அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, December 24, 2008

vatti

யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், "நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே" என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்;. ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது. ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள். ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (al quran 2:275)

அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்;. இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (alquran2:276)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.(alquran2:278)

வட்டி விகிதத்தை அடியோடு குறைத்தது அமெரிக்கா!
புதன்கிழமை, டிசம்பர் 17, 2008, 14:11 [IST]
வாஷிங்டன்: வட்டி விகிதத்தை அடியோடு குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது அமெரிக்க நிதித்துறை.

பெருமந்தச் சூழலில் தவிக்கும் தனது பொருளாதாரத்தை எப்படியாவது சீராக்கிவிடும் முயற்சியில் இறங்கியுள்ளது அமெரிக்கா.

அதன் ஒரு கட்டமாக, வங்கி வட்டி விகிதங்களை அடியோடு குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுவரை 1 சதவிகிதமாக இருந்த வட்டி விகிதத்தை 0 முதல் 0.25ஆகக் குறைத்துவிட்டது. பல வகைக் கடன்களுக்கு இனி வட்டியே கிடையாது. அடுத்த ஆண்டு இறுதி வரை இதே நிலைதான் நீடிக்கும் என்றும் நிதித்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.



அதேபோல, நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்பு முழுமையாக அரசின் வசம் இருந்தாக வேண்டிய அவசியத்தை உணர்ந்திருப்பதாகவும் நிதித்துறை அறிவித்துள்ளது.

இனி அனைத்து பணவியல் காரணிகளையும் ஒருங்கிணைத்து, பொருளாதாரத்தை மேம்படுத்துவதுதான், அமெரிக்காவின் இன்றைய நெருக்கடியைத் தீர்க்கும் என்றும் நிதித்துறை கூறியுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்க பங்குச் சந்தையில் மிகவும் சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது. டோவ் ஜோன்ஸில் இன்று மட்டும் 4.2 சதவிகிதம் உயர்வு ஏற்பட்டுள்ளது.

புதிய சிக்கல்:

ஆனால், என்னதான் வட்டி விகிதக் குறைப்பை அமல்படுத்தினாலும் கூட அடுத்த ஆண்டு இறுதி வரை பொருளாதார மந்த்த்திலிருந்து மீளும் வாய்ப்பே இல்லை என்றும், இன்னும் நிலைமை மோசமாவதைத் தடுக்க முடியாது என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, பொராதாரத்தில் அரசின் பிடிமானம் மேலும் அதிகரிக்க வழிசெய்யும் முயற்சியில் புதிய அதிபர் ஒபாமா இறங்க வேண்டும் என்றும் அவர்கள் யோசனைத் தெரிவித்துள்ளனர்.

இதற்கான முயற்சிகளில் ஒபாமா ஏற்கெனவே தீவிராமாக இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க பொருளாதாரம் முழுக்க முழுக்க தனியார் மயமானது. முதலாளித்துவத் தத்துவத்தின் அடிப்படையில் இயங்குவது என்பதால், அரசின் தலையீடு இதுவரை மிக்க் குறைவாகவே இருந்துவந்தது. மேலும் இத்தகைய பொருளாதாரச் சுழறஅசி நிலை அமெரிக்காவுக்கு புதிதும் அல்ல.

ஆனால் 1940-களில் நடந்த உலகப் பெருமந்தத்துக்கு இணையான நெருக்கடி இப்போது ஏற்பட்டுள்ளதால், தங்கள் பொருளாதாரத்தின் அடிப்படைச் சித்தாந்தத்தையே ஓரளவு மாற்றிக் கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளது அமெரிக்கா. தொழில்துறை மற்றும் நிதித்துறையை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகள் அரசின் சார்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

No comments: