அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, August 19, 2009

மர்வாவைக்கொன்ற கொலையாளியை விடுவிக்க முயற்சி:கெய்ரோவில் எதிர்ப்பு பேரணி


கெய்ரோ:ஜெர்மனியில் கொல்லப்பட்டஎகிப்தைச்சார்ந்த பெண்மணியின் கொலைக்காரனை விடுவிக்க அரசு தரப்பில் நடைபெறும் முயற்சியை கண்டித்து கெய்ரோவில் ஜெர்மன் தூதரகத்தின் முன்பாக மனித உரிமை அமைப்பைச்சார்ந்த உறுப்பினர்கள் கண்டன பேரணியை நடத்தினர்.
ட்ரஸ்டன் நீதிமன்ற வளாகத்தில் வைத்து மூன்று மாதம் கர்ப்பிணியான மர்வா அல் ஸெர்பினியை 18 முறைக்குத்திக்கொன்ற ஜெர்மன் நாட்டைச்சார்ந்த ஆக்ஸல் டபிள்யூ கைதுச்செய்யப்பட்டு 40 தினங்கள் கடந்த நிலையிலும் இப்பிரச்சனையில் மெளனம் சாதிக்கும் ஜெர்மன் பத்திரிகைத்துறை மற்றும் மனித உரிமை அமைப்புகளுக்கெதிராக பேரணியில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அரசு மற்றும் பத்திரிகைத்துறை வாயிலாக இப்பிரச்சனையை ஒதுக்கித்தள்ள ஜெர்மன் அரசு முயல்வதாக கண்டனப்பேரணிக்கு தலைமை வகித்த நாதியா அத்தா கூறினார்.
குற்றாவாளியான ஆக்ஸல் டபிள்யூவிற்கு மன நோய் என்று பொய் சொல்லி விடுவிக்க ஜெர்மன் வழக்கறிஞர்கள் அரசு தரப்பில் முயற்சி மேற்க்கொண்டுவருவதாக தெரிகிறது. ஹிஜாப் அணிந்த காரணத்திற்காக தீவிரவாதி என்ற பழி சுமத்தப்பட்ட மர்வாவை நீதிமன்றத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு முன்னால் வைத்து கத்தியால் 18 முறை குத்திக்கொன்றதும் அதனை தடுக்க முயன்ற அவருடைய கணவருக்கும் காயம் ஏற்பட்டதும் முஸ்லிம் உலகில் கடும் அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் உருவாக்கியது.

No comments: