அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, October 28, 2010

ஜெய்பூர் குண்டுவெடிப்பில் RSS முக்கிய குற்றவாளி ATS குற்றப்பத்திரிகை தாக்கல்

2007 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் நடைபெற்ற குண்டுவெடிப்பை விசாரணை செய்துவரும் ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்பு படையினர் (ATS), தங்களின் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இதில் RSS ன் முக்கியத் தலைவர் உட்பட 5 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் மூன்று பேர் உயிரிழந்தனர். 15 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இவர்கள் மீது திட்டமிட்டு கூட்டுசதி செய்து படுகொலை செய்தது, வழிபாட்டுத் தலத்தை குண்டுவைத்து தர்த்தது போன்ற குற்றங்கள் ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மூத்த RSS தலைவர் இந்திரேஷ் குமார் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாவார். இதன் மூலம் இந்த தீவிரவாத நாசகர வேலையை செய்தது RSS இந்துத்துவ தீவிரவாத சக்திகள் தான் என்பது நிரூபணமாகியுள்ளது. இது போல் மலேகான், ஹைதராபாத் போன்ற பல குண்டுவெடிப்புகளிலும் RSS இந்துத்துவ தீவிரவாத சக்திகள் மூளையாக செயல்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த தீவிரவாத செயல்களுக்கும் RSS க்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று RSS தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் முக்கிய RSS தலைவர் மீது ATS ஆதாரத்துடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதைத் தொடர்ந்து, இதுபோன்ற நாசகர வேலைகளை RSS தொடர்ந்து செய்துவருகின்றது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற தீவிரவாத தேசவிரோத செயல்களின் மூலம் தேசிய நலனுக்கு குந்தகம் விளைவிப்பதோடு வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் உயிர்மூச்சை நிறுத்தி இந்தியாவின் இறையாண்மைக்கே பாதிப்பு விளைவிக்கும் செயல்களில் RSS ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளது.

806 பக்கங்களை கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கை ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட் ஜகேந்திரா குமார் ஜெயின் முன்னிலையில் தீவிரவாத எதிர்ப்பு படையினரால் தாக்கல் செய்யப்பட்டது. குற்றவாளிகளின் மீது இந்திய குற்றவிய சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அதில் 302 (கொலை), 307 (கொலை முயற்சி), 120B (தீவிரவாத சதி) மற்றும் 295 (வழிபாட்டு மையங்களை தாக்குதல் மற்றும் சேதப்படுத்துதல்) ஆகிய பிரிவுகள் குறிப்பிடத்தக்கவை.

இந்த வழக்கில் இது வரை 133 நேரடி சாட்சிகளை விசாரிக்கப்பட்டுள்ளனர். வரும் அக்டோபர் 26 ஆம் தேதி இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வருகின்றது.

No comments: