அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
Showing posts with label ரிட்டன் விசா. Show all posts
Showing posts with label ரிட்டன் விசா. Show all posts

Friday, January 16, 2009

ரிட்டன் விசா 14

கலக்கிபுட்டியலெ தம்பி!- நானா. இத நா எதிர்பாக்கல நான, சடனா ஒரு ஆடு குறுக்கே போனதும் கையும் ஓடல,காலும் ஓடல-ஜமால். ஹா..ஹா..ஹா நான அதச்சொல்லல தம்பி. ரசூலுல்லாவ அந்த நாரப்பயலுவ கார்டூன் போட்டான்வல்ல அத எதிர்த்து அதிராம் பட்டிணத்துல பன்னுன ஆர்பாட்டத்தப்பத்திச் சொன்னேன். அந்த பொறுக்கிப்பயலுக அப்படி போட்டது கவலயா இருந்தாலும்,மருப்பக்கம் எதிர்ப்ப காட்ட திரண்ட நமளோட மக்களின் கோபன் கலந்த உண்ச்சியைபாக்குறப்பொ.இப்ப உள்ள நம்ம இஸ்லாமிய புள்ளகல பாரட்டனும் தம்பி. முனெல்லாம்,இந்த ஆர்.ஸ்.ஸ் பயலுவ அதிராம்பட்டுணத்துல பிரச்சனப் பன்னுனா முத்துப்பேட்டைக்கு வந்து உதவி கேப்பாக. ஆனாக்கா இப்ப நம்ம புள்ளைகளே சமாளிக்குறதப்பாத்தா சந்தொசமாக்கீது - நானா.வாங்க நான நோம்புத்திறக்கலாம்-கபூர்.தம்பி! வாப்பா எங்கே?ஒலு செஞ்சிக்கிட்டு இருந்தாக. இன்னும் 3 நிமிசம்தான் இருக்கு இப்ப அவொஹல கூப்பிடுங்க.இதோ வன்டுட்டேன் தம்பி. இவ்வொ நேரமா ஒலுவோடத்தான் இருந்தேன் இப்ப மூத்திரம் முட்டிகிட்டு வந்துடுச்சி. இந்த பாலப்போன சக்கர வியாதினால மூத்துரமா சாய்க்குது.நானா! (கபூர்ர வாப்பா வ நம்ம இஸ்மாயில் நானா கூப்பிடுறார்-குழபிகாதீங்க-ஆசிரியர்) என்ன தம்பி? நீங்க இங்கிலீசு மாத்துரத்தான் எடுத்துகிறீங்க?. டாக்டர் சொன்னாலும் அனுபவத்துல நாம கொஞ்சம் நாட்டு மருந்தும் எடுத்துக்கனும்.சிருகுறிஞ்சான் பொடி தெரியும்ல,சக்கர கொல்லின்னு சொல்லுவாங்க நாட்டு மருந்து கடயில கெடய்க்கும்.அத சின்ன உருண்டயா இக்குனூன்டு செய்ஸ்ல சென்சி தினம் காலைல ஒரு உருண்ட போட்டுவாங்க கொன்சம் சக்கர மட்டுப்படும். சரியா சொன்னிய தம்பி. எங்க வாப்பாவுக்கு சக்கர வியாத்திதான் அந்த காலத்துல ஏது இங்கிலீஸு மருந்து எல்லாம் நாட்டு வைத்தியம் தான்.எங்க உம்மா.. (சொல்லிக்கிட்டு இருக்கும் போது நகரா அடிக்குது.எல்லாரும் பேச்ச நிறுத்திவட்டு பேரிச்சம் பழம் சாப்பிடுறாங்க) தம்பி தண்ணி கொன்சமா குடிங்க,ரோஸ்மில்க் இருக்கு முதல்ல தொழுத்துட்டு அப்புரமா கஞ்சி குடிக்கலாமா? - அன்வர் காக்கா.அப்படியே செய்யலா நானா - இஸ்மாயில் நானா .வாப்பா! அப்பாஸ் வரேன்னு சொன்னான் இன்னும் கானல. அவன் பொஞ்சாதி,புள்ளயையெல்லாம் வந்துட்டாங்களா? அவங்கல்லாம் அப்பவே வந்துட்டாங்க வாப்பா! சரி நேரமாவுது உடனே ஜமாத் வச்சிடுவாங்க.எல்லாரும் கிளம்புங்க அப்பாஸ் வந்தா அவன் நோம்புத் திறக்கட்டும், பொண்டுக அத பாத்துப்பாங்க -அன்வர் காக்கா.(எல்லோரும் மஹ்ரிப்தொழுகைக்கு செக்கடிப்பள்ளி நோக்கி போறாங்க!)(தொடரும்)

ரிட்டன் விசா- 15

(தொட(ர்)ரும் கதை:(இஸ்மாயில் நானா வந்து போய் ஒரு மாதம் போனில் பேசி கொண்டது மட்டுமே நேரில் சந்தித்து கொள்ள உடியாத வகையில் ஜமாலும் ,கபூரும் அவர் அவர் வேலைகளில் மூழ்கிவிட்டார்கள்.திடீரென நானாவின் வீட்டுகாரவொ வந்திருப்பதாக தகவல் கேட்டு,மாமி வீட்டுக்கு வருகிறா சரிபா. இனி....)வாங்க மாமி சவுக்கியமா இருக்கிறீயலா?- சரிபா. நா நல்ல இருக்கேன் நீங்கள்லாம் சவுகியமா இருகியலா? நாங்க வரனும்னு தான் பாத்தோம் எங்க அவஹளுக்கு வேல அப்படி நீங்க யாரச்சம் வந்திருக்கலாம்.இவஹ எப்பவுமே சொல்லிகிட்டுத்தான் இருப்பாக.என்ன செய்யிறது இங்கயும் பல வேல இவங்களையும் நா இப்ப முன்னே மாரி வேலக்கு அனுப்பறதில்ல என்ன இருந்தாலும் இன்னும் கொஞ்ச காலத்துக்கு ரெஸ்ட் இருந்தா தான் பலய தாக்கத்து உடம்புக்கு வரும் இருந்தாலும் எங்க சொல்லு கேக்குறாக சில நேரம் நம்ம கண்ண அசர்ர நேரம் அப்படியே வெலியில கிளம்பி போய்டுறாக.ஆப்பளைக்கு என்ன தெரியும்? நாம பொம்பளத்தான் கிடந்து அள்ளாடுறோம்- சரிபா சொன்னால் ஆதங்கத்துடன்.
ஆமாமா நீ சொல்றது சரிதான்.உடம்புக்கு ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சுனா அப்பறமா அவதி,பவதியா போய்யிடும்.அதான் சும்ம போன்லேயே பேசிக்கிட்டு இருக்கம நேர்ல போய்ட்டுவான்னு நான சொல்லி அனுபிச்சாக.அதான் நஸ்ரின(தங்கை மகள்)கூட்டிகிட்டு ஓடியன்ந்தேன் ஸபுரா பீவி( நானாட மனைவி பெயர்)இருங்க சர்பத்து கலக்கிட்டு வரேன் சாப்புட்டுட்டு சாயங்காலம போகலாம்- செலயாமத்தா.அது சரி அதுவர நாங்க இருக்க முடியாது போட்டத போட்ட படி வந்திருக்கோம் இன்னொரு நாளைக்குப் பாக்கலாம்.அந்த கததான் வானா இருந்து சாப்பிட்டுவிட்டுதான் போகனும் நான் நானாக்கு போன் போடுறேன் ந்னு சொல்லிக்கிடே கபூர் வீட்டுக்குள் நுழைகிறான்.(தொடரும்)

ரிட்டன் விசா16

வாப்பா!நான் பொறப்பட இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்குது.அதுக்கு முன்னாடி உங்களுக்கும் உம்மாக்கும் டாக்டர் ட்ரீட்மென்ட் ஏற்பாடு செய்யனும் எல்லாம் கபூருக்கு ஏற்பட்ட ஆக்ஸிடென்ட்னால லேட்டாகிடுச்சி இனி தள்ளிப்போடமுடியாது ஜாபர் காக்காட்ட சொல்லிட்டேன் உடனே இந்தவாரமே போகனும் வாப்பா- (சொன்னான் கபூர்).சரி தம்பி எதுக்கும் அதுஅதுக்கு நேரம் வரனும்ல எல்லாம் அல்லாஹ் நாட்டத்திலேதான் இருக்கு.எது நடந்தாலும் அல்லா நல்லா ஆக்கிவைப்பான்னு நம்பனும் சரி,சரி போய் உங்க உம்மாட்ட சொல்லிடு தம்பி அவ ஒருவாரதுக்குள்ள போக்குவரத்துக்கு தேவையானத ரெடிபண்னுவா! நாம நம்ம வேனுள போறதுனால நாமலே எல்லாம் பண்னிக்கிட்டு போறதுதான் நல்லது.
பாவம் ஜாபரு அவன் பொன்சாதி ஒரு பலகினமானவ அவனுக்கும் அவன் பொன்சாதிக்கும் நாம இடஞ்சலா இருக்க கூடாதுல!சரி வாப்பா உம்மட்ட எல்லா(ம்)விளக்கமா சொல்லிட்றேன்.(அந்த நேரம் வீட்டு போன் அடிக்குது)ஹலோ யாரு?என்னங்க நாந்தான்,சொல்லுவுல(பொண்டாட்டி ரஜினாட்ட அப்படித்தான் பேசுவான்)ரொம்ப நல்ல சேதி ஆனாக்கா மாமிட்டதான் சொல்லுவே!(ன்)யேன் முழுகாம இருக்கியா? அடிபாவி! என்னட்ட சொல்லமட்டியா? ஆச தோச அப்ப்பளம் வடை,ஆசெயப்பாரு 40 வயசு கிளவனுக்கு! யாரு கிலவன்?சரி ,சரி நீங்க ஏதும் சொல்ல வேண்டாம் பேச ஆரம்பிச்சா பேசிக்கிடே இருப்பீங்க! அப்புறமா என்னால பதில் சொல்ல முடியாது உங்கள்ட்ட! சரி உம்மாட் கொடுக்குறேன் பேசு. நான் உம்மாட்ட கேட்டு தெரிஞ்சிக்குறே(ன்).அப்படியா அல்ஹம்துலில்லாஹ்! அவனும் அவன் பொண்டாட்டியும் கேட்காத துவா இல்ல, அவ இருக்காத நோம்பு இல்ல. இப்பதான் கேட்க சந்தோசமாகீது. நிரப்பமா சதுர சுகத்தோட புள்ளய பெத்து வளக்கட்டும். நா இப்ப உடனே தம்பிய கூட்டிக்கிட்டு வறேன்!சரிமாமி.தம்பி சபுரா முழுகாம இருக்கலாம்.அப்படியா ரொம்ப சந்தோசம்.வாப்பாட்ட சொன்ன ரொம்ப சந்தோசப்படுவாங்க!என்னாங்க சபுரா வாந்தியெடுத்துட்டாலாம்.இப்பதான் ரஜினா போன் போட்டு சொன்னுச்சி!சரி நீபோய் பாத்துட்டு பரக்கத்துக்கு ஆயிரம் ரூபா கைய்ல கொடுத்துட்டு வா நா சயங்காலமா போய் பாத்துட்டு வரேன்!(செலயமா சபுராவ பாக்க கபுருடன் கிளம்புறாங்க!
(தொடரும்)..