரர் ரசாயன பரிசோதனை முடியும் வரையில் அறையை விட்டு வெளியேறக் கூடாது" என்றும் அறிவித்துள்ளது.

இந்துத்துவாவிலே பி.எப்.ஜி என்ற குழு இருப்பதாகவும் அது பெரும்பாலும் இளைஞர்களையும் மாணவர்களையும் கொண்ட அமைப்பாகவும் அவர்கள் வேலையே பெண்களைக் கவரக்கூடிய செல்போன் தொடர்பினை முஸ்லிம் பெண்களிடம் ஏற்படுத்தி அவர்களின் கற்பிற்குக் களங்கத்தினை ஏற்படுத்தி விட்டுத் தப்பித்துக் கொள்வதாகவும் சொல்லப் படுகிறது. இது தொடர்பான சில ஆர்.எஸ்.எஸ்ஸின் உள் சுற்றறிக்கைகளைச் சில முஸ்லிம் அமைப்புகள் கைப்பற்றி வெளியாக்கியுள்ளன.

***

"ஃபாலஸ்தீனின் காஸா பகுதியில் பெண்கள்-குழந்தைகள் எனப் பாராது கிட்டத்தட்ட 1300 முஸ்லிம்களைக் கொன்று இனப் படுகொலையில் இஸ்ரேல் அரசு ஈடுபட்டது" என ஐ.நாவிற்கான கமிட்டி குற்றம் சாட்டியதோடு சரி. ஆனால் நடவடிக்கை எடுக்க முடியுமா? முடியாது! ஏனென்றால் அமெரிக்கா தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன் படுத்தி அதனைத் தடுத்து விடும். அப்படிப் பட்ட இஸ்ரேலின் ஏஜண்டுகள் இந்தியாவில் பல துறைகளிலும் தங்கள் ஆதிக்கத்தினை பதித்துள்ளார்கள் என்றால் மிகையாகாது. உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம்:

சமீபத்தில் சென்னையில் நடந்த சட்டத்திற்கான கருத்தரங்கு ஒன்றில் இஸ்ரேல் நாட்டு பேராசிரியர் ஒருவர், "இந்தியாவிற்கு சிவில் சட்டம் அவசியம்" என்று பேசியிருக்கிறார். மத்திய அரசோ சிவில் சட்டம் கொண்டு வருவதா? வேண்டாமா? என்ற விஷயம் விவாதத்திற்குட்டது என்று சொல்லும் போது, அந்நிய நாட்டைச் சேர்ந்த இவர் பி.ஜே.பியின் ஊது குழலாக மாறி, பொது சிவில் சட்டம் இந்தியாவுக்கு வேண்டும் என்கிறார். அது மட்டுமா? புஷ் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தபோது முக்கிய விண்வெளி ஆராய்ச்சி நிபுணராக இருந்த ஸ்டுவார்ட் என்பவர் இஸ்ரேல் உளவாளியாக இருந்திருக்கிறார். அவர் இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவிற்கு 2008ஆம் ஆண்டு இரண்டு தடவை வந்து சென்றுள்ளார். அவர் முக்கியமான சிலத் தகவல்களை, சில டாலர்களுக்காகப் பரிமாற்றம் செய்யும் போது, அமெரிக்க உளவுத்துறையான எஃப்.பி.ஐயிடம் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி கையும் களவுமாக மாட்டியுள்ளார்.

நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வரும் ஹிந்துத்துவாவும் உலகிற்கே மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வரும் இஸ்ரேலிய சியோனிஸமும் உள்கட்டமைப்பில் ஒரே அடிப்படைகளைக் கொண்டுள்ளதும் அவை உள்ளுக்குள் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதும் அவ்வபோது வெளியாகும் தகவல்கள் மூலம் உறுதிப் படுத்தப் பட்டுள்ளன. "மாலேகோன் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட கர்னல் புரோஹித், இஸ்ரேலைத் தலைமையாகக் கொண்டு ஒரு ஹிந்துத்துவ அரசை ஏற்படுத்துவது என்றும் அது இஸ்ரேலிலிருந்து இந்தியாவைக் கட்டுப்படுத்தும் வகையில் காய்களை நகர்த்தியதாகவும் அதற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன என்றும் விரைவிலேயே அந்த ஆவணங்களுடன் மாலேகோன் குண்டு வெடிப்பு குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாகவும்" மகாராஷ்டிரத் தீவிரவாதத் தடுப்புப்படை அதிகாரி ஹேமந்த் கார்கரே சுட்டுக்கொல்லப்படுவதற்கு முந்தைய தினம் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் மிக மிக அதிர்ச்சியளிக்கும் வகையில் அதற்கு அடுத்த நாள் மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் மூலம் அவர் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். கார்கரே விசாரித்து வந்த மாலேகோன் குண்டுவெடிப்புத் தாக்குதலை விசாரிக்க, கார்கரேயால் விசாரணை செய்யப் பட்டவரும் மாலேகோன் குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியான கர்னல் புரோஹித்தின் நெருங்கிய நண்பருமான ஹிந்துத்துவவாதி என வெளிப்படையாகவே அறியப்படும் ரகுவன்ஷி மீண்டும் நியமிக்கப்பட்டார்.

ரகுவன்ஷி தலைமையேற்றவுடன், அதற்குச் சில தினங்களுக்கு முன்னர் கார்கரே கூறிய "ஹிந்துத்துவ-இஸ்ரேல் கூட்டணியை" நிராகரித்து விட்டு, "கர்னல் புரோஹித் அவ்வாறான திட்டம் போட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அந்தக் குண்டுவெடிப்புக்குச் சர்வதேச பின்னணி ஏதும் இல்லை" எனவும் அறிவித்தார். அடுத்தச் சில தினங்களில் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் முன்னர் கார்கரே கூறிய இஸ்ரேல் தொடர்பு குற்றச்சாட்டுகள் அடையாளமின்றி அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. நீதிமன்றமும் அந்தக் குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் நல்லப்பிள்ளையாக, அதுவரை "தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த மாலேகோன் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் அனைவரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விடுவித்ததோடு, சாதாரண வழக்குகளுக்கான நீதிமன்றத்திற்கு அவர்களின் வழக்கையும் 'மாற்றி' உத்தரவிட்டது.

மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்றோடு ஒன்று கலந்து சிந்திக்கும் எவருக்கும் இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை எவ்வாறு அபாய நிலையில் உள்ளது என்பதும் நாட்டில் இந்துத்துவா-இஸ்ரேல் கூட்டணி தீவிரவாதம் மறைமுகமாகக் கட்டமைக்கப்பட்டு மிக நேர்த்தியாக வளர்ந்து வருவதையும் அறிந்துக் கொள்ள இயலும்.

இந்நிலையில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? அவர்கள் எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் யாவை? தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும்?

உடனடியாக மிகத் தீவிரத்துடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய விஷயமாகும் இது. இப்பொறுப்பைச் சமுதாய அமைப்புகளிடமும் ஜமாஅத்துகளிடமும் தற்போதைக்கு விட்டு விட்டு, மிக அடிப்படையாக முஸ்லிம்கள் கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்களை இங்குப் பட்டியலிடுவோம்:

ஜூம்மா தொழும் போது மக்காவிலுள்ள கஅபாவில் பாதுகாப்புக்காகக் காவலர்கள் இருப்பது போல இங்கும் இளைஞர்களைப் பாதுகாப்பில் ஈடுபடுத்த வேண்டும்.

பெரிய தப்லீக் ஜமாத்துக்கள் நடக்கும் போது டோர் பிரேம் - ஹேண்ட் மேட் மெட்டல் டிடக்ட்டர்கள் பயன்படுத்தி, சோதனைக்குப் பின் அனுமதிக்க வேண்டும்.

பள்ளிவாசல்களில் இரவில் அடையாளம் தெரியாதவர்களைத் தங்க அனுமதிக்கக் கூடாது.

திருமணம் போன்ற மக்கள் கூடும் சமூதாய நிகழ்ச்சிகளில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பெரிய தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கைப்பேசி, இணையம் பயன்படுத்தும் முஸ்லிம் பெண்களை அவர்களின் பெற்றோர்/பாதுகாவலர் கவனமாகக் கண்காணிப்பதோடு, அப்பெண்களுக்கும் அநாமதேய அழைப்புகள் வரின் அதனை முறையாகப் பெற்றோர்/பாதுகாவலரிடம் தெரியப்படுத்த பயிற்றுவிக்க வேண்டும்.

பி.ஜே.பி ஆட்சி செய்யும் மாநிலங்களில் பயணம் செல்லும் போது அந்நியரின் சதிக்கு ஆளாகிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். குஜராத்தில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் இஸ்ரத், சொராபுதீன் போன்றவர்களைத் தீவிரவாதிகள் என்று போலி முத்திரைக் குத்தி அநியாயமாகப் படுகொலை செய்த பாஜக பயங்கரவாத நிகழ்வுகள் நடக்க வழிவகுக்கக்கூடாது.

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் எங்காவது நடந்தால் முஸ்லிம் பெண்கள், வியாபாரத் தலங்கள், மதரஸாக்கள், பள்ளிவாசல்கள் ஆகியவைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக அதிகமான முஸ்லிம் இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலைபார்க்கும் ஊர்களிலும் முஸ்லிம்கள் குறைந்த எண்ணிக்கையில் வாழும் ஊர்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய ஜமாஅத்துகள், அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டும்.

முஸ்லிம்கள் நடத்தும் கல்வி நிலையங்களில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்.

அரசு இயந்திரங்களின் முழு ஒத்துழைப்புடன் நாட்டில் ஆக்டோபஸ் போன்று பரவி வரும் ஹிந்துத்துவ-இஸ்ரேலிய பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்புப் பெற இத்தகைய நடவடிக்கைகள் மிகப் பெரிய பலனை ஏற்படுத்தி விடாது என்பது தெரிந்ததே. இருப்பினும் ஆரம்ப நடவடிக்கைகளாக இவற்றை உடனடியாக கவனிப்பதோடு, முஸ்லிம் சமுதாயம் ஒன்றிணைந்து நாட்டில் வளர்ந்து வரும் ஹிந்துத்துவ-இஸ்ரேலிய கூட்டு பயங்கரவாதத்தை வேரடி மண்ணோடு சாய்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

இதுவே இப்போதைய உடனடித் தேவையாகும்.

- முஹம்மது அலி. ஐ.பி.எஸ்

மும்பை தாக்குத லில் அமெரிக்க பயங்கரவாதியின் சதி

http://www.tmmk.info/images/stories/urimai/06-27/mumbai-attck-sep-26.gif
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்து ஓராண்டு முடிந்து விட்டது. அந்த சோக நிகழ்வை வெறுமனே வேத னைப்படும் சோக நிகழ்வாக மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது.

நாட்டிற்கு ஏற்பட்ட பெரிய அபாய மாகவே கருதிட முடியும். தென்கிழக்கு ஆசியாவின் வல்லரசாக விளங்கும் இந்தியாவின் பெருமைக்கும் வல்லமைக் கும் எதிராக இழிவுபடுத்தும் நோக்கம் அதில் இருந்தது.

இந்தியாவின் நியூயார்க் என செல்ல மாக அழைக்கப்படும் இந்தியாவின் வர்த் தக தலைநகரமான மும்பை மாநகரம் பல மணிநேரங்கள் பயங்கரவாதிகளின் முற்றுகையில் தவித்தது. மும்பை மாநகரில் முக்கியப் பகுதிகள் குறிப்பாக சத்ரபதி சிவாஜி தொடர் வண்டி நிலையம், தாஜ் ஹோட்டல், நாரிமண்பாயிண்ட் என பல்வேறு பகுதிகளும் தாக்குதலுக்கு இலக்காயின.


மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற நவம்பர் 20லிம் தேதிக்கு முந்தைய தினம் வரை நாட்டையே பரபரபுக்குள்ளாக்கிய மாலேகான் குண்டு வெடிப்புக் குற்றவாளிகள் குறித்து தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து இந்திய நாட்டையே அதிரச் செய்தது.
பெண்சாமியார் பிரக்யாசிங், ராணுவத் தில் உயர் பதவி வகித்துக் கொண்டே நாட்டிற்கு எதிராக தொடர்ந்து துரோகம் இழைத்த தீவிரவாதி கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் உள்ளிட்ட 11 பேரின் அனைத்து துரோகச் செயல்களையும் நிரூபித்து சட்டத்தின் முன் நிறுத்துவேன் என சபதம் செய்தார் மகராஷ்ட்ரா மாநில தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த்கர்கரே எத்தகைய உயர்ந்த இடத்தில் உள்ளவர்களின் மிரட்டலுக்கும் நான் அஞ்சப்போவதில்லை என்றும் அதிரடியாக அறிவித்தார் மாவீரன் ஹேமந்த்கர்கரே.

இந்த துணிச்சலான பேட்டி இந்தியாவின் முன்னணி ஆங்கில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. இந்தப் பரபரப்பு சில மணிநேரங்கள் மட்டுமே நீடித்த நிலை யில் மும்பை பயங்கரவாதத் தாக்குதலும் அதனைத் தொடர்ந்து குறுகிய நேரத் தில் தீவிரவாத தடுப்புபடையின் தலைவர் ஹேமந்த்கர்கரேயின் மர்ம படு கொலையும் நிகழ்ந்தது.

நாட்டின் முக்கிய துறைமுக நகரத்துக் குள் புகுந்து பல மணிநேர தாக்குதல் நடத்தியவர்கள் யார்? அவர்களுக்கு அத்தகைய துணிச்சல் எங்கிருந்து வந் தது? ஒரு வலுவான பின்னணி இல்லாமல் இந்த தாக்குதலை யாரும் நிகழ்த்தியிருக்க முடியாது! என்ற பலத்த சந்தேகங்களுக்கு முக்கியத்துவம் வழங்காமல் யூகங்களுக் கும் கால காலமாக திட்டமிட்டு வரும் வியூகங்களுக்கும் வலுசேர்க்கும் வித மாகவே செய்திகள் புறப்பட்டனவே தவிர மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குறித்தும் மும்பையையே முற்றுகையிட்டு தாக்குதல் தொடுத்த பயங்கரவாதிகள் குறித்தும் கூர்மையான தகவல்கள் கண்ட றியப்படவில்லை என்பதை உணர்த்தும் விதமாக அன்மையில் தொடர்ச்சியான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

அவை சர்வதேச அளவில் பதட்டத்தையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கோல்மேன் ஹேட்லி என்ற பயங்கரவாதி குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
http://www.tmmk.info/images/stories/urimai/06-27/delhi-c.m-sila.gif
அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கோல்மேன் ஹேட்லி மற்றும் தஹாவுர்ரானா ஆகிய இருவரும் பாகிஸ்தானி ருந்து செயல்படும் லஷ்கர்லிஇலிதொய்பா வோடு சேர்ந்து கொண்டு இவர்கள் இயங்குவதாகவும் இந்தியாவிலும் டென் மார்க்கிலும் பயங்கர வாதத் தாக்குதல்களை நிகழ்த்த இவர்கள் திட்டமிட்டு வருவதாகவும் இவர்களை சமீபத்தில் கைது செய்த அமெரிக்க உளவுத்துறை கூறியது.

டேவிட் கோல்மேன் ஹேட்லி என்ற அமெரிக்கன் 2006 முதல் 2009 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட ஒன் பது முறை இந்தியா வந்துள்ளான். ஒவ்வொரு தடவையும் படுபயங்கர திட்டத்துடன் தான் இந்த சதிகாரன் இந்தியா வந்து சென்றுள்ளதாக இந்திய புலனாய்வு வட்டாரங்கள் இப்போது தெரி வித்துள்ளன.

2006 ஆம் ஆண்டிலிருந்து 2009 வரை குடியரசு தினங்களும், சுதந்திர தினங்களும், டிசம்பர் 6 உள்ளிட்ட பாது காப்பு கெடுபிடி மிகுந்த நாட்களில் பல முறை வந்து சென்றுள்ளான். ஆனால் அப் போதெல்லாம் பாதுகாப்பு கெடுபிடிகள் ரெய்டுகள் என்ற பெயரில் அப்பாவிகள் வளைத்து பிடித்து விசாரிக்கப்பட்டார்களே தவிர டேவிட்கோல்மேன் ஹேட்லி போன்ற அதி பயங்கரவாதிகள் அந்தக் காலகட்டங்களில் பிடிக்கப்பட்டதாகவோ ஏன் விசாரிக்கப்பட்டதாகவே, எந்தச் செய்தியும் ஏன் செய்தியின் சுவடுகூட இல்லை.

அதைவிட வேதனை என்னவெனில் பயங்கரவாதிகள் ஹேட்லி 9 முறையும் வந்து சென்ற இடங்கள் எவைஎவை தெரியுமா?



டெல்லி , மும்பை, லக்னோ, அஹமதா பாத் ஆகிய நகரங்களுக்கு ஹேட்லி வந்து சென்றுள்ளதாகவும், அங்கு பயங்கரவாதத் தளங்களையும் உருவாக்கியுள்ளதாக இப்போது உளவுத்துறை அமைப்புகள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அலறுகின்றன. ஹேட்லி 9 முறை வந்து சென்றுள்ளதாகக் குறிப்பிடப்படும் இடங் களை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.


பயங்கரவாதி ஹேட் லி வந்து பயங்கர வாதத் தளங்கள் அமைத்த டெல் லியை ஆளும் ஷீலாதீட்சித் தலைமையிலான அரசு ஜாமியாநகரில் நடைபெற்ற போலிஎன்கவுண்டரில் இரண்டு அப்பாவி முஸ்லி ம் இளைஞர்களை மண்ணில் சாய்த் தும் அப்பாவி இளைஞர்களை எவ்வித விசாரணையும் இல்லாமல் துன்புறுத்தும் போக்கை நோக்கமாகக் கொண்ட அரசு.

லக்னோவுக்கு ஹேட்லி பலமுறை வந்துள்ளார். லக்னோவை நிர்வகித்து வரும் உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் செல்வி மாயாவதி அவர்கள் உ.பியின் ஆசம்கார் என்ற மாவட்டத்தில் உள்ள அப்பாவி முஸ்லி ம் இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் கடுமையாக துன்புறுத்திய நிகழ்வுகள் எண்ணற்றவை நடைபெற்றன.

ஒரு கட்டத்தில் வெளியூர்களில் தங்கி மேல்படிப்பு படித்து வரும் தங்கள் வீட்டுப்பிள்ளைகளை ஊருக்கு வரவேண்டாம் என பெற்றோர்களே கெஞ்சும் அளவுக்கு உ.பி. காவல் துறையினரின் கெடுபிடி இருந்தது.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மும்பையில் விசாரணை என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சமூக இளைஞர்கள் அடைந்த துன்பங்கள் யாராலும் மறுக்க முடியாதவை.
http://www.tmmk.info/images/stories/urimai/06-27/modi.gif
குஜராத் மாநில அகமதாபாத்தில் குறித்தும் மோடி அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்தும் நாம் யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தீவிரவாதத்தை ஒடுக்குகிறோம் என மூர்க்கத்தனமான நடவடிக்கைகள் மூலம் அப்பாவி முஸ் லிம் இளைஞர்களை கருவறுத்த மாநிலங்களின் முக்கிய நகரங்களில் தான் உலக மகா பயங்கரவாதிகள் டேவிட் கோல்மேன் ஹேட்லி­ சொந்த நந்தவனத்தில் உலவுவதைப் போல் உலாவியுள்ளான்.

அப்போதெல்லாம் பயங்கரவாதி ஹேட்லி யைக் குறித்து எந்த தகவலையும் பெற திராணியற்ற நிலையிலேயே டெல்லி, மும்பை, லக்னோ, அகமதாபாத் நகரங் ககளை கண்காணிக்கும் அந்தந்த மாநில புலனாய்வு அமைப்புகள் இருந்துள்ளன அவர்களுக்கு தீவிரவாதிகள் என்றாலே சிறுபான்மை சமூக இளைஞர்கள் தானே நினைவுக்கு வருவார்கள் இல்லையா?

ஏதாவது அப்பாவி இளைஞனை குறிப்பாக முஸ்லி ம் இளைஞனை பிடித்து சித்திரவதை செய்தால் போதும் அடிதாங்காமல் அந்த இளைஞன் தானே தீவிரவாதி என ஒப்புக்கொள்வான் அவன் தீவிரவாதி என தாங்களே கண்டுபிடித்ததை போல பக்கம் பக்கமாக கற்பனைக் கட்டுக் கதைகளை கட்டவிழ்த்து விட ஏராளமான வெகுஜன ஊடகங்கள் நம் நாட்டில் உண்டு. இத்தகைய முக்கிய(?) கடமைகள் இருக்கும் போது ஹேட்லி போன்ற உத்தமர்களை(!)க் கண்காணிக்க குறிப்பிட்ட அந்த மாநில புலனாய்வு அமைப்புகளுக்கு பாவம் ஏதுநேரம்? ஏதாவது நாச வேலைகள் நடந்தால் எங்காவது தாடிவைத்த தொப்பி அணிந்த ஒரு இளிச்சவாய் இளைஞன் நமக்கென்று கிடைக்காமலா போவான் என்ற வக்கிர சிந்தனையைத் தாண்டி புத்திசா லித் தனமாக யோசிக்க சில புலனாய்வுப் பு லிகளுக்கு இயலாமலே போய்விட்டதோ என்ற வலுவான சந்தேகம் ஹேட்லியின் விஷயத்தில் உறுதியாகி விட்டது. (இந்தப் புலனாய்வு மேதாவிகள் பேசாமல் விஜய் காந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதப் போகலாம் என்கிறீர்களா?)

2006-லி ருந்து 2009 வரை நாட்டில் நடந்த அனைத்து அசம்பாவிதங்களிலும் பயங்கரவாதி டேவிட் கோல் மேன் ஹேட் லிக்கு உள்ள தொடர்பை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்பதே நாட்டு மக்களின் கோரிக்கையாகும்.

இதனிடையே அமெரிக்க புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்ட டேவிட்கோல்மேனை விசாரிக்க அமெரிக்கா சென்ற இந்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு அனுமதி கிடைக்காத தால் இந்தியக்குழு வெறுங்கையுடன் தொங்கிய முகத்துடன் ஏமாற்றத்துடன் இந்தியா திரும்பியது.

அமெரிக்கா சென்றிருந்த இந்திய புலனாய்வுக் குழுவினர் வாஷிங்டனில் தங்கி அந்நாட்டு புலனாய்வுக் குழு வினருடன் டேவிட் கோல் மேனின் சதித்திட்டம் குறித்து விரிவான ஆலோச னைகள் மற்றும் தகவல்கள் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்பட்ட போதும் சிகாகோ சிறைச்சாலையில் அடைக் கப்பட்ட டேவிட் கோல் மேனை தாங்கள் விசாரிக்க வேண்டும் என்ற இந்தியக்குழுவினரின் கோரிக்கைக்கு அமெரிக்கா செவிசாய்க்கவேயில்லை.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலி ல் வெளிநாட்டுக்காரர்கள் குறிப்பாக யூதர் கள் கொல்லப்பட்டனர் என்ற ஒரே காரணத்துக்காக விமானங்களில் சீசன் டிக்கெட் எடுக்காத குறையாக அமெரிக்கா உள்ளிட்டமேற்கு நாடுகளி ருந்து புல னாய்வு குழுக்கள் வந்தவண்ணம் இருந்தன.


ஆனால், மும்பை பயங்கரவாதத் தாக்குதலி ன் மூலம் பெரும் இழப்பினை சந்தித்த இந்தியத் திருநாட்டின் புல னாய்வுக் குழுவினை விசாரிக்க அனுமதி மறுத்த அமெரிக்க அரசின் அடா வடித்தனம் கண்டிக்கத் தக்க செயல் அல்லவா?

இந்தியக் குழு முதன் முறையாக ஹேட்லி யை விசாரிக்கச் சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டதற்கு அரசியல் ஆய்வாளர்கள் முக்கியமான ஒரு கருத்தி யலைக் குறிப்பிடுகிறார்கள்.

அமெரிக்க உள்நாட்டு உளவுத்துறையான எ.இ.ஒ.யின் ஆலோசனைப்படி அவர்களது விருப்பப்படியே விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தந்திர யுக்தியின் படியே முத ல் அனுமதி மறுக்கப்டடிருக்கிறது. விரைவில் ஹேட்லி இந்திய புலனாய்வுக் குழுவினரால் விசாரணை என்ற நாடகம் அரங்கேற்றப் படலாம் முத ல் இந்திய குழுவினருக்கு ஹேட்­லியை விசாரிக்க அனுமதி மறுக்கப் பட்டதற்கு காரணம் விசாரணை என்ற பெயரில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு யூதனுக்கு (ஹேட்லி க்கு) இந்தியக் குழுவினரால் ஒரு தொந்தரவும் ஏற் படக்கூடாது என்பதற்காகவே ஒரு அமெரிக்கனுக்கு குறிப்பாக ஒரு யூதனுக்கு அந்நிய நாட்டினரால் அவமரி யாதை நடக்கக்கூடாது என அமெரிக்கா நினைக்கிறது. அது தான் அமெரிக்கா.

200 பேரை பறிகொடுத்த மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குறித்த விசார ணையில் ஒத்துழைப்பு கிடைக்காமல் அமெரிக்காவி ருந்து ஏமாற்றத்துடன் திரும்பியது இந்தியா. ஒரு யூதன் மீது விசாரணை செய்தது 200 இந்தியர்களின் உயிரிழப்புகளை விட பெரியது என்று சொல்லாமல் சொன்னது அமெரிக்கா. மௌனத்தை கடைப்பிடித்தது இந்தியா. மவுனம் என்பது சம்மதத்துக்கு அறிகுறிதானே.
--அபுசாலிஹ் Tmmk.in--

இஸ்ரேலின் தடுப்பூசி பரிசோதனைக்கு இரையாக்கப்படும் ஃபலஸ்தீனர்கள்

கெய்ரோ: இஸ்ரேல் சிறைகளிலிலுள்ள ஃபலஸ்தீனர்களிடம் மருந்துகளை தடுப்பூசி மூலம் போட்டு பரிசோதனை நடத்தப்படுவதாக கெய்ரோ மனித உரிமை அமைப்பின் கீழ் செயல்படும் ஸவசியா ஹீயூமன் ரைட்ஸ் சென்டர் வெளிப்படுத்தியுள்ளது.

இப்பரிசோதனையின் விளைவாக ஃபலஸ்தீனர்களுக்கு உடல் முழுவதும் முடிக்கொட்டியுள்ளது. சர்வதேச மனித உரிமைகளை காற்றில் பறத்திவிட்டு ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீனர்களை இஸ்ரேல் சிறையில் அடைத்துள்ளது.
தடுப்பூசி போடப்பட்டவர்களை பரிசோதிப்பதற்கு உலகிலிலுள்ள எல்லா மனித உரிமை அமைப்புகளும், சுகாதார நிறுவனங்களும் தங்களுடைய பிரநிதிகளை இஸ்ரேலுக்கு அனுப்பவேண்டும் என்றும் இவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஃபலஸ்தீன் அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி 1967 முதல் ஏழு லட்சம் பேரையும் 2000 ஆம் ஆண்டு முதல் ஐம்பது ஆயிரம் பேரையும் இஸ்ரேல் ராணுவம் கைதுச்செய்துள்ளது. ஃபலஸ்தீன் எல்லைகளிலிருந்து கைதுச்செய்யப்பட்டவர்கள் 9850 பேர் இஸ்ரேலிலுள்ள முப்பது சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 105 பெண்களும், 359 குழந்தைகளும் அடங்குவர். ஃபலஸ்தீன் சிறைக்கைதிகளிடம் இஸ்ரேல் மேற்க்கொள்ளும் மோசமான நடவடிக்கைகளுக்கு உலகம் முழுவதும் கண்டனம் எழுந்திருந்தது.

இஸ்ரேல் குடியிருப்புகள்: ஐநா கண்டனம்!

இஸ்ரேல் ஜெருஸலத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் தொடர்ந்து தனது குடியிருப்புகளை நிர்மாணித்து வருகிறது. இந்த செயலை அமெரிக்கா கண்டித்திருந்த போதும், இஸ்ரேல் அதனைக் குறித்துக் கண்டுகொள்ளாமல் தனது குடியேற்றத்தைத் தொடர்ந்து வரும் நிலையில் மத்தியகிழக்கின் அமைதிக்கு இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் குடியிருப்புகளை நிறுத்துவது அவசியம் என ஐநா பொதுச் செயலாளர் பான்கிமூன் வற்புறுத்தியுள்ளார்.

அதேவேளையில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் இஸ்ரேல் தனது ஜெருசலக் குடியிருப்புகளை முன்னெடுத்துச் செல்வது குறித்து அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் மத்திய கிழக்கு அமைதிக்கு ஒத்துழைப்பு வழங்க இக்குடியிருப்புகளை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐநா கண்டனம் குறித்தோ, அமெரிக்க அரசின் வேண்டுகோள் குறித்தோ தாம் கவலைப்படப் போவதில்லை என இஸ்ரேலியப் பிரதமரின் செய்தித் தொடர்பாளர் மார்க் ரெகெவ் அறிவித்துள்ளார். ஜெருசலக் குடியிருப்புகள் முன்னர் அறிவித்தபடி எவ்விதத் தடங்கலும் இன்றித் தொடரும் எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
source:inneram

தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவரே படு சாதாரணமான முறையில் கொல்லப்பட முடியும் என்றால், சாதாரண மக்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்? கவிதா கர்கரே



மும்பை: தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவரே படு சாதாரணமான முறையில் கொல்லப்பட முடியும் என்றால், இந்த நாட்டில், சாதாரண மக்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்? என்று முகத்தில் அடித்தாற் போல கேட்டுள்ளார் மும்பை தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரேவின் மனைவி கவிதா கர்கரே.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒய்.பி. சிங் மற்றும் அவரது மனைவி அபா ஆகியோர் இணைந்து காவல்துறையில் ஊழலை விரட்டுவதற்காக இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
யஹி சச் ஹை என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆல்பத்தை இன்று கவிதா கர்கரே வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் படு சாதாரணமாக கொல்லப்பட்டுள்ளார். அவரை இவ்வளவு சாதாரணமாக கொல்ல முடிகிற அளவுக்கு அவருக்கான பாதுகாப்பு இருந்துள்ளது. அப்படியானால் இந்த நாட்டில் உள்ள அப்பாவி பொதுமக்களின் நிலை என்ன?, அவர்களது பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் உள்ளது? எப்படி நாம் பாதுகாப்பு இருக்கிறோம் என்று நினைக்க முடியும்.
நமது பாதுகாப்பு முறையில் என்ன தவறு என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பத்து தீவிரவாதிகள், பயங்கரமான ஆயுதங்களுடன், வெடிபொருட்களுடன் நமது நாட்டுக்குள் எப்படி ஊடுறுவ முடிந்தது?.

மும்பை தாக்குதல் சம்பவம் நடந்த முதல் ஆறு மாதத்திற்கு எனக்கு எதுவுமே தெரியாது. ஏராளமான அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், சமூகத்தின் பல்வேறு தரப்பினர் எனது வீட்டுக்கு வந்தனர், பேசினர், போயினர். என்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே எனக்கு அப்போது தெரியவில்லை.

உண்மையில் நவம்பர் 26ம் தேதி என்ன நடந்தது எனக்கு யாருமே சொல்லவில்லை. இந்த நாள் வரை எந்த ஒரு மூத்த காவல்துறை அதிகாரியும், எனது கணவருக்கு என்ன நேர்ந்தது என்பதை என்னிடம் விளக்கவில்லை. பத்திரிக்கைச் செய்திகள், நாளிதழ் செய்திகள் உள்ளிட்டவை மூலம்தான் எனக்கு மும்பைச் சம்பவம் குறித்த விவரங்கள் தெரிய வந்ன. இந்த நிமிடம் வரை சம்பவத்தன்று நடந்த எதுவுமே எனக்கு தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் சில அரசியல்வாதிகள், எனது கணவரும், அவருடன் தீவிரவாதிகளுடன் மோதச் சென்ற இரு போலீஸ் உயர் அதிகாரிகளும் அவசரம் அவசரமாக செயல்பட்டனர். போதிய தகவல்களைச் சேகரித்துக் கொள்ளாமல் அவசர கோலத்தில் செயல்பட்டனர் என்று சொல்ல ஆரம்பித்த பின்னர்தான் எனக்கு அன்றைய சம்பவங்கள் குறித்து நிறையத் தெரிய வந்தது.

எனது கணவரும் காம்தே, சலஸ்கர் ஆகியோர் காமா மருத்துவமனை அருகே முகாமிட்டு தீவிரவாதிகளை சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக கூடுதல் படையினரைக் கோரியுள்ளனர். ஆனால் கிட்டத்தட்ட 40 நிமிடங்களாக அவர்களுக்கு கூடுதல் படையினர் அனுப்பப்படவில்லை. உதவி கோரியும் முக்கால் மணி நேரமாக அவர்களுக்கு அது வந்து சேரவில்லை. ஏன் அந்த 40 நிமிடமாக யாரும் அவர்களுக்கு உதவவில்லை, கூடுதல் படையினர் அனுப்பப்படவில்லை. இந்த கேள்விக்கு இதுவரை எனக்கு பதில் கிடைக்கவில்லை.

தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின்போது எனது கணவருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து விரிவாக விளக்க முடியாது என்று சில காவல்துறை அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர்.
கர்கரே காயமடைந்த நிலையில் கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கும் மேலாக போராடிக் கொண்டிருந்தார். ஆனால் அவரை உரிய நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவில்லை. காமா மருத்துவமனை வளாகத்தில் கிட்டத்தட்ட 40 நிமிடமாக எனது கணவரும், காம்தே, சலஸ்கர் உள்ளிட்டோரும் உதவி கிடைக்காமல் துடித்துள்ளனர். ஏன் அவர்களுக்கு யாரும் உதவவில்லை.

அதை விட கொடுமையாக இந்த மூன்று அதிகாரிகளும் உயிரிழந்த நிலையில் கிடந்தபோது கிட்டத்தட்ட 40 நிமிடமாக உடல்களை எடுக்கக் கூட யாரும் வரவில்லை. ஏன்?

தாக்குதல் நடத்திய 9 தீவிரவாதிகளின் உடல்களை இன்று பெரும் பணத்தை செலவழித்து பத்திரப்படுத்தி பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம். சர்வதசே அரங்கில் நாம் மனிதாபிமானம் மிக்கவர்கள் என்பதைக் காட்டுவதற்காக இவ்வாறு செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் தியாகம் செய்து உயிர் நீத்த அந்த மூன்று அதிகாரிகளின் உடல்களை கிட்டத்தட்ட 40 நிமிடம் யாருமே தொடக் கூட வராததன் காரணம் என்ன. நமது நாட்டில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது. எப்போதுதான் இது மாறப் போகிறது? என்றார் கவிதா.
தனது பேச்சு முழுவதும் கண்களில் கண்ணீர் ததும்பக் காணப்பட்டார் கவிதா கர்கரே.
source:thatstamil

முஸ்லிம் லீக் கட்சி - போலீசார் மோதல் இருவர் பலி; 15 போலீசார் படுகாயம்




நவம்பர் 19,2009,00:00 IST

Important incidents and happenings in and around the world

காசர்கோடு : முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், இருவர் பலியானார். கேரள மாநிலம் வடக்கு பகுதியில், காசர்கோட்டில் முஸ்லிக் லீக் மாநில தலைவர் ஹைதர் அலி சிகாப் தங்கல், பொதுச் செயலர் குஞ்ஞாலிக் குட்டி ஆகியோருக்கு, கட்சியின் மாவட்ட கமிட்டி மூலம் பலத்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சி, காசர்கோடு புதிய பஸ் நிலையம் அருகே, நேற்று முன்தினம் இரவு நடந்தது. நிகழ்ச்சி ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, அதற்கு சில மீட்டர் தூரத்தில், ஒரு பிரிவினர் அங்கிருந்த கடைகள் மீது, திடீரென கல் வீசித் தாக்குதல் நடத்தினர்.

அங்கு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதில், அக்கும்பலுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. அக்கும்பல், போலீசார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர்.

போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், காசர்கோடைச் சேர்ந்த முகமது ஷபீக் (22) என்பவர் பலியானார். கத்திக் குத்து காயங்களுடன் இருவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், முகமது அஸ்கர்(26) என்பவர் இறந்தார். இச்சம்பவத்தில், 15 போலீசார் காயமுற்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் பலியான முகமது ஷபீக், அரேபிய நாட்டில் பணியாற்றி வந்தார். திருமணத்திற்காக, இரண்டு வாரங்கள் முன் தான் ஊருக்குத் திரும்பினார். முஸ்லிம் லீக் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நிலையில், போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. காயமுற்ற போலீசார், மங்களூரில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்

வேகமாகப் பரவும் இனிய மார்க்கம் இஸ்லாம்.

மேற்கத்தியக் கலாச்சாரம் முன்வைக்கும் வாழ்க்கை முறையினால் நம்பிக்கை
இழந்துபோய் 14,000த்திற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இஸ்லாத்தில்
இணைந்துள்ளதாக ஆதாரப் பூர்வமான ஆய்வுகள் இப்போது வெளிவந்துள்ளன. "இவ்வாறு
இஸ்லாத்தில் இணைந்துள்ளவர்களில் பல பிரபலங்கள் இருப்பது, முஸ்லிம்கள்
தீவிரவாதிகள் எனும் பொய்ப் பிரச்சரத்திற்கும் அவதூறுக்கும் ஆளாகி
அச்சமுற்ற நிலையில் வாழும் முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் ஊட்டச்
சக்தியாகத் திகழ்கிறது" என்று முஸ்லிம் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உண்மையான இஸ்லாத்தை பிரிட்டிஷ் வெள்ளையர்களுக்கு விளக்கிச் சொல்லும் பெரு
முயற்சியில் உள்ள பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்ஸில், பிரிட்டனின் முன்னாள்
சுகாதார அமைச்சரின் மகன் அஹ்மத் டோப்ஸன் என்பாரைத் தமது புதிய குழுவின்
தலைவராக நியமித்துள்ளது.

முன்னாள் பிபிசி இயக்குனர் யஹ்யா பிரிட் (ஜொனாதன் பிரிட்),
கிருத்துவத்தில் இருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்கள் பற்றிய தமது தொடர்
ஆய்வுகள் மூலம் இஸ்லாத்தைத் தழுவிய புதிய முஸ்லிம்கள் எண்ணிக்கை மொத்தம்
14,200 என்று தீர்மானித்துள்ளார். இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்கள்
பற்றிக் சென்ற வாரம் குறிப்பிடுகையில், "அமெரிக்காவில் மால்கம் எக்ஸ்
(Malcom X) இஸ்லாத்தில் இணைந்து அமெரிக்கக் கருப்பினத்தவர்களுக்கு நலன்
சேர்த்தார். மேலும், இஸ்லாத்தைத் தற்போது இங்குப் பார்க்கப் படும்
அந்நியத் தன்மை போலல்லாமல், ஒரு தேசிய அளவிலான மார்க்கமாக அங்கு
மாற்றியிருந்தார். அதுமட்டுமின்றி, இஸ்லாத்தின் சமநிலையான சீரமைப்பு,
உறுதியான நம்பிக்கை, அதன் அழுத்தமான ஆன்மீகம் ஆகியன தமக்கு எவ்வாறு
மனநிறைவைத் தந்தன என்பதையும் அவர் விளக்கிச் சொன்னார். பிரிட்டனிலுள்ள
வெள்ளையர்களை இஸ்லாத்தின்பால் இலகுவாகக் கொண்டுவர அவரைப் போன்ற ஒரு
தலைவர் இங்குத் தேவை" எனும் கருத்தை பிரிட் வலியுறுத்தினார்.

ஹெர்பர்ட் ஹென்ரியின் கொள்ளுப் பேத்தியான எம்மா கிளார்க்கும் இஸ்லாத்தைத்
தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். முன்பு வேல்ஸ்
இளவரசரின் தோட்டங்களின் வடிவமைப்புப் பொறுப்பில் இருந்த இவர், தற்போது
ஒரு பள்ளிவாசல் தோட்டத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். சில
நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களிடம் உரையாடும்போது, "நான் இஸ்லாத்தை
ஏற்றது சந்தேகத்தின் பிடியில் சிக்கியிருந்த மேற்கத்தியக் கலாச்சர
நெறிமுறைகளில் இருந்து மிகவும் வெறுப்புற்றதாலும் அதனைச் சுற்றியுள்ள
அசிங்கங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே" என்று
குறிப்பிட்டார். இவருடைய பாட்டனார் ஹெர்பர்ட் 1908 முதல் 1916 வரை
பிரிட்டனுடைய பிரதமராக இருந்து, முதல் உலகப் போரில் பிரிட்டனுடைய வெற்றி
வாகைக்குத் தலைமை வகித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இஸ்லாத்தைத் தழுவியவர்களில் பெரும்பாலோர் சார்ல்ஸ் ஈஸ்டன் எழுதிய 'Islam
and the Destiny of Man' (இஸ்லாமும் மனித விதியும்) எனும் புத்தகத்தினால்
மிகவும் ஈர்க்கப் பட்டவர்கள் ஆவர். "எனக்கு வரும் ஆயிரக்கணக்கான
கடிதங்களில், மனிதர்களின் மனோஇச்சைகளைப் பின்பற்றிடும் சமகாலக்
கிருத்துவத்தின் நடைமுறையில் நம்பிக்கையிழந்து விட்ட நிலையில், அதுவல்லாத
இதைப் போன்ற ஓர் உண்மை மார்க்கத்தைத்தான் தேடினோம் என்ற கருத்து பரவலாக
வெளிப்படுத்தப் பட்டுள்ளது" என்று ஈஸ்டன் கூறுகிறார்.

இஸ்லாத்தைத் தழுவிய The earl of Yarbrough (எர்ல் ஆஃப் யார்ப்ரௌஹ்) எனும்
லின்கன்ஷைரிலுள்ள 28000 ஏக்கர் நிலச்சுவான்தார் ஒருவர்
பத்திரி்கையாளர்களிடம் பேசும்போது, "நான் எனது பெயரை அப்துல் மத்தீன்
என்று மாற்றியுள்ளேன். இஸ்லாத்தை ஆய்வு செய்யுங்கள்; அதன் அழகிய தன்மையை
நீங்கள் உணர்வீர்கள் என்பதே நான் உங்களுக்குச் சொல்ல விரும்பும்
செய்தியாகும்" என்று கூறினார். மாண்புமிகு அரசியவர்கள் பக்கிங்கம்
( Buckingham Palace) அரண்மனையில் வேலை செய்பவர்களுக்கு வெள்ளிக்கிழமைத்
தொழுகையை நிறைவேற்றிட நேரம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் என்பது
மகிழ்வளிக்கும் தகவலாகும்!.

இங்குக் குறிப்பிடப் பட்டுள்ளவர்கள் பிரிட்டன் அரசாங்கத்தின் நேரடித்
தொடர்பில் உயர்பதவிகளும் அந்தஸ்துகளும் தலைமைத்துவமும் அதிகாரமும் பெற்று
நாடாளுமன்ற ஆட்சி அவைகளில் அமர்ந்திருந்த செல்வந்த மூதாதையரின்
வழிவந்தவர்கள் ஆவார்கள். அவர்களது நாடு எப்போதும் வேறு யாராலும் ஆட்சி
செய்யப் படாத ஒரு நாடு. அப்படிப் பட்டவர்களின் வழித்தோன்றல்களுக்கு
என்னதான் நேர்ந்தது? அவர்களை அதிகாரம் மூலம் பலவந்தமாக இஸ்லாத்தைத்
தழுவிட எவரும் நிர்ப்பந்திக்க வில்லை!

"எங்களுடைய உள்ளங்களுக்குக் கிடைக்கப்பெற்ற விவரிக்க இயலாத மன நிறைவின்
வெளிபாட்டின் விளைவே எங்களது இஸ்லாத்தின் தேர்வாகும். இவ்வளவுக்கும்
பின்னர் வெட்கம், பச்சாதாபம், தாழ்வு மனப்பான்மை போன்ற காரணங்களோ பிறர்
என்ன நினைப்பார்கள் என்ற அச்ச உணர்வோ எனது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு
விடும் என்ற எண்ணமோ என்னை சக ஊழியர்களுக்கு மத்தியில் ஜும்மா தொழுகை
நிறைவேற்றிடாமல் தடுத்திட முடியாது - அதுவும் அரசாங்கத் தலைமையகமாகிய
பக்கிங்கம் பாலஸில் எனக்குத் தொழுகின்ற வசதி செய்து கொடுக்கப் பட்டு
இருக்கின்றது எனும் நிலையில்" எனக் கூறுகின்றார் அரண்மனை ஊழியர்களில்
ஒருவர்.

கள ஆய்வு : முஹம்மத் மாலிக் முஹம்மத் ஆரிஃப்

AMZATH KHAN

Sunday, November 15, 2009

கோவை வணிக வளாக வெடிகுண்டு வழக்கு அல்-உம்மா தலைவர் அன்சாரி உட்பட 10 பேர் விடுதலை தனி நீதி மன்றம் இன்று தீர்ப்பு

கோவை, நவ. 12லி கோவை கிளாசிக் டவர் அருகே வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட வழக்கில் கைதான அல் உம்மா தலைவர் முகம்மது அன்சாரி உட்படட 10 பேரை விடுதலை செய்து தனி நீதி மன்றம் இன்று தீர்ப்பளித்தது.
கோவை திருச்சி ரோட்டில் உள்ள கிளாசிக் டவர் அருகில் புதரில் கடந்த 1997ம் ஆண்டு டிசம்பர் 1 ம் தேதி வெடிக்குண்டுகள் கைப்பற்றப்பட்டன.இது தொடர்பாக அல் உம்மா தலைவர் முகம்மது அன்சாரி, சேட்டு என்ற சாந்துமுகம்மது, அப்துல் ஒசீர், முகம்மது பாசித், ஜஹாங்கீர்,யூசுப் ஷாஜகான், முகம்மது அலிகான் குட்டி, சம்ஜத் அகமது, நவாப்கான், ரியாசுல் ரகுமான். ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவாகள் மீது வெடிகுண்டு தடுப்பு சட்டம் மற்றும் கொலை முயற்சி உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.கோவை தனி நீதிமன்றத்தில் வழக்ககு விசாரணை நடந்தது. அரசு தரப்பில் 42 பேர் சாட்சியம் அளித்தினர். இந்த வழக்கில் நீதிபதி கணேசன் இன்று தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் சரிவர குற்றங்கள் நிருபிக்கப்படாதால் 10 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த 10 பேரும் கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர். இதில் யுசுப் ஷாஜகான் மட்டும் தண்டனை முடிந்து விடுதலையானார். மற்றவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.