அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, February 6, 2009

வெட்கித் தலைகுனியும் மதவெறி

உலகெங்கும் மதத்தின் பெயரால் மதவெறி வளர்த்து வன்முறை, தூண்டி, கம்பு, கத்தி, கோடாறி, சூலம் மற்றும் வெடிகுண்டு மூலம் அப்பாவி மனிதர்களின் இரத்தத்தை உறிஞ்சும் காட்டுமிரண்டிகளின் வெறியாட்டம் நடந்து வருகிறது. அதேவேளையில் மனித நேயம் இன்னும் இருப்பதை பறைசாற்றும் நிகழ்வுகள் நடக்கத்தான் செய்கின்றன.


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சாமுண்டதேவி கோவிலில் நவராத்திரி கொண்டாட்டத்தை முன்னிட்டு நடந்த பூஜயில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 150 பக்தர்கள் மரணித்தனர். அந்த ’தள்ளுமுள்ளுக்கு’ - இஸ்லாமிய தீவிரவாதிகளின் வெடிகுண்டு புரளிதான் காரணம் என்று ஊடகம் மற்றும் இணைய தளங்களின் மூலம் வதந்தி மூலம் பரப்பட்டடு முஸ்லிம்களுக்கெதிரான துவேஷம் குறையாமல் மிககவனமாக பார்த்துக் கொள்ளப்பட்டது.

விபத்தில் சிக்கியவர்களை இடிபாடுகளிலிருந்து மீட்பதிலும், மீட்கப்பட்டவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிப்பதிலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதிலும், இரத்த தானம் வழங்குவதிலும் ஜோத்பூர் முஸ்லிம்கள் காட்டிய மனிதநேயம் வழக்கம்போல ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டது.

அது மட்டுமல்ல, உற்றார் உறவினரை இழந்து இந்து சகோதரர்கள் துக்கத்தில் தவிக்கும்போது, விமரிசையான நோன்பு பெருநாள் கொண்டாட்டம் முஸ்லிம்களுக்கு தேவையில்லை’ என்று ஜோத்பூர் நகர தலைமை காஜியும், பிற இஸ்லாமிய அமைப்புக்களும் அறிவித்தனர். அதனால் இந்த வருடம் நோன்பு பெருநாள் பண்டிகை - ’சடங்குக்காக’ மட்டும் கொண்டாடப்பட்டது.

நான் சொல்ல வந்ததை விட்டுவிட்டு எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறேன். பின்னூட்டங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்காக, மதவெறி தூண்டி மக்களை கூறு போடும் வதந்திகளுக்கும் - திரிக்கப்பட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு - ’மதம் தாண்டி’ உறவாடும் இத்தகைய மனித நேய நிகழ்வுகள் திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டு வருகிறதே என்று வருந்துவதால்தான் இந்தப்பதிவு.

No comments: