அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, February 23, 2009

அசந்துப் போகும் அதிசயம்

ஏகஇறைவனின் திருப்பெயரால்....أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ
ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? 88:17..இதற்கு முன் பசுவின் இறைச்சியில் புழு இருப்பதில்லையா ? என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் உலகில் தோற்றுவிக்கப்பட்ட உயிரிணங்களில் இறைவன் தன்னுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்காக அதில் அதிசயிக்கத்தக்கப்பல மாற்றங்களை ஏற்படுத்தி விடுவான். என்று எழுதி இருந்தோம்.ஏகஇறைவன் தனது படைப்பினங்கள் பலவற்றில் (ஒன்றிலிருந்து மற்றொன்று பார்ப்பதற்கு ஒன்றுப் போலவே இருந்தாலும்) அதனுடைய உடலுக்குள் உள்ள உறுப்புகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடுவான்.உதாரணத்திற்கு ஏற்கனவே சுட்டிக்காட்டிய விதம் எத்தனை சுத்தமான தொழுவத்தில் உயர்தர உணவு வகைகள் கொடுத்து வளர்த்தாலும் பன்றியின் இறைச்சியில் இயற்கையாக வளரும் புழுக்களின் உற்பத்தியை தடுக்க முடிவதில்லை. அதேப்போன்று ஆடு, மாடு, கோழிப்போன்ற உண்ணுவதற்கு இறைவனால் அனுமதிக்கப்பட்ட கால்நடைகள் சில நேரங்களில் கழிவுகளை உண்டாலும் அதனுடைய இறைச்சியில் மாற்றங்கள் ஏற்படாமல் ப்யூர் மட்டனாக கிடைக்கிறது.இறைவன் படைத்தப் படைப்பி;னங்களின் அமைப்பில் மனிதன் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதற்கு மேலைநாட்டு கோக் மட்டன் பெரிய உதாரணமாகும்.ஒட்டகத்தின் இறைச்சியும், அதனுடைய பாலும்

உலகிலேயே கால்நடைகள் தரும் பாலில் அதிகசத்து நிறைந்துக் காணப்படுவது ஒட்டகப் பாலில் என்பதை நாம் அனைவரும் நன்கறிவோம். இத்தனை அபரிமிதமான சத்தை வழங்கக்கூடிய ஒட்டகத்தின் பிரதான உணவு என்னத்தெரியுமா ? முட்செடிகளும், காய்ந்த சருகுகளுமாகும் !.முட்செடிகளையும் காய்ந்த சருகுகளையும் மேயந்து விட்டு இத்தனை அபரிமிதமான சத்துள்ளப பலை ஒட்டகம் தருகிறது என்றால் இறைவன் தனது ஆற்றலை மனிதர்கள் புரிந்து கொள்ளும் விதம் இதன் மூலமாகவும் வெளிப்படுத்துவதை கவனிக்க வேண்டும்

பாலைவனத்தில் வாழ்க்கை நடத்திய அந்தக்கால மக்கள் உண்பதற்கே உணவு வகைகள் கிடைக்காத காலமது என்பதால் ஒட்டகத்திற்கு அவர்களால் எங்கிருந்து உயர்தர தீவணங்கள் கொண்டு வந்து கொடுக்க முடியும் ? தாராளமாக கிடைத்தால் கொடுப்பதில் எவ்வித நஷ்டமுமில்லை காரணம் அதற்கு கொடுப்பதை வட அதனிடமிருந்து பயணடைவது அதிகம். அது இன்றைய காலத்தில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் போன்ற செல்லப்பிராணி அல்ல அந்த மக்களுக்கு அன்று ஒட்டகம் தவிர்க்க முடியாத பிராணி ஒட்டகமில்லாமல் அவர்களால் எங்கும் பயணிக்க முடியாத நிலை அதனால் எத்தனை உயர்தர தீவணங்கள் வேண்டுமானாலும் கொடுக்கலாம் அந்தளவுக்கு திருப்பி பலனலிக்கக் கூடியது ஒட்டகம். ஆனாலும் கொடுக்க முடியாது.அதற்கு காரணம் ஒன்று அவர்களது வறுமை, மற்றொன்று எளிதில் கிடைக்காது அதனால் அந்த சூழ்நிலைக்கொப்ப அங்கு எளிதில் கிடைபதைக் கொண்டு ஒட்டகம் தனது உணவை போதுமாக்கிக் கொள்வதற்காக பாலைவனத்தில் முளைக்கின்ற முட்செடிகளை அவற்றிற்கு உணவாக்கி அதை இலகுவாக உண்பதற்கு அவற்றின் உதடுகளை ரப்பர் போன்று இறைவன் வடிவமைத்தான். முட்செடிகளை உண்ணும்பொழுது அதனுடைய ரப்பர் போன்ற உதடுகளில் முட்கள் பட்டு நொறுங்கி விழுந்து இலைகள் மட்டுமே வாயிக்குள் செல்லும். அந்தளவுக்கு கைதேர்ந்தப் படைப்பாளன் ஏகஇறைவன் மிக நேர்த்தியாக ஒட்டகத்தை வடிவமைத்தான். SôúU @YoLû[l TûPjúRôm. @YoL°u @ûUlûT YÛlTÓj§ú]ôm. 76:28அவ்வாறான முட்செடிகளையும், காய்ந்த சருகுகளையும் உண்டு தரக்கூடிய ஒட்டகத்தின் பாலில் மனிதனின் உடல்நலத்திற்கு சிறந்த ஆரோக்கியத்தையும், நோய் நிவாரணிகளையும் ஏற்படுத்தினான் ஏகஇறைவன்.அந்தக் காலத்தில் அரேபியர்கள் மிகவும் திடகாத்திரமான உடலமைப்புடன் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் அரேபியர்கள் அந்தளவுக்கு ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு கீரை, காய்கறிகள், பழங்கள் போன்றவைகள் சாப்பிட வில்லை அவைகள் பாலைவனத்தில் முளைப்பதில்லை அவர்களுடைய உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும், ஆரோக்கியத்தையும் வழங்கிக் கொண்டிருந்ததற்கு அவர்கள் தினந்தோறும் அருந்தி வந்த ஒட்டகப்பால் முக்கிய காரணியாகத் திகழ்ந்தது. ( இன்றைய அரேபியர்கள் அவ்வாறில்லை இவர்கள் பெப்ஸி கோலாவிலும். அஜினா மோட்டா உணவிலும் மூழ்கி உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கி;னறனர்). காலம் கடந்தேனும் இன்றைய மக்கள மேல்படி ஒட்டகப் பாலில் மற்றப் பாலை விட எந்தளவுக்கு சத்துக் கூடுதலாக இருக்கிறது என்றும்> அவைற்றினால் உடல் நலத்திற்கு என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கின்றன என்றும்> என்ன மாதிரியான நோய்களை எதிர்க்கும் ஆற்றல் இருக்கி;னறன என்றும் விரிவான ஆய்வுகள் செய்து அறிவிக்கின்றனர்.

இந்தளவுக்கு உடல் ஆரோக்கியத்திற்கும்> நோய்களை எதிர்க்கும் திறன் வாய்ந்த சத்தானப் பாலைத் தருகின்ற ஒட்டகம் உட்கொள்ளும் உணவு காய்ந்த சருகுகளும், முட்செடிகளும் தான் என்றால் வியப்பாக இல்லையா ? அது தான் உயிரிணங்களின் மீது இறைவன் ஏற்படுத்திய அமைப்பை யாரும் மாற்ற முடியாது.

இந்தளவுக்கு உடல் ஆரோக்கியத்திற்கும்> நோய்களை எதிர்க்கும் திறன் வாய்ந்த சத்தானப் பாலைத் தருகின்ற ஒட்டகம் உட்கொள்ளும் உணவு காய்ந்த சருகுகளும், முட்செடிகளும் தான் என்றால் வியப்பாக இல்லையா ? அது தான் உயிரிணங்களின் மீது இறைவன் ஏற்படுத்திய அமைப்பை யாரும் மாற்ற முடியாது.நோய் நிவாரணிகளும், உடல் ஆரோக்கியமும்ஒட்டகத்தின் பாலில் தனித்தன்மை வாய்ந்த இன்சுலின் உள்ளது இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. பசும் பால் அலர்ஜி உள்ளவர்கள் ஒட்டகப்பாலை பயப்படாமல் குடிக்கலாம் ஏனென்றால் இதில் உள்ள புரோட்டீன்கள் வித்தியாசமானது மேலும் இதில் பாக்டிரியா, வைரஸ் எதிரப்பு சக்திகள் (Bactericidal, Virucidal) இயற்கையாகவே அமைந்துள்ளது. மேலும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் இது Sever skin condition, Auto immune diseases, Psoriasis, Multiple Sclerosis போன்ற நோய்களையும் குணப்படுத்தும்.விட்டமின் பீ,சீ சத்துக்களை நிறையக் கொண்ட ஒட்டகப் பாலில், பசுப் பாலில் இருப்பதைவிட பத்து மடங்கு அதிகமான இரும்புச் சத்து இருப்பதாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. பசும்பாலை விட இனிப்புக் குறைவான ஒட்டகப் பால், வளைகுடா நாடுகளெங்கும் அபரிதமாக அருந்தி வருகின்றார்கள். Harrods, Fortnum & Mason போன்ற பாரிய விற்பனை நிலையங்கள், பெட்டிகளில் அடைக்கப்பட்ட ஒட்டகப் பாலை விற்பனை செய்வதில் உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. விட்டமின் சத்துடையது என்பது மட்டுமல்ல, புற்றுநோய், எயிட்ஸ் போன்றவற்றை எதிர்க்கும் சக்தியையும் ஒட்டகப்பால் கொண்டிருக்கின்றது. ஆதாரம்:நம்மில் பலர் பசும் பால் அல்லது எருமைப் பாலை அருந்தியிருப்போம். ஏன், தமிழக கிராமங்களில் ஆட்டுப் பால் கூட குடித்திருப்பார்கள். ஆனால் ஒட்டகப் பால் பற்றி அறிந்திருக்கிறீர்களா? ஒட்டகப் பாலின் மருத்துவ குணங்கள் அளவிடற்கரியது. ஒட்டகப்பாலில் உள்ள மருத்துவ பலன்களில் ஆண்மையின்மையை போக்கும் பலனும் உள்ளது. இந்திய சந்தையில் ஒட்டகப் பாலுக்கு உள்ள வரவேற்பைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக ராஜஸ்தான் பால் சங்கம் (ஆர்எம்எஃப்) அண்மையில் ஒட்டகப் பால் பாக்கெட்டுகள் விற்பனையை அறிமுகப்படுத்தியது. தற்போது ஒட்டகப் பால் பாக்கெட்டுகள் ஜெய்ப்பூர், பிகானிர், புதுடெல்லி மற்றும் புதுடெல்லியில் உள்ள சராஸ் பால் கடைகளில் கிடைக்கின்றன.
ஒட்டகப் பாலில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் தவிர ஆண்மையின்மையை போக்கக்கூடிய திறனுடன் சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில், ஒட்டகப் பாலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக ஆர்.எம்.எஃப். அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்க்கரை நோய்க்கு ஒட்டகப்பால் மிகவும் சிறந்தது என்றும், ஒட்டகப்பாலின் குணங்கள் பற்றி பல கட்டுரைகள் படித்திருப்பதாகவும், வி.பி.சர்மா என்ற நுகர்வோர் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். சர்க்கரை நோயாளிகள் ஒட்டகப் பாலை அருந்துமாறு தாம் கேட்டுக் கொள்வதாகவும், நோய் இல்லாதவர்களும் கூட இதனை தினமும் குடித்து வரலாம் என்றும் அவர் கூறினார். ராஜஸ்தானின் கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த வயதானோர் இதுபற்றிக் கூறுகையில், ஒட்டகப் பாலில் ஆண்மையை அதிகரிக்கும் மருத்துவ சக்தி உள்ளதாகக்கூறுகிறார்கள்.

ஒட்டகப் பால் பாக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மாதத்தில், நாளொன்றுக்கு ஆயிரம் லிட்டர் சராசரியாக விற்பனை செய்யப்படுகிறது. ராஜஸ்தான் முழுவதிலும் நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் லிட்டர் ஒட்டகப்பாலை பெறமுடியும் என்று ஆர்எம்எஃப் ஏற்கனவே மதிப்பீடு செய்துள்ளது.

ஆண்மையின்மை சமீப காலங்களில் அதிகரித்து வருவதும் ஒட்டகப்பால் நுகர்வை முக்கியப் படுத்தியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. துவக்கத்தில் சர்க்கரை நோயாளிகளிடம் இருந்தும், நடுத்தர வயதுடைய நுகர்வோரிடம் இருந்தும் ஒட்டகப் பாலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், சந்தையில் அதிக அளவில் ஒட்டகப்பால் கிடைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சராஸ் பால் பண்ணை நிர்வாக இயக்குனர் மதுக்கர் குப்தா தெரிவித்துள்ளார்.

ஒட்டகப் பாலில் லெனோலின் அமிலம் உட்பட 6 வகையான அமிலங்கள் காணப்படுவதாகவும் உடலின் சுருக்கங்களை போக்குவது உள்ளிட்ட தோல் தொடர்பான வியாதிகளையும் நிவர்த்தி செய்வதாக உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. எது எப்படியோ ஒட்டகப் பால் விரைவில் அனைத்து இடங்களிலும் கிடைக்கப்போவது உறுதி. ஆதாரம்:1400 வருடங்களுக்கு முன்னரே பெருமானார் (ஸல்) அவர்கள் ஒட்டகப் பாலில் நோய் நிவாரணி இருப்பதைக் கண்டறிந்துக் கூறினார்கள். 1400 வருடங்களுக்கு முன்னரே பெருமானார் (ஸல்) அவர்கள் ஒட்டகப் பாலில் நோய் நிவாரணி இருப்பதைக் கண்டறிந்துக் கூறினார்கள். மதீனா வந்த 'உக்ல்' மற்றும் 'உரைனா' குலத்து மக்கள் சிலருக்கு நோய் ஏற்பட்டது. அவர்கள் 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு அடைக்கலம் அளித்து உணவும் அளியுங்கள்'' என்று கேட்டனர். (அவ்வாறே அவர்களுக்கு அடைக்கலம் தந்து உணவும் அளிக்கப்பட்டது. பசிப் பிணி நீங்கி) அவர்கள் நலம் பெற்றபோது 'மதீனா(வின் தட்ப வெப்பநிலை) எங்களுக்கு ஒத்து வரவில்லை'' என்று கூறினர். அவர்களை நபி(ஸல்) அவர்கள் பாறைகள் நிறைந்த 'அல்ஹர்ரா' எனும் இடத்தில் தம் ஒட்டகங்கள் சிலவற்றுடன் தங்கச்செய்து 'இவற்றின் பாலை அருந்துங்கள்'' என்று கூறினார்கள். அவர்கள் குணமடைந்தபோது நபி(ஸல்)அவர்களின் (ஒட்டக) மேய்ப்பாளரைக் கொன்றுவிட்டு அவர்களின் ஒட்டகங்களை இழுத்துச்சென்றுவிட்டனர்... அனஸ்(ரலி) அவர்கள் கூறிய புகாரியின் ஹதீஸ் சுருக்கம். 5685. மதீனா வந்த 'உக்ல்' மற்றும் 'உரைனா' குலத்து மக்கள் சிலருக்கு நோய் ஏற்பட்டது. அவர்கள் 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு அடைக்கலம் அளித்து உணவும் அளியுங்கள்'' என்று கேட்டனர். (அவ்வாறே அவர்களுக்கு அடைக்கலம் தந்து உணவும் அளிக்கப்பட்டது. பசிப் பிணி நீங்கி) அவர்கள் நலம் பெற்றபோது 'மதீனா(வின் தட்ப வெப்பநிலை) எங்களுக்கு ஒத்து வரவில்லை'' என்று கூறினர். அவர்களை நபி(ஸல்) அவர்கள் பாறைகள் நிறைந்த 'அல்ஹர்ரா' எனும் இடத்தில் தம் ஒட்டகங்கள் சிலவற்றுடன் தங்கச்செய்து 'இவற்றின் பாலை அருந்துங்கள்'' என்று கூறினார்கள். அவர்கள் குணமடைந்தபோது நபி(ஸல்)அவர்களின் (ஒட்டக) மேய்ப்பாளரைக் கொன்றுவிட்டு அவர்களின் ஒட்டகங்களை இழுத்துச்சென்றுவிட்டனர்... அனஸ்(ரலி) அவர்கள் கூறிய புகாரியின் ஹதீஸ் சுருக்கம். 5685. அதன் உடம்பில் புரோட்டீன் என்ற சத்து குறைய ஆரம்பித்ததும் சிறுநீரில் வெளியாகும் யூரியா என்ற கழிவின் அளவை குறைத்துக்கொண்டு அதை (Microbial Synthesis) புரோட்டீனோடு கலந்து சக்தியாக மாற்றிவிடுகிறது அதன் சிறுநீரகம். சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் தூயவன்.ஏகஇறைவன் அல்லாஹ் கைதேர்நத படைப்பாளன் என்பதற்கு இதை விட ஒரு சான்றுத் தேவையா ? ஒட்டகத்திற்குள் இன்னும் ஏராளமான சான்றுகளை இறைவன் வைத்துப் படைத்திருக்கிறான். இனி வரும் காலங்களில் அல்லாஹ் நாடினால் அதையும் பார்க்கலாம்.أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ

ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? 88:17.لْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

பிரணாப் இலங்கை சென்றது எதற்கு? பிணங்களை எண்ணிப்பார்க்கவா?

இலங்கை ராணுவம் நடத்தும் இனப்படுகொலை தடித்த தோலையும் ஊடுருவி ஐநாவை ஒப்புக்கெனும் குரல் கொடுக்க வைத்திருக்கிறது. இந்தியாவோ குடியரசுக்கொண்டாட்டங்களில் மூழ்கிக்கிடக்கிறது. தமிழ் மக்கள்

எரிந்துகொண்டிருக்கையில் தமிழினத்தலைவர்(!) பிடில் கச்சேரி நடத்திக்கொண்டிருக்கிறார் இறுதிவேண்டுகோள் என்ற தலைப்பில். மாண்வர்கள் தொடர்ச்சியாக போராடிக்கொண்டிருக்கிறார்கள், குடியரசுதினத்தை மறுத்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டியிருக்கிறார்கள் மக்கள். பலருக்கு புறியவில்லை அடுத்து எப்படி போராடுவதென்று? சேலம் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் புறியவில்லை, ஆயிரம் ஆயிரம் பேர்களை கொன்று குவிப்பவர்களுக்கு பத்துப்பேரின் பட்டினிப்போராட்டம் உரைக்கப்போவதில்லை என்று. ஆயுதங்கள் அனுப்பியதும், அதை இயக்க தொழில்நுட்ப வல்லுநர்களை அனுப்பியதும், களத்தில் பணியாற்ற ராணுவ அதிகாரிகளையே அனுப்பியதும் அம்பலப்பட்ட பின்னரும் இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் போராட்டங்கள் வீணானவை என்பது புறிந்திருக்கவேண்டும். பிரணாப் முகர்ஜி தன்னுடன் இந்திய அரசின் பரிசாக 120 கவசவாகனங்களை எடுத்துச்சென்றிருக்கும் பின்னராவது…….

பிராந்திய வல்லரசாக முறுக்கிக்கொண்டிருக்கும் இந்தியா சுய நிர்ணய உரிமைப்போராட்ட இயக்கங்களை நசுக்கியே வந்திருக்கிறது. காஷ்மீரிலும் வடகிழக்கிலும் இன்னும் நசுக்கிக்கொண்டிருக்கிறது. இந்திய தரகு முதலாளிகளின், பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்காக எதையும் செய்து கொடுக்கத்தயாராக இருக்கிறது மண்மோகன் அரசு. துரோக காங்கிரஸ் மட்டுமல்ல பாசிச பிஜேபி தொடங்கி போலிகள் ஊடாக அனைத்து ஓட்டுக்கட்சிகளும் இதற்கு விலக்கல்ல. இலங்கையை ஒட்டச்சுரண்டுவதற்கு அங்கே அமைதி தேவைப்படுகிறது. அதற்காகத்தான் ராஜபக்சேவுடன் இணைந்து கொண்டு நரவேட்டை ஆடிவருகிறார்கள். நக்சல்களையும் மாவோயிஸ்டுகளையும் எதிர்கொண்டுவரும் இந்திய அதிகாரவர்க்கத்திற்கு புலிகள் மேலோங்கிவருவதை தடுப்பதும், அவர்களை ஒழிப்பதும் தேவையாயிருக்கிறது, குறிப்பாக நேபாளப்புரட்சிக்குப்பிறகு. தமிழக ஓட்டுக்கட்சிகள் நடத்தும் போராட்டங்களெல்லாம் கிள்ளிவிட்டுப்பின் ஆட்டப்படும் காரியவாத தோட்டிலாட்டல்கள் என்றானபிறகு அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது போல் நடிக்கும் தேவையும் இல்லாமல் போய்விட்டது. சரி, இங்கு போராடுபவர்கள் சுயநிர்ணய உரிமை வேண்டியா போராடுகிறார்கள்? இலங்கை தமிழர் பிரச்சனையின் ஆழ அகலங்களை புறிந்துகொள்ளாமல் ஏதோ தமிழர்களை கொல்கிறார்களாம் என்று தன்னிரக்கம் மேலிட செயல்படுபவர்களால் எதை தீர்க்கமாக முன்வைக்க முடியும்? ஈழத்திற்கு குரல் கொடுப்பவர்களால் காஷ்மீரத்திற்கு குரல் கொடுக்க முடியுமா?

இலங்கையும் புதிய சூழலுடன் இருக்கிறது. முன்பிருந்த நிலமை அங்கில்லை. சற்றேரக்குறைய புலிகள் ஒடுக்கப்பட்டுவிட்டனர். இனி நேரடி யுத்தத்திற்கோ இலங்கை ராணுவத்தை பயங்கொள்ளவைக்கும் ராணுவ நடவடிக்கைக்கோ திரும்ப மிக நீண்ட காலம் பிடிக்கலாம் புலிகளுக்கு, அல்லது இயலாமலும் போகலாம். அதுவரை தற்கொலை தாக்குதல்களும் குண்டுவெடிப்புகளுமே வழியாகலாம். கர்ணாவைப்போல் ஒரு கோடாரிக்காம்பை பிடித்து அரசியல் தீர்வாய் காட்டிவிட்டு முதலாளித்துவப்படையெடுப்பும், இனஅழிப்பும் முன்னைக்காட்டிலும் தீவிரப்படுத்தப்படலாம். இது தான் முப்பதாண்டுகால போராட்டத்தின் முடிவா? உலகிலேயே பலம் மிகுந்த விடுதலை இயக்கம் என்று விதந்தோதப்பட்ட புலிகளின் ராணுவ பலம் ஏன் தமிழ் ஈழத்தை சாதிக்கமுடியவில்லை? புலிகளின் ராணுவ பலம் தான் இலங்கை தமிழர்களின் இன்றைய இழிநிலைக்கு காரணமாகி நிற்கிறது. தமிழ் மக்களின் எந்தப்போராட்ட வடிவமும் இன்று பயங்கரவாதமாக மொழிமாற்றம் பெற்றிருக்கிறது. மக்களை நம்பிப்போராடாமல் ஆயுதத்தை நம்பிப்போராடியதால்தான் நெருக்கடி வந்தபோது எதிர்கொள்ளமுடியாமல் தமிழ்நாட்டு ஓட்டுப்பொறுக்கிகளின் தினப்படி நாடகங்களை கண்டு எப்படியும் போரை நிறுத்திவிடுவார்கள் என நம்பினார்கள். இந்தியபேரரசு எங்களை கைவிடாது என்று அறிக்கையாய் விட்டுக்கொண்டிருந்தார்கள். தமிழ் ஈழம் தமிழ் மக்கள் என்பது போய் இந்துக்கள் என்று கூறியாவது தம் இருப்பை தக்கவைத்துக் கொள்ளவேண்டுமென்று பாசிச இந்து வெறியர்களுக்குக்கூட வால் பிடிக்கத்தயாராயினர். இவைகளெல்லாம் எதைத்தெளிவாக்குகிறது? ராணுவ பலத்தைவைத்து மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்துவிடமுடியும் என்பது அடிப்படையிலேயே தவறான வாதம் என்பதைத்தான். இன்று ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டும் பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாகியும் நொருங்கிக்கிடக்கிறது ஈழம். இதை வெற்றி எனக்கொண்டாடும் சிங்கள் பேரினவாத அரசின் அழைப்பின்படி இலங்கை சென்றிருக்கிறார் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அதுவும் 120 கவசவாகனங்களை பரிசாக எடுத்துக்கொண்டு.

இந்த நிலையில் தமிழக மக்கள் செய்யவேண்டியது என்ன? இலங்கை தமிழ் மக்களை அணிதிரட்டி இன அழிப்புக்கு எதிராக சுயநிர்ணய உரிமை கோரும் போராட்டங்களை நடத்த உணர்வும் தம்பும் ஊட்டவேண்டிய கடமை தமிழக மக்களுக்கு இருக்கிறது. அதை எப்படிச்செய்வது? ஓட்டுக்கட்சிகள் அடிக்கும் கூத்துகளாக போராட்டங்களை குறுக்கிவிடாமல் நடுவண் அரசுக்கு நெருக்கடியை தரக்கூடிய போராட்டங்களை நடத்தவேண்டும். அத்தகைய போராட்டங்களை ஏற்கனவே புரட்சிகர அமைப்புகள் நடத்திக்கொண்டிருக்கின்றன. அவர்களோடு இணையட்டும் உங்கள் கரங்கள். அந்த முழக்கங்கள் இந்திய அரசை உலுக்கும் போது, இலங்கை த்தமிழர்கள் மீண்டெழுவர் பீனிக்ஸ் பறவையாய்.

'எல்லாப் புகழும் இறைவனுக்கே'': ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசிய ரஹ்மான்

லாஸ் ஏஞ்செல்ஸ்: 81வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.00 மணிக்குத் தொடங்கியது.

இதில், ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான (ஒரிஜினல் ஸ்கோர்) ஆஸ்கர் விருது மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது ('ஜெய் ஹோ') வழங்கப்பட்டது.

விருதைப் பெற்ற பின் ரஹமான் பேசுகையில்,

நான் இங்கு வருவதற்கு முன் மிகுந்த அச்சத்துடனும் பெரும் மகிழ்ச்சியுடனும் இருந்தேன். ஏதோ திருமணத்துக்கு வருவது போல இருந்தது. இந்த விருதுக்குக் காரணம் என் தாயின் ஆசிர்வாதம். அவருக்கும் விருது வழங்கிய அகாடெமிக்கும் என் நன்றிகள்.

எனது இசைக் கலைஞர்கள், இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் நன்றி. என் வாழ்நாள் முழுவதும் எனக்கு அன்பு செலுத்தவும், பகைத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தன். நான் அன்பையே தேர்வு செய்தேன். கடவுள் நம்மோடு இருக்கையில் நமக்கு எல்லாம் கிடைக்கும்.

இந்ச விருதை என் தாயகமான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்ற ரஹ்மான்,

''எல்லாப் புகழும் இறைவனுக்கே'' என்று தமிழில் உணர்ச்சிப்பூர்வமாய் மேடையில் பேசி தனது தமிழ் பற்றையும் காட்டினார்.

வென்றது தில்லைச் சமர்; வீழ்ந்தது தீட்சிதத் திமிர்

தில்லையில் குடிகொண்டிருக்கும் நடராஜர் பார்க்கும் கண்ணுள்ளவராக இருந்திருந்தால் கோவிலுக்குள்ளேயே தீட்சிதர்கள், செய்யும் கொடூரங்களையும் காமக்களியாட்டங்களையும் கண்டு கண்ணீர் வடிப்பதை பக்தர்கள் காண நேர்ந்திருக்கும்.

சிதம்பரம் நகரின் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் இளங்கோ பெயர் குறிப்பிட்டு தீட்சிதர்கள் நடத்திய கொலை கொள்ளை கொழுப்பெடுத்த விளையாட்டுக்களை புகார் மனுவாக முதல்வர்க்கு அனுப்பியிருக்கிறார். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் தங்கம் வேய்ந்த கூரைகளையும் சொத்தாகக் கொண்ட தில்லை நடராஜர் கோயிலையும் உண்டியல் வைக்காமல் பக்தர்களிடம் வசூலித்த பணம் நகைகளையும் பல்லாண்டு காலமாக ஆண்டு அனுபவித்து வந்தனர் தீட்சித பார்ப்பனர்கள். கடவுளையே முகம் சுழிக்கச்செய்யும் இந்த கொட்டங்களை அடக்குவதற்கு நாத்திகர்கள் வரவேண்டியிருந்தது. தேவாரத்திருவாசகம் பாடி மூடிக்கிடந்த கதவை திறந்ததாக நம்பப்படும் கோவிலில் தேவாரத்திருவாசகங்களை பாட அனுமதி மறுக்கப்பட்டது. அப்படி ஒரு முயற்சியில் அடித்து விரட்டப்பட்ட ஆறுமுகச்சாமி என்ற சிவனடியார் வழியாக புரட்சிகர கம்னியூஸ்டுகளில் கைகளுக்கு அந்தப்பிரச்சனை வந்தது முதல் தொடங்கியது போராட்டம். தில்லை மக்களையும், பக்தர்களையும் இணைத்துக்கொண்டு நடந்த அந்த தொடர் போராட்டம் இறுதியில் தீட்சிதர்கள் தமிழுக்கு இடமில்லை என்று யாரை அடித்து விரட்டினார்களோ அந்த ஆறுமுகச்சாமி தீட்சிதர்கள் முன்னால் யானையில் அழைத்துவரப்பட்டு தமிழில் பாடவைக்கப்பட்டார். இதைச் சாதிப்ப‌த‌ற்கு க‌டும் போராட்ட‌ங்க‌ளை ந‌ட‌த்த‌வேண்டியிருந்த‌து.கொடும் ந‌ரித்த‌ன‌ங்க‌ளையும் குயுக்திகளையும் எதிர் கொள்ள‌ வேண்டியிருந்த‌து. ஆனாலும் அதோடு முடிந்துவிட‌வில்லை. தொட‌ர்ந்தது, தொட‌ர்கிற‌து.

க‌ருவ‌றைக்குள் நுழைய‌ முன்ற‌ ந‌ந்த‌னை எரித்துக் கொன்றுவிட்டு ஜோதியில் க‌ல‌ந்துவிட்ட‌தாக‌ க‌தை க‌ட்டி அதையே புராண‌மாகச் சொல்லி ப‌க்த‌ர்க‌ளை ஏமாற்றும் தீட்சித‌ர்க‌ளின் கொட்ட‌த்தை அட‌க்கும் முய‌ற்சியில் அடுத்த‌க்க‌ட்ட‌ வெற்றியாக‌ அமைந்த‌துதான் க‌ட‌ந்த‌ திங்க‌ள‌ன்று வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ தீர்ப்பு. அத‌ன்ப‌டி இன்னும் ஒருவார‌ கால‌த்திற்குள் சித‌ம்ப‌ர‌ம் ந‌ட‌ராஜ‌ர் கோவிலை நிர்வகிக்க‌ அலுவ‌ல‌ர் ஒருவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌டுவ‌த‌ன் மூல‌ம் இதுவ‌ரை தீட்சித‌ர்க‌ளின் கையிலிருந்த‌ கோவில் அர‌சின் கைக‌ளுக்கு போகிற‌து. தீர்ப்பு வ‌ந்த‌ அன்று மாலையே தில்லை ந‌ட‌ராஜ‌ர் கோவிலுக்கான‌ இந்து அற‌நிலைய‌த்துறை நிர்வாக‌ அதிகாரியாக‌ கிருஷ்ண‌குமார் என்ப‌வ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார். அன்று‌ அற‌நிலைய‌த்துறையின் உத்த‌ர‌வுட‌னும் போலிஸ் காவ‌லுட‌னும் த‌மிழ் பாட‌ வ‌ந்த‌ ஆறுமுக‌ச்சாமியை த‌டுக்க‌ கும்ப‌லாக‌ திர‌ண்டு வாச‌லை அடைத்து அடாவ‌டித்த‌ன‌ம் செய்த‌ தீட்சித‌ ச‌ண்டிய‌ர்க‌ள், இன்று அதிகாரியின் நியமன‌ உத்த‌ர‌வை அதிக‌ம் எதிர்ப்புக்காட்டாம‌ல் பெற்றுக்கொண்டிருப்ப‌து அவ‌ர்க‌ள் ஆடிப் போயிருக்கிறார்க‌ள் என்ப‌த‌ற்கான‌ சான்று.

ஆனாலும் இது இறுதி வெற்றியல்ல. சிதம்பரம் கோவில் மட்டுமே இலக்கும் அல்ல. காஞ்சி ஜெயேந்திரனின் ஆபாச லீலைகளும், கேரள கண்டரரு மோகனருவின் அந்தரங்க லீலைகளும் அம்பலப்பட்டு நாறியதைப்போல் பெருங்கோவில்களின் நெடுங்கதவுகளுக்குப்பின்னால் புதைந்து கிடக்கும் அசிங்கங்களும் தீண்டாமைக்கொடூரங்களும், கொலைகளும் அம்பலப்படுத்தப்படவேண்டும். ஒண்டக்குடிசையின்றி கோடிக்கணக்கானோர் சாலையோரம் குடியிருக்கும் நாட்டில் கோவில்களுக்கு ஏக்கர்கணக்கில் நிலமும், பல கோடிக்கணக்கில் சொத்தும் இருப்பதும்; குந்துமணித்தங்கமில்லாமல் திருமணமாகமுடியாமல் பெண்கள் முதிர்கன்னிகளாய் உலாவரும் நாட்டில் கோவிலின் கூரை தங்கத்தால் வேயப்பட்டிருப்பதும் தன்மானமுள்ள மக்கள் முன் விடப்பட்டுள்ள சவால். அந்த சவால்கள் நேர்செய்யப்படுவதுவரை போராட்டங்கள் தொடரும். ஓயாது

குஜராத் அமைச்சரின் தலைமறைவு: நீதிக்கு இன்னும் தூரமிருக்கிறது

2002ல் குஜராத்தில் அரசே முன்னின்று நடத்திய இனப்படுகொலையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிடமுடியாது. அதை கலவரமாக காட்ட முயன்று வைக்கப்பட்ட கண்துடைப்பு விசாரணை கமிசன்களை கடந்து மீண்டும்

அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு குஜராத் மாநில குழந்தைகள் நல அமைச்சர் மாயா கோத்னானிக்கும், விஹெச்பி தலைவர் ஜெயதீப் பட்டேலுக்கும் (மட்டுமா?) தொடர்பு உள்ளதாகவும் விசாரணைக்கு வர மறுப்பதற்காக தலைமறைவுக்குற்றவாளிகள் எனவும் அறிவித்துள்ளது.

நாட்டில் நடந்த பல்வேறு திட்டமிட்ட கலவரங்களுக்கு மத்தியில் குஜராத்தில் நிகழ்த்தப்பட்டது வேறுபடுத்திக்காட்டப்பட்டது. வேறெந்தக்கலவரங்களிலும்(!) இல்லாத வகையில் குஜராத்தில் குற்றவாளிகள் தாங்களாகவே எப்படி அந்தப்படுகொலைகளை நிகழ்த்தினோம்? எங்கிருந்தெல்லாம் எங்களுக்கு உதவிகள் ஆயுதங்கள் வந்தன? வெளிப்படையாக இயங்குவதற்கான ஊக்கம் எங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? விளைவுகளை எண்ணி பயப்படவேண்டாம் என தைரியமூட்டியது யார்? என்றெல்லாம் தெளிவாக பேட்டியளித்து அந்த ஒளிக்காட்சிகள் தெகல்கா இணையதளம் மூலம் அம்பலப்படுத்தப்பட்டது. ஆனாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை, மேன்மக்களாக வலம் வந்தனர்.

அன்று கரண் தப்பாரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றிலிருந்து தண்ணீர் குடித்து வெளியேறினார் மோடி. இன்று சிறப்பு விசாரணைக்குழுவின் விசாரணையை எதிர்கொள்ளமுடியாமல் ஓடி ஒழிந்து கொண்டிருக்கிறார் அவரது அமைச்சர் ஒருவர். இதற்கு குஜராத் அரசின் பதில் என்ன? அமைச்சரவைக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என்பதுதான். ஓடிப்போன அமைச்சரின் உதவியாளர் ஒருவர் அமைச்சர் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் ஆனால் அவர் எங்கிருக்கிறார் எனக்கூறும் அதிகாரம் எனக்கில்லை என்கிறார். வழக்கம்போலவே ஊடகங்கள் இந்தச்செய்தியை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன. பார்ப்பனீயச்சார்பு என்பது ஊடகங்களுக்கு மட்டுமல்ல இந்திய அதிகாரவர்க்கத்தின் இயல்பாகவும் அமைந்திருக்கிறது. அதோடு மட்டுமன்றி பெரும்பான்மை மக்களின் பொதுப்புத்தியிலும் ஏற்றப்பட்டு வருகிறது.

குஜ்ஜார்களின் போராட்டத்தைக்கண்டு நாட்டிற்கு இது அவமானம் என்று கொதித்தெழுந்த நீதிபதியோ, நீதித்துறையோ குஜராத் இனப்படுகொலைக் குற்றவாளிகள் எப்படிச்செய்தோம் என நடித்துக்காட்டியதைக்கண்டு கொதித்தெழவில்லையே ஏன்?

அகமதாபாத் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் தாய் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனைத்தூக்கில் போடுங்கள் என்றார். இஸ்லாமியர்கள் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கிறார்கள் அதை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் சாமியாடும் சாமியார்கள், பெண்சாமியார் பிரக்யா சிங் கின் தந்தை நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியதன் பொருள் என்னவென்று கூறுவார்களா? அதுமட்டுமா? சிவசேனா போன்ற அமைப்புகள் வெளிப்படையாக நிதி திரட்டுகின்றன வழக்கை நடத்துவதற்கு. அத்வானி அந்தப்பயங்கரவாதிக்கு ஆதரவாக அறிக்கை விடுகிறார். பாஜக தலைவர்கள் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டுள்ளனர். யார் கைது செய்யப்பட்டார்கள்? எந்த அமைப்பு தடைசெய்யப்பட்டது? தடை செய்யபடுவது சிமி க்கு மட்டும் பிறப்புரிமையா?

ஒரு மாநில அமைச்சர் விசாரணைக்குப் பயந்து தலைமறைவாகியதைக் கண்டு எல்லா வாயையும் பொத்திக்கொண்டு கள்ள மௌனம் சாதிக்கும் வானரங்கள், காவல் துறை அதிகாரி கார்கரேயின் மரணத்தில் ஐயம் உள்ளது அதை தனியே விசாரிக்கவேண்டும் என்ற அந்துலேவின் நியாயமான கோரிக்கைக்கு வானத்துக்கும் பூமிக்குமாக எகிரிக்குதித்தனவே ஏன்? காங்கிரசும் அந்துலேவுக்கு தண்ணீர் தெளித்ததே ஏன்?

எல்லவற்றிற்கும் மேலாக இந்த பாசிசத்தை மதம் சார்ந்த விசயமாகவே மக்கள் புறிந்து கொள்கிறார்களே எப்படி? சிறுபான்மை மக்களும் கூட தங்கள் மதத்தை அழிக்க பெரும்பான்மை மதவாதிகள் செய்யும் சதிச்செயல் என்பதாகவே புறிந்துகொள்கிறார்களே எப்படி? நாட்டை அடிமைப்படுத்திய வெள்ளை ஏகாதிபத்தியவாதிகளுக்கு கைக்கூலியாக சேவகம் செய்ததற்கு பரிகாரமாக அவர்கள் ஏற்படுத்திக்கொடுத்த ஒருங்கமைப்புதான் இந்து மதம் என்பதை புறிந்துகொள்ள மறுப்பதே அதன் முதற்காரணம். சமண பௌத்த மதங்களோடு போட்டிபோட்டு செரித்த மதம் இந்து மதம் என நம்புவது அதன் புராணங்களைப்போன்றே புழுகு மூட்டை. இஸ்லாமிய கிருஸ்தவ மதங்களைப்போன்று சமூகவியல் தத்துவமாக தோன்றி வந்ததல்ல. மண்ணின் மைந்தர்களை அடக்கியாண்டு, கொன்றொழித்து அரசியல் மேலாண்மை பெறுவதற்கான செயல்திட்டமே பார்ப்பனீயம். அந்த பயங்கரவாத பார்ப்பனீயமே மதமாக இந்துமதமாக வேடம் பூண்டு தன் மனிதகுல விரோதத்தன்மையை மறைத்து நிற்கிறது. இதை சிறுபான்மை மதத்துக்கெதிரான பெரும்பான்மை மதம் எனக்கொள்வதும், தம் மதம் சார்ந்து அதை முறியடிக்க நினைப்பதும் முடிவெட்டிக்கொள்வதாகத்தான் ஆகுமேயன்றி தலைவெட்டுவதாய் ஆகாது. இதை புறிந்து கொள்ளாதவரை தெகல்காவின் அம்பலப்படுத்தலுக்கு மக்கள் ஏன் எதிர்வினையாற்றவில்லை என்பதற்கு விடையளிக்கமுடியாது. இதை புறிந்து கொள்ளாவிட்டால் குண்டுவெடிப்பு என்றதும் பயங்கரவாதம் பொடா வேண்டும் தடா வேண்டும் என ‘சோ’தாக்கள் குதிப்பதையும், பெண்சாமியார் கைது என்றதும் பயங்கரவாதத்திற்கு எதிராய் இப்படி ஒரு திட்டமிருந்தால் அதை ரகசியமாக வைக்கவேண்டும் என்று தொனி மாறுவதையும் சரியான திசையில் விளங்கிக்கொள்ளமுடியாது. மாயா கோத்தானி தலைமறைவானாலும், நாளையே சுற்றுப்பயணம் என்று திரும்பி வந்தாலும் அவர்களை சரியான திசைவழியில் அம்பலப்படுத்தி, தனிமைப்படுத்தி முறியடிப்பதையே இலக்காக கொள்ளமுடியும். அதுதான் மக்களுக்கு தேவையான வெற்றியாய் அமையும்.


இசை சந்தைக்கு இசையும் ஏ ஆர் ரகுமான்.

90களின் தொடக்கத்தில் தமிழ் திரை இசை உலகிற்கு அறிமுகமான இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், ஸ்லம்டாக் மில்லியனர் என்ற பிரிட்டீஸ் திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் கோல்டன் குளோப் என்ற விருதை

பெற்றுள்ளார். இதை தமிழன் என்ற முறையிலும், இந்தியன் என்ற முறையிலும் பெருமிதம் கொள்ளும் ஒன்றாக ஊடகங்கள் பெருமைப்படச்சொல்கின்றன. இலங்கையில் கொத்துக்குண்டுகள் மூலம் தமிழர்களின் உயிரும் உடமையும் குதறப்பட்டுக்கொண்டிருக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியும், ரகுமானின் குளோப் விருதும் பெருமிதம் கொள்ளும் உணர்வாக முன்னிருத்தப்படுகின்றன. இது ஒரு புறமெனில் மறுபுறம் இப்படம் இந்தியாவை கேவலப்படுத்துவதாக சில அறிஞர்கள்(!) கொதிக்கிறார்கள். சிலர் வழக்குத்தொடுத்திருக்கிறார்கள். தான் ஆராதிக்கும் ஒரு நடிகனின் கையெழுத்தைப்பெற மலத்தில் புறண்டெழுவதும், சேரிகளின் அவலத்தைக்காட்டுவதும் இந்தியாவை கேவலப்படுத்துவதாகும் என்றால், சேரிகளை இன்னும் சேரிகளாகவே வைத்திருப்பதும், ஒரு பிரிவு மக்கள் தாங்கள் வாழ்வதற்காக மலத்தோடு உழன்றுகொண்டிருப்பதும் இந்தியாவிற்கு அவமானமாக தெரியவில்லையா? என்று அவர்கள் சொல்லவில்லை. அவர்கள் சொல்லவும் மாட்டார்கள். ஒரே இரவில் ஏழை கோடீஸ்வரனாகும் கோடம்பாக்கத்துக்குப்பையை ஆங்கிலத்துடைப்பத்தால் வாரியதால் ஆஸ்காரை வெல்லும் என்று இப்போதிருந்தே ரசிகர்கள் கொண்டாடக் காத்திருக்கிறார்கள்.

பொதுவாக இசை என்பது எல்லாத்தட்டு மக்களாலும் ரசிக்கப்படக்கூடியதாகவும், விரும்பக்கூடியதாகவும் இருக்கிறது. இசை என்றால் பரவலாக அது திரைஇசையையே குறிக்கும். அவ்வாறல்லாமல் திரைப்படமல்லாத இசைப்பாடல்களும் அவ்வப்போது வந்ததுண்டு. இசையை ரசிப்பதாக குறிப்பிட்டாலும் அது பாடலை உள்ளடக்கியதாகவே இருக்கும். இப்படி திரைப்பட இசையானாலும், அதற்கு வெளியிலிருந்து வந்த இசையானாலும் அவை இரண்டு நோக்கங்களை கொண்டிருக்கும். மக்களுக்கு இசையின் மேலுள்ள மோகத்தை பயன்படுத்தி அவர்கலை அந்த மயக்கத்திலேயே தக்கவைப்பதற்கும், அதன் மூலம் இசைத்தட்டு விற்பனையை கூட்டி லாபம் பார்ப்பதற்கும். தங்களின் வாழ்வில் நேரடியாக கண்ட அனுபவங்களை அறிவாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கான கருவியாக இசையும் ராகங்களும் தோன்றின. பின்னர் உழைப்பின் பயன் உழைப்பவர்களுக்கு கிடைக்காமல் போனபோது உழைப்பின் மீது ஏற்ப்பட்ட சலிப்பைப்போக்கும் போதையாக பொழுதுபோக்காக உழைப்பை அபகரித்தவர்களால் முன்வைக்கப்பட்டது. இன்றுவரை அதுவே பல்வித வடிவமாற்றங்களுக்கு உள்ளாகி ஆனால் உள்ளடக்கம் மாறாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதோடு மட்டுமன்றி பலகோடிகளை ஈட்டித்தரும் இசைச்சந்தையாகவும் இன்று உருவெடுத்து நிற்கிறது. அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சோனி நிருவனம் தயாரித்து ஏஆர் ரகுமான் இசையமைத்து பாடி வெளியிட்ட வந்தேஏஏ மாட்ரம் எனும் (இந்து வெறி) தேசபக்தி இசை பத்து லட்சம் குறுந்தகடுகள் விற்கப்பட்டன. இசை என்னும் மயக்கம் அந்த பார்பனிய பாடலை பொழுது போக்கு என்னும் வடிவில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு மட்டுமன்றி பலகோடி லாபத்தையும் குவித்தது. இந்தவகையில் இளையராஜாவின் திருவாசகமும் அடக்கம். மக்களை கருக்கும் நச்சுச்சிந்தனைகளை கலையின் வடிவங்களாகவும், பொழுது போக்காகவும் கொள்பவர்களும், கொண்டாடுபவர்களும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும், போராடத்தூண்டும் பாடல்களை பிரச்சாரப்பாடல் என ஒதுக்குவது வேடிக்கையானது.

தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று பல படங்களுக்கு இசையமைத்திருந்தும் (ஸ்லம் டாக் மில்லியனரை விட சிறப்பாக சில படங்களுக்கு இசையமைத்திருப்பதாக அவரது இசை ரசிகர்கள் கூறுகிறார்கள்) ஸ்லம் டாக்கின் இயக்குனர் டானி பெய்லேவின் முக்கியத்துவம்விருதுக்குத்தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தேவைப்பட்டதாக கூறப்பட்டாலும், அமெரிக்க நாளிதழ்கள் இந்தப்படத்தையும் இசையையும் கொண்டாட்டம் என வர்ணித்து கட்டுரைகள் வெளியிடுவதற்கு பின்ன‌ணியிலுள்ள எண்ணம் வேறானது. இந்தியாவில் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் வடமாநிலங்களிலும் சேர்த்து ஆண்டொன்றுக்கு தோராயமாக 600 படங்களுக்கும் அதிகமாக வெளியாகின்றன. இவற்றின் பாடல்களுக்கும். திரைப்படமல்லாத பாடல்களுக்கும் இந்தியாவில் மிகப்பெரிய சந்தை இருக்கிறது. இவற்றை சில உள்நாட்டு நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்நிலையில் இந்தியா முழுவதிலும் ஓரளவு அறிமுகமான ஏஆர் ரகுமானின் இசைக்கு விருது வழ்ங்குவதன் மூலமும், அதைப்புகழ்ந்து கட்டுரைகள் வெளியிடுவதன் மூலமும் அந்த இசைச்சந்தையை கைப்பற்ற களத்தில் குதித்திருக்கின்றன. ஏஆர் ரகுமானின் மேற்கத்திய பாணி இசையமைப்பு இந்திய ரசிகர்களை ஏற்கனவே அதற்கு தயார்படுத்தி வைத்திருக்கிறது. தொடர்ச்சியாக இந்தியர்களுக்கு அழகிப்பட்டம் வழ‌ங்கியதன் மூலம் அழகு சாதனப்பொருட்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்ததையும், திரையரங்குகளை பெரும் நிறுவனங்கள் கைப்பற்றிவருவதையும் இந்த இடத்தில் நினைவு கூர்ந்து பாருங்கள். மேற்கத்திய இசைக்குப்பைகளையும், உணர்வற்ற கூச்சல்களையும், இந்தியச்சந்தையில் கொட்டி மக்களின் உழைப்பை மேலும் சுரண்ட கூரிய நகங்களுடன் காத்திருக்கின்றன அவைகள்.

”திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா” போன்ற பாடல்களை (தாஜ்மஹால் ஏஆர் ரகுமான்) இசையாகவும் கலை வடிவமாகவும் ரசிக்கும் மக்கள் “மக்கள் ஆயுதம் ஏந்துவது சொல்லம்மா வன்முறையா?” (மகஇக வெளியீடு) போன்ற பாடல்களை வன்முறை என்றும் பிரச்சாரப்பாடல்கள் என்றும் ஒதுக்குவது அவர்களை அவர்களே அழித்துக்கொள்வதற்குத்தான் துணைபோகிறது என்பதை உணரவேண்டும். அப்படி உணர்ந்து கொள்ளும் போது எது இசை என்பதை புறிந்து கொள்வதோடு, தினம் தினம் நம்மைச்சுற்றி மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கையில் இசை ஒரு பொருட்டல்ல எனும் இங்கிதத்தையும் தெரிந்து கொள்ளமுடியும்.

தேசபக்தி திருத்தொண்டர்!


இஸ்லாமிய சமுதாயத்தின் இளைஞர் பட்டாளத்துக்குத் தேசபக்தி உணர்வூட்டும் திருத்தொண்டராக விளங்கினார் சையத் மொகய்தீன். அவரது சண்ட மாருதச் சொற்பொழிவில் இலக்கிய நயம் மிளிர்ந்தது. தத்துவ விளக்கம் தவழ்ந்தது. புரட்சிச் சூறாவளியும் சுழன்றடித்தது. ஆதலால் மக்கள் அந்த இளைஞரைப் பொங்கி வரும் பேருவகையோடு "அபுல்கலாம்" என்று அழைத்தனர். அபுல்கலாம் என்ற அரபுச் சொல்லிற்கு "சொல்லின் செல்வர்" என்று பொருள். சையத் மொகய்தீன் என்ற பெயர் மறைந்து அபுல்கலாம் என்ற சிறப்புப் பெயரே நிலைத்தது.
வங்கப்பிரிவினையை எதிர்த்து சுதந்திர ஆவேசக் கனலை எழுப்ப அரவிந்தரும் பரோடாவில் இருந்து கல்கத்தா வந்து சேர்ந்தார். "கர்மயோகின்" என்ற வார ஏட்டைத் தொடங்கினார். துணிந்த வாலிப உள்ளங்களே காரியமற்ற கனிந்த உள்ளத்தோடு வருக! என்று அந்த ஏடு அறைகூவல் விடுத்த்து. அபுல்கலாமும் அரவிந்தரும் தேசபக்த அன்பால் பிணைக்கப்பட்டனர். அபுல்கலாம் இப்போது பழுத்த விடுதலை வீரரானார். ஆனால் அவருக்கு ஒரு பெரிய மனக்குறை.

"ரகசிய விடுதலை இயக்க ஸ்தாபனங்களை வங்கத்திலும் பீகாரிலும் தானே நிறுவி இருக்கிறொம். இந்தியா முழுவதும் இதன் கிளைகள் பரவ வேண்டாமா?" - இப்படி அவர் புரட்சித் தலைவர்களுடன் வாதிட்டார்.

"அமைக்கலாம் அபுல்கலாம். பரந்த அளவில் ஸ்தாபனங்களை அமைக்கும்போது ரகசியத்தைக் காக்க முடியுமா?"

"தூக்குமேடையே அழைத்தாலும் நமது ரகசியப் பணிகளை வெளியிடாத வீரர்களை மட்டும் சேர்த்துக்கொள்வோம்"- இது அபுல்கலாம் அளித்தபதில். அவர் ஒரு வழியாக தலைமறைவு இயக்கத் தலைவர்களைத் தன் கருத்தை ஏற்றுக்கொள்ளுமாறு செய்து இந்தியாவெங்கும் மாறுவேடத்தில் சென்று புரட்சி வீரர்களுடன் தொடர்பு கொண்டு ரகசிய விடுதலை இயக்க அமைப்புகளை அமைத்தார். செய்தி அறிந்த பல மாநில அரசாங்கங்கள் அபுல்கலாம் தங்கள் மாநிலத்தில் நுழையக்கூடது என்றுதடைவிதித்தன.

1908ம் ஆண்டு அபுல்கலாம் எகிப்திற்குச் சென்றார். விடுதலை வீரர் முஸ்தபா கமால் பாட்சாவின் ஆதரவாளர்களோடு தொடர்பு கொண்டார். அங்கே இளம் துருக்கியர்கள் தொடங்கி நடத்திய வார ஏடு அவரைப் பெரிதும் கவர்ந்தது. ஓர் ஏட்டின் மூலமாக லட்சோப லட்சம் மக்களைப் புரட்சியின் தூதர்களாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை விடி வெள்ளி முளைத்தது. அங்கிருந்து அவர் துருக்கிக்குச் சென்றார். துருக்கியின் ரகசியப் புரட்சித் தலைவர்களைச் சந்தித்தார்.

புரட்சி உலகக் கூடங்களில் படம்போட்ட வீரராக அனுபவக் களஞ்சியமாக 1912 ம் ஆண்டு அபுல்கலாம் தாயகம் திரும்பினர்.. "அரபு நாடுகளில் நடைபெறும் விடுதலை இயக்கங்களில் இஸ்லாமியர்கள் முன்னணியில் நிற்கும் போது இங்குமட்டும்?" - இந்தச் சிந்தனை சுழன்று சுழன்று வந்தது. இப்போது அவரது சிந்தையில் குடியேறியிருந்த ஒரே லட்சியம் இஸ்லாமிய சமுதாயத்தை முழுக்க முழுக்க விடுதலை இயக்கத்தின் போர்ப் பாசறைக்கு அழைத்து வர வேண்டுமென்பதுதான்..

அதற்காக அவர் அல்ஹிலால் என்ற உருது வார ஏட்டைத் துவக்கினார். ஒவ்வொரு இதழும் புரட்சி ஜுவாலையாக வெளியே வந்தது. இந்த ஏடு வெளிவந்த மூன்றே மாதங்களில் இஸ்லாமிய சமுதாயத்தில் பெரும் பரபரப்பைத் துடிதுடிப்பை ஏற்படுத்தியது.
இஸ்லாமிய இளைஞர் சமுதாயம் அல்ஹிலாலுக்கு மகத்தான வரவேற்பளித்தது.மூன்றே மாதங்களில் ஏற்கெனவே வெளியிட்ட பிரதிகளையெல்லாம் மீண்டும் அச்சடித்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டே ஆண்டுகளில் 'அல்ஹிலால்' வாரம் இருபத்தாறாயிரம் பிரதிகள்விற்பனையாயின. இது அன்றைக்கு உருதுப்பத்திரிக்கை உலகத்தில் எவரெஸ்ட் சாதனையாகும்.

இந்த ஏட்டில் ஆசாத் என்ற பூனை பெயரில் வந்த கட்டுரைகளை மக்கள் கற்கண்டுச் சுவையோடு படித்தனர். ஆசாத் என்றால் சுதந்திரம் என்று பொருள். இந்தப் புனைப் பெயரில் எழுதியவர் நமது அபுல் கலாம் தான். 1915 ஆண்டு வெள்ளை அரசாங்கம் அல்ஹிலாலின் தீவிரத்தைத் தாங்க இயலாது அச்சகத்தையே பறிமுதல் செய்தது.

ஐந்தே மாதங்கள் இடைவெளியில் அபுல்கலாம் அல்பலாக் என்ற வார ஏட்டைத் துவக்கினார். இப்போது வெள்ளை அரசாங்கம் தனது கடைசி ஆயுதத்தை வீசியது. 1916 ஆண்டு ஏப்ரல் மாதம் அபுல்கலாம் வங்க மாநிலத்தை விட்டுவெளியேற வேண்டுமென்ற உத்தரவு பிறந்தது. ஏற்கெனவே அபுல்கலாம் தங்கள் மாநிலத்தில் அடியெடுத்து வைக்கக்கூடாதென்று பம்பாய், பஞ்சாப் டெல்லி, உத்திரபிரதேச மாநிலங்கள் தடை விதித்திருந்தன. எனவே அவர் (பீகார் மாநிலம்) ராஞ்சிக்குச் சென்றார். ஆறுமாதங்களுக்குப் பின்னால் அவர் அங்கே கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் சிறையிலிருந்தார்.

1920ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி பூட்டிய இருப்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது.

1942ம் ஆண்டு ஆகஸ்ட் 7 நாள், பம்பாயில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வெள்ளையனே வெளியேறு என்று வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த தீர்மானத்தை வடித்தெடுத்தது. இந்தத் தீர்மானம் அன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்த அபுல்கலாம் ஆசாத்தின்தலைமையில் தான் நிறைவேற்றப்பட்டது..

பம்பாயில் புலாபாய் தேசாய் அவர்க்ளின் இல்லத்தில் தங்கியிருந்த ஆசாத் கைது செய்யப்பட்டார்.

1943ம் ஆண்டு ஏப்ரல்மாதம் சிறை அதிகாரி சீட்டாக்கான் மௌனமாக வந்து ஆசாத்திடம் ஒரு தந்தியை நீட்டினார். ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்த ஆசாத் தந்தியை வாங்கிப்பிரித்துப்பார்த்தார்.

அவருடையை அன்பு மனைவி காலமாகிவிட்டார் என்கிற துயரச்செய்தியைத் தாங்கி வந்திருந்தது அது.

1945ம் ஜுன் மாதம் அபுல்கலாம் ஆசாத் பங்குதாராவிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். மறுநாள் காலை கல்கத்தா நகரம் அவரை வரவேற்க எழுச்சிப் பெருங்குன்றாக எழுந்து நின்றது. ஹவ்ரா ரெயில் நிலையத்தை மக்கட் கடல் மூழ்கடித்துவிட்டது.

ஆசாத் காரில் ஏறினார். ஆமாம் எங்கே செல்வது? அவரை வரவேற்க ரெயில் நிலையத்திற்கு இரண்டு லட்சம் மக்கள் வந்திருந்தனர். ஆனால் நாலரை ஆண்டுகளுக்கு முன்பு நோய் வாய்ப்பட்ட நிலையிலும் தள்ளாடிக் தள்ளாடிக் வாசலுக்கு வந்து பம்பாய் காங்கிரசிற்கு அவரை வழியனுப்பி வைத்த மாதர்குல மாணிக்கம் அவரை அதே வாசலில் நின்று வரவேற்க இன்று இல்லையே? இல்லம் காலியாக வெறிச் சோடிக்கிடக்கிறதே..

ஆசாதின் மாதரசி நீங்காத துயில் கொண்டிருக்கும் சமாதியை நோக்கி கார் ஓடியது.கண்களில் திரையிட்டு நின்ற கண்ணீரைத் துடைத்துக்கொண்டே காரில் இருந்த ஒரு மாலையை எடுத்து சமாதியின் மீது சூட்டி அஞ்சலி(ஸலாம்) செலுத்தினார் ஆசாத். அமைதியாக 'பாத்தியா'(துஆ) ஓதினார்.

"அவரை கணவராக அடைய மாதவம் செய்திருக்க வேண்டும். இனவெறியைக் கொன்ற உயர்ந்த தேச பக்தன் தான் உண்மையான முசல்மானாக இருக்க முடியும். எனவே அவரைக் கணவராக அடைந்ததிலே நான்பெருமைப் படுகிறேன்" என்று புன்னகையோடு சொன்ன தேச பக்த திலகமல்லவா அந்த அம்மையார்
நன்றி: சோலை, ஆனந்தவிகடன்(25-02-09)


ஷேக் அப்துல் காதர்

கோமாதாவும் மூத்திர வியாபாரிகளும்

சில நாட்களுக்கு முன் நண்பரொருவர் இப்படி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.
Mr.Senkodi

What is your opinion of following article ?

Is it True ? If it is true can we drink ?

Medically it is ok ??

please answer it.

byrosekhan

one of the agenda from hindutva.

பெங்களூர்: பெப்சி, கோக் ஆகிய குளிர்பானங்களுக்குப் போட்டியாக, பசுவின்சிறுநீரை (கோமியம்) வைத்து தயாரிக்கப்பட்டுள்ள புதிய குளிர்பானத்தைஆர்.எஸ்.எஸ். அமைப்பு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த குளிர்பானத்திற்கு கெளஜல் என அது பெயரிட்டுள்ளது.இந்த குளிர்பானம் தற்போது ஆய்வக சோதனையில் உள்ளதாம். விரைவில் இதுமார்க்கெட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக இதுதொடர்பான ஆய்வுக்குழுவின் தலைவரான ஓம் பிரகாஷ் என்பவர் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த குளிர்பானத்தில் கண்டிப்பாக சிறுநீர்வாசனை அறவே இருக்காது. உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. தற்போதுமார்க்கெட்டில் உள்ள கார்போனைட் அடங்கிய குளிர்பானங்களைப் போல உடலைக் கெடுக்காது. எந்த வகையான நச்சுக் கிருமிகளும் இதில் இருக்காது என்றார் ஓம் பிரகாஷ். இந்தியாவில் தற்போது வெளிநாட்டு குளிர்பானங்கள்தான் கோலோச்சிவருகின்றன.. இவற்றை ஒழித்துக் கட்ட வேண்டும், இந்துத்வாவை இதிலும்புகுத்த வேண்டும் என இந்து அமைப்புகள் கூறி வருகின்றன. அந்த வகையில் இந்துக்கள் புனிதமாக கருதும் பசுவின் சிறுநீரை அடிப்படையாகக் கொண்ட குளிர்பானத்தை ஆர்.எஸ்.எஸ். தயாரித்துள்ளது. 2001ம் ஆண்டுதான் கோமியம், உடல் கோளாறுகளை குறிப்பாக கல்லீரல் பிரச்சினைகளை தீர்க்கும் அருமருந்து என பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸும் பிரசாரத்தைத் தொடங்கின என்பது நினைவிருக்கலாம். இதுதவிர உடல்பருமனையும் குறைக்கும் அரு மருந்து கோமியம். புற்று நோயைக் கூட இதுகுணப்படுத்தும் எனவும் இந்த அமைப்புகள் கூறி வந்தன. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடந்த 1994ம் ஆண்டு வெளிநாட்டுகுளிர்பானங்களையும், நுகர்வோர் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று கோரி பெரும் போராட்டத்தையும் மேற்கொண்டது நினைவிருக்கலாம். புதிய கோமிய குளிர்பானம் குறித்து ஓம் பிரகாஷ் மேலும் கூறுகையில், நாங்கள் தயாரித்துள்ள கெள ஜல் குளிர்பானம் பசுவின் சிறுநீரைக் கொண்டுதயாரிக்கப்படுகிறது. இதில் சில மருத்துவ மூலிகைகள், ஆயுர்வேத மூலிகைகளின் சாறும் சேர்க்கப்படும். இது விலை மலிவானது. விலை குறித்து இப்போது அறிவிக்கும் திட்டம் இல்லை. முறைப்படி தொடங்கப்பட்டவுடன் அனைத்து விவரமும் தெரிய வரும்.தற்போது உள்ள அமெரிக்காவின் குளிர்பானங்களுக்கு எங்களது புதியகுளிர்பானம் கடும் போட்டியைக் கொடுக்கும். அவர்களுக்கு கடும் போட்டியைக்கொடுக்கும் வகையில் நாங்கள் மார்க்கெட்டிங் செய்யவுள்ளோம் என்றார். உள்ளூரில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் இந்த கோமிய குளிர்பானத்தை ஏற்றுமதி செய்யப் போகிறதாம் ஆர்.எஸ்.எஸ்.

அண்மையில் தோழர் அரை டிக்கட் வினவு தளத்தில் பின்னூட்டமிடுகையில் கதை ஒன்றை சொல்லியிருந்தார். பிரிட்ஜ் (குளிர் பெட்டி) வாங்குவதற்கு ஒருவர் கடைக்கு செல்கிறார். விற்பனைப்பிரதிநிதியோ அவருக்கு அதை விற்க மறுக்கிறார். பின் அவர் பல நாட்களில் பல்வேறு வேடங்களில் வந்து கேட்டும் அவரை சரியாக அடையாளம் கண்டு ஒவ்வொரு முறையும் உனக்கு விற்பதற்கில்லைஎன மறுத்துவிடுகிறார். கடைசியில் சோர்ந்து போய் அவர் ஒவ்வொரு முறையும் நான் தான் என்று எப்படி சரியாக அடையாளம் கண்டு கொள்கிறீர்கள்?” என்று விற்பனை பிரதிநிதியிடம் கேட்டார். யோவ் நீ ஒவ்வொரு முறையும் பிரிட்ஜ் என்று கேட்டது ஒரு வாஷிங் மிஷினைஎன்றார். இதைப்போல்தான் பார்ப்பனீய பாசிசங்கள் சுதேசி என்றும் கலாச்சார காவலர்கள் என்றும் பல்வேறு முகமூடிகளுடன் வருகிறார்கள். ஆனாலும் அவர்களால் அவர்களின் சொந்த கோர முகத்தை மறைக்க முடிவதில்லை. அந்த வகையில் இப்போது கோமிய பானம். அதாவது பசுவின் மூத்திரத்திலிருந்து குளிர்பானம் தயாரிக்கிறார்களாம், அதற்கு கோஜல் என்று பெயராம். கோகோகோலா, பெப்சி போன்ற அமெரிக்க மூத்திரத்தில் உட்கொள்ளக்கூடாத அளவில் வேதிப்பொருட்கள் கலந்திருக்கின்றன என்றும், நச்சுத்தன்மை வாய்ந்தது என்றும் ஆய்வகங்களில் சோதனை செய்து நிரூபித்தனர் சில ஆண்டுகளுக்கு முன்பு. அதனைத்தொடர்ந்து பல ஊர்களிலும் அந்த அமெரிக்க மூத்திரத்தில் மின்ட் மிட்டாயை போட்டால் எப்படி பொங்கிச்சீருகிறது என்று பலர் நேரடியாக செய்து காட்டினர். இன்னும் சிலர் கழிப்பறையை கழுவி அதன் கரை நீக்கும் அமிலத்தன்மையை விளக்கிக்காட்டினர். அந்த நேரத்தில் அவைகளின் விற்பனை கொஞ்சம் சரிந்திருந்தது. இதைப்பயன்படுத்தி ஒரேகல்லில் மூன்று மாங்காய்களை அடிக்கத்திட்டமிட்டன பாசிசப்பரிவாரங்கள். அந்தக்கல்தான் கோஜல் எனும் மாட்டு மூத்திரம். அப்படியென்றால் மூன்று மாங்காய்கள்?

உழவர்களின் வாழ்வோடும், கிராமப்புற கால்நடை வளர்ப்போடும் இரண்டறக்கலந்த விலங்கு மாடு. உழவுக்கு காளையும், கால்நடை வளர்ப்புக்கு பசுவும் இன்றியமையாதவை. அறுவடைக்குப்பிறகு வைக்கோல் மாடுகளுக்கு உணவானது, அடுத்த விதைப்புக்கு இடைப்பட்ட காலத்தில் கால்நடை வளர்ப்பு மாற்றுத்தொழில். பால், இறைச்சியை உணவாகக்கொள்வதும், சாணத்தை வீடுகளில் தரை மொழுகவும், அடுப்பெரிக்கவும் என்று அவர்களின் வாழ்வில் பிரிக்கமுடியாத ஒன்றாக இருந்தது. அதனால்தான் அவர்கள் கொண்டாடும் திருநாளில் கூட மாட்டுக்கு உரிய பங்களிப்பை வழங்கியிருந்தனர்.. ஆனால் இதற்கு நேர் எதிராக வேள்வி நெருப்பில் குதிரையையும் மாடுகளையும் பொசுக்கித் தின்றுதீர்த்த பார்ப்பனக்கூட்டம், பௌத்தத்தை எதிர்கொள்ளமுடியாமல் அதன் கொல்லாமயை தன்னுள் வாங்கிக்கொண்டு புலாலுண்ணாமை என தகவமைத்துக்கொண்டு தன்னை தக்கவைத்துக்கொண்டது. பின்னர் முப்பத்து முக்கோடி தேவர்களும் பசுவின் உடலில் தங்கியிருப்பதாக புழுகி அதையே புராணமாக்கி பசுவை புனிதமாக்கிக்கொண்டது. இன்று அதைக்கொண்டே தாழ்த்தப்பட்டவர்களையும், சிறுபான்மையினரையும் நரவேட்டையாடிவருகிறது. மாட்டை கொன்றார்கள் என்று கூறி மனிதர்களின் தோலை உரிக்கிறது. மாட்டின் உயிரைவிட மனிதனின் உயிர் முக்கியமானதல்ல என்று வெளிப்படையாகவே கொக்கரிக்கிறது. பெரியார் ஒரு முறை சொன்னார், “பஞ்சகவ்யம் என்று பசுவின் சாணி மூத்திரம் போன்றவற்றை கலந்து அதை புனித தீர்த்தமாக குடிக்கச்செய்வது, முகம் சுழிக்காமல் குடிக்கிறானா என்பதை வைத்து இவன் எவ்வளவு ஏமாளியாக இருக்கிறான், எந்த அளவு இவனை ஏமாற்றலாம் என்று அளந்து பார்க்கும் கருவியாக பசுமூத்திரத்தையும் சாணியையும் பயன்படுத்துகிறான்என்று. இன்று அதே சோதனையை விரிவான அளவில் செய்யப்போகிறார்கள் அதுவும் நம்மிடமே காசு வாங்கிக்கொண்டு. சரி இந்துக்கள் என்று தம்மை நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு இது சரிவரும் ஏனையவர்களுக்கு? அதற்க்காகத்தானே பசு மூத்திரம் செல்வளர்ச்சிக்கு உதவுகிறது என்று டாக்டர் சந்திர சேகர் என்பவர் ஆய்வு செய்து கூறியிருக்கிறார். குஜராத்தில் பசுவின் பயன்பாடுகள் பற்றி கருத்தரங்கம் நடத்தியிருக்கிறார்கள். மைசூரில் பிஞ்சாரேபோல் சொசைட்டி சாந்திலால் சோர்டியா என்பவரின் தலைமையில் இது போன்ற அரிய உண்மைகளை(!) கண்டுபிடித்துச்சொல்வதற்கு முழுமூச்சோடு ஈடுபட்டு வருகிறது. உத்ராஞ்சல் அரசு 20கோடி ரூபாய் செலவில் ஆய்வகம் அமைத்துக்கொடுத்திருக்கிறது. இணையத்தில் தேடினாலோ உலகத்திலுள்ள அத்தனை நோய்களுக்கும் கோமியம் சிறந்த நிவாரணி என்று கட்டுரைகள் கிடைக்கும். ஆக நாம் எவ்வளவு ஏமாளி என்று நம்முடைய காசைக்கொண்டே சோதித்துப்பார்த்து அதில் லாபமும் அடைவது முதல் மாங்காய்.

பெப்சி கோக் போன்ற அன்னியப்பொருட்களை எதிர்ப்பது போலவும், சுதேசியத்தை காப்பது போலவும் போராட்டம் நடத்தியவர்கள் ஆட்சிக்கு வந்ததும் செய்தது என்ன? பொதுத்துறை நிறுவனங்களை அன்னியனிடம் அடிமாட்டு விலைக்கு விற்பதற்கென்றே ஒரு அமைச்சகம் அமைத்தார்கள். பசுவதை தடுப்புச்சட்டம் என்று மாட்டின் புனிதம் பற்றி பாடம் நடத்தியவர்கள், அந்த புனிதமான மாட்டோடு இணைந்த விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொள்ள காரணமான கொள்கையை எதிர்த்து ஒரு எழுத்தேனும் பேசமுடியுமா? நாடெங்கும் உள்ள சிறுபான்மையினர் உணவுக்காக கொன்ற மாட்டைவிட பால் பவுடர் இறக்குமதி என்ற ஒரே உத்தரவில் லட்சக்கணக்கான மாடுகளை ஒழித்துக்கட்டினார்களே, இதற்கு பதில் கூற முடியமா? இப்படி பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாயைப்போல சேவகம் புறிய ஓட்டுப்பொறுக்குவதற்கு, சுதேசி கோமாத என்று கபட நாடகமாடுவதற்கு மாட்டு மூத்திர கோஜல் பயன்படுகிறதே இது இரண்டாவது மாங்காய்.

நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அபாயம் என்று பயங்கர வாதம் குண்டுவெடிப்பு சீன் காட்டி சிறுபான்மையினரை விரக்தியின் விழிம்புக்குத்தள்ளி அதைக்காரணம் காட்டியே இந்து என்ற பட்டிக்குள் எல்லோரையும் அடைத்துக் கொண்டிருக்கிறார்களே பாசிச பயங்கரவாதிகள், அவர்களின் அந்த செயல்திட்டத்தின் வழிமுறைகள் தான் தேசிய நாயகன் தேசிய கலாச்சாரம் என்பது. ஒரே நாடு ஒரேகலாச்சாரம் ஒரே சட்டம் என்று தங்களின் பார்ப்பனிய முகத்தை தேசிய முகமூடியால் மறைத்துக்கொள்ள மருத்துவப்பலன்களை புனைந்து அதைக்காட்டி ஒரு குளிர்பானமாய், விதேசியத்திற்கெதிராய் சுதேசியமாய் விளம்பரம் செய்து, தேசிய வெறியை கிளப்பி தங்களின் அரசியல் இலக்கை நீங்கள் அறியாமலேயே உங்களுக்குள் திணிக்கிறார்களே இது மூன்றாவது மாங்காய்.

நாட்டில் பயங்கரவாதத்திற்கு பலியானவர்களை விட, தொன்னூறுகளின் தொடக்கத்தில் நடைமுறைக்கு வந்த பொருளாதாரக்கொள்கையால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகம். விவசாய நாடான இந்தியாவில் பெருமளவில் வேலைவாய்ப்பை கிராமப்புறங்கள் தான் வழங்கிக்கொண்டிருந்தன. அவர்களை கிராமியச்சூழலிலிருந்து பிய்த்து உதிரித்தொழிலாளர்களாய் நகரங்களில் வீசி எறிந்திருக்கிறது அந்த பொருளாதாரக்கொள்கை. சமூகத்தில் எல்லாத்தட்டு மக்களையும் பாதிக்கும் பொருளாதாரக்கொள்கைகளையும், உலக வங்கியின் உத்தரவுகளையும் எந்தக்கட்சியும் மீறுவதில்லை. இப்படி அன்னியக்கைக்கூலிகளாய், நம் வாழ்வை அன்னியனின் சுரண்டலுக்குள் அடிமைப்படுத்தும் சோரம் போனவர்கள் தான் சுதேசியம் என்றும், தேசியக்கலாச்சாரம் என்றும் கௌஜல் புனிதம் என்று சொல்லிக்கொண்டு உங்கள் முன் வருகிறார்கள். இது சரியான வழியில் புறிந்து கொள்வதற்கும் முறியடிப்பதற்கும் பெப்சி கோக்கை கையில் பிடித்துக்கொண்டு சிந்திப்பவர்களால் முடியாது. பெப்சி கோக்கின் ஒவ்வொரு சொட்டிலும் விவசாயிகளின் கண்ணீரும் ரத்தமும் கலந்திருக்கிறது. அவைகளை புறக்கணிப்பதுடன் ஆரோக்கியமும் ருசியும் நிறைந்த இளநீர் மோர் போன்ற பானங்களுக்கு திரும்புவோம். அதோடு மட்டுமன்றி இயற்கை பானங்களை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராகவும், இயற்கை வளங்களை நாசமாக்கி அதை தம் சொத்தாக மாற்றுபவர்களுக்கு எதிராகவும் அணிதிரள்வோம்.

முஸ்லீம் டிஜிபி நியமனம் - முஸ்லீம்களைக் கவர மோடி புதிய தந்திரம்

அகமதாபாத்: முஸ்லீம்களின் வெறுப்பு வளையத்திலிருந்து பாஜகவையும், தன்னையும் மீட்டு வெளியே கொண்டு வரும் புதிய தந்திரமாக, குஜராத் மாநிலத்தின் புதிய டிஜிபியாக முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரியை முதல்வர் நரேந்திர மோடி நியமித்துள்ளதாக கருதப்படுகிறது.

குஜராத் மாநிலத்தின் புதிய டிஜிபியாக முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த சபீர் கந்தவாவாலா நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் உருவான 50 ஆண்டுகளில் முஸ்லீம் அதிகாரி ஒருவர் டிஜிபி பதவிக்கு வந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்பு இருந்து வந்த டிஜிபி பி.சி.பாண்டேவுக்குப் பதில் சபீர் புதிய டிஜிபியாகியுள்ளார். 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா வன்முறையின்போது பெரும் சர்ச்சையில் சிக்கியவர் இந்த பாண்டே என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லீம் அதிகாரி ஒருவரை டிஜிபி பதவிக்கு மோடி கொண்டு வந்திருப்பது, பாஜக மற்றும் மோடி ஆகியோருக்கு முஸ்லீம் மக்களிடையே நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுக்கும் தந்திரமாகவே கருதப்படுகிறது.

அதுவும் லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலில் பாஜகவுக்கு பெரும் வெற்றி கிடைக்காது என்று கருத்துக் கணிப்புகள் கூறி வரும் நிலையில், மோடியின் இந்த நியமனம் ஒரு அரசியல் மற்றும் மத ஸ்டண்ட் ஆகவே கருதப்படுகிறது.

சபீர், ஷியா முஸ்லீம் சமுதாயத்தின் தாவூதி போஹ்ரா பிரிவைச் சேர்ந்தவர். இந்த சமுதாயத்தினர் பல ஆண்டுகளாகவே மோடிக்கு ஆதரவாக உள்ளவர்கள்.

1973ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான சபீர், கோத்ரா வன்முறை தொடர்பான வழக்குகளை மறு பரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இடம் பெற்றிருக்கிறார்.

குஜராத் மாநில ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத் தலைவராகவும் இருக்கிறார். கடந்த 2007ம் ஆண்டே இவர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அதை மாநில அரசு நிராகரித்து விட்டது.

கடந்த வாரம்தான் டிஜிபி அந்தஸ்துக்கு சபீர் உயர்த்ப்பட்டார். ஊழல் தடுப்புப் பிரிவு தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

ஆனால் சபீரை டிஜிபியாக்கியிருக்கும் சமயம்தான் மோடி மீதான சந்தேகத்தை அதிகரிக்கிறது.

மாயா சர்ச்சையிலிருந்து மீளும் முயற்சி ...

காரணம், மோடி அமைச்சரவையில், மகளிர், குழந்தைகள் நலம் மற்றும் உயர் கல்வித்துறை இணை அமைச்சராக உள்ள மாயா கோட்னானியால் ஏற்பட்டுள்ள களங்கத்திலிருந்து திசை திருப்பும் முயற்சியாகவே சபீரின் நியமனத்தை எதிர்க்கட்சிகள் பார்க்கின்றன.

2002ம் ஆண்டு நடந்த கோத்ரா வன்முறையின்போது மாயா கோத்னானி நடந்து கொண்ட விதம் குறித்து பெரும் சர்ச்சை உள்ளது. அப்போது நடந்த கலவரத்தில் மாயா மீதும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அது நிலுவையிலும் உள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வருகிறார் மாயா. இதையடுத்து பி்ப்ரவரி 2ம் தேதி இவரை தலைமறைவு குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்க்பட்ட சிறப்பு புலனாய்வுப் படை அறிவித்தது.

மாயா மீதான வழக்கு என்ன?

2002ம் ஆண்டு நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையின்போது நரோடா பாடியா பகுதியில் ஒரு கும்பல் அங்கிருந்த முஸ்லீம்களைத் தாக்கியது.

அப்போது அங்கு நடந்த வன்முறையைத் தூண்டி அரங்கேற்றியவர் மாயா கோத்னானி என்பது சிறப்புப் புலனாய்வுப் படையின் குற்றச்சாட்டு.

அது மட்டுமல்லாது கண்ணில் படுபவர்களையெல்லாம் கொல்லுமாறும், பொருட்களை சூறையாடுமாறும், பெண்களைக் கற்பழிக்குமாறும் வன்முறைக் கும்பலுக்கு மாயா உத்தரவிட்டார் என்பதுதான் மிக மிக முக்கியமான குற்றச்சாட்டு.

மாயாவுடன், வி.எச்.பி. தலைவர் ஜெயதீப் படேலும் என்பவரும் இணைந்து இந்த வன் கொடுமையை அரங்கேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நரோடா பாடியா பகுதியில் நடந்த வன்முறையில் மட்டும் முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த 106 பேர் கொல்லப்பட்டனர். அவர்களது உடமைகள் சூறையாடப்பட்டன.

இந்த கொடுமையான வன்முறையை நேரில் பார்த்த சாட்சிகளி்ல் ஒருவரான ஷெரீப் மாலிக் என்பவர் சிறப்பு புலனாய்வுப் படையிடம் தாக்கல் செய்துள்ள வாக்குமூலத்தில், மாயா கோத்னானி மற்றும் ஜெயதீப் படேல் ஆகியோர்தான் அந்த வன்முறைக் கும்பலுக்கு நேரடியாக தலைமை தாங்கி உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

அவர்கள்தான் அந்தக் கும்பலை கொலை செய்யவும், பொருட்களை சூறையாடவும், கற்பழிக்கவும் உத்தரவிட்டுக் கொண்டிருந்தனர்.

வன்முறைக் கும்பலிடம் தனது வண்டியில் வைத்திருந்த மண்ணெண்ணை கேன்களை எடுத்துக் கொடுத்து தீவைத்துக் கொளுத்துமாறு உத்தரவிட்டார் மாயா என்று கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட பின்னணியைக் கொண்ட மாயா நீதிமன்ற விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல்இருந்து வந்தார். ஜனவரி 19 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடந்த விசாரணையின்போதும் அவர் சம்மன் அனுப்பியும் வரவில்லை.

இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக கோர்ட் அறிவித்தது.

இதையடுத்து மாயா தலைமறைவாகி விட்டார். பின்னர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதில் அவருக்கு முன்ஜாமீன் கிடைத்தது.

தேடப்படும் குற்றவாளியாக மாயா அறிவிக்கப்பட்டதும் அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என மோடிக்கு கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் அவரோ அதை நிராகரித்து விட்டார். மாயாவும், நான் அப்பாவி, ராஜினாமா செய்ய மாட்டேன் என்று விட்டார்.

கொடும் வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டு, முன்ஜாமீனும் மாயாவுக்குக் கிடைத்ததால் கோத்ரா வன்முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினர் பெரும் கொதிப்பும்,அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில்தான் முஸ்லீம் அதிகாரி ஒருவரை டிஜிபியாக்கியுள்ளார் மோடி. எனவே இந்த நியமனம் முற்றிலும் அரசியல் சாயம் கொண்டது. முஸ்லீம் சமுதாயத்தினரை ஐஸ் வைக்கும் செயல் என குஜராத் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

முஸ்லீம் சமுதாயத்தினரை சமாதானப்படுத்த முயலும் மோடியின் இன்னொரு முகமூடிதான் இந்த டிஜிபி நியமனம் என்றும் கருதப்படுகிறது.