அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, September 26, 2010

மனைவிகளை ஒதுக்குவது இப்போது பேஷனாகிவிட்டது: மன்சூர் அலி கான்

பிரபுதேவா-நயன்தாரா காதல், பிரகராஷ்ராஜ் விவாகரத்து, சசிதரூர்இரண்டாவது திருமணம் ஆகியவற்றை விமர்சித்து பேசியுள்ளார் நடிகர் மன்சூர் அலி கான். ’’ மனைவிகளை ஒதுக்குவது இப்போது பேஷனாகிவிட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் இரண்டாம் திருமணம் செய்தார். அவரிடம் இருந்து தொடங்கி பிரகாஷ்ராஜ், பிரபுதேவா வரை வந்து நிற்கிறது.

கணவர்கள், மனைவிகளை நேசிக்க வேண்டும். பிரபலமானவர்களின் நடவடிக்கைகள் இளைஞர்களை தவறான பாதைக்கு வழி நடத்துவது போல் ஆகி விடக்கூடாது’’என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், ‘’இன்றைய சமூகத்தில் இளம் தலைமுறையினர் பலர் மதுவுக்கு அடிமையாகி கிடக்கின்றனர். ஊட்டியில் படப்பிடிப்புக்கு சென்றபோது காலை 7 மணிக்கு மதுக்கடையில் குவிந்து நின்ற இளைஞர்களை பார்த்து கலங்கினேன். நான் நடிக்கும் ரதம் படத்தில் இதனை காட்சியாக்கியுள்ளோம். நான் அப்படத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளியாக நடிக்கிறேன். குடிகாரனாக இருந்து திருந்துவதுபோல் என் கேரக்டர் இருக்கும்.

நல்லவனாக மாறிய பிறகு சாராயம் குடிப்போரை பார்த்து தந்தையர்களே தயவு செய்து குடிக்காதீர்கள் குடிகுடியை கெடுக்கும். குடித்தவன் குடலை கெடுக்கும். உன் குழந்தைகள் கடைக் கோடியில் பிச்சை எடுக்கும். ஆகவே குடிக்காதீர்கள் என்று வசனம் பேசுவேன். இந்த காட்சியை இயக்குனர் ரியாஸ் ஒரே டேக்கில் எடுத்தார்’’என்று தெரிவித்துள்ளார்.

No comments: