அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, December 29, 2008

உடன் பிறப்பு....கவிதை

உடன் பிறப்பு

தாயின் கருவறையில்
சேய்மையாய் பிறந்த உறவு

உதிரம் ஒன்றானாலும்
வாழ்க்கையில்
உதிரக் கூடாத உறவுகள்
சகோதரன் சகோதரி…

ஒன்றாய் பிறந்து
ஒன்றாய் வளர்ந்து
ஒன்றாய் வாழ்வதில்
சிலர்
ஒற்றுமை இழப்பதேன்…?

கருத்துக் கலப்பில்
கரையேராமல்
குருத்துவம் இழக்கும்
இவர்களின்
குருதி உறவுகள்…

அவசர வாழ்க்கைக்கு
ஆசைகள் அதிகம்
அதனால்
அனைத்து தேவைகளுக்கும்
ஆசிரியராவது சுயநலம்…

விட்டுக்கொடுப்பதற்கு
பொருள் இருந்தாலும்
உறவை வெட்டுவதற்கு
பலர்
பொருளாகிறார்கள்…

நீயா…? நானா…?
சுயநலக் களத்தில்
சூனியனர்களாகும்
ஒருதாய் வயிற்று பிள்ளைகள்…

கூடப்பிறந்தவர்களோடு
கூட்டாக வாழாதபோது
கூட்டாளிகளுடன் கூடுவதில்
குணம் நிறக்குமா…?
பக்கத்து வீட்டுக்காரனை
மன்னித்து விடும் மனம்
பாசக்காரனுக்கு அது கொடுப்பது
மரணதண்டனை…

பாசமும் அன்பும்
மதிப்புத் தெரியாதவர்களுக்கு
மத்தியில்
மரணமாகிக் கொண்டிருக்கிறது…

இது
தாய்பாலின் கலப்படமா…?
தாரம் தந்த பாடமா..?

யார் வகுப்பு நடத்தினாலும்
அங்கு
பாசம் குருவானால்
வேசக்கரு களைந்துவிடும்…

உறவில் உறைந்தவர்கள்
பலரின்
உள்ளங்களில் வாழ்கிறார்கள்…

உறவைத் துறந்தவர்கள்
தங்களின்
உள்ளத்தை தொலைக்கிறார்கள்…

தான் என்ற தலைக்கணம்
தரையிறங்கினால்
நாம் என்ற ஒற்றுமை
தலை சிறக்கும்…!

1 comment:

Anonymous said...

மிக அருமையான பதிவு