சென்னை: சென்னை, திருச்சி, மதுரை,கோவை உள்பட தமிழகத்தின் முக்கியநகரங்களில் வக்பு வாரியத்தின் சார்பில்மருத்துவம், பொறியியல் கல்லூரிகள்தொடங்கப்படும் என்று அதன் தலைவர்கவிக்கோ அப்துல் ரஹ்மான் கூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர்,
சென்னை ராயபுரம் கெளஸ்மொகிதீன்பேட்டையில் காஜி சர்வீஸ் இனாம்என்ற வக்பு வாரியத்துக்கு சொந்தமானஇடத்தில் குடிசை மாற்று வாரியம் 552குடியிருப்புகளை கட்டியது. பல்வேறுபோராட்டத்திற்கு பிறகு, வக்பு வாரியத்துக்குகுடிசை மாற்று வாரியத்தால் 276குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதாவது, ராயபுரத்தில் 100 குடியிருப்புகள், கண்ணகி நகரில் 176குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த வீடுகள் முஸ்லிம்சமுதாயத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு குறைந்தவாடகையில் (மாதம் ரூ.250 வாடகை), ரூ. 1,000 முன் பணம் பெற்றுக்கொண்டு வழங்கப்படும்.
இந்த வீடுகள் மசூதிகளின் இமாம்கள், மோதினார்கள், வேலையற்றஉலமாக்கள், விதவைப் பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்குதலா 10 சதவீதமும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு 50சதவீதம் என்ற அடிப்படையிலும் ஒதுக்கப்படும்.
இதற்காக கடந்த 17ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.மொத்தம் 15,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்றுள்ளன. இந்தவிண்ணப்பங்களை அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் பூர்த்தி செய்து வழங்கவேண்டும். அதன் பின்னர் இந்த விண்ணப்பங்கள் தனி குழுக்கள் மூலமாகசரி பார்க்கப்படும். கடைசியில் குலுக்கல் முறையில் வீடுகள் வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலங்களை மீட்கநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விரைவில் வக்பு வாரியம் மூலமாக சென்னை, திருச்சி, மதுரை, கோவைஉள்பட தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் மருத்துவம், பொறியியல்,கலைக் கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், சமூக நலக்கூடங்கள்தொடங்கப்படும். பெண்களுக்காக பல்வேறு பயிற்சி நிறுவனங்கள்தொடங்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment