அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, February 4, 2009

சர்மாவைச் சுட்டது யார்? அவிழும் உண்மைகள்!

ஜாமிஆ நகரில் நடந்த என்கவுண்ட்டரில், என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் மோகன் சந்த் சர்மாவைக் கொன்றது யார்? அவர் சாகக் காரணமான துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் யார்?

"குர்தா மற்றும் பைஜாமா உடையணிந்து தனியார் நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி போன்ற வேடத்தில் சென்று தீவிரவாதிகள் வசித்திருந்த வீட்டுக் கதவைத் தட்டிய சர்மாவை, கதவைத் திறந்து நிமிட நேரத்தில் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியதாக" காவல்துறை கூறும் வாதத்தைக் காவல்துறையே வெளியிட்ட மேற்காணும் புகைப்படம் அப்பட்டமான பொய் எனச் சான்று பகர்கின்றது.

காவல்துறை வெளியிட்ட இப்புகைபடத்தில், தீவிரவாதிகள் வசித்திருந்த வீட்டிற்குச் சென்று துப்பாக்கிச் சூடு பெற்றுக் காயமடைந்த சர்மாவை, சக அதிகாரிகள் தாங்கிப் பிடித்து வருகின்றனர். ஆனால், சர்மாவின் முன்பக்கம் எங்கும் துப்பாக்கியால் சுடப்பட்ட காயம் இல்லை என்பதை இந்தப் புகைப்படத்திலிருந்தே தெளிவாக அறிந்துக் கொள்ள இயலும். காவல்துறை கூறுவது போன்று கதவைத் திறந்த நிமிடத்திலேயே திவிரவாதிகள் சர்மாவைச் சுட்டிருந்தால், துப்பாக்கிச் சூடு அவரின் முன்பக்கத்தில் எங்காவதுதான் பட்டிருக்க வேன்டும்.

வெள்ளைச் சட்டை போட்டிருக்கும் சர்மாவின் முன்புறம் எங்குமே துப்பாக்கிச் சூடு பட்ட அடையாளமோ ஒரு சிறு இரத்தக் கறையோ காணப்படவில்லை. அதே சமயம் சர்மாவின் இடது கையைத் தாங்கி அழைத்து வரும் சக அதிகாரியின் சட்டையில் தெரியும் இரத்தக் கறையிலிருந்து, சர்மாவின் பின்பக்கமிருந்து இரத்தம் வெளியாகி இருப்பது தெளிவாகின்றது.
அவ்வாறெனில் சர்மாவின் பின்பக்கமிருந்துதான் யாரோ சுட்டிருக்க வேண்டும். குண்டு, அவரின் சக அதிகாரிகளின் துப்பாக்கிலிருந்து வெளியானதாகவே இருக்க முடியும். ஏனெனில், அவர் கதவைத் தட்டும் பொழுது அவரது பின்னால் அம்மாடியில் அவரின் சக அதிகாரிகள் அல்லாமல் வேறு யாரையும் காவல்துறை அங்கு அனுமதித்திருக்கவில்லை. AIIMS வெளியிட்ட முதல் அறிக்கையும் "சர்மா, பின்பக்கமிருந்து வெகு அருகாமையில் சுடப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கிறது.





மேலும், காவல்துறை கூறுவது போன்று சர்மா குர்தாவும் பைஜாமாவும் அணிந்திருக்கவில்லை என்பதும் புகைப்படத்தில் காணப்படும் சர்மா அணிந்திருக்கும் கடும்நீல நிற பேன்டும் வெள்ளைச் சட்டையும் காவல் துறையின் பொய்யை வெட்ட வெளிச்சமாக்குகிறது. தீவிரவாதிகளால் சுடப்பட்ட சர்மாவை வெளியே கொண்டுவருவதற்கு முன்பு, அவருடைய "குர்தா மற்றும் பைஜாமை வேடத்தைக்" கலைத்து, அவருக்குப் புகைப்படத்தில் தெரியும் உடையை நாங்கள் தான் அணிவித்து வெளியே கொண்டு வந்தோம் என்று ஒரு புதிய கதையைக் காவல்துறை கூறாது என நம்புவோம்.

சர்மா பணி செய்திருந்த காவல்துறையினுள் அவர்களிடையே நிலவி வந்த பகைமையே சர்மா கொலைக்குக் காரணம் என்ற ஒரு கருத்து ஏற்கெனவே வெளியாகியுள்ளது. டெல்லி காவல்துறை சிறப்புப்பிரிவிற்குத் தலைமை வகிக்கும் கர்ணால் சிங்கிற்கும் சர்மாவிற்கும் இடையே சுமூகமான தொடர்புகள் இல்லாமல் இருந்தது எனவும் சில மாஃபியா குழுக்களுடனான தொடர்பின் பெயரில் இவர்களிடையே பிரச்சனைகள் நிலவி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

நாட்டின் தலைநகரான டில்லி, போலி என்கவுண்ட்டர்களின் தலைநகராகவும் விளங்கியிருந்தது. சர்மா உட்பட பல காவல்துறை அதிகாரிகளுக்கு மறைமுகமாகப் பல அண்டர் வேல்ட் மாஃபியாக்களுடன் தொடர்பும் இதன் மூலம் பல கோடி சொத்துக்கள் அவர்கள் சேகரித்திருந்த விவரங்களும் இத்தகைய பணம் கொடுக்கல் வாங்கல்களில் காவல்துறையினருக்குள்ளேயே பிரச்சனைகள் நிலவி வந்ததும் நாடறிந்த விஷயமாகும்.

இதே ரீதியில், கடந்த 24.03.2008இல் மரணிக்கும் வரை மிகப் பெரிய என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக மதிக்கப்பட்டிருந்த ஸ்பெஷல் ஆபரேஷன் ஸ்க்வாட் துணை ஆணையர் ராஜ்பீர் சிங் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதும் நினைவிருக்கலாம்.

போலி என்கவுண்ட்டர் நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்த பீப்பிள் யூனியன் ஃபார் சிவில் லிபர்ட்டீஸ்(பி.யூ.சி.எல்) தலைமையிலான இந்தியன் முஸ்லிம் கோ-ஆர்டினேசன் கமிட்டியிலுள்ள முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து, "சர்மாவின் உடலில் துளைத்தக் குண்டுகள் யாருடைய துப்பாக்கிக்குச் சொந்தமானவை என்பதை ஆய்வகத்தில் பரிசோதித்து விவரங்களைப் பொதுவில் வெளியிட வேண்டும்" எனவும் "என்கவுண்ட்டரைக் குறித்து நீதிமன்ற விசாரணக்கு உத்தரவிட வேண்டும்" எனவும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், "சர்மாவில் உடலில் குண்டுகள் எதுவும் இருக்கவில்லை" என அவர் உடலைப் பரிசோதித்த மருத்துவர் கூறியுள்ளார்.

உடலில் நான்கு இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தாலும் அதில் இரண்டு மட்டுமே குண்டுகள் துளைத்தக் காயமாக இருக்கலாம் எனவும் மிக அண்மையில் இருந்து சுடப்பட்டதால் குண்டுகள் உடலில் தங்கியிராமல் மறுபக்கமாக வெளியேறியிருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

சுடப்பட்ட சர்மாவைத் தாங்கிப் பிடித்து வரும் புகைப்படத்தில் அவரது முன்பக்கம் எந்த ஒரு காயத்திற்கான அறிகுறியும் இல்லாத நிலையில், மருத்துவர் கூறியுள்ள தகவலிலும் சந்தேகங்கள் மிகைந்துள்ளன.

No comments: