உலகத் தமிழர் பேரவையால் வெளியிடப்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை காண்பிப்பதாகக் கூறப்படும் புகைப்படங்களை இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் நிராகரித்துள்ளார். இலங்கை போரின் போது இலங்கை இராணுவத்தினரால் இந்த தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறி அந்தப் புகைப்படங்களை உலகத் தமிழர் பேரவை வெளியிட்டிருந்தது. கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பலர் கொல்லப்பட்டிருப்பதை அந்தப் படங்கள் காண்பித்தன. கொலை செய்யப்பட்ட பெண்களின் அரை நிர்வாணப்படங்களும் அதில் இடம்பெற்றிருந்தன. அதிகார பூர்வ விஜயம் ஒன்றை முன்னிட்டு அமைச்சர் ஜி. எல். பீரிஸ் லண்டன் வந்திருந்த தருணத்தில் இந்தப் படங்கள் வெளியாகியிருந்தன.
இலங்கை அரசாங்கத்தின் அந்தஸ்தை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டே இந்தப் படங்கள் வெளியிடப்பட்டதாக பீரிஸ் கூறியுள்ளார். இந்தப் படங்களை இலங்கை இராணுவத்தினரிடம் இருந்து கிடைத்ததாகக் கூறி, விடுதலைப்புலிகளின் உளவுத்துறை அதிகாரி ஒருவரே தந்ததாக உலகத் தமிழர் பேரவை கூறியுள்ளது. இதற்கிடையே அமைச்சர் இன்று லண்டனில் உரையாற்றிய மண்டபத்துக்கு வெளியே ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் அவரது வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தினார்கள். |
Thursday, October 28, 2010
படுகொலை படங்களை பீரிஸ் நிராகரிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment