அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, December 31, 2008

தலித் மக்கள் கோவிலுக்குள் செல்ல போலீஸ் தடை

தலித் மக்கள் கோவிலுக்குள் செல்ல போலீஸ் தடை
செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 30, 2008, 14:13 [IST]

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன் கனிக்கோட்டை அருகில் உள்ள கல்கேரி கிராமத்தில் தலித் மக்கள் கோவிலுக்கு சென்றபோது காவல்துறையால் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன் கனிக்கோட்டை அருகில் உள்ளது கல்கேரி என்ற கிராமம். இங்கு கரகம்மன் மற்றும் ஆஞ்சனேயர் கோவில்கள் உள்ளன.

இந்த கோவில்களை தலித் மக்கள் உட்பட அனைத்து கிராம மக்களும் பொருளுதவி செய்து கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த கோவிலுக்குள் தலித் மக்கள் சென்று வழிபட சிலர் தடை செய்து வருவதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில் தலித் மக்களை ஒதுக்கி வைத்துவிட்டு கோவில் திருவிழா நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனை எதிர்த்து தாசில்தாரிடம் தலித் மக்கள் சார்பில் முறையிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்திய அரசு உயர் அதிகாரிகள் தலித் மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபடுவதற்கு எழுத்து மூலமாகவும் உடன்பாடு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று 500க்கும் மேற்பட்ட தலித் மக்கள் கோவிலுக்கு சென்றபோது அவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு அந்த பகுதியில் உள்ள தலித் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், கோவிலுக்குள் நுழைய திடீர் போராட்டம் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து மனித உரிமை ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தலித் மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுகிறது.

இதனால் இந்த பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
[ Post Comments ]
பதிவு செய்தவர்: சாம் பதிவு செய்தது: 30 Dec 2008 10:15 pm

எங்கேடா அந்த ராமகோபாலன். ஆளையே காணோம். கருணாநிதி விஷயம்னா உடனே குதிச்சி எழுந்து வருவான். அவனுக சம்பந்தபட்ட விஷயம்னா சத்தமே இருக்காது.

No comments: