அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, August 6, 2011

மேலப்பாளையத்தில் சூடு பிடிக்கும் சுதந்திர தின அணிவகுப்பு விளம்பரங்கள்.



மேலப்பாளையத்தில் வரும் ஆகஸ்டு 15 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் சார்பாக சுதந்திர தின அணிவகுப்பு நடைபெற உள்ளது. இந்த அணிவகுப்பு ஜின்னா திடல் முதல் ஹாமீம் புரம் 7 வது தெரு வரை நடைபெற உள்ளது. இந்த அணிவகுப்பை தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறும் என்றுபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. 

பசிரப்பா தெருவின் முனையில் வைக்கப்பட்டுள்ள பேனர்
இந்த அணிவகுப்பிற்காக மேலப்பாளையம் முழுவதும் போஸ்டர்கள், பேனர்கள், ஜும்ஆ நோட்டிஸ், சுற்றரிக்கைகள் மற்றும் பல புதிய முறையில் விளம்பரங்கள் நடைபெற்று வருகின்றன. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் இந்த சுதந்திர அணிவகுப்பிற்கு அனைத்து ஜமாத்களும் ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலப்பாளையத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

 இந்த அணிவகுப்பின் அறிவிப்பை தொடர்ந்து மேலப்பாளையம் மட்டுமில்லாமல் பாளை, பேட்டை, பத்தமடை, ஏர்வாடி, வள்ளியூர், மற்றும் பிற மாவட்டங்களிலும் மக்கள் மிக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.  

Thursday, August 4, 2011

காவி மயமாக போகும் இந்தியா, கருவர்க்கப்போகும் காங்கிரஸ்

‘ஊழலை ஒழிக்கிறோம்’ என்ற புதிய முகமூடியுடன் இந்துத்துவா மதவாதி சக்திகள், பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்ற ரூபத்தில் புதிய உண்ணாவிரத நாடகங்களை தலைநகர் டெல்லியில் அரங்கேற்றுகின்றன.

சுமார் 18 கோடி ரூபாய் செலவில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மின்விசிறிகள், மேடைகள் முதலிய தடபுடல் ஏற்பாடுகள்.

தொலைக்காட்சி ஊடகங்கள், ஏடுகள் இவற்றுக்கு அபார விளம்பரங்கள் தருவதோடு, இப்படி இரட்டை வேடதாரிகள் “தூய யோவான்களாகவும் சித்திரித்து, படித்த பாமரர்களையும் ஏமாற்றிடத் துணை போகின்றன ஹிந்துத்துவா சக்திகள்!

அரசியலில் ஊழலை ஒழிக்குமுன் ஆன்மீகத்தைச் சரி செய்யுங்கள்!

அரசியலைத் தூய்மைப்படுத்தும் முன்பு இவர்கள் சார்ந்த ஆன்மீகம், மதங்களில் அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளை, மோசடிகளைத் தடுத்து நிறுத்த முதலில் உழைக்க வேண்டாமா?

அப்பாவி மக்களைக் கவருவதற்காக கறுப்புப் பணம், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணத்தை கொண்டு வருதல் போன்ற பல்வேறு திட்டங்களை முன் வைத்து மத்திய அரசாங்கத்தை “பயமுறுத்திட” இப்படி ஒரு உண்ணாவிரத நாடகத்தைத் துவக்கி, ஊடகங்கள் ஊதிப் பெருக்குவதால் நடத்திட முன் வந்துள்ளனர்; பாபா ராமதேவ், அன்னாஹசாரே போன்றவர்கள் புதிய அவதாரங்கள்!

மத்தியில் உள்ள அய்க்கிய(அ)யோக்கிய முற்போக்குக் கூட்டணி குறிப்பாக காங்கிரஸ் தலைமையில் உள்ள ஆட்சிக்கு எதிராக பா.ஜ.க. காவி ஆட்சியை மீண்டும் கொண்டு வரவே இப்படிப்பட்ட திடீர் ஊழல் ஒழிப்பு திடீர்க் காட்சிகள்!

டில்லியில் இதில் அரசியல்வாதிகள் மேடையில் இருக்க அமைதிக்கப்பட மாட்டார்களாம்! மாறாகக் கலந்து கொள்பவர்கள் யார் யார் தெரியுமா?

1. விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால்.
2. சாத்வி ரிதம்பரா
3. ஆர்.எளி.எளி.அமைப்பினர்
4. இந்து அமைப்புகள்.

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள்., இதில் அசோக் சிங்கால், சாத்வி ரிதம்பரா போன்றவர்கள் பாபர் மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்டு, குற்றம் சுமத்தப்பட்டவர்கள்; ஜளிடீளி லிபரான் கமிஷன் என்ற அறிக்கையை காங்கிரளி கட்சி செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டதே! அதிலும் அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கிலும் இவர்கள் எல்லாம் உள்ளனர்!

இதை அய்க்கிய (அ)யோக்கிய முற்போக்கு முன்னணி ஆட்சித் தலைமை, பிரதமர், அமைச்சர்கள் எவருமா புரிந்து கொள்ளவில்லை?

ஊழலை ஒழிக்க தயங்காது என்று கூறும் மத்திய அரசு தலைமை, இந்த சாமியார்களிடம் ஏன் கெஞ்ச வேண்டும் அமைச்சர்களை தூது அனுப்பி இதை நிறுத்திடும்படிக் கெஞ்சுதல், கொஞ்சுதல் செய்ய வேண்டும்? அவ்வளவு பலவீனமான அரசாக இயங்குவது நல்லதா? இந்த அரசாங்கம் எதற்கு.

இந்த அரசியல் அலங்கோலங்கள்பற்றி நினைத்தால் ஜனநாயகம் இப்படி கேலிக் கூத்தாக்கப்படுகிறதே என்று எண்ணி வேதனைப்பட வேண்டியுள்ளது!

மீண்டும் காவிகள் அரியணை ஏறவே இந்த ஆயத்தங்கள் என்பதை புரிய வைக்க வேண்டியது முற்போக்குச் சிந்தனை உடைய தலைவர்களின் கடமையாகும்.

பார்பன பத்திரிக்கைகளும் ஒத்து ஊதுகிறது

ஜெயாவிடம் அடிவாங்க தயாரில்லை? அழகிரி!!

மதுரையில் மத்தியமைச்சர் மு.க.அழகிரி நேற்று பதிலளித்தார். தி.மு.க., வெற்றி பெற்றால், மாநில அரசியலுக்கு வருவது பற்றி நான் எந்த முடிவும் செய்யவில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் பற்றி எந்த கட்சியும் தற்போது பேசவில்லை. நாங்கள் தி.மு.க., அரசு செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கிறோம். கருணாநிதி மற்றும் குடும்பத்தினரை திட்டி எதிர்கட்சியினர் ஓட்டு கேட்கின்றனர். அந்த கூட்டணியிலுள்ள நடிகரும் வேட்பாளரை அடித்தும், உளறியும் பேசி வருகிறார். இது மக்களுக்கும் தெரியும்.

தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை தி.மு.க.,வால் நிறைவேற்ற முடியாது என 2001 தேர்தலிலும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினார். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச "டிவி' விவசாய கடன் தள்ளுபடி போன்றவைகளை நிறைவேற்றியுள்ளோம். கருணாநிதி சொன்னதை செய்வார் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. கோவையில் நடந்த ஜெயலலிதா கூட்டத்திற்கு செல்லாதது குறித்து விஜயகாந்திடம் தான் கேட்க வேண்டும். ஏற்கனவே அவர் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என தெரிவித்திருந்தேன். அவர் அந்த கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லையா? என தெரியவில்லை. அவரிடம் அந்த அம்மா (ஜெயலலிதா) அடிவாங்க தயாராக இல்லை, என்றார்.

ஆபாசத்தை அள்ளி தொளிக்கும் இன்டர்நெட் சென்டர் !!

கோவை மாநகர எல்லைக்குள் பள்ளி, கல்லூரி அருகிலும், பிற இடங்களிலும் எண்ணற்ற " இன்டர்நெட் பிரவுசிங் சென்டர்கள்' செயல்படுகின்றன. 

சில பிரவுசிங் சென்டர்களில் "பிரைவெசி' என்ற பெயரில் முழுமையாக மூடப்பட்ட நிலையில் "கேபின்'கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், இன்டர்நெட் பிரவுசிங் செய்யும் நபர்கள் ஆபாச படங்களை பார்ப்பதாகவும், சிலர் ஜோடியாக வந்து ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவதாகவும் போலீசாருக்கு அடுத்தடுத்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. மேலும் சிலர், தங்களது வேண்டாத நபர்களின் போட்டோவை "மார்பிங்' செய்து, ஆபாச படமாக இன்டர்நெட்டில் உலவ விடுவதாகவும் "சைபர் கிரைம்' போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இதைத்தொடர்ந்து, பிரவுசிங் சென்டர் நடத்துவோருக்கு போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பிரவுசிங் சென்டர் நடத்துவோர், கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கட்டாயம் "லைசென்ஸ்' பெற வேண்டும். கம்ப்யூட்டர் அறையின் உள்பகுதியில் முழுமையாக மூடப்பட்ட நிலையில் "கேபின்' அமைக்கக் கூடாது. வெளியில் இருந்து பார்க்கும்போது கம்ப்யூட்டர் ஸ்கிரீனுக்கு மேற்பகுதியை மறைக்கும் வகையில் 2.5 அடி மட்டுமே தடுப்பு அமைத்திருக்க வேண்டும். பிரவுசிங் சென்டருக்கு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலண்டர் ஆண்டு கணக்கீட்டின்படி லைசென்ஸ் வழங்கப்படும்; கட்டணம் 75 ரூபாய். லைசென்ஸ் காலக்கெடு முடியும் தருவாயில், அதாவது ஜனவரியில் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

பிரவுசிங் சென்டரின் உரிமையாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பொறுப்பாளர், லைசென்ஸ் விதிமுறைகளுக்கு கட்டுப்படுவதாக 20 ரூபாய் முத்திரைத்தாளிலான உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு, "நோட்டரி பப்ளிக்' வக்கீலிடம் ஒப்புகை சான்று பெற்று சமர்ப்பிப்பது அவசியம்.

லைசென்ஸ் பெற்ற பின், பிரவுசிங் சென்டர் நடத்துவதற்கான விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். பிரவுசிங் செய்ய வரும் நபர்களின் அடையாள அட்டையை பரிசோதித்து, அதிலுள்ள விபரங்களை பதிவேட்டில் எழுதி வைக்க வேண்டும். வாடிக்கையாளர் எந்த கம்ப்யூட்டரில் பிரவுசிங் செய்கிறார், உள்ளே நுழைந்த நேரம் என்ன, வெளியேறிய நேரம் என்ன, பிரவுசிங் செய்ய எந்த வகையான அடையாள அட்டையை சமர்ப்பித்துள்ளார் என்ற விபரங்கள் பதிவேட்டில் இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த ஆவணங்களை ஓராண்டு வரை பராமரித்து, போலீசார் கோரும்போது சமர்ப்பிக்க வேண்டும்.

ஆட்சேபகரமான இணைய தளங்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்ததாதவாறு பிரவுசிங் சென்டர் உரிமையாளர் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் எந்தெந்த இணைய தளங்களை பார்வையிட்டு பயன்படுத்தியுள்ளனர் என்பதை கண்டறியும் வகையிலான பிரத்யேக "சாப்ட்வேர்'களை பிரவுசிங் சென்டரில் நிறுவியிருக்க வேண்டும். அதுபற்றிய விபரங்களையும் ஓராண்டு வரை பராமரிக்க வேண்டும். 

பிரவுசிங் சென்டர் காலை 8.00 முதல் இரவு 11.00 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் (சிறப்பு அனுமதி கேட்போரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்). வழக்கு விசாரணைக்காக தேவைப்படும் ஆவணங்களை போலீசார் கேட்கும் போதும், சோதனை நடத்தும்போதும் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். இதுபோன்ற சோதனைகளின்போது இன்ஸ்பெக்டர் மற்றும் அந்த அந்தஸ்துக்கும் மேல் பதவியில் உள்ள அதிகாரிகள் மட்டுமே ஈடுபடுபவர்

என் (ணை) ன வளம் இந்த திரு நாட்டில் ! சவூதி !!

ரியாத், ஆக.3:எண்ணை வளம் மிக்க நாடான சவுதி அரேபியாவில் மிக உயரமான கட்டிடம் கட்டப்பட உள்ளது. செங்கடல் நகரம் என்றழைக்கப்படும் ஜெட்டா நகரில் 1000 மீட்டர் உயரத்தில் இக்கட்டிடம் உருவாக உள்ளது. இக்கட்டிடம் சுமார் 2 சதுர மைல் பரப்பளவில் கட்டப்படுகிறது. இதற்கு கிங்டம் டவர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதில் ஓட்டல்கள், அடுக்குமாடி ஆடம்பர வீடுகள், அலுவலகங்கள் என அனைத்து வசதிகளும் இடம் பெறும். இந்த கட்டிடம் கட்டுவது குறித்து கடந்த 2008-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் 2009-ம் ஆண்டு தொடக்கத்தில் உலக அளவில் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து அதில் மாந்த நிலை ஏற்பட்டது.

கடந்த ஆண்டு துபாயில் புர்ஜ்காலிபர் என்ற கட்டிடம் திறக்கப்பட்டது. 160 மாடிகளை கொண்ட 822 மீட்டர் உயர கட்டிடமான இது உலகிலேயே மிக உயரமானது என்ற பெருமை பெற்றது. தற்போது இதை பின்னுக்கு தள்ளிவிட்டு சவுதி அரேபியா ஜெட்டாவில் 1000 மீட்டர் உயரத்தில் கட்டப்பட உள்ள இந்த கிங்டம்டவர் உலகின் மிகப்பெரிய கட்டிடம் என்ற அந்தஸ்தை பெற உள்ளது.

இந்த தகவலை சவுதி அரேபியாவின் கோடீசுவரரும், இளவரசருமான அல்வாலீட்பின் தலால் தெரிவித்துள்ளார்

ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் இருந்தால் சிலிண்டர் விலை ரூ.250 உயரும்

புதுடெல்லி : ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மேல் இருந்தால் காஸ் சிலிண்டர் மானியம் ரத்தாகும். சிலிண்டர் விலை 250 ரூபாய்  அதிகரிக்கும். இதற்கான பரிந்துரையை நாடாளுமன்ற நிலைக் குழு, அரசிடம் அளித்துள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கை, நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை குறைக்க அதில் வழிகள் கூறப்பட்டுள்ளன. 

அதன்படி, ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மேல் இருப்பவர்களுக்கு காஸ் சிலிண்டர் மானியத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்போது சிலிண்டர் விலையான ரூ.395 மீது அரசு ரூ.250 மானியம் அளிக்கிறது. நிலைக் குழுவின் பரிந்துரையை  அரசு ஏற்றால், ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மேல் இருப்பவர்களுக்கு சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப காஸ் சிலிண்டர் விலை உயரும்.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்: ஏழைகள், நடுத்தர மக்களின் சிரமத்தை குறைக்க அளிக்கப்படும் மானியங்களை பணக்காரர்கள் அனுபவிப்பது  நிறுத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக் குழு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மேல் இருப்பவர்களுடன் எம்.பி.க்கள், எல்.எம்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகளும் சேர்க்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்
டுள்ளது.

தவிர, வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு அளிக்கும் திட்டத்துக்கு பெட்ரோலிய அமைச்சகம் விரைவாக அனுமதி வழங்கவும், அடுத்த 5 ஆண்டு திட்ட காலம் வரை இந்த திட்டத்தை நீட்டிக்கவும் நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது. 

ஆண்டுக்கு 4 சிலிண்டர்

ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 4 சிலிண்டர்கள் வரை மட்டுமே மானிய விலையில் அளிப்பது, அதற்கு மேல் சர்வதேச சந்தை விலையில் மட்டுமே சப்ளை செய்வது என்றும் கார் அல்லது பைக், சொந்த வீடு இருப்பவர்களுக்கு இது நடைமுறைப் படுத்தப்படலாம் என்றும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

செல்போனில் படம் எடுத்து மாணவியை ஆபாசமாக சித்தரித்து பரப்பிய 3 பேர் பிடிபட்டனர்

ஆலந்தூர் : பள்ளி மாணவியை செல்போனில் படம் எடுத்து, ஆபாசமாக மார்பிங் செய்து பரப்பிய பெயின்டர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம் அடுத்த சேலையூரை சேர்ந்தவர் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், சேலையூர் போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

எனது மகள் சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறாள். அவளை சேலையூரை சேர்ந்த பெயின்டர் சந்திரகுமார் (19), அம்சலிங்கம் (39), ஆலப்பாக்கம் ராஜேஷ்குமார் (24) ஆகியோர் செல்போனில் படம் பிடித்துள்ளனர், அதை ஆபாசமாக மார்பிங் செய்து நண்பர்களுக்கு அனுப்பி யுள்ளனர். இதுபற்றி சந்திரகுமாரிடம் தட்டிக்கேட்டேன். அப்போது, “‘உன்னால் எங்களை எதுவும் செய்ய முடியாது. 

ஊரில் உள்ள பல பெண்கள் படத்தை இதுபோன்று மார்பிங் செய்து வைத்துள்ளோம். போலீசில் புகார் செய்தால் மேலும் பலருக்கு அனுப்பி உன்னையும், உனது மகளையும் அவமானப்படுத்துவோம்‘ என்று மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் குமார் கூறியிருந்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து, சந்திரகுமார், அம்சலிங்கம், ராஜேஷ்குமார் ஆகியோரை கைது செய்தார். அம்சலிங்கம் பழ வியாபாரமும், ராஜேஷ்குமார் செல்போன் கடையும் நடத்தி வந்துள்ளனர்.  

சந்திரகுமார் கூறுகையில், ‘‘பள்ளிக்கு நடந்து சென்ற குமாரின் மகளை செல்போனில் படம் பிடித்து ராஜேஷ்குமாரிடம் கொடுத்தேன். அவர் கம்ப்யூட்டரில் ஆபாசமாக மார்பிங் செய்து செல்போனில் பதிவு செய்து தந்தார். அதை நண்பர்களுக்கு அனுப்பினேன்‘ என தெரிவித்துள்ளார். 3 பேரையும் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பிளாஸ்டிக் சாலைகள்!

பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி நவீன சாலைகள் அமைக்க சோதனை முயற்சிகள் மேற்கொள்ள 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2011 - 2012ஆம் ஆண்டின் தமிழக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-

அழுகி வரும் சதுப்பு நிலங்களையும் அதைச்சார்ந்த உயிரினங்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை சீராக்கி பாதுகாக்க விரிவான திட்டம் ஒன்றை இந்த அரசு தயாரித்து செயல்டுத்தும்.
 

பிளாஸ்டிக் கழிவுகளைத் திரட்டி சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துவதையும், அதனை முறையாக அகற்றுவதையும் மாநிலம் தழுவிய ஒரு மக்கள் இயக்கமாக மேற்கொள்ள இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்டத்தில் ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


இதன் மூலமாக சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி சோதனை அடிப்படையில் சாலைகள் அமைப்பதற்காக, 50 கோடி ரூபாய் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சோதனை முறையில் சாலைகள் அமைக்க இத்தகைய பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படு

தமிழக சட்டசபை பட்ஜெட் தாக்கல் : 367 கோடி செலவில் ஏரி, அணை, கால்வாய்கள் சீரமைப்பு!

சென்னை : தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் வருமாறு:

* காவிரி ஆற்றின் குறுக்கே முத்தரச நல்லூரில் தடுப்பணை கட்டப்படும். இதற்கான ஒதுக்கீடு ரூ.32 கோடி ஒதுக்கீடு.

* ரூ.130 கோடியில் நீதிமன்றங்களுக்கு சொந்த கட்டிடம்.

* நடப்பு நிதி ஆண்டில் 111 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி.

* தீயணப்புத்துறை புதிய கருவிகள் வாங்க நவீனப்படுத்த, புதிதாக 10 கட்டடங்கள் கட்ட திட்டம். இதற்கு ரூ.170 கோடி ஒதுக்கீடு.

* கூட்டுறவுத்துறை மூலம் கடனை திருப்பி செலுத்துவோருக்கு சலுகை.

* சிறைச்சாலை மேம்பாட்டுக்காக ரூ.117 கோடி.

* சென்னை பெருநகர காவல் ஆணையம் உருவாக்கம். சென்னை புறநகர் காவல் ஆணையம் இதனோடு இணைக்கப்படுகிறது.  சென்னை பெருநகர காவல் ஆணையம் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்படும்.

* நடப்பு ஆண்டில் கலப்பின கறவை மாடுகள் வழங்க ரூ.56 கோடி ஒதுக்கீடு .

* 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கறவை மாடுகள் வழங்கப்படும்.

* ஏழை குடும்பங்களுக்காக 4 ஆடுகள் வீதம் வழங்க ரூ.135 கோடி ஒதுக்கீடு.

* ஆழ்கடல் மீன் பிடிப்பு ஊக்குவிக்கப்படும் .

* நாகை, பழையாறில் நவீன மீன் பிடிதுறைமுகம்.

* 367 கோடி செலவில் ஏரி, அணை, கால்வாய்கள் சீரமைக்கப்படும் 

* நெல்லை ஒரத்தநாடு பகுதிகளில் புதிதாக கால்நடை மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும்.

* தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க ரூ.5000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* சூரிய சக்தி மூலம் தெருவிளக்கு அமைக்கப்பட்டு கிராமங்களில் ஒளியூட்ட ரூ. 248 கோடி ஓதுக்கப்பட்டுள்ளது.
* சேலம் மற்றும் நெல்லையில் சைபர் கிரைம் குற்றப்பிரிவு.
* சென்னை மாநகர குடிநீர் சேமிப்பு கொள்ளளவு 4.20 டி.எம்.சியாக உயர்த்தப்படும்.
* ஓசூரில் சர்வதேச தரத்துடன் கோழி வளர்ப்பு மேலாண்மை மையம்.
* விசைப்படகுகள் எண்ணிக்கை உயர்த்த திட்டம்; நடப்பு ஆண்டில் புதிதாக 500 விசைப் படகுகள் வழங்க மானிய விலையில் கடன் ஏற்பாடு.
* ரூ. 74 கோடியில் புதிய மீன் இறங்குதளங்கள்.
* 13 மீன் பிடி நகரங்களில் மீன் பதப்படுத்தும் மையம்.
* தனியார் இடங்களில் மரம் வளர்க்கும் திட்டம் அறிமுகம்.
* 43 கோடி செலவில் 3 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன.
* சூரிய சக்தி தெருவிளக்கு திட்டத்துக்கு ரூ.248 கோடி ஒதுக்கீடு. ஆண்டுக்கு 20 ஆயிரம் கிராமங்கள் வீதம் அமல்.
* நுண்ணுயிர் பாசன திட்டம் அமைக்க விவசாயிகளுக்கு நூறுசதவீத முன்னுரிமை.
* உணவு தானிய சேமிப்புக் கிடங்குகளுக்கு ரூ.237 கோடியில் திட்டம்.
* மானிய விலையில் 5 ஆயிரம் புல்வெட்டிகள் விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு. 

சமச்சீர் கல்வி வழக்கு - விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைப்பு!

சமச்சீர் கல்வி வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வாதப் பிரதிவாதங்கள் இன்றுடன் முடிவுக்கு வந்தன. வழக்கின் தீப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஜூன்  22-ந்தேதிக்குள் மாணவர்கள் அனைவருக்கும் சமச்சீர் பாட புத்தகங்கள் வழங்கபட  வேண்டும் என்றும் கடந்த மாதம் 18ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று  தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது. மேலும் ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை வினியோகிக்க உத்தரவிட்டது.

ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை வழங்க இயலாது. போதிய அவகாசம் வேண்டும் என அரசு சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டதை ஏற்று கொண்ட உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை வழங்க வேண்டும் என  தமிழக அரசுக்கு  உத்தரவுவிட்டது.

இந்நிலையில், கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த  இவ்வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர் 40 எம்.எல்.ஏ.,க்கள்

 கர்நாடகாவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள சதானந்த கவுடா முதல் நாளிலேயே சிக்கலை சந்தித்தார். அவரது பதவியேற்பு விழாவை, ஜெகதீஷ் ஷெட்டார் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சுரங்க மோசடி குறித்த லோக் ஆயுக்தா அறிக்கையை அடுத்து, கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனினும் தனது ஆதரவாளரான சதானந்த கவுடாவை முதல்வர் பதவியில் அமர்த்துவதன் மூலம் கட்சியிலும், ஆட்சியிலும் செல்வாக்கை தொடர முடிவெடுத்தார் எடியூரப்பா. இதற்கு எடியூரப்பாவின் எதிர்ப்பாளர்களான அனந்த குமார், மாநில பா.ஜ., தலைவர் ஈஸ்வரப்பா மற்றும் அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டார் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் ஜெகதீஷ் ஷெட்டாரை முதல்வராக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் ஆகியோர் சமரச பேச்சு நடத்தியும் எந்த வித உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து, நேற்று ரகசிய ஓட்டெடுப்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டு, ஓட்டெடுப்பில் சதானந்த கவுடா வெற்றி பெற்றதாக பா.ஜ., மேலிடம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, கவர்னரை சந்தித்த சதானந்த கவுடா, ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவரது பதவியேற்பு விழா இன்று நடந்தது.

எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணிப்பு: சதானந்த கவுடாவின் பதவியேற்பு விழாவை, ஜெகதீஷ் ஷெட்டாரும், அவரது 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்களும் புறக்கணித்தனர். இதனால் பதவியேற்ற முதல் நாளிலேயே கடும் சங்கடத்தை சந்தித்தார் சதானந்த கவுடா. மேலும் ஜெகதீஷ் ஷெட்டாருக்கு துணை முதல்வர் பதவி மற்றும் முக்கிய துறைகளை எதிர்பார்க்கும் அவர்களால், புதிய அரசு மேலும் சிக்கல்களை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான் என்கவுண்டர் குற்றவாளி அல்ல: நடிகர் வடிவேலு!

காவல்துறைக்குப் பயந்து ஓடி ஒளிய நான் என்கவுண்டர் குற்றவாளி அல்ல என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி சென்னை காவல்துறை ஆணையரிடம் நடிகர் வடிவேலு நில மோசடி செய்துவிட்டதாக அவர் மீது புகார் அளித்தார். இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து நடிகர் வடிவேலு கூறியதாவது:-

நிலமோசடி புகாரில் போலீஸ் தேடுது, நான் தலைமறைவாயிட்டேன் என்றெல்லாம் செய்தி வருது. நான் எங்கும் ஓடல, சென்னையில் இருப்பேன். இல்லாட்டி மதுரைக்கு போவேன். போலீஸ் தேடி அலையுறதுக்கு நான் என் கவுண்டர் குற்றவாளி அல்ல. கொஞ்ச நாள் பட வாய்ப்புகளை நிறுத்திட்டு இடம் சம்பந்தமான பிரச்சினைகளை சரி பண்ணிட்டு இருக்கேன்.
 

உண்மையை சொன்னா ஏமாந்தவன் நான். வாங்கிய இடங்களை பறி கொடுத்து மோசம் போய் நிற்கிறேன்.   பிரச்சினைக்குரிய இடத்தை பொறுத்தவரை பத்திரம் காணாமல் போச்சுன்னு பேப்பர்ல கொடுத்த விளம்பரத்தை காட்டி எனக்கு விற்றனர். இ.சி. போட்டு பார்த்தேன். சரியாதான் இருந்தது.
 

2002-ல் அந்த நிலத்தை எனக்கு விற்றார்கள். 2006-ல் அங்கு காம்பவுண்டு சுவர் போட்டேன். 2009-ல் பழனியப்பன் வாங்கியதாக உரிமை கொண்டாடிட்டு வந்து நின்னார். நான் பதறி போனேன். அவர் 2006-ல் அந்த இடத்தை வாங்கியதாக சொன்னார்கள். இ.சி. பார்த்து இருந்தால் என் பெயர் வந்து இருக்கும். அதை எப்படி வாங்கினார் என்று புரியவில்லை. ஒரிஜினல் பத்திரம் காணாமல் போச்சு என்று விற்றவர் மேல் கோர்ட்டில் வழக்கு போட்டு இருக்கிறேன். அந்த நபர் யார் என்று மக்களுக்கு தெரியும்.
 

பழனியப்பன் செங்கல்பட்டு கோர்ட்டில் 2009-ல் என் மேல் வழக்கு போட்டார். 2011 வரை அவர் கோர்ட்டுக்கே வரவில்லை. முக்கியமான ஒருத்தர் மூலமா ரூ.1 கோடி தந்தால் விலகிக்கிறேன் என்றார். நான் மறுத்து விட்டேன். இரண்டு வழக்குகள் மீதும் விசாரணை நடந்துட்டு இருக்கு.   உலகம் பூரா குழந்தைகள், பெண்கள், வயசானவங்க, இளைஞர்கள் என எல்லாரையும் சிரிக்க வைச்சு சம்பாதித்த பணத்தில்தான் இந்த சொத்துக்களை வாங்கினேன்.
 

மோசடி பத்திரம் மூலம் இதை வாங்கியதாக சொல்றாங்க. நான் என் பொண்டாட்டி, குழந்தை எல்லோரும் போலி பத்திரம், தயாரிக்கிறத குடிசை தொழிலாவா செய்துட்டு இருக்கோம். போலி பத்திரம் தயாரிக்கிறது வேற ஆள். நான் ஏமாந்த ஆள். எனக்கு படிப்பறிவு குறைவு பத்திரங்களில் உள்ள விஷயங்கள் தெரியாது. அதனால் ஏமாற்றப்பட்டேன்.   கூடவே இருந்து என் உதவியால் சினிமாவில் நடிச்சி சாமி பக்தியை காட்டி உங்களுக்கு துரோகம் செய்வேனா, அப்படி செஞ்சா என் பிள்ளை விளங்குமா என்றெல்லாம் சொன்னவர் கிட்ட ஏமாந்துட்டேன்.
 

என் குல தெய்வமான அய்யனார் சாமி முன்னால் நின்று பணத்தை கொடுத்தேன். எல்லாத்தையும் வாங்கிட்டு போர்ஜரி சொத்தா வாங்கி கொடுத்து ஏமாற்றி விட்டார். என் மீதான புகாரை சட்ட ரீதியா சந்திப்பேன். எங்கும் ஓடல, போலீஸ் எப்ப கூப்பிட்டாலும் விசாரணைக்கு போவேன்.
 

இவ்வாறு வடிவேலு கூறினார்.

ரமளான் மாதத்தின் சிறப்பு

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 4
வருடம் ஒன்று கடந்து செல்லும் பொழுது நம் வாழ்வில் இனித் திரும்பக் கிடைக்காத ரமளான் மாதம் ஒன்றும் சேர்ந்தே கடந்து செல்கின்றது. இதைக் குறித்த எவ்விதச் சிந்தனையும் இல்லாமல் இருப்பவர்கள் உண்மையில் மிகப்பெரிய நஷ்டவாளிகளே. இம்மாதத்தின் சிறப்பு என்னவென்பதைத் தெளிவாக உணர்ந்திருந்தால் ரமளான் கடந்து செல்லும் பொழுதும் அடுத்த ரமளான் வரும் பொழுதும் எவரும் தம் வாழ்வில் பெற வேண்டிய நல்ல மாற்றங்களைக் குறித்துச் சிந்திக்காமல் எவ்வித உணர்ச்சியுமற்று இருக்க மாட்டார்கள்.
ரமளான் மாதத்தின் சிறப்பு:
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். ( அல்குர்ஆன் 2: 185) .
வஹீ எனும் இறைவனின் வார்த்தைகள் இவ்வுலக மக்களுக்கு இறங்கிய மகத்தான மாதம்தான் ரமளான் மாதம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழியாக விண்ணுலகிலிருந்து மண்ணுலக மாந்தர்க்கு இறுதிநாள் வரைக்கும் வழிகாட்டுவதற்காக ஏற்பட்ட முதல் தொடர்பு, இம்மாதத்தில்தான் ஏற்பட்டது. அப்படிப்பட்ட முக்கியமான இம்மாதத்தின் ஆரம்பத்தில் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்படுவதாகவும் சுவர்க்கத்தின் அனைத்து வாயில்களும் திறக்கப்படுவதாகவும் மலக்குகள் இறங்கி வந்து பாவம் செய்பவரை பாவங்களை விட்டு விலகிக் கொள்ளவும் இறைவனிடம் பாவ மன்னிப்பிற்கு இறைஞ்சவும் அழைப்பு விடுவதாகவும் இம்மாதத்தில் எவர் ஈமானுடன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவராக நோன்பு நோற்கவும் இரவுத் தொழுகையைத் தொழவும் மகத்தான லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்கவும் செய்கின்றனரோ அவருடைய முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் அறிவுறுத்திய மாதம்.
பன்னிரண்டு மாதங்களில், பாவங்கள் மன்னிக்கப்படும் மாதமாகவும் கேட்பவை அனைத்தும் கிடைக்கப்பெறும் மாதமாகவும் அருட்கொடைகள் நிறைந்த மாதமாகவும் இந்த ஒரு புனித மாதம் திகழ்கிறது.
மேலும் ஆயிரம் மாதங்களை விட மேலானதான மகத்தான ஓர் இரவும் இம்மாதத்தில்தான் இருக்கிறது. திருக்குர்ஆன் இவ்வுலகிற்கு இறக்கப்பட்ட இவ்விரவைப் பற்றி,
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ரு) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவின் சிறப்பு என்னவென்று உமக்குத் தெரியுமா? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும் தூய(ஆன்மா ஜிப்ரயீல் என்ப)வரும் தம் இறைவனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) சகல செயல்(திட்டங்)களையும் தாங்க்கியவர்களாக (விண்ணுலகிலிருந்து) இறங்குகின்றனர். சாந்தி (நிலவும்) - விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குர்ஆன் 97: 1-5).

என்று அல்லாஹ் சிறப்பித்துக் கூறுகிறான்.
ஆயிரம் மாதங்கள் என்பது சுமார் 83 வருடங்களுக்குச் சமம். ஒருவர் இவ்விரவு முழுவதும் இறை வணக்கத்தில் கழித்தால் அவர் சுமார் 83 வருடங்கள் இடைவிடாது இறைவணக்கத்தில் கழித்த கூலியை அடைந்து கொள்கின்றார். ஒருவர் இவ்விரவில் ஒரு ரக்அத் தொழுதால் அவர் சுமார் 83 வருடங்கள் ஒரு ரக்அத் தொழுததற்குரிய நன்மைகளைப் பெற்றுக் கொள்கின்றார்.
ஒருவரின் ஆயுள்காலம் சராசரியாக 70 வருடம் என வைத்துக் கொண்டு அவர் செய்யும் நல்லறங்களைக் கணக்கிட்டாலும்கூட இந்த ஓர் இரவில் ஒரு ரக்அத் தொழுவதனால் கிடைக்கக் கூடிய நன்மைகளுக்கு அது ஈடாகாது.
ஒருவருக்கு இவ்விரவு கிடைக்கப்பெறுவதைவிட மேலான மற்றொரு பாக்கியம் இவ்வுலகில் கிடைக்குமா? அத்துணை மகத்தான இரவைக் கொண்ட இப்புண்ணிய மாதம் ஒருவருக்கு கிடைக்கப்பெற்றும் அவர் செய்த பாவங்களுக்குப் பரிகாரத்தையும் கூடுதலாக சுவர்க்கத்தில் நுழைவதற்குரிய தகுதியையும் அடைந்து கொள்வதற்கு முயலவில்லை எனில் அவரை விட துர்பாக்கியசாலி இவ்வுலகில் வேறு ஒருவர் இருக்க முடியாது.
- தொடரும் இன்ஷா அல்லாஹ்.
Thanks
S.Margam

உறுதி ஏற்போம்!

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 3
நோன்பின் பிரதிபலனை இறைவனிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு, நோன்பு நோற்றவரிடம் காணப்பட வேண்டிய மாற்றம்தான் என்ன? நோன்பு முடிந்து, தொடரும் அடுத்த 11 மாதங்களில் நோன்புக் காலங்களில் உரிய காலத்தில் நிறைவேற்றிய தொழுகைகள், கடைப்பிடித்த ஒழுக்கங்கள், நற்பண்புகள், இன்னபிற நற்செயல்களை விட்டு விலகி வாழ்வதா? அல்லது நோன்புக் காலங்களில் தன்னைக் கண்காணித்த அதே இறைவன்தான் இப்போதும்-எப்போதும் தன்னைக் கண்காணிக்கின்றான் என்ற உணர்வுடன் அந்நற்பண்புகளை விட்டு விலகாது தொடர்ந்து அவற்றை மேம்படுத்துவதா? என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு மாதத்தில் பழகிப் பக்குவப் பட்ட ஒழுக்க வாழ்க்கையை உதறித் தள்ளி விட்டு, "பழைய குருடி ..." உவமையாக வாழத் தலைப் பட்டவர்களுக்கு,
"அந்நாளில் அவர்களுடைய நாவுகளும் அவர்களுடைய கைகளும் அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததைப் பற்றி சாட்சியம் கூறும்"".  (அல்குர்ஆன் : 24:24);

"அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும கண்களும் அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்". (அல்குர்ஆன் : 41:20).

நாளை மறுமையில் தமது சொல், செயல், செவி, பார்வைகள் அனைத்தும், கேள்விக்கு உட்படுத்தப்படும் என்பதை மறந்து ரமளானைத் தொடர்ந்து வரும் அடுத்த 11 மாதங்களில் குர்ஆன் போதனைகள் மற்றும் நபிவழிக்கு மாற்றமாகத் தமது வாழ்கையை அமைத்துக் கொள்பவர்களுக்கு மேற்கண்ட இரு வசனங்களும் எச்சரிக்கை விடுக்கின்றன. அடுத்த ரமளானில் இக்காலகட்டத்தில் செய்பவற்றுக்குப்  பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என இறுமாந்து இருப்பவர்கள், அடுத்த ரமளான் வருவதற்குள் இலட்சியமற்ற அலட்சிய வாழ்க்கை வாழும் நிலையில் மரணித்தால் தன் நிலை என்னவாகும் என்று சற்றும் கவலையற்றவர்களாக இருக்கின்றனர். அல்லாஹ் அருள் புரிந்து பாதுகாப்பானாக.

இனிமேலாவது இந்நிலையிலிருந்து தான் மாற வேண்டும் என்று ஒவ்வொருவரும் தன் மனதில் சங்கல்பம் எடுத்துக் கொண்டு இந்த புனித ரமளான் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும். உலகில் புத்தாண்டு தீர்மானங்கள், பழைய ஆண்டு தீர்மானங்கள் எனப் பல தீர்மானங்கள் (resolutions) நிறைவேற்றப் படுவதைப்போல் இப்புனித ரமளானின் ஆரம்பத்திலும் நம் இம்மை-மறுமை வாழ்க்கை செம்மையடைய சில தீர்மானங்களை ஒவ்வொருவரும் மனதில் எடுக்கலாம்.

இன்ஷா அல்லாஹ்!
  • இந்த ரமளான் முதல் நான் தினம் ஐந்து வேளை தொழுகைகளையும் ஜமாஅத்தோடு தொழுவது முதல், வாழ்வின் எல்லா காலகட்டத்திலும் எனது செயல்கள் எல்லாவற்றிலும் முறையாக குர்ஆன்-நபிவழியில் வாழ்ந்து வருவேன்.
  • எல்லாவித தவறுகளில் இருந்தும் விடுபட்டு உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து இம்மை மறுமை வெற்றிக்கு உழைப்பேன்; அதற்காக அல்லாஹ்விடம் பிராத்திப்பேன்.
  • அதிகமதிகமாக நன்மைகளை, தர்மங்களைச் செய்வேன்.
  • மார்க்கப் பணிகளில் எனது உபரி நேரத்தைச் செலவழிப்பேன்.
  • அல்லாஹ்விடம் அதிகமாகப் பாவமன்னிப்புத் தேடுவேன்.
  • தீய பழக்கங்கள் / தீய காரியங்களில் ஈடுபடமாட்டேன்.
  • இறைச் சிந்தனையுடன், எப்போதும் இறையச்சத்துடன் வாழ்வேன்.
  • குர்ஆனைப் பொருள் உணர்ந்து படிப்பேன், அதை எனது வாழ்க்கையில் செயல் படுத்துவேன்.
  • செய்யும் எந்த நற்செயலையும் தொடர்ந்து இடைவிடாமல் செய்ய முயல்வேன்.
போன்ற பல தீர்மானங்களை மனதில் நிறைவேற்றி உறுதியான ஈமானுடனும் இறை நம்பிக்கையுடனும் வாழ்ந்து மரணிக்க சங்கல்பம் செய்து கொண்டு இப்புனித ரமளானை ஆரம்பிக்க வேண்டும். இதுவே நிரந்தரமான, முறையான பயனாக அமையும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்; பிறருக்கும் இதை உணர்த்தும் வகையில் தன் வாழ்க்கையில் மாறுதல் ஏற்படுத்தி முன்னுதாரணமாகத் திகழ இயன்றவரை முயல வேண்டும். இத்திட சங்கற்பத்தை மனதில் ஏந்தியவர்களாக இவ்வரிய புனித ரமளானை நாம் ஆரம்பிப்போம்.

- தொடரும் இன்ஷா அல்லாஹ்.
ஆக்கம்: இப்னு ஹனீஃப்
Thanks
S.Margam