அஹ்மதாபாத்:கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு குஜராத் மாநிலம் அஹ்மதாபாத் ஷாஹ்னாபூரில் நடத்தப்பட்ட ஊர்வலத்தின்போது ஏற்பட்ட சிறு தகராறு கலவரமாக வெடித்தது.கல் வீச்சில் ஈடுபட்ட மக்கள் கூட்டத்தை நோக்கி காவல்துறை கண்ணீர் குண்டு வீசி விரட்டியது.கலவரக்காரர்கள் மூன்று வீடுகளை தீ வைத்து கொழுத்தினர்.நேற்று முன்தினமும் இரு பிரிவினருக்கிடையே பிரச்சனை மூண்டதாகவும் நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் வந்ததாகவும் போலீஸ் துணைகமிஷனர் எஸ்.என்.ரோஹில் தெரிவித்தார்.உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில் இந்தப்பிரச்சனை ஒருவாரத்திற்கு முன்பே ஆரம்பித்ததாகவும், ஹிந்துமதத்தைச்சார்ந்த சிலர் நகோரிவாட் போலீஸ் சரகத்திற்குட்பட்ட அஹ்மதி மஸ்ஜிதிற்கு அருகில் சிறிய கோயிலை கட்டமுயன்றதாகவும் இதற்கு சிறுபான்மை முஸ்லிம்கள் எதிர்ப்புதெரிவித்ததாகவும் தெரிவித்தார்.மஸ்ஜிதிற்கு முன்பு கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் சென்றபொழுதான் கலவரம் உருவாகியது.கலவரப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.Monday, August 17, 2009
அஹ்மதாபாத்தில் இனக்கலவரம்
அஹ்மதாபாத்:கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு குஜராத் மாநிலம் அஹ்மதாபாத் ஷாஹ்னாபூரில் நடத்தப்பட்ட ஊர்வலத்தின்போது ஏற்பட்ட சிறு தகராறு கலவரமாக வெடித்தது.கல் வீச்சில் ஈடுபட்ட மக்கள் கூட்டத்தை நோக்கி காவல்துறை கண்ணீர் குண்டு வீசி விரட்டியது.கலவரக்காரர்கள் மூன்று வீடுகளை தீ வைத்து கொழுத்தினர்.நேற்று முன்தினமும் இரு பிரிவினருக்கிடையே பிரச்சனை மூண்டதாகவும் நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் வந்ததாகவும் போலீஸ் துணைகமிஷனர் எஸ்.என்.ரோஹில் தெரிவித்தார்.உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில் இந்தப்பிரச்சனை ஒருவாரத்திற்கு முன்பே ஆரம்பித்ததாகவும், ஹிந்துமதத்தைச்சார்ந்த சிலர் நகோரிவாட் போலீஸ் சரகத்திற்குட்பட்ட அஹ்மதி மஸ்ஜிதிற்கு அருகில் சிறிய கோயிலை கட்டமுயன்றதாகவும் இதற்கு சிறுபான்மை முஸ்லிம்கள் எதிர்ப்புதெரிவித்ததாகவும் தெரிவித்தார்.மஸ்ஜிதிற்கு முன்பு கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் சென்றபொழுதான் கலவரம் உருவாகியது.கலவரப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment