அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, August 26, 2009

ஜின்னாவுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் முன்னாள் தலைவர் சுதர்சனும்


இந்தோர்:ஜின்னாவை புகழ்ந்து ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகம் சங்க பரிவாரத்தில் விவாதத்தை கிளப்பிக்கொண்டிருக்கவே ஜின்னாவுக்கு ஆதரவாக முன்னாள் ஆர்.எஸ்.எஸ் சர் சங்க் சாலக்(அகில இந்திய தலைவர்)கு.சுதர்சனும் களமிறங்கியுள்ளார்.
ஒருகாலக்கட்டத்தில் ஒன்றுபட்ட இந்தியா என்ற கொள்கையில் உறுதியாக இருந்தவர் முஹம்மது அலி ஜின்னா என்று சுதர்சன் கருத்து தெரிவித்தார்.ஜின்னாவுக்கு பல முகங்கள் உண்டு.வரலாற்றை நீங்கள் தெளிவான முறையில் ஆய்வுச்செய்தால் லோகமான்ய திலகருடன் ஒன்றுபட்ட இந்தியா என்ற கொள்கையில் ஜின்னா உறுதியாக இருந்தது தெரியவரும்.காந்தி இந்தியா பாக். பிரிவினையை வலுமையாக எதிர்த்திருந்தால் பிரிவினை நடந்திருக்காது.ஜின்னா மதசார்பற்றவரா என்ற கேள்விக்கு பதிலளிக்கவே சுதர்சன் இவ்வாறு பதிலளித்தார்.
கிலாஃபத் இயக்கத்தை முஸ்லிம்கள் ஆதரிப்பது பிரிட்டீஷாருக்கெதிரான சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவாக அமையும் என்று காந்தியின் கருத்தை ஜின்னா கடுமையாக எதிர்த்திருந்தார் என்றும் சுதர்சன் கூறியுள்ளார்.

No comments: