அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, January 31, 2009

ஆங்கில பாடப் பயிற்சி 15 (was/were going to)

இன்று நாம் Grammar Patterns -1 றின் பதினான்காவதாக அமைந்திருக்கும் வாக்கியத்தை விரிவாகக் கற்போம்.

இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்திற்கு நீங்கள் புதிய வருகையாளர் என்றால், உங்கள் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்து தொடர்வதே பயனுள்ளதாக இருக்கும். முக்கியமாகக் "கிரமர் பெட்டன்களை" மனனம் செய்துக்கொள்ளுங்கள்.

சரி இன்றைய பாடத்திற்குச் செல்வோம்.

நாம் கடந்தப் பாடத்தில் “am/is/are going to” எனும் வாக்கிய அமைப்புகள் பற்றி கற்றோம். அவை எதிர்காலப் பயன்பாடுகளுக்கு உரியவை.

இன்று நாம் “was/were going to” என்பதன் பயன்பாட்டை விரிவாகப் பார்ப்போம்.

14. I was going to do a job.
நான் செய்யப்போனேன் ஒரு வேலை.

இவ்வாக்கிய அமைப்புகளின் பயன்பாடானது நாம் ஏதாவது ஒரு செயலை செய்ய திட்டமிட்டிருப்போம் (எதிர்காலத்தில் நிறைவேற்றுவதற்கு) ஆனால் அத்திட்டம் நிறைவேறாமல் அல்லது செயல்படுத்த முடியாமல் போயிருக்கும். இவ்வாறான வாக்கிய அமைப்புக்களை “The Future in the Past” என்கின்றனர்.

உதாரணம்:

I was going to visit to Tamil Nadu, but I couldn't get a visa.
நான் (பார்க்க) போகப்போனேன் தமிழ்நாட்டிற்கு ஆனால் எனக்கு கிடைக்கவில்லை வீசா.

I was going to watch a movie, but there wasn't enough time.
நான் பார்க்கப்போனேன் ஒரு திரைப்படம், ஆனால் நேரம் போதுமானதாக இருக்கவில்லை.

நான் (பார்க்க) போகப்போனேன் தமிழ்நாட்டிற்கு. இதில் “போகப்போனேன்” எனும் சொல், போகத் திட்டமிட்டிருந்தேன் எனும் பொருளிலேயே பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்க.

Positive (Affirmative)
Subject + Auxiliary verb + going to + Main verb
1. I/ He/ She/ It + was + going to + do a job.
2. You/ We/ They + were + going to + do a job.

Negative
Subject
+ Auxiliary verb + not + going to + Main verb
1. I/ He/ She/ It + was + not + going to + do a job.
2. You/ We/ They + were + not + going to + do a job.

Question (Interrogative)
Auxiliary verb + Subject + going to + Main verb
1. Was + I/ he/ she/ it + going to + do a job?
2. Were + you/ we/ they + going to + do a job? இவற்றில் "Auxiliary verb "துணை வினை வாக்கியத்தின் ஆரம்பித்திலும் “Subject” ற்கு பின்னால் "going to" வந்துள்ளதையும் அவதானியுங்கள்.

இன்றையப் பாடத்தில் “First Person Singular and Third person Singular”, “Second Person Singular and Plural” போன்றவற்றின் போது ஏற்படும் வேறுப்பாடுகளைக் கீழே காட்டப்பட்டுள்ளது.

ஒலிவடிவிலும் பயிற்சி செய்யலாம் (Listening Practice)

Future in the Past...


பகுதி 1

Was I going to do a job?
நான் செய்யப்போனேனா ஒரு வேலை?
Yes, I was going to do a job.
ஆம், நான் செய்யப்போனேன் ஒரு வேலை.
No, I was not going to do a job. (wasn’t)
இல்லை, நான் செய்யப்போகவில்லை ஒரு வேலை.

Was he going to go to school?
அவன் போகப்போனானா பாடசாலைக்கு?
Yes, he was going to go to school.
ஆம், அவன் போகப்போனான் பாடசாலைக்கு.
No, he wasn’t going to go to school. (was + not)
இல்லை, அவன் போகப்போகவில்லை பாடசாலைக்கு.

Was she going to learn English?
அவள் கற்கப்போனாளா ஆங்கிலம்?
Yes, she was going to learn English.
ஆம், அவள் கற்கப்போனாள் ஆங்கிலம்.
No, she wasn’t going to learn English. (was + not)
இல்லை, அவள் கற்கப்போகவில்லை ஆங்கிலம்.

பகுதி 2

Were you going to do a job?
நீ செய்யப் போனாயா ஒரு வேலை?
Yes, you were going to do a job.
ஆம், நீ செய்யப்போனாய் ஒரு வேலை.
No, you weren’t going to do a job. (were + not)
இல்லை, நீ செய்யப்போகவில்லை ஒரு வேலை.

Were we going to speak in English?
நாங்கள் பேசப்போனோமா ஆங்கிலத்தில்?
Yes, we were going to speak in English.
ஆம், நாங்கள் பேசப்போனோம் ஆங்கிலத்தில்.
No, we weren’t going to speak in English. (were + not)
இல்லை, நாங்கள் பேசப்போகவில்லை ஆங்கிலத்தில்.

Were they going to learn English grammar?
அவர்கள் படிக்கப்போனார்களா ஆங்கில இலக்கணம்?
Yes, they were going to learn English grammar.
ஆம், அவர்கள் படிக்கப்போனார்கள் ஆங்கில இலக்கணம்.
No, they weren’t going to learn English grammar. (were + not)
இல்லை, அவர்கள் படிக்கப்போகவில்லை ஆங்கில இலக்கணம்.

இப்பொழுது கீழே இருபத்தைந்து “Affirmative Sentences” வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பயிற்சி செய்வோம்.

1. I was going to join the military.
நான் சேரப்போனேன் இராணுவத்தில்.

2. I was going to tell a lie.
நான் சொல்லப்போனேன் ஒரு பொய்.

3. I was going to die in the accident.
நான் சாகப்போனேன் விபத்தில்.

4. I was going to fly to Canada
நான் பறக்கப்போனேன் கனடாவிற்கு.

5. I was going to go on vacation.
நான் போகப்போனேன் விடுமுறையில்

6. I was going to say my love.
நான் சொல்லப்போனேன் எனது காதலை.

7. I was going to send a SMS.
நான் அனுப்பப்போனேன் ஒரு குறுந்தகவல்.

8. I was going to go to university.
நான் போகப்போனேன் பல்கலைக் கழகத்திற்கு.

9. I was going to buy a BMW car.
நான் வாங்கப்போனேன் ஒரு BMW மகிழூந்து.

10. I was going to wash the dishes.
நான் கழுவப்போனேன் தட்டுகளை.

11. I was going to write my autobiography.
நான் எழுதப்போனேன் எனது சுயசரிதையை.

12. I was going to go swim in the sea.
நான் நீந்தப்போனேன் கடலில்.

13. I was going to play in the playground
நான் விளையாடப்போனேன் விளையாட்டு மைதானத்தில்

14. I was going to buy a motorcycle.
நான் வாங்கப்போனேன் ஒரு உந்துருளி.

15. I was going to miss the bus.
நான் தவறவிடப்போனேன் பேரூந்தை.

16. I was going to fight with them.
நான் சண்டையிடப்போனேன் அவர்களுடன்.

17. I was going to waste my time.
நான் வீணடிக்கப்போனேன் எனது நேரத்தை.

18. I was going to seek political asylum in Thailand.
நான் அரசியல் புகலிடம் கோரப்போனேன் தாய்லாந்தில்.

19. I was going to watch a movie
நான் பார்க்கப்போனேன் ஒரு திரைப்படம்.

20. I was going to go to the party
நான் போகப்போனேன் விருந்துபச்சார நிகழ்விற்கு

21. I was going to join the gym.
நான் சேரப்போனேன் தேகப் பயிற்சிச் சாலையில்.

22. I was going to die in Sri Lankan air raid
நான் சாகப்போனேன் சிறி லங்கா விமானத் தாக்குதலில்.

23. I was going to kill him
நான் கொல்லப்போனேன் அவனை.

24. I was going to take some photos
நான் எடுக்கப்போனேன் சில புகைப்படங்கள்.

25. I was going to travel around the world.
நான் பிரயானம் செய்யப்போனேன் உலகம் சுற்றிலும். (முழுவதும்)

Homework:

1. மேலே நாம் கற்ற 25 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள்.

2. மேலும் He, She, It, You, They, We போன்றச் சொற்களை இணைத்து வாக்கியங்கள் அமைத்து பயிற்சிப் பெறுங்கள்.

3. உங்கள் வாழ்க்கையில் (அதைச் செய்யப்போனேன், இதைச் செய்யப்போனேன் என) நீங்கள் வகுத்த எத்தனையோ எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், எதிர்ப்பார்ப்புக்கள் இருந்திருக்கும், அவற்றில் நிறைவேறாமல் போனவைகளைப் பட்டியல் இட்டுக்கொள்ளுங்கள். பின் அவற்றை இன்று நாம் கற்றதுப் போன்று ஆங்கிலத்தில் எழுதிப் பயிற்சி செய்யுங்கள்.

4. கீழுள்ளவாறு நீண்ட சொற்தொடர்களாகவும் எழுதி பயிற்சி செய்யலாம்.

I was going to visit my uncle in Point Pedro last year, but I couldn't get the pass.
நான் பார்க்கப் போகப்போனேன் என் மாமாவை பருத்தித்துறையில், ஆனால் எனக்கு கிடைக்கவில்லை பயன அனுமதி. (எனவே மாமாவை பார்க்கும் திட்டம் நிறைவேறவில்லை)

I was going to wash the dishes, but there wasn't enough time.
நான் கழுவப்போனேன் தட்டுகளை, ஆனால் நேரம் (போதுமானதாக) இருக்கவில்லை.

I was going to rent a motorbike but I rented a car instead.
நான் வாடகைக்கு எடுக்கப்போனேன் ஒரு உந்துருளி ஆனால் (அதற்குப்) பதிலாக வாடகைக்கு எடுத்தேன் ஒரு மகிழூந்து.

I was going to take some photos but I forgot my camera.
நான் எடுக்கப்போனேன் சில புகைப்படங்கள் ஆனால் நான் மறந்துவிட்டேன் புகைப்படக் கருவியை.

I was going to go to Kowloon park but I had homework to do at home.
நான் போகப்போனேன் கவ்லூன் பூங்காவிற்கு ஆனால் எனக்கு இருந்தது வீட்டுப் பாடங்கள் செய்வதற்கு வீட்டில்.

கவனிக்கவும்:

இன்றைய வாக்கிய அமைப்புகளில் (Forms) பயன்படுத்தப்பட்டிருக்கும், செய்யப்போனேன், போகப்போனேன், எடுக்கப்போனேன், பார்க்கப்போனேன் போன்ற சொற்தொடர்கள் ஒரு செயலை செய்ய எத்தனித்தேன், தயாரானேன் அல்லது முயற்சித்தேன் போன்ற அர்த்தங்களிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.

went - போனேன்

“போனேன்” எனும் இறந்தக்கால வினைச் சொல்லாக இங்கே பயன்படவில்லை என்பதை நினைவில் கொள்க.

வரைப்படம்

மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

இன்றையப் பாடம் தொடர்பான சந்தேகங்கள் கேள்விகள் இருப்பின் வழமைப்போல் பின்னூட்டம் இட்டோ மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.

நன்றி

அன்புடன் ஆசிரியர் அருண் HK Arun

ஆங்கில பாடப் பயிற்சி 14 (Future "going to")

ஆங்கில பாடப் பயிற்சி 14 (Future "going to")

இன்று நாம் Grammar Patterns -1 றின் பதின்மூன்றாவதாக அமைந்திருக்கும் வார்த்தையை விரிவாக கற்கப் போகின்றோம்.

இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்திற்கு நீங்கள் புதிதாக வருகைத் தந்தவரானால் உங்கள் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்து தொடர்வதே பயனுள்ளதாக இருக்கும். முக்கியமாக "கிரமர் பெட்டன்களை" மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள்.

சரி இன்றையப் பாடத்திற்குச் செல்வோம்.

13. I am going to do a job.
நான் செய்யப் போகின்றேன் ஒரு வேலை.

ஆங்கிலத்தில் எதிர்காலச் சொற் பிரயோகங்களை ஆறு வெவ்வேறு விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது அவை:

1. Future “will”
2. Future “going to” (இன்றைப்பாடம்)
3. Present continuous used as future
4. Future continuous
5. Future perfect simple
6. Future perfect continuous

இவற்றில் நாம் இன்று கற்கப்போவது “going to” என்பதன் பயன்பாடு பற்றி மட்டுமே. "going to" என்பது (வினைச்சொற்களின்) காலத்தைக் குறிப்பதல்ல என்றாலும் அது எதிர்கால எண்ணங்களை, திட்டங்களை வெளிப்படுத்திப் பேசுவதற்கான ஒரு சிறப்பு சொற்பிரயோகமாகும். (Going to is not a tense. It is a special expression to talk about the future.)

“going to” என்பதன் பயன்பாட்டை இரண்டு விதமாகப் பிரித்துப் பார்க்கலாம்.

1. ஏற்கெனவே திட்டமிட்ட ஒரு செயலை செய்யத் தயாராவதை அல்லது செய்ய முயற்சிப்பதை வெளிப்படுத்துவதற்கு. (planned actions in the future)

உதாரணம்:

I am going to buy a new car tomorrow.
நான் வாங்கப்போகின்றேன் ஒரு புதிய மகிழூந்து நாளை.

2. ஏற்கெனவே எதிர்ப்பார்த்த ஒன்று நடக்கப்போகின்றது என்பதை முன்னதாகவே அறிவித்தல், முன்னதாகவே எண்ணத்தை வெளிப்படுத்தல் போன்றவற்றிற்கு. (சோதிடம், சாதகம்) (something is going to happen in the future)

உதாரணம்:

Look at that cloud. I think it is going to rain.
பார் அந்த மேகத்தை. நான் நினைக்கிறேன் மழைப் பெய்யப் போகின்றது.

Positive (Affirmative)
Subject + Auxiliary verb + going to + Main verb
1. I + am + going to + do a job
2. He/ She/ It + is + going to + do a job.
3. You/ We/ They + are + going to + do a job.

Negative
Subject
+ Auxiliary verb + not + going to + Main verb
1. I + am + not + going to + do a job
2. He/ She/ It + is + not + going to + do a job.
3. You/ We/ They + are + not + going to + do a job.

Question (Interrogative)
Auxiliary verb + Subject + going to + Main verb
1. Am + I + going to + do a job?
2. Is + he/ she/ It + going to + do a job?
3. Are + you/ we/ they + going to + do a job? இவற்றில் "Auxiliary verb "துணை வினை வாக்கியத்தின் ஆரம்பித்திலும் “Subject” இற்கு பின்னால் "going to" வந்துள்ளதையும் அவதானியுங்கள்.

இன்றையப் பாடத்தில் First Person Singular, Third person Singular, Second Person Singular and Plural போன்றவற்றின் பயன்பாடுகளைக் கவனியுங்கள். இவற்றை மூன்று பகுதிகளாக வேறுப்படுத்திக் கீழே காட்டப்பட்டுள்ளது.

பகுதி 1

Are you going to do a job?
நீ செய்யப்போகின்றாயா ஒரு வேலை?
Yes, I am going to do a job. (I’m)
ஆம், நான் செய்யப்போகின்றேன் ஒரு வேலை.
No, I am not going to do a job. (I’m not)
இல்லை, நான் செய்யப்போவதில்லை ஒரு வேலை.

Are you going to speak in English?
நீ பேசப்போகின்றாயா ஆங்கிலத்தில்?
Yes, I am going to speak in English. (I’m)
ஆம், நான் பேசப்போகின்றேன் ஆங்கிலத்தில்.
No, I am not going to speak in English. (I’m not)
இல்லை, நான் பேசப்போவதில்லை ஆங்கிலத்தில்.

Are you going to learn English grammar through Tamil?
நீ கற்கப்போகின்றாயா ஆங்கில இலக்கணம் தமிழ் மூலமாக?
Yes, I am going to learn English grammar through Tamil. (I’m)
ஆம், நான் கற்கப்போகின்றேன் ஆங்கில இலக்கணம் தமிழ் மூலமாக.
No, I am not going to learn English grammar through Tamil. (I’m not)
இல்லை, நான் கற்கப்போவதில்லை ஆங்கில இலக்கணம் தமிழ் மூலமாக.

பகுதி 2

Is he going to do a job?
அவன் செய்யப்போகின்றானா ஒரு வேலை?
Yes, he is going to do a job. (he’s)
ஆம், அவன் செய்யப்போகின்றான் ஒரு வேலை.
No, he is not going to do a job. (isn’t)
இல்லை, அவன் செய்யப்போவதில்லை ஒரு வேலை.

Is she going to go to school?
அவள் போகப்போகின்றாளா பாடசாலைக்கு?
Yes, she is going to go to school. (she’s)
ஆம், அவள் போகப்போகின்றாள் பாடசாலைக்கு.
No, she is not going to go to school. (isn’t)
இல்லை, அவள் போகப்போவதில்லை பாடசாலைக்கு.

Is it going to rain?
மழைப் பெய்யப்போகின்றதா?
Yes, it is going to rain. (it’s)
ஆம், மழைப் பெய்யப்போகின்றது.
No, it is not going to rain. (isn’t)
இல்லை, மழைப் பெய்யப்போவதில்லை.

பகுதி 3

Are they going to do a job?
அவர்கள் செய்யப்போகின்றார்களா ஒரு வேலை?
Yes, they are going to do a job. (they’re)
ஆம், அவர்கள் செய்யப்போகின்றார்கள் ஒரு வேலை.
No, they are not going to do a job. (aren’t)
இல்லை, அவர்கள் செய்யப்போவதில்லை ஒரு வேலை.

Are they going to speak in English?
அவர்கள் பேசப்போகின்றார்களா ஆங்கிலத்தில்?
Yes, they are going to speak in English. (they’re)
ஆம், அவர்கள் பேசப்போகின்றார்கள் ஆங்கிலத்தில்.
No, they are not going to speak in English. (aren’t)
இல்லை, அவர்கள் பேசப்போவதில்லை ஆங்கிலத்தில்.

Are we going to win?
நாங்கள் வெற்றிபெறப் போகின்றோமா?
Yes, we are going to win. (we’re)
ஆம், நாங்கள் வெற்றிபெறப் போகின்றோம்.
No, we are not going to win. (aren’t)
இல்லை, நாங்கள் வெற்றிபெறப் போவதில்லை.

இப்பொழுது “Affirmative Sentences” வாக்கியங்கள் இருபத்தைந்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பயிற்சி செய்வோம்.

1. I am going to sing at the party.
நான் பாடப்போகின்றேன் விருந்துபச்சார நிகழ்வில்.

2. I am going to see him today evening.
நான் பார்க்கப்போகின்றேன் அவனை இன்று மாலை.

3. I am going to have lunch with my customer.
நான் (பகல் சாப்பாடு) சாப்பிடப்போகின்றேன் எனது வாடிக்கையாளருடன்.

4. I am going to fly to Germany
நான் பறக்கப்போகின்றேன் யேர்மனிக்கு.

5. I am going to go on vacation.
நான் போகப் போகின்றேன் (ஓய்வு நாட்களில்) விடுமுறையில்

6. I am going to see what he can do.
நான் பார்க்கப்போகின்றேன் அவனுக்கு என்ன செய்ய முடியும் (என்று)

7. I am going to talk in the meeting.
நான் பேசப்போகின்றேன் கூட்டத்தில்.

8. I am going to visit PKP’s blog.
நான் பார்வையிடப்போகின்றேன் PKP யின் வலைப்பதிவை.

9. I am going to buy a BMW car.
நான் வாங்கப்போகின்றேன் ஒரு BMW மகிழூந்து.

10. I am going to help to Sensolai.
நான் உதவப்போகின்றேன் செஞ்சோலைக்கு.

11. I am going to write an English grammar book.
நான் எழுதப்போகின்றேன் ஓர் ஆங்கில இலக்கணப் புத்தகம்.

12. I am going to go swimming.
நான் போகப்போகின்றேன் நீந்துவதற்கு.

13. I am going to paint the house
நான் வர்ணம் பூசப்போகின்றேன் வீட்டிற்கு.

14. I am going to paint my bedroom tomorrow.
நான் வர்ணம் பூசப்போகின்றேன் எனது படுக்கை அறைக்கு.

15. I am going to miss the train.
நான் தவறவிடப்போகின்றேன் தொடரூந்தை.

16. I am going to tell history of Tamil.
நான் கூறப்போகின்றேன் தமிழின் வரலாற்றை.

17. I am going to help to people.
நான் உதவப்போகின்றேன் மக்களுக்கு.

18. I am going to get down meals from canteen.
நான் எடுபிக்கப்போகின்றேன் உணவு சிற்றுண்டிசாலையிலிருந்து.

19. I am going to watch a movie
நான் பார்க்கப்போகின்றேன் ஒரு திரைப்படம்.

20. I am going to climb that mountain one day
நான் ஏறப்போகின்றேன் அந்த மலைக்கு ஒரு நாள். (ஒரு நாளைக்கு)

21. I am going to leave from Sri Lanka.
நான் வெளியேறப்போகின்றேன் இலங்கையிலிருந்து.

22. I am going to start our own business.
நான் ஆரம்பிக்கப்போகின்றேன் எங்கள் சொந்த வியாபாரத்தை.

23. I am going to make jam
நான் தயாரிக்கப்போகின்றேன் பழக்கூழ்.

24. I am going to play golf with Sarmilan
நான் விளையாடப்போகின்றேன் குழிப்பந்தாட்டம் சர்மிலனுடன்.

25. I am going to win the world.
நான் வெல்லப்போகின்றேன் உலகை.

Homework:

1. மேலே நாம் கற்ற 25 வாக்கியங்களையும் இப்பொழுது கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்துப் பாருங்கள்.

2. மேலும் He, She, It, You, They, We போன்றவற்றைப் பயன்படுத்தி வாக்கியங்கள் அமைத்துப் பயிற்சி செய்யுங்கள்.

3. அவற்றை கேள்வி பதிலாக மாற்றி எழுதியும் பேசியும் பயிற்சிப் பெறுங்கள். கேள்வி பதிலாக மாற்றிப் பயிற்சிப்பெறும் பொழுது நாம் இன்று கற்ற உதாரணங்களைக் கவனித்து பயிற்சி செய்யவும்.

4. கீழுள்ளவாறு நீண்ட சொற்தொடர்களாகவும் எழுதி பயிற்சி செய்யலாம்.

Good idea, I am going to bring some vine.
நல்ல யோசனை, நான் கொண்டுவரப்போகின்றேன் கொஞ்சம் திராட்சைப் (புளிக்கவைத்த) பழச்சாறு.

I think it is going to rain.
நான் நினைக்கிறேன் மழைப் பெய்யப்போகின்றது.

Look at this car! It is going to crash into the tree.
பார் அந்த மகிழூந்தை! அது மோதப்போகின்றது அந்த மரத்தினில்.

He is going to become a dentist when he grows up.
அவன் ஒரு பல்வைத்தியராகப்போகின்றான் அவன் வளர்ந்து பெரியவனாகும் பொழுது.

What are you going to do when you get your degree?
நீ என்ன செய்யப்போகின்றாய் உனது (பல்கலைக் கழகப்) பட்டம் பெறும் பொழுது?

What kind of jam are you going to make?
என்ன வகையான பழக்கூழ் நீ தயாரிக்கப்போகின்றாய்?

குறிப்பு -1:

1. நான் செய்யப் போகின்றேன், போகப்போகின்றேன், பாடப்போகின்றேன், பார்க்கப்போகின்றென் எனும் வார்த்தைகளைச் சற்று பாருங்கள். இவற்றில் “போகின்றேன்” எனும் ஒருச்சொல் இவ்வாக்கியங்களுடன் இணைந்து பயன்படுகின்றது. அதாவது ஒரு செயலை செய்ய எத்தனிக்கின்றேன், தயாராகின்றேன் அல்லது முயற்சிக்கின்றேன் எனும் அர்த்தங்களிலேயே அவை பயன்படுத்தப்பட்டுள்ளது.

தவிர சாதாரண நிகழ்கால வினையாகவோ, நிகழ்காலத் தொடர்வினையாகவோ பயன்படவில்லை என்பதை கவனிக்கவும்.

உதாரணம்:

I read a book.
நான் வாசிக்கின்றேன் ஒரு புத்தகம்.

I am reading a book.
நான் வாசித்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு புத்தகம்.

I am going to read a book.
நான் வாசிக்கப்போகின்றேன் ஒரு புத்தகம். (இவற்றைக் குழப்பிக்கொள்ளாதீர்கள்.)

குறிப்பு -2:

கீழுள்ள வாக்கியங்களில் "going to go" என்பதை "going" என்று மட்டுமே பயன்படுத்துவோரும் இருக்கின்றனர். (Going to go' can be shortened to 'going.) இவற்றை கவனித்தில் வைக்கவும்.

she is going to go to school. (She going to school)
அவள் போகப்போகின்றாள் பாடசாலைக்கு.

கவனிக்கவும்:

ஆங்கிலத் திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றில் "gonna" எனும் சொற்பதத்தை அடிக்கடி பலர் பேசுவதைக் கேட்டிருப்பீர்கள். இந்த “gonna” எனும் சொல் "going to" என்பதின் சுருக்கம் என்பதை நினைவில் கொள்க. இது அதிகமாக அமெரிக்க ஆங்கிலத்தில் பயன்படுகிறது. ('going to' is often shortened to 'gonna', especially in American English.)

உதாரணம்:

Are you going to go soon?

Are you gonna go soon?

வரைப்படம்


மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

இன்றையப் பாடம் தொடர்பான சந்தேகங்கள் கேள்விகள் இருப்பின் வழமைப்போல் பின்னூட்டம் இட்டோ மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.

நன்றி

அன்புடன் ஆசிரியர் அருண் HK Arun

ஆங்கில பாடப் பயிற்சி 13 (Future Continuous Tense)

வணக்கம் உறவுகளே! இன்று நாம் Grammar Patterns -1 றில் பதினொன்று மற்றும் பன்னிரண்டவதாக அமைந்திருக்கும் வாக்கியங்களை விரிவாக கற்கப் போகின்றோம்.

நீங்கள் எமது பாடங்களை தொடர்ந்துக் கற்று வருபவராயின் இன்று என்னப் பாடம் என்பதை நீங்களாகவே அறிந்திருந்திருப்பீர்கள். அதாவது Grammar Patterns-1 இன் ஒவ்வொரு வாக்கியங்களும் ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும் என்று நாம் ஏற்கெனவே கூறியிருந்தோம். அதனடிப்படையில் இதுவரை நாம் விரிவாகக் கற்றவை.

1. I do a Job.

2. I am doing a job.

3. I did a job.

4. I didn't do a job.

5. I will do a job.

6. I won't do a job.

7. Usually I don't do a job.

8. I am not doing a job.

9. I was doing a job.

10. I wasn't doing a job.

இன்று விரிவாக கற்கப் போவது பதினொன்று மற்றும் பன்னிரண்டாவது வாக்கியங்களையாகும்.

இந்த ஆங்கிலம் வலைத்தளத்திற்கு நீங்கள் புதிதாக வருகைத் தந்தவரானால் உங்கள் பயிற்சிகளை இலக்க வரிசைக் கிரமத்தில் தொடரும்படி கேட்டுக் கொள்கின்றோம். முக்கியமாகக் "கிரமர் பெட்டன்களை" மனப்பாடம் செய்துக் கொள்ளுங்கள். அதுவே இந்த ஆங்கில பயிற்சி நெறியைத் தொடர எளிதாக இருக்கும்.

சரி இன்றையப் பாடத்திற்குச் செல்வோம்.

11. I will be doing a job.
நான் செய்துக் கொண்டிருப்பேன் ஒரு வேலை.

12. I won't be doing a job.
நான் செய்துக் கொண்டிருக்கமாட்டேன் ஒரு வேலை.

இவ்விரு வாக்கியங்களும் எதிர்காலத் தொடர்வினை வாக்கியங்களாகும். இவற்றை ஆங்கிலத்தில் "Future Continuous Tense" அல்லது "Future Progress Tense" என்பர்.

இந்த எதிர்காலத் தொடர்வினையின் பயன்பாடானது ஒரு செயல் அல்லது நிகழ்வு எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடந்துக்கொண்டிருக்கும் என்பதை முன்கூட்டியே வெளிப்படுத்துவதாகும். (The future continuous tense expresses action at a particular moment in the future.)

Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Auxiliary verb + Main verb with ing
I /You /He /She /It / We / You /They + will + be + doing a job. இவற்றில் "Subject" வாக்கியத்தின் முன்னால் உள்ளது.

Negative
Subject
+ Auxiliary verb + Auxiliary verb + not + Main verb with ing
I /You /He /She /It /You /We /They + won’t + be + doing a job

Question (Interrogative)
Auxiliary verb + Subject + Auxiliary verb + Main verb with ing
Will + I /you /he /she /it /you /we /they + be + doing a job?

கவனிக்கவும்: இந்த எதிர்காலத் தொடர்வினை கேள்வியாகப் பயன்படும் பொழுது "Auxiliary verb" அதாவது "துணை வினை" இரண்டு இடத்தில் பயன்படுவதை அவதானியுங்கள்.

நாம் கற்ற கடந்தப் பாடங்களில் அநேகமாக ஒரு வாக்கியம் கேள்வியாக மாறும் பொழுது அதன் துணைவினை "Auxiliary verb" வாக்கியத்தின் ஆரம்பத்தில் வரும். ஆனால் இன்றையப் பாடத்தில் ஆரம்பத்திலும் அதன் பின் "Subject" " இற்குப் பின்னாலுமாக இரண்டு இடங்களில் வந்துள்ளது. இதை கவனித்துக்கொள்ளுங்கள். இது (invariable) மாற்ற இயலாதது.

கீழுள்ள உதாரணங்களையும் பாருங்கள்.

Will you be doing a job?
நீ செய்துக்கொண்டிருப்பாயா ஒரு வேலை?
Yes, I will be doing a job.
ஆம், நான் செய்துக்கொண்டிருப்பேன் ஒரு வேலை.
No, I won’t be doing a job.
இல்லை, நான் செய்துக்கொண்டிருக்கமாட்டேன் ஒரு வேலை.

Will you be speaking in English?
நீ பேசிக்கொண்டிருப்பாயா அங்கிலத்தில்?
Yes, I will be speaking in English.
ஆம், நான் பேசிக்கொண்டிருப்பேன் ஆங்கிலத்தில்
No, I won’t be speaking in English.
இல்லை, நான் பேசிக்கொண்டிருக்கமாட்டேன் ஆங்கிலத்தில்.

Will you be going to school?
நீ போயிக்கொண்டிருப்பாயா பாடசாலைக்கு?
Yes, I will be going to school.
ஆம், நான் போய்க்கொண்டிருப்பேன் பாடசாலைக்கு.
No, I won’t be going to school. (will + not)
இல்லை, நான் போய்க்கொண்டிருக்கமாட்டேன் பாடசாலைக்கு.

இப்போது மேலே நாம் கற்ற உதாரணங்களைப் பின்பற்றி கீழே இருக்கும் (Affirmative Sentence) வாக்கியங்களை கேள்விப் பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.

சரி பயிற்சியைத் தொடருங்கள்.

1. I will be speaking in English.
நான் பேசிக்கொண்டிருப்பேன் ஆங்கிலத்தில்.

2. I will be sitting on the beach.
நான் அமர்ந்துக்கொண்டிருப்பேன் கடற்கரையில்.

3. I will be sun-bathing in Bali.
நான் சூரியக் குளியல் குளித்துக்கொண்டிருப்பேன் பாளியில்.

4. I will be coming back to home
நான் திரும்பி வந்துக்கொண்டிருப்பேன் வீட்டிற்கு.

5. I will be staying with my friend.
நான் இருந்துக்கொண்டிருப்பேன் எனது நண்பருடன்.

6. I will be celebrating my birthday.
நான் கொண்டாடிக்கொண்டிருப்பேன் எனது பிறந்தநாளை.

7. I will be signing the contract.
நான் கையொப்பமிட்டுக்கொண்டிருப்பேன் உடன்படிக்கை(யில்)

8. I will be playing tennis at 10 am.
நான் விளையாடிக்கொண்டிருப்பேன் டென்னிஸ் 10 மணிக்கு.

9. I will be lying on a beach tomorrow .
நான் சாய்ந்துக்கொண்டிருப்பேன் கடற்கரையில் நாளை.

10. I will be having dinner at home.
நான் (இரவு) சாப்பிட்டுக்கொண்டிருப்பேன் வீட்டில்.

11. I will be singing in the concert on Tuesday.
நான் பாடிக்கொண்டிருப்பேன் சங்கீதக் கச்சேரியில் செவ்வாய் கிழமை.

12. I will be going to Norway this summer.
நான் போய்க்கொண்டிருப்பேன் நோர்வேயிற்கு இந்த கோடை காலத்தைக் (கழிக்க)

13. I will be coming to work next week.
நான் வந்துக்கொண்டிருப்பேன் வேலைக்கு அடுத்த வாரம்.

14. I will be working this weekend.
நான் வேலைசெய்துக்கொண்டிருப்பேன் இந்த வாரக்கடைசியில்.

15. I will be sleeping in the hotel.
நான் நித்திரையடித்துக்கொண்டிருப்பேன் விடுதியில்.

16. I will be eating dinner with my friends this evening
நான் சாப்பிட்டுக்கொண்டிருப்பேன் எனது நண்பர்களுடன் இன்று மாலை.

17. I will be dancing at the party.
நான் ஆடிக்கொண்டிருப்பேன் விருந்துபசாரத்தில்.

18. I will be doing my duty.
நான் செய்துக்கொண்டிருப்பேன் எனது கடமையை.

19. I will be practicing English at night
நான் பயிற்சித்துக்கொண்டிருப்பேன் ஆங்கிலம் இரவில்.

20. I will be speaking English in the office
நான் பேசிக்கொண்டிருப்பேன் ஆங்கிலம் அலுவலகத்தில்.

21. I will be going to university.
நான் போய்க்கொண்டிருப்பேன் பல்கலைக்கழத்திற்கு.

22. I will be translating English to Tamil.
நான் மொழிமாற்றிக்கொண்டிருப்பேன் ஆங்கிலத்தை தமிழுக்கு.

23. I will be flying on the flight.
நான் பறந்துக்கொண்டிருப்பேன் விமானத்தில்.

24. I will be studying for the exam.
நான் படித்துக்கொண்டிருப்பேன் பரீட்சைக்காக.

25. I will be doing my homework.
நான் செய்துக்கொண்டிருப்பேன் எனது விட்டுப்பாடம்.

Homework:

A. மேலே நாம் கற்றச் சொற்களை You, He, She, It, We, You, They போன்ற சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமையுங்கள்.

B. மேலுள்ள உதாரணங்களைப் பார்த்து இந்த 25 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றிப் பயிற்சி செய்யுங்கள்.

C. இன்று நாம் கற்ற (Future Continuous Tense) எதிர்காலத் தொடர்வினை வாக்கியங்களைப் போல் நாளை, அடுத்த மாதம், அடுத்த ஆண்டு இதே நேரம் இதே திகதி என்னென்ன செய்துக்கொண்டிருப்பீர்கள் என்பதை சற்று நினைத்துப்பாருங்கள். பின் அவற்றைப் பட்டியலிட்டுக்கொண்டு அதனை நாம் இன்று பயிற்சி செய்ததுப் போன்று ஆங்கிலத்தில் எழுதிப் பயிற்சி செய்யுங்கள்.

கவனிக்கவும்:

இவ்வாறு தொடர் வாக்கியங்களாகவும் எழுதிப் பயிற்சி செய்யலாம்.

I will be waiting for you when your plane arrives tonight.
நான் காத்துக்கொண்டிருப்பேன் உனக்காக உனது விமான வந்தடையும் பொழுது இரவு.

Sarmilan will be playing on the computer when his mother comes home.
சர்மிலன் விளையாடிக்கொண்டிருப்பான் கணனியில் அவனது தாயார் வீட்டிற்கு வரும் பொழுது.

I will be studying when you come.
நான் படித்துக்கொண்டிருப்பேன் நீ வரும் பொழுது.

At the same time tomorrow I will be staying in America.
இதே நேரத்தில் நாளை நான் இருந்துக்கொண்டிருப்பேன் அமெரிக்காவில்.

சரி பயிற்சிகளைத் தொடருங்கள்.

மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

இன்றையப் பாடம் தொடர்பான உங்கள் கருத்துக்களை எம்முடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் சந்தேகங்கள் கேள்விகள் இருப்பின் பின்னூட்டம் இட்டோ, எமது வழமையான மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.

நன்றி

அன்புடன் ஆசிரியர் அருண் HK Arun

ஆங்கில பாடப் பயிற்சி 12 (Past Continuous Tense)

இன்று நாம் விரிவாக கற்கப் போவது Grammar Patterns 1 இன் 9 மற்றும் 10 வதாக அமைந்திருக்கும் வாக்கியங்களையாகும். அதே இலக்க வரிசையில் Grammar Patterns 2, Grammar Patterns 3 யும் ஒரு முறைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

9. I was doing a job.
நான் செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.

10. I wasn't doing a job.
நான் செய்துக்கொண்டிருக்கவில்லை ஒரு வேலை.

இவற்றை தமிழில் “இறந்தக் கால தொடர்வினை” என்று கூறுவர். ஆங்கிலத்தில் "Past Continuous Tense" அல்லது "Past Progressive Tense" என்றழைக்கப்படுகின்றது. அதாவது ஒரு செயல் அல்லது சம்பவம் ஒரு வரையரைக்குள் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது என்பதை இந்த "இறந்த காலத்தொடர்வினை" விவரிக்கிறது.

நீங்கள் இந்த ஆங்கிலம் வலைத்தளத்திற்கு புதிதாக வருகைத் தந்தவரானால், உங்கள் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்தே தொடருங்கள். முக்கியமாக "Grammar Patterns" களை மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். பின் இலக்க வரிசை கிரமத்தில் மற்றப் பாடங்களை தொடருங்கள். அதுவே இந்த ஆங்கில பயிற்சி நெறியை தொடர மிகவும் எளிதானதாக இருக்கும்.

இந்த 9, 10 வதாக அமைந்திருக்கும் வாக்கியங்களில் I, He, She, It, போன்றவற்றுடன் "was" இணைந்து வரும். You, We, They உடன் "were" இணைந்து வரும். கீழுள்ள உதாரணங்களைப் பாருங்கள்.

Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Main verb + ing
I /He /She /It + was + doing a job.
You / We /They + were + doing a job.
இதில் 'Subject' வாக்கியத்தின் முன்னால் வந்துள்ளது.

Negative
Subject
+ Auxiliary verb + not + Main verb + ing
I /He /She /It + wasn’t + doing a job
You /We /They + weren’t + doing a job

Question (Interrogative)
Auxiliary verb + Subject + Main verb + ing
Was
+ I /he /she /it + doing a job?
Were + you /we /they + doing a job? இவற்றில் Auxiliary verb "துணை வினை" வாக்கியத்தின் முன்பாகவும், Subject அதாவது "விடயம்" அதன் பின்னாலும் மாறி வந்துள்ளது.

இப்போது இந்த “இறந்த காலத்தொடர்வினை” வாக்கியங்களை எவ்வாறு கேள்வி பதிலாக மாற்றி அமைப்பது என்பதைப் பார்ப்போம். கீழுள்ள உதாரணங்களை பாருங்கள். இவற்றை சரியாக விளங்கிக் கொண்டால் நீங்களாவே மிக எளிதாக கேள்விப் பதில்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

Were you doing a job?
நீ செய்துக்கொண்டிருந்தாயா ஒரு வேலை?
Yes, I was doing a job.
ஆம், நான் செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.
No, I wasn’t doing a job. (was + not)
இல்லை, நான் செய்துக்கொண்டிருக்கவில்லை ஒரு வேலை.

Was he speaking in English?
அவன் பேசிக்கொண்டிருந்தானா அங்கிலத்தில்?
Yes, he was speaking in English.
ஆம், அவன் பேசிக்கொண்டிருந்தான் ஆங்கிலத்தில்
No, he wasn’t speaking in English. (was + not)
இல்லை, அவன் பேசிக்கொண்டிருக்கவில்லை ஆங்கிலத்தில்.

Were you going to school?
நீங்கள் போய்க்கொண்டிருந்தீர்களா பாடசாலைக்கு?
Yes, we were going to school.
ஆம், நாங்கள் போய்க்கொண்டிருந்தோம் பாடசாலைக்கு.
No, we weren’t going to school. (were + not)
இல்லை, நாங்கள் போய்க்கொண்டிருக்கவில்லை பாடசாலைக்கு.

இப்போது கீழே (Affirmative Sentences) வாக்கியங்கள் 25 கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயிற்சி செய்யுங்கள். அதன் பின் அவற்றை கேள்வி பதிலாக மாற்றி அமையுங்கள்.

1. I was reading a book.
நான் வாசித்துக்கொண்டிருந்தேன் ஒரு புத்தகம்.

2. I was looking for a job.
நான் தேடிக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.

3. I was studying.
நான் படித்துக்கொண்டிருந்தேன்.

4. I was watching television.
நான் பார்த்துக்கொண்டிருந்தேன் தொலைக்காட்சி.

5. I was making dinner.
நான் தயாரித்துக்கொண்டிருந்தேன் (இரவு) உணவு.

6. I was waiting in the bus stand.
நான் காத்துக்கொண்டிருந்தேன் பேரூந்து நிறுத்தகத்தில்.

7. I was waiting for you.
நான் காத்துக்கொண்டிருந்தேன் உனக்காக.

8. I was talking with my fiancée
நான் பேசிக்கொண்டிருந்தேன் எனது காதலியிடம்/ நிச்சயிக்கப்பட்டவளிடம்.

9. I was snowboarding.
நான் பனிச்சறுக்குப் படகோட்டிக்கொண்டிருந்தேன்.

10. I was driving through the desert.
நான் (வாகனம்) ஓட்டிக்கொண்டிருந்தேன் பாலைவனத்தின் ஊடாக.

11. I was sitting at the class room.
நான் அமர்ந்திருந்துக்கொண்டிருந்தேன் வகுப்பு அறையில்.

12. I was listening to the news.
நான் செவிமடுத்துக்கொண்டிருந்தேன் செய்திகளுக்கு.

13. I was discussing with my father.
நான் கலந்துரையாடிக்கொண்டிருந்தேன் எனது தந்தையுடன்.

14. I was complaining to police
நான் முறையிட்டுக்கொண்டிருந்தேன் காவல் துறையிடம்.

15. I was listening to my iPod.
நான் செவிமடுத்துக்கொண்டிருந்தேன் ஐபொட்டிற்கு.

16. I was sleeping last night.
நான் நித்திரைக்கொண்டிருந்தேன் கடந்த இரவு.

17. I was writing the email.
நான் எழுதிக்கொண்டிருந்தேன் மின்னஞ்சல்.

18. I was working at the factory.
நான் வேலை செய்துக்கொண்டிருந்தேன் தொழிற்சாலையில்.

19. I was eating bread.
நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் வெதுப்பி.

20. I was playing soccer.
நான் விளையாடிக்கொண்டிருந்தேன் சொக்கர்.

21. I was walking on the street.
நான் நடந்துக்கொண்டிருந்தேன் தெருவில்.

22. I was singing in the concert.
நான் பாடிக்கொண்டிருந்தேன் சங்கீதக் கச்சேரியில்.

23. I was wearing a full sleeves shirt.
நான் உடுத்திக்கொண்டிருந்தேன் ஒரு முழுக் கை சட்டை.

24. I was walking past the car.
நான் நடந்துக்கொண்டிருந்தேன் மகிழூந்தைக் கடந்து.

25. I was eating ice-cream.
நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் குளிர்களி.

Homework:

1. இந்த 25 வாக்கியங்களையும், மேலே கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணங்களைப் பின்பற்றி கேள்விப் பதிலாக மாற்றிப் பயிற்சி செய்யுங்கள்.

2. மேலுள்ள அதே 25 வாக்கியங்களை He, She, It, You, We, They போன்றச் சொற்களை பயன்படுத்தி வாக்கியங்கள் அமையுங்கள் பார்க்கலாம். நினைவில் வைத்துக்கொள்ளங்கள். (I/ He/ She/ It உடன் was + verb with ing வரும். You/ We/ They உடன் were + verb with ing வரும்.)

3. நீங்கள் நேற்று இதே நேரம், கடந்த வாரம், கடந்த மாதம், கடந்த வருடம் எனனென்ன செய்துக் கொண்டிருந்தீர்கள்? என்னென்ன உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்துக்கொண்டிருந்தது என்பவற்றைப் பட்டியல் இட்டு மேலே நாம் கற்றதைப் போன்று ஆங்கிலத்தில் எழுதுங்கள்.

நீங்கள் எழுதிப் பயிற்சி செய்யும் போது அவற்றை வாசித்து வாசித்து எழுதவும். அவ்வாறு வாசித்து வாசித்து எழுதும் பொழுது அவை தானாகவே உங்கள் மனதில் பதிவதால், உங்களின் வாசிக்கும் ஆற்றலின் தன்மையையும், ஆங்கில அறிவையும் மிக எளிதாக வளர்த்துக்கொள்ளலாம். அதேவேளை எழுத்தாற்றலையும் இலகுவாகப் பெற்றுவிடலாம்.

இலக்கண விதி முறைகள்

இறந்தக்கால தொடர்வினை “Past Continuous Tense” இன் செயல்பாட்டை ஐந்து விதமாக வகைப்படுத்தப்படுத்தலாம். (There are five main uses of this tense) அவை:

1. ஒரு குறிப்பிட்ட கால வரையரைக்குள் என்ன நடந்துக்கொண்டிருந்தது என்பதை விவரித்தல்.

உதாரணம்:

I was reading a book yesterday evening.
நான் வாசித்துக்கொண்டிருந்தேன் ஒரு புத்தகம் நேற்று மாலை.

எப்பொழுது வாசித்துக்கொண்டிருந்தேன்? - நேற்று மாலை.
வாசித்தேன் என்றால் – இறந்தக் காலம்
வாசித்துக்கொண்டிருந்தேன் என்றால் – இறந்தக்கால தொடர்வினை,

அதாவது செயல் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டு அது தொடர்ச்சியாக ஒரு வரையரைக்குள் நிகழ்ந்துக் கொண்டிருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது. (Action or situation that had already started and was still continuing at a particular time.)

இதுப்போன்ற 25 வாக்கியங்களையே மேலே நாம் பயிற்சி செய்தோம். மேலும் சில வாக்கியங்களை இங்கே பாருங்கள்.

The sun was shining this morning.
சூரியன் பிரகாசித்துக்கொண்டிருந்தது காலையில்.

The birds were singing.
பறவைகள் பாடிக்கொண்டிருந்தன.

The children were playing in the garden.
குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர் தோட்டத்தில்.

வரைப்படம் - 1


2. ஒரு சம்பவம் அல்லது நேரத்தை குறிப்பிட்டு, அச்சமயம் என்ன நிகழ்ந்துக்கொண்டிருந்தது என்பதை விவரித்தல்.

Last night at 6 PM, I was eating dinner.
கடந்த இரவு 6.PM க்கு, நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் இரவு சாப்பாடு.

At midnight, we were driving through the desert.
நள்ளிரவில், நாங்கள் வாகனமோட்டிக்கொண்டிருந்தோம் பாலைவனத்தின் ஊடாக.

Yesterday at this time, I was talking with my family.
நேற்று இதே நேரத்தில், நான் பேசிக்கொண்டிருந்தேன் எனது குடும்பத்தாருடன்.

வரைப்படம் - 2

3. இறந்த காலத்தொடர்வினையுடன் always, constantly போன்ற வினையெச்சங்களை இணைத்து பயன்படுத்தல். அநேகமாக இவை வெறுப்பூட்டிக்கொண்டிருந்த, எரிச்சலூட்டிக் கொண்டிருந்த, கோபமூட்டிக்கொண்டிருந்த, திகைப்பூட்டிக்கொண்டிருந்த எண்ணங்களை வெளிப்படுத்தப் பயன்படுகிறது.

இது "used to" என்பதின் பயன்பாட்டிற்கு ஒத்தது. (Used to என்பதன் பயன்பாடு பற்றி எதிர்வரும் பாடங்களில் கற்கலாம்.)

உதாரணம்:

She was always coming to class late.
அவள் எப்பொழுதும் வந்துக்கொண்டிருந்தாள் வகுப்புக்கு தாமதமாக.

Karuna was always irritating me.
கருணா எப்பொழுதும் எரிச்சலூட்டிக்கொண்டிருந்தான் என்னை.

I didn’t like him because, He was constantly talking.
நான் விரும்பவில்லை அவனை ஏனெனில், அவன் (அடிக்கடி) தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.

வரைப்படம் - 3

மேலே இலக்கண விதி முறைகளாக 1, 2, 3 என மூன்று பிரிவுகளாக பிரித்துக் கற்றாலும் அவை ஒரே மாதிரியானவைகளே. வரைப் படங்களைப் பார்க்கவும்.

4. இரண்டு செயல்பாடுகள் ஒரே நேரத்தில் நடைப் பெற்றுக்கொண்டிருந்தது என்பதை விவரித்தல். (two actions were happening at the same time.)

உதாரணம்:

Malathi was writing a letter while Pandian was reading the News paper.
மாலதி ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் போது பாண்டியன் வாசித்துக்கொண்டிருந்தான் செய்தித் தாள்.

Sothiya was cooking dinner while her friend was setting the table.
சோதியா சமைத்துக்கொண்டிருக்கும் போது அவளுடைய நண்பர் மேசையை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார்.

The baby was crying while we were having our dinner.
குழந்தை அழுதுக்கொண்டிருக்கும் போது நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.

I was studying while she was making dinner.
நான் படித்துக்கொண்டிருக்கும் போது அவள் தயாரித்துக்கொண்டிருந்தாள் (இரவு) சாப்பாடு.

People were sleeping while army was shelling.
மக்கள் நித்திரைக்கொண்டிருக்கும் போது இராணுவம் எறிகணை வீசிக்கொண்டிருந்தது.

வரைப்படம் - 4

5. ஒரு செயல் அல்லது நிகழ்வு நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் போது, இடையில் ஏற்பட்ட இன்னுமொரு நிகழ்வை வெளிப்படுத்தல். இதில் இறந்தக்கால தொடர்வினையுடன் சாதாரண இறந்தக்கால வினையும் இணைந்து பயன்படும். (use the Past Continuous tense with the Past Simple tense)

உதாரணம்:

I was walking in the park (நடைப்பெற்றுக்கொண்டிருந்த நிகழ்வு) when it started to rain. (இடையில் ஏற்பட்ட நிகழ்வு)

I was walking in the park when it started to rain.
நான் பூங்காவில் நடந்துக்கொண்டிருக்கும் போது மழைப் பெய்ய ஆரம்பித்தது.
I was brushing my teeth when my mother called me.
நான் எனது பற்களை துலக்கிக்கொண்டிருக்கும் போது எனது தாயார் அழைத்தார் என்னை.

I was eating dinner when somebody knocked on the door
நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் தட்டினர் கத(வை)வின் மேல்.

Ravi was sleeping last night when someone stole his car.
ரவி நேற்று இரவு நித்திரையடித்துக்கொண்டிருக்கும் பொழுது யாரோ ஒருவர் திருடிவிட்டார் அவனுடைய மகிழூந்தை.

I was walking past the car when it exploded
நான் மகிழூந்தைக் கடந்து நடந்துக்கொண்டிருக்கும் பொழுது அது வெடித்தது.

I was having a beautiful dream when the alarm clock rang.
நான் ஒரு அழகான கணவு கண்டுக்கொண்டிருக்கும் போது கடிகாரம் ஒலித்தது.

வரைப்படம் - 5


While, When பயன்பாடுகள்

உதாரணம் 1:

Malathi was writing a letter while Pandian was reading the News paper.
மாலதி ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் போது பாண்டியன் வாசித்துக்கொண்டிருந்தான் செய்தித் தாள்.

இதை சற்று விளக்கமாகப் பார்ப்போம்

Malathi was writing a letter
மாலதி எழுதிக்கொண்டிருந்தாள் ஒரு கடிதம்.

while – (அப்)போது (எழுதிக்கொண்டிருக்கும் போது)

Pandian was reading the News paper.
பாண்டியன் வாசித்துக்கொண்டிருந்தான் செய்தித் தாள்.

எப்போது பாண்டியன் வாசித்துக்கொண்டிருந்தான் செய்தித் தாள்? மாலதி ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் போது.

எனவே இவ்விரண்டு வாக்கியங்களையும் இணைத்து "மாலதி ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் போது பாண்டியன் வாசித்துக்கொண்டிருந்தான் ஒரு செய்தித்தாள்" என ஒரே தொடர் வாக்கியமாக அமைந்துள்ளதை அவதானிக்கவும்.

உதாரணம் 2:

I was walking in the park when it started to rain.
நான் பூங்காவில் நடந்துக்கொண்டிருக்கும் பொழுது மழைப் பெய்ய ஆரம்பித்தது.

இதனையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

I was walking in the park – நான் நடந்துக்கொண்டிருந்தேன் பூங்காவில்.
when – எப்பொழுது (நடந்துக்கொண்டிருக்கும் பொழுது)
it started to rain - ஆரம்பித்தது மழைப் பெய்வதற்கு

எப்பொழுது மழைப் பெய்ய ஆரம்பித்தது? நான் பூங்காவில் நடந்துக்கொண்டிருக்கும் போது.

எனவே இவ்விரண்டு வாக்கியங்களை இணைத்து "நான் பூங்காவில் நடந்துக்கொண்டிருக்கும் பொழுது மழைப்பெய்ய ஆரம்பித்தது." என்று ஒரே வாக்கியத் தொடராக அமைந்துள்ளது.

இதுப்போன்ற பயன்பாட்டின் போது முதல் நடந்துக்கொண்டிருந்த செயலை அல்லது நிகழ்வை "background situation" என்கின்றனர்.

குறிப்பு:

இவ்வாக்கியங்களை இப்படியும் பயன்படுத்தலாம்.

I was studying while she was making dinner.

While I was studying, she was making dinner.

I was walking past the car when it exploded.

When the car exploded, I was walking past it.

Adverb - வினையெச்சம்

கீழுள்ள உதாரணங்களில் இறந்த காலத்தொடர்வினையின் போது always, only, never, ever, still, just போன்ற வினையெச்சங்கள் வினையுடன் இணைந்து பயன்படும் போது, அவ்வாக்கியங்களின் கருப்பொருள் எவ்வாறு மாறுப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

She was coming to class late.
அவள் வந்துக்கொண்டிருந்தாள் வகுப்பிற்கு தாமதமாக. இவ் வாக்கியத்தில் "வினையெச்சம்" பயன்படுத்தும் போது அதன் அர்த்தத்தை அவதானியுங்கள்.

She was always coming to class late.
அவள் எப்பொழுதுமே வந்துக்கொண்டிருந்தாள் வகுப்பிற்கு தாமதமாக.

குறிச்சொற்கள் Signal words

while

when


சரி! பயிற்சிகளைத் தொடருங்கள். மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

இன்றைய பாடத்தில் எவ்வித கேள்விகள், சந்தேகங்கள் இருப்பின் தயங்காமல் எழுதுங்கள். நீங்கள் அறிய விரும்பும் ஆங்கில் சொற்கள் இருப்பின் அவற்றையும் கேட்டு எழுதுங்கள். அவை எதிர்வரும் பாடங்களுடன் இணைத்து வழங்கப்படும்.

எமது இந்த ஆங்கில பாடத்திட்டத்திற்கு உள்ளடங்காத கேள்விகள் இருப்பின் அவற்றை தொகுத்து பின் "கேள்வி பதில்" பகுதியாக வழங்கப்படும். அல்லது புதிதாக தொடங்கியிருக்கும் "ஆங்கிலம் துணுக்குகள்" பகுதியூடாக வழங்கப்படும்.

இப்பாடத்திட்டம் பற்றிய உங்கள் கருத்துக்களை எம்முடன் பகிர்ந்துக் கொள்ள மறவாதீர்கள்.

நன்றி

அன்புடன் ஆசிரியர் அருண்

ஆங்கில பாடப் பயிற்சி 11 (Simple Future Tense)

Grammar Patterns -1 றில் ஐந்து மற்றும் ஆறாவதாக அமைந்திருக்கும் வாக்கியங்களை சற்றுப் பாருங்கள். இன்று அவ்விரண்டு வாக்கியங்களையும் விரிவாக கற்கப் போகின்றோம்.

இந்த ஆங்கிலம் வலைத்தளத்திற்கு நீங்கள் புதிதாக வருகைத் தந்தவரானால் உங்கள் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்தே தொடருங்கள். முக்கியமாகக் "கிரமர் பெட்டன்களை" மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். அதுவே இந்த ஆங்கில பயிற்சியைத் தொடர எளிதாக இருக்கும்.

சரி இன்றைய பாடத்திற்குச் செல்வோம்.

5. I will do a job
நான் செய்வேன் ஒரு வேலை.
நான் செய்கிறேன் ஒரு வேலை. (சற்றுப் பிறகு)

6. I won’t do a job. (will + not)
நான் செய்ய மாட்டேன் ஒரு வேலை.

மேலுள்ள 5, 6 வரிகளைப் பாருங்கள். இவை சாதாரண எதிர்கால வாக்கியங்களாகும். இவற்றை ஆங்கிலத்தில் "Simple Future Tense" என்று கூறுவர். இந்த Form ல் தன்னிலை, முன்னிலை, படர்க்கை மற்றும் ஒருமை, பன்மை எல்லாவற்றிற்கும் "will" என்றே பயன்படுத்தப்படுகிறது.

Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Main verb
I /You /He /She /It / We / You /They + will + do a job. இவற்றில் "Subject" வாக்கியத்தின் முன்னால் உள்ளது.

Negative
Subject
+ Auxiliary verb + not + Main verb
I /You /He /She /It /You /We /They + won’t + do a job

Question (Interrogative)
Auxiliary verb + Subject + Main verb
Will + I /you /he /she /it /you /we /they + do a job? இவற்றில் "Subject" அதாவது விடயம் பின்னாலும் "Auxiliary verb" துணை வினை வாக்கியத்தின் ஆரம்பித்திலுமாக மாறி வந்துள்ளதை அவதானியுங்கள்.

இவற்றை சரியாக விளங்கிக் கொண்டோமானால் நாமாகவே மிக எளிதாக கேள்வி பதில்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்பது உங்களுக்கே புரியும். கீழுள்ள உதாரணங்களைப் பாருங்கள்.

Will you do a job?
நீ செய்வாயா ஒரு வேலை?
Yes, I will do a job
ஆம், நான் செய்வேன் ஒரு வேலை.
No, I won’t do a job. (will + not)
இல்லை, நான் செய்யமாட்டேன் ஒரு வேலை.

Will you speak in English?
நீ பேசுவாயா அங்கிலத்தில்?
Yes, I will speak in English.
ஆம், நான் பேசுவேன் ஆங்கிலத்தில்
No, I won’t speak in English. (will + not)
இல்லை, நான் பேசமாட்டேன் ஆங்கிலத்தில்.

Will you go to school?
நீ போவாயா பாடசாலைக்கு?
Yes, I will go to school.
ஆம், நான் போவேன் பாடசாலைக்கு.
No, I won’t go to school. (will + not)
இல்லை, நான் போகமாட்டேன் பாடசாலைக்கு.

இப்போது மேலே கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணங்களைப் பின்பற்றி கீழே இருக்கும் வாக்கியங்களை நீங்களாகவே கேள்வி பதிலாக மாற்றிப் பயிற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.

நீங்கள் எழுதிப் பயிற்சி செய்யும் போது அவற்றை வாசித்து வாசித்து எழுதவும். அவ்வாறு வாசித்து வாசித்து எழுதும் பொழுது அவை தானாகவே உங்கள் மனதில் பதிந்து, உங்களின் வாசிக்கும் ஆற்றலையும், ஆங்கில அறிவையும் அதிவேகமாக வளர்த்துக்கொள்ள உதவும். அதேவேளை எழுத்தாற்றலையும் எளிதாக பெற்றுவிடலாம்.

சரி பயிற்சியைத் தொடருங்கள்.

1. I will open the door.
நான் திறப்பேன் கதவை.

2. I will apply for vacancies.
நான் விண்ணப்பிப்பேன் தொழில்களுக்காக.

3. I will speak in English fluently.
நான் பேசுவேன் ஆங்கிலத்தில் வாக்கு வன்மையாக. (தடங்களின்றி)

4. I will ask for an increment.
நான் கேட்பேன் ஓர் (பதவி/சம்பளம்) உயர்வு.

5. I will ask for a transfer.
நான் கேட்பேன் ஒரு இடமாற்றம்.

6. I will celebrate my birthday.
நான் கொண்டாடுவேன் எனது பிறந்தநாளை.

7. I will consult Dr. Sivaram.
நான் (மருத்துவ) ஆலோசனை பெறுவேன் மருத்துவர் சிவராமிடம்.

8. I will control my temper.
நான் கட்டுப்படுத்துவேன் எனது கோபத்தை.

9. I will negotiate the auto charges.
நான் பேரம் பேசுவேன் முச்சக்கரவண்டிக் கட்டணத்தை.

10. I will stop smoking.
நான் நிறுத்துவேன் புகைப்பிடிப்பதை.

11. I will help him.
நான் உதவுவேன் அவனுக்கு.

12. I will open a current account.
நான் திறப்பேன் ஒரு நடைமுறைக் கணக்கு.

13. I will obey your rules and regulations.
நான் கீழ்படிவேன் உங்களுடைய சட்டத் திட்டங்களுக்கு.

14. I will pick up this work.
நாம் பற்றிக்கொள்வேன் இந்த வேலையை.

15. I will resign from the job.
நான் இராஜினமா செய்வேன் வேலையிலிருந்து.

16. I will correct the mistakes.
நான் சரிப்படுத்துவேன் பிழைகளை.

17. I will play football.
நான் விளையாடுவேன் உதைப்பந்தாட்டம்.

18. I will do my duty.
நான் செய்வேன் எனது கடமையை.

19. I will follow a computer course.
நான் பின்பற்றுவேன் ஒரு கணனி பாடப் பயிற்சி.

20. I will forget her.
நான் மறப்பேன் அவளை.

21. I will solve problems.
நான் தீர்ப்பேன் பிரச்சினைகளை.

22. I will speak English in the office
நான் பேசுவேன் ஆங்கிலம் காரியாலயத்தில்.

23. I will go to university.
நான் போவேன் பல்கலைக்கழத்திற்கு.

24. I will translate English to Tamil.
நான் மொழிமாற்றுவேன் ஆங்கிலத்தை தமிழுக்கு.

25. I will give up these habits.
நான் விட்டுவிடுவேன் இந்த தீயப்பழக்கங்களை.

26. I will study for the exam.
நான் படிப்பேன் பரீட்சைக்காக.

27. I will do my homework.
நான் செய்வேன் எனது விட்டுப்பாடம்.

28. I will become stronger.
நான் பலசாலியாவேன்.

29. I will become chief executive of Hong Kong.
நான் நிறைவேற்று தலமை அதிகாரியாவேன் ஹொங்கொங்கின்.

30. I will become prime minister of India.
நான் பிரதமராவேன் இந்தியாவின்.

31. I will take treatment for my hand.
நான் எடுப்பேன் சிகிச்சை எனது கைக்கு.

32. I will introduce him to you.
நான் அறிமுகப்படுத்துவேன் அவனை உனக்கு.

33. I will untie this knot.
நான் அவிழ்ப்பேன் இந்த முடிச்சை.

34. I will build my dream house.
நான் கட்டுவேன் எனது கனவு வீட்டை/மாளிகையை.

35. I will co-operate with others.
நான் ஒத்துழைப்பேன் மற்றவர்களுடன்.

36. I will discuss about this problem.
நான் கலந்தாலோசிப்பேன் இந்தப் பிரச்சினையைப் பற்றி.

37. I will drop you in Vavuniya junction.
நான் இறக்குவேன் உன்னை வவுனியா சந்தியில்.

38. I will buy a bens car.
நான் வாங்குவேன் ஒரு பென்ஸ் மகிழுந்து.

39. I will bank the money.
நான் வைப்பிடுவேன் வங்கியில்.

40. I will come up in my life.
நான் முன்னேறுவேன் வாழ்க்கையில்.

41. I will draw salary US$ 100,000 monthly.
நான் பெறுவேன் சம்பளம் ஒரு லட்சம் டொலர் மாதாந்தம்.

42. I will fly to America.
நான் (விமானத்தில்) பறப்பேன் அமெரிக்காவிற்கு.

43. I will go to Europe.
நான் போவேன் ஐரோப்பாவிற்கு.

44. I will invite my friends for festival.
நான் அழைப்பேன் எனது நண்பர்களை பண்டிகைக்கு.

45. I will improve my English knowledge.
நான் வளர்ப்பேன் எனது ஆங்கில அறிவை.

46. I will practice English at night.
நான் பயிற்சி செய்வேன் ஆங்கிலம் இரவில்.

47. I will become wealthy.
நான் செல்வந்தனாவேன்.

48. I will get married after few months.
நான் திருமணம் முடிப்பேன் அடுத்தச் சில மாதங்களில்.

49. I will become cheap executive.
நான் நிறைவேற்றுத் தலமை அதிகாரியாவேன்.

50. I will become famous in the world.
நான் பிரசித்திப்பெறுவேன் இந்த உலகில்.

Homework:

A. மேலே நாம் கற்றச் சொற்களை You, He, She, It, We, You, They போன்ற சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமையுங்கள்.

B. மேலே உதாரணமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்வி பதில்களைப் பார்த்து இந்த 50 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள்.

C. இன்று நாம் கற்ற (Simple Future Tense) சாதாரண எதிர்கால சொற்களைப் போல் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதிர்காலத் எண்ணங்கள், நோக்கங்களாக என்னென்ன செய்ய விரும்புகின்றீர்களோ, அவற்றை ஆங்கிலத்தில் "will" எனும் துணைவினையுடன் எழுதிப் பயிற்சி செய்யுங்கள்.

சிறிய அறிவுரை

உங்கள் ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டுமாயின் நீங்கள் உங்கள் சகோதரரிடமோ அல்லது நண்பரிடமோ இணைந்து நீங்கள் எழுதிய கேள்வி பதில்களை, ஒருவர் கேள்விக் கேட்டும் மற்றவர் பதிலளித்தும் பயிற்சி செய்யலாம். எவ்விதக் கூச்சமும் இன்றி சத்தமாக பேசி பயிற்சிப் பெறுங்கள். அது கூடிய பயனை உங்களுக்குத் தரும்.

ஆங்கில இலக்கணம் படித்தோர்களில் பலர் கூறும் இன்னுமொரு விடயத்தையும் நான் அடிக்கடி கேட்கக் கூடியதாக உள்ளது. அது ஆங்கில செய்திகள் மற்றும் ஆங்கிலத் திரைப்படங்களை பார்க்கும் போது அதில் பேசுவதை, வாசிப்பதை தம்மால் புரிந்துக்கொள்வதற்கு கடினமாக இருக்கிறது என்பதே. இன்னும் சிலர் இடைக்கிடை ஒரு சிலச் சொற்களைத் தவிர துப்பரவாக விளங்குகிறதே இல்லை என்று கூறுவோரும் உள்ளனர்.

சில ஆங்கில பாடப் புத்தகங்களில், குறிப்பாக "Spoken English" புத்தகங்களில் ஆங்கில உச்சரிப்பிற்காக கீழே கொடுக்கப் பட்டிருக்கும் தமிழை வாசித்து வாசித்து கடினப்பட்டு ஆங்கிலத்தை மனப்பாடம் செய்வதால் மட்டும் முழுமையான ஆங்கில பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள முடியாது. சரியான ஆங்கில உச்சரிப்பைப் பெறுவதும் கடினம்.

இதற்கு நான் கூறும் அறிவுரை என்னவெனில் ஆங்கிலத்தை தமிழில் பேசுவதுப் போன்று அதே தொனியில் ஆங்கிலம் பேசிப் பழகாதீர்கள் என்பதே.
உதாரணமாக "I am speaking in English" என்று கூறும்போது அதை "அயம் ஸ்பீக்கிங் இன் இங்கிலிஸ்" என்று ஒவ்வொரு சொல்லுக்கு சொல் இடைவெளி விட்டு பேசிப் பழகாமல், ஒரு வாக்கியத்தில் உள்ள அனைத்துச் சொற்களையும் ஒரே சொல்லாக “ஐயம்ஸ்பீக்கிங்கின்ங்கிலீஸ்” என்றுப் பேசிப் பாருங்கள். மிக எளிதாக உங்கள் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள கூடியதாக இருக்கும். அதேவேளை ஆங்கிலேயர் (திரைப்படம், செய்திகள் உட்பட) பேசுவதையும் இலகுவாக விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கும். BBC போன்ற இணையத்தளங்களில் ஆங்கிலச் செய்திகளை காணொளி வடிவாக அல்லது ஒலி வடிவாகத் தொடர்ந்து கேட்டுவருவதும் பயனளிக்கும்.

BBC Business English இக் காணொளி தொடரினையும் பாருங்கள்.

உச்சரிப்பு (Pronounciation) பயிற்சி கருதி, இங்கே எமது வலைத்தளத்திலும் ஒரு ஆங்கிலப் பெண்மணியின் குரலில் ஒலிப்பதிவிட்டுள்ளோம். அவற்றையும் நீங்கள் கேட்டு பயிற்சி பெறலாம்.

ஆங்கில உரையாடல்களின் போது இலகுவாகவும் வேகமாகவும் பேசுவதற்கு ஆங்கில "short form" சுருக்க உச்சரிப்பு பயன்பாடுகள் முக்கியாமானது. எனவே நீங்களும் சிறப்பாக ஆங்கிலம் பேச விரும்புவராயின் இதுப் போன்ற "short form" முறைகளைப் பின்பற்றி ஆங்கிலத் தொனிக்கேற்ப பேசிப் பழகுங்கள்.

Affirmative short form

I will - I'll
You will - You'll
He will -
He'll
She will -
She'll
It will - It'll
We will - We'll
You will - You'll
They will - They'll


Negative short forms

இந்த எதிர்கால எதிர்மறையாக பயன்படும் துணைவினைகளின் "Sort Forms" களை மூன்று விதமாக வகைப் படுத்தியுள்ளனர்.

I will not - I'll not - I won't
You will not - You'll not - You won't
He will not - He'll not - He won't
She will not - She'll not - She won't
It will not - It'll not - It won't
We will not - We'll not - We won't
You will not - You'll not - You won't
They will not - They'll not - They won't


won’t என்பது will + not இன் சுருக்கமாகும். (Short form of will + not)

want - "வேண்டும்" எனும் பொருளிலும் ஒரு சொல் இருப்பதால் இரண்டையும் குழப்பிக்கொள்ளாதீர்கள். (இரண்டுக்கும் வேறுப்பாட்டை அவதானிக்கவும்.)

குறிப்பு:

ஆங்கிலத்தில் எதிர்காலச் சொற்பிரயோகங்களாக ஆறு வெவ்வேறு விதமாக வகைப்படுத்தப் பட்டுள்ளது அவை:

1. Future “will”
2. Future “going to”
3. Present continuous used as future.

4. Future Continuous

5. Future perfect simple
6. Future perfect continuous

இருப்பினும் நாம் இன்றையப் பாடத்தில் Future “will” அதாவது சாதாரண எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே கற்றோம். மற்றவைகளை எதிர்வரும் பாடங்களில் கற்கலாம்.

சாதாரண எதிர்காலம் Future "will"

இதன் பயன்பாட்டை மூன்று விதமாகப் பிரித்துப்பார்க்கலாம்.

1. எண்ணமிடல், நோக்கம், எதிர்ப்பார்ப்பு போன்றவற்றைக் கூறுதல்.

I will come tomorrow. - நான் வருவேன் நாளை
He will work with us. - அவர் வேலை செய்வார் எங்களுடன்.
I will win. - நான் வெற்றிப்பெறுவேன்.

2. முன்கூட்டியே ஒன்றை யூகத்தின் அடிப்படையில் கூறுதல்.

I think the Indian cricket team will win the match.
நான் நினைக்கிறேன் இந்தியன் கிரிக்கெட் குழு வெற்றி பெரும் ஆட்டத்தில்.
I think you will like her
நான் நினைக்கிறேன் நீ விரும்புவாய் அவளை.

முதல் வாக்கியத்தைப் பாருங்கள் அதில் இந்தியன் கிரிக்கெட் குழு 100% வீதம் வெற்றிப்பெரும் என்று திட்டவட்டமாக கூறப்படவில்லை. எனவே அக்கூற்று நிச்சயமற்றது. ஆனால் எப்படியோ (யூகத்தின் அடிப்படையில்) வெற்றிப்பெரும் எனக் கூறப்படுகின்றது. இதை ஆங்கிலத்தில் "Future prediction" என்று கூறுவர். அதாவது தாம் நினைப்பதே நடக்கும் எனும் எதிர்ப்பார்ப்புடன் கூறுவதாகவும் கொள்ளலாம்.

இதுப் போன்ற நிச்சயமற்று கூறும் எதிர்கால வினையை வெளிப்படுத்த "will" உடன் அதிகமாக பயன்படும் சொற்கள் probably, possibly, I think, I hope.

3. மற்றும் இந்த "will" உறுதியளித்து அல்லது உறுதியை வெளிப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது.

I will be there on time.
நான் அங்கிருப்பேன் (குறித்த) நேரத்தில்.

அதாவது குறித்த நேரத்திற்கு குறித்த இடத்தில் இருப்பேன் என்பதை முன்கூட்டியே உறுதியாகக் (promise) கூறப்படுகின்றது. (ஆனால் இருப்பாரா என்பதைத் தீர்மானிக்க முடியாது)

I promise, I will be there on time, don’t worry.
நான் உறுதியளிக்கிறேன், நான் அங்கிருப்பேன் (குறித்த) நேரத்திற்கு, கவலைப்படாதே.

வரைப்படம்


எமது ஆங்கிலம் வலைத்தளம் குறித்து சில வரிகள்

எமது இந்த "ஆங்கிலம்" வலைத்தளம் குறித்தச் சில மகிழ்வான வரிகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகின்றேன். வலைத்தளங்களைப் பொருத்த மட்டில் ஒரு மாதத்திற்கு பலப் பதிவிடும் தளங்களே அதிகம். ஒவ்வொரு நாளும் பதிவிடும் தளங்களும் உள்ளன. ஒரே நாளைக்குப் பல பதிவிடுவோரும் உள்ளனர். ஒரு மாதத்திற்கு நூற்றுக்கணக்கானப் பதிவிடும் தளங்களையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இவற்றிற்கான வாசகர்களின் வருகை என்னிக்கையைப் பார்த்தால், பதிவிடும் நாட்களில் மட்டுமே திரட்டிகளூடாக அதிகமான வரவுகள் இருக்கும். ( சிலத் தளங்கள் அப்படியல்ல.)

ஆனால் இத்தளத்தில் இதுவரை இப்பதிவோடு சேர்த்து 13 பதிவுகள் மட்டுமே இடப்பட்டுள்ளன. கடந்தப் பதிவு (23 மே 2008) இட்டப் பொழுது வாசகர்களின் வருகை என்னிக்கை 11,000 அளவிலேயே இருந்தது. (கிட்டத்தட்ட ஒரு மாதம்) 27 நாட்களுக்குப் பின் இன்று இப்பதிவிடும் இடைவெளிக்குள் இதன் என்னிக்கை 21,000 யிரத்தை தாண்டி சென்றுக்கொண்டிருக்கின்றது. 2008 யூன் 6 ம் திகதி இந்த ஆங்கிலம் வலைத்தளம் குறித்து PKP அவர்கள் தனது பதிவில் அறிமுகப்படுத்திய அன்று வருகையாளர்களின் என்னிக்கை "1000 "ரத்தையும் தாண்டியது.

இந்த “ஆங்கிலம்” வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில மாதங்களே ஆகின்றது. இந்த வலைத்தளத்தை மற்ற வலைத்தளங்களோடு ஒப்பிடுகையில் பின்னூட்டங்கள் வருவது மிக மிகக் குறைவு. ஆனால் இத்தளத்திற்கான வருகையாளரின் என்னிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. கீழுள்ள Traffic Statistics வரைப்படத்தைப் பாருங்கள்.

கிட்டத்தட்ட இந்த கால இடைவெளிக்குள் 200 க்கும் அதிகமானோர் Subscribers மின்னஞ்சல் ஊடாக பாடப் பயிற்சிகளை பெற்றுவருகின்றனர். தவிர மின்னஞ்சல் ஊடாக கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இதில் ஒரு விடயம் நிதர்சனமாகிறது. இன்றைய காலக்கட்டத்தின் ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை மக்கள் நன்குணர்ந்தே உள்ளனர் என்பதே.

இந்த "ஆங்கிலம்" வலைத்தளம் குறித்து தமது தளத்தில் முதலில் பதிவிட்டு அறிமுகப்படுத்தியவர் சிறில் அலெக்ஸ். இவரைப்போன்று இன்னும் பல சகப் பதிவர்கள் நண்பர்கள் இத்தளத்தை ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர். அனைவருக்கும் எனது நன்றிகள். வலைத்தளங்கள், இணையத்தளங்கள், மன்றங்கள் ஊடாக தொடுப்பு கொடுத்துள்ளோருக்கும் மிக்க நன்றிகள்.

திரட்டிகள் என்று கூறுகையில் அநேகமாக ஒரு பதிவு ஒரு சில மணித்தியாளங்களே அதில் நிலைத்து நிற்கின்றது. ஆனால் தமிழ்வெளி திரட்டியில் என்று பார்த்தாலும் இந்த ஆங்கிலப் பாடப் பயிற்சிக்கு முன்னுரிமை கொடுத்து (எமது சமுதாய வளர்ச்சியின் நலனை முன்னிட்டு என நினைக்கின்றேன்) காண்பிக்கப்பட்டுக்கொண்டே வருகின்றது. அவர்களுக்கும் எனது நன்றிகள்.

மேலும் இங்கே நான் தனித்து பதிவிட்டாலும் எனது இச்சிறு முயற்சிக்கு வருகையாளரான உங்கள் அனைவரதும் ஆதரவும், சக வலைப்பதிவர்களின் ஊக்குவிப்பும், பாராட்டுக்களுமே என்னை மென்மேலும் ஊக்கத்துடன் எழுதத் தூண்டுகின்றன. மேலும் எனது பணியை சிறப்புடன் செய்ய வேண்டும் எனும் உத்வேகத்தையும் என்னுள் உண்டுப்பன்னுகின்றன.

கிட்டத்தட்ட 8 கோடித் தமிழர்கள் வாழும் இவ்வுலகில், பாதிப் பேராவது ஆங்கிலம் கற்றுச்சிறந்தால் எமது எதிர்காலச் சமுதாயத்தின் முன்னேற்றத்தை எவராலும் தடுக்க முடியாது. எமது இப்பாடத் திட்டம் அனைத்து தமிழர்களையும் சென்றைடைய வேண்டுமென்பதே எமது விருப்பாகும். முடிந்தவரையில் எனது பணியை எனது சிற்றறிவுக்கு எட்டியவகையில் சிறப்புடன் செய்ய விளைக்கின்றேன். தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டத் தயங்காதீர்கள்.

"செருப்பு இல்லாதவன் கால் இல்லாதவனைப் பார்த்த ஆறுதல் அடைய வேண்டும்" என்பது இயலாமைக்கு கூறும் ஆறுதல் வார்த்தை. ஆனால் இன்றைய உலகம் ஒரு ஓட்டப் பந்தயம் போன்றது. முன்னே ஒடுபவன் பின்னே வருபவனை திரும்பிப் பார்க்கும் கணப்பொழுதிலும் பின்னே உள்ளவன் முன்னே உள்ளவனை முந்திவிடுவான். எனவே ஓடுங்கள்! ஓடுங்கள்!! பின்னே வருபவனை முந்த விடாது ஓடுங்கள். முன்னே ஒடிக்கொண்டிருப்பவனையும் முந்துவதற்கு ஓடுங்கள். உங்கள் வெற்றியில் தான் எமது சமுதாய வெற்றித் தங்கியுள்ளது. வெற்றிக்கொடியை நாட்டுங்கள். அது தமிழனது கொடியாக இருக்கட்டும்.

அவ்வெற்றி கல்வியின் ஊடாக கிட்டட்டும்.

நன்றி

அன்புடன் ஆசிரியர் அருண் HK Arun