| ||
மராட்டிய மாநிலம் மாலேகோனில் கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி . இந்தக் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது முழுக்க முழுக்க இந்து ஜாக்ரன் மன்ச் தான் என்பது இந்த வழக்கை விசாரித்து வரும் ATS - (Anti Terrorist Squad) மூலம் தெரியவந்தது. மேலும் இந்த நாசவேலையில் ஈடுபட்டுள்ளது தொடர்பாக தயானந்த் பாண்டே, ரமேஷ் உபாத்யாயா, ராகேஷ் தவாடே, சுதாகர் சதுர்வேதி மற்றும் சமீர் குல்கர்னி உள்பட 11 பேரை மராட்டிய மாநில தீவிரவாத தடுப்புப் படை கைது செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் மும்பைத் தீவிரவாத தாக்குதலின்போது படுகொலை செய்யப் பட்ட மகராஷ்ட்ராவின் தீவிரவாதத் தடுப்புப் படை ATSயின் தலைவரான 90 நாட்களில் தீர்ந்துவிடும் என்று கார்கரே தன்னுடைய கடைசி பேட்டியில் உறுதியாக சொன்ன மாலேகான் வழக்கின் கதி என்ன வாகும்? என்ற நாட்டு மக்களின் கவலையை நிஜமாக்கும் விதத்தில் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மகராஷ்ட்ரா மாநில தீவிரவாதத் தடுப்புப் படையின் தற்காலிகத் தலைவராக கே.பி. ரகுவன்ஷி என்ற அதிகாரி நியமிக்கப் பட்டுள்ளார். இவர் குறித்த நெருடலான சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஜனவரி 22, 2008 ஆம் ஆண்டு ஹேமந்த் கார்கரே தீவிரவாதத் தடுப்புப் படை தலைவராக பொறுப்பு ஏற்றார். அதற்கு முன்புவரை இதே ரகுவன்ஷிதான் ATS-ன் தலைமைப் பொறுப்பில் இருந்து வந்தார். அப்போது அத்தனை தீவிரவாத வழக்குகளிலும் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே வளைத்துப் பிடித்து விசாரித்தவர்தான் இந்த பாசிச சங்பரிவார் கூட்டாளி கே.பி. ரகுவன்ஷி. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரி கர்னல் புரோஹித்துக்கு நெருங்கிய நண்பர் இவர் என்பதும் இப்போது தெரிய வந்துள்ளது. ஷிவானந்த் திவாரியின் கருத்து:- இந்தத் திடுக்கிடும் தகவல்களை மேற்கொள் காட்டி யை தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைவர் பதவியை விட்டு நீக்க வேண்டும் என ஐக்கிய ஜனதாதள ராஜ்ய சபா உறுப்பினர் ஷிவானந்த் திவாரி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ரகுவன்ஷி தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைவராக ஹேமந்த் கார்கரே பொறுப்பேற்பதற்கு முன்னதாக பதவி வகித்து வந்தார். ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் அந்தப் பதவியை வகித்து வந்தார். 2005ஆம் ஆண்டு தீவிரவாதத் தடுப்புப் படை தலைமையகத்துக்கு வந்து உளவு எடுப்பது குறித்து வகுப்பு எடுப்பதற்கு கர்னல் புரோஹிதுக்கு ரகுவன்ஷி அழைப்பு விடுத்ததாகவும் குறிப்பிட்ட ஷிவானத் திவாரி ரகுவன்ஷியை உடனடியாக நீக்க வேண்டும் என கடுமையாகக் கருத்து தெரிவித்தார்.
போலீஸ் காவலுக்கு அனுமதி மறுப்பு:- இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யாசிங் உள்ளிட்ட 11 பேரின் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் மும்பையில் உள்ள கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ரோகிணி சாலியன் ஆஜரானார். அவர், "மாலேகானில் குண்டுவெடிப்பதற்கு முன் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் சுதாகர் சதுர்வேதிக்கும் இடையே நடந்த உரையாடல் அடங்கிய சி.டி.யை அவரது வீட்டில் கைப்பற்றி உள்ளோம். மேலும் இந்த வழக்கில் தேடப்படும் ராம்ஜி கால்சங்கரா சதுர்வேதி வீட்டில்தான் தங்கி இருந்துள்ளார். இதுபற்றி சதுர்வேதியிடம் மேலும் விசாரிக்க வேண்டி இருப்பதால் அவருக்கு போலீஸ் காவல் வழங்க வேண்டும்" என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி ஒய்.டி. ஷிண்டே, விசாரணைக்காக போலீஸ் காவலுக்கு அனுமதி மறுத்து பிரக்யாசிங் உள்பட 11 பேரையும் வரும் 20-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் தயானந்த் பாண்டே கோர்ட்டுக்கு வெளியில் வைத்து சகோதரரின் செல்போன் மூலம் தனது மகனுடன் பேச நீதிபதி அனுமதி வழங்கினார். இதுவே முஸ்லிம்களாக இருந்தால் அவர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உண்மை நிலை :- இது ஏதோ மலேகானில் மட்டும் நடந்த ஒன்றல்ல. தமிழகத்தில் - திருநெல்வேலி மாவட்டம் - தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு அருகிலும் இதுபோன்ற குண்டு வெடிப்பைச் செய்ததும் என்று கண்டுப் பிடிக்கப்பட்டதும் அந்தச் சம்பவத்தில் ரவி, கே.டி.சி.குமார், இலட்சுமி நாரயண சர்மா ஆகிய மூன்று பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதும் வாசகர்கள் அறிந்ததே. ஆனால், குண்டுகள் வெடித்தவுடன் அப்போது அதன் பின்னணியில் பாகிஸ்தானும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு SIMIயும் இருப்பதாகச் சொல்லப்பட்டு, இஸ்லாமியத் தலைவர்கள் பலரும் "இந்திய இஸ்லாமியர்களுக்கிடையே குழப்பம் விளைவிக்கும் இது போன்ற நடவடிக்கைகளை பாகிஸ்தான் கைவிட வேண்டும்" என்கிற ரீதியில் கண்டனம் தெரிவித்து ஒற்றுமையை வலியுறுத்தி அறிக்கைகள் விட்டதும் நினைவை விட்டு மாறாதவை. தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டதோடு விசாரணைக்கு அனைத்து உதவிகளையும் நல்கி வந்த மஹாராஷ்டிர துணை முதல்வர் R.R. பாட்டிலும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். எனவே மாலேகான் விசாரணை என்ன ஆகும் என்று ATSஇல் பணிபுரிபவர்களே சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஹேமந்த் கார்கரே மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீணாகி விடுமோ என்ற அச்சம் தற்போது அனைவரையும் ஆட்கொண்டுள்ளது. ் மேலும் " என்கிற குஷ்வந்த் சிங்கின் வாதத்திற்கு இன்னோர் உதாரணம் 1992-ல் சரிவர தண்டிக்கப்பட்டிருந்தால் அதன் பிறகான பல தேசிய இழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும். இந்த உண்மையை நாடும் நாட்டு மக்களும் அறியும்வரை நம்முடைய லட்சியப் பயணங்கள் தொடர வேண்டும். நன்றி: ஃபிர்தௌஸ் - புதிய தேசம்(பெப்ருவரி 2009) |
Friday, February 20, 2009
மண்ணறையை நோக்கி மாலேகோன் விசாரணை!?
கோழிக்கோட்டில் முஸ்லிம்களின் எழுச்சி!
| |
தமிழகத்தைச் சேர்ந்த 'மனித நீதிப் பாசறை', கேரளத்தைச் சேர்ந்த 'தேசிய ஜனநாயக முன்னணி', கர்நாடகாவைச் சேர்ந்த 'கர்நாடக ஜனநாயக முன்னணி' ஆகிய மூன்று அமைப்புகளும் ஒன்றாக இணைந்து 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' என்ற அமைப்பின் பெயரில் “அதிகாரம் மக்களுக்கே” என்ற கோஷத்துடன் தேசிய அரசியல் மாநாட்டைக் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த 13.02.2009ஆம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடத்தியது. இந்த மாநாட்டில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, டில்லி உள்ளிட்ட 16 மாநிலங்களிலிருந்து பி.எப்.ஐ. உறுப்பினர்கள் உட்பட இலட்சகணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். முதல் நாளான 13ம் தேதி நடந்த தேசிய மாணவர்கள் கருத்தரங்கத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் பங்காற்றினர். அதே நேரத்தில் மற்றொரு இடத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் சகோதரத்துவக் கூட்டம் நடந்தது. இதில், பி.எப்.ஐ. தலைவர் அப்துல் ரஹ்மான், தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த அமைப்பின் தலைவர்கள், ஐக்கிய அரபு எமிரேட், கத்தர், பஹ்ரைன், ஓமன், குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர். அன்று மாலையில் சயீத் திப்பு சுல்தான் நகரில் 'அரசியல் அதிகாரமளித்தலும் மாற்று வகைகளும்' என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் நடந்தது. பாப்புலர் பிரண்ட் பொதுச் செயலர் ஷரீப் தலைமையில் நடந்த இந்தக் கருத்தரங்கில், தமிழகத்திலிருந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அடுத்த நாள் காலையில் மனித உரிமைகள் ஆர்வலர் கூட்டம் நடந்தது. அதே நேரத்தில், ஓட்டல் ஸ்பேனில் அரசியல் ஆர்வலர்களின் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பி.எப்.ஐ.யின் முன்னாள் தலைவர் அபூபக்கர் தலைமை வகித்தார். தமிழகம், கேரளா உள்ளிட்ட பல பகுதிகளிலும் உள்ள அரசியல் சார்ந்த முஸ்லிம் அமைப்பினர் பங்கு பெற்றனர். அன்று மாலை 3 மணிக்கு சயீத் பகத் சிங் நகரில், பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்தரங்கம் நடந்தது. இக்கருத்தரங்கத்தை, மகசேசே விருது பெற்ற சந்தீப் பாண்டே துவக்கிவைத்தார். இதில், கான்பூரைச் சேர்ந்த சுவாமி லட்சுமி சங்கராச்சார்யா, சுப்ரீம் கோர்ட் நீதிபதி பிரசாந்த் பூஷன், சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் அருணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதி நாளான 15ஆம் தேதி காலை 10 மணிக்கு ஓட்டல் ஸ்பேனில் தேசிய இட ஒதுக்கீடு குழுவின் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தைக் கேரள பாப்புலர் பிரண்ட் தலைவர் நசிருதீன் துவக்கி வைத்தார். இக்கூட்டத்தில் பல்வேறு சிறுபான்மை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இடஒதுக்கீடு குறித்து விவாதித்தனர். அதே வேளையில் ஓட்டலின் மற்றொரு பகுதியில் தேசிய ஊடகவியலாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு 'தேஜஸ் டெய்லி'யின் ஆசிரியர் கோயா தலைமை வகித்தார். கூட்டத்தை சுப்ரீம் கோர்ட் வக்கீல் பிரசாந்த் பூஷன் துவக்கிவைத்தார். இதில் இந்தியாவின் பலப் பாகங்களிலிருந்தும் பல்வேறு செய்தி, ஊடகத் துறையினர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பத்திரிக்கையின் பல்வேறு மாற்று வழிகளைப் பற்றி அலசப்பட்டது. குறிப்பாக, "முஸ்லிம்களுக்கு எதிரான ஊடக வன்முறையைச் சில பத்திரிகை, தொலைகாட்சிகள் செய்கின்றன. அவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். உண்மையைப் பதிவு செய்யவேண்டும்" என்று பேசப்பட்டது. "மதவாதத்திற்கு எதிரான செய்திகளைத் தவறாமல் பதிவு செய்யவேண்டும்; செய்தி வெளியிடுவதைக் கடந்து சமூகத்தையே மாற்றக்கூடிய பத்திரிக்கையாளர்கள் தங்கள் பலம் உணர்ந்து சமூக பங்களிப்பு ஆற்ற வேண்டும்" என்று கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இக்கூட்டத்தில் தமிழகத்தின் நக்கீரன், ஜு.வி, புதிய காற்று போன்ற பத்திரிகைகள் பங்கேற்று தங்கள் கருத்துகளையும் பதிவு செய்தனர். மொத்தத்தில் செய்தித் தளத்தில் ஒரு மாற்று வழியை இக்கருத்தரங்கம் அறிமுகப்படுத்தியது. மற்றொரு இடத்தில், தேசிய உலமாக்கள் கருத்தரங்கம், "அதிகாரமளித்தலில் மதம்” என்ற தலைப்பில் நடந்தது. தேசியப் பெண்கள் கருத்தரங்கம் கோழிக்கோடு கடற்கரை அருகில் நடந்தது. "அரசியல் அதிகாரத்தில் பெண்கள்' என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடந்த இக்கருத்தரங்கை ராஜஸ்தான் பி.யு.சி.எல். அமைப்பின் தலைவர் கவிதா ஸ்ரீ வத்சவா துவக்கி வைத்தார். இக்கருத்தரங்கில் தமிழகம் சார்பில் ஜம்மியத்துன்னிசா அமைப்பின் பொருளாளர் சித்தி அலியார், அமெரிக்காவைச் சேர்ந்த மரியம் இஸ்மாயில், புது தில்லி ஹசீனா ஹாசிய ஆகியோர் கலந்து கொண்டார். "உலகம் முழுக்க எங்கு வன்முறை, இனப் படுகொலை நடந்தாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் பெருகிவிட்டன. இந்தப் பாசிசத்தை எதிர்க்கப் பெண்கள் அணிதிரள வேண்டும். இந்த எதிர்ப்புப் போரில் பங்களிக்க வேண்டும். அதே போல் நாட்டில் பாலியல் குற்றங்கள் பெருக முக்கியக் காரணம் முதலாளித்துவ கலாச்சாரங்கள்தாம். அவை பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டும் பண்பாட்டை வளர்கின்றன. அவற்றை நாம் அடித்து விரட்ட வேண்டும். நாட்டில் உள்ள பெண்கள் ஓர் அணியில் ஒன்று திரளவேண்டும். நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்" என்பன போன்ற பல கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இந்தக் கருத்தரங்கம் இஸ்லாமியப் பெண்களிடம் புதிய கருத்துப் பாய்ச்சலை உருவாக்கி உள்ளது எனலாம். 15ம் தேதி மாலை 3 மணிக்கு பி.எப்.ஐ. அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட அணிவகுப்புப் பேரணி நடந்தது. இப்பேரணியில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். கோழிக்கோடு ராஜாஜி சாலையில் உள்ள ஸ்டேடியத்தில் இருந்து பி.எப்.ஐ. தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் புறப்பட்ட இப்பேரணி மூன்று கி.மீ. தூரம் பயணித்து கோழிக்கோடு கடற்கரையில் உள்ள திடலை அடைந்தது. அங்கு, இரவு 7 மணிக்குப் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தைத் தென்னாப்ரிக்க அதிபரின் சிறப்பு ஆலோசகர் இப்ராகிம் ரசூல் துவக்கி வைத்தார். இதில், தமிழக பி.எப்.ஐ. தலைவர் முஹம்மது அலி ஜின்னா மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஆண்கள், பெண்கள் என நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கோழிக்கோடு கடற்கரையே மனிதக் கடலில் மூழ்கிப் போயிருந்ததை காண முடிந்தது. இக்கூட்டத்தில் பேசிய பி.எஃப்.ஐ தமிழகத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா, இலங்கை தமிழர்கள் பிரச்சனை குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தினார். "இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் - குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் - பலியாகின்றனர். குறிப்பாக மருத்துவமனையில்கூட குண்டுகள் வீசப்படுகிறது. சிங்கள அரசின் இந்த அராஜகப் போக்கை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டும் உலகெங்கும் தமிழர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியும் மத்திய அரசு இவ்விஷயத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை. அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இலங்கையில் சிறுபான்மை மக்களான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தனது பேச்சில் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். சிறுபான்மையினர் என்போர் தமிழர்களுக்கு எதிரானவர்களாகவே காலங்காலமாய்ச் சித்தரிக்கப் பட்டுவரும் வேளையில், பாதிக்கப்படும் ஈழத் தமிழர்களுக்காக முஸ்லிம்கள் குரல் கொடுத்திருப்பது ஈழத்தில் அமைதி திரும்பும் போராட்டத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. |
காஷ்மீருக்கும் மக்களுக்கும் விடுதலை, பகுதி 2 - அருந்ததி ராய்
வெள்ளி, 20 பிப்ரவரி 2009 | |
இந்தப் பேரணிக்கு முந்தைய நாள் இந்திய அரசு வேறொரு கடுமையான வேலையில் ஆழ்ந்திருந்தது. புதுதில்லியில் உள்துறைச் செயலாளர் அன்று நடத்திய உயர்நிலை கூட்டத்தில் பாதுகாப்புத் துறை செயலாளர், உளவுத்துறைத் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தக் கலகம் ஏற்படுவதற்கு ஐ.எஸ்.ஐ.யின் சிறு குழுதான் காரணம் என்று அரசு நம்புவதாகவும், இந்த அதிரகசிய உளவுத்துறை தகவலை தங்கள் செய்தி அலைவரிசைகளில் ஒளிபரப்புமாறு ஊடகங்களிடம் அரசு கேட்டுக் கொண்டது. இந்த விஷயம் மிகவும் அபத்தமாக இருந்தாலும்கூட, தொலைக்காட்சி அலைவரிசைகள் அரசு வழிகாட்டுதலைக் கேட்டாக வேண்டிய நிலையில் இருந்தன. அப்படி அபத்தங்களை ஒளிபரப்புவதற்கு மத்தியில் குறைந்தபட்சம், இந்த மக்கள் புரட்சி தொலைக்காட்சியில் காட்டப்படுகிறதே, அதற்காகவாவது மகிழ்ச்சியடையலாம்.
ஆகஸ்ட் 17ம் தேதி இரவு, ஸ்ரீநகரில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியது. சாலைகளில் தடைகள் உருவாக்கப்பட்டன. இந்த தடைகளில் ஆயுதமேந்திய ஆயிரக்கணக்கான காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர். ஸ்ரீநகருக்குச் செல்லும் சாலைகள் தடை செய்யப்பட்டன. குப்கர் சாலையில் உள்ள ஐ.நா.ராணுவக் கண்காணிப்புக் குழு அலுவலகத்துக்குப் பேரணியாகச் செல்லாமல் டி.ஆர்.சி.மைதானத்தில் உரையாற்றுமாறு 18 ஆண்டுகளில் முதன்முறையாக ஹர்ரியத் தலைவர்களிடம் காவல்துறை கோரிக்கை விடுத்தது. ஏனென்றால், ஸ்ரீநகரின் குப்கர் சாலையில்தான் தடைகளை ஏற்படுத்தி இந்திய நிர்வாகம் பல ஆண்டுகளுக்கு சௌகரியமாகவும், பகட்டாகவும் வாழ்ந்து கொண்டிருந்தது.
பள்ளத்தாக்கின் கிராமங்கள், நகரங்களில் இருந்து வந்த மக்கள் 18ம் தேதி காலை ஸ்ரீநகரில் குவியத் தொடங்கினர். டிரக், டெம்போ வேன், ஜீப், பஸ், கால்நடையாக என கிடைத்த வழிகளில் எல்லாம் வந்திருந்தனர். மீண்டும் தடைகள் உடைக்கப்பட்டன. மக்கள் தங்கள் நகரத்தை மீட்டெடுத்துக் கொண்டனர். இதை எதிர்கொள்ளக் காவல்துறைக்கு இரண்டே வாய்ப்புகள்தான் இருந்தன. ஒன்று விலகியிருப்பது; அல்லது மக்களைப் படுகொலை செய்வது. காவல்துறை விலகி நின்றது. ஒரு தோட்டாகூட சுடப்படவில்லை.
நகரமெங்கும் அலைகடலென புன்னகை வீசியது. எங்கும் மகிழ்ச்சிப் பரவசம் பரவியிருந்தது. படகு இல்ல உரிமையாளர்கள், வியாபாரிகள், மாணவர்கள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள் என ஒவ்வொருவர் கையிலும் பதாகைகள் வீற்றிருந்தன. ‘நாங்கள் அனைவரும் கைதிகள், எங்களை விடுதலை செய்யுங்கள்’ என்றது ஒன்று. மற்றொன்றோ, ‘சுதந்திரம் இல்லாத ஜனநாயகம் வெறும் பேய் பிடித்த ஒன்று’ என்றது. இந்திய அரசு தனது மதச்சார்பின்மை கூறுகளை வலுப்படுத்திக் கொள்ள, மதரீதியிலான படுகொலையை கையிலெடுத்துக் கொண்ட அவலத்தை மேற்கண்ட வாசகம் உணர்த்துகிறது. அத்துடன் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. உலகின் மிகப்பெரிய ராணுவ ஆக்கிரமிப்பைக் காஷ்மீரில் நிகழ்த்திக் கொண்டு, தன்னைத் தானே ஜனநாயக நாடு என்று அழைத்துக் கொள்ளும் பைத்தியக்காரத்தனத்தையும் குறிப்பிடுகிறது.
ஒவ்வொரு விளக்குக் கம்பத்திலும், ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும், ஒவ்வொரு சினார் மரத்தின் உச்சியிலும் பச்சைக் கொடி பறந்தது. அதில் இந்திய வானொலி நிலைய கட்டடத்தில் ஒரு கொடி பட்டொளி வீசிப் பறந்தது. ஹஸ்ரத்பால், பத்மாலூ, சோபூர் ஆகிய வழிகாட்டிப் பலகைகள் அழிக்கப்பட்டன. ராவல்பிண்டி அல்லது பாகிஸ்தான் பாகிஸ்தான் வழிகாட்டிப் பலகைகளே அழிக்கப்படாமல் இருந்தன. பாகிஸ்தான் மீது காஷ்மீர் மக்கள் கொண்டுள்ள பாசம் என்ற பொது உணர்வு வெளிப்பாடு, பாகிஸ்தான் மீதான விருப்பத்துக்கு இணங்கிச் செல்லும் தன்மை கொண்டது என்று தவறான தோற்றத்தை உருவாக்கக் கூடும். இதை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். காஷ்மீரிகள் தங்கள் செயல்பாட்டை விடுதலைப் போராட்டம் என்று கருதுகின்றனர். இந்திய அரசோ தீவிரவாதப் பிரசாரமாகக் கருதுகிறது.
பாகிஸ்தானைப் பெரும்பாலான காலம் சர்வாதிகாரிகள்தான் ஆண்டு வந்துள்ளனர். தற்போது வங்கதேசமாக உள்ள பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இனப்படுகொலையை நிகழ்த்தியுள்ளது. இனக்குழுக்கள் இடையிலான போரால் தற்போது பிளவுண்டு கிடக்கும் பாகிஸ்தானிடம் இருந்து, காஷ்மீர் ‘விடுதலைப் போராட்டம்’ விலகியிருப்பதுதானே சரியாக இருக்கும் என்று கேள்வி எழலாம். நேரெதிராக ஆச்சரியமளிக்கும் வகையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்றழைக்கப்படும் இந்தியாவைக் காஷ்மீர் மக்கள் கடுமையாக வெறுக்கின்றனர்.
எங்குப் பார்த்தாலும் பாகிஸ்தான் கொடிகள். எங்கு பார்த்தாலும் ‘பாகிஸ்தானுடன் எங்கள் பந்தம் என்ன? அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை’, ‘சுதந்திரம் என்றால் என்ன? அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை’ என்ற கோஷங்கள் ஒலித்தன.
என்னைப் போன்ற முஸ்லிமல்லாதவர்களுக்கு சுதந்திரம் தொடர்பாக அவர்கள் தரும் விளக்கம் புரிந்து கொள்ளக் கடினமாக இருந்தது. "காஷ்மீருக்குச் சுதந்திரம் கிடைத்தாலும், ஒரு பெண்ணான உங்களுக்கு என்ன சுதந்திரம் கிடைத்து விடப் போகிறது?" என்று ஓர் இளம்பெண்ணிடம் கேட்டேன். அவர் தோள்களை குலுக்கி விட்டு, “இப்போது எங்களுக்கு என்ன சுதந்திரம் கிடைத்திருக்கிறது? இந்திய ராணுவ வீரர்களால் பலாத்காரம் செய்யப்படுவதற்கான சுதந்திரத்தைத்தான் நாங்கள் பெற்றிருக்கிறோம், இல்லையா?” என்று பதிலிறுத்தாள். அவரது பதில் என்னை மௌனமாக்கியது.
டி.ஆர்.சி.மைதானத்தில் பச்சைக் கொடிகளின் அணிவகுப்புக்கு மத்தியில் நான் நின்றபோது, என்னைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருந்த இஸ்லாமிய இயல்பு கொண்ட எழுச்சியைப் பற்றி சந்தேகம் கொள்ளாமல் இருக்கவோ அதைப் புறந்தள்ளாமல் இருக்கவோ முடியவில்லை. அதேநேரம் ஒரு கொடிய தீவிரவாதிகளின் ஜிகாத் என்றும் இதை முத்திரை குத்த முடியாது. காஷ்மீரிகளைப் பொருத்தவரை இது ஒரு தூய்மைப்படுத்துதல் நிகழ்வு. நீண்ட, சிக்கல்கள் நிறைந்த சுதந்திரத்துக்கான போராட்டத்தில், அதற்கே உரிய அனைத்து நேர்த்தியின்மைகள், கொடுமைகள், குழப்பங்களுக்கு மத்தியில் இந்தக் கூடுகை ஒரு வரலாற்று திருப்புமுனை வாய்ந்த தருணம்.
இந்தப் போராட்டம் மாசுபடாத ஒன்று எனக் கூறமுடியாது. இந்த மக்கள் எழுச்சியின் ஆரம்பக் கட்டத்தில் காஷ்மீரி பண்டிட்டுகள் கொடூரமாக கொல்லப்பட்டது மற்றும் பள்ளத்தாக்கில் இருந்த ஒட்டுமொத்த பண்டிட் சமூகமும் வெளியேற்றப்பட்டதை நாம் புறந்தள்ளிவிட முடியாது.
கூட்டம் பெருகிக் கொண்டே இருந்தது. கோஷங்களை நான் கவனமாகக் காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்தேன். ஏனென்றால் பேச்சு அனைத்து விஷயங்களையும் தெளிவுபடுத்தி, புரிதலுக்கான அனைத்து அம்சங்களையும் தருகிறது. காஷ்மீர் சாலை தடை செய்யப்பட்ட பிறகு ‘காஷ்மீரின் சந்தை ராவல்பிண்டிதான்’, ‘ரத்தம் தோய்ந்த எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை உடைப்போம், காஷ்மீரை ஒன்றிணைப்போம்’ என்றும், (இவை தவிர, இந்தியாவை அவமானப்படுத்தும் அவமதிக்கும் கோஷங்களும் இருந்தன). ‘ஒடுக்குபவர்களே, கொடியவர்களே, எங்கள் காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்’, ‘காஷ்மீர் எங்கள் ரத்தத்தால் உருவாக்கப்பட்டது, காஷ்மீர் எங்களுடையது’ என்று அந்த கோஷங்கள் ஒலித்தன.
ஒரு கோஷம் என்னைக் கத்தி போல் வெட்டி, எனது இதயத்தை உடைத்தது, ‘பிச்சையெடுக்கிறது நிர்வாண இந்தியா, பாகிஸ்தானிலோ வாழ்க்கை சௌகரியமான ஒன்றுதான்’ என்றது அந்த கோஷம்.
இந்த கோஷம் கசப்பதானதாகவும் கேட்க வலி மிகுந்ததாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன? இதைப் புரிந்து கொள்ள நான் முயன்றேன். மூன்று காரணங்கள் தென்பட்டன. முதலாவது, இந்த கோஷத்தின் முதல் பகுதி மிகவும் கவலையளிக்கக் கூடியது, ‘வல்லரசாக உயர்ந்து வரும்’ இந்தியாவின் உண்மையான முகத்தைச் சுட்டுகிறது.
இரண்டாவது, இந்தியர்கள் அனைவரும் நிர்வாணமாக, பிச்சையெடுத்துக் கொண்டிருக்கவில்லை என்றாலும்கூட, பல்வேறு சிக்கலான, வரலாற்று ரீதியில் கொடூரமான பண்பாட்டு, பொருளாதார அமைப்புகள் இந்திய சமூகத்தைக் கொடூரமானதாகவும், இழிவான ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாகவும் உருவாக்கியுள்ளன.
மூன்றாவதாக, மிகவும் அவதிப்பட்ட காஷ்மீர் மக்கள், அதற்குச் சற்றும் குறையாத வகையில் அதே ஒடுக்குபவரால் (இந்தியாவால்) பல்வேறு வகைகளில் அவதிப்படுபவர்களைப் பார்த்துக் கிண்டல் செய்வதைக் கேட்பது வலி மிகுந்த ஒன்றுதான். இந்த கோஷத்தில் இருந்து பாதிக்கப்படுவர்களே எப்படி குற்றம் புரிபவர்களாக மாறுகிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
மரிவாய்ஸ் உமர் பாரூக், சையது அலி ஷா ஜீலானி ஆகியோர் பேரணிக்கு வந்தபோது அவர்களுக்குக் கூறப்பட்ட வாழ்த்தொலிகள் காதுகளை நிறைத்தன. ‘ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படவும், சிறையில் அடைக்கப்படவும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்படவும் காரணமாக இருந்த ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம், தொந்தரவுக்கு உள்ளான பகுதிகள் சட்டம், மக்கள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். மக்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து ராணுவத்தை அகற்ற வேண்டும்’ என்று மிர்வாய்ஸ் உமர் பாரூக் பேசினார். சையது அலி ஷா ஜீலானி, ‘குரான்தான் நமக்கு வழிகாட்டும். பாகிஸ்தான் காஷ்மீருடையது; அதைப் போலவே காஷ்மீர் பாகிஸ்தானுடையது.’ என்ற வகையில் பேசினார். அவர் பேசிய ஒவ்வொரு வாக்கியத்தையும் கூட்டம் ஆமோதித்தது.
இந்த விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பல்வேறு அமைப்புகள் தங்களது மாறுபட்ட பார்வைகளுக்கு எப்படி தீர்வு காணப் போகிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காஷ்மீர் தனி நாடாக வேண்டும் என்பது ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் கருத்து, காஷ்மீர் பாகிஸ்தானுடன் சேர வேண்டும் என்பது ஜீலானியின் விருப்பம், மிர்வாய்ஸ் உமர் பாரூக்கோ இவை இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையை எடுத்துள்ளார்.
சிவப்புக் கண்கள் மினுமினுக்க என் அருகில் நின்றிருந்த ஒரு முதியவர் கூறினார், “காஷ்மீர் எங்கள் நாடு. பாதியை இந்தியாவும், பாதியை பாகிஸ்தானும் பிடுங்கிக் கொண்டன. எங்களுக்குச் சுதந்திரம்தான் தேவை” என்றார். புதிய பங்கீட்டு விதியின்படி, இவர் கூறுவதை யாராவது கேட்பார்களா? இந்தியச் சமவெளிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் கர்ஜித்துக் கொண்டு ஓடிய லாரிகளின் உரிமையாளர்களும் அதை ஓட்டிய மனிதர்களுக்கும் வரலாறு பற்றியோ அல்லது காஷ்மீரைப் பற்றியோ தெரியுமா என்று கூறமுடியவில்லை. இருந்தபோதும் லாரிகளின் பின்புறத்தில் அவர்கள் பதித்திருந்த தகடுகளில் “பாலைக் கேட்டால், வெண்ணெய் தருவோம்; காஷ்மீரைக் கேட்டால், உன்னை இரண்டாகப் பிளந்துவிடுவோம்” என்று எழுதியிருப்பது குறித்து அந்த முதியவருக்குத் தெரியுமா?
‘இதுதான் நமது எதிர்காலம்’ என்று நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? ‘முழுமையான வாழ்க்கையின் வழி’ என்ற பெயரில் ஒற்றை மதத்தைப் பின்பற்றும் அரசுகளின் கையில் சமூக, ஒழுக்க விதிமுறைகளை ஒப்படைக்க வேண்டுமா? இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கானோர் இந்துத்துவத் திட்டத்தை நிராகரிக்கிறோம். நாம் வாழும் சமூகத்தில் நிலவும் அன்பு, ஆர்வம், குறைகாணாத போக்கு, பெருமளவு உணர்ச்சிவசப்படும் குணங்களில் இருந்து இந்த நிராகரிப்பு உருவாகிறது. நமது அண்டை அயலார் என்ன செய்கிறார்கள்? பிரச்சினைகளை எப்படிக் கையாளுகிறார்கள்? என்ற அம்சங்கள் நமது வாதத்தை மாற்றுவதில்லை. மாறாக அது நமது வாதத்தை பலப்படுத்தவே செய்கிறது. அதேநேரம் இப்படி அன்பால் உருவாகும் வாதங்கள், ஆபத்தையும் விளைவிக்கக்கூடும். இஸ்லாமிய அமைப்பை ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பது பற்றி காஷ்மீர் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். (ஏனென்றால் குழப்பமளிக்கும் வகையில் இந்துத்துவக் கொள்கைக்கு எப்படி இந்துகள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களோ, அதேபோல் உலகம் முழுவதும் இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கைக்கு முஸ்லிம்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்). வன்முறை ஆபத்துகள் அடங்கிய நிலையில், பல்வேறு பார்வைகளை முன்வைக்கவும், தங்கள் கருத்தைக் கூறி விவாதிக்கவும் தற்போது வாய்ப்புக் கிடைத்துள்ளது. எந்த வகையான சமூகத்தை உருவாக்குவதற்காக போராடி வருகிறோம் என்பது பற்றிய சித்திரத்தை இந்தப் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் இப்போது தெளிவாக்க வேண்டும்.
தியாகிகள், கோஷங்கள், மேம்போக்கான பொதுமைப்படுத்துதல்களைத் தாண்டி இவர்கள் மக்களுக்கு எதையாவது கொடுத்தாக வேண்டும். குரானை வழிகாட்டியாகக் கொள்ளும் விருப்பமுடையவர்களுக்கு அங்கு வழிகாட்டுதல் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அப்படிச் செய்யக்கூடாது என்று விரும்புபவர்கள் அல்லது குரானை வழிகாட்டியாக கொள்ளாதவர்கள் என்ன செய்வது? ஜம்முவில் உள்ள இந்துகள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு சுயநிர்ணய உரிமை கிடைக்குமா? தற்போது வெளியேறி மோசமான வறுமையில் வாடும் லட்சக்கணக்கான பண்டிட்டுகள், தங்கள் பகுதிகளுக்குத் திரும்புவதற்கு அனுமதி கிடைக்குமா? அவர்கள் சந்தித்த மோசமான இழப்புகளுக்கு நஷ்டஈடு அளிக்கப்படுமா? அல்லது கடந்த 61 ஆண்டுகளாக காஷ்மீரிகளுக்கு இந்தியா செய்து வந்ததையேதான், சுதந்திர காஷ்மீரும் சிறுபான்மையினருக்குச் செய்யுமா? அப்படியானால் ஓரினச்சேர்க்கையாளர்கள், கலப்படம் செய்பவர்கள், கடவுளைப் பழிப்பவர்களின் கதி என்னாகும்? இந்த ஒட்டுமொத்த சமூக மற்றும் ஒழுக்க விதிமுறைகளை ஏற்றுக் கொள்ள மறுக்கும் திருடர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்கள் என்ன ஆவார்கள்? சௌதி அரேபியாவைப் போல கொல்லப்படுவார்களா? மரணம், ஒடுக்குதல், அடக்குமுறை, படுகொலை என்ற துர்சுழற்சி இதற்குப் பிறகும் தொடருமா? காஷ்மீரின் சிந்தனையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆராய்ந்து அறிய வரலாறு பல்வேறு மாதிரிகளை முன்வைத்திருக்கிறது. அவர்களது கனவு காஷ்மீர் எப்படியிருக்கும்? அல்ஜீரியா, இரான், தென்னாப்பிரிக்கா, ஸ்விட்சர்லாந்து, பாகிஸ்தான்... இவற்றில் எதைப் போன்றிருக்கும்?
இந்த நெருக்கடியான தருணத்தில், கனவுகளைவிட வேறு சில விஷயங்களும் மிக முக்கியமானவை. சூழ்நிலையைத் தெளிவாகவும் நேர்மையாகவும் கணிப்பதற்குத் தடை விதிக்கும் வகையில் அறிவுச் சோம்பலையோ, தயக்கத்தையோ இந்தத் தருணத்தில் வெளிப்படுத்தக் கூடாது. 1947ம் ஆண்டு மகாராஜா ஹரி சிங் செய்த பித்தலாட்டம் காஷ்மீரின் நவீனகால சோகம் என்றும், அதன் காரணமாகத்தான் இப்படி நினைத்துப் பார்க்க இயலாத படுகொலைகள் நிகழ்ந்தன; கிட்டத்தட்ட சுதந்திரமாக இருந்த மக்கள் நீண்டகால அடிமையாக இருக்க நேரிட்டது என்றும் யாராவது வாதிடலாம்.
இதற்கிடையில் பிரிவினைவாத பிசாசு ஏற்கெனவே தலைதூக்கிவிட்டது. பள்ளத்தாக்கில் வாழும் இந்துக்கள் தாக்கப்படுவார்கள். வெளியேற்றத் தூண்டப்படுவார்கள் என்று இந்துத்துவ அலைவரிசைகளில் புரளி பரவி வருகிறது. அதற்குப் பதிலடியாக, ஜம்முவில் ஆயுதமேந்திய இந்துத் தீவிரவாதிகள் படுகொலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்துக்கள் அதிகமாக வாழும் இரண்டு மாவட்டங்களில் இருந்து முஸ்லிம்கள் வெளியேறத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வந்தன. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட கொடூர நினைவுகள் மீண்டும் நினைவில் ஆடுகின்றன. அந்தக் கொடும் கனவு எப்பொழுதும் நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஒன்றுதான்.
மீண்டும் அதே வரலாறு இங்கும் நிகழும் என்று எதிர்பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. அப்படி நிகழாதவரை, அதை நம்பத் தேவையில்லை. மேலும் அப்படிப்பட்ட கொந்தளிப்பை உருவாக்க மக்கள் வேறு வகையில் தீவிரமாகச் செயலாற்றிருக்க வேண்டும். எப்படியிருந்தாலும், இந்த பயங்களை மட்டும் அடிப்படையாக வைத்துக் கொண்டு அந்த மக்களையும், காஷ்மீரையும் தொடர் ராணுவ ஆக்கிரமிப்பில் வைத்திருப்பதை யாரும் நியாயப்படுத்த முடியாது. ‘சுதந்திரத்தை அனுபவிக்க இந்தியர்கள் தயாராக இல்லை, அதனால்தான் சுதந்திரம் வழங்கவில்லை’ என்று காலனி ஆதிக்கம் செலுத்திய வெள்ளையர்கள் தங்கள் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்திய பழைய வாதத்தையே இது நினைவுபடுத்துகிறது.
இந்திய அரசு காஷ்மீரின் மீது வைத்துள்ள பிடியை தக்கவைத்துக் கொள்வதற்குப் பல்வேறு வழிமுறைகளைக் கையாளலாம். தன்னால் என்ன முடியுமோ அதையெல்லாம் இந்தியா செய்து பார்க்கும். உறுதியான திட்டம் வகுக்கப்படாத நிலையில் தற்போது எழுந்துள்ள மக்கள் எழுச்சி மங்கிவிட வாய்ப்புள்ளது. தற்போது உருப்பெற்று வரும் எளிதில் உடைந்துவிடக்கூடிய கூட்டணியை உடைப்பதற்கு அது வழிகோலும். தற்போது எழுந்துள்ள சாத்வீக எழுச்சி மறைந்து, ஆயுதமேந்திய தீவிரவாதிகள் மீண்டும் போராடுவதற்கு அழைக்கப்படலாம். தற்போது 5 லட்சமாக உள்ள ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அது 10 லட்சமாக மாற்றக்கூடும். சில தந்திரமான படுகொலைகள், இரண்டொரு திட்டமிட்டப் படுகொலைகள், சில காணாமல் போகச்செய்தல்கள், ஒட்டுமொத்தக் கைது போன்றவை மேலும் சில ஆண்டுகளுக்கு இந்த மந்திர ஜாலத்தை நீட்டிக்கக்கூடும்.
காஷ்மீரில் ராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொள்வதற்கு செலவிடப்படும் அளவிடமுடியாத மக்கள் வரிப்பணம், இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடுடன் வறுமையில் உழலும் மக்களுக்குப் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டவும் உணவுக்காகவும் செலவிட வேண்டியவை. அதிக ஆயுதங்கள், அதிக தடையேற்படுத்தும் வேலிக் கம்பிகள். காஷ்மீரில் சிறைகளுக்குச் செலவிடுவது சரியான ஒரு நடவடிக்கை என்று இந்திய அரசு எப்படி நம்புகிறது என்று புரியவில்லை.
காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்திய ராணுவ ஆக்கிரமிப்பு நாம் அனைவரையும் அரக்கர்கள் ஆக்கிவிடுகிறது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை இந்து ஆதிக்கவாதிகள் தாக்குவதற்கு உள்ள ஆபத்தான வாய்ப்பு, காஷ்மீர் முஸ்லிம்களின் விடுதலைப் போராட்டத்துக்குத் தடை ஏற்படுத்துகிறது. இந்த விஷம் மிகுந்த சதித்திட்டம் நேரடியாக நமது ரத்தநாளங்களில் செலுத்தப்பட்டு அவ்வப்போது இடையீடுகளுடன் நிர்வகிக்கப்படுகிறது.
இத்தனைக்குப் பிறகும் நம் அனைவரது மனசிலும் ஒரு நியாயமான கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. மக்களின் விடுதலையைப் பறிக்க எந்த அரசுக்காவது ராணுவப் படையைப் பயன்படுத்த உரிமை உண்டா?
காஷ்மீரை இந்தியா விட்டொழிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு இந்தியாவிடம் இருந்து காஷ்மீர் விடுதலை பெறுவதும் மிகமிக முக்கியம்.
காஷ்மீருக்கும் மக்களுக்கும் விடுதலை - அருந்ததி ராய் >முந்திய பகுதி.
தமிழில் : ஆதி வள்ளியப்பன் (நன்றி ‘அவுட்லுக்’ இதழ்) |
கொள்ளை போக ஏதுவாய் கொல்லைக் கதவு திறப்பு
காட்டிக்கொடுப்பதில் இரண்டு வகை உண்டு. ஒன்று - நேரடியாகக் காட்டிக் கொடுப்பது. மற்றொன்று - மறைமுகமாகக் காட்டிக் கொடுப்பது. இந்த இரண்டிலுமே முந்தைய பாஜக கூட்டணி அரசிலிருந்து தான் எவ்வகையிலும் மாறுபட்டுவிடவில்லை என்று மறுபடி காட்டியிருக்கிறது இன்றைய காங்கிரஸ் கூட்டணி அரசு.
ஏற்கெனவே இந்தியத் தொழில் நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான வரம்பு கணிசமாக உயர்த்தப்பட்டு, கிட்டத்தட்ட அந்த அந்நிய நிறுவனங்களின் கட்டுப்பாட்டில்தான் இந்திய நிறுவனங்கள் இயங்கும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது. வாஜ்பாய் அரசாலும், பின்னர் மன்மோகன் சிங் அரசாலும் புறந்தள்ளப்பட்ட அந்த எச்சரிக்கைகளின் நியாயத்தை அண்மைக்கால நிகழ்ச்சிப் போக்குகள் எடுத்துக் காட்டுகின்றன.
இன்னும் சில மாதங்களில் இந்த அரசு விடைபெற இருக்கிற நிலையில், அவசர அவசரமாக ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய முதலீட்டு நிறுவனங்கள் மூலமாகச் செய்யப்படும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு இனி உச்சவரம்பு கிடையாது!
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூடி இந்த கொள்கை மாற்றத்தைச் செய்துள்ளது. அதன் வழிகாட்டலின்படி, உள்நாட்டிலேயே இருக்கும் இந்தியர்களின் “உடைமையாகவும்” அவர்களது “கட்டுப்பாட்டிலும்” இருக்கிற இந்திய நிறுவனங்களில் மறைமுகமாக வெளிநாட்டு முதலீடு எவ்வளவு இருக்கிறது என்பதை மதிப்பிட, இந்திய முதலீட்டு நிறுவனத்தின் மூலமாக வருகிற வெளிநாட்டு முதலீடுகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கையை எளிமையானதாகவும் வெளிப்படையானதாகவும் மாற்றுவதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக, அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். வெளிப்படையானதாக கொள்கையை மாற்றுவதற்கான ஒரு முடிவை இவ்வளவு அவசரமாக, ரகசியமாக, நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்காமல் - அதுவும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் தொடங்குவதற்கு ஒரே ஒரு நாள் இருக்கும்போது - மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இந்த முடிவின் பின்னணியில் உள்ள நிர்ப்பந்தங்கள் என்ன? நாடாளுமன்றத்தில் அதைப் பற்றிய கேள்விகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதாலேயே இப்படி முதுகுக்குப் பின்னால் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த மாற்றத்தால் வெளிநாட்டு முதலீடுகள் வருவது பெருமளவுக்கு அதிகரிக்கும், இன்றைய சிக்கலான பொருளாதாரக்களத்தில் ஆக்கப் பூர்வமான சிக்னல்களை அனுப்பும் என்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப்பின் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது. ஆக, இதுவரை இதே காரணத்தைக் கூறி இவர்கள் கையாண்ட ‘கதவு திறப்பு’ நடவடிக்கைகளால் அப்படியொன்றும் வெளிநாட்டு முதலீடுகள் வந்து கொட்டவில்லை என்பது நிரூபணமாகிறது. அப்படியே வந்திருக்கக் கூடிய அந்நிய முதலீடுகளிலும் பெரும்பகுதி, தொழில் உற்பத்திக்கு உதவிடுவதாக இல்லாமல், பங்குச் சந்தைச் சூதாட்டத்திற்கான பந்தயத் தொகையாகவே வந்திருக்கிறது என்பதும் தெளிவாகிறது. அந்நிய முதலீட்டின் முழு ஆலிங்கனத்துக்குத் தோதாகத் திறக்கப்பட்டிருக்கும் இந்தக் கதவை இழுத்து மூடியாக வேண்டும்.
9200000000000000.00
ஏற்கனவே ஆட்சி செய்தவர்களை குறை சொல்லிவிட்டு உலக வாங்கியிடமோ அல்லது IMFயிடமோ, இல்லை வளர்ந்த நாடுகள் ஆனா அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் முதலிய நாடுகளிடம் பிச்சை பாத்திரத்தை நீட்டுவது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 49 லட்சம் கோடி ரூபாய். இதை விட இருமடங்கு அதிகமான பணம் ஸ்விஸ் வங்கிகளில்.