அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, August 16, 2009

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கெதிரான செய்தி வெளியிட்ட பத்திரிகைகளுக்கு நீதிமன்றம் சம்மன்




பெங்களூர்:பங்களாதேஷைச்சார்ந்த தீவிரவாத இயக்கத்தோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு தொடர்பு என்று அவதூறாக செய்தி வெளியிட்ட நாளிதழுக்கும்,வார இதழ் ஒன்றிற்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா,ரேடியன்ஸ் வீக்லி ஆகிய பத்திரிகைகளின் உரிமையாளர்களுக்கும்,நிருபர்களுக்கும் பெங்களூர் துணை மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் சம்மன் அனுப்பியுள்ளார்.கடந்த 2007 ஆம் ஆண்டு செப்டம்பரில் கர்நாடகா கெ.எஃப்.டி,கேரள என்.டி.எஃப்,தமிழ்நாடு எம்.என்.பி ஆகிய அமைப்புகளுக்கும் பங்களாதேஷில் உள்ள ஒரு தீவிரவாத அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக கூறி டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கெதிராகத்தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.இந்நிலையில் இந்த வழக்கை பரிசீலித்த நீதிபதி டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் கட்டுரையாளர் அம்பரீஷ்,உரிமையாளர் பிரியதர்ஷினி பாலா,பிரின்ட் அன்ட் பப்ளிஷர் துவாரக் நாத் ஆகியோர் நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிட்டார்.
அதே சமயம் பெங்களூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என்ற மாநாட்டிற்கு பிறகு ரேடியன்ஸ் வார இதழில் 2007 மார்ச்,ஏப்ரல் ஆகிய மாதங்களில் வெளிவந்த கட்டுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு இன ரீதியான அமைப்பு என்ற அடிப்படையில் மோசமாக சித்தரிக்கப்பட்டிருந்தது. இதற்கெதிராகவும் பாப்புலர் ஃப்ரண்ட் இந்தியா சார்பாக வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. இப்பத்திரிகையின் உரிமையாளர் இஜாஸ் அஸ்லம்,கட்டுரையாளர்களான ஏ.ஆர்.முஹம்மது ஹஸன்,பி.முஹம்மது ஆகியோருக்கும் நீதி மன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

No comments: