
இஸ்ரேல் ஏற்படுத்திய தடையின் காரணமாக மரணித்த கடைசி இரத்தசாட்சி ரஃபா நகரில் 42 வயதான உமர் அதாவுல்லாஹ் அல் ஸஹர் என்று ஃபலஸ்தீன் சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரி கூறினார். 2007 முதல் துவங்கிய இஸ்ரேல் தடையின் காரணமாக அல்ஸஹரைப்போல் 344 நோயாளிகள் இறந்துள்ளனர்.மிகவும் மோசமான நிலையில் சிறு நீரகம் பாதிக்கப்பட்ட அல்ஸஹருக்கு வெளிநாட்டில் சென்று சிகிச்சை அளிப்பதற்கான எல்லா சான்றுகள் இருந்தபிறகும் இஸ்ரேல் அதற்கு அனுமதி வழங்கவில்லை.ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான ஹைக்கமிஷனர் 34 பக்கமுள்ள அறிக்கையின் மூலம் இஸ்ரேல் ஏற்படுத்திய தடையை நீக்கி மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டுகோள் விடுத்திருந்தார். ஃபலஸ்தீன் மக்களின் நடமாடும் சுதந்திரம் உள்பட அடிப்படை உரிமைகளை மறுக்கும் இஸ்ரேலின் அநியாய நடவடிக்கையை அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
No comments:
Post a Comment