அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, September 26, 2010

இஸ்ரேலில் அதிகரிக்கும் கூகிளின் முதலீடு

இணைய உலகில் கொடி கட்டி பறக்கும் கூகிள் நிறுவனம், இஸ்ரேல் இணைய நிறுவனம் ஒன்றை வாங்கியுள்ளது. கடந்த ஆறு மாதத்திற்குள் கூகிள் வாங்கும் இரண்டாவது இஸ்ரேல் நிறுவனம் இதுவாகும்.
கூகிள் நிறுவனம் பல நிறுவனங்களை வாங்கி அதன் மூலம் அதிக பயனீட்டாளர்களைப் பெற்று இணைய உலகில் கொடி கட்டி பறக்கிறது. யூடூப்(youtube), ஓர்குட்(orkut) போன்ற வலைதளங்கள் அவற்றில் சில. இந்நிலையில் ஃபேஸ்புக்(facebook) இணையதளத்தை வாங்க யாஹூவிற்கும், கூகுளிற்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.
தற்போது கூகிள் வாங்கி உள்ள மென்டோர்வேவ் டெக்நோலோஜிஸ் (MentorWave Technologies) என்ற நிறுவனம் கூகுளின் உலக வரைப்பட இணையத்தில் பயனீட்டாளர்கள் தங்கள் இருப்பிடம், பயணிக்கும் மற்றும் காணும் இடங்களை காணொளி மூலம் பதிவேற்றும் புதிய முறையினை கொண்ட க்விக்ஸீ(quicksee) என்ற வலைத்தளம் நடத்திவருகிறது.
இதே போல சில மாதங்களுக்கு முன் கூகிள் நிறுவனம் 'லேப்-பிக்ஸல்'(lab pixels) என்ற மற்றொரு இஸ்ரேலிய நிறுவனத்தை வாங்கியுள்ளது. அது இணையத்தில் தற்போது பிரபலம் அடைந்து வரும் 'add-ons' எனப்படும் 'கூடுதல் வசதி மென் பொருட்களை உருவாகும் நிறுவனம் ஆகும் .இசை ,காணொளி ,சினிமா போன்ற இனியம் மற்றும் கைபேசிகளில் நிறுவும் கூடுதல் வசதி மென் பொருட்களை தயாரித்து வந்த நிறுவனம் என்பது முக்கியமானது ...

தொடர்ந்து இஸ்ரேலில் கூகிள் நிறுவனம் தனது முதலீட்டை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலில் இரண்டாவது பெரிய நகரமான 'டெல் அவிவ்'(Tel Aviv)வில் கூகிள் தனது மத்திய கிழக்கு நாடுகளுக்கான அலுவலகத்தையும் நிர்வகித்து வருகிறது.

No comments: