அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, March 25, 2012

வன்புணர்வு வழக்கில் 'விந்து' தடயம் அவசியமில்லை : உயர்நீதிமன்றம்

வன்புணர்வை நிரூபிக்க விந்தின் தடயம் அவசியமில்லைவன்புணர்வை நிரூபிக்க விந்தின் தடயம் அவசியமில்லை என்று மும்பை உயர்நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் கிளை தீர்ப்பளித்துள்ளது. 
ஆறுவயதேயான சிறுமியை வன்புணர்ந்து கொன்ற குற்றத்திற்காக  பிரஷாந்த் கதே என்னும் 25 வயது நபருக்கு மும்பை-ஒஸ்மானாபாத் கீழ்நிலை நீதிமன்றம் மரணதண்டனை, ஆயுள்தண்டனை, மற்றும் 25,000 ரூபாய் அபராதம் ஆகியவற்றை ஒருசேர விதித்திருந்தது.இதை எதிர்த்து அந்நபர் செய்த மேல்முறையீட்டில், அந்தத் தண்டனைகளையும் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

இ.பி.கோ 375ன்படி, எதிர்பாலின சம்மதமின்றி நிகழ்த்தும் லேசான புணர்வும் வன்புணர்வாகும் என்றும், குறிப்பிட்ட வழக்கில் விந்தின் தடயம் காணப்படவில்லை என்பது சட்டப்படியோ, பொதுஅறிவுபடியோ குற்றஞ்சுமத்தப்பட்டவருக்குச் சாதகமாகாது என்றும் நீதிபதிகள் நரேஷ் பாட்டீல், டிவி நால்வதே கூறினர்.

சிறுமி கொலை செய்யப்பட்டதற்கும், வன்புணரப்பட்டதற்கும் மற்ற ஆதாரங்களே போதுமானதாக உள்ளதாக நீதிபதிகள் கருத்தளித்தனர்.

மராட்டியமாநிலம் ஷோலாப்பூரைச் சேர்ந்த பிரஷாந்த் கதே என்னும் அந்நபர் கடந்த 2009 ஆம் ஆண்டு மே 4 ஆம் நாள், ஒரு கல்யாண வைபவத்தின் போது, அதே ஊரைச் சேர்ந்த ஆறுவயது சிறுமியை, அச்சிறுமியின் தந்தையிடம் கொண்டு சேர்ப்பதாகச் சொல்லி அழைத்துச் சென்று வன்புணர்ந்து, பின்பு தலையை நசுக்கிக் கொலை செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. அச்சமயம் பிரஷாந்த் கதே குடிபோதையில் இருந்ததாகவும் தெரிகிறது.
சம்பவம் நிகழ்ந்து இருதினங்களுக்குப் பின்னரே காவல்துறை பிரஷாந்த் கதேயை கைது செய்தது.

இதற்கிடையில், இத்தீர்ப்பை மும்பை வாழ் மகளிர் பிரமுகர்கள் வரவேற்றுள்ளனர். "கொடிய குற்றவாளிகள் உருவாகாமல் தடுப்பதற்கு, இத்தகைய கடுமையான சட்டங்களின் தேவை இருக்கிறது" என்று விதர்பா மகளிர் வழக்குரைஞர் சங்கத் தலைவர் தேஜஸ்வினி கூறியுள்ளார்.

சமூக சேவகர் சீமா சக்காரே கூறுகையில், இத்தகைய கொடிய குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு தடுத்தாக வேண்டும், நீதிமன்றம் சரியாகவே செயல்பட்டிருக்கிறது என்று கூறினார்.

No comments: