அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, December 24, 2009

Jokes

மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க?
கணவன்: எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான்!!
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- -----

மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க?
கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு

------------ --------- --------- --------- --------- --------- --------- --------- -----

மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?
கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது...
நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்...

------------ --------- --------- --------- --------- --------- --------- --------- -----

மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்...எனக்கு மாச எவ்வளவு
சம்பளம் கொடுப்பீங்க?
கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்... நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும்
உனக்குத்தானே...!
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- -----

மனைவி: என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு,
நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்ன சொல்லிட்டேன். அதை நினைச்சே அவரு இத்தனை வருஷமா
தண்ணியடிக்கிறாரு.

கணவன்: அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா
கொண்டாடிட்டிருக்கானேன்னு தான் ஆச்சர்யமா இருக்கு.
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- -----

மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா... என்ன பண்ணுவீங்க?
கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்.

------------ --------- --------- --------- --------- --------- --------- --------- -----

கணவன் மனைவிக்கு கார் கதவை திறந்து கொடுத்தால் அதற்கு மூன்று காரணங்களே இருக்க முடியும்.

1. புது மனைவியாக இருக்கும்
2. புது காராக இருக்கும்
3. அந்த பெண் மனைவியாக இருக்க முடியாது.
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- ------

டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்... இந்தாங்க தூக்க மாத்திரை
மனைவி: இதை எத்தனை தடவை கொடுக்கனும் அவருக்கு
டாக்டர்: இது அவருக்கு இல்லை...உங்களுக்கு
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- ------

புயல் மழையில் ஒருவன் பிஸ்ஸா வாங்க கடைக்கு செல்கிறான்

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...
வந்தவர்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பிஸ்ஸா வாங்க அனுப்புவாங்க...!??
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- ------

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்:

கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும்
வாங்கிக்கேட்ககூடாது...
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...?

மழைக்காலம்.....

இது மழைக்காலம்
நீ எங்கோ நனைகின்றாய்
நான் இங்கே நனைகின்றேன்
என்றாலும்;
நம் இதயங்கள் மட்டும் இங்கும் அங்குமாய்
மழையோடு மழையாக
சேர்ந்தே நனைகின்றன!

---------சிந்தனை சிறகினிலே--------------

என் வீட்டில் நான் எதிர் வீட்டில் நீ

மழையின் கம்பிகளுக்கிடையில்

மானசீகமாய் பார்வை

பரிமாற்றம் நமக்குள்

------------கவிமதி------------

இது மழைக்காலம்
உன் நினைவு என்னும் சாரலில்
நனைந்தவனாய் நான்.....

------ஜன்னத் மைந்தன்------

துபாயில் நான்…

இருப்பை எல்லம் விட்டுவிட்டு
விருப்பை மட்டும் மூட்டை கட்டி
மறுப்பை சொல்ல வழியில்லாமல்
பொறுப்பை ஏற்று புறப்பட்டேன் நான்…

அன்னை மண்ணில்
வேரறுபட்டதும்,
அன்னிய மண்ணில்- நான்
வேர்ப்பட்டதும்,
விமானம் ஏற‌
தீர்மானம் செய்ததால்…

அன்று அரும்பாக இருக்கையிலே
ஆகாய பார்வையிலே
அலைபாய்ந்த ஆசையிலே
அழகாக தோன்றிய‌
ஆகாய ஊர்தியும்,
அரங்கேறி போகையிலே
ஆனந்த்தம் இல்லாத‌
அனுபவம் ஆனது.
அதில் அலங்காரம் செய்துதான்
ஆகாரம் வந்தது,
ஆசைபட்டு தீர்த்திடாமல்
அசை போட்டு தீர்த்துவிட்டேன்…

இறங்கும் நேரம் வந்து விட‍- அன்று
இருக்கை இருந்து பார்த்தபோது- இங்கு
இயற்கை என்று ஒன்றும் இல்லை…

மணல் நகரின் அனல் காட்சி
இங்கு மக்கள் அல்ல மன்னர் ஆட்சி…

அன்று நிவார‌ண‌ம் தேடி வந்த‌ ந‌க‌ர‌ம்
இன்று நிரந்த‌ர‌ம் ஆகிப்போன‌ ந‌க‌ர‌ம்,

நாள் ‍ விடிந்தாலும் முடிந்தாலும்
ஒரே போல‌ இருக்கும்,
அட‌ அறைக்குள்ளே சிறைவைத்தால்
வேறென்ன‌ இருக்கும்…

உற‌வோடு உற‌வாட‌
தொலைபேசி என‌க்கு,
அதில் போன‌ காசுக்கு
இங்கேது க‌ண‌க்கு…

இங்கே ம‌னைவியோடு உற‌வாடி
பிள்ளை பெற‌முடியாம‌ல்,
பில்லை பெற்ற‌வ‌ர் ஆயிர‌ம்…

இள‌மையும் வேலைக்கு
இரையாகி போச்சு,
கால‌மும் காசுக்கு
க‌ரியாகி போச்சு,
த‌லையெல்லாம் அத‌ற்குள்ளே
ந‌ரையாகி போச்சு,
காசாவ‌து மீந்த‌தா
செல‌வாகி போச்சு…

வ‌ருமான‌ம் வ‌ருமுன்னே
செல‌வு வ‌ந்து சேர்ந்திடும்,
வெறுமாக‌ ஊர் சென்றால்
உற‌வு வ‌ந்து சேருமா?

காசுக் க‌ண‌க்குக‌ள்
க‌வ‌லை த‌ருகிற‌து,
க‌ட‌ந்த‌ கால‌ம்தான்
க‌ண்ணில் வ‌ருகிற‌து…

இனி இஷ்ட்ட‌ப்ப‌ட்டாலும்,
க‌ஷ்ட்ட‌ப்ப‌ட்டாலும்,
ந‌ஷ்ட்ட‌ப்ப‌ட்ட‌து திரும்பாது…

எந்நாடு சென்றாலும்
என் நாடு ஆகாது,
சொர்க‌மே த‌ந்தாலும் ‍ ம‌ன‌தில்
தாய் நாடு சாகாது…

--முஹம்மது நியாஸ்--

குழந்தை அழுது கொண்டிருக்கிறது

[child-tears.jpg]எல்லோரும் கலைந்துவிட்ட
மைதானத்தில்
குழந்தை
அழுது கொண்டிருக்கிறது

தேம்பலுக்கான காரணம் அதனிடமில்லை
விசும்பலுக்கான பொருளும் இல்லை
என்றாலும்
அழுது கொண்டிருக்கிறது

அது
கருணையை எதிர்பார்க்கவில்லை
நண்பர்களை விரும்பவில்லை
ரொட்டித் துண்டின் பசியாற்றலை நினைக்கவில்லை
ஆனால்
அழுது கொண்டிருக்கிறது

குழந்தையின் கண்ணீர் துக்கரமானது
மட்டுமில்லை
பரிசுத்தமானதும்.

குழந்தையின் துக்கம் கசியச்செய்வது
மட்டுமில்லை
தனிமையானதும்.

அவை
பதில்களற்ற வினாக்கள்
மட்டுமில்லை
அவிழாத புதிர்களும்.

சிறு மழை
இந்த
அழுகையை நிறுத்தலாம்
ஒரு
குருவி கவனத்தை திசை திருப்பலாம்
மீறி
அழுது கொண்டிருக்கிறது

கைவிடப்பட்ட மைதானத்தில்
அக்குழந்தையின்
உதிராத
கண்ணீர்த்துளியில்
யாரும் கலையாத
விளையாட்டு
ஒன்றை உருவாக்கும்
அம்மாவுக்கு
தெரிந்திருக்கிறது
அந்த
அழுகையை நிறுத்த.

--பேசலாம்-வா.மணிகண்டன் --

பிகாரில் ரயில் என்ஜின் ​மோதி 5 பேர் சாவு

மோத்திஹரி ​(பிகார்),​​ டிச.22:​ பிகாரில் ஜீப் மீது ரயில் என்ஜின் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.​ இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் என்ஜினுக்கு தீ வைத்ததோடு,​​ தண்டவாளங்களையும் தகர்த்தனர்.

​ பிகார் மாநிலத்தின் கிழக்கு செம்பரன் மாவட்டத்தில் சீதள்பூர் என்ற பகுதியில் ஆள்இல்லாத ரயில்வே லெவல் கிராஸிங் உள்ளது.​ இங்கு செவ்வாய்க்கிழமை ஒரு ஜீப் கடக்க முயன்றது.​ அப்போது அவ்வழியாக வந்த ரயில் என்ஜின் எதிர்பாராதவிதமாக மோதியது.

​ சுஹாயுலி-ரக்ஸல் ரயில் நிலையங்களுக்கு இடையே காலை 7.30 மணிக்கு நடைபெற்ற இச்சம்பவத்தில் ஜீப்பில் பயணம் செய்த 5 பேர் பலியானார்கள்.​ 2 பேர் படுகாயம் அடைந்தனர்.​ இதையடுத்து ரயில் என்ஜின் டிரைவர் தப்பியோடிவிட்டார்.

​ இதுகுறித்து தகவலறிந்து அப்பகுதியில் கூடிய கிராம மக்கள் ரயில் என்ஜின் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்,​​ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கக்கோரியும் மறியலில் ஈடுபட்டனர்.

​ பின்னர் ஆத்திரமடைந்த அவர்கள் ரயில் என்ஜினுக்கு தீ வைத்ததோடு,​​ தண்டவாளங்களையும் தகர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.​ இதனால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.

​ தகவலறிந்ததும் ரயில்வே உயரதிகாரிகள் சம்பவ இடம் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.​ ​ ​

​ இவ்விபத்தில் காயமடைந்த இருவர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.​ அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பக்கிங்ஹாம் அரண்மனை மூடப்படுகிறது.

ங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனை இடியும் நிலையில் இருப்பதால், அதை கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மூடுவதற்கு ராணி எலிசபெத் திட்டமிட்டு இருக்கிறார்.

லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் அரச குடும்பத்தினர் தங்கி இருக்கிறார்கள். பொதுவாக கிறிஸ்துமஸ் பண்டிகை உள்ளிட்ட நாட்களில் இந்த அரண்மனை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக திறக்கப்படும். இந்த ஆண்டு இந்த அரண்மனை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு அனுமதிப்பது இல்லை என்றும், அரண்மனையை மூடிவிடுவது என்றும் ராணி எலிசபெத் திட்டமிட்டு இருக்கிறார்.[2009.jpg]

அரண்மனை கட்டிடம் இடியும் நிலையில் உள்ளதால் இந்த நடவடிக்கையை அவர் எடுக்க இருக்கிறார்.

சமீப காலமாக சுவர்களில் பதிக்கப்பட்டு உள்ள கற்கள் விழுந்து வருகின்றன. இப்படி ஒரு முறை கற்கள் விழுந்ததில் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர் ஒருவர் லேசாக காயம் அடைந்தார். இதே போல இளவரசி ஆன்னி பயணம் செய்த கார், அரண்மனையின் போர்ட்டிகோவில் வந்து நின்றபோது கட்டிடத்தின் கற்கள் விழுந்தன. இதில் இளவரசி மயிரிழையில் தப்பினார்.

அரண்மனையின் தரையில் கீறல்கள் விழுந்து உள்ளன. இதனால் அரண்மனை ஊழியர்கள் நடப்பதற்கு கூட இயலாமல் அவதிப்படுகிறார்கள்.[Buckingham-Palace-ballroom.jpg]

இதனால் ராணி எலிசபெத் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அரண்மனையை மூடிவிடுவது என்று முடிவு எடுத்து இருக்கிறார். அரண்மனையை அடுத்த ஆண்டு பழுது பார்ப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு 310 கோடி ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகையை ஒதுக்கும்படி அரசாங்கத்தை அரண்மனை அதிகாரிகள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

எம்.எஸ்.ஆபீஸ் 2010 தொகுப்பு 15 நாட்களில் 10 லட்சம் டவுண்லோட்!

மைக்ரோசாப்ட் நிறுவனம் எம்.எஸ். ஆபீஸ் 2010 தொகுப்பின் சோதனைத் தொகுப்பினைத் தன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இதனை வெளியிட்ட 15 நாட்களில் 10 லட்சம் பேர் டவுண்லோட் செய்து பயன்படுத்தத் தொடங்கி உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது தனக்கு பெருமைக்குரிய விஷயமாக மைக்ரோசாப்ட் கருதுகிறது. வரும் ஜூன் மாதம் இது பொது மக்கள் பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வரும்.

ஆறு வகைகளில் (Starter, Home and Student, Home and Business, standard, Professional and Professional Plus) இது விற்பனை செய்யப்படும். இதில் ஒரு வகை வேர்ட் மற்றும் எக்ஸெல் தொகுப்புகள் அடங்கியதாகவும், அடிப்படை பயன்பாட்டி னைக் கொண்டதாகவும் கொண்டு இலவசமாகத் தரப்படும். இதில் விளம்பரங்களும் இருக்கும். வர இருக்கும் ஆபீஸ் தொகுப்பு என்ன விலையில் இருக்கும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. உங்களுக்கும் இந்த சோதனைத் தொகுப்பினை டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்க ஆசையாக இருந்தால், http://www.microsoft.com/office/2010/en/default.aspx என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.