இந்தியாவிலிருந்து இவ்வாண்டு புனித ஹஜ்ஜுப் பயணத்திற்காக இதுவரை 57,805 யாத்ரீகர்கள் வந்துள்ளதாகவும், அவர்களில் 16 பேர் உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் இறப்பைத் தழுவியதாகவும், சவூதி அரேபிய அரசு வெள்ளியன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Friday, October 21, 2011
அத்வானி, விஜயசாந்தி சந்திப்பு: பாஜகவில் சேருகிறாரா?
ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை மேற்கொள்ளும் பாஜக மூத்தத் தலைவர் அத்வானியை, ஆந்திராவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான விஜயசாந்தி சந்தித்தார். பாஜக மூத்தத் தலைவர் அத்வானியின் ரதயாத்திரை நேற்று பிராக்நகருக்குவந்த போது, தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜயசாந்தி, அவரைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும் காவல்துறையும் ஊடகங்களும் : நீதிபதி மார்க்கண்டே கட்ஜு கண்டனம்
புது டெல்லி : "நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனே முஸ்லீம்கள் மீது பழி சுமத்தும் போக்கை காவல்துறையும் ஊடகங்களும் கையாள்வது வெட்கக்கேடானது" என்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற நீதிபதியும், தற்போதைய பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவருமான மார்க்கண்டே கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்தார்.
ஆங்கில தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "முஸ்லீம்களை குண்டுவெடிப்புகளுக்குக் காரணகர்த்தாவாக சித்தரிக்க்கும் ஊடகங்களும் காவல்துறையும் அப்போக்கை கைவிட வேண்டும்" என்று கூறினார். தடய அறிவியல் உள்ளிட்ட விஞ்ஞான முறைகளில் நமது நாட்டின் காவல்துறைக்குத் திறமை இல்லாததாலேயே தீவிரவாத வழக்குகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக கூறினார்.
கூடங்குளம் போராட்டம் தீவிரம்: அணுமின்நிலைய பணிகள் முடக்கம்!
கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக்கோரி இடிந்தகரையில் நடக்கும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று 3வது நாளாக பெருமணல் கிராம மக்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு கருதி அணுமின்நிலைய விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்கள் இன்றும் வேலைக்குச் செல்லவில்லை. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தை மூடக் கோரி இடிந்தகரை மற்றும் கூடங்குளம் சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
லிபிய முன்னாள் அதிபர் கடாபி சுட்டுக் கொலை !
சிர்தி (லிபியா): லிபிய முன்னாள் ஆட்சியாளர் கடாபி நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். பதுங்கு குழியில் மறைந்திருந்த அவர் மீது புரட்சி படை - நேட்டோ படை அதிரடி தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றது.
Subscribe to:
Posts (Atom)