இந்தியாவில் இஸ்லாமியர்களின் ரத்தம் இந்துத்துவாக்களுக்கு எப்படி விருப்பமானதோ, அதுபோல் இலங்கையில் இஸ்லாமியர்களின் ரத்தம் காகிதப்புலிகளுக்கு மிக விருப்பமானது. புலிகளின் ஈழ'தாகத்திற்கு' இஸ்லாமியர்களின் ரத்தமே தாகத்தை தணிக்கும் இளநீராக இருந்தது என்பதை 'காலச்சுவடு'களாக, காத்தான்குடிகளும், மூதூர்களும் இன்றும் சான்றுபகர்ந்துவருகிறது. முஸ்லிம்களுக்கு எதிரான இந்த சம்பவங்கள் பிரபாகரனுக்கு தெரியாமல், கருணா தளபதியாக இருந்தபோது நடத்தப்பட்டவை. இதற்காக பிரபாகரன் முஸ்லீம் சமுதாயத்திடம் வருத்தம் தெரிவித்துவிட்டார். தமிழர்களையும்-முஸ்லிம்களையும் பிரிப்பதற்காக இலங்கை அரசு திட்டமிட்டு இத்தகைய பிரச்சாரத்தை செய்கிறது என்று புலிகளுக்கு வக்காலத்து வாங்குவோரும் உண்டு.
இது ஒருபுறமிருக்க, நேற்று அக்குரசகொட்டப்பிட்டிய எனும் பகுதியில், மீலாதுவிழா ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தில் இரு முஸ்லீம் அமைச்சர்கள் உட்பட ஆறு அமைச்சர்களும், புத்த, கிறிஸ்தவ பிரமுகர்களும், ஏராளமான முஸ்லிம்களும் ஊர்வலமாக சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவன் திடீரென கூட்டத்திற்குள் புகுந்து, தன் உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச்செய்ததில் 15.பேர் பலியாகியுள்ளனர்.சாவு எண்ணிக்கை அதிகமாகலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலை புலிகள்தான் நடத்தினர் என்று இலங்கை அரசு குற்றம் சாட்டுகிறது.
இலங்கை அரசின் இந்த கூற்று ஓரளவுக்கு சரியானதாகப்படுகிறது. ஏனெனில் இந்த ஊர்வலத்தில் வெறுமனே முஸ்லிம்கள் மட்டுமே பங்கெடுத்தனர் என்றால், அவர்களை அரசே தாக்கிவிட்டு புலிகள்மீது பழிபோடுகின்றனர் என்று புலி ஆதரவாளர்கள் புலம்புவதற்கு வழியுண்டு. ஆனால் இந்த ஊர்வலத்தில், முஸ்லிமல்லாத அமைச்சர்கள், புத்த பிக்குகள் கலந்து கொண்டுள்ளநிலையில், அரசு இந்த தாக்குதலை நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, இது புலிகளின் தாக்குதல் என்று இலங்கை அரசு கூறுவதே சரியானதாகப்படுகிறது.
புலிகளுக்கு எதிரான போரில் அப்பாவிகள் பலியாவதை மனிதாபமுள்ள யாரும் ஆதரிக்கமுடியாது. முஸ்லிம்களும் இதை கண்டிக்கிறோம் அதே நேரத்தில்,புலிகள் மீதான தாக்குதலை அரசியலாக்கும் தமிழக புலி ஆதரவாளர்கள், முழுக்க முழுக்க ஒரு மதம் சார்ந்த ஊர்வலத்தில் பங்கெடுத்த அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்திய 'மாவீரர்களை' கண்டிப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
அதோடு முஸ்லிம்கள், மார்க்கத்தில் வலியுறுத்தப்படாத இதுபோன்ற மீலாது ஊர்வலங்கள், கொண்டாட்டங்களை தவிர்ந்துகொள்வதே சிறந்தது.
Saturday, March 14, 2009
Subscribe to:
Posts (Atom)