அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, September 25, 2010

ஹமாஸ் தளபதி இஸ்ரேலிய படைகளால் கொலை செய்யப்பட்டார்

ஹமாஸின் இராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் -ன் தளபதி 37 வயதான லியாத் ஆசாத் அபு
ஸில்பயிஹ் இஸ்ரேலிய படைகளால் மிக அருகில் வைத்து மூன்று முறை
சுடப்பட்டார் பின்னர் மருத்துவ உதவியும் தாமதப்படுத்தப்பட்டு
கொல்லப்பட்டார்.சம்பவத்தைப் பற்றி லியாத் ஆசாத்தின் சகோதரர்
முஹம்மத் தெரிவிக்கையில் ஏராளமான இராணுவ ஊர்திகள் 17.09.2010 அதிகாலை 2 மணியளவில்
முகாமிற்குள் நுழைந்து முஹம்மதை ஒரு மனித கேடயமாக பயன்படுத்தி தேடுதல் வேட்டை
நடத்தியிருக்கின்றன, இறுதியில் லியாதின் படுக்கையறை கதவை உடைத்துசென்று,
படுக்கையில் இருக்கும் போதே கழுத்தில் ஒருமுறையும் நெஞ்சில் இருமுறையுமாக, மூன்று
முறை சுடப்பட்டுள்ளார், பின்னர் அவரது உடலை முழுதும் சோதனையிட்டு
குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்
சம்பவத்தின் போது அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் உறவினரை சந்திக்க மேற்கு கரையில்
ஜெனின் என்ற ஊருக்கு சென்றிருந்தனர்
மேலும் இஸ்ரேலிய படைகள் முகாமிலிருந்து 15 இக்கும்
மேற்பட்டவர்களை கைதுசெய்துள்ளது இதில் ஹமாஸ் உறப்பினர்களும், ஆதரவாளர்களும்
இருப்பதாக பாலஸ்தீன் தெரிவிகின்றது
இதுபற்றி இஸ்ரேலிய இராணுவ அதிகாரி கூறுகையில், இராணுவம் தீவிரவாத தொடர்புடையவர்களை
கைது செய்யவே சென்றது, அனால் லியாத் இஸ்ரேலிய வீரர்களை தாக்கும் நோக்கத்தில்
அவர்களை நோக்கி வந்துள்ளார், தங்களின் உருக்கு ஆபத்தான நிலையிலேயே
தர்க்காப்பிர்காகத்தான் இஸ்ரேலிய வீரர்கள் சுட்டதாக தெரிவித்தார்
பாலஸ்தீன் பிரதமர் சலம் பாய்யாத் இப்படுகொலையை கடுமையாக கண்டித்துள்ளார் அவர்
செய்தியாளர்களிடம் "இப்படுகொலை ஆபத்தான சூழ்நிலையை அதிகரித்துள்ளது, இன்னும்
ஏற்கனவே இழுபறியில் இருக்கும் அமைதிப்பேச்சு வார்த்தையின்
நம்பகத்தன்மையை குழிதோண்டி புதைத்துள்ளது" என்று கூறியுள்ளார்
ஹமாஸ் இப்படுகொலையில் பாலஸ்தீனிய பாதுகாப்பு படையினர் இஸ்ரேலிய இராணுவத்திற்கு
உதவி செய்தனர் என்று குற்றம் சுமத்தியுள்ளது, அவர் சம்பவத்திற்கு இரண்டு
நாட்களுக்கு முன் பாலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸிற்கு நம்பிக்கைக்குரிய
பாதுகாப்பு அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
அநியாயக்கார ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக தொடந்து ரத்தம் சிந்துவோம் என்றும்
ஹமாஸ் தெரிவித்துள்ளது
ஹமாஸின் செய்திப்பொருப்பாளர் ஸாலேஹ் அல் பர்துவில் இந்த படுகொலை பேச்சுவார்த்தையை
ஒட்டியே நடத்தப்படுள்ளது, இஸ்ரேல் பாலஸ்தீனுக்கான பேச்சுவார்த்தை பல்வேறு
விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார், பேச்சுவார்த்தையை தொடர்ந்து
ஏற்படப்போகும் விளைவுகளை திசைதிருப்பவே இஸ்ரேல் இந்த கொலைக்கான சதிசெய்துள்ளது
என்றும் அவர் கூறினார்
செப்டம்பர் மாத தொடக்கத்தில் வாஷிங்டனின் தொடங்கிய இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனின்
இடையேயான நேரடி பேச்சுவார்த்தை, இதுவரை எந்த முடிவையும் எட்டவில்லை,இம்மாத
இறுதியில் முடியப்போகும் எல்லைகளின் வரையறையை குறித்த ஒப்பந்தத்தை நீடிக்கமுடியாது
என்றும் இஸ்ரேல் தொடர்ந்து கூறிக்கொண்டு வருகின்றது, இஸ்ரேலிய பிரதமர் இது
சம்பந்தமாக தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை என்று மூத்த இஸ்ரேலிய அதிகாரி
தெரிவித்தார்
இஸ்ரேலின் 7 முக்கிய காபினெட் அமைச்சர்கள் கொண்ட குழு இந்த வாரம்
கூடி எல்லைகளை குறித்த ஒப்பந்தத்தை நீடிக்க மறுக்கும் முடிவை எடுத்துள்ளது என்று
அரசாங்கத்திற்கு நெருக்கமான இஸ்ரேலிய நாளிதழ் இஸ்ரேல் ஹயோம் கூறியுள்ளது. மேலும்
இந்த முடிவு வளைகுடா பகுதியில் அமைதிக்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும், தற்போது
வளைகுடாவில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்ட்டனிடமும்
தெரிவிக்கப்பட்டு விட்டது என்றும் அந்த செய்தித்தாள் கூறியுள்ளது.

No comments: