மாலேகான்: கோட்சேவின் தம்பி மகளிடம் ஏடிஎஸ் விசாரணை
புனே: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக அபினவ் பாரத் அமைப்பின் தலைவியும், மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவின் தம்பி மகளுமான ஹிமானி சாவர்க்கரிடம், மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.
தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரேவின் மரணத்திற்குப் பின்னர் மீண்டும் மாலேகான் வழக்கை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.
மாலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்திய அபினவ் பாரத் அமைப்பின் தலைவியான ஹிமானி சாவர்க்கரிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் சுமார் 3 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்த அமைப்பின் தலைவராக சவர்க்கர் நியமிக்கப்பட்டார். புனேவில் உள்ள தீவிரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு வரவழைத்து சாவர்க்கரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் தேவைப்பட்டால் மீண்டும் கூப்பிடுவோம் என்ற நிபந்தனையுடன் அவர் அனுப்பப்பட்டார்.

இந்த வழக்கில் ஏற்கனவே பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினென்ட் கர்னல் புரோஹித், முன்னாள் ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் மற்றும் சுவாமி தயானந்த் பாண்டே உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவருக்கும் அபினவ் பாரத் அமைப்புடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவேதான் ஹிமானி சாவர்க்கரை அழைத்து தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
மாலேகான் குண்டுவெடிப்பில் கைதாகியுள்ள அனைவரின் வக்கீல் செலவுகளுக்கான நிதியை சேகரிக்கும் முயற்சியி்ல் தற்போது ஹிமானி தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோட்சேவின் தம்பி மகள்:
ஹிமானி சவர்க்கர் வேறு யாருமல்ல, மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சேவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்து மகாசபாவின் நிறுவனரான சாவர்க்கரின் (வீர சாவர்க்கர்) உறவினரைத்தான் இவர் திருமணம் செய்துள்ளார்.
ஹிமானியிடம் நடந்த விசாரணையின்போது அவரது அமைப்பின் நோக்கம், அந்த அமைப்பின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது, தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும், இங்கிலாந்து காலத்து கல்வி அமைப்பில் மாற்றம் கொண்டு வருவதற்காகவும் தங்களது அமைப்பு பாடுபட்டு வருவதாக ஹிமானி தெரிவித்ததாக தெரிகிறது.
மேலும், மாலேகான் குண்டுவெடி்பு வழக்கில் தனக்கோ அல்லது அதில் கைதாகியுள்ளவர்களுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்றும் ஹினிமா கூறியுள்ளார். தனது அமைப்புக்கு வன்முறையின் மீது நம்பிக்கை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார
No comments:
Post a Comment