அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, September 27, 2010

சாக்லேட் அதிகம் சாப்பிட்டால் இதய நோய்கள் வராது”


“சாக்லேட் அதிகம் சாப்பிட்டால் இதய நோய்கள் வராது”

திரைப்படம் திரைப்படம்

வாஷிங்டன், செப்.24-

சாக்லெட் அதிகம் சாப்பிட்டால் பற்களில் சொத்தை ஏற்படும் என்று கூறி குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றனர். ஆனால் சாக்லேட் சாப்பிட்டால் இதய நோய் வராது என நிபுணர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவில் 5 ஆயிரம் பேரிடம் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது வாரத்தில் வழக்கத்தை விட 4 மடங்கு அதிக அளவு சாக்லேட் சாப்பிட்டவர்களை இதய நோய்கள் 26 சதவீதம் குறைவாக தாக்கின. அதே வேளையில் 5 மடங்குக்கு அதிகமாக சாக்லேட் சாப்பிட்டவர்களுக்கு 57 சத வீதத்துக்கும் குறைவாகவே இதய நோய் பாதிப்பு ஏற்பட்டது.

இதன்மூலம் அதிக அளவு சாக்லேட் சாப்பிடுபவர்களை இதய நோய் தாக்காது என தெரியவந்துள்ளது. இதற் கிடையே மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ஜெர்னாதன் ஹோட்சன் ஒரு ஆய்வு மேற்கொண்டார்.

நோய் எதிர்ப்பு சக்திகளான பிளேவோனாய்ட்ஸ் என்ற பொருள் சாக்லேட்டில் கலக்கப்படும் கோகாவாவில் அதிக அளவில் உள்ளது. அதுதான் ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு சத்தை குறைக்க உதவுகிறது. அதனால் இதய நோய்கள் வர வாய்ப்பில்லாமல் போகிறது.

எனவே வாரத்துக்கு 20 முதல் 30 கிராம் சாக்லேட்டை சாப்பிடுவது நல்லது என தெரிவித்துள்ளார்.

மேலும் பிளேவோனாய்ட்ஸ் என்ற நோய் எதிர்ப்பு சக்திகள் நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் பழங்கள் மற்றும் காய்கறிகளிலும் அதிக அளவில் உள்ளது. எனவே அவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்

No comments: