குரூப் 2 தேர்வு முடிவுகள் வரும் 7ம் தேதி வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இணைச் செயலாளர் மைக்கேல் ஜெரார்டு நேற்று வெளியிட்ட அறிக்கை: டிஎன்பிஎஸ்சி சார்பில் ஒருங்கிணைந்த சார்நிலை பணி (குருப் 2) எழுத்து தேர்வு உதவி தொழிலாளர் நல அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தணிக்கை ஆய்வாளர், வருவாய்த் துறையில் உதவியாளர் உட்பட, பல்வேறு துறைகளில் 1,628 குரூப்-2 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, 2010ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி நடந்தது. அதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 2 முதல் மார்ச் 28ம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடந்தது. எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள் பட்டியல் ஏப்ரல் 1ம் தேதி வெளியிடப்பட்டது. இதன் இறுதி தேர்வுப் பட்டியல், 7ம் தேதி வெளியிடப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் செல்லமுத்து அறிவித்துள்ளார்.
Wednesday, October 5, 2011
‘கணவனின் விதியை கடவுள் தீர்மானிக்கட்டும்’: அப்சல் குருவின் மனைவி தபசம் குரு.
ஸ்ரீநகர்:2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பாரளுமன்ற தாக்குதலுக்கு திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட அப்சல் குரு, சவுகத் குரு, சவுகத் குருவின் மனைவி அப்ஷான் குரு மற்றும் டெல்லி பல்கலைகழத்தின் ஆசிரியர் அப்துர் ரஹ்மான் கிலானி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் உச்சநீதி மன்றம் அப்சல் குருவின் மரண தண்டனையை உறுதி செய்தும், ரஹ்மான் கிலானி மற்றும் அப்ஷான் குருவை விடுதலை செய்தது.
வறுமைக் கோடு
ஏழ்மையின் கோட்டினைத்
தொட்டதால்
வறுமைக் கோட்டினை
முத்தமிடும்
அடித்தட்டு வர்க்கம்;
ஒருவேளைச்
சாப்பாட்டிற்கு ஏக்கம்!
Monday, October 3, 2011
மூன்று விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துறை நோபல் பரிசு
உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய நமது புரிதலை மேம்படுத்திய மூன்று விஞ்ஞானிகளுக்கு இந்த வருடத்துக்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
உயிரினங்களில் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு உந்தப்படுகிறது என்பதைக் கண்டறிந்தமைக்காக அமெரிக்காவின் புரூஸ் பட்லர் மற்றும் பிரஞ்சுக்காரர் ஜூல்ஸ் ஹொஃப்மன் ஆகியோருக்கும், புதிய அச்சுறுத்தல்கள் வர வர அவற்றுக்கேற்ப நோய் எதிர்ப்புக் கட்டமைப்பின் ஒரு பிரிவு எப்படி உருமாறிக்கொள்கிறது என்பதைக் கண்டறிந்தமைக்காக கனடாவைச் சேர்ந்த ரல்ஃப் ஸ்டெய்ன்மனுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.
குவைத் எண்ணை நிறுவனத்தில் (KNPC) வாயு கசிந்து 4 தமிழர்கள் பலி, 5 பேர் காயம்
மினா அல் அஹ்மதி : குவைத்தில் உள்ள மிகப் பெரிய எண்ணை உற்பத்தி நிலையமான KNPC-ல் சனிக்கிழமையன்று பராமரிப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்த போது வாயு கசிந்ததால் 4 தமிழர்கள் பலியானதோடு மூன்று தீயணைப்பு படையினர் உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
கனிமொழி ஜாமீன் விசாரணை ஒத்திவைப்பு
இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி மற்றும் கலைஞர் தொலைக்காட்சி மேலாண் இயக்குநர் ஷரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை, இம் மாதம் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு, தங்கள் ஜாமீன் மனுக்களை விசாரிக்குமாறு, அவர்கள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை அடிப்படையில், விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
மின்னஞ்சல் அனுப்பும்போது..!
- பிரிட்டோ
கபாலி ஜெயில்ல இருந்தான். அவங்கப்பா அவனுக்கு கிராமத்துலேந்து லெட்டர் போட்டிருந்தாரு."அன்புள்ள கபாலி..
நீ இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்குடா.. கைல பணம் கம்மியாதான் இருக்கு.. நீ எப்ப வருவேன்னும் தெரியலை.. நம்ம நிலத்துல உருளைக்கிழங்கு பயிர் பண்ணலாம்னு பாத்தா, நிலத்துல குழி தோண்ட ஆளே கிடைக்கலை.. அப்படியே கிடைச்சாலும் நிறைய கூலி கேக்கறாங்க.. நானே தோண்டிடலாம்னு பாத்தா எனக்கு உடம்புக்கு முடியலை.. என்ன பண்றதுன்னே தெரியலை..
அன்புடன்,
கோயிந்தன்"
ஆரம்ப கல்வி கற்பித்த ஆசிரியரை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
நமக்கு முதல்முறையாக எழுத கற்பித்த ஆசிரியர் இன்றும் அதே ஆசிரியராகவே இருக்கிறார். ஆனால், அவரால் கற்பிக்கபட்டவர்கள் அவரை விட பணம் மற்றும் பதவியில் உயர்ந்த இடத்தில இருக்கிறார்கள் என்பதே உண்மை அல்லவா? .
இங்கே,அமெரிக்காவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி திரு.ஆபிரகாம் லிங்கம் அவர்கள், தனது மகனின் பள்ளி தலைமை ஆசிரியருக்கு எழுதிய ஒரு கடிதம்.
Subscribe to:
Posts (Atom)