அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, November 6, 2011

தமிழகம் முழுவதும் சாலைகள், பயிர்கள் நாசம் தொடர் மழைக்கு 40 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் தொடர் மழைக்கு இதுவரை 40 பேர் பலியாகியுள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். சேதமடைந்த சாலைகளை சீரமைக்க சுமார் ஸி500 கோடிக்கு மேல் செலவாகும் என மதிப்பிடப் பட்டுள்ளது. சென்னையில் மழைநீர் கால்வாயில் விழுந்து பள்ளி ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகத்தில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் இதுவரை 4 முறை காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு தொடர் மழை பெய்து வருகிறது. ஓரிரு நாள் மட்டுமே ஓய்ந்திருந்த மழை, இப் போது பகல், இரவு பாராமல் தொடர்ந்து கொட்டி வருகிறது. சென்னையில் தாழ்வான பகுதிகள் எல்லாம் தண்ணீரில் மிதக்கின்றன. தி.நகர் உஸ்மான் சாலையில் தரையில் இருந்து 2 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றதால், நடந்து  சென்ற பள்ளி ஆசிரியை மூடாமல் இருந்த மழைநீர் கால்வாயில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

அதோடு, நகரில் உள்ள 11630 சதர மீட்டர் பரப்ப ளவு கொண்ட சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. வாகனங்களில் செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளன. சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. கடந்த 10 நாட்களாக  காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல்களால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெளியூர் செல்லும் பஸ்கள் அனைத்தும் நகரில் இருந்து புறப்பட்டு 3 மணி நேரத்துக்குப் பிறகே நகரை கடக்க முடிகின்றன.  நகரில் மட்டும் ஸி200 கோடிக்கு மேல் சாலைகள் சேதமடைந்துள்ளதாக தற்காலிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படும் பொருட்கள் அனைத்தும் தாமதமாகவே கொண்டு செல்லப்படுகின்றன. நகரின் அனைத்துப் பணிகளும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன. காய்கள்  விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ளன. மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் மழைக்கு 4 பேரும், விழுப்புரத்தில் 2 பேரும் உயிரிழந்தனர். தேனி, சிவகங்கையில் தலா 2 பேர், விருதுநகரில் ஒருவர் உயிரிழந்தார். கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் 6 பேர் பலியாகியுள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. கோவை நகரில் மட்டும் சுமார் ஸி100 கோடிக்கு சாலைகள் சேதமடைந்தள்ளன. ஒக னேக்கல் நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரியலூரில் 3 பேர் மழைக்கு பலியாகியுள்ளனர். திருச்சியில் 2 பேர், பெரம்பலூர், நாகப்பட்டினம், தஞ்சை, கரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்தனர். திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் சுமார் 80 சதவீத  சாலைகள் சேதமடைந்து விட்டன. 20 சதவீத சாலைகள் ஓரளவு சேதமடைந்துள்ளன.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கும் சாலைகள்தான் பெரிய அளவில் சேதமடைந்தள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய அளவில் மழை சேதம் ஏற்படவில்லை. சேலம் மாவட்டத்தில் சாலைகள்  சேதமடைந்துள்ளன. கடந்த 10 நாளாக பெய்துவரும் மழைக்கு கடலோரத்தில் உள்ள 13 மாவட்டங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. கடலோர மாவட்டங்களைத் தவிர மேலும் சில மாவட்டங்களிலும் மழைக்கு ஓரளவு சேதத்தைச் சந்தித் துள்ளன.
தமிழகம் முழுவதும் நேற்று வரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஸி500 கோடிக்கு மேல் சாலைகள் சேதமடைந்திருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் விவசாயி களுக்கு பெரிய அளவில் சேதம் அடையவில்லை. ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மாவட்டங்களில் சேதத்திற்கு ஏற்றார்போல உள்ளூர் நிதியில் இருந்து உடனடியாக மீட்பு பணிகளை மேற் கொள்ள வேண்டும் என்று கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் தொடர் மழையால் நகர் தத்தளிப்பதால் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங் கம் ஆகியோர் தலைமையில் சென்னை மேயர் சைதை துரைசாமி, கமிஷனர் கார்த்திகே யன் ஆகியோர் தினமும் ஆய்வு செய்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். ஆனாலும் தொடர் மழையால் அதிகாரிகளில் சேதமடைந்த சாலைகளை செப்பனிட முடியவில்லை. மழை ஓய்ந்த பிறகுதான் சாலைகள் பராமரிப்பு குறித்து  அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments: