அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, February 4, 2009

தமுமுகவும் பாஜகவும் இணைகிறதா?

தமுமுகவை உருவாக்கிய தவ்ஹீத்வாதிகள் வெளியேறியதோடு மெல்ல மெல்ல அதன் வீரியம் குறைந்து ஏற்கனவே சோரம்போய்விட்ட முஸ்லிம்லீக் போன்ற ஒரு அரசியல் கட்சியாகவே இருந்து வந்தது. ஆனால் இன்றைக்கு முஸ்லிம்களை எதிர்க்கும், முஸ்லிம்களை கொன்று குவிக்கும் விடுதலைப்புலிகள் மற்றும் சங்பரிவாரின் ஊதுகுழலாக தமுமுக மாறிக் கொண்டிருக்கின்றது.


• தன்னை வளப்படுத்திக் கொள்ள திட்டமிட்ட தமுமுக, அரசியல் ஆதாயத்திற்காக ஏக இறைவனை ஏற்றுக்கொள்ளாத கப்ரு வணங்கிகளை ஆதரித்தது.


• இஸ்லாத்தின் எதிரியான ஷேக் அப்துல்லா ஜமாலியின் கூட்டத்திற்கு பாதுகாப்பு கொடுத்தது.


• கன்னிபீவி தர்ஹாவுக்கு போஸ்டர் அடித்து கொடுத்து தர்ஹா வழிபாட்டை ஊக்குவித்தது.


• இந்த கப்ரு வணங்கிகளை மட்டும் நம்பி அரசியலில் இறங்கினால் தமக்கு பதவிகள் கிடைப்பது சந்தேகமே எனக்கருதி இந்துக்களையும் கவரும் திட்டத்தை தீட்டியது.


• இந்துக்களின் கடவுளர்களும் இஸ்லாமிய இறைதூதரும் ஒன்றுதான், நாங்கள் தூதர் என்று குறிப்பிடுகிறோம், நீங்களோ இறை அவதாரம் என்று நினைக்கின்றீர்கள் அவ்வளவுதான் என்று இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை கூறி முஸ்லிம் சமுதாயத்தை அதிர்ச்சியுறச் செய்தது தமுமுக.


• தான் ஆரம்பித்த அரசியல் கட்சிக்கு முஸ்லிம் முன்னேற்ற கழகம் என வைத்தால் மாற்று மதத்தவர்களின் ஓட்டு கிடைக்காதல்லவா? எனவே முஸ்லிமை தூக்கிவிட்டு வேறு பெயரை வைத்தது.


• அரசியல் ஆசை கண்களை மறைத்தவுடன் சொந்த சமுதாய நலனை தூக்கி வீசியது. இட ஒதுக்கீட்டில் கலைஞர் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்தபோது எதிர்க்காமல் இருந்த தமுமுக, செஞ்சோற்று கடன் தீர்க்க அதை நியாயப் படுத்தவும் செய்தது.


• முஸ்லிம்களுக்கு சொந்தமான வக்ஃபு வாரிய நிலங்கள் அபகரிக்கப் பட்டபோது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.


• இப்படியாக சமுதாயநலனை புறந்தள்ளிய தமுமுக இன்று ஒருபடி மேலே போய் முஸ்லிம்களை கொன்று குவித்தவர்களுக்கு ஆதரவு கொடுக்கவும் துணிந்துவிட்டது.


முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசித்த வந்த பகுதியான மூதூரை கைப்பற்ற திட்டமிட்ட விடுதலைபுலிகள் காலங்காலமாக அங்கிருந்த முஸ்லிம்களை வெளியேறும்படி பள்ளிவாசல் மௌலவிகளுக்கு எச்சரிக்கை செய்தார்கள். மூதூரில் ஊடுருவிய விடுதலைபுலிகள் அதை தங்கள் வசப்படுத்தினர். விடுதலைபுலிகளின் கொடுமை தாங்காமல் அகதியாக சென்று கொண்டிருந்த முஸ்லிம்களையும் கொன்று குவித்தனர்.

(மக்கள் உரிமை 2006 டிசம்பர் 29 )

என்றெல்லாம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் பேட்டியை வெளியிட்ட தமுமுக இன்று அவர்களுக்காக ஆதரவு கொடுக்கிறது.


தமுமுகவின் பொது செயலாளர் ஹைதர் அலி வீடுதலைபுலிகளுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் ஆதரவாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். சில கட்சிகள் அதில் கலந்து கொள்ளவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டு அபகரிக்கப்பட்ட இடத்திலிருந்து நடத்தும் அவர்களுடைய பத்திரிகையிலும் எழுதியுள்ளனர்.


1990-ம் ஆண்டு ஒருநாள் விடுதலை புலிகள் திடீரென 'வட மாகாணத்திலிருந்து 24 மணி நேரத்தில் முஸ்லிம்கள் அனைவரும் வெளியேற வேண்டும் இல்லையெனில் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை' என்றனர். நாங்கள் எங்களது வீடுகள். நகைகள், பணம், வீட்டு உபகரண பொருட்கள், தளவாடங்கள் என அத்தனை சொத்துக்களையும் விட்டுவிட்டு எங்கள் பிள்ளைகளை மட்டும் எடுத்துக் கொண்டு இரவோடு இரவாக 12 மைல்களுக்கு அப்பால் உள்ள இக்கிரி கொல்லா என்ற முஸ்லிம் பகுதிவரை நடந்தே வந்தோம்.

இது தமுமுகவிலுள்ள ஆளூர் ஷாநவாஸ் இன்றளவும் அகதிகளாக இருக்கும் இலங்கை முஸ்லிம்களிடம் எடுத்த பழைய பேட்டி.


விடுதலை புலிகள் அமைப்பிற்கும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸூக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஒப்பந்தத்திற்கு பின் ரவூப் ஹக்கீமும் - பிரபாகரனும் கூட்டாக அறிக்கை தந்தனர். அவ்வறிக்கையின் முக்கியமான அம்சங்களில் ஒன்று முஸ்லிம்களிடம் வரிவசூல் செய்யக்கூடாது, முஸ்லிம்களின் நிம்மதிக்கு பங்கம் விளைவிக்கக்கூடாது என்பது தான். ஆனால் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னரும் புலிகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுவரும் இன்னல்கள் குறைந்தபாடில்லை. வாழைச்சேனை, மூதூர் போன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் கருவறுக்கப் பட்டுள்ளனர். பல முஸ்லிம்கள் புலிகளால் கடத்தப் பட்டுள்ளனர். இன்னும் வரிவசூல் தொடர்கிறது.

- இது தமுமுகவிலுள்ள ஆளூர் ஷாநவாஸ் எழுதிய பழைய கட்டுரை.


அன்று இவ்வாறெல்லாம் எழுதிய தமுமுகவினர் இன்று விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடந்த மனித சங்கிலியிலும் கலந்து கொண்டு தங்களுடைய முஸ்லிம் விரோத போக்கை பகிரங்கப் படுத்தியுள்ளனர். பதவிக்காக, அரசியல் ஆதாயங்களுக்காக சொந்த சமுதாயத்தை கொன்று குவித்தவர்களை காப்பாற்ற துடிக்கும் தமுமுக, இன்று அதைவிட கொடுமையான ஒரு செயலையும் செய்துள்ளது.


முஸ்லிம்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் சங்பரிவாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியது தவறு என்று மாபெரும் முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரத்தை செய்து வருகின்றது.

கேள்வி: மாலேகான் குண்டு வெடிப்பில் இந்துத்துவ சக்திகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதற்காக ஏன் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது?

பதில்: எது எதற்கு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று ஒரு அளவு கோல் உள்ளது. ஒரு அநீதி நடந்து உரிய நடவடிக்கை இல்லாத போது அதற்காக போராட்டம் நடத்த வேண்டும். ஒரு அநீதி நடந்து அது குறித்த விசாரணைகளும், நடவடிக்கைகளும் சரியான திசையில் போய்க் கொண்டிருக்கும்போது அதை சரியாக தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதற்கு பதிலாக ஆர்ப்பாட் டம் நடத்துவது கேலிக் கூத்தாக பார்க் கப்படும். மாலேகான் விவகாரத்தில் நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகை யில் அதிகாரிகள் குழு சரியான திசையில் புலனாய்வை நகர்த்தி வரு கிறது. இதை கண்காணித்துஇ அங்கே தவறுகள் நிகழும் பட்சத்தில் தான் அதை எச்சரிக்கும் விதமாக கவன ஈர்ப்புக்காக போராட்டங்களை நடத்த வேண்டும். இப்போது போராட்டம் நடத்துவது என்பது அறிவுடைமை ஆகாது.


- இது தமுமுக இணையதளத்தில் வெளிவந்த செய்தி


தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் என்ன?


மாலேகான் குண்டு வெடிப்பின் போது முஸ்லிம் தீவிரவாதிகள்தான் குண்டு வைத்தார்கள்கள் என்று கூறி பல முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். பத்திரிகைகள் அனைத்தும் இது முஸ்லிம் தீவிரவாதிகளின் சதி என்றே கூறியது. ஆனால் இன்று அந்த குண்டுவெடிப்பு மட்டுமல்ல இந்தியாவில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளையும் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, பஜ்ரங்தள் உட்படவுள்ள சங்பரிவார் அமைப்புகள் தான் செய்தன என்று போலீஸாரின் புலன்விசாரணையில் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.


கோத்ரா ரயில் எரிப்பும் அதனை தொடர்ந்து மனித வேட்டை நடத்திய மோடியின் தலைமையிலான சங்பரிவார் அயோக்கியர்களை குஜராத் அரசு தப்பவிட்டது மட்டுமல்லாமல் அவர்களை பாதுகாத்துக் கொண்டிருப்பது போல மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள் தப்பிவிடக் கூடாது என்பதற்காக அந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று முஸ்லிம்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆனால் அது கேலிக்கூத்து என்றும் அறிவுடைமை அல்ல என்றும் தமுமுக கூறுகிறது. இதன்மூலம் உண்மை குற்றவாளிகளான சங்பரிவார் அமைப்பினர் கைது செய்யப்படுவதை விரும்பாத தமுமுக அந்த சங்பரிவாருக்கு ஆதராவான நிலையை எடுத்துள்ளது.


எந்த ஒரு குண்டுவெடிப்பிலும் முஸ்லிம்களுக்கு தொடர்பு இல்லாதபோதும் முஸ்லிம்களின் மீது பழிபோட்ட மீடியாக்கள், அந்த குண்டுவெடிப்புகள் அனைத்தையும் சங்பரிவார்தான் செய்துள்ளது என்று தீவிரவாத எதிர்ப்பு படையினர் விசாரணை செய்து சங்பரிவார் அமைப்பிலுள்ள பலரை காவல்துறை கைது செய்தும் கூட அதை மீடியாக்கள் செய்தியாக கூறவில்லை. அப்படி ஒரு சம்பவம் இந்தியாவில் நடந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை. இதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையிலான முஸ்லிம்கள் கொதித்தெழுந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் அதை கொச்சைப்படுத்தி கேலிகூத்து என குறிப்பிட்டுள்ளது தமுமுக. இதன்மூலம் மீடியாக்கள் செய்வது சரிதான் எனக்கூறுகின்றது தமுமுக.


தமுமுகவினர் கொள்கையில் உறுதி இல்லாதவர்கள் என்பது அனைவரும் அறிந்த செய்தி. உதாரணமாக டிசம்பர் 6 போராட்டத்தை கூறலாம்.


இடஒதுக்கீட்டிற்காக விரக்தி அடைந்த குஜ்ஜார் மக்களை போல ஒருபோதும் முஸ்லிம்கள் பலாத்காரத்தில் இறங்கக்கூடாது. முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்காக தமுமுக காட்டும் அறவழிதான் சிறந்த வழி..... இடஒதுக்கீட்டிற்காக முஸ்லிம்கள் தண்டவாளத்தை பெயர்க்கவேண்டாம். சாலை மறியல் செய்ய வேண்டாம். ராஜதந்திரமாக செயல்பட்டாலே பல வெற்றிகளை பெற முடியும். - M.H.ஜவாஹிருல்லாஹ்

(மக்கள் உரிமை – ஜூலை 25-31 2008)


என்று அன்று எழுதியவர்கள் இன்று அதற்கு நேர்மாறாக டிசம்பர் 6 க்காக ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போகிறார்களாம். இப்படிப்பட்ட பச்சோந்திகளின் தலைமையின் கீழ் இன்னும் சிலர் ஒட்டிக்கொண்டிருப்பதை நினைத்தால் மனம் வேதனை அடைகிறது.


அடுத்ததாக புலிகளுக்கு ஆதரவு கொடுத்ததை நியாயப்படுத்தி அவர்கள் எழுதியுள்ளதை பாருங்கள். இந்த மனிதாபிமான நிகழ்வில் நாம் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியிருந்தால், நமது சமுதாயத்தைப் பற்றி தவறான அபிப்ராயம் உருவாக்கியிருக்கும். முஸ்லிம்கள், தங்கள் பிரச்சனைகளுக்கு மட்டும் தான் நீதி கேட்பார்கள் என்ற தோற்றம் ஏற்பட்டிருக்கும்.

அடத்தூ... வெட்கங்கெட்டவர்களே!

முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரை வைத்துக் கொண்டு இப்படிக்கூற நா கூசவில்லையா? முஸ்லிம்களை முன்னேற்றுவதென்பது பெயரில் மட்டும்தானா?

ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கு பாதிக்கப் பட்டாலும் உரிமைகள் பறிக்கப்பட்டாலும் அது பாலஸ்தீனமாக இருந்தாலும், தமிழ் ஈழமாக இருந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமையாகும். இதை மத, இன, தேசம், மொழி என பேதம் பார்ப்பது இஸ்லாமிய நெறி முறையல்ல.


இப்படி பொடி வைத்து பேசுவது எதற்காக! மாலேகான் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட பிரக்யா சிங்குக்காக குரல் கொடுப்பதற்காகவா? என்ற கேள்வியோடு இந்த தமுமுகவினர் அரசியலில் பி.ஜே.பியுடன் கூட்டணிக்கு தயார் ஆகிவிட்டார்கள் போலும் என எண்ணிக்கொண்டிருந்த வேளையில் அடுத்த செய்தி சிரிக்கக்கூடிய செய்தியாக வந்தது.


தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அளவுகோல், கேலிக்கூத்து, அநீதி நடைபெறவில்லை, அறிவுடைமை ஆகாது என்றெல்லாம் சொன்னவர்கள் இரண்டே நாட்களில் அதற்கு நேர்மாறாக,

மாலேகான் மற்றும் நாட்டில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கு காரணமான சங்பரிவார் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டங்களை நடத்த இருக்கிறது. - தமுமுகவின் இணையதளம்


என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.


தடுமாறும் தமுமுகவினரே! நீங்கள் எழுதிய பதிலை நீங்களாவது படியுங்கள். உங்களுக்கு மறந்திருக்குமானால் இதோ!


கேள்வி: மாலேகான் குண்டு வெடிப்பில் இந்துத்துவ சக்திகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரு கின்றனர். இதற்காக ஏன் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது?பதில்: எது எதற்கு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று ஒரு அளவு கோல் உள்ளது. ஒரு அநீதி நடந்து உரிய நடவடிக்கை இல்லாத போது அதற்காக போராட்டம் நடத்த வேண்டும். ஒரு அநீதி நடந்து அது குறித்த விசாரணைகளும்இ நடவடிக்கைகளும் சரியான திசையில் போய்க் கொண்டிருக்கும்போது அதை சரியாக தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதற்கு பதிலாக ஆர்ப்பாட் டம் நடத்துவது கேலிக் கூத்தாக பார்க் கப்படும். மாலேகான் விவகாரத்தில் நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகை யில் அதிகாரிகள் குழு சரியான திசையில் புலனாய்வை நகர்த்தி வரு கிறது. இதை கண்காணித்துஇ அங்கே தவறுகள் நிகழும் பட்சத்தில் தான் அதை எச்சரிக்கும் விதமாக கவன ஈர்ப்புக்காக போராட்டங்களை நடத்த வேண்டும். இப்போது போராட்டம் நடத்துவது என் பது அறிவுடைமை ஆகாது.

No comments: