புதுடெல்லி:பா.ஜ.க எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் தான் எழுதிய ''Jinnah-India, Partition, Independence'' என்ற புத்தகத்தில் முஹம்மது அலி ஜின்னாவை புகழ்ந்து எழுதியதால் அவரை கட்சியை விட்டு நீக்குவதாக பா.ஜ.க பாராளுமன்ற குழு முடிவெடுத்து அறிவித்தது.
முகம்மத் அலி ஜின்னா குறித்து முன்பு அத்வானி கூறியதையே தான் இப்போது ஜஸ்வந்த் சிங்கும் தனது புத்தகத்தில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2005ம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற அத்வானி, ஜின்னா ஒரு மதசார்பற்ற தலைவர். புதிய வரலாறை உருவாக்கியவர் நபர் என்றார். இதற்கு ஆர்எஸ்எஸ், விஎச்பி ஆகியவை கடும் எதிர்ப்புத் தெரிவி்த்ததால் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து அத்வானி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந் நிலையில தான் எழுதிய ''Jinnah-India, Partition, Independence'' என்ற ஜின்னாவின் பயோகிராபியை புத்தகத்தை நேற்று வெளியிட்டார் ஜஸ்வந்த் சிங். அதில், நாடு பிளவுபட ஜி்ன்னா காரணமல்ல, அன்றைய அரசியல் சூழல்களும் சில தலைவர்களின் செயல்பாடுகளும் தான் அவரை தனி நாடு கோர வைத்தன. அவர் மிகச் சிறந்த தலைவர் மட்டுமல்ல, தன்னமல்லாத ஒரு நபர். இதனால் தான் அவர் பால் நான் ஈர்க்கப்பட்டேன்.
அதிகாரத்தை ஓரிடத்தில் குவிக்காமல் அதை பரவலாகக வேண்டும் என்றுதான் ஜின்னா சொன்னார். அதை அப்போதைய தலைவர்கள் ஏற்கவில்லை. இதனால் அப்படிப்பட்ட ஆட்சியில் தனது சமூக மக்களுக்கு நியாயம் கிடைக்காது என்று கருதித் தான் தனி நாடு கோரிக்கையை அவர் முன் வைத்தார் என்று கூறியுள்ளார் ஜஸ்வந்த் சிங்.
மேலும் இது குறித்து சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியில் கரன் தாப்பரின் 'டெவில்ஸ் அட்வகேட்' நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பேட்டியளித்துள்ள ஜஸ்வந்த் சிங் கூறுகையில்,"இப்போது கூட முஸ்லீம்களை நாம் சரியாக நடத்துகிறோமா என்றால்.. இல்லை. அவர்களை வெளிகிரகவாசிகள் போல நடத்துகிறோம். அப்படி நடத்தியதால் தான் பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவானது. இப்போதும் அவர்களை அப்படி நடத்தி நாட்டை பிளவுபடுத்த வேண்டுமா?. இந்தியாவில் அனைவரும் சட்டத்துக்கு உட்பட்டு சம உரிமையோடு வாழ அனுமதி வேண்டும். அதைச் செய்யாத வரை பிரச்சனைகள் தீராது. முஸ்லீம்கள் குறித்த பாஜகவின் நிலை சரியல்ல" என்று கூறியுள்ளார் ஜஸ்வந்த் சிங்.
பாஜக ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக, பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் முன்னாள் ராணுவ அதிகாரியாவார்.
இந் நிலையில் இன்று பாஜக மூத்தத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று சிம்லாவில் தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இக் கூட்டத்தின் துவக்க நாளான இன்று ஜஸ்வந்த் சிங் பங்கேற்கவில்லை.அவரை கூட்டத்துக்கு வர வேண்டாம் என்று அத்வானியின் சார்பாக ராஜ்நாத் சிங் கூறிவிட்டதால் அவர் வரவில்லை.
அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி, நரேந்திர மோடி, எதியூரப்பா உள்ளிட்ட 25 பேர் மட்டும் பங்கேற்கும் இக் கூட்டத்திற்கு சில முக்கியத் தலைவர்கள் அழைக்கப்படவில்லை.இக் கூட்டத்தை யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி உள்ளிட்டோர் புறக்கணித்துவிட்டனர். இந் நிலையில் இக் கூட்டத்தில் ஜஸ்வந்த் சிங்கை நீக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது.

No comments:
Post a Comment