அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, August 26, 2009

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை கோரும் வழக்கு: SDPI முடிவு


அமீரகத்தில் இயங்கி வரும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான சமூக நல அமைப்பான எமிரேட்ஸ் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம்(EIFF) வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு தொடர்ந்து ஓட்டுரிமை மறுக்கப்படுவதையும் அதன் மூலம் அவர்கள் பல்வேறு சிக்கல்களுக்கும் பிரச்சனைகளுக்கும் ஆளாகி வருவதை கவனத்தில் கொண்டு அமீரகத்தின் அபுதாபி,துபாய்,ஷார்ஜா போன்ற அமீரக ஸ்டேட்ஸ்களில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்க கோரும் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தியது.
அந்த கருத்தரங்குகளின் போது 3 கட்ட போராட்ட முறைகளை இதற்காக EIFF முன்னெடுத்துச்செல்லும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்தியாவில் சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் முகமாக துவங்கப்பட்டுள்ள சோசியல் டெமோக்ரேடிக் பார்டியின் கேரள மாநிலத்தலைவர் வழக்கறிஞர் கே.முஹம்மது ஷெரீஃப் அவர்களுக்கு EIFF சார்பாக துபாயில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கு இந்திய அரசை வலியுறுத்தவேண்டும் என்ற அடிப்படையிலான மனு ஒன்று ஷெரீஃப் அவர்களிடம் EIFF சார்பாக வழங்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஷெரீஃப் அவர்கள் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை இனி NRI(Non Residential Indian) என்று அழைக்க்க்கூடாது என்றும் Over Seas Indian Citizen என்று அழைக்கவேண்டும் என்று கூறியதுடன் இந்தியாவுக்கு முதுகெலும்பாக திகழும் வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்களுக்கு ஓட்டுரிமை பெற்று தர SDPI சட்ட ரீதியாக முழு அளவில் ஆதரவளிக்கும் என்று வாக்குறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி கோழிக்கோட்டில் நடைபெற்ற SDPI கேரள மாநில கமிட்டி கூட்டத்தில் SDPI கேரள உயர் நீதி மன்றத்தில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தாமே மனுதாரராகுவது என முடிவெடுத்துள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவிற்கு அதிக அளவிலான வெளிநாட்டு பணம் வருவதற்கு காரணமாக இருக்கின்றார்கள் என்பதை இக்கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது. வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்களுக்காக செல்லும் இந்திய குடிமக்களுக்கு வாக்குரிமையை மறுப்பெதன்பது அநீதமானது.
ஏராளமான ஐரோப்பிய நாடுகள் வெளிநாடுகளில் வாழும் தங்கள் குடிமக்களுக்கு ஓட்டுரிமையை வழங்கியுள்ளது. மத்திய அரசு இந்திய பிரஜைகள் உலகின் எப்பகுதியில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு (வாக்குரிமை உள்ளிட்ட)போதிய வசதிகளை ஏற்பாடுச்செய்துதரவேண்டும் என்றும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு கேரள மாநிலத்தலைவர் கே.எம்.ஷெரீஃப் தலைமை வகித்தார்.

No comments: