அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, August 19, 2009

ஆப்கான்:ஹமீத் கர்ஸாய் மாளிகை மீது ராக்கெட் தாக்குதல்


காபூல்:தேர்தலுக்கு ஒரு நாள் மீதமிருக்க ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகளின் தாக்குதல் உக்கிரம் அடைந்துள்ளது.
அதிபர் ஹமீத் கர்ஸாயின் மாளிகை மீதும் போலீஸ் தலைமையகம் மீதும் நேற்று ராக்கெட் தாக்குதல் நடைபெற்றது.மாகாண வேட்பாளர் கொல்லப்பட்டார்.
காபூலில் நடந்த கார்குண்டுவெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டனர்.காபூலில் அதிபர் மாளிகை மீது நடந்த தாக்குதலில் கட்டிடத்திற்கு கடினமான சேதம் ஏற்பட்டுள்ளது.இத்தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.இச்சம்பவம் நடந்த அடுத்த சில மணித்துளிகளில் காபூலிலுள்ள போலீஸ் தலைமையகம் மீதும் ராக்கெட் தாக்குதல் நடந்தது.இத்தாக்குதலுக்கு பின்னணியில் தாலிபான் என்று ஸபிஹுல்லா முஜாஹித் அறிவித்தார்.
ஆப்கானில் வடக்கு மகாணத்திலிலுள்ள ஜவாஸ்ஜான் தொகுதியில் நடைபெற்ற தாக்குதலில் அங்கு போட்டியிடும் வேட்பாளர் கொல்லப்பட்டார். நாளை நடைபெறும் அதிபர் தேர்தலுடன் 420 மாகாணங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. காபூலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். சீனியர் ஐ.நா அதிகாரி மற்றும் நேட்டோ படையினர் உட்பட 30க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு படையினரின் முகாமுக்கு செல்லும் முக்கிய சாலையில்தான் குண்டுவெடிப்பு நடந்தது.வெடிப்பொருள்களுடன் வந்த நபர் வெடித்து சிதறியதாக போலீஸ் கூறுகிறது.
பொதுத்தேர்தலை புறக்கணிக்க தாலிபான் கோரிக்கை விடுத்த சூழலில் கடுமையான தாக்குதல் நடக்கும் என்று முன்னறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு படையினர் உட்பட பாதுகாப்பு படையினர் பாதுகாப்பை தீவிரமாக்கியபோதும் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு முடியாத சூழல் உள்ளது.
1.7 கோடி வாக்காளர்களைக்கொண்ட ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தலுக்கு தற்போதைய அதிபர் ஹமீத் கர்ஸாயி உட்பட 30 பேர் போட்டியிடுகின்றனர். 420 உறுப்பினர்களைக்கொண்ட மாகாண கவுன்சிலுக்கு 328 பெண்கள் உட்பட 3,196 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
செய்தி:

No comments: