அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, August 23, 2011

ராக்கிங் கொடுமையை தடுக்க 9 தனிப்படை..

நெல்லை மாவட்டத்தின் கல்லூரிகளில் ஏற்படும் ராக்கிங் கொடுமையை தடுக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரி தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்திலுள்ள கலைக்கல்லூரிகள், இன்ஜினியரிங் கல்லூரிகளில் புதிய மாணவ, மாணவிகளை (ஜூனியர்கள்) அங்குள்ள சில மாணவ, மாணவிகள் ராக்கிங் செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த ராக்கிங்கால் மாணவ, மாணவிகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இதில் அவமானம் அடைந்த ஓரிரு மாணவ, மாணவிகள் தற்கொலை முடிவுக்கும் சென்று விடுகின்றனர். இதனை தடுக்க நெல்லை மாவட்டத்தில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரி கூறியதாவது:

நெல்லை மாவட்ட காவல் அலுவலகத்தில் தனிப்பிரிவு அலுவலகத்தில் டெலிபோன் 0462 - 2568025ல் இயங்கி வருகிறது. நெல்லை மாவட்டத்திலுள்ள எல்லா வகையான கல்லூரிகளிலும் நடக்கும் ராக்கிங் கொடுமை பற்றி தகவல் பெறுவதற்காக இந்த உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி, அவர்கள் படிக்கும் கலை கல்லூரிகள் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் புதிதாக வந்த அல்லது ஜூனியர் மாணவ, மாணவிகளுக்கு நேரிடும் ராக்கிங் கொடுமை பற்றி தகவல் தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ராக்கிங் கொடுமையை தடுப்பதற்காகவும், இதன் மீது தகுந்த நடவடிக்கையை உடனுக்குடன் எடுக்கவும் நெல்லை மாவட்டத்தில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் பெறப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: