அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, June 25, 2011

தினத்தந்தி, தினமலர், தினகரன், தினமணி ஒரு பார்வை..


டகங்கள் பின்பற்றும் அரசியல் மற்றும்அவை வாசகர்களிடையே ஏற்படுத்தும்அரசியல் தாக்கம்விளைவு பற்றிபொதுவாகப் பேசப்படுகிறதுஎனினும்அவற்றைக் கூர்ந்து நோக்கி நுட்பமாகஅவை செய்துவரக்கூடிய அரசியல்செயல்பாட்டை தோலுரித்துக்காட்டுவது மிகவும் அவசியம்.
தமிழ் நாளிதழ் உலகில் பெரியஅளவுக்குவிற்பனையாகி பரவலானவாசகர்களைக்கொண்டிருக்கக்கூடியவை தினத்தந்தி,தினமலர்தினகரன்தினமணிஉள்ளிட்டவை.

சமச்சீர் கல்வித் திட்டத்தில் பார்ப்பன அணுகுமுறையா?


மக்கள் பேராதரவுடன் ஆட்சிக்கு வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புதிய அறிவிப்புகளுக்கு மக்கள் பேராதரவை வழங்கி வரும் நிலையில் சமச்சீர் கல்வித் திட்டத்தில் முதல்வர் எடுத்த முடிவு கடும் விமர்சனங்களுக்கும், கண்டனங்களுக்கும் உள்ளாகி வருகிறது. 
அனைத்து திட்டங்களிலும் ‘சுய பெருமைகளை’ திணித்துக் கொண்டிருப்பவர் கலைஞர் கருணாநிதி. தமிழ்நாடு என்றாலே அது காலம் முழுமைக்கும் கலைஞர் கருணாநிதி அதிகாரத்தின் கீழ் தான் என்று கருதியே அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தினார். சமச்சீர் கல்விக்கான பாடத் திட்டத்திலும் தன்னை புகுத்திக் கொண்டார். அதில் ஜெயலலிதா ஆட்சிக்கு மாறுபாடு இருந்தால் அதை நீக்கி விடலாம். அதற்காக சமச்சீர் கல்வித் திட்டத்தையே நிறுத்தப் போய், அது மக்களிடையே கடும் அதிருப்தியையும் எதிர்ப்பை யும் உருவாக்கிவிட்டது. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்திலும், அ.தி.மு.க. ஆட்சி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. 

செல்போன் கதிர்வீச்சு நம்மை தாக்காதவாறு தடுக்க சில வழிமுறைகள்.



கண்டிப்பாக இந்த தலைமுறையினர் பெரும் பாக்கியம் பண்ணி இருக்க வேண்டும். எவ்வளவு சொகுசான வாழ்க்கை எந்த மூலையில் நடந்தாலும் அதை உடனே அறிய தொலைகாட்சிகள், இடம் விட்டு இடம் பெயர சொகுசு கார்கள், தகவலை ஒரு ஒரே நொடியில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தெரிவிக்க போன் வசதி அதிலும் செல்போன்கள் வசதி இன்னும் பிரமாதம் பெரும்பாலானாவர்கள் இந்த செல்போன்களுக்கு அடிமையாகவே ஆகிவிட்டனர். இதில் உள்ள வசதிகளால் இந்த செல்போன்கள் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது. 
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த செல்போன்களில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இந்த செல்போன்களின் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது. இந்த செல்போன் கதிர் வீச்சினால் மூளையில் இரண்டு வகையான 
(Gliomas, Acoustic neuromas)  

(Gliomas)




Main Points:

  • 1. Acoustic neuromas are a rare cause of  unilateral hearing loss, dizziness, as well as other symptoms related to the brain.
  • 2. The best tests to diagnose acoustic neuroma are audiometry (hearing testing) and MRI scanning of the head with gadolinium contrast.
  • 3. About half of all acoustic neuromas are treated by surgery, about a quarter with radiation (this is increasing), and about a quarter are watched.
  • 4. No matter what method of treatment is used, hearing preservation is very unlikely.
Acoustic neuromas, also known as vestibular schwannomas, are non-malignant tumors of the 8th cranial nerve. Most commonly they arise from the covering cells (Schwann cells) of the inferior vestibular nerve (Komatsuzaki and Tsunoda, 2001; Krais, 2007). They can also arise within the labyrinth (Neff et al, 2003).
Acoustics comprise about 6 percent of all intracranial tumors, about 30% of brainstem tumors, and about 85% of tumors in the region of the cerebellopontine angle -- another 10% are meningiomas.




புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் செல்போன் உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விஷயம் நாம் செல்போன் உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.  

இந்த செல்போன்களின் கதிர்வீச்சில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது என்று சில வழிமுறைகளை கீழே காண்போம்.

 
  • முடிந்த அளவு செல்போன்கள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் செல் போன்கள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட செல்போன்கள் பாதிப்பு அதிகம்.
  • ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும். 
  • குழந்தைகளிடம் செல்போனில் பேசுவதோ,கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.

  • உங்கள் மொபைலில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.

Why cell phones are unsafe?


Cell phones emit signals via radio waves, which are comprised of radio frequency (RF) energy, a form of electromagnetic radiation
The controversy lies over whether or not cell phones emit enough radiation to cause adverse health effects. The concern is that cell phones are often placed close to or against the head during use, which puts the radiation in direct contact with the tissue in the head or they wear it on their hip causing potential danger to the kidneys and liver.The added concern with non-ionizing radiation, the type of radiation associated with cell phones, is that it could have long-term effects. Although it may not immediately cause damage to tissue, scientists are still unsure about whether prolonged exposure could create problems. This is an especially sensitive issue today, because more people are using cell phones than ever before.


  • காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட செல்போன்களின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.

  • தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும். 

  • நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஆன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்ப்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.
  • செல்போன்களில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.

  • செல்போன்களில் விளையாடுவதை முடிந்த அளவு தவிற்க்கவும் முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

  • செல்போன்களை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.
  • செல்போன்களை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம். 
  • போனில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும்.

  •  கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.
மேற்கூறிய முறைகளை கடைபிடித்தால் கண்டிப்பாக செல்போன்களின் கதிவீச்சில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

மறக்கப்பட்ட நெல்லி இனப்படுகொலை..


அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்று நடத்தப்பட்டது.

இதில் 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள்தரைமட்டமாக்கப்பட்டன.

இந...்து தீவிரவாதிகள் பட்சிலம் குழந்தைகளை வெட்டி கிழித்து இரு கூராக்கினார்கள். மேலும் நெருப்பு குண்டம் வளர்த்து அதில் பெண்களின் கைகளில் இருந்த குழந்தைகளை பறித்துபோட்டனர். அந்த குழந்தைகள் தீயில் கருகி சாவதை பார்த்து ரசித்து பேரானந்தம் அடைந்தனர்.
மறக்கப்பட்ட நெல்லி இனப்படுகொலை இந்தியாவில் ஹிந்துதுவாவினர் நடத்திய தொடர் இனப்படுகொலைகளின் ஒரு முன்னோட்ட மாகவே பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே டெல்லியில் 1984லும், பாகல்பூரில் 1989லும், மும்பையில் 1993லும் நாடு தழுவிய இனப்படுகொலைகள் நடைபெற்றன.

இதனுடைய உச்சகட்ட நிகழ்வுதான் குஜராத் இனப்படுகொலை. அதன் தொடர்ச்சிதான் இப்போது இந்தியா முழுவதும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகள்.

இந்திய அரசு நெல்லியில் உயிரிழந்தோருக்கான நிவாரணத் தொகையாக ரூ 5,000 வீதம் வழங்கியது. அதே சமயம் இதற்கு ஒரு வருடத்திற்கு பிறகு நடைபெற்ற சீக்கியர் படுகொலைக்காக ரூ.7 இலட்சத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகல்பூர் கலவரம்: பீகார் மாநிலம் பாகல்பூரில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராகஹிந்துத்துவ தீவிரவாதிகளால் 1989 ல் கலவரம் நடத்தப்பட்டது. இதில் முஸ்லிம்கள் 116 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரத்தை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கமும் அதன் துணை அமைப்புகளும் திட்டமிட்டு நடத்தின. ஜக்தீஷ்பூர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் ராமச்சந்திர சிங் மற்றும் கிராமத்தலைவர் தாக்குர் பாஸ்வான் ஆகியோர் இந்த படுகொலைக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டனர்.

இதன் மூலம் சொந்த நாட்டில் 30,000 பேரை அகதிகளாக்கி, 3000க்கும் மேற்பட்ட வீடுகளைச் சூறையாடி, ஒரு பெரும் இன அழிப்பை நடத்தினர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.
 
Regards,
Mohamed Shaheed

டோனியின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பிய காசோலை!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி ராஞ்சியில் உள்ள தனது வீட்டுக்கு வரி செலுத்துவதற்காக ராஞ்சி மாநகராட்சிக்குக் கடந்த மார்ச் மாதம் ரூ 645 க்குக் காசோலை அளித்துள்ளார்.
இந்தக் காசோலையை ராஞ்சி மாநகராட்சி கலெக்சனுக்காக வங்கியில் போட்டுள்ள நிலையில் டோனியின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என இந்தக் காசோலை திரும்பியுள்ளது. விளையாட்டு, விளம்பரம் என கோடிகளில் சம்பளம் வாங்கும் டோனியின் வங்கிக் கணக்கில் ரூ 645 இருப்பு இல்லாமல் காசோலை திரும்பியுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அதிகாரிகள், "டோனி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமான வரி கட்டி வருவதால் காசோலை பணம் இல்லாமல் ரிட்டன் ஆனதற்காக அபராதம் எதுவும் விதிக்கப் போவதில்லை" என்று கூறியுள்ளனர்.

Friday, June 24, 2011

இறக்குமதி குப்பைகளுக்கு இந்தியாவில் இடம்; இருக்கும் மக்களின் குப்பைகளை கொட்ட இடமில்லையோ..?"

ங்கிலாந்திலிருந்து தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்திற்கு, ஓராண்டிற்கு முன், 10 கன்டெய்னர்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றில், "வேஸ்ட் பேப்பர்' இருப்பதாக, ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. பிரான்ஸ் நிறுவனம் மூலம், இதை இறக்குமதி செய்த சிவகாசி தனியார் கம்பெனி, அதை எடுத்து செல்லவில்லை. இந்நிலையில், இங்கிலாந்திலிருந்து நகராட்சி கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. கன்டெய்னர்களை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். கன்டெய்னர்களுக்குள், குப்பைகள், பிளாஸ்டிக் பைகள், வேஸ்ட் பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், ரப்பர் கையுறைகள், புழுவுடன் கூடிய நகராட்சி கழிவுகள் உள்ளிட்டவை இருந்தன. இவற்றின் மொத்த எடை, 260 டன். இந்தியாவில் இறக்குமதி செய்ய, தடைவிதிக்கப்பட்டுள்ள இக்கழிவுகள் அடங்கிய கன்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
 
வெளிநாடுகளிலிருந்து இதுபோன்ற இறக்குமதிகள் அவ்வப்போது நடைபெறுவதும், அவை பறிமுதல் செய்யப்படும்போது மட்டும் செய்தியாவதும் தொடர்கிறது. வெளிநாடுகளிலிருந்து இத்தகைய மோசமான கழிவுகள் தனி நபர்களால் இறக்குமதி செய்யப்பட்டு அவைகளை இயன்றவரை பணமாக்கி விட்டு மீதி குப்பைகளை தமிழகத்தின் ஏதேனும் ஓரிடத்தில் கொட்டுகின்றனர். இப்படி வெளிநாட்டு குப்பைகளை கொட்டுவதற்கு இடமுள்ள தமிழகத்தில், பழம்பெரும்  ஊரான கீழக்கரை மக்களின் குப்பைகளை கொட்ட மட்டும் அரசு நிர்வாகத்திற்கு இடம் கிடைக்கவில்லை என்பது அதிசயமே.
 
கீழக்கரை நகரசபையில் சேரும் குப்பைகள் தில்லையேந்தல் பகுதி அருகே கொட்டப்பட்டுவந்தது.
இதற்கு அந்த பகுதிமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தடைஉத்தரவு பெற்றுள்ளனர்.
இதன்காரணமாக கீழக்கரை தனியார் தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக குப்பைகள் கொட்டப்பட்டது. இதற்கு கும்பிடுமதுரை பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைதொடர்ந்து கீழக்கரை நகரசபை தலைவர் பசீர் அகமது தலைமையில் அனைத்துகட்சி பிரமுகர்கள் கலெக்டர் அருண்ராயை சந்தித்து முறையிட்டதையடுத்து, கும்பிடு மதுரை பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் குப்பைகளை கொட்டப்படுகிறது. எனினும் கும்பிடு மதுரை மக்களின்  எதிர்ப்பும் தொடர்கிறது.
குடிமக்கள் மீதான ஒரு அரசின் தலையாய கடமை என்பது அம்மக்களின் சுகாதாரமான வாழ்க்கைக்கு உறுதியளிப்பதாகும். ஆனால் ஒரு பாராம்பரியமிக்க ஊரை குப்பை மேடாக காட்சியளிக்க செய்வதும், மக்கள் எதிர்ப்பு கிளம்பினால் தற்காலிகமாக தீர்வு காண்பதும் அரசுக்கு அழகல்ல. எனவே கீழக்கரையின் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், அதே நேரத்தில் சுற்றுப்புற கிராம மக்களும் பாதிக்காத  வகையில் சுற்றுப்புற கிராம மக்கள் உள்ளடக்கிய ஆய்வுக்கூட்டத்தை அரசு ஏற்பாடு செய்து கீழக்கரை குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும் குப்பைகளை சாலை  ஓரங்களில் கொட்டி அவைகளுக்கு தீ வைப்பதன் மூலம் காற்றை மாசுபடுத்துவதோடு, போக்குவரத்திற்கு இடையூறையும், மக்களுக்கு நோயையும் ஏற்படுத்துவதை தவிர்க்க, வெளிநாடுகள் போல், குடியிருப்புகளுக்கு வெகு தூரத்தில்  குப்பைகளை ஓரிடத்தில் கொட்டி அதை மண்ணைப் போட்டு மூடுவதன் மூலம் சுகாதாரத்தை பேணும் திட்டத்தையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.

தினகரனின் அயோக்கியத்தனம்!

இன்றைய தினகரன் பத்திரிக்கையில் "LKG க்கு ரூ 10000 க்கு மேல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள்" என்றொரு செய்தி பார்த்தேன். நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான கமிட்டியின் பரிந்துரைக்குப் பின்னர், தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கட்டணத்தின் உச்சவரம்பைத் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.

இந்த அறிவிப்பினை மையமாக வைத்து தினகரன் இந்தத் தலைப்பிலான செய்தியில் சென்னையில் 10,000 க்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் பட்டியலை அச்செய்தியில் போட்டிருந்தது. இதில் முதலிடத்தில் ரூ. 20,000 கட்டணம் வசூலிக்கும் பள்ளியாக எழும்பூரிலுள்ள ஹாரிங்டன் ஹவுஸ் நர்சரி & ப்ரைமரி பள்ளியினைக் குறிப்பிட்டிருக்கிறது.

ஆனால், தமிழக அரசு அறிவித்த பள்ளி கட்டணப்பட்டியல் இடம்பெற்றுள்ள பள்ளிக் கல்வி இணைய தளத்தில்(http://www.pallikalvi.in/schools/Fees/CHENNAI.pdf) வரிசை எண் 203 ல், வேளச்சேரியில் அமைந்துள்ள சன் ஷைன் நர்சரி பள்ளியின் கட்டணம் ரூ 24,000 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.

தினகரனின் செய்திப்படி, அதன் பட்டியலில் முதலிடத்தில் வந்திருக்க வேண்டிய பள்ளி இதுதான். ஆனால் அது வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தப் பள்ளியினையே சேர்க்காமல் மறைத்துள்ளது தினகரன். தினகரன் ஆசிரியர் குழுவின் கவனக்குறைவால் இப்பள்ளி விடுபட்டிருக்கலாம் என நினைக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு உபரித்தகவல்:

வேளச்சேரி சன்ஷைன் நர்சரி பள்ளி, கலைஞர் கருணாநிதியின் மகனான மு.க.ஸ்டாலின் அவர்களின் மகள் செந்தாமரையின் பள்ளி! இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவெனில், இப்பள்ளியில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி ஆகிய இரு வகுப்புகள் மட்டுமே நடந்து வருகிறது. நர்சரி வகுப்புகள் மட்டுமே நடக்கும் இப்பள்ளியின் கட்டணமாக 24,000 ரூபாயை நிச்சயித்த நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி, வேறு உயர் நிலை வகுப்புகள்(11, 12) கொண்ட பள்ளிகளுக்கு அதிகப்பட்சம் 4050 ரூபாய்க் கட்டணத்தை நிச்சயித்துள்ளது.

இவ்வுண்மையை மறைத்துள்ள தினகரன் பத்திரிக்கை யாருடையது என்பதில் தமிழக மக்களுக்குக் குழப்பமேதுமிருக்காது என்று நினைக்கிறேன். தினகரன் செய்து இருப்பது பச்சை அயோக்கியத் தனம். ஊடகதர்மத்தைக் காற்றில்பறக்கவிட்டு, தன் குடும்பங்களுக்காக உண்மையை மூடி மறைக்கும் இதுபோன்ற பத்திரிக்கைகளை ஒட்டுமொத்தமாக தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்!

10 மாத சோகம்; கடத்தப்பட்ட கப்பல் ஊழியர்கள் டில்லி திரும்பினர்; மீட்பில் பெரும் பங்காற்றிய பாக்

புதுடில்லி: சோமாலி‌ய கடற்கொள்ளையர்களிடம் சிக்கி கப்பம் தொகை செலுத்தப்பட்டு பின்னர் பாகிஸ்தான் படையினரின் உதவியால் மீட்கப்பட்ட இந்தியர்கள் இன்று டில்லி வந்து சேர்ந்தனர். 10 மாதம் கடலில் அல்லாடிய இவர்கள் மீட்பு நடவடிக்கைக்கு பெரும் உதவிபுரிந்த பாகிஸ்தான் கடற்படைக்கு மத்திய அமைச்சர் எஸ்.எம்., கிருஷ்ணா நன்றி தெரிவித்துள்ளார் . குறிப்பிட்ட நேரத்தில் பாகிஸ்தான் வழங்கிய உதவி என பாராட்டியுள்ளார்.

சோமாலிய கடற்கொள்ளையரால் பிடிக்கப்பட்டு, பின் விடுவிக்கப்பட்ட எம்.வி.சூயஸ் சரக்குக் கப்பல், ஓமன் நாட்டுக்கு வரும் வழியில் கடற்புயலில் சிக்கியதால், அதில் இருந்த ஆறு இந்தியர்கள் உள்ளிட்ட 22 கப்பல் பணியாளர்கள், பாகிஸ்தான் கப்பலுக்கு மாற்றப்பட்டு காப்பாற்றப்பட்டனர்.

எகிப்திய கப்பல் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.வி.சூயஸ் சரக்குக் கப்பல், ஏடன் வளைகுடாவில் சென்று கொண்டிருந்த போது, கடந்த 2010 ஆகஸ்ட் 2ம் தேதி சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இதில், ஆறு இந்தியர்கள், 11 எகிப்தியர்கள், நான்கு பாகிஸ்தானியர்கள், இலங்கையைச் சேர்ந்த ஒருவர் என, மொத்தம் 22 பணியாளர்கள் இருந்தனர். இந்தியர்களில், இருவர் அரியானாவைச் சேர்ந்தவர்கள். இமாச்சலப்பிரதேசம் மற்றும் தமிழகம், காஷ்மீர் மற்றும் மும்பையைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர்.

கப்பலை மீட்க, எகிப்திய நிறுவனம், ஒன்பது கோடி ரூபாயை கடற்கொள்ளையர்களிடம் அளித்தது. இதையடுத்து, கப்பலை சமீபத்தில் கடற்கொள்ளையர்கள் விடுவித்தனர். விடுவிக்கப்பட்ட கப்பல், ஓமன் நாட்டின் சலாலா துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது, அதன் எரிபொருள் முற்றிலும் காலியாகிவிட்டது.

மேலும் கடலில் வீசிய சூறாவளியில் கப்பல் சிக்கிக் கொண்டது. கப்பல் கேப்டன், பாகிஸ்தான் கடற்படைக்கு அளித்த தகவலின்படி, பாகிஸ்தானின் பி.என்.எஸ்.பாபர் கப்பலுக்கு கேப்டன் உள்ளிட்ட 22 பணியாளர்களும் பத்திரமாக மாற்றப்பட்டனர் .

கப்பலில் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டு கராச்சிக்கு அழைத்து வந்தது. அதன்பின்னர் விமானம் மூலம் துபாய் வழியாக இந்தியர்கள் அனைவரும் இன்று காலை 9.15 மணியளவில் டில்லி விமானம் வந்தடைந்தனர். இதன்மூலம் கடந்த 10 மாதங்களாக துயரத்தில் இருந்த இந்திய குடும்பத்தினர் மன நிம்மதியடைந்தனர். டில்லி வந்து சேர்ந்த 6 பேரையும் வரவேற்க கப்பல் ஊழியர்களின் குடும்பத்தினர் கூட்டம், கூட்டமாக வந்திருந்தனர். உறவினர்கள் ஆனந்தகண்ணீர் விட்டபடி பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பொருளிடம் அறியும் புதிய பொறிமுறை


 
டாக்டர். சிதம்பரநாதன் சபேசன்
டாக்டர். சிதம்பரநாதன் சபேசன்

பொருட்களின் இருப்பிடத்தை அறிவதற்கான மிகவும் மலிவான புதிய மின்னணு பொறிமுறை ஒன்றை தமிழ் விஞ்ஞானி ஒருவர் இங்கு பிரிட்டனில் கண்டுபிடித்திருக்கிறார்.
பிரிட்டனின் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவரான, இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட டாக்டர். சிதம்பரநாதன் சபேசன் அவர்களே இந்தக் கண்டுபிடிப்பை செய்திருக்கிறார்.
ஒரு பொருளுடன் இந்தப் பொறிமுறை அலகு பொருத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்தப் பொருள் திருடப்பட்டாலோ அல்லது காணாமல் போனாலோ, அந்தக் கணத்தில் அது எங்கு இருக்கிறது என்பதை இந்தப் பொறிமுறை காண்பிக்கும். இதன் மூலம் காணமால் போன பொருளை இலகுவாகத் தேடிக் கண்டுபிடிக்க முடியும்.
விமானப் பொதிகள் தொலைவதை தவிர்க்கலாம்
விமானப் பொதிகள் தொலைவதை தவிர்க்கலாம்
ஏற்கனவே இப்படியான பொருட்களை தேடியறியும் பொறிமுறை கண்டுபிடிக்கப்பட்டு, அப்பிள் கைத்தொலைபேசி போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்ற போதிலும், தற்போதுள்ள பொறிமுறைகள் மின்கலம் இல்லாமல் இயங்க முடியாத குறைபாட்டுடன் காணபடுகின்றன. அத்துடன் அவற்றின் விலையும் மிகவும் அதிகமாகும்.
ஆனால், 26 வயதான சபேசனின் கண்டுபிடிப்பைப் பொறுத்தவரை, அதற்கு மின்கலம் தேவையில்லை என்பதுடன் அதன் உற்பத்திச் செலவும் வெறுமனே 5 பிரித்தானிய பென்சுகள் மாத்திரமே என்கிறார் சபேசன்.
இந்த பொறிமுறையை பெரிய விமான நிலையங்களில் பயன்படுத்துவது குறித்து ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும், அப்படி பயன்படுத்தும் போது பயணப் பொதிகள் காணாமல் போதல், பயணிகள் தமது விமானத்தை தவற விடுதல் போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும் என்றும் சபேசன் கூறுகிறார்.
இந்த கண்டுபிடிப்புக்கான காப்புரிமைக்கும் தற்போது விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விபரித்தார்

சாய் பாபாவின் அறையினுள் 98 கிலோ தங்கம், 12 கோடி பணம்

புட்டபர்த்தி : புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் உள்ள சமீபத்தில் இறந்து போன சாய்பாபாவின் தனி அறையான யஜுர் மந்திர் அவரின் மறைவுக்கு பிறகு முதல் முறையாக திறக்கப்பட்டதில் 12 கோடி பணமும் 98 கிலோ தங்கமும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


பாபா டிரஸ்டின் உறுப்பினரும் பாபாவின் உறவினருமான ரத்னாகர் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசும் போது பாபாவின் மறைவுக்கு பிறகு யஜுர் மந்திர் திறக்கப்பட்ட போது மொத்தம் 11 கோடியே 56 இலட்சமும் 98 கிலோ தங்கமும் கண்டெடுக்கப்பட்டதாக கூறினார்.
டிரஸ்ட் உறுப்பினர்கள் முன்னிலையில் பாபாவின் 15 உறுப்பினர்களும் சில ஸ்டேட் போர்டு ஆப் இந்தியா ஊழியர்களும் இச்சொத்தை எண்ணியதாக கூறிய ரத்னாகர் பாபாவின் உயில் ஏதும் காணப்படவில்லை என்றும் தெரிவித்தார். பாபாவின் தனி உதவியாளர் சத்யஜித் இந்த டிரஸ்டில் சேர பாபா விரும்பியதாக பேச்சு உள்ளது குறிப்பிடத்தகது. பாபாவின் டிரஸ்டுக்கு புட்டபர்த்தி போல் பெங்களூர், ஹைதரபாத் மற்றும் பல ஊர்களில் சொத்துகள் உள்ளது.

கனிமொழி சிறையில் கொப்புளங்களுடன் கஷ்டப் படுகிறார் - கருணாநிதி!

டெல்லி திகார் சிறையில் மகள் கனிமொழியைச் சந்தித்த பின்னர் சென்னை திரும்பிய திமுக தலைவர் கருணாநிதி நேற்று இரவு சி.ஐ.டி காலனி வீட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். 

டெல்லி திகார் சிறையில் உள்ள மகள் கனிமொழி, ராசா மற்றும் சரத் குமார் ஆகியோரைப் பார்ப்பதற்காக மட்டுமே டெல்லி சென்றதாகவும் மனிதத் தன்மையற்ற இடத்தில் கனிமொழி அடைக்க ப்பட்டு இருப்பதாகவும் கருணாநிதி தெரிவித்தார்.

கனிமொழி சிறையில் கொப்புளங்களுடன் கஷ்டப் படுவதாகவும், பத்திரிக்கைகளில் வெளியான தவறான செய்திகளின் அடிப்படையில் கனிமொழி மீது குற்றச்சாட்டுகள் கூறப் பட்டுள்ளதாகவும் சி.பி.ஐ யும் அந்த பொய்யான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கருணாநிதி தெரிவித்தார்.

ஒவ்வொரு ரேஷன் கார்டிற்கும் மிக்சி, மின்விசிறி, கிரைண்டர்: ஒரே "பேக்கேஜ்' ஆக வழங்க உத்தரவு

ஒவ்வொரு குடும்பத்துக்கும், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை சேர்த்தே, "பேக்கேஜ்' ஆக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக கொள்முதல் செய்யப்படும், 25 லட்சம் பொருட்களை, எந்தெந்த குடும்பத்துக்கு வழங்குவது என்பதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

அரிசி வாங்க தகுதியுள்ள, 1.83 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதில், முதல் கட்டமாக, 25 லட்சம் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி கொள்முதல் செய்ய, டெண்டர் விடப்பட்டுள்ளது. இவற்றை வினியோகிக்கும் பணி, செப்டம்பர் 15ம் தேதி துவங்க உள்ளது. இதில், தலா, 25 லட்சம் பொருட்கள் கொள்முதல் செய்வதால், மொத்தம், 75 லட்சம் பொருட்களை, ஒரு வீட்டுக்கு மிக்சி, மற்றொரு வீட்டுக்கு கிரைண்டர், இன்னொரு வீட்டுக்கு மின்விசிறி என அளித்தால், 75 லட்சம் குடும்பங்கள் ஒரே சமயத்தில் பயனடையும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், முதல்வர் ஜெயலலிதா, மூன்றையும் சேர்த்தே ஒரே, "பேக்கேஜ்' ஆக வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இதனால், ஒவ்வொரு குடும்பத்துக்கும் இந்த மூன்று பொருட்களும் மொத்தமாகவே வழங்கப்பட உள்ளன. இதன் மூலம், ஒரு வீட்டுக்கு மின்விசிறி கிடைத்து, இன்னொரு வீட்டுக்கு கிரைண்டர் கிடைத்தால் ஏற்படும் அதிருப்தி தவிர்க்கப்படும்.

மேலும், மூன்று பொருட்களுமே மிகவும் தரமாக இருக்கவேண்டும் என்பதில், தமிழக அரசுஉறுதியாக உள்ளது. சந்தையில் உயர்தரத்தில் உள்ள பொருளையே வழங்க வேண்டுமென விரும்புகிறது. இதற்காக, எந்த நிறுவனம் சப்ளை செய்தாலும், அரசு நிர்ணயித்து உள்ள தரத்துடன் வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 25 லட்சம் மிக்சி கொள்முதல் செய்ய, 500 கோடி ரூபாய்க்கும், கிரைண்டர் கொள்முதல் செய்ய, 500 கோடி ரூபாய்க்கும், மின்விசிறி கொள்முதல் செய்ய, 250 கோடி ரூபாய்க்கும் டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டர், ஜூலை 11ம் தேதி திறக்கப்படுகிறது. அதற்கு முன்பாக, இப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம், கடந்த 21ம் தேதி நடத்தப்பட்டது. அதில், பொருட்களின் தரம் குறித்து, நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு விளக்கப்பட்டது. அவர்களது சந்தேகங்கள்குறித்தும் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டு உள்ளன. இவற்றுக்கும் உரிய விளக்கங்களை அரசு அளிக்க உள்ளது.

டெண்டர் முடிந்து, பொருட்களை கொள்முதல் செய்வதற்கான உத்தரவு, ஜூலை 15ம் தேதிக்குள் வழங்கப்பட்டு விடும். எனவே, செப்டம்பர் 15ம் தேதி முதல், பொருட்களின் வினியோகம் துவங்கும். ஒரே நிறுவனத்துக்கு, 25 பொருட்களையும் தயாரிக்கும் உரிமத்தை கொடுக்காமல், பல்வேறு நிறுவனங்களுக்கு பிரித்து வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், சென்னையில் என்ன தரத்தில் கிரைண்டர் வழங்கப்படுகிறதோ, அதே தரத்தில் மதுரை அல்லது கன்னியாகுமரியிலும் வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது. முதல் கட்டமாக, 25 லட்சம் பொருட்களை கொள்முதல் செய்வதால், மொத்தமுள்ள, 1.83 கோடி குடும்ப அட்டைகளில், யாருக்கு முதலில் இவற்றை வழங்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி, தலைமைச் செயலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தலைமைச்செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், முதல் கட்டமாக பயனாளிகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ள, "அந்த்யோதயா அன்னா யோஜனா' திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகளுக்கு முதல் கட்டமாக இவற்றை வழங்கலாமா அல்லது அனைத்து மாவட்டங்களிலும், ஒன்றியங்களிலும் பரவலாக கிடைக்கும் வகையில் பொருட்களை வழங்கலாமா என்பதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இவை விரைவில் வெளியிடப்படும்.

வருவாய்த் துறையே பொறுப்பு: மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறியை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்தாலும், அவை, ஏற்கனவே இலவச "டிவி' வழங்கப்பட்ட முறைப்படியே மக்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளன. அதாவது, வருவாய்த் துறையினர் மூலமே வினியோகம் செய்யப்படும். எனினும், இப்பொருட்கள் உரியவர்களுக்கு உரியமுறையில் வினியோகிக்கப்படுகிறதா என்பதையும், அவற்றின் தரம் மற்றும் அப்பொருட்களை, "சர்வீஸ்' செய்வதற்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளனவா என்பதையும், புதியதுறையான சிறப்பு திட்ட அமலாக்கத் துறை கண்காணிக்கும். இதற்காக, மாவட்ட அளவில், சிறப்பு திட்ட அமலாக்கத் துறை சார்பாக, புதிதாக ஆட்களை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மக்களுக்கு இலவசப்பொருட்கள் கிடைப்பதை, இத்துறை உறுதி செய்யும்.

ருவாண்டா இனப்படுகொலை தீர்ப்பு


 
டூட்ஸி இன அகதி ஒருவர்
டூட்ஸி இன அகதி ஒருவர்
ருவாண்டா இனப்படுகொலை தொடர்பான ஐநா அனுசரணை நீதிமன்றம் அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு, இனப்படுகொலை மற்றும் பாலியல் வல்லுறவு சம்பவங்களைத் தூண்டியமை உள்ளிட்ட குற்றங்களுக்காக ஆயுட் தண்டனை அளித்து தீர்ப்பளி்த்துள்ளது.
போலின் நீராமாசுஹூக்கோவுக்கு எதிரான வழக்கு 2001ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தான்ஸானியாவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளடங்கிய குழுவொன்று, இந்த தீர்ப்பை வழங்கி வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
சிக்கல்கள் நிறைந்திருந்த இந்த வழக்கு நீண்டநாளாகவே பெரும் இழுபறியாக இருந்து வந்தது.
வழக்கு ருவாண்டாவில் கூட நடக்கவில்லை. பல நூறு கிலோமீற்றர்களுக்கு அப்பால் தான்சானியா நகர் அருஷாவில் வழக்கு நடத்தப்பட்டது.
வழக்கு முடிவில், போலின் நீராமாசுஹூக்கோவுடன் அவரது மகன் உட்பட இன்னும் ஐந்து பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ருவாண்டா வழக்கு நீதிபதி
ருவாண்டா வழக்கு நீதிபதி
சூடானில் புட்டாரே பிராந்தியத்தில் படுகொலைகளைப் புரிந்த ஆயுதக் குழுக்களை அமைப்பதில் பங்கெடுத்துள்ள முன்னாள் குடும்ப நலத்துறை அமைச்சர் போலின், அந்தக் குழுக்களின் அட்டூழியங்களை மேற்பார்வையும் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
1994ம் ஆண்டு ருவாண்டா இனப்படுகொலை காலத்தில் டுட்ஸி சிறுபான்மை இன மக்கள் மற்றும் பெரும்பான்மை ஹூட்டு இன மக்களில் தாராளவாதப் போக்குடையவர்கள் என
சுமார் எட்டு லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
ருவாண்டா தொடர்பான ஐநா அனுசரணையுடனான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முதற்தடவையாக ருவாண்டா இனப்படுகொலைக்காக பெண்ணொருவரை குற்றவாளியாக உறுதிப்படுத்தியுள்ளது.
ருவாண்டா இனப்படுகொலைக்குப் பின்னர், அண்டை நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கு தப்பிச் சென்றிருந்த போலின், 1997ம் ஆண்டில் கென்யாவில் கைதுசெய்யப்பட்டார்.
65 வயதான போலின் நீராமாசுஹூக்கோ, அவரது எஞ்சிய காலத்தை சிறையில் கழிப்பார்.

சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்வு: மண்ணெண்ணெய், டீசலும் தப்பவில்லை

புதுடில்லி: டீசல், சமையல் காஸ், கெரசின் விலை குறித்து முடிவு செய்வதற்காக, அமைச்சர்கள் அதிகார குழு கூட்டம், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் இன்று நடந்தது. இதில் சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3ம், கெரசின் ரூ. 2ம் உயர்த்தப்படுகிறது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு வழங்கியுள்ளது. அதேநேரத்தில், மக்களை நேரிடையாக பாதிக்கக்கூடிய, டீசல், காஸ் சிலிண்டர் மற்றும் கெரசின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் மட்டும், பல்வேறு அமைச்சர்களை உள்ளடக்கிய அதிகாரக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு மத்திய நிதியமைச்சர் தலைமை வகிக்கிறார். மாநில சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலை காரணம் காட்டி, "அமைச்சர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றுள்ளனர்; சில அமைச்சர்கள் டில்லியில் இல்லை' எனவும், மேலும், பணவீக்கமும் பயமுறுத்தி கொண்டிருந்ததால், முடிவு எடுக்க முடியாமல் அரசு திணறியது. இதுபோன்ற பல்வேறு காரணங்களுக்காக, அமைச்சர்கள் குழு கூட்டமும் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்து, அமைச்சர்கள் குழு கூட்டத்தை கூட்டி முடிவு செய்யும்படி பெட்ரோலிய அமைச்சகம் வலியுறுத்தி வந்தது. இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை, மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி சமீபத்தில் சந்தித்தார். அப்போது, "பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்திப்பதால், டீசல் விலையை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை. மேலும், எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பீட்டை சரிக்கட்ட வழங்கப்படும் சலுகைகள் குறித்து முடிவு செய்ய வேண்டும்' என, வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்துப் பேசினார். தற்போது, மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, நாள் ஒன்றுக்கு, 490 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இவற்றை சமாளிக்க முடியாததால், டீசல், கெரசின் மற்றும் காஸ் சிலிண்டர் விலையை உடனே அதிகரிக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய அமைச்சகத்தின் நெருக்குதல் காரணமாக, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு, இன்று கூடியது. இதில் சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3ம், கெரசின் ரூ. 2ம் உயர்த்தப்படுகிறது.

அரசு விளக்கம்: கேஸ், டீசல் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்வே காரணம் என மத்திய அரசு விளக்கமிளத்துள்ளது.

Sunday, June 19, 2011

புதிய கல்வி கட்டண விவரம் - அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான புதிய கல்வி கட்டண விவரம், பள்ளிக்கல்வி இணையதளத்தில் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது.


ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே. ரவிராஜ பாண்டியன் குழு, திருத்தப்பட்ட புதிய கல்விக் கட்டணத்தைக் கடந்த 13-ம் வெளியிட்டது.

இந்த நிலையில், திருத்தப்பட்ட புதிய கல்விக் கட்டண பட்டியல் மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கான புதிய கல்வி கட்டண விபரங்களைக் கீழ்கண்ட பள்ளிக்கல்வி இணையதளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
இணைப்பு: http://www.pallikalvi.in/schools/schoolfeesstructure.htm

வங்கி கணக்குகள் குறித்து சுவிஸ் நாட்டு சட்டத்தில் மாற்றம்.

ஜெனீவா:வங்கி கணக்குகள் மற்றும் இரட்டை வரி ஒப்பந்தங்கள் குறித்த சுவிட்சர்லாந்து சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ள இந்தியர்கள் குறித்த விவரங்கள் விரைவில் தெரிய வரும். யார், யார் எவ்வளவு பணத்தைப் போட்டு வைத்துள்ளனர் என்பதும் அம்பலமாகும்.

இந்தியாவைச் சேர்ந்த பெரும்புள்ளிகள் பலர், உள்நாட்டில் வரி ஏய்ப்பு செய்து சேர்த்த கறுப்புப் பணத்தை, சுவிட்சர்லாந்து உட்பட பல வெளிநாட்டு வங்கிகளில் டிபாசிட் செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இந்தப் பணத்தின் அளவு, 70 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என, நம்பப்படுகிறது. உலகிலேயே சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ளவர்களில், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தான் முதலிடத்தில் உள்ளனர்.அன்னிய நாட்டு வங்கிகளில் டிபாசிட் செய்துள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர உத்தரவிடக் கோரி, சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு, அது நிலுவையில் இருக்கிறது. அதே நேரத்தில், இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் தரப்பிலும், அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்கள் தரப்பிலும் மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. கறுப்புப் பணத்தை மீட்கக் கோரி, இவர்கள் சமீபத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.

இதற்கிடையில், சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ளவர்கள் பற்றிய விவரங்களை பெற, மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டது. இந்தியாவைப் போல, வேறு பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ளதால், அந்த நாடுகளும், தங்கள் நாட்டவர்களின் பெயர், விவரங்களை தர வேண்டும் என, சுவிஸ் அரசை வலியுறுத்தி வந்தன.இப்படி உலக நாடுகள் தரப்பில் நெருக்கடி அதிகரித்ததால், வங்கி கணக்குகள் மற்றும் இரட்டை வரி தொடர்பான ஒப்பந்தங்களில், சுவிட்சர்லாந்து அரசு மாற்றம் செய்துள்ளது. அந்த மாற்றங்களுக்கு சுவிட்சர்லாந்து பார்லிமென்டின் மேல்சபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.
இதனால், சுவிட்சர்லாந்து நாட்டுடன் இரட்டை வரி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நாடுகள் இனி பலன் அடையலாம்.

சுவிஸ் நாட்டில் உள்ள தனியார் வங்கிகளில் தங்கள் நாட்டைச் சேர்ந்த யார், யார் எல்லாம் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ளனர், எவ்வளவு டிபாசிட் செய்துள்ளனர் என்ற தகவல்களைப் பெறலாம். கறுப்புப் பணம் பதுக்கியவர்களின் சர்வதேச வங்கி கணக்கு எண்கள் மற்றும் சமூக பாதுகாப்பு எண்களைக் கொடுத்து, இவற்றைப் பெறலாம்.இந்த புதிய சட்டத் திருத்தத்தின் மூலம், இந்தியா, ஜெர்மனி, கனடா, ஜப்பான், நெதர்லாந்து, கிரீஸ், துருக்கி, உருகுவே, கஜகஸ்தான் மற்றும் போலந்து ஆகிய நாடுகள் பயன் பெறும். இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், இந்தியாவுடனான இரட்டை வரி ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய, சுவிட்சர்லாந்து பார்லிமென்ட் குழு ஒப்புதல் அளித்தது. அதனால், நடப்பாண்டில் இருந்தே சுவிஸ் வங்கிகளில் பணத்தைக் குவித்துள்ளவர்களின் தகவல்களை இந்தியா பெறலாம்.

சுவிட்சர்லாந்து அரசின் இந்த நடவடிக்கையால், அந்நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை மீட்டுக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் சாதகமாக உள்ளதாகவே தோன்றுகிறது.

கயிற்றில் கட்டப்படும் குழந்தைகள் ஒரு தட்டில் மூன்று பேருக்கு உணவு .

விருதுநகர்: விருதுநகர் பாலவநத்தம் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகள், "சேட்டை' செய்தால், அவர்களை கயிற்றால் கட்டி போட்டு தண்டனை வழங்குவதும், ஒரே தட்டிலே மூன்று குழந்தைகளுக்கு உணவு வழங்குவதுமான அநாகரிக செயலால், பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர்.

விருதுநகர் அருகே, பாலவநத்தம் அங்கன்வாடியில் இரண்டு மையங்கள் உள்ளன. இங்கு, தலா 25 குழந்தைகள் வீதம் 50 குழந்தைகள் படிக்கின்றனர். தலா ஒரு அங்கன்வாடி பொறுப்பாளர்கள், தலா இரண்டு உதவியாளர்கள் வேலை செய்கின்றனர். ஒரு ஆண்டுக்கு முன் இங்கு வந்த கலெக்டர், ஒரு மையத்தில், ஒரு அங்கன்வாடி மட்டுமே செயல்பட வேண்டும் என, உத்தரவிட்டிருந்தார். ஆனால், அதிகாரிகள் ஆதரவோடு, இன்றும் இரண்டு மையங்கள் தான் செயல்படுகின்றன.அங்கன்வாடி மையங்களுக்கு தனி பொறுப்பாளர்கள் இருந்தும், இரண்டுக்கும் ஒரே சமையல் தான். மூன்று குழந்தைகளுக்கு, ஒரே தட்டில் தான் உணவு வழங்கப்படுகிறது. இதை தான், மூன்று குழந்தைகளும் பிரித்து உண்ண வேண்டும். மேலும், ஒரு முட்டையை பிரித்து மூன்று குழந்தைகளுக்கு வழங்குகின்றனர்.

இதுமட்டுமன்றி, குழந்தைகள், "சேட்டை' செய்தால், கயிற்றால் ஜன்னல் கம்பியில் கட்டிப் போட்டு, தண்டனை வழங்குவதும், இங்கு இன்றும் தொடர்கிறது. இதனாலேயே, பல பெற்றோர், குழந்தைகளை மையத்திற்கு அனுப்புவதில்லை.அங்கன்வாடி பொறுப்பாளர்கள் வெளியூரில் இருந்து வருவதால், இதன் சாவியை உதவியாளர்களே வைத்துள்ளனர். விடுமுறை நாட்களிலும் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்க, மையம் திறக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு திறப்பதே இல்லை. சில நாட்களில், விழா நிகழ்ச்சிகளுக்காக மையத்தையே வாடகைக்கு விடுவதும் இங்கேயே சாத்தியம்.

அங்கன்வாடி பொறுப்பாளர் தமயந்தி கூறுகையில்,"நான் பொறுப்பேற்ற நாள் முதல், அங்கன்வாடிக்கான சாவியை, என்னிடம் உதவியாளர்கள் ஒப்படைக்கவில்லை. இதை அதிகாரிகளிடம் கூறியும், ஒரு ஆண்டாகியும் சாவியை வாங்கி கொடுக்கவில்லை. இதனால், அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்கின்றனர்' என்றார்.

இது தொடர்பாக, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்ட அலுவலர் அழகுசெல்வியை தொடர்பு கொள்ள, பல முறை மொபைல் போனில் தொடர்பு கொண்டும், அவர் போனை எடுக்கவில்லை.