கோக் நிறுவனத்து எப்டிஏ விட்ட டோஸ்!
நியூயார்க்: டயட் கோக் பிளஸ் குளிர்பானத்தில் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் இருப்பதாக விளம்பரப்பட்டுள்ளதை அமெரிக்காவின் எப்டிஏ கடுமையாக எதிர்த்துள்ளது.
இதுபோன்ற விளம்பரங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோக் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புட் அண்ட் டிரக் அட்மினிஸ்ட்ரேஷன் (எப்டிஏ) இதுகுறித்து அனுப்பியுள்ள எச்சரிக்கை கடிதத்தில், கோக் நிறுவனம் பொய்யான தகவல்களைத் தந்து மக்களை ஏமாற்றுவதாகவும், டயட் கோக் டின்களின் மேல் அவர்கள் குறிப்பிட்டுள்ளபடி எந்த கூடுதல் சத்தும் கிடையாது என்றும் கூறியுள்ளது.
மேலும் வழக்கமான உணவுப் பொருட்களில் காணப்படும் ஊட்டச்சத்தை விட 10 சதவிகிதம் கூடுதல் ஊட்டச்சத்து இருந்தால் மட்டுமே பிளஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தலாம் என்றும், இதுபோன்ற குளிர்பானங்களில் கூடுதல் ஊட்டச்சத்துகள் சேர்ப்பது ஆரோக்கியமானதல்ல என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடிதம் கடந்த 10-ம் தேதி அனுப்பப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், டயட் கோக் பிளஸ் பாட்டில் மீதான லேபிளை மாற்ற வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது. இன்றோடு அந்த 15 நாள் கெடு முடிவுக்கு வருகிறது.

No comments:
Post a Comment