அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, June 19, 2011

சென்னைக்கு உகந்த ரயில் எது?

சென்னைக்கு உகந்தது மெட்ரோ ரயிலா, மோனோ ரயிலா என்ற விவாதம் சூடு பிடித்துள்ளது.
தமிழகத் தலைநகர் சென்னையின் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க திமுக அரசு கொண்டு வந்த மெட்ரோ ரயில் திட்டத்தை முதல் கட்டத்தோடு முடக்கிவிட்டு 300 கிலோ மீட்டர் தொலைவு மோனோ ரயில் திட்டத்தை அமல்படுத்தப் போவதாக அதிமுக அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து முறைமையை அமைக்கும் திட்டத்தின் கீழ் ஏற்கனவே சுமார் 45 கிலோமீட்டர் தூரத்துக்கு மெட்ரோ திட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இதற்காக பல நூறு கோடி ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை முடிக்க 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஐப்பானிய கடன் உதவியோடு செயற்படுத்தப்படும் இத்திட்டம் 2016 ஆம் ஆண்டுவாக்கில்தான் செயற்பாட்டுக்கு வரும்.
மெட்ரோ ரயிலுக்கு மக்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பு உள்ளது, அதில் எந்த அளவுக்கு வருமானம் கிடைக்கிறது என்பதைப் பொறுத்து இத்திட்டதை படிப்படியாக விரிவுபடுத்த முந்தைய திமுக அரசு உத்தேசித்திருந்தது.
ஆனால் புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை அப்படியோ கிடப்பில் போட்டு விட்டு மோனோ ரயில் என்ற ஒற்றை தண்டவாளத்தின் மீது செல்லும் ரயில் திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளது.
இந்த நிலையில் மெட்ரோ ரயில் திட்டத்தை பாதியில் கைவிட்டது தவறு - மோனோ ரயில் திட்டம் உலகில் எந்த நாட்டிலுமே முக்கியப் போக்குவரத்தாக இல்லாத நிலையில் இது போன்ற முடிவை தமிழக அரசு எடுத்தது தவறானது என்பவை போன்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து சுவாமிநாதன் அளிக்கும் குறிப்பை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

No comments: