அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, March 11, 2010

சென்னை கவின் கல்லுரி மாணவரின் கண்ணீர் கதை



சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் உள்ள சாமியார்கள் போன்றவர்கள் தான் விபச்சாரம், மோசடி போன்ற செயல்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள் என்றால், சமிபத்தில் சென்னை கவின் கலை (Fine arts) நடந்துள்ள சம்பவம் படித்து பட்டம் பெற்று சமுதாயத்திற்கு முன்னோடியாக திகழ வேண்டிய பேராசியர் ஒருவர், குடித்துவிட்டு மாணவர்களிடம் நிதானமின்றி நடந்து கொண்டதனால் ஏற்பட்ட விளைவுகள் கண்ணீர் வர வைக்கின்றான.

நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டில், திருக்குறளின் 1330 பாக்களையும் தனித்தனியாக களிமண் படிமங்களாக்கி அதனை பார்வைக்கு வைக்க வேண்டும் என்று நினைத்த சென்னை கவின் கலை கல்லுரி மாணவர் சசிகுமார், அதற்கான பணியில் தீவிரமாக இருந்ததை கண்டு கல்லூரி முதல்வரான மனோகரன், சசிகுமாரின் விருப்பத்தை அறிந்து பாராட்டி களிமண் படிமங்களுக்கு தேவையான எல்லா உதவியையும் செய்வதாக கூறினார். குடிப்பழக்கம் உள்ள
கல்லுரி முதல்வர் வாக்களித்த நேரத்தில் போதையில் இருந்ததாக மாணவர்கள் கூறுயுள்ளனர்.

குடிகார முதல்வரின் வாக்குறுதியால் உற்சாகமான மாணவர் சசிகுமார் தனது சொந்த செலவில் அனைத்து வேலைகளையும் முடித்து, முதல்வரிடம் சென்று செலவுக்கான தொகையை அவர் அளித்த வாக்குறுதியை நினைவூட்டி கேட்ட போது கல்லுரி முதல்வர் மறுத்துதிருக்கிறார், மேலும் அப்படியெல்லாம் நான் எதுவும் சொல்லவில்லையே என்று கூறியுள்ளார். மேலும் வடிக்கப்பட்ட களிமண் படிமங்களை சுட சுடுமண் சூளை அமைத்துத் தருமாறு கோரி, முதல்வரை அணுக அதற்கும் மறுப்பு கூறிவிட்டார், ஆனால் கவின்களை கல்லூரியில் சுடுமண் சூளை இருக்க வேண்டும் என்பது அவசியம் என்பதை இங்கு நினைவூட்டுகிறோம்.

அதற்குள் சசிகுமார் கடின உழைப்பினால் ஆன களிமண் படிமங்கள் காய்ந்து வெடித்து, அவற்றில் சில உடைந்துபோக, பொய் வாக்குறுதி தந்து ஏமாற்றத்திற்குள்ளான சசிகுமார்,விரக்தியில் ஏற்பட்ட கோபத்தில் முதல்வரின் கார் கண்ணாடியை உடைத்து விட்டார்.
சசிகுமார் கண்ணாடியை உடைத்துவிட்டு வெளியேறிவிட, சசிகுமார் மட்டுமின்றி, அவருடைய வகுப்புத் தோழர்கள் எஸ்வேந்திரம், கமலஹாசன் ஆகியோர் மீதும் கல்லுரி முதல்வர் மனோகரன் கொடுத்த புகாரை அடுத்து பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன், அன்று இரவு கல்லூரிக்குள் வந்து அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த அதே கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவரும் எஸ்வேந்திரனின் இளைய சகோதரரும் ஆன ஆனந்த குமாரை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அடித்துள்ளனர்.

இதுபற்றி எஸ்வேந்திரன் அன்று தான் கல்லூரிக்குச் செல்லவில்லை என்றும் அம்பத்தூரிலுள்ள ஒரு தொழிற்சாலைக்குச் சென்று பணியாற்றிவிட்டு, எந்த விவரமும் தெரியாத நிலையில் இரவு வீட்டுக்கு வந்தேன் என்றும் அப்போது காவல் துறையினர் எனது வீட்டிற்கு வந்து என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் என்றும் அவர்களிடம் எனக்கும் அந்தச் சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினேன். அவர்கள் கேட்கவில்லை. மோசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டே அடித்தனர்” என்றும் பத்திரிக்கையாளர்களிடம் விவரித்த எஸ்வேந்திரன், மறுநாள் காலைவரை தானும் தனது சகோதரனும் சங்கிலியால் பிணைக்கப்ட்டு, காவல் நிலையத்திலேயே கட்டிப்போடப்பட்டிருந்ததாகக் கூறியுள்ளார்.
இன்றைய மாணவர்கள் நாட்டின் நாளைய தூண்கள் மாணவர்களுக்கு கல்வி அறிவு புகட்டி ஒழுக்கமானவர்களாக வளர்க்க வேண்டிய பேராசிரியர்களே குடித்துவிட்டு நிதானமில்லாமல் நடந்து கொள்வதுடன் அவர்களை பொய் குற்றச்சாட்டி அவர்களது வாழ்க்கையை சீரழிக்கும் இது போன்ற ஆசிரியர்களால், ஆசிரிய சமுதாயத்திற்கு வெட்க கேடு மட்டுமல்லாமல் இதனால் மற்ற பொறுப்புடன் செயல்படும் மற்ற நல்ல ஆசிரியர்களுக்கும் களங்கம் விளைவிக்கப்படுகிறது.

முஸ்லிம்,சிங்கள மாணவர்களிடையே மோதல்!

அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பகுதியில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்கும் இடையில் பெரும் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கல்லூரியில் படித்துவரும் முதலாம் வருட சிங்கள மாணவர்களுக்கும் இடையில் தங்கும் விடுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட வாய்ச்சண்டை மோதலாக வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் குழு உள்ளதால் மீண்டும் இந்த இரு பிரிவினரிடையே மோதல்கள் வெடிக்ககூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சம்பவ இடத்தில் இருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதை தொடர்ந்து அங்கு நிலமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ராஜ் தாக்கரே மீது 76 வழக்கு பதிவுகள்




மஹாராஷ்டிர நவ நிர்மான் தலைவர் ராஜ் தாக்கரே மீது சுமார் 76 வழக்குகள் பல் வேறு காவல் நிலையங்களில் பதிவாகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வட இந்தியர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியது தொடர்பாகவும், மஹாராஷ்டிரத்தில் பிற மாநிலத்தவர்கள் தங்கவோ, பணிபுரியவோ கூடாது என்பதன் தொடர்பாக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியது ஆகியவற்றிற்காக வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதில் சுமார் 6 வழக்குகளில் நேரில் ஆஜராகி ஜாமீன் பெற்று இருக்கிறார். மீதமுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன.

உலக நம்பர் 1 கோடீஸ்வரர் கார்லோஸ் ஸ்லிம்... டாப் 10-ல் முகேஷும் இடம்பிடித்தார்!




மெக்ஸிகோ சிட்டி: உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் என்ற பெருமையைப் பெறுகிறார் மெக்ஸிகோவின் கார்லோஸ் ஸ்லிம்.

ஒரு சாதாரண பெட்டிக் கடைக்காரராக தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர் படிப்படியாக மெக்ஸிகோவின் தொலைபேசி ராஜாவாக முன்னேறினார். இன்று 53.4 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் ஸ்லிம்.

கடந்த 15 ஆண்டுகளாக வெளியாகி வரும் ஃபோர்ப்ஸ் கோடீஸ்வரர் பட்டியலில் வளரும் நாடுகளிலிருந்து முதலிடம் பெற்ற முதல் கோடீஸ்வரர் கார்லோஸ் ஸ்லிம்தான்.

பெரும் பணக்காரர் என்றாலும் மிக எளிய வாழ்க்கை வாழ்பவர் ஸ்லிம். கோட் சூட் போடுவதே அரிதாகத்தானாம். தன் நிறுவனத்தின் கம்ப்யூட்டரைக் கூட அவர் பயன்படுத்துவதில்லையாம். பழைய ஸ்டைலில் இன்னமும் காகிதக் குறிப்பேடும் போனாவும்தான் அவரது விருப்பமான எழுதுபொருள்கள் என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை.

புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் பெரும்பான்மைப் பங்குகளையும் இவர்தான் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலிடம் ஸ்லிம்முக்கு போனதன் மூலம் அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ், வாரன் பஃப்பே ஆகியோர் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு அவர்கள் சமீப காலமாக வாரி வழங்கி வரும் நன்கொடைகள் கூட காரணமாக இருக்கலாம் என்கிறது ஃபோர்ப்ஸ். 2010-ல் பில்கேட்ஸ் 2வது இடத்தையும், பஃப்பே மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

இந்தியாவிலிருந்து இரண்டு கோடீஸ்வரர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி மற்றும் மித்தல் - ஆர்செலார் ஸ்டீல்ஸ் அதிபர் லட்சுமி மித்தல்.


குஜராத் கலவர வழக்கு- விசாரணைக்கு ஆஜராக மோடிக்கு சம்மன்




அகமதாபாத்: 2002ல் நடந்த குஜராத் கலவர வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் வருமாறு குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) சம்மன் அனுப்பியுள்ளது.

மார்ச் 21ம் தேதி விசாரணைக்கு நேரில் வர வேண்டும் என மோடிக்கு அனுப்பப்பட்டுள்ள சம்மனில் எஸ்.ஐ.டி உத்தரவிட்டுள்ளது.

குஜராத் கலவரத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை கொலை வெறியாட்டத்தைத் தூண்டி விட்டு நடத்தியதாக மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் பலர் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதுதொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதில் மோடி மீதான புகார் - 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அகமதாபாத், குல்பர்க் சொசைட்டி கலவரத்தில், முன்னாள் எம்.பி. ஈசான் ஜாப்ரி உள்ளிட்ட 70 பேர் உயிருடன் தீவைத்துக் கொளுத்திக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக ஜாப்ரியின் மனைவி ஜாகியா புகார் கொடுத்தார்.

அவர் தொடர்ந்த வழக்கில், மோடி மற்றும் அவரது ஆட்கள், போலீஸாரையும், அதிகாரிகளையும் ஏவி, கலவரத்தில் ஈடுபடுவோரை கண்டு கொள்ளாமல் விடுமாறு உத்தரவிட்டனர். ஈசான், அமைதியை ஏற்படுத்தவே முயன்றார். ஆனால் அவரை உயிருடன் தீவைத்துக் கொளுத்திக் கொன்று விட்டனர் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில்தான் தற்போது மோடிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்து மோடி மீதான புகாரை ஆராய உத்தரவிட்டிருந்தது.

இதுகுறித்து ஆர்.கே.ராகவன் அளித்த ஒரு பேட்டியில், சாட்சியங்களிடமிருந்து ஏராளமான ஆதாரங்களை நாங்கள் சேகரித்துள்ளோம். முதல்வர் மோடியை விசாரணைக்கு அழைத்துள்ளோம். அப்போது இவற்றை அவரிடம் தெரிவித்து விளக்கம் கேட்போம் என்றார்.

குஜராத் கலவரத்தில் 1180 முஸ்லீம்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மகளிர் மசோதா: 70% பாஜக எம்.பிக்கள் எதிர்ப்பு



டெல்லி: ராஜ்யசபாவில் மகளிர் மசோதா நிறைவேற முழு ஆதரவு அளித்த பாஜக , லோக்சபாவில் அதை நிறைவேற்ற முழு ஆதரவு தருமா என்பது பெரும் கேள்விக் குறியாகியுள்ளது.

அக்கட்சியைச் சேர்ந்த லோக்சபா உறுப்பினர்களில் 70 சதவீதம் பேர் மசோதாவை ஆதரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள குழப்பத்தை சரி செய்ய அத்வானி தலைமையில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் வட்டாரம் கிலியடைந்துள்ளது.

கடந்த 9ம் தேதி மகளிர் மசோதா ராஜ்யசபாவில் ஒரு வழியாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜக அளித்த ஆதரவு முக்கியக் காரணமாகும். பாஜகவின் ஆதரவு இல்லாமல் ராஜ்யசபாவில் நிச்சயம் மசோதாவை நிறைவேற்றியிருக்க முடியாது.

ஆனால், லோக்சபாவிலும் பாஜகவின் முழு ஆதரவு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. காரணம், பாஜகவைச் சேர்ந்த லோக்சபா உறுப்பினர்கள் பலர் மசோதாவுக்கு எதிராக கிளம்பியுள்ளனராம்.

மேலும், லோக்சபாவில் வாக்கெடுப்பின்போது கொறடா உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது என்றும் கட்சித் தலைமையை அவர்கள் வலியுறுத்தியுள்ளனராம். மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு மட்டுமே கூற வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனராம்.

பாஜகவில் எழுந்துள்ள இந்த எதிர்ப்புக்குக் காரணம்- ராஜ்யசபாவில் மசோதாவை நிறைவேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நடந்து கொண்ட விதம்தான் காரணமாம். வெற்றிகரமாக எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் பிளவுபடுத்தி விட்டது. அதற்குத் தெரிந்தோ, தெரியாமலோ பாஜகவும் துணை போய் விட்டது. இது மிகப் பெரிய தவறு.

குறிப்பாக, விலைவாசி உயர்வுப் பிரச்சினையில், காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக பாஜக, இடதுசாரிகள், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதாதளம், பகுஜன் சமாஜ் கட்சி என அத்தனை எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு வந்த நிலையில், அதை உடைத்து விட்டது காங்கிரஸ் மகளிர் மசோதா மூலம். இதை பாஜக புரிந்து கொள்ளாமல் விட்டு விட்டது துரதிர்ஷ்டவசமானது என்று இந்த எதிர்ப்பாளர்கள் கட்சித் தலைமையிடம் கூறியுள்ளனர்.

அக் கட்சியின் எம்பியான யோகி நித்யானந்த் கூறுகையில், பெண்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு எங்களுக்கு கட்சியின் கொறடா உத்தரவிட்டால் அதை நிச்சயம் மீறுவோம் என்றார்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்துப் பேச மூத்த தலைவர் அத்வானியின் வீட்டில் இன்று முக்கிய எம்பிக்கள், தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாஜகவில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் புரட்சியால் காங்கிரஸ் வட்டாரம் கிலி அடைந்துள்ளது. ஏற்கனவே ராஜ்யசபாவில் திக்கித் திணறி மசோதாவை நிறைவேற்றிய காங்கிரஸ் தற்போது லோக்சபாவில்தான் பெரும் சவாலை சந்திக்கவுள்ளது.

இந்த நிலையில் பாஜகவின் முழு ஆதரவும் கிடைக்காவிட்டால் நிச்சயம் மசோதா நிறைவேறுவது சிக்கலாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திடீர் புரட்சி குறித்துத லோக்சபா பாஜக தலைமைக் கொறடா ரமேஷ் பயஸ் கூறுகையில், லோக்சபா பாஜக எம்.பிக்களிடையே மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. எம்.பிக்களை சமாதானப்படுத்த கட்சித் தலைமை தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது.

70 சதவீத எம்.பிக்கள் மசோதாவுக்கு எதிராக உள்ளனர். ராஜ்யசபாவில் மார்ஷல்களுக்கு மத்தியில் இந்த மசோதாவைக் கொண்டு வந்து காங்கிரஸ் கட்சி நிறைவேற்றிய விதம் குறித்து பாஜக எம்.பிக்கள் கொதித்துப் போயுள்ளனர்.

அதிருப்தியுடன் உள்ள எம்.பிக்களுடன் ஏற்கனவே யஷ்வந்த் சின்ஹா, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் ஒரு சுற்றுப் பேச்சு நடத்தியுள்ளனர் என்றார்.
பீகாரைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரான எம்.பி. ஹுக்கும் தியோ நாராயணன் யாதவ் கூறுகையில், கட்சிக் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அதை நான் நிச்சயம் மீறி மசோதாவுக்கு எதிராக வாக்களிப்பேன்.

இதற்காக என்னைக் கட்சியை விட்டு நீக்கினாலும் கூட பரவாயில்லை கவலை இல்லை. நான் ஒரு சோஷலிசவாதி. சமூக நீதியில் என்னால் சமரசம் செய்து கொள்ள முடியாது.

லோக்சபாவில் மசோதா வரும்போது கட்சிக் கொறடா உத்தரவை பிறப்பிக்க வேண்டாம் என கட்சித் தலைமையைக் கேட்டுக் கொண்டுள்ளேன். அதை அவர்கள் மதிக்க வேண்டும்.

ராஜ்யசபாவில் இந்த மசோதாவை மார்ஷல்களை வைத்து காங்கிரஸ் கட்சி நிறைவேற்றிய செயல் மிகவும் அவமானகரமானது. எதிர்ப்பு தெரிவித்தவர்களை குண்டுக்கட்டாக தூக்கிப் போட்டு ராணுவச் சட்டத்தை அவர்கள் அரங்கேற்றியுள்ளனர். இதைக் கண்டிக்காமல் பாஜக வேடிக்கை பார்த்தது வேதனைக்குரியது.

வரலாறு பாஜகவை மன்னிக்காது. திரவுபதி துகிலுரியப்பட்டபோது அதை தடுக்க முயலாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் பீஷ்மரும், துரோணாச்சாரியாரும். அதேபோலத்தான் ராஜ்யசபாவில் நடந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது பாஜக என்றார் யாதவ்.

மூத்த உறுப்பினர்கள் முதல் இளம் உறுப்பினர்கள் வரை சரமாரியாக மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கிளம்பியுள்ளதால் பாஜக தலைமை பெரும் சங்கடத்துக்குள்ளாகியுள்ளது.
Source - Thats tamil

அமெரிக்காவின் இரட்டை அஜெண்டா: காபூலில் அஹ்மத் நிஜாத் பேச்சு



காபூல்:ஆப்கானில் அமெரிக்கா போராளிகளை உருவாக்கிவிட்டு அவர்களுக்கெதிராக போரையும் நடத்துகிறது இதன் மூலம் இரட்டை அஜெண்டாக்களை அவர்கள் செயல்படுத்துகிறார்கள் என்றும் அதில் அவர்களுக்கு தெளிவான லட்சியமும் இருக்கிறது என்று ஆப்கானிஸ்தானிற்கு அதிபரான பிறகு முதல் முறையாக வருகைப்புரிந்த ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் தெரிவித்தார்.

ஆப்கானில் அந்நிய ஆக்கிரமிப்புப்படையின் பங்களிப்பை அஹ்மத் நிஜாத் கடுமையாக எதிர்த்தார். அவர்களால் ஒருபோதும் சமாதானத்தை கொண்டுவர முடியாது, மாறாக ஸ்திரமற்றத் தன்மையைத்தான் அவர்களால் உருவாக்க முடியும் என்று ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாயிடனான பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

ஆப்கானின் புனர் நிர்மாணத்திற்காக அரசுக்கும், மக்களுக்கும் உதவுவதே எங்களது நோக்கம். அவ்விஷயத்தில் எங்களது சகோதர அணுகுமுறை தொடரும். தாலிபான்களுக்கு ஈரான் பணமும், உதவியும் அளித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் ராபர்ட் கேட்ஸின் குற்றச்சாட்டை மறுத்த அஹ்மத் நிஜாத் பாதுகாப்பின் பெயரால் ஸ்திரத் தன்மையை இல்லாமலாக்குபவர்களுக்கு அவ்வாறு கூற இயலும் என்று தெரிவித்தார்.

ஆஸ்மி கொலை வழக்கில் மேலும் ஒரு கூலிப் படையினர் கைது



மும்பை:ஹஸ்முக் சொலன்கி என்ற நான்காவது குற்றவாளியை போலீசார் ஆஸ்மியின் கொலை வழக்கில் கைது செய்துள்ளனர்.

அவனிடம் இருந்து ஒரு கை துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவன், மேலும் இரு வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியாவான். இவனும் தேவேன்திர ஜேக்தாப் என்ற ஜே.டி மற்றும் பின்டோ தேவ்ராம் தேகில் ஆகியோர் ஆஸ்மியை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

ஜே.டி மற்றும் சொலான்கீயை போலீஸ் விசாரணையில் எடுப்பதற்காக செம்பூர் போலீஸார் காத்திருக்கின்றனர். மேலும், இவர்கள் இருவரும் தான் சமூக ஆர்வலர் சுனில் மானேவை 2008ல் ஆள்மாரிக் கொலை செய்தனர்.
source:Times of india

சட்டத்தின் மறைவான கரம்


அதிகாரப்பூர்வ ஆதரவுடன், மும்பையின் தேசப்பற்று தாதா நடத்திய சமீபத்திய கொலைகளைப் பற்றி விவரிக்கிறார் பத்திரிகையாளர் ராணா அய்யூப் அவர் தனது அறிக்கையில் கூறுவதாவது: 1993 மும்பை குண்டுவெடிப்பில் சம்மந்தப்பட்ட 7 கைதிகள் ஜாமீனில் வெளியே வந்திருந்த போது, தாங்கள் தான் அவர்களை கொலை செய்தோம் என்று வாக்குமூலம் தந்தவன். 1998ல் இந்திய உளவுப்படையின் கோரிக்கைக்கு இணங்க நேபாளிய எம்.பி.மிர்சா தில்சாத் பெக்கை இவன் கொலை செய்தது நாடறிந்த உண்மை. அந்த நிழலுக தாதாதான் சோட்டா ராஜன்.

மிர்சா தில்சாத் பெய்க் தனது நிழலுக தொடர்பினால் உளவுப்படைக்கு பெரும் சவாலாய் இருந்து வந்தார். இவரை கொலை செய்ய உளவுப்படை சோட்டா ராஜனின் கூலிப்படையை துருப்புச் சீட்டாக பயன்படுத்தியது. பேங்காக்கில் 2000ம் ஆண்டில் சோட்டா ராஜனை தாவுத் இப்ராஹிம் கும்பல் கொலை செய்ய முயற்சித்ததின் மூலம் உளவுத்துறைக்கும் சோட்டா ராஜனுக்குமிடையே உறவு ஏற்பட வழிவகுத்தது. இதன் மூலமாக சோட்ட ராஜன் தாவுத் படையை சுலபமாக அழித்தொழிப்பது மட்டுமல்லாமல் தேசப்பற்றாள தாதாவாகவும் தனது இமேஜை மாற்றியமைத்தான்.

கடந்த பிப்ரவரி 7ம் தேதியன்று மிர்சா பெய்கின் கூட்டாளியும் மற்றும் நேபாளிய தொலைகாட்சியின் உரிமையாளருமான ஜாமின் ஷா கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து பிப்ரவரி 11ம் தேதி ஷஹித் ஆஸ்மி மனித உரிமை மற்றும் கிரிமினல் வக்கீலும் கொல்லப்பட்டார். இன்னும் பிப்ரவரி 13ல் ஆசிஃப் கான் என்ற ஆசிஃப் தாதியை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டது. துப்பாக்கியால் சுட்டும் ஆசிஃப் உயிர் பிழைத்தார். இக்கொலைகளை சோட்டா ராஜனின் நெருங்கிய கூட்டாளியான பாரத் நேபாளி பொறுப் பேற்றிருந்தாலும், ஆசிஃப் தாதியின் கொலை முயற்சி பின்னனியில் தாவூத் எதிராளிகளின் கை ஓங்கி இருப்பதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

இதில் திடுக்கிடும் தகவல் என்னவென்றால் கிரிமினல் கும்பல்கள் தன் தேசப்பற்றை வெளியிடும் வண்ணம் உளவுத்துறையின் எதிரிகளை கொலை செய்வதின் மூலம் அவர்கள் நல்லவர்கள் ஆகிவிடுகின்றனர் அல்லது கருதப்படுகின்றனர்.

பிற சில வழக்குகளில் சோட்டா ராஜனின் கும்பலுக்கும் உளவுத்துறைக்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஜாமின் ஷாவின் கொலையை ராணுவ உளவுத்துறையின் தூண்டுதலின் பெயரில் தான் நடத்தப்பட்டதாகவும் சோட்டா ராஜனின் கூலிப்படையினர் தெரிவிக்கன்றனர்.

கொலை நடந்த இரவன்று பாரத் நேபாளி, ஜாமின் ஷா அலுவலகத்தை அலைபேசியில் தொடர்பு கொண்டு "யார் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டாலும் இதே கதிதான்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளான். நான்கு நாட்களுக்கு பிறகு ஃபஹிம் அன்சாரியின் வழக்கில் போலீசின் பொய் குற்றச்சாட்டை நீதி மன்றத்தில் வெளிப்படுத்திய ஆஸ்மி கொலை செய்யப்பட்டார். இதற்கும் பாரத் நேபாளி பொறுப்பேற்றான்.

சோட்டா ராஜனின் நெருங்கிய தொடர்பில் உள்ள ஒருவர் கூறுகையில், கொலை நடந்த தினத்தன்று பாரத் நேபாளி மும்பையில் உள்ள திலக் நகரில் சோட்டா ராஜன் வீட்டிற்கு அருகில் தான் தங்கி இருந்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால், இது குறித்து போலீஸ் கமிஷ்னர் ராகேஷ் மரியா பதில் அளிக்க மறுத்துவிட்டார். பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பிடிக்கபட்ட 3 குற்றவாளிகள் என்று கூறப்படும் ரவி பூஜாரி, பாரத் நேபாளி மற்றும் சந்தோஷ் ஷெட்டி, இவர்கள் அனைவரும் சோட்டா ராஜனின் பழைய ஆட்களாக அல்லது சொந்த கூலிப் படையினாராகவும் இருக்கலாம் என்றார்.

ஜாமின் ஷா மற்றும் ஆஸ்மியின் கொலையில் முக்கிய பங்காற்றிய பாரத் நேபாளி, 2000ம் ஆண்டில் சோட்டா ராஜனால் மாஃபியாவில் சேர்கப்பட்டவராவார். சில காலமாக உளவுத்துறை சோட்டா ராஜனை இந்தியாவுக்கு திரும்புமாறு வலியுறுத்தி உள்ளது. ஆனால், ராஜனோ தன் மனைவி சுஜாதாவின் மேல் MCOC actடின் கீழ் வழக்கு இருப்பதால் இந்தியா வருவதை அவர் தவிர்த்து வருகிறார்.

மேலே குறிப்பிட்ட பல காரணங்கள் இருந்தாலும், சோட்டா ராஜன் தான் இரு கொலைகளுக்கும் ஏற்பாடு செய்ததாக கருதினாலும், இக்கொலைகளில் தனது பங்கினை அவன் தொடர்ந்து மருத்தவனாகவே உள்ளான் என்று ரானா அவர்கள் தன் கட்டுரையை முடித்துள்ளார்கள்.

இக்கட்டுரையை சற்று கூர்ந்து பார்த்தால் பல, கீழே குறிப்பிடப்பட்டுள்ள திடிக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன:-

ஆஸ்மியை உளவுத்துறையே முன்னின்று சோட்டா ராஜன் அல்லது பாரத் நேபாளி கூலிப்படையினரை ஏவி கொலை செய்துள்ளது என்று தெரியவருகிறது.

ஆஸ்மியின் கொலை மட்டுமல்லாமல் ஜாமின் ஷா கொலையையும் மற்றும் ஆஸிப் கானின் கொலை முயற்சியினை யார் தூன்டுதலின் பெயரில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது? என்ற கேள்வியும் எழுகிறது.

இது மட்டுமல்லாமல், சோட்டா ராஜனை உளவுத்துறை இந்தியாவுக்கு அழைகப்படுவதை கண்டால், மேலும் யாரையும் கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதா? என்ற அதிர்ச்சிகரமான கேள்வியும் எழுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, நீதியை நிலைநாட்டி, சட்டத்தின் முன்னால் உண்மையான குற்றவாளிகளை நிறுத்த முயன்ற கர்கரே, ஆஸ்மி போன்ற நீதியாளர்களை மக்களை காப்பாற்ற வேண்டிய உளவுத்துறையே கூலிப்படையினரை ஏவி முன்னின்று கொலையை கச்சிதமாக முடித்ததோடு மட்டுமல்லாமல், கொலையாலிகளை பிற குற்றங்களிலிருந்து தப்பிக்க வழிவகை செய்கின்றது என்றால் நீதியின் தராசு அநீதியின் பக்கம் சாயவில்லை மாறாக கவிழ்ந்தேவிட்டது என்றே கூறலாம்.

Palestinians Warn: Jerusalem Settlements Will End Peace Talks



The Palestinians said Tuesday that Israeli plans to build 1,600 new settler homes in occupied Jerusalem would "hinder" US-led indirect peace talks.

"This is a dangerous decision and will hinder the negotiations," Palestinian Authority spokesman Nabil Abu Rudeina told AFP. "We consider the decision to build in east Jerusalem to be a judgment that the American efforts have failed before the indirect negotiations have even begun," he added.

Israel's announcement of the new project came as US Vice President Joe Biden was in the region to encourage both sides to revive direct negotiations after the Palestinians grudgingly agreed to indirect talks.
¬