அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, July 16, 2011

இந்துக்களே... உஷார்!

டாக்டர் பி.சத்திய நாராயணன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: திருவனந்தபுரம், பத்மநாப சுவாமி கோவிலில், அள்ள, அள்ளக் குறையாத பொக்கிஷம் குறித்து, உலகமே பிரமித்துப் போயிருக்கிறது. "கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும்' என்பர். இந்த தெய்வம், கூடை கூடையாகக் கொட்டியது போதாதென்று, குளத்தின் மூலமாகவும் கொட்டும் போலத் தெரிகிறது.இந்த நேரத்தில், "அந்தப் புதையல் யாருக்கு சொந்தம்?' என, ஆளாளுக்கு கேள்வி எழுப்புகின்றனர். இறைவனுக்கு தான் சொந்தம் என்பதில், என்ன சந்தேகம் இவர்களுக்கு?இந்திய வரலாற்றைப் படித்தவர்கள், ஒரு விஷயத்தை மறுக்க முடியாது. தைமூர் காலத்திலிருந்து, அயல் நாட்டவர் அடிக்கடி படையெடுத்து, நம் நாட்டுக் கோவில்களைக் கொள்ளையடித்ததால், இப்போது கிடைத்துள்ள பொக்கிஷம் போல, பல்லாயிரக்கணக்கான மடங்கு நகைகளும், தங்கம், வெள்ளி நாணயங்களும் நம்மிடமிருந்து பறிபோயுள்ளன.நல்ல காலம்... விந்திய மலை என்றொரு மலை, வடக்கே அரணாக இருந்ததால், தென்னாட்டுக் கோவில்கள் தப்பித்தன. அதற்கான உதாரணமே இந்தப் பொக்கிஷம்!ஆனால், அதைவிட பெரிய ஆபத்து இப்போது, கோவில்களை எதிர்பார்த்துள்ளது. போலி மதவாதம் பேசும் அரசியல்வாதிகள், அந்த செல்வத்தை சுருட்டிக் கொள்ளும் வகையில் பேச ஆரம்பித்து விட்டனர். அதைத் தடுத்து நிறுத்துவது, ஒவ்வொரு இந்தியனின் கடமை. திருவனந்தபுரத்தில் கிடைத்துள்ள ஒவ்வொரு காசையும் கணக்கெழுதி, பாதுகாப்பாக வைப்பது அரசின் கடமை.இறைவனின் தினசரி சேவைக்குத் தேவையான நகைகள் தவிர, மற்ற நகைகளை, ஒரு பாதுகாப்பான அருங்காட்சியகத்தில், கண்ணாடிப் பெட்டகங்களில் பாதுகாப்பாக வைக்கலாம். அதற்கு கட்டணம் வசூலித்து, பொதுமக்களை அனுமதிக்கலாம்.இதனால், பொதுமக்கள் பார்வையிலும் நகைகள் இருக்கும்; பாதுகாப்புப் பணியிலும், அருங்காட்சியகப் பணியிலும் வேலை வாய்ப்புகள் பெருகும். அருங்காட்சியக வசூல் தொகையை, நாட்டு நலப்பணிகளுக்காக செலவிடலாம். முக்கியமாக, அன்னியச் செலாவணி பெருகும்.தென் மாநிலங்களில் உள்ள பல்வேறு கோவில்களில், இதுபோன்ற புதையல் கிடைக்க வாய்ப்புள்ளது. அவற்றையும் பாதுகாக்க, அரசு முன்வர வேண்டும்.அந்நாளில், அயல்நாட்டவர் கொள்ளையடித்தனர்; இந்நாளில், நம் நாட்டவரே, போலி மதச்சார்பின்மை மூலம், கோவில் நகைகளைக் கொள்ளையடிக்கப் பார்க்கின்றனர். அதைத் தடுத்து நிறுத்தி, இந்து மதத்தின் மறுமலர்ச்சிக்குப் பாடுபட வேண்டியது, இந்தியர்களின் கடமை.இந்துக்களே உஷார்!

எல்லாமே குட்டிச்சுவர்!நா.மு.நாச்சியப்பன், காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: "2ஜி' ஊழல் விவகாரத்தை முதலில் தொடங்கி வைத்தவராக தயாநிதி இருந்திருக்கிறார். மக்கள் பணம் இழப்புக்கு காரணமான ராஜா, கனிமொழி மற்றும் பலரை பிடித்த சி.பி.ஐ., ஊழலுக்கு தொடக்க விழா நடத்திய தயாநிதியை இதுநாள் வரை விட்டு வைத்தது ஏன்?கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரரான மாஜி மந்திரி அருண் ÷ஷாரியை சி.பி.ஐ., விசாரித்தது. "தேவைப்படும் போதெல்லாம், சி.பி.ஐ., விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன்' என்றார் அருண் ÷ஷாரி. அவர் மனிதரா? இல்லை, மன்மோகன் சிங், சோனியா, கபில் சிபல், ராஜா, கனிமொழி, தயாநிதி மனிதர்களா?குடும்பத் தலைவன் சரியில்லை எனில், குடும்பம் குட்டிச்சுவராகிவிடும். அதுபோல், கட்சித் தலைவனும், ஆட்சித் தலைவனும் சரியில்லை எனில், கட்சியும், நாடும் குட்டிச்சுவராகி விடும். இதுதான் இங்கு நடக்கிறது.நீண்ட கால பயனுக்கு... : ரா.பாலாஜி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: "2011 - 12ம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு, 23 ஆயிரத்து, 535 கோடி ரூபாய்' என, மத்திய திட்டக் கமிஷன் இறுதி செய்துள்ளது. இதுகுறித்து, முதல்வர் ஜெயலலிதாவும், திருப்தி தெரிவித்திருப்பது, மத்திய - மாநில அரசுகளிடையே, சுமுக புரிந்துணர்வு உருவாகி வருவது, தமிழக நலனுக்கு நல்லது. கேட்ட நிதியை விட, 535 கோடி ரூபாய் அதிகம் ஒதுக்கி, தன் நட்பான அணுகுமுறையை, மத்திய அரசு காட்டியுள்ளது.தமிழகத்தில், சென்ற ஆட்சி விட்டுச் சென்ற தொடர் கடன் சுமை, ஒரு லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது. இது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் இழப்பை விட, 50 சதவீதமே குறைவு. இதில், மின்வாரிய இழப்பு மட்டுமே, 45 ஆயிரம் கோடி ரூபாய் என்பது, ஆற்காடு வீராசாமியின் நிர்வாகச் சீர்கேட்டை உணர்த்துகிறது.இதுபற்றி, தன் முந்தைய டில்லி பயணத்தின் போது, பிரதமரைச் சந்தித்து, இதை மானியமாக அளித்து, தமிழகத்தை கடன் சுமையிலிருந்து மீட்டு, புனர்வாழ்வு அளிக்க ஜெயலலிதா மனு அளித்துள்ளார். இப்போது, திட்ட கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவிடமும் கூறி, அவரின் ஒத்துழைப்பையும் நாடியிருக்கிறார். இதுகுறித்து, பிரதமருடன் நேரில் விவாதித்து, தமிழகம் கூடுதல் உதவி பெற, திட்ட கமிஷன் ஒத்துழைக்க வேண்டும்.அதுபோல், தமிழக அரசும், இந்த கூடுதல் நிதியை இலவசங்களுக்கு வீணாக்காமல், மக்கள் நலத்திட்டப் பணிகளில், குறிப்பாக கல்வி, சுகாதாரம், குடிநீர், சாலை வசதிக்கு பயன்படுத்தினால், நீண்ட கால பயன் விளையும்.

தெய்வம் தந்த தீர்ப்பு! எம்.வரலட்சுமி, முகப்பேர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே; சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார், சமயம் பார்த்து பல வழிகளிலும் கொள்ளை அடிக்கிறார்' - இது ஒரு பழைய சினிமா பாடலாக இருந்தாலும், இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது தான் சிறப்பு.தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம் போல், ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தோர் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம், ஊடகங்கள் மூலமாகத் தானே, பாமர மக்கள் தெரிந்துகொள்ள முடிகிறது.தவறு நடக்கும்போது, அதை மக்கள் அறியும்படி செய்வது தானே நியாயம். தங்கள் ஊடகத்தின் பெயரிலும், எத்தனை ஊழல்கள் தினமும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் மறந்துவிட்டு, "ஊடகங்களின் ஆட்சி நடக்கிறது. அவர்கள் நினைத்தால், யாரை வேண்டுமானாலும் இழிவுபடுத்தலாம்' எனச் சொல்வது, கண்ணாடி வீட்டிற்குள் இருந்து, கல்லெறிவது போல் உள்ளது."நமக்கும் மேலே ஒருவனடா, அவன் நாலும் தெரிந்த தலைவனடா, தினம் நாடகமாடும் கலைஞனடா' என்ற பாடல் வரிகளைப் போல, தெய்வம் தந்த தீர்ப்பு இது.

சொல்கிறார்கள்!!!

லாபகரமான தொழில் விவசாயம்!அமெரிக்காவில், ஐ.டி., வேலையை உதறிவிட்டு, விவசாயிகளுக்காக உதவும் வெங்கட் சுப்ரமணியம்: நான் ஐ.ஐ.டி.,யில் ஆர்கிடெக் படித்து விட்டு, அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். காய்கறிக்கும், எங்கள் பரம்பரைக்கும் எந்த தொடர்பும் இல்லை. வெளிநாட்டுக்காரனுக்கு கூலியா இருக்கிறத விட, நம் நாட்டில், யாருமே கவனிக்காத துறையில் சாதிக்கணும்ங்கிற எண்ணத்தில், என் வேலையை விட்டு, சென்னையில் காய்கறி வியாபாரத்தை தொடங்கினேன்.தொடக்கத்தில் சில விவசாயிகளை சந்தித்து, அவர்கள் மூலம் பொருட்களை வாங்கி, வீட்டருகில் உள்ள சேரி மக்களுக்கு, குறைந்த விலைக்கு விற்றேன். பின், அவர்களின் உதவியுடன் விற்பனை செய்தேன். கிடைக்கும் லாபத்தை அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். இது நல்ல பலன் தரவே, மொபைல் காய்கறி கடைகளை உருவாக்கினேன்.அதாவது, காய்கறிகளை மொத்தமாக வேனில் ஏற்றி, கடற்கரையில் சென்று விற்பது. இதற்கும் நல்ல பலன் கிடைத்தது.சென்னையில், காய்கறிகளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை கருத்தில் கொண்டு நாங்கள், சந்தை விலைக்கே விற்பனை செய்கிறோம்.காய்கறி குறித்து டேடா பேஸ் உருவாக்கியுள்ளோம். இதன் அடிப்படையில், என்ன விலை, எங்கு விளைகிறது, எப்போது எந்த சீசன், யார் விளைவிக்கின்றனர் போன்ற தகவல்கள், விரல் நுனியில் உள்ளன. மேலும், விவசாயத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளேன். படித்தவர்கள் விவசாயத்தை கையில் எடுத்தால், இதை விட லாபகரமான தொழில் வேறு இல்லை.கடின உழைப்புக்கு தயாராக இருந்தால், எதிலும் சாதித்து விடலாம்.

சிலி அரசாங்கம் மீது சுரங்க தொழிலாளர்கள் வழக்கு!

சிலி: வடக்கு சிலியில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 31 சுரங்க தொழிலாளர்கள் 69 நாட்களாக நிலத்தடியில் சிக்கி  போராடிவருகின்றனர். இதற்கு அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என அரசாங்கத்தின் மீது  தொழிலாளர்கள்  வழக்கு தொடுத்து வருகின்றனர். இது பற்றி சுரங்க தொழிலாளி கூறுகையில் என்னுடன் 31 தொழிலாளர்களும்  கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர் மேலும் அவர்களது குடும்பங்களும் சோகத்தால் வாடிவருவதாகவும் தெரிவித்தார். 33  சுரங்க தொழிலாளர்கள் வடக்கு சிலியில் உள்ள தாமிர சுரங்கத்தில் 2010ம் ஆண்டு அக்டோபர்13 லிருந்து சிக்கி  கொண்டிருந்தனர். 69 நாட்களுக்கு  பிறகு மேற்கொண்ட மீட்பு பணிக்கு பின் 700 மீட்டர் பள்ளத்திலிருந்து பாதுகாப்பாக  மீட்கபட்டனர். சுரங்க தொழிலாளர்கள் ஒவ்வொவருக்கும் 540000 அமெரிக்க டாலர்களை நஷ்ட ஈடாக தரவேண்டும்  எனவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

கூடுதல் வரிவிதிப்பால் விலை உயர்வு: சிகரட் முதல் மொபைல் வரை இனி கையை சுடும்!

தமிழக அரசு பல பொருட்களின் மீதான வரியை அதிகரித்ததை தொடர்ந்து, பீடி, சிகரட், சமையல் எண்ணெய் மற்றும் மொபைல் போன்றவை விலை உயர தயாராகி விட்டன. சிகரட்டை பொறுத்தவரை கேட்கவே வேண்டாம். அறிவிப்பு வருகிறது என்றாலே, ஒன்று சிகரட்கள் எல்லாம் பதுக்கப்பட்டு விடும்; இல்லாவிட்டால், பகிரங்கமாக விலையை ஏற்றி விடுவார்கள். இந்த நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் சில பிராண்ட் சிகரட்கள் கிடைக்கவில்லை.தமிழக அரசு, தன் இலவச திட்டங்களுக்காகவும், நிதி நெருக்கடியை போக்கிக்கொள்ளவும், நேற்றுமுன்தினம் இரவில் திடீரென வரி உயர்வை அறிவித்தது. புதிய அரசு பதவியேற்றதும் முழு பட்ஜெட் போட வேண்டிய கட்டாயம் உள்ளது. அடுத்த மாதம் அதற்காக சட்டப்பேரவை கூடுகிறது. இந்த நிலையில், திடீரென பல பொருட்களின் விலை அதிகரிக்க வகை செய்யும் வரி அதிகரிப்பு, பலரையும் நேற்று காலையிலேயே பதற வைத்தது.சமையல் எண்ணெய் விலை!வரி உயர்வு எதிரொலியாக, சமையல் எண்ணெய் விலை கிலோவுக்கு ரூ. 5 வரை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சமையல் எண்ணெய் விற்பனையை பொறுத்தவரையில், ஆண்டுக்கு ரூ. 500 கோடி வரை வரி விலக்கு இருந்தது. இதில் ஏராளமான வரி ஏய்ப்பு என்று சொல்லி, ரூ. 500 கோடி வரையிலான விற்பனை வரம்பை ரூ. 5 கோடியாக குறைத்து அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இதன்மூலம் ஆண்டிற்கு ரூ. 5 கோடிக்கு மேல் எண்ணெய் விற்பனை செய்பவர்கள் வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதனால் விலை ரூ. 2லிருந்து ரூ. 5 வரை உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் மொத்த மார்க்கெட்டில் பாமாயில் (பாக்கெட் 900 மி.லி.) ரூ. 54க்கு விற்றது ரூ. 56க்கு விற்பனை செய்யப்பட்டது. சன் பிளவர் ஆயில் ரூ. 76லிருந்து ரூ. 78, கடலை எண்ணெய் ரீபைண்ட் ரூ. 95லிருந்து 97, தேங்காய் எண்ணெய் ரூ. 130லிருந்து ரூ. 133, தேங்காய் எண்ணெய் (2ம் ரகம்) ரூ.100லிருந்து ரூ. 103, அக்மார்க் நல்லெண்ணெய் ஸி130லிருந்து ரூ. 133, சாதா நல்லெண்ணெய் ரூ. 80லிருந்து ரூ. 85, வனஸ்பதி ரூ. 68லிருந்து ரூ. 70க்கும் விற்பனை செய்யப்பட்டது.
எடை போட்டு விற்பனை செய்யப்படும் எண்ணெய் வகைகள் ரூ. 5 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, நேற்று முன்தினம் பாமாயில்(1 கிலோ) ரூ. 58 என்றிருந்தது ரூ. 60 ஆனது. சன் பிளவர் ஆயில் ரூ. 73லிருந்து ரூ. 75, கடலை எண்ணெய் ரூ. 90லிருந்து ரூ. 93, அக்மார்க் நல்லெண்ணெய் ரூ. 125லிருந்து ரூ. 130, சாதா நல்லெண்ணெய் ரூ. 85லிருந்து ரூ. 90, தேங்காய் எண்ணெய்(2ம் ரகம்) ரூ. 100லிருந்து ரூ. 105, டால்டா ரூ.68லிருந்து ரூ. 70க்கும் விற்கப்பட்டது.துணிமணிகள் விலை உயர்ந்ததுதமிழக அரசு தற்போது ஜவுளித்துறையில் 5% வரிவிதிப்பு அறிவித்துள்ளது. இதனால் ரெடிமேட் உள்ளிட்ட ஜவுளிகளின் விலை அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஜவுளி வியாபரிகள் கூறுகையில், ‘’இது எங்களை கவலையடைச் செய்துள்ளது. கருவிகள், நூல் விலை உள்ளிட்டவைகளால் உற்பத்தி செலவு மேலும் அதிகரிக்கும். இதனால் ஜவுளி கடைகளில் ஆடைகளின் விலையும் கணிசமாக உயரும்(ஒரு சதவீதம்). விற்பனையும் கணிசமாக குறையும். வாடிக்கையாளர்களும் சிரமப்படுவார்கள். இதேநிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டில் கைத்தறித் தொழில் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும்’’ என்று கூறினர்.விற்பனை நிறுத்தம்மொத்த வியாபாரி கமால் பாட்ஷா கூறுகையில், ‘‘புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே அமலில் இருக்கும் 12.5 சதவீத வாட் வரியின் படி எம்ஆர்பி ரேட் அச்சடிக்கப்பட்டு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஒரே நாளில் வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் ஸ்டாக் பொருட்களை மட்டும் அதே விலையில் விற்பனை செய்ய அரசுடன் இந்த நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்த காரணத்தால் தமிழகத்தில் விற்பனையை நிறுத்தியுள்ளது’’ என்றார்.மொபைல் ரூ. 500 கூடுது
தமிழக அரசு செல்போனுக்கு 4 சதவீதமாக இருந்த வாட் வரியை 14.5 சதவீதமாக உயர்த்தியதால் செல்போன் விலை ரூ. 500 வரையும், டி.வி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின் விலை ரூ. 200 வரையும் உயருகிறது.  நேற்று முன்தினம் வரை ரூ. 5ஆயிரம் வரை விற்பனையாகி வந்த செல்போன் ஒன்றில் விலை 14.5 சதவீதம் வாட் வரி காரணமாக நேற்று ரூ. 5,550க்கு விற்கப்பட்டது. ரூ. 2000க்கு விற்கப்பட்ட செல்போன் நேற்று  ரூ. 2,210 ஆனது. இதேபோன்று கம்ப்யூட்டர் விலையும் ரூ. 1000க்கும் மேல் உயருகிறது.டி.வி, எல்சிடி டி.வி ஆகிய வீட்டு உபயோகப்பொருட்களுக்கு 4 சதவீதமான இருந்த வாட் வரி நேற்று முதல் 14.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் நேற்று முன்தினம் ரூ. 20 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட பிரிட்ஜ் நேற்று ரூ. 20,200 ஆக உயர்ந்தது. ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் ரூ. 20 வாட் வரி அதிகரிக்கும். அதேபோன்று மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ஸ்டவ், அயன்பாக்ஸ், குக்கர், ஸ்டெப்லைசர் ஆகிய பொருட்கள் மீதான வாட் வரி 4 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயாந்துள்ளது.
பத்திரப்பதிவு கட்டணம் அதிகரிப்புஅசையா சொத்துக்களை பதிவு செய்ய தற்போது ஒரு லட்சத்துக்கு ரூ. 9 சதவீதம் கட்டணம் விதிக்கப்பட்டு வருகிறது. அதாவது 8 சதவீதம் ஸ்டாம்ப் பேப்பர் வாங்குவதற்கும், 1 சதவீதம் அரசுக்கு கட்டணமாகவும் செலுத்தப்பட்டு வந்தது. அதன்படி 10 லட்சம் ரூபாய்க்கு காலிமனை வாங்கியவர்கள், அந்த இடத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் வரை பத்திர பதிவு கட்டணமாக செலுத்தி வந்தனர். தற்போது, இந்த கட்டணம் உயரும் என்று அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. வரியை 1% கூட்டினாலே ரூ. 10 லட்சத்திற்கு கூடுதலாக ரூ. 10 ஆயிரம் வரை பதிவு கட்டணம் அதிகரிக்கும். எத்தனை சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அரசு அறிவிக்கவில்லை.பகோடா விலை ஏறுது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதையும், சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ளதையும் கருத்தில் கொண்டு ஓட்டல் நிர்வாகத்தினர் உணவு பொருட்கள் விலையை சற்று அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.  ஓட்டல் சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசி இதற்கான முடிவு அறிவிக்கப்படும்‘ என்று ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அனேகமாக வடை, பஜ்ஜி, சம்சா, பக்கோடா போன்றவற்றின் விலை அதிகரிக்கப்படலாம் என்று தெரிகிறது.

மண்ணில் புதைந்த ஆலயம்!!

சாத்தான்குளம் அருகே உள்ளது மணல் மாதா ஆலயம். 200 வருடங்களுக்கு முன்னால் மணலில் புதைந்து கிடந்த இந்த ஆலயத்தின் வரலாறு மிகவும் சுவ£ரஸ்யமானது. மான வீரவளநாடு என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதியை கி.பி. முதலாம் நூற்றாண்டில் கந்தப்பராஜா என்னும் பாண்டிய மன்னன் ஆண்டு வந்தான். அவன் குடும்பத்தில் உள்ளவர்களை பேய் பிடித்து ஆட்டியது. இதை ஏசுவின் சீடர் தோமையார் வந்து குணப்படுத்தினார். அதன் பின் அவரது ஆலோசனைப்படி இந்த இடத்தில் கந்தப்பராஜா கிறிஸ்தவ மதத்தை தழுவினார். தொடர்ந்து ஆலயம் எழுப்பப்பட்டது.

இந்த ஆலயத்துக்கு 1548ம் ஆண்டு வந்த சவேரியார், இறந்த சிறுவனை உயிர்ப்பித்தார். அதன் பின் வீண்பழி சுமத்தப்பட்டு அரசால் தண்டனை விதிக்கப்பட்ட சேசு மரியாள் என்னும் பெண் இட்ட சாபத்தால் இந்த ஊர் அழிந்தது. மணல் மூடி ஆலயமும் அழிந்து போனது. பின்னர் 1799ம் ஆண்டு இந்தப் பகுதியில் பால் கொண்டு சென்ற சிறுவனின் காலில் சிலுவை தட்டுப் பட, மண்ணில் புதைந்த ஆலயம் வெளியில் வந்தது. படத்தில் நீங்கள் பார்ப்பது 200 ஆண்டுகளுக்கு முன் வெளிப்பட்ட சிலுவை மற்றும் இப்போதுள்ள மணல் மாதா ஆலயம்.

ஜிசாட்-12 செயற்கை கோளுடன் இன்று பாய்கிறது பிஎஸ்எல்வி-சி17

ஸ்ரீஹரிகோட்டா : ஜிசாட்-12 தகவல் தொடர்பு செயற்கை கோளை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி-சி17 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது. நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஜிசாட்-12 என்ற செயற்கை கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கினர். 1410 கிலோ எடையுள்ள  இந்த செயற்கை கோளில் 12 இஎக்ஸ்டி-சி பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன. இந்த செயற்கை கோள் பி.எஸ்.எல்.வி-சி17 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை 4.48 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

நெல் வயல்களில் "பரம்பு' அடிக்கும் காளைகள் : நவீன யுகத்திலும் மாறாத தொழில் நுட்பம்

கம்பம் : எத்தனை நவீன கருவிகளும், கண்டுபிடிப்புகளும் வந்தாலும், நெல் வயலில், பரம்பு அடிப்பதற்கு காளை மாடுகள் பூட்டிய கருவி தான், இன்று வரை பயன்படுத்தப்படுகிறது. தேனி மாவட்டத்தில், கம்பம் பள்ளத்தாக்கில், அதிகளவில் நெல் சாகுபடி நடக்கிறது. விவசாயத்தில், இன்று பல்வேறு நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. களை எடுப்பதற்கும், நாற்று நடவு செய்வதற்கும், அறுவடைக்கும் கருவிகள் பயன்படுத்தப் படுகின்றன.
நெல் விவசாயத்தில், வயலில் உழவு முடிந்த பின், நாற்று நடுவதற்கு முன்பாக வயலை சமப்படுத்த, "பரம்பு' அடிப்பர். அதற்கு காளை மாடுகள் பூட்டி, பரம்பு அடிக்கின்றனர். டிராக்டர் மற்றும் அதற்குரிய கருவிகளில், இதை செய்ய முடியாது என, விவசாயிகள் கூறுகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், "கம்பம் பள்ளத்தாக்கில் வயல்கள் சிறிய அளவுகளில் உள்ளன. நவீன கருவிகளில் பரம்பு அடித்தால், சரியாக இருக்காது. காளை மாடுகள் பூட்டி பரம்பு அடித்தால் தான், திருப்தியாக இருக்கும்' என்றனர். விஞ்ஞானிகள், எத்தனை தான் கருவிகளை கண்டுபிடித்து கொடுத்தாலும், பாரம்பரிய முறைகளையும் விவசாயிகள் புழக்கத்தில் வைத்துள்ளனர் என்பதற்கு, இது ஒரு எடுத்துக்காட்டு.

பாபா ராம்தேவ்மீது கடத்தல் வழக்குப்பதிவு!

ஊழலுக்கு எதிராக 11 நாட்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய யோகா சாமியார் ராம்தேவ் டிரக்கர் மற்றும் ஓட்டுனரைக் கடத்தியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது நெருங்கிய உதவியாளர் பாலகிருஷ்ண ஆச்சாரி மற்றும் 4 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். விஸ்வகர்மா காவல்நிலையத்தில் சிட்டி நீதிமன்றப் பரிந்துரைப்படி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

டிரான்ஸ்போர்ட்உரிமையாளர் பஜ்ரங்சிங் என்பவர் அளித்துள்ள புகார் மனுவில் "எங்களின் ஆயில் டேங்கர் லாரி ஒன்று கடந்த ஜூன்மாதம் ஒரு ஹர்பல் கம்பெனிக்குக் கடுகு எண்ணெய் கொண்டு (அரியானாவில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் ஜபல்பூருக்கு) செல்வதற்காக வாடகை பேசி எடுத்து செல்லப்பட்டது.

லாரியை வாடகைக்கு எடுத்தவர்கள் தங்களை ராம்தேவின் ஆட்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். ஆனால் அந்தலாரி இன்னும் திரும்பவில்லை. இதனை ஒட்டி சென்ற ஓட்டுனர்ர் ஹனுமன் என்பவரும் இன்னும் குறித்த காலக்கெடுவுக்குள் ஊர் திரும்பவில்லை.போனில் தொடர்பு கொண்டால் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைக்கிறது..

எனவே ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள்மீது எனக்கு சந்தேகம் உள்ளது. உரிய நடவடிக்கை எடுத்து ஓட்டுனரையும்,வாகனத்தையும் மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று சிங் கூறியுள்ளார்.

இது தொடர்பாக காவல்துறையினர் எப்.ஐ.ஆர்., பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு விசாரணைக்குப் பின்னர் உண்மைநிலை தெரிய வரும் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெர்வித்தார்.

தமிழக அரசின் கடும் வரிவிதிப்பால் திடீர் பாதிப்பு : வாட்டுது வாட் படுத்தது பிசினஸ்!

சென்னை:  தமிழக அரசு வாட் வரியை உயர்த்தியதன் எதிரொலியாக செல்போன், டி.வி. மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை குறைந்து மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழக அரசு கடந்த 12ம்தேதி முதல் அதிரடியாக வாட் வரியை உயர்த்துவதாக அறிவித்தது. அதன்படி இதுவரை 4 சதவீத வாட் வரியாக இருந்த மருந்து, செங்கல், இரும்பு, வீட்டு உபயோக பொருட்கள், பாத்திரங்கள், அலுமினியம், மூங்கில், ஹெல்மெட் ஆகிய பொருட்களின் மீதான வரி 5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதேபோன்று 12.5 சதவீதமாக இருந்த உணவு பொருட்கள், வாஷிங் மெஷின், ஏ.சி., மின்விசிறி, ஐஸ்கிரீம், மர சாமான்கள், கிரானைட், மார்பிள், சிமென்ட், பசை பொருட்கள், சாக்லெட், அழக சாதன பொருட்கள், எலக்ட்ரிக் பொருள்கள், ஜெராக்ஸ் எந்திரம் ஆகியவை மீது வாட் வரி 14.5 சதவீதமாகவும், செல்போன், எல்சிடி டி.வி., ஐபோன், கம்ப்யூட்டர், புகையிலை பொருட்கள் மீதான வாட் வரி 4 சதவீதத்தில் இருந்து பல மடங்கு உயர்ந்து 14.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன்மூலம் தமிழக அரசுக்கு ரூ.4000 கோடி வருமானம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அரசுக்கு வேண்டுமானால் பலகோடி வருமானம் கிடைக்கலாம். ஆனால் இந்த சுமை முழுவதும் மக்கள் தலையில்தான் விழும் என்கிறார்கள் வீட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள். அரசு அறிவித்தபடி கடந்த 12ம் தேதி முதல் அனைத்து பொருட்கள் மீதான வரியும் உயர்த்தப்பட்டு விட்டது. அதிகப்பட்சமாக செல்போன், கம்ப்யூட்டர், எல்சிடி டி.வி. மீதான வாட் வரி 10.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரணமாக ரூ.5 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட செல்போன் தற்போது ரூ.5,550க்கு விற்கும் நிலைக்கு கடைக்காரர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக செல்போன் விலையும், எல்சிடி டி.வி. விலையும் மந்தமாக உள்ளதாக கடைக்காரர்கள் கூறுகிறார்கள்.

மொபைல் விற்பனை சரிவு இதுகுறித்து அண்ணாசாலையைச் சேர்ந்த பிரபல செல்போன் மொத்த விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் கூறும்போது, “இந்தியாவிலேயே அதிகளவில் செல்போன் விற்பனை செய்யும் மாநிலம் தமிழகம்தான். தமிழகத்தில் மட்டும் 5 கோடி செல்போன்கள் உள்ளது. மொத்த மக்கள் தொகையை காட்டிலும் (மக்கள் தொகை 7.25 கோடி) இது கொஞ்சம் குறைவுதான். பலர் செல்போன் விரும்பி வாங்குகிறார்கள் என்பதால் அரசு குறி வைத்து செல்போன் மீது இருந்த 4 சதவீத வாட் வரியை 14.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனால் செல்போன் விலை ஸி 200 முதல் ஸி 1,500 வரை அதிகரித்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு காரணமாக கடந்த சில நாட்களாக செல்போன் விற்பனை குறைந்துள்ளது“ என்றார்.

அதேபோன்று எல்சிடி டி.வி. மீதான விற்பனை வரியும் 10.5 சதவீதம் கூட்டியுள்ளதால் ஒரு டி.வி.யின் விலை ஸி 3 ஆயிரத்துக்கும் அதிகமாக விலை கூடியுள்ளது. இதனால் டி.வி. விற்பனையும் மந்தமாக உள்ளதாக வும், பிரிட்ஜ், வாஷின் மெஷின், ஏ.சி. உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் திடீர் விலை உயர்வால் வியாபாரிகள் பலகோடி பொருட்களை கொள்முதல் செய்து விட்டு, விற்க முடியாமல் திணறி வருகிறார்கள். எண்ணெய் வாங்குவோர் சரிவு தமிழகத்தில் சமையல் எண்ணெய் விற்பனையை பொறுத்தவரையில், ஆண்டுக்கு ரூ.500 கோடி வரை வரி விலக்கு இருந்தது. இதில் ஏராளமான வரி ஏய்ப்பு என்று சொல்லி, ஸி 500 கோடி வரையிலான விற்பனை வரம்பை ரூ.5 கோடியாக குறைத்து அரசு அறிவித்தது. இதன் மூலம் ஆண்டிற்கு ஸி 5 கோடிக்கு மேல் எண்ணெய் விற்பனை செய்பவர்கள் வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இதனால் விலை ரூ.5 வரை உயர்ந்துள்ளது. அதாவது, பாமாயில் எடைபோட்டு விற்பனை செய்வது ஒரு கிலோ ஸி 56லிருந்து ரூ.62க்கும், தேங்காய் எண்ணெய் ரூ.120லிருந்து 
ஸி 125க்கும், 2ம் ரகம் ஸி 100லிருந்து 105க்கும், அக்மார்க் நல்லெண்ணெய் ரூ.130லிருந்து ரூ.135க்கும், 2ம் ரகம் ரூ.85லிருந்து ரூ.90க்கும், கடலை எண்ணெய் ரூ.90லிருந்து ரூ.95க்கும் உயர்ந்தது. பாக்கெட்டில் விற்கப்படும் எண்ணெய்கள் ரூ.2 முதல் 3 வரை அதிகரித்தது. இதனால், நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் எண்ணெய் கொண்டு சமையல் செய்வதை கணிசமாக குறைக்க தொடங்கியுள்ளனர். பொருட்களை சுட்டு சாப்பிட்டு ஆதிக்காலத்திற்கே திரும்ப செல்ல வேண்டியது உள்ளதே என்று ஆதங்கப்பட்டு வருகின்றனர். 

இது குறித்து தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் சொரூபன் கூறியதாவது: எண்ணெய் விலை உயர்வினால் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. 1,000 வியாபாரிகள் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தனர். தற்போது, ரூ.5 கோடிக்கு மேல் எண்ணெய் விற்பனை செய்வோர் வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதனால், எண்ணெய் வியாபாரிகளின் எண்ணிக்கை 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது. எண்ணெய் வருமானத்தை கொண்டே அரசு தற்போது அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் செய்து முடித்து விடலாம். ‘திடீரென்று‘ விலை அதிகரித்ததால் கணக்கு வழக்குகளை சரிசெய்வது குழப்பமாக உள்ளது.

பத்த வைக்காமலே சுடும்

மொத்த வியாபாரி கமால் பாட்ஷா கூறுகையில்,‘‘கூடுதல் வருமானத்துக்காக தமிழக அரசு வரிகளை ஒரே நாளில் அமல்படுத்த உத்தரவிட்டது. இதனால் புகையிலை பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதை திடீரென நிறுத்தியது. இதனால் தமிழகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், அந்நிறுவனங்கள் அரசு விதித்த வரிகளை தாங்களே செலுத்த முடிவு செய்துள்ளது. பில்களில் வரிகளை காட்டாமல் ஒரே பில்லாக மொத்த வியாபாரிகளுக்கு வழங்கி வருகிறது. தமிழகத்தில் உயர்த்தப்பட்ட வரியால் அந்நிறுவனங்கள் நாடு முழுவதும் பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விலையை ஒட்டு மொத்தமாக உயர்த்த வாய்ப்புள்ளது‘‘ என்றார்.

பேன்ட், சட்டை, சேலைக்கு பட்ஜெட்டில் ‘துண்டு’ விழும் 

ஜவுளி துறையில் வரியை 5 சதவீதம் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதனால், நூல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக துணிகளின் விலையையும் 5 சதவீதம் கடைக்காரர்கள் உயர்த்திவிட்டனர். பேன்ட், சர்ட், சேலை, வேட்டி போன்ற துணிகளின் விலையும் உயர்ந்துள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பேன்ட், சட்டை, வேட்டி, சேலை, சுரிதார் என்று வாங்கும் போது மாத பட்ஜெட்டில் துண்டு விழும் என்பது உறுதி. இது குறித்து துணிக்கடை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: தமிழக அரசு விதித்துள்ள வாட் வரி தேவையில்லாத ஒன்று. இதனால், பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்கள் தான். தற்போது எங்கள் கடையில் துணியின் விலையை 5 சதவீதம் உயர்த்தி உள்ளோம். உதாரணத்திற்கு ஒரு சட்டையின் விலை ரூ.100 என்றால், அதை ஸி105க்கு விற்பனை செய்து வருகிறோம். படிக்காத பாமர மக்களுக்கு இந்த விலை உயர்வு குறித்து எதுவும் தெரியவில்லை. ஒரு சிலர் மட்டும் விலை உயர்வு குறித்து கேட்கின்றனர். இன்னும் ஓரிரு மாதங்களில் இதன் பாதிப்பு பெரும் அளவில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

‘வாட்’ என்றால்..

ஒரு பொருள் உற்பத்தியாகும்போது பல கட்டங்களில் (உதாரணமாக பருத்தியில் இருந்து சட்டையாக மாறுவது வரை) வரி விதிப்புக்கு உள்ளாகிறது. இதனால், பொருளின் உற்பத்தி விலை கூடுகிறது. நுகர்வோருக்கு அந்த பொருள் அதிக விலையில் விற்கப்படுகிறது. இந்த முறையால் நுகர்வோர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மதிப்பு கூட்டு வரி (வாட்) என்பதும் விற்பனை வரிதான். ஆனால், பல கட்டங்களில் ஒரு பொருள் கைமாறும்போது கூடுகின்ற விலையின் அடிப்படையில் வாட் விதிக்கப்படுகிறது. விற்பனையாளர் செலுத்திய வரிக்கான செலவு குறிப்பிட்ட பொருளின் விலையிலேயே அடங்கி இருக்கும். இந்த வரியை நுகர்வோரே ஏற்க வேண்டும். விற்பனையாளர், தான் செலுத்திய வரியை நுகர்வோர் தலையில் கட்டி விடுகிறார். எனவே, மதிப்பு கூட்டு வரியும் ஒரு மறைமுக வரிதான். இப்போது ஒவ்வொரு பொருளுக்கும் தமிழகத்தில் வாட் வரி கணிசமாக அதிகரிக்கப்பட்டு உள்ளதால் எல்லா தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பவருக்கு பத்து மடங்கு ஏற்றம்

அகில இந்திய நிலத்தரகர்கள் நலச்சங்க அகில இந்திய தலைவர் ஏ.ஹென்றி கூறியதாவது: தமிழக அரசின் சமீபத்திய அறிவிப்பால் பவர் பத்திரம் கட்டணம் ரூ.50லிருந்து பல மடங்கு, அதாவது, 200 மடங்கு அதிகரித்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குத்தகை பத்திரத்திற்கு ரூ.5000 லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல், குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு சொத்தை பவர் வழங்குவதற்கு இதுவரை பதிவு கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்பட்டது. 10 மடங்கு அதிகரிக்கப்பட்டு ரூ.1000மாக உயர்த்தப்பட்டுள்ளது. வெளிநபர்களுக்கு பவர் வழங்குவதற்கு இது வரை ரூ.1000 பதிவு கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வந்தது, ரூ.10 ஆயிரமாகவும், உரிமை ஆவணங்கள் வைப்பு உடன்படிக்கை ஆவணம் (டெபாசிட் ஆப் டைட்டில்ஸ்) பதிவு கட்டணம் ரூ.1000லிருந்து ஸி 5,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். அரசு இலவசம் இலவசம் என்று அறிவித்து பொதுமக்களை எதிர்க்க தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவில் முக்கிய அணைகளை தகர்க்கதிட்டம்: பயிற்சியில் பயங்கரவாதிகள் ; உளவுத்துறை திடுக்

புதுடில்லி: இந்தியாவில் வடமாநில பகுதியில் உள்ள முக்கிய அணைகளை வெடிகுண்டுகள் வைத்து தகர்த்து பெரும் சேதத்தை ஏற்படுத்த பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாஉத்வா பயங்கரவாத அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் சம்பந்தப்பட்ட மாநில போலீசார் எச்சரிக்கையாக இருக்குமாறும் இன்டலிஜென்ஸ் படையினர் அலர்ட் செய்தி அனுப்பியுள்ளனர்.
நமது உளவுபடை அதிகாரிகளக்கு கிடைத்த தகவல் விவரம் வருமாறு: இந்தியாவில் பஞ்சாப், அரியானா, மற்றும் இமாசல பிரதேசத்தில் <உள்ள அணைகளை தகர்க்க திட்டமிட்டுள்ளனர். வரும் மழைக்கால நேரத்தில் அணையில் நீர் பெருக்கி வைக்கப்பட்டிருக்கும் நேரத்தில் இந்த தாக்குதலை நடத்த முயற்சி மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் பஞ்சாப், அரியானா, சண்டிகார் மற்றும் டில்லி பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி முடியும். மேலும் இது தொடர்பான செய்தி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்த முடியும் என்றும் பயங்கரவாதிகள் மனதளவில் தயாராகி வருகின்றனர். இவர்கள் இதற்கென அணையில் சுவர் உயரம் அறிந்தும், மற்றும் தண்ணீருக்குள் நீச்சல் அடித்து செல்லும் விஷயத்தில் முழு அளவில் பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது. 

முக்கிய குறியாக பக்ரா நங்கல் அணை: இதில் பஞ்சாப்- இமாசல பிரதேச எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பக்ராநங்கல் அணையை தகர்ப்பது பயங்கரவாதிகளின் முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளனராம். காரணம் இந்தியாவின் சட்லஜ் நதிப்பகுதியில் உள்ள இந்த அணை இந்தியாவில் மிகப்பெரியது.இந்த அணை இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் ஜவஹர்லால் நேரு முயற்சியால் கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 9 ஆயிரத்து 300 மில்லியன் கியூபிக் தண்ணீரை சேமித்து வைக்க முடியும். இதற்கு சேதம் ஏற்படுத்தும் நேரத்தில் பெரும் அளவில் நாசத்தை ஏற்படுத்த முடியும் மற்றும் விவசாய பணிகளை சீரழிக்க முடியும் என்றும் பயங்கரவாதிகள் கருதியுள்ளனர். 

இதனால் மேற்கூறிய 3 மாநில போலீசார் உயர்ந்தபட்ச பாதுகாப்பில் அலர்ட்டாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

இந்தியா- பாகிஸ்தான் நீர் பகிர்வு தொடர்பாக லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாத இந்நேரத்தில் அணை தகர்ப்பு திட்டம் , பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசுக்கு கூடுதல் சுமையை தந்திருக்கிறது.

ஆ.ராசாவிடம் சிபிஐ மீண்டும் விசாரணை!

2ஜி முறைகேடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மற்றும் இரண்டு நபர்களிடம் மீண்டும் விசாரணை செய்ய டில்லி நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி வழங்கியுள்ளது.

ஆ. ராசா, தொலைத் தொடர்பு முன்னாள் செயலாளர் சித்தர்த பெருவா மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றின் அதிகாரி கெளதம் தோஷி ஆகியோரிடம் சிபிஐ மீண்டும் விசாரணை செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி அனுமதி அளித்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டுள்ளோரிடம் திங்கள் கிழமையன்று விசாரணை செய்ய சிபிஐக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்று நீதிபதி தமது தீர்ப்பில் கூறியுள்ளார்.

சிபிஐ மீண்டும் எதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது என்பதை எங்களுக்கு அறியத் தர வேண்டும் என்ற தோஷியின் வழக்கறிஞரின் வேண்டுகோளை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

முடி சாயும் ஆனால் கொடி சாயாது!!!

01.08.05 அன்று சவூதி மன்னர் ஃபஹத் மரணம் அடைந்தார். அவர் இறந்ததும் உலகச் சந்தையில் எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. இப்படி உலகச் சந்தையை உலுக்கி எடுத்த அந்த சவூதி மன்னரின் மரணத்தை மக்கள் உன்னிப்பாகக் கவனித்தனர்.

உலகெங்கிலும் உள்ள நாட்டுத் தலைவர்கள் இறந்ததும் அரசாங்க விடுமுறை, அரைக் கம்பத்தில் கொடியைப் பறக்க விடுதல், அரசு மரியாதையுடன் கூடிய அடக்கம் போன்ற வழமைகள் எதுவுமின்றி சாதாரணமாக பொது மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றதைப் பார்த்து உலக மக்கள் ஆச்சரியத்திலும் அதிசயத்திலும் உறைந்து போயினர். அவர்களுக்கு இந்த மரணம் ஏதோ ஒரு செய்தியை உரைத்தது, உணர்த்தியது.

அது உணர்த்திய செய்தி என்ன என்பதை 03.08.05 அன்று வெளியான இந்து நாளேடு தெளிவாகவே போட்டு உடைத்தது. சவூதி அரசாங்கம் பின்பற்றுகின்ற வஹ்ஹாபியிஸம் தான் இதற்குக் காரணம் என்று விளக்கம் தெரிவித்திருந்தது.

வஹ்ஹாபியிஸம் என்ற தனிக் கொள்கை ஏதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை அதன் தூய வடிவில் நிலை பெறச் செய்தவர் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அவர்கள். அதன் பின்னர் தூய இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு வஹ்ஹாபியிஸம் என்ற பெயர் வழங்கப்படுகின்றது. எனவே தூய இஸ்லாமிய அடிப்படையில் நடைபெற்ற சவூதி மன்னரின் அடக்கம் உலக மக்களின் கவனத்தைக் கவர்ந்தது.


இப்போது இந்தியாவுக்கு வருவோம்

12.04.2006 அன்று கன்னட நடிகர் ராஜ்குமார் என்பவர் மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் அமளி துமளியானது. கொளுத்தப் பட்டது அதிகமில்லை. வெறும் 100 பஸ்கள் தான். பறி போன உயிர்கள் ஒரு போலீஸ்காரர் உட்பட ஒன்பது பேர் தான். சென்னையி­ருந்து செல்கின்ற பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டது. போக்குவரத்து ஸ்தம்பித்தது. கலவரத் தீ மூண்டது.

இந்தியாவைக் கலக்கிய கன்னட நடிகர் ராஜ்குமாரின் மரணத்தையும், உலகையே கலக்கிய சவூதி மன்னர் ஃபஹதின் மரணத்தையும் ஒப்பீடு செய்யும் நோக்கில் இந்தக் கட்டுரை தன் பயணத்தைத் தொடர்கின்றது.

ராஜ்குமார் மட்டுமல்ல! எம்.ஜி.ஆர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என யாராக இருந்தாலும் இந்தியாவின் நிலை இது தான். தலைவர்களின் மரணத்தையொட்டி நடக்கும் கொடுமைகளை, கோரத் தாண்டவத்தை கொஞ்சம் பார்த்து விட்டு வருவோம்.

பாதி வழியில் பரிதவிக்கும் பயணிகள்

யாரடா அந்தக் கசுமாலம்? கடையைத் திறந்து வைத்திருக்கிறான். தலைவர் இறந்துட்டாரு! என்னடா துணிச்சல்? என்று கும்பல் தலைவன் சொல்­ முடிக்கவில்லை. அதற்குள் கடையில் உள்ள சோடா பாட்டில்கள் சாலையில் நாலா பக்கங்களிலும் தெறித்து சிதறின. மூட்டையில் உள்ள மைதா மாவு கருஞ்சாலையை வெண் சாலையாக ஆக்கியது. சுருட்டியவர்கள் சுருட்டிக் கொண்டனர்.

இபல இலட்சக் கணக்கில் செலவு செய்து பளிங்கு போன்று போடப்பட்டிருந்த கண்ணாடிகளை, இறந்து போன தங்கள் தலைவரின் பெயர் சொல்லும் விதத்தில் தொண்டர்கள் சுக்கு நூறாக்கினர். இட்­ விற்க வந்த ஒரு பாட்டாளி இட்­, சட்னி, சாம்பார் சகிதத்தை சாலைக்குப் படைத்து விட்டுப் போனான். அன்று அவனது பிழைப்பில் மண் விழுந்து விட்டது.

இவ்வாறு வானளாவ நின்ற வணிக வளாகங்கள் முதல் சாதாரண மளிகைக் கடைகள் வரை அனைத்து வணிகத் தலங்களும் பெருத்த சேதத்துக்கும், பாதிப்புக்கும் உள்ளாகி உடனே கதவுகள் இழுத்து மூடப்பட்டன. மின்னல் வேகத்தில் பல கோடி சொத்துக்கள் பாழாயின. கொஞ்ச நேரத்தில் கடைத் தெருக்கள் வெறிச்சோடிப் போய் மறைந்து போன தலைவருக்காக மவுன விரதம் பூண்டன.

சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்கள் காட்டுப் பாதைகளில் நிறுத்தப்பட்டன. அதனுள் மறுநாள் தலைப் பிரசவத்திற்காகத் தாயகம் செல்ல விரைந்த ஒரு பெண்ணின் சோக முனகல், பிரசவ வ­, துடிப்பு சக பயணிகளின் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றது. நெஞ்சு வ­க்கிறது என்று துடிக்கும் இன்னொரு பயணியின் கதறல், அலறல் அங்கிருந்த பயணிகளின் காதைத் துளைத்தது.

இலட்சக் கணக்கில் செலவழித்து விசாவைப் பெற்று மறுநாள் காலை விமானத்தைப் பிடிப்பதற்காகத் தலைநகர் நோக்கிப் புறப்படுகின்றான். அந்த ரெயிலும் நடுக் காட்டில் தலைவர் மரணத்திற்காக நின்று வருத்தம் தெரிவித்துக் கொண்டிருந்தது.

கொண்டு வந்த உணவு, குடிநீர் தீர்ந்து போய் கூட்டமாக வந்த பயணிகள் கும்பி எரிந்தனர். குழந்தைகள் கூப்பாடு போட்டு அழுதனர். ஆம்! தலைவரின் மரணத்திற்காக!

ரெயில்களின் கதி இதுவென்றால் பேருந்துகளின் கதி என்ன? பல பேருந்துகள் தலைவரின் மரணத்திற்கு சிம்பா­க்காக இரங்கல் தெரிவித்து, டிப்போவை நோக்கி, கண்ணாடி இல்லாமல் அழுது கொண்டே ஓடின. ஆம்! காரணம், தொண்டர்கள் தங்கள் தலைவரின் மரணத்திற்காகக் கல் மழைகளால் அர்ச்சனை செய்து கண்ணாடிகளைக் கா­யாக்கி விட்டனர்.

பற்றி எரியும் தேசப் பற்று

சிதை மூட்டப்படும் தலைவரின் உடலை நினைவில் கொள்ளும் விதமாக பயணிகளுடன் ஒரு சில பேருந்துகள் தீயில் பற்றி எரிந்தன. தொண்டர்கள் அல்ல! குண்டர்களின் பற்றி எரியும் தேசப் பற்றை இந்தச் சுவாலைகள் நன்றாகவே படம் பிடித்துக் காட்டின.

தலைவரின் இந்த இரங்கலைத் தெரிவிக்கும் விதமாக முராரி ராகத்தில் ஒரு சோகக் கவிதையை கவிஞர் ஒருவர் கரகரத்த குர­ல், இரக்கத்துடன் வாசிக்கும் ஒ­லி நாடாக்கள் ஓலமிட்டன.

கருவறுக்கப்படும் சிறுபான்மையினர்

இதற்கிடையே மறைந்த தலைவர் சாதாரணமாக இறக்கவில்லை, சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரால் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தி பரவியது தான் தாமதம். சிறுபான்மைச் சமுதாயத்தினர் பல்லாயிரக் கணக்கானோர் பழி வாங்கப் பட்டனர். அந்தப் பழி வாங்கும் படலத்தில் பச்சிளம் குழந்தைகள், பல் இழந்த முதியவர்கள், பலவீனமான பெண்கள் யாரும் விட்டு வைக்கப் படவில்லை.

தலைவரது பூத உடல் தீ மூட்டப் படுவதற்கு முன்னால் பல்லாயிரக் கணக்கான உடல்கள் உயிருடன் தீ மூட்டப்பட்டன. பெரிய ஆலமரம் கீழே சாயும் போது, புல் பூண்டுகளுக்கு அழிவு ஏற்படத் தான் செய்யும் என்று அந்தப் படுகொலைகளுக்கு நியாயம் கற்பிக்கப்பட்டது.

தொலைக்காட்சிகள் தொடர்ந்து அழத் துவங்கின. கேளிக்கைகளை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள், தலைவரின் சடலத்தைக் காட்டி வெறும் வய­னை வாசிப்பது கண்டு பருவ வயதினர் வேதனை அடைந்தனர். தொலைக்காட்சியில் தலைவரின் சவத்தைக் காட்டி வாசிக்கப்பட்ட கருநாடக இசையைக் கேட்டவர்கள் கருநாகமாயினர். சனியனை எப்போது தூக்கிக் கொண்டு நெருப்பில் போடப் போகின்றனர்? என்று ஏங்கியவாறு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

அரசு அலுவலகங்கள், வணிகத் தலங்கள், நீதிமன்றங்கள், பள்ளிக் கூடங்கள் மூடப்பட்டன. தலைவரின் மறைவை நல்ல சகுனமாக எண்ணிய மாணவர்கள் மட்டையைத் தூக்கிக் கொண்டு கிரிக்கெட் விளையாடச் சென்றனர். தேசியக் கொடி மற்றும் கட்சிக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறந்தன.

சந்தனத்தில் சவப் பெட்டி

மலர்களுக்கு ஊடே குளிர் சாதனக் கண்ணாடிக் கூண்டுக்குள் தலைவரின் உடல் குளிர்ந்து கொண்டிருந்தது. அதன் மீது தேசியக் கொடி போர்த்தப் பட்டிருந்தது. அருகில் உருகி வழியும் மெழுகுவர்த்திகள், உருக்குலைந்து எரிந்து கருகும் ஊது பத்திகள்.

பன்னாட்டுத் தலைவர்கள் மாறி மாறி வந்து பூத உட­ன் பாத அடியில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்து வணக்கம் செலுத்தும் காட்சி தொலைக்காட்சியில் நேர்முகமாகக் காட்டப்பட்டுக் கொண்டிருந்தது. இதற்காகவும் மக்கள் வரிப்பணம் பல கோடி ரூபாய் அளவுக்குப் பாழாக்கப் பட்டது.

மற்றவர்களுக்கு சாதாரண சவப் பெட்டி! இவர் தலைவரல்லவா? அதனால் பல்லாயிரக்கணக்கில் செலவு செய்து சந்தனப்பெட்டியில் இவரது உடல் வைக்கப்படுகின்றது.

அறிவிக்கப்பட்ட நேரம் ஆனதும், இராணுவம் உடலைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து மயானத்தை நோக்கி நகர்ந்தது. ஒரு மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தை பொடி நடையாக ஐந்து மணி நேரம் கடந்து சென்றது.

இறந்தவருக்கு ஏக்கர் நிலம்

வாழ்கின்ற பாட்டாளி ஏழை ஒண்டுவதற்கும் ஒதுங்குவதற்கும் பத்துக்குப் பத்து நிலத்தை வழங்க முன் வராத கல் மனம் படைத்த அரசு, தலைவரின் உடல் தகனத்திற்காக மக்கள் சொத்தான ஒரு ஏக்கர் நிலத்தைத் தாரை வார்க்கின்றது. இப்படித் தாரை வார்க்கப்பட்ட அந்நிலத்தில் இராணுவம் குண்டு மாரிப் பொழிகின்றது. சந்தனப் பெட்டி சவக்குழியில் இறக்கப்படுகின்றது, அல்லது எரிக்கப்படுகின்றது. அடக்கி முடித்ததும் தொலைக்காட்சி தன் ஒளிபரப்பை நிறுத்திக் கொள்கின்றது.

பளிங்கினால் ஒரு மயானம்

இதன் பின்னர், தலைவரின் பூத உடல் அடக்கப்பட்ட அந்த இடம் நினைவுச் சின்னமாக்கப்படுகின்றது.

குடிக்கக் கஞ்சியும், உடுத்த உடையும், இருக்க வீடும் இல்லாமல் தவிக்கும் பாட்டாளி வர்க்கம் சாலைகளில் குடியிருக்கும் இந்த நாட்டில் ஒரு ஏக்கர் நிலர் தலைவருக்காகத் தாரை வார்க்கப் பட்டது மட்டுமில்லாமல் பல கோடி ரூபாய் செலவில் பளிங்குக் கற்கள் பதிக்கப்படுகின்றது.

சாகாமல் செத்து அன்றாடம் பிழைப்பு நடத்தும் சாமான்யனின் வீட்டில் இவர்கள் விளக்கேற்ற முன்வர மாட்டார்கள். ஆனால் செத்துப் போன அந்தத் தலைவரின் சமாதியில் அணையா விளக்கு ஏற்றுவார்கள். இந்தச் சமாதியைப் பராமரிப்பதற்கு மாதந் தோறும் பல இலட்ச ரூபாய்கள் செலவு செய்வார்கள்.

ஊரார் வீட்டுக் காசை இப்படி ஊதாரித்தனமாக, உயிரற்ற ஒரு சடலம் அடங்கிய சமாதிக்காக தண்ணீர் போன்று அள்ளிக் கொட்டப்படுகின்றது.

இந்தக் கட்சியின் தலைவர் தலையைப் போட்ட பின் அந்தக் கட்சி தேர்த­ல் தோற்று விட்டால் அடுத்த கட்சி ஆட்சிக்கு வருகின்றது. அப்போது அந்தத் தலைவரின் மரணத்தையொட்டி நடந்த கலவரத்திற்கு விசாரணைக் கமிஷன் போடப்பட்டு அதற்கும் கோடிக் கணக்கில் வரிப் பணம் வாரி இறைக்கப்படுகின்றது.

நீத்தோர் குடும்பத்திற்கு நிவாரணம்

விசாரணைக் கமிஷன் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் போது, பாதிக்கப்பட்ட சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்தவர்களின் ஆத்திரத்தைத் தணிப்பதற்காக கோடிக்கணக்கில் நிவாரணத் தொகை வழங்கப் படுகின்றது. இதுவும் மக்களின் வரிப் பணத்தி­ருந்து தான்.

ஒரு தலைவரின் மரணத்தை ஒட்டி பாழாக்கப்படும் அரசாங்கப் பணம், சேதப்படுத்தப்படும் அரசாங்க மற்றும் தனி நபர் சொத்துக்கள், நிறுத்தப்படும் போக்குவரத்துக்கள், பாதிக்கப்படும் வியாபாரப் பெருமக்கள், பறிக்கப்படும் மனித உயிர்கள் என்று பாதிப்பு மற்றும் இழப்புக்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. இவை நம் நாட்டின் தலைவிதிகள்.

முண்டம் மூட்டுகின்ற மோதல் தீ

சரி! தலைவர் இறந்து விட்டார். கலவரம் ஓய்ந்து விட்டது. இத்துடன் முடிந்தது சங்கதியும் சமாச்சாரமும் என்றில்லை. அமரர் ஆன அவர், ஐம்பொன்னில் அல்லது வெண்கலத்தில் அல்லது கருங்கல்­ல் சிலையாகி நகரத்தின் முச்சந்தியில் அரசு அலுவலக வாசல்களில் எழுந்து நிற்பார்.

இருக்கும் போது இரு சாதியினரை மோத விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவர், இறந்த பின்னும் சிலையாக எழுந்து நின்று கலவரத் தீயை மூட்டுகின்றார். அந்தச் சிலையின் தலையை இவரது எதிர் ஜாதியினர் எகிறி விட்டதால், முண்டமாக நின்று கொண்டு மோதலை மூட்டி விடுகின்றார். அதனால் ஏற்படுகின்றது ஜாதிக் கலவரம்.

சிறையிடப்பட்ட சிலைகள்

ஏற்கனவே மக்களின் வியர்வைத் துளிகளில் விளைந்த வரிப் பணம் பல இலட்சக் கணக்கில் இந்தச் சிலை வைப்பதற்கும், வார்ப்பதற்கும் வாரி இறைக்கப்பட்டதை நினைத்து வயிறு எரிந்து கொண்டிருக்கையில் இப்போது பல இலட்சக் கணக்கான ரூபாய் செலவு செய்து சிலைகளுக்கு சிறைக் கம்பிகள் போட்டு காவல் வைப்பார்கள். அதனால் சிலைகளின் தலைகள் இனி உடைக்கப் படாமல் இருப்பதற்காக இப்படி ஒரு காவல்! உயிருடன் இருக்கும் போது கம்பி எண்ணியது போன்று இப்போதும் தலைவர் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கின்றார். மக்கள் வரிப் பணத்தில் இதற்காகவும் ஒரு செலவு!

இரு சாதியினருக்கு இடையில் ஏற்பட்ட வகுப்பு மோத­ல் பல உயிர்கள் ப­! உறுப்புகள் ஊனமாகி, முடமாகிப் போனவர்கள் பல ஆயிரம்! எரிக்கப்பட்ட பேருந்துகள், எரிந்து சாம்பலான வணிகக் கூடங்களின் மதிப்பு பல கோடிகளைத் தாண்டும். இவை தான் இந்த நாட்டின் தலை விதிகள்.

பகுத்தறிவுக் கழகங்களா? பைத்தியக்கார விடுதிகளா?

இது யார் அப்பன் வீட்டுப் பணம்? இதற்கு எல்லாம் காரணம் பச்சைப் பைத்தியக்காரத்தனம் தான். வடபுலத்து நாத்திகர் நேரு மாமா, தென்னகத்து ஈ.வெ.ராமசாமி நாயக்கர் போன்ற பகுத்தறிவுப் பறவைகளுக்கும், அவர்கள் பொரித்து விட்டுப் போன வீரமணிக் குஞ்சுகளுக்கும் இந்தச் சிலை வடிப்பு என்பது ஒரு பைத்தியக் காரத்தனம் என்பது புரியாமல் போய் விட்டது. இது பற்றி அவர்களின் புத்தி மழுங்கிப் போய் விட்டது.

இது பற்றித் தெளிவான ஞானம் இருந்திருக்குமானால் இந்தத் தலைவர்களின் பிறந்த, இறந்த நாட்களில், தாங்கள் பதவி ஏற்கும் நாட்களில் போய் இந்தச் சிலைகளுக்கு மாலை போடும் மடமைத்தனத்தை, மவ்ட்டீகத்தனத்தைச் செய்திருக்க மாட்டார்கள்; தினந்தோறும் பறவைகள் நின்று கொண்டு எச்சம் போட்டு, அபிஷேகம் நடத்திக் கொண்டிருக்கும் இந்தச் சிலைகளுக்கு மரியாதை கொடுக்க முன் வந்திருக்கமாட்டார்கள்.

எனவே இவர்கள் கண்டிருப்பது பகுத்தறிவுக் கழகங்கள் அல்ல! பைத்தியக்கார விடுதிகள் தான் என்பது நிரூபணமாகின்றது.

ஆனால் பகுத்தறிவு என்ற பெயரில், ஒரு பதினைந்து நூற்றாண்டு காலமாக எந்தக் கொம்பனாலும் உடைக்க முடியாத, ஓர் அற்புத அறிவியல் வேதத்தைத் தன்னகத்தே கொண்ட இஸ்லாத்தை இந்த அறிவு ஜீவிகள் இன்று கிண்டலடிக்கின்றார்கள்; கே­லி செய்கின்றார்கள்.

சவூதி மன்னர் மரணம்

இந்த வேதம் போட்ட இந்த அஸ்திவாரத்தில் அமைந்த சவூதி அரசாங்கத்தின் சக்கரவர்த்தி தான் ஃபஹத் பின் அப்துல் அஜீஸ்! இவர் ஒன்றும் சாதாரண நடிகர் ராஜ்குமாரைப் போன்றவர் அல்ல! உலக நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்கின்ற ஒரு நாட்டின் மன்னர். சவூதி தான் உலகத்திலேயே மிகப் பெரிய அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு.

இந்த அளவுக்குச் செல்வமும் செல்வாக்கும் பெற்ற மன்னர் இறந்ததும் அந்த நாட்டில் அரசு விடுமுறை இல்லை. அந்நாட்டுக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவும் இல்லை. இதற்குக் காரணம் அந்த நாட்டுக் கொடியில் ஏற்றப்பட்டிருக்கும், எழுதப்பட்டிருக்கும் ஏகத்துவக் கொள்கையின் வார்த்தைகள்.

''லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் லி வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்'' என்று அந்தக் கொடியில் பொறித்திருப்பது அந்த நாடு கொண்டிருக்கும் ஏகத்துவக் கொள்கையின் பிரகடனமாகும். அதனால் முடி (மன்னர்) சாய்ந்த பின்னும் அந்த நாட்டின் கொடி சாயவில்லை.

குடியும் சாகவில்லை!

இஸ்லாம் தனி நபர் வழிபாட்டைத் தரைமட்டமாக்கி விட்டது. ஒருவர் இறந்து விட்டால் அவரை உரிய முறையில் அடக்கம் செய்வது கடமையாகும். இதைத் தான் அந்நாட்டு மக்கள் செய்தனர். விமானப் போக்குவரத்து நிற்கவில்லை. பஸ், கார், ரெயில் போக்குவரத்து பாதிக்கவில்லை. அரசு அலுவலகங்களுக்கு மூடு விழா நடத்தப்படவில்லை. அந்நாட்டு முடி சாய்ந்ததால் எந்த ஒரு குடியும் சாகவில்லை. எந்த ஒரு குடியும் எதுவும் கிடைக்காமல் நோகக் கூட இல்லை. ஒரு மன்னர் இறந்து விட்டார் என்று கூடத் தெரியவில்லை. காரணம் நமது நாட்டைப் போன்று எந்தப் பேருந்தும் அங்கு பற்றி எரியவில்லை.

இந்த அளவுக்கு அங்கு இயல்பு வாழ்க்கை கடுகளவுக்கும் பாதிக்காமல் அப்படி ஒரு அமைதி! இந்த அமைதிக்குக் காரணம் இஸ்லாம்! இஸ்லாம் என்றால் அதன் மறு பெயர் அமைதி தானே! இதைத் தான் சவூதி மன்னர் இறந்த போது உலகம் கண்டது. மேலும் நம் நாட்டைப் போல் தலைவர் இறந்ததும் நேரடி ஒளிபரப்பு என்று காசைப் பாழாக்கவில்லை. மன்னருக்காக ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலத்தை அர்ப்பணிக்கவில்லை.

ரியாதில் அல் அவ்து என்ற பொது மயானத்தில் ஆறடி நிலத்தில் தான் ஆடம்பரமின்றி அடக்கம் செய்யப் பட்டார்.

மன்னரின் அடக்கத்தலத்தில் ஒரு கல் (அடையாளத்துக்காக) வைக்கப் பட்டது. அதில் மன்னர் என்ற பெயர் கூட பொறிக்கப்படவில்லை. ஆண்டியும் இங்கே! அரசனும் இங்கே! என்ற கவிஞன் கூற்றுப்படி சமரசம் உலாவும் இடமாக சவூதி மன்னரின் சமாதி பொது அடக்கத்தலத்தில் அமைந்தது. இவ்வாறு அடக்கம் செய்யப் பட்டதால் அவரது உடல் அநாதைப் பிணம் என்று யாரும் கருதி விடக் கூடாது.

பிரான்ஸ் அதிபர் ஜாக்ஸ் சிராக், சிரியாவின் தலைவர் பஷரத் அல்அஸத், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாய் போன்ற பன்னாட்டுத் தலைவர்கள் வருகையளித்திருந்தனர்.

தரை மட்டமான தனி நபர் வழிபாடு

இப்படிப்பட்ட ஒரு பணக்கார நாட்டு மன்னரின் அடக்கத்தலம் ஆர்ப்பாட்டம் இல்லாத எளிய வகையில் அமைந்தது. பல கோடிக்கணக்கான பணச் செலவில் பளிங்கால் அமையவில்லை. அரசுப் பணம் சாம்பலாகும் வகையில் அணையா விளக்கு எரியவில்லை. இதற்குக் காரணம், தனி நபர் வழிபாட்டை இஸ்லாம் தகர்த்தெறிந்தது தான்.

முஸ்­லிம்களுக்கு அவர்களின் உயிர், உடமை, மனைவி, மக்கள், பெற்றோர் அனைத்தையும் விட மேலானவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

அவர்கள், தாம் இறந்த பிறகு தமது அடக்கத்தலத்தை மரியாதை செலுத்தும் வணக்கத்தலமாக, வாசஸ்தலமாக ஆக்கி விடக் கூடாது என்று மிகக் கடுமையாக தமது வாழ்நாளில் எச்சரித்து இருக்கின்றார்கள். (பார்க்க புகாரி 1390)

அந்தத் தூதரின் வேத வரிகள் அடிப்படையில், அந்த சத்தியத் தூதருக்கே சமாதி எழுப்பவில்லை. அதன் அடிப்படையில் தான் சரியான முஸ்­ம்கள் தங்கள் சமுதாயத்தில் கண்ணிய மிக்கவர்கள் எவருக்கும் சமாதிகள் எழுப்புவதில்லை. இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களின் நேரடிக் கட்டளை இதோ!

''தரை மட்டத்திற்கு மேலுள்ள எந்த ஒரு கப்ரையும் தரை மட்டமாக்காமல் விட்டு விடாதே!'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்: முஸ்­லிம் 1609

இறந்தவருக்குத் தேவை ஆறடி தான்

பொதுவாக கடந்த காலம் தொட்டு இன்று வரை இறந்து விட்ட பெரியார்களுக்காக நினைவாலயங்கள் எழுப்புவது மக்களின் இரத்தத்தில் ஊறிப் போன உணர்வாகி விட்டது. அதைத் தான் நபி (ஸல்) அவர்கள் இங்கு உடைத்தெறிகின்றார்கள்.

பத்தடி நிலம் வாழ்வதற்கு இல்லாத போது, இறந்தவருக்கு ஏக்கர் நிலத்தை அர்ப்பணம் செய்யும் அரக்க குணத்தை தகர்த்தெறிகின்றார்கள்.

சரியான சிந்தனைத் தெளிவோட்டம், பகுத்தறிவுக் கண்ணோட்டம் இதைத் தான் சரி காணும். அதனால் தான் இந்து நாளேட்டின் சவூதி மன்னர் மரணச் செய்தியில்...

அரசு மரியாதை இல்லை! காரணம் அது இஸ்லாத்தில் இல்லை! கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவில்லை! காரணம் அதில் இஸ்லாமிய கொள்கைப் பிரகடனம் பொறிக்கப் பட்டுள்ளது. மன்னரின் பூத உடல் பொது மயானத்தில் அடக்கப்பட்டது....

என்பன போன்ற சிறப்புக்களை சிலாகித்துக் கூறி நிற்கின்றது.

மக்கள் நலம் நாடும் அரசு, இஸ்லாம் கூறும் இந்த வழி காட்டுதலைத் தான் தனது குடி மக்களிடம் அமல் படுத்த வேண்டும். அப்போது தான் நடிகராக இருந்தாலும், நாடாளும் தலைவராக இருந்தாலும் அவர் மரணிக்கும் போது எந்தக் குடிமகனும் பாதிப்புக்கு உள்ளாக மாட்டான்.

அந்த வகையில் சவூதி அரசாங்கம் மன்னரின் மரண விஷயத்தில் நடந்து கொண்ட விதம் இஸ்லாத்தின் நெறிமுறைகளைத் தூக்கிப் பிடிப்பதாக அமைகின்றது.

நமது நாட்டிலுள்ள முஸ்லி­ம்களிலும் ஆ­லிம்கள், பெரிய மனிதர்கள், கொடை வள்ளல்கள் இறந்து விட்டால் வானளாவிய மனாராக்கள் எழுப்பும் இந்தக் கலாச்சாரத்திற்கும் மரண அடியைக் கொடுக்கின்றது.

ஆக மொத்தத்தில் சவூதி மன்னரின் சாதாரண அடக்கம் மாற்று மதத்தவருக்கு மட்டுமல்ல! முஸ்­ம்களுக்கும் தகுந்த பாடத்தையும் படிப்பினையையும் தந்திருக்கின்றது என்றால் மிகையல்ல!

மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு?

மும்பையில் மூன்று இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் இது வரை 19 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மும்பை குண்டு வெடிப்பு குறித்து தீவிரவாத தடுப்பு படை மற்றும் மும்பை காவல் துறை புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக் விஜய்சிங் மும்பை தொடர் குண்டு வெடிப்பில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு தொடர்பு இருக்கக் கூடும் என்பதையும்  மறுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு குறித்த ஆதாரங்கள் தம்மிடம் இல்லை என்றும்  தீவிரவாத நடவடிக்கையில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் திக் விஜய்சிங்.

புலனாய்வு அமைப்புகள் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ் க்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஹேமந்த் கார்கரே கொல்லப் படுவதற்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன் மாலேகான் குண்டுவெடிப்பை விசாரணை செய்து பெண் ஹிந்து பயங்கரவாத சாமியாரை கைது செய்ததால் தம் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தம்மிடம் தெரிவித்தார் என்றும் அது குறித்த தொலைபேசி அழைப்பு வந்த தகவல்களை முன்னர் தெரிவித்து இருந்தார் திக் விஜய்சிங்.

விருப்ப மொழியில் குர்ஆன்

Thursday, July 14, 2011

நோன்பு கஞ்சி - ஒரு நபருக்கு 150 கிராம் அரிசி வழங்க முதல்வர் உத்தரவு!

ரம்ஜான் நோன்பு கடைப்பிடிப்பவர்களுக்கு கஞ்சி தயாரிப்பதற்காக ஒரு நபருக்க நாளொன்றுக்க 150 கிராம் அரிசி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ரம்ஜான் நோன்பு கடைப்பிடிப்பவர்களுக்கு கஞ்சி தயாரிப்பதற்காக நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 150 கிராம் வீதம் அரிசி மொத்த அனுமதி பெற்ற பள்ளிவாசல்களுக்கு வழங்க, அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு ரம்ஜான் நோன்பு கடைபிடிப்பவர்களுக்கு அனுமதி பெற்ற பள்ளிவாசல்களில் கஞ்சி தயாரிப்பதற்கு தேவையான அரிசிக்கு உரிய மொத்த அனுமதியை புதுப்பித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நேரடியாக பள்ளிவாசல்களுக்கு வழங்குவார்கள். ரம்ஜான் மாத நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக 3,801 டன்கள் அரிசியை தமிழ் நாட்டிலுள்ள அனைத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளிலும் 29.7.2011 அன்றே தயார் நிலையில் வைத்திருக்கவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

எனவே தமிழகத்தில் அனுமதி பெற்று ஏன்கனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வரும் பள்ளி வாசல்கள் மொத்த அனுமதியை புதுப்பித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிலிருந்து அரிசியை பெற்றும் பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பயங்கரவாத ஒழிப்பில் அரசின் தவறான கொள்கைகளே காரணம்; ஆறுதல் கூறிய அத்வானி பேட்டி

மும்பை: மும்பையில் நடந்த சதிகாரச்செயலில் சிக்கி பலியானவர்களின் உறவினர்கள் ள் மற்றும் காயமுற்றவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், குண்டுவெடிப்பு நடந்தது குறித்தும் நேரில் கேட்டறியவும் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி புறப்பட்டு சென்றார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நபர்களை சந்தித்து நடந்த விவரம் ‌கேட்டறிந்தார்.

கொள்கை மாற்றாவிட்டால் பயங்கரவாதம் நீடிக்கும் அத்வானி : அத்வானி ஜாவேரி பஜார், ஓபேரா ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு பின்னர் நிருபர்களிடம் அத்வானி பேசுகையில்; மும்பை பயங்கரவாதிகளின் முதன்மைக்குறியாக இருக்கிறது. நுண்ணறிவு பிரிவினரின் கையாலாகத்தனத்தை இது காட்டுகிறது. இந்த தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தான் தொடர்பு உள்ளது. இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பாகிஸ்தானில்தான் செயல்படுகிறது. இந்த அமைப்பிற்கு பாக்., உதவி செய்கிறது. மும்பையில் தொடர்ந்து வரும் இந்த தாக்குதலுக்கு , பயங்கரவாத ஒழிப்பில் அரசின் தவறான கொள்கைகளே காரணம். இந்த கொள்கையை நீடிக்கும் பட்சத்தில் நாம் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது. மாற்றம் கொண்டு வரவேண்டும்.

இதற்கிடையில் நாட்டில் எழுந்துள்ள நிலை குறித்து பாதுகாப்பு துறை , உளவுத்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு படை உயர் செயலர்கள் ஆலோசிக்கும் கூட்டமும் இன்று நடந்தது.



அம்மோனியம் நைட்ரேட் : ப.சிதம்பரம் சொல்கிறார்:நேற்று ( புதன்கிழமை ) நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சதி என்றும், இந்த சம்பவத்தில் சக்திவாய்ந்த அம்மோனியம் ‌நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளது. என்றும், பல கோணங்களில் துப்பறியும் நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் இன்றைய பேட்டியின்போது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் குண்டுவெடிப்பு தொடர்பாக முன்கூட்டியே எந்த தகவலும் கிடைக்கவில்லை இந்த சதிச்செயல் ரிமோட்குண்டு எதுவும் பயன்படுத்தப்படவி‌ல்லை, விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என்றார்.

மும்பையில், மக்கள் நடமாட்டம் மிகுந்த மூன்று இடங்களில், நேற்று மாலை அடுத்தடுத்து பயங்கர குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில், 21 பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இந்திய முகாஜுதீன் என்ற பயங்கரவாத அமைப்பே காரணம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மும்பை போலீசார் கூறியதாவது: மும்பையின் தென்பகுதியில், புகழ்பெற்ற மும்பா தேவி கோவில் அருகேயுள்ள ஜாவேரி பஜாரில், நேற்று மாலையில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் பலர் காயமடைந்தனர். இந்த ஜாவேரி பஜார் பகுதி, தங்க நகை மற்றும் வைர நகைக் கடைகள் நிறைந்த பகுதி. மாலை நேரம் என்பதால், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதைத் தொடர்ந்து, மத்திய மும்பை தாதர் பகுதியில், அனுமன் கோவில் அருகே, கபுதார் கானா என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாக்சி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இந்த இடம், தாதர் ரயில் நிலையம் அருகேயுள்ளது. மூன்றாவதாக சார்னி ரோட்டில், ஓபேரா ஹவுஸ் அருகே மற்றொரு குண்டு வெடித்தது. இந்த குண்டும் காரில் வைக்கப்பட்டிருந்ததாகவே கூறப்படுகிறது. அடுத்தடுத்து நடந்த இந்த மூன்று குண்டுவெடிப்பு சம்பவங்களில்,21 பேர் பலியானதாகவும், 100 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்று குண்டு வெடிப்புகளும், மாலை 6.45 மணியில் இருந்து 7 மணிக்குள் நிகழ்ந்தன.

சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும், மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் விரைந்து சென்று, குண்டு வெடிப்பு நடந்த இடங்களைப் பார்வையிட்டனர்; தடயங்களை சேகரித்தனர். எப்படிப்பட்ட தன்மை கொண்ட குண்டு வெடித்துள்ளது என்பதை முதலில் கண்டறிய முடியாவிட்டாலும், பின்னர் தெரிய வரும்.இவ்வாறு போலீசார் கூறினர்.

மும்பையில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பை அடுத்து, மும்பை நகரத்தின் மற்ற பகுதிகளில் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள நகரங்களிலும், தலைநகர் டில்லியிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டனர். குண்டு வெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவானை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், நடந்த விவரங்களை கேட்டறிந்தார். அத்துடன், தேசிய பாதுகாப்புப் படையினர், தடயவியல் நிபுணர்கள் அடங்கிய குழுவும் எல்லைப் பாதுகாப்புப் படை விமானம் ஒன்றில், டில்லியில் இருந்து மும்பை புறப்பட்டுச் சென்றது. இந்த குண்டு வெடிப்பில் சக்தி வாய்ந்த வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், இந்தியன் முஜாகிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புகள் குண்டு வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்றும், மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.


கடந்த 2008ம் ஆண்டில், மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 160க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அந்த சம்பவத்தால் ஏற்பட்ட சோகத்தின் சுவடுகள் இன்னும் மறையாத நிலையில், மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். குண்டு வெடிப்பு தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் கூறுகையில், ""முதலில் கிடைத்த தகவலின்படி, மூன்று இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் 56 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள செயின்ட் ஜார்ஜ், நாயர் மற்றும் கே.இ.எம். மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு எப்படிப்பட்டது என்பதை உறுதி செய்ய, பயங்கரவாத தடுப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்,'' என்றார். இந்த மூன்று குண்டு வெடிப்புகளிலும் 10 பேர் பலியானதாக, உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பையில் நடந்த குண்டு வெடிப்பை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், டில்லியில் உயர் அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, அவர்களுடன் விவாதித்தார்.

முக்கிய குண்டுவெடிப்புகள் : மும்பையில் பயங்கரவாதிகளின் தாக்குதல் 20 ஆண்டுகளாக தொடர்கிறது. இங்கு நடந்த முக்கிய குண்டுவெடிப்பு சம்பவங்கள்.
1993 மார்ச் 12: மும்பையில் 13 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 259 பேர் பலி, 713 பேர் காயம்.
1998 பிப். 27: மும்பையின் விகார் என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் பலி. 
2002 டிச. 2: மேற்கு மும்பையில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலி, 31 பேர் காயம்.
2003 மார்ச் 13: மும்பையின் முலுந்த் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி, 65 பேர் காயம். 
ஆக. 25: "கேட்வே ஆப் இந்தியா' மற்றும் ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 46 பேர் பலி, 160 பேர் காயம். 
2006 ஜூலை 11: மும்பையின் புறநகர் ரயில்களில் ஏழு இடங்களில் நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் 181 பேர் பலி, 890 பேர் காயமடைந்தனர். 
2008 நவ. 26: தாஜ் ஓட்டல், நரிமன் ஹவுஸ், சத்ரபதி ரயில்வே ஸ்டேஷன், காமா மருத்துமனை உள்ளிட்ட இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் பலியாகினர். 
2011 ஜூலை 13: ஓபரா ஹவுஸ், தாதர் மற்றும் ஜவேரி பஜார் ஆகிய மூன்று இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 20 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. 2008 பயங்கரவாத தாக்குதலில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி கசாப்பின் பிறந்தநாளை முன்னிட்டு இத்தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

மும்பை குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கை : மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர். மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக நேற்று மாலை முதல் தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிப்பாட்டுத் தலங்கள், முக்கிய பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல, மாவட்டந்தோறும் எஸ்.பி.,க்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். ஆம்புலன்ஸ் வசதி, வெடிகுண்டு நிபுணர்கள் தயார் நிலையில் இருப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளின் ஒருங்கிணைந்த செயல்: சிதம்பரம் : ""மும்பை குண்டு வெடிப்பு சம்பவம், பயங்கரவாதிகளின் ஒருங்கிணைந்த செயலாக உள்ளது,'' என உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தையொட்டி நேற்றிரவு, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையில் டில்லியில் உளவுத்துறை அதிகாரிகள், உள்துறை செயலர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட உயர்மட்டக் கூட்டம் நடந்தது. ஒன்றரை மணி நேரம் நடந்த கூட்டத்திற்கு பின், அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: 6.45 மணிக்கு முதல் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இந்த செயல், பயங்கரவாதிகளின் ஒருங்கிணைந்த செயலாக இருக்கும் என கருதுகிறேன். மும்பையில் ஏற்கனவே தேசிய பாதுகாப்பு படை உள்ளது. தற்போது அவர்கள் பாதுகாப்பு கருதி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக, டில்லி மற்றும் ஐதராபாத்தில் இருந்து விமானங்கள் மூலம் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மூன்று இடங்களை தவிர, மும்பையில் வேறு எங்கும் குண்டு வெடிப்பு நடந்ததாக தகவல் இல்லை. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரிட்டன் அதிபர், பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் யுசுப் ராஸா கிலானி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் டெக்மினாஜான்ஜூவா வெளியிட்டுள்ள செய்தியில், மும்பை‌யில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு பாகிஸ்தான் மக்கள் மற்றும்‌ அதிபர் , பிரதமர் ஆகியோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர் என்றார்